அன்புள்ள பத்து இலட்சத்தில் ஒருவரே,
நான் உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்து வருகிறேன். நீங்கள் என்னுடைய அன்பான இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், மேலும் நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் உங்களுக்கு வாக்களித்தபடி, நான் உங்களுக்கு ஒரு புதிய வீட்டை உருவாக்கிக்கொண்டு வருகிறேன், அங்கு நாம் நித்தியத்தினூடாக ஒன்றுசேர்ந்து ஜீவிப்போம். நீங்கள் விரும்பியதைப் போலவே அவை எல்லாவற்றையும் நான் செய்துள்ளேன்.
என்னால் இப்பொழுது உங்களை நோக்கிப் பார்த்து, நீங்கள் என்னுடைய பிரதிபலிப்பாயிருக்கிறீர்கள் என்பதைக் காணமுடிகிறது. நீங்கள் என்னுடைய குணாதிசயத்தையும், என்னுடைய மாம்சத்தையும், என்னுடைய எலும்புகளையும், என்னுடைய அதே ஆவியையும், அப்படியே சரியாக, என்னுடைய எல்லா காரியத்தையும் உடையவர்களாக இருக்கிறீர்கள்.
சாத்தானின் ஏதேனிலிருந்து உங்களை அழைக்க நான் என்னுடைய பலமுள்ள தூதனை பூமிக்கு அனுப்பினேன். என்னுடைய சிந்தனைகளையும், என்னுடைய தன்மைகளையும், வரவிருக்கின்ற காரியங்களையும் உங்களுக்கு சொல்லி வெளிப்படுத்தும்படியாக நான் அவரை அனுப்பினேன். நான் அவைகளை வெளிப்படுத்தும்படிக்கு அவருடைய வாயையும், அவருடைய சத்தத்தையும் உபயோகித்தேன். அவர் அவைகளைக் கூறினப் பிறகு, நான் அவைகளை நிறைவேற்றினேன், ஏனென்றால் வானங்களும் பூமியும் ஒழிந்துபோகும் என்னுடைய வார்த்தையோ உங்களுக்கு ஒருபோதும் ஒழிந்துபோகாது.
என் தூதனுடைய சத்தத்தை உபயோகித்து, நான் பேசுவதை நீங்கள் கேட்கும்போது, உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், அது அவராயிருக்கவில்லை, அது நான் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன், அது நான் உங்களுக்கு ஒரு காதல் கடிதத்தை அனுப்பி, நீங்கள் என்னுடைய இனிய இருதயமாகிய மணவாட்டியாய் இருக்கும்படி நான் தெரிந்துகொண்டுள்ளேன் என்று உங்களுக்கு சொல்லுகிறதாய் இருந்தது.
என்னுடைய பார்வையில், உங்களைப்போல யாருமே இல்லை. உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் என்னிடத்தில் உண்மையாகவும் உத்தமமாகவும் தரித்திருக்கிறீர்கள். நான் உங்களை நோக்கிப் பார்க்கும்போது, என்னுடைய இருதயம் சந்தோஷத்தால் துடிக்கிறது.
இனிய இருதயமே, நீங்கள் எதற்கு செவி கொடுக்கிறீர்கள் என்பதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்று, நான் உங்களிடத்தில் சொன்னேன், அபிஷேகிக்கப்பட்ட அநேகர் என்னுடைய வார்த்தைகளை உபயோகிப்பார்கள், ஆனாலும் அவர்கள் போலியாய் இருக்கிறார்கள். நீங்கள் வெளிப்பாட்டினால் என்னுடைய எச்சரிக்கையை புரிந்துகொண்டு உண்மையாயும் என்னுடைய சத்தத்திற்கு உத்தமமாகவும் தரித்திருந்தீர்கள்.
நீங்கள் எந்த சபையோடு ஐக்கியங்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள் ஊக்கமாக ஜெபித்தபோது நான் மிகவும் பெருமைப்பட்டேன். நான் உங்களுக்கு சரியான தெரிந்துகொள்ளுதலை செய்யும்படி உங்களிடத்தில் கூறி, பரிபூரணமான சபை என்னவாயிருக்கும் என்பதை குறித்த உதாரணங்களை உங்களுக்கு அளித்தேன். அவர்கள் யாவரும் வேறு ஆவிகளை பெற்றுள்ளனர் என்று நான் கூறினதை நீங்கள் நினைவில் கொண்டு, பரிபூரண சபையைத் தெரிந்துகொண்டீர்கள்.
உங்களுடைய போதகர் யாராயிருக்கிறார் என்பதை குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூட நான் உங்களிடத்தில் சொன்னேன். எனவே உங்களை என்னிடத்தில் கொண்டு வரும்படிக்கு நான் அனுப்பின மேய்ப்பரோடு நீங்கள் தரித்திருந்ததை நான் கண்டபோது என்னுடைய இருதயம் எப்படியாய் மகிழ்ச்சியால் துள்ளிற்று என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். அது என்னிடத்திற்கு உங்களை வழிநடத்த என்னுடைய தீர்க்கதரிசிக்குள் ஜீவித்த என்னுடைய பரிசுத்த ஆவியாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்.
உங்களை குறித்த ஒரு முன்னோட்டத்தை நான் அவருக்கு காண்பிக்கும்படியாக ஒரு உயரிய இடத்தில் என்னுடைய தூதனை நான் அழைத்தபோது, நீங்கள் மிகவும் சந்தோஷமாய், உணர்ச்சிவசப்பட்ட அந்த நாளை நான் நினைவுகூருகிறேன். எங்களுக்கு முன்னால் கிறிஸ்தவ போர் வீரர்களே முன்னோக்கி செல்லுங்கள் என்னும் பாடலுக்கான ஒத்திசைவிற்கு நீங்கள் அணிவகுத்து சென்றபோது நாங்கள் அங்கே நின்று உங்களை கவனித்துக் கொண்டிருந்தோம்.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து; நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, நீங்கள் அனைவரும் உங்களுடைய தேசிய உடையை அணிந்திருப்பதை அவர் எவ்வளவாய் விரும்பினார். மிகவும் அருமையாக உங்களுடைய நீளமான கூந்தலில் ஒவ்வொருவரும் சரியாக இருந்தீர்கள். உங்களுடைய பாவாடைகள் அழகாக கீழ் வரை இருந்தன. அவர் திரும்பிச் சென்று உங்களை உற்சாகப்படுத்தி, அவர் உங்களை அங்கே கண்டதை உங்களிடம் சொல்லும்படிக்கு, உங்கள் அனைவரையும் அவரிடம் காண்பிப்பதில் நான் மிகவும் பெருமையும் உற்சாகமுமடைந்தேன்,
ஒவ்வொரு கண்ணும் நம் மீதுதான் இருந்தது. ஒரு சில பெண்கள், வரிசையின் பின்புறத்தில், மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கியபோது, அவர், "அப்படிச் செய்யாதீர்கள்! வரிசையை விட்டு வெளியேறாதீர்கள்!" என்று கூச்சலிட்டார்.
நான் உங்களைப் போஷிக்கும்படியாக உங்களுக்காக ஆகாரத்தை நான் சேமித்துக்கொண்டிருந்தேன் என்று நான் உங்களிடத்தில் சொன்னபோது, நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் சரியாக அறிந்திருந்தீர்கள். நீங்கள் என்னுடைய சுத்தமான வார்த்தையான கன்னிகை மணவாட்டியாய் இருக்க விரும்பினீர்கள். நீங்கள் வேறு யாருடனும் சரசமாடுவதை நான் ஒருபோதும் காணவில்லை. அது எப்பொழுதுமே நானாகவும், என்னுடைய வார்த்தையாகவும் இருந்தது. அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்கினது.
நீங்கள், என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி, நான் உங்களை தெரிந்து கொண்டுள்ளேன். நீங்கள் என்னோடு அன்பாய் இருக்கிறதுபோலவே, நான் உங்களோடும் மிகுந்த அன்பாய் இருக்கிறேன். திடனற்றுப்போகாதீர்கள், உற்சாகமாயிருங்கள், மகிழ்ச்சியாய் இருங்கள், களிகூருங்கள், நான் உங்களுக்காக வரும் நாள் தீவிரமாக சமீபத்துக்கொண்டிருக்கிறது. நாம் என்னே ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருப்போம்.
ஏனையோராகிய நீங்களும், மனந்திரும்புங்கள், பூமியானது கக்கிக் கொண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் ஒரு நாளில் பூமிக்கு அடியில் மூழ்கிவிடும் என்று, நான் உங்களிடத்தில் கூறினது போலவே அது மூழ்கிவிடும். அது கீழே என்னுடைய கோபாகினையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. நான் அந்த மணல் தடையை இனி நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கமாட்டேன். நீ ஒரு மைல் ஆழமான கடலுக்குள் சறுக்கி, மீண்டும் சால்டன் சமுத்திரத்துக்குள் செல்வாய். இது பாம்பேயின் கடைசி நாளை விட மோசமாக இருக்கும்.
நான் சீக்கிரத்தில் இந்த பூமியை அக்கினியால் சுத்திகரிக்கப்போகிறேன். அதன் மீதும் அதன் கீழும் உள்ள அனைத்தையும் கொன்றுபோடுவேன். நான் உங்களுக்கு சொன்னதுபோல, உலகம் முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொன்னது போலவே, என்னுடைய மணவாட்டி என் வார்த்தையின் பேரில் இணைவதை நீங்கள் காண்கிறீர்கள்.
இப்பொழுதே அந்த நேரம். இப்பொழுதே அந்தக் காலம். உங்களை ஆயத்தப்படுத்துங்கள்!
அவருடைய கோபாக்கினையின் வேளையானது பூமியின் மீது உள்ளது. விரைந்தோடுவதற்கு நேரமுள்ளபோதே விரைந்தோடி, கிறிஸ்துவுக்குள் வாருங்கள்.
_______________________________________________________________இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் பேசி, மணவாட்டியை தெரிந்துகொள்ளுதல் 65-0429E: என்ற செய்தியை எங்களுக்கு கொண்டு வருவதை கேட்கப்போகிறபடியால், நாங்கள் அவருடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்துகையில், அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான, எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஆதியாகமம் 24:12-14
ஏசாயா 53:2
வெளிப்படுத்தின விசேஷம் 21:9
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பூலோக மணவாட்டியே,
மல்கியா 4 என்பது தேவனுடைய வார்த்தையாகும், மேலும் இது அவருடைய மணவாட்டியான, நமக்கு, அதனுடைய தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இது பரிசுத்த ஆவியாகிய, இயேசு கிறிஸ்து என்னும் நபர், செயலில், நம் இருதயங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும்; ஒரு அந்நியனை அவைப் பின் தொடராது.”
ஜெபர்சன்வில்லில் தீர்க்கதரிசியைப் பின்தொடர்ந்த, கடந்த மாதங்கள் எவ்வளவு அற்புதமானவைகளாக இருந்து வந்துள்ளன. தேவன் தம்முடைய பலமுள்ள தூதன் மூலமாகப் பேசி, தேசம் முழுவதிலும் உள்ள அவருடைய ஒரு சிறிய பண்டகசாலையிலிருந்து அவருடைய சேமிக்கப்பட்ட ஆகாரத்தினால் நம்மை போஷித்து வந்துள்ளார். இது அவருடைய மணவாட்டிக்கான, மறைவான மன்னாவாக உள்ளது.
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியோடும், நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொண்டு களிகூருகிறோம்; "இந்தச் செய்திகளை நான் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனால் நான் இப்பொழுது கேட்பதுபோல ஒருபோதும் கேட்டதில்லை." இது உண்மையிலேயே நமக்குள் பொங்கி வழிகின்ற ஜீவத் தண்ணீரின் ஒரு ஊற்றாயுள்ளது. நாம் நமக்குள்ளேயே அதை அடக்கிக்கொள்ள முடியாது. நாம் பேச விரும்புவது அவ்வளவுதான். நாம் யார் என்றும், நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றும் நம்முடைய ஜீவியங்களில் ஒருபோதும் நிச்சமுடையவர்களாக இருந்ததில்லை.
இனி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை:
“எனக்குத் தெரியாது. நான் என்னுடைய வாழ்க்கையில் பல பயங்கரமான காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் கர்த்தரிடம் பலமுறை தவறியிருக்கிறேன். நான் எப்போதும் குழப்பமடைவது போல் தெரிகிறது.
இனிமேல் சந்தேகத்திற்கு இடமேயில்லை:
"நான் ஒருவேளை உண்மையாகவே ஒரு தேவனுடைய பிள்ளை என்று நம்புகிறேன். நான் அவ்வாறிருக்க விரும்புகிறேன். நான் அவ்வாறிருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்."
அந்த நாட்கள் எல்லாம் முற்றுபெற்று விட்டன. இப்பொழுதே நாம் அறிவோம். தேவனுக்கே மகிமை!!
நமக்கு எப்படித் தெரியும்? "நான் உங்களுக்குள் இருக்கிறேன், நீங்கள் எனக்குள் இருக்கிறீர்கள். நாம் ஒன்றாய் இருக்கிறோம். நான் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களைத் தெரிந்துகொண்டேன். நீங்கள் என்னுடைய மாம்சத்தின் மாம்சமும், எலும்பின் எலும்புமாயிருக்கிறீர்கள்" என்று ஒலிநாடாக்களில் அவருடைய சத்தத்தின் மூலமாக நம்மிடத்தில் நேரடியாக பேசிக்கொண்டும், திரும்பத் திரும்ப இதை நமக்கு சொல்லிக் கொண்டும் வருகிறார்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் எப்படி நம்முடையது அல்ல என்றும், அது சாத்தானின் ஏதேன் என்பதைப் பற்றி நமக்குச் சொல்ல தேவன் ஞாயிற்றுக்கிழமை நம்மிடம் என்னே ஒரு பரிபூரணமான செய்தியைப் பேசினார். அவன் ஆதியிலே ஏவாளை எப்படி வெறுமனே ஒரு வார்த்தையை சந்தேகித்து கேள்விக் கேட்கும்படி வஞ்சித்தான். அவள் தேவனுடைய பரிசுத்தத் திரையை எடுத்துவிட்டு, அறிவின் திரையை அணிந்துகொண்டாள், அப்பொழுதே அவளுடையக் கண்கள் திறக்கப்பட்டு, அவள் நிர்வாணமாக்கப்பட்டதை அறிந்து கொண்டாள்.
சாத்தான் மூல வார்த்தையைத் தாறுமாறாக்கி, அவள் இன்னமும் நிர்வாணமாயிருப்பதை அறியாதிருக்கும்படி இப்பொழுதும் அவளை குருடாக்கியிருக்கிறான். அவள் சாத்தானின் இராணியாகிவிட்டாள், இந்த பூமி அவளுடைய ஏதேன் இராஜ்யமாயிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, நம்முடைய பரலோக மணவாளன் தம்முடைய பூலோக மணவாட்டிக்கு நம்முடைய வருங்கால வீடு எங்கே உள்ளது என்றும், அது என்னவாயிருக்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறார். “அன்பான இனிய இருதயமே, இந்த உலகத்தைக் குறித்த எல்லாவற்றையும் மற்றும் அது எப்படி சாத்தானின் ஏதேன் என்றும் நான் இப்பொழுது உங்களுக்குக் சொல்லியிருக்கிறேன், என்னுடன் உங்களுடைய வருங்கால வீட்டைப் பற்றி மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு மிக விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி நான் பலமுறை கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் காத்திருங்கள், இந்த முறை நான் உங்களிடம் சொல்வது நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கேட்காதது போல் இருக்கப்போகிறது.
நான் மிக விரிவாகக் கூற விரும்புகிறேன். என்னுடைய வார்த்தையுடனும் என்னுடைய தீர்க்கதரிசியுடனும் தரித்திருப்பதன் மூலம் நீங்கள் என்னுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் வாழப்போகும் புதிய நகரத்தின் ஒரு பரிபூரண மாதிரியாக இன்று நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
நாம் உண்மையாகவே ஏதோவொன்றினை அடையப் போகிறோம். நான் உங்களுக்கு சிறிதாக ஏதோ ஒரு காரியத்தை கூறவுள்ளேன்; நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடன் அந்த நகரத்தில் வாழ்வீர்கள். என்னுடைய தீர்க்கதரிசி உங்களுடைய பக்கத்து வீட்டில் வசிப்பார். அவர் உங்களுடைய அண்டை வீட்டாராக இருப்பார். நீங்கள் அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து, என்னுடைய நீரூற்றிலிருந்து பருகுவீர்கள். தேவதூதர்கள் வட்டமிட்டு, கீதங்களை பாடுவதோடு நீங்கள் தேவனுடைய பரதேசிக்குள்ளாக நடந்து கொண்டிருப்பீர்கள்.
என்னுடைய தீர்க்கதரிசியின் கிரீடத்தில் நீங்கள் இரத்தினங்களாக இருப்பீர்கள். அந்த நாளில், நீங்கள் உலகில் உள்ள அனைத்தையும் மிஞ்சிவிடுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு நிறைய வெளிப்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றுசேர்ந்திருக்கப்போவது என்ன ஒரு அற்புதமான நாளாயிருக்கும்.”
அதற்கு முன் அவர் வந்து நம்மை அழைத்துச் செல்லாவிட்டால், அடுத்த சில வாரங்களில் அவர் நமக்காக நிறைய சேமித்து வைத்திருக்கிறார். வாராவாரம், நாம் யார், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், அங்கு எப்படி இருக்கும் என்று நமக்கு சொல்லுகிறார். அவரைத் துதித்து ஆராதிப்பதைத் தவிர வேறொன்றினாலும் நிரப்பப்படாமல், நமக்கு எப்போதும் இருந்து வருகிறதான மிகவும் மகிமையான ஈஸ்டர் வாரத்திற்கு அவர் நம்மை வழிநடத்துவார்.
என்ன ஒரு உற்சாகமான நேரம். நம்முடைய கண்களுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வார்த்தை நமக்குள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவருடைய வருகை எந்த நேரத்திலும் இருக்கலாம். கரங்களில் பூங்கொத்துடன் நாம் வாசலண்டையில் நிற்கிறோம். குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவருவதையும், சக்கரங்களின் கீழிருந்து மணலைக் கிளப்புவதையும் நம்மால் கேட்க முடிகிறது.
குதிரைகள் இழுத்துகொண்டு வரும் வண்டியோ சீக்கிரத்தில் நிறுத்தப்படும். நாம் இந்த பழைய சரீர வாசலிலிருந்து குதித்து, அவருடைய கரங்களுக்குள் பறந்து செல்வோம். அவர் நம்மை நோக்கிப் பார்த்து, "இப்பொழுது எல்லாம் முற்றுபெற்றுவிட்டது, தேனே, நான் உன்னை இப்போது உன்னுடைய வருங்கால வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று கூறுவார்.
உலகம் இதுவரை கண்டிராத மகத்தான நாட்களின் ஒரு பாகமாயிருக்கும்படி இருக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்பதைக் குறித்து தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசி அவளிடத்தில் சொல்லப் போவதைக் கேட்க உலகெங்கிலுமிருந்து கழுகுக் குஞ்சுகள் ஒன்று கூடிவரும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நினைவூட்டல்: பகல் சேமிப்பு நேரத்தைக் குறித்து மறந்துவிடாதீர்கள்.
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 19:28
பரி. யோவான் 14:1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21:1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-வது அதிகாரம் / 28:10 / 65:17-25
மல்கியா 3:6
என்னுடைய அன்பான பிள்ளைகளே,
நீங்கள் உங்களுடைய பரலோகப் பிதாவாகிய, எனக்கு ஒரு தன்மையாயிருக்கிறீர்கள். நீங்கள் ஆதியிலிருந்தே எனக்குள் இருந்தீர்கள். உங்களுக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நீங்கள் என்னுடன் அங்கே இருந்தீர்கள். உங்களைத் தொடர்புகொள்ளவும், உங்களுடன் பேசவும், உங்களை நேசிக்கவும், உங்களுடைய கரங்களை குலுக்கவும் நான் விரும்பியதால், உங்களை அறிய நான் மிகவும் ஏங்கினேன்.
பூமியின்மேல் ஒரு தேவனுடைய குடும்பமாக நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளும்படியாக நான் மாம்சமாக்கப்பட்டதுபோலவே என்னுடைய பிள்ளையாய் இருக்கிறபடியால் நீங்களும் மாம்சமாக்கப்பட்டு, என்னுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அதுவே என்னுடைய நோக்கமும், ஆதியிலிருந்தே நான் விரும்பினதுமாயிருந்தது.
நாம் ஐக்கியங்கொள்ளும்படியாக உங்களுக்காகவே ஒரு ஏதேன் தோட்டத்தை உருவாக்கினேன், ஆனால் என்னுடைய சத்துரு வஞ்சகத்துடன் உள்ளே நழுவி வந்து என்னுடைய திட்டத்தை உங்களுக்கு தவறாக வியாக்கியானிப்பதன் மூலம் இந்த உலகத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
இது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு துரோகமான நேரமாயுள்ளது, ஆனால் இது எல்லா காலங்களிலும் மிகவும் மகிமையான காலமாயுங்கூட உள்ளது, ஏனென்றால் நீங்கள் இப்போது மீண்டும் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் மீண்டும் ஏதேனை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய ஆவி உங்களுக்குள் கற்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இது என்னுடைய முன்னறிவினால் உங்களுக்குள் என்னுடைய வல்லமையான கரத்தினால் நான் முன் குறித்த ஒன்றாக உள்ளது. இப்பொழுது, "நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோங்கள்"; என்று என்னுடைய மணவாட்டியை பற்றிக்கொள்ளும்படியாக சென்று கொண்டிருக்கிற என்னுடைய கடைசி அழைப்பாயுள்ளது.
இன்றைக்கு அவர்கள் என்னுடைய வார்த்தையை ஜனங்களுடைய இருதயங்களில் நிலைநிறுத்த முயற்சிக்கவில்லை, அவர்கள் தங்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள். சபைகள் ஒரு நபருடைய இருதயத்தில் சபையின் கோட்பாட்டையே நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும், “நான் இதைச் செய்தேன். எனக்கு, நான், என்னுடையது, என்னுடைய ஸ்தாபனம், எனக்கு, இது” என்றே கூறுகிறான். அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்கிறார்களேயன்றி, என்னுடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட என்னுடைய வார்த்தையை அல்ல.
நான் கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை, நான் கூறினவண்ணமாகவே நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், அதுவே இதற்கு என்றென்றைக்குமான தீர்வாகிறது.
என்னுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் செயலில் இருக்கிறார். இது உங்களுக்குள் ஒரு ஜீவனாயுள்ளது, ஒரு உணர்ச்சியாயல்ல; ஒருவித மாம்சப்பிரகாரமான அத்தாட்சியாய் அல்ல, ஆனால் இது ஒரு நபராயுள்ளது, நான், இயேசு கிறிஸ்து, தேவனுடைய வார்த்தை, உங்களுடைய இருதயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இது இந்தக் காலத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உயிர்ப்பிக்கிறது. வார்த்தையின்படி உங்களில் செயல்படுவது என்னுடைய பரிசுத்த ஆவியாகும்.
என்னுடைய முதல் மணவாட்டி சாத்தானுடைய தர்க்க அறிவிற்கு செவி கொடுத்ததினால் தவறிப்போனாள். ஆனால் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிற, நானே உங்களை மீட்டுக்கொண்டேன். நீங்கள் என்னை ஏமாற்றிவிடமாட்டீர்கள். நீங்கள் சாத்தானின் தர்க்க அறிவிற்க்கு செவிசாய்க்காத என்னுடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டியாக இருக்கிறீர்கள். நீங்கள் என் வார்த்தையுடன் தரித்திருப்பீர்கள்.
ஆயிர வருட அரசாட்சி முடிவுற்ற பிறகு, அதன்பின்னர் மீண்டும் ஏதேன் மீண்டும் நிலைநாட்டப்படும்; என்னுடைய மகத்தான இராஜ்யம் திரும்பக் கைப்பற்றப்படும். நான் கெத்செமனே தோட்டத்தில் சாத்தானுடன் அதற்கு போராடினேன், என்னுடைய ஏதேனை மீண்டும் வென்றேன். இப்போது நான் பரலோகத்தில் உங்கள் புதிய ஏதேனை ஆயத்தம் செய்யப்போயிருக்கிறேன். நான் விரைவில் உங்களுக்காக மீண்டும் வருவேன், எனவே உங்கள் இருதயங்கள் கலங்காதிருப்பதாக.
இனி சமுத்திரமே இருக்காது, ஏனென்றால் முதலாம் வானமும் முதலாம் பூமியும் ஒழிந்துபோகும். பூமியின் மேலிருந்த ஒவ்வொரு கிருமியையும், ஒவ்வொரு வியாதியையும், ஒவ்வொரு சுகவீனத்தையும், மற்றும் ஒவ்வொரு அசுத்தமான காரியத்தையும் கொன்றுபோடும் ஒரு அக்கினி அபிஷேகத்தின் மூலம் அதை நான் புதுப்பிப்பேன்.
பூமியானது வெடிக்கும், ஒரு புதிய பூமி உண்டாகும். இந்த முதலாம் வானமும் முதலாம் பூமியும் ஒழிந்துபோகும். பரலோகத்தில் என்னிடத்திலிருந்து இறங்கி வருகிற ஒரு புதிய எருசலேம் இருக்கும். நான் உங்களோடு, என் உண்மையான தன்மைகளான, என்னுடைய குமாரர் மற்றும் குமாரத்திகளோடு இருப்பேன். எந்தப் பாவத்திற்கும் குருடாக்கப்பட்ட உங்களுடைய கண்களோடு, நாம் பரிசுத்தத்தில் ஐக்கியங்கொள்ளுவோம்.
நான் வருவேன் என்று உங்களுக்கு வாக்களித்தபடியே நான் உங்களிடத்திற்கு மீண்டும் வந்துள்ளேன். நான் உங்களுக்காக என் வார்த்தையைக் காத்துக்கொண்டேன். தவறான புரிந்து கொள்ளுதலோ, எந்தக் கேள்வியோ இல்லாதபடிக்கு, உங்களுக்கான என்னுடைய சுத்தமான வார்த்தையை, நான் என்னுடைய வார்த்தையை காந்த ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளேன்; ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது.
உங்களுடைய மனசாட்சியை தூய்மையாக வைத்திருங்கள். உங்களுடைய இருதயங்கள் திரையிடப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு பெரிய நபராகாதபடிக்கு உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களுடைய கண்களை திரையிடப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த நாட்களில் ஒன்றில், நான் மீண்டும் மேற்கில் சவாரி செய்வேன் என்பதை, ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதுவரை, என் நாமத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்; அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும், நீங்கள் எங்கு சென்றாலும், இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், அதைக் கொண்டு செல்லுங்கள்.
ஒரு வார்த்தையின் பேரிலும் சமரசமாகாதீர்கள். ஒலிநாடாவில் உள்ள என்னுடைய வார்த்தைக்கு வியாக்கியானமே தேவையில்லை. நீங்கள் என்னுடைய பாகமாய், என்னுடைய தன்மையாய் இருக்கிறீர்கள். இந்த உலகம் சாத்தானின் ஏதேனாய் இருக்கிறது, ஆனால் நாம் ஒருமித்து நித்தியத்தை கழிக்கும்படி நான் உங்களுக்கு ஒரு புதிய ஏதேனை உருவாக்கியிருக்கிறேன். அதுவரையில், என்னுடைய வார்த்தையின் பேரில் இணைந்திருங்கள். ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, சாத்தானின் ஏதேன் 65-0829 என்ற செய்தியில் என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசியின் மூலமாக நான் பேசுவதைக் கேட்கவும், என்னுடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்கப்போகிறபடியால், பிரான்ஹாம் கூடாரத்தில் அவர்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்.
அவருடைய சார்பில்,
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
2 தீமோத்தேயு 3:1-9வெளிப்படுத்தின விசேஷம் 3:14
2 தெசலோனிக்கேயர் 2:1-4
ஏசாயா 14:12-14
மத்தேயு 24:24
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமினுடைய சபையோரே,
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களிலும் உள்ள தீர்க்கதரிசியினுடைய சபைகளில் ஒன்றில் கழுகுகள் ஒன்று கூடுவதால், எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு நான் உலகத்தை அழைக்க விரும்புகிறேன். தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம் பேசி நம்மிடம் சொல்வதைக் கேட்போம்:
இந்தச் செய்தியும், நான் பேசுகின்ற மற்றெல்லாச் செய்திகளும், என்னுடைய சபைக்கு அனுப்பப்பட்டவைகளேயாகும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலொழிய அது உங்களுடைய சபைக்கானதல்ல. ஆனால் இது இங்குள்ள இந்த ஜனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அவர் நம்மிடம், மகிமை, அவருடைய சபையோரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். "சகோதரன் பிரான்ஹாம் தீர்க்கதரிசி, ஆனால் அவர் என்னுடைய மேய்ப்பர் அல்ல. எங்களுடைய மேய்ப்பர் சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது இந்நாளுக்கான வார்த்தையின்படியானதல்ல" என்று கூறுகிற உங்களிடத்தில் அல்ல. "நாம் அவருக்கு செவி கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய மேய்ப்பர் எங்களுக்குச் சொல்லுகிறார். வார்த்தையின்படி அவர் எங்களை பரிசுத்த ஆவியானால் இப்பொழுது வழிநடத்திக் கொண்டிருக்கிறார்."
தீர்க்கதரிசி உங்களுக்கும் உங்கள் மேய்ப்பருக்கும் உரையாற்றினார்.
எந்த இடத்திலும் உள்ள எந்த ஊழியக்காரர்களுக்கும், எந்த நேரத்திலும், இது உங்களுடைய உபதேசங்களை அவமதிக்க அளிக்கப்படவில்லை, இது உங்களுடைய ஆடுகளுக்கு அளிக்கப்பட்டதும்கூட அல்ல.
சகோதர சகோதரிகளே நாங்கள் உங்களுடன் வம்பு செய்ய விரும்பவில்லை. இது உங்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் அவருடைய சபையாகிய, எங்களை வழிநடத்த எங்களுக்கு மேய்ப்பராயிருக்க பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளனை வைத்திருக்கிறார் என்று விசுவாசிக்கிற எங்களுக்கேயாகும். ஒலிநாடாக்களை இயக்குவது மாத்திரமே உண்மையான வழியாய் இருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீங்கள் சரியாயிருந்து தீர்க்கதரிசி செய்யும்படி உங்களிடத்தில் சொன்னதை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அவர்கள் ஏதாவதொரு சபையின் ஒரு அங்கத்தினராயிருந்தால், "உங்களுடைய மேய்ப்பரைப் பாருங்கள்" என்றே நான் எப்பொழுதும் அவர்களுக்கு குறிப்பிடுகிறேன்.
உங்களுடைய மேய்ப்பர் கூறுகிறதையே நீங்கள் செய்ய வேண்டும்.
பின்னர் தீர்க்கதரிசி உங்களுடைய மேய்ப்பருக்கு மீண்டும் ஒருமுறை சொல்கிறார், அவர் புரிந்துகொள்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படிக்கே.
இப்பொழுது, மேய்ப்பரே, நான் பேசுகிற இந்த காரியங்கள் என்னுடைய சபையோருக்கு மாத்திரமே, அதாவது, நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை செய்ய எனக்கு ஒரு உரிமை உண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளை கண்காணிக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
அவருடைய ஆடுகளாகிய, எங்களை கண்காணிக்கவே அவர் அனுப்பப்பட்டிருக்கிறார்; தேவன் தம்முடைய பாதுகாப்பில் வைத்துள்ளவர்களுக்கே. பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் பேசி தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் எங்களை வழிநடத்துகிறபடியால், அவரே எங்களுடைய மேய்ப்பராய் இருக்கிறார்.
இதை செய்யும்படிக்கே கர்த்தர் எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நாங்கள் உங்களுக்கோ அல்லது உங்களுடைய மேய்ப்பருக்கோ அல்லது செய்யும்படி எப்படி கர்த்தரால் வழிநடத்தப்படுகின்றீர்கள் என்பதை உணருகிறதற்கோ எதிரானவர்கள் அல்ல. ஒவ்வொரு நபரும் வார்த்தையின்படி செய்ய அவர்களை கர்த்தர் வழிநடத்திக் கொண்டிருக்கிறதை அவர்கள் உணருகிற விதமாகவே செய்ய வேண்டும்.
எங்களுக்கு ஒரு வடிகட்டி உள்ளது, இந்த செய்தியே. நாம் கேட்கிற ஒவ்வொரு காரியமும் அந்த வடிகட்டியினூடாக செல்ல வேண்டும். நாம் ஒலிநாடாக்களில் கேட்கிற சத்தமே கர்த்தர் உரைக்கிறதாவது என்று 100% நம்பிக்கைக் கொண்ட ஒரே சத்தமாயிருக்கிறது.
அந்த ஜனங்களின் மீதுள்ள அந்த அபிஷேகம் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாய் இருக்கிறது என்றே பொருட்படுத்துகிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா, அசலான தேவனுடைய பரிசுத்த ஆவி ஒரு நபரின் மீது இருந்தும், அதே சமயத்தில் அவர்கள் போலியாக இருக்கிறார்கள்.
எங்களுடைய நித்திய இலக்கு ஒலிநாடாவில் அவர் என்ன கூறினார் என்பதை சார்ந்ததேயன்றி, வேறு எந்த மனிதனோ அல்லது மனிதக் குழுவோ என்ன கூறுகிறது என்பதல்ல. இதனால், நாம் மற்ற எதையும் கேட்க முடியாது, கேட்கவும் மாட்டோம். யாராவது எப்படி ஒரு வாய்ப்பைப் பெற முடியும்?
நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள வாருங்கள்.
ஜனங்கள் தங்களுடைய வீடுகளிலேயே அமர்ந்துகொண்டு, அல்லது அவர்களுடைய…அவர்களுடைய இடங்களில், அவர்களுடைய சபைகள், போன்றவற்றில் ஒன்று கூடி, ஆராதனையைக் கேட்கலாம்.
அதாவது, என்னுடைய நண்பர்களே, தேவனுடைய தீர்க்கதரிசியின் கூற்றுப்படி, வேதம் என்ன சொல்கிறது என்பதைக் குறித்த சில மனிதருடைய வியாக்கியானம் அல்ல, நாளானது சமீபத்து வருகிறதை நாம் காண்கையில் இன்னும் அதிகமாக வார்த்தையின் பேரில் நாம் ஒன்று கூட வேண்டும்.
தேவனில்லாமல் உடன்படிக்கைப் பெட்டியால் பிரயோஜனம் என்ன? அது ஒரு வெறும் ஒரு மரப்பெட்டி, அதனுள் இரண்டு கற்பலகைகள் இருந்தன.
ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி 65-0822E என்ற செய்தியை அவர் நமக்குக் கொண்டு வருகிறபடியால், தேவனால் அருளப்பட்டிருக்கிற வடிகட்டிக்கு நாங்கள் செவிகொடுக்கவுள்ளபடியால் எங்களோடு கூடிவாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நீங்கள் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். எதற்காக நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் சபைக்கு எதற்காக போகிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். எது உங்களை உருவாக்குகிறது…சபைக்கு செல்கிறது நல்லது. ஆனால் வெறுமையாக சபைக்குச் செல்வதோடு மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; அது உங்களை இரட்சிக்காது.
தொடர்புடைய சேவைகள்
என்னுடைய சிறு மந்தையே,
உங்களுக்கும், தொலைபேசி அமைப்பில் உள்ள உங்களுக்கும் வாழ்த்துக்கள், இது மிக, மிக அருமையாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய வீடுகளில் சரியாக அமைத்து, உங்களுடைய இடங்களில், உங்களுடைய சபைகளில் கூடி, ஆராதனையை கேட்க முடிகிறதற்காக கர்த்தருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய சத்தம் எங்கெல்லாம் வந்து கொண்டிருக்கிறதோ, அந்தச் சிறு குழு ஆசிர்வதிக்கப்படும்.
இன்று, உங்களை உற்சாகப்படுத்த என்னுடைய இருதயத்திலிருந்து ஒரு சிறிய அன்பின் கடிதத்தை எழுத நான் விரும்புகிறேன். இந்த ஒலிநாடாக்களை கேட்கிற நீங்கள்; உலகத் தோற்றத்திற்கு முன்னே அவருடைய மணவாட்டியாக இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்கு மாத்திரமே என்றும், நீங்களே என்னுடைய சபை என்றும், நான் உங்களுக்கு எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். தேவன் மற்ற ஊழியக்காரர்கள் மேய்ப்பராயிருப்பதற்கு அளித்துள்ளதற்கு நான் பொறுப்பல்ல. நான் உங்களுக்கு எந்த வகையான ஆகாரத்தை போஷிக்கிறேன் என்பதற்காக மாத்திரமே நான் பொறுப்பாளியாய் இருக்கிறேன். இந்த ஒலிநாடாக்கள் உங்களுக்கானதாய் இருக்கின்றன, தேவன் மேய்ப்பராயிருக்க எனக்கு கொடுத்திருக்கிற, என்னுடைய கூடாரத்துக்கு மாத்திரமே. இது மறைவான மன்னவாக இருக்கிறது, மற்றவர் இதனை எடுத்துக்கொள்ள முடியாது.
இப்போது, சில ஜனங்கள் கலப்பின ஆகாரத்தையும் மற்றும் அங்கே வெளியில் உள்ள பொருளையும் விரும்பினால், அவர்கள் தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் அவர்கள் செய்யும்படி என்ன சொல்லுகிறாரோ, அவர்கள் விரும்புகிறதென்னவோ அதை போஷிக்கட்டும். நானும் அதேக் காரியத்தையே செய்வேன். ஆனால் இந்த செய்திகள் உங்களுக்காக மாத்திரமே உள்ளன.
தேவனிடமிருந்து என்னுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற நீங்கள், வார்த்தையுடன் சரியாக தரித்திருக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் ஆடுகளுக்கு ஆட்டின் ஆகாரம் தேவைப்படுகிறது. "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கின்றன." அதன் மூலமாகவே, புறப்பட்டு வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் பிழைக்கிறோம். அவ்வப்போது ஒரு வார்த்தையினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலுமே. அதன் மூலமாகத்தான் பரிசுத்தவான்களாகிய நீங்கள் ஜீவிக்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் அவர்கள் பற்றிக் கொண்டிருக்க ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். ஏதோ காரியம் ஒரு கட்டுக்கம்பமாக, வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு முடிவானதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு முடிவானதை அல்லது ஒரு முற்றிலுமானதை உடையவர்களாக இருக்க வேண்டும். எனக்கும், நான் கிறிஸ்துவண்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறவர்களுக்கும், கிறிஸ்துவினால், இந்த வேதாகமமே நம்முடைய முடிவானதாகும்.
இப்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை நமக்கு அனுப்பினார் என்பதை நாம் உணருகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியின் உதடுகளின் மூலமாகவே, தம்முடைய வார்த்தையை ஜனங்களிடம் கொண்டு செல்வதற்காக, அவர் கொண்டுள்ள வழி அதுவேயாகும். இப்போது இந்தக் கடைசி நாட்களில், அவர் மீண்டும் பரிபூரணமாக, அவருடைய மாம்சத்திலும், ஆவியிலும் தன்னை வெளிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். அது தேவன் தாமே எழுத்து வடிவிலும், தீர்க்கதரிசி வடிவிலும், மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டதாயுள்ளது.
அவர் என்னக் கூறினாலும் அதை எந்த நேரத்திலும் என்னுடைய எழுதுகோலை கொண்டு எழுத ஆயத்தமாயிருக்க ஆக்கியோனின் பிரசன்னத்தில் நான் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும். அவருடைய சிந்தனைகளின் மேல் என் மனதை வைத்திருக்கிறேன்; மனிதன் என்ன நினைக்கிறான், காலம் என்ன நினைக்கிறது, சபை என்ன நினைக்கிறது, இராஜ்யம் என்ன நினைக்கிறது என்பதில் அல்ல. தேவனுடைய சிந்தனைகளின் பேரில் மாத்திரமே! நான் தேவனுடைய சிந்தனைகளை மாத்திரமே வார்த்தையாக வெளிப்படுத்துகிறேன்.
தேவன் தம்முடைய சிந்தனைகளை எனக்கு வெளிப்படுத்துகிறபோது, நான் அதை வார்த்தையில் உங்களுக்கு ஒலிநாடாவில் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாக வெளிப்படுத்துகிறேன். அது, "நான் உரைக்கிறதாவது" என்பது அல்ல. அது, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதே! உங்களுக்கு வியாக்கியானிக்கும்படி ஆக்கியோன் என்னை அனுமதிக்கும் காரணத்தால் மாத்திரமே என்னால் அதை வியாக்கியானிக்க முடியும்; ஏனென்றால் அது பிழையற்ற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது.
ஆசாரியர்கள், முதலியவர்களைப் போன்று, என்னை பாவனைப்படுத்த முயற்சிக்கிற அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெறும் குழப்பம், அவ்வளவுதான். அவர்களால் அதை செய்ய முடியவில்லை. தேவன் என்னை, அவருடைய தீர்க்கதரிசியாக, அவருடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பினார்; மற்றொரு மனிதனை அல்ல, அல்லது ஒரு மனிதக் குழுவையல்ல.
நான் கூறுகிற வார்த்தைகளும், நான் செயல்படும் விதமும், சிலரைக் குருடாக்கும், ஆனால் வேறு சிலரின் கண்களைத் திறக்கும். நான் அணியும் வஸ்திரம், என் சுபாவம், என் லட்சியம், நான் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே அனைத்தையும் அவர் எனக்கு அணிவித்தார். அவர் என்னை உங்களுக்காகவே பரிபூரணமாக தேர்ந்தெடுத்தார். மற்றவர்கள் நின்று பார்த்து, “சரி, என்னால் முடியாது. இருக்கிறது...என்னால்-என்னால் பார்க்க முடியவில்லை" என்று கூறுவார்கள். அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதை யாரிடம் வெளிப்படுத்துவார் என்பதை அவர் வெளிப்படுத்துவார். அவர் மிகவும் புத்திசாலியான வேத பண்டிதர்களுக்கு, வேதத்தில் தன்னை மறைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை மறைத்து, வேதத்தில் அங்கேயே இருக்க முடியும், மேலும் அவர்கள் நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணாதிருக்க முடியும்; வாழ்நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணாதிருக்க முடியும். அவர் தன்னை மறைத்துக்கொண்டு, அங்கேயே இருக்க முடியும்.
இப்போது முக்கியமானது என்னவென்றால், தங்கள் இருதயங்களில் செய்தியைப் பெறுபவர்கள், முதிர்ச்சியடைவதற்கு, குமாரனின் பிரசன்னத்தில் இருக்க வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்தி, அதன்பின்னர் குமாரன் உங்களிடமிருந்து எல்லா ஈரத்தன்மையையும் உலரச் செய்து, உங்களை முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாக மாற்ற அனுமதிக்கவும்.
அவர் முதன்முறையாக வந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் இரண்டாவது முறை வந்தபோது; ஒரு இரட்டிப்பான பங்குடன், அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் யோவான் ஸ்நானகனின் ரூபத்தில் வந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் இந்த நாளில் வந்து, ஜீவித்து, மீண்டும் ஒரு மனிதனில் தன்னை வெளிப்படுத்துவதாக வாக்களித்தார்; மனுஷ குமாரன் மானிட சரீரத்தில் ஜீவித்தல்.
நாம் இப்போது கண்ணின் காலத்தில், மல்கியா 4-ஐக் குறித்த, தீர்க்கதரிசனத்தில் இருக்கிறோம். அவர் தாமே அதற்குள் அடியெடுத்து வைப்பதைத் தவிர, அது வருவதற்கான வேறெந்த காரியமும் விடப்பட்டிருக்கவில்லை, ஏனென்றால் அதுவே கடைசிக் காரியமாக இருக்கிறது.
உங்களுக்கு மேய்ப்பனாக இருக்கும்படி தேவன் எனக்கு அளித்திருக்கிற, என்னுடைய சிறு ஆட்டுக்குட்டிகளே செவி கொடுங்கள். காலம் தாமதமாகிவிட்டது. அவர் தம்முடைய மணவாட்டியான, உங்களுக்காகவே சீக்கிரம் வருகிறார். அந்த ஒலிநாடாக்களோடு தரித்திருங்கள், அதற்கு வியாக்கியானமே தேவையில்லை.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய மணவாட்டியை ஒன்றுசேர்க்கும் ஒரே காரியமான என்னோடு இணைந்துகொள்ள வரும்படி கழுகுக் குஞ்சுகளாகிய உங்களை நான் அழைக்கிறேன். கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகின்றார் 65-0822M என்ற செய்தியை தேவன் என் மூலமாக பேசி வெளிப்படுத்தும்போது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கேட்பீர்கள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஒலிநாடா ஊழியத்தோடு தரித்திருங்கள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
சகோதரன் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 4:10-12
ஏசாயா 53:1-5
எரேமியா 1:4-9
மல்கியா 4:5
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 1:14 / 7:1-3 / 14:12 / 15:24 / 16:13
கலாத்தியர் 1:8
2 தீமோத்தேயு 3:16-17
எபிரெயர் 1:1-3 / 4:12 / 13:8
2 பேதுரு 1:20-21
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 / 10:1-7 / 22:18-19