ஞாயிறு
12 அக்டோபர் 2025
63-0901E
பதறல்கள்

அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,

இப்பொழுது ஒலிநாடாக்களில் கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்.

கர்த்தாவே, இந்த ஆறு சிறிய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியான எங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை நாங்கள் எவ்வாறு வெளிப்படுத்தத் துவங்க முடியும்? இது எங்களுக்கு இந்த நேரத்தின் செய்தியின் வெளிப்பாடாயுள்ளது. இது தேவன் தம்முடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாகப் பேசி, “நீங்கள் என்னுடைய சத்தத்தோடு தரித்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தை உங்களுக்கு என்ன பொருட்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஒலிநாடாக்களில் நான் பேசியுள்ள இந்த செய்திகள் இன்றைக்கான என்னுடைய அடையாளம் என்ற வெளிப்பாட்டை நீங்கள் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று தம்முடைய மணவாட்டியினிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த காந்த ஒலிநாடாக்களில் நான் என் சத்தத்தை வைத்துள்ளேன்; ஏனென்றால் இந்தச் செய்திகள் முழு வார்த்தையையும் கொண்டிருக்க வேண்டும். ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய சத்தத்தை கேட்கும் கோடிக்கணக்கானவர்கள் இது என்னுடைய ஊழியம் என்ற வெளிப்பாட்டை உடையவர்களாக இருப்பார்கள். இது இன்றைக்கான பரிசுத்த ஆவியாக உள்ளது. இது என்னுடைய அடையாள செய்தியாய் இருக்கிறது.

“உலகம் முழுவதும் என் ஊழியத்தை அறிவிக்க நான் பல உண்மையுள்ள ஊழியர்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் என்னிடத்தில், ‘உம்முடைய ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் நாங்கள் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளோம். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து ஜனங்களை நாங்கள் கண்டோம். அவர்கள் உம்முடைய செய்தியைப் ஏற்றுக்கொள்ள தங்களுடைய சொந்த வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். இந்த நேரத்தின் செய்தியான, உங்களுடைய அடையாளத்தின் கீழ் வரும் யாவரும் காப்பாற்றப்படுவர் என்று நாங்கள் அவர்களிடத்தில் சொன்னோம்’” என்று சொன்னார்கள்.

இது இன்றைக்கான தேவனுடைய பரிபூரண வழி என்றால் என்ன? என்று ஒவ்வொரு மனிதனும் தன்னை ஆராய்ந்து தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமாயுள்ளது. தீர்க்கதரிசியின் வார்த்தை ஒரு முறை கூட தவறிப் போனதில்லை. அது மாத்திரமே சத்தியம் என்றும், அந்த காரியம் மாத்திரமே நம்முடைய மணவாட்டியை ஒன்றிணைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.

அவர் என்னவெல்லாம் கூறியிருந்தாரோ அவர் அதைக் கூறின விதத்திலேயே சரியாக நடந்தது. அக்கினி ஸ்தம்பம் இன்னும் நம்முடன் இங்கே உள்ளது. தேவனுடைய சத்தம் இன்னும் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தேவன் அந்த அடையாளத்தைக் கண்டபோது அவர் கடந்து செல்வார் என்று தீர்க்கதரிசி நம்மிடம் சொன்னார். இது அந்த அடையாள செய்தியின் கீழ் நாம் யாவரும் ஒன்று சேர்வதற்கான பதறலின் ஒரு நேரமாய் இருக்கிறது.

நாம் இந்தக் கடைசி காலத்தில் தேவனுடைய மகத்தான கரத்தைக் கண்டிருக்கிறோம். அவர் நமக்கு அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டைக் கொடுத்திருக்கிறார், அது அடையாள அறிவிப்புக்குறியின் கீழே வந்துள்ளது. இப்பொழுது, நாம அந்த அடையாள அறிவிப்புக்குறியின் கீழே இருக்கையில், நாம் ஒன்று கூடி வந்து பதறலில் இராப்போஜனத்தை எடுத்துக் கொள்வோமாக; ஏனென்றால் தேவன் நியாயத்தீர்ப்பைக் கொண்டு தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

நாங்கள் பதறல்கள் 63-0901E என்ற செய்தியை கேட்கப் போகிறபடியால், நீங்களும் அதைக் கேட்டுக்கும்படிக்கும், இராப்போஜனம் மற்றும் கால்களை கழுவும் ஆராதனையை இந்த ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கும்படி நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்க விரும்புகிறேன்.

செய்தியும் இராப்போஜன ஆராதனையும் ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களுடைய உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு உங்களுடைய ஆராதனை துவங்குவதற்கு தயவு செய்து தயங்க வேண்டாம், நம்முடைய வெளிநாட்டு விசுவாசிகள் பலர் அந்த நேரத்தில் உங்களுடைய ஆராதனையைத் தொடங்குவது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆராதனையின் கோப்பு பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு இணைப்பாக இருக்கும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

சேவைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16