காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 11 பிப்ரவரி, 2023

அன்புள்ள காத்திருக்கும் மணவாட்டியே,

இவ்வுலகை விட்டு நான் கடந்து சென்ற பிறகு, இந்த ஒலிநாடாக்களும் புத்தகங்களும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். வாலிபப் பிள்ளைகளாகிய உங்களில் அநேகர், இதுவே முற்றிலுமான சத்தியமென்பதை, வரப்போகும் நாட்களில் அறிந்து கொள்வீர்கள், ஏனெனில் நான் இதை கர்த்தருடைய நாமத்தினால் உரைக்கிறேன்.

இதை அறியாமலிருக்கிறாய் 65-0815 என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, கழுகுகளாகிய எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 4 பிப்ரவரி, 2023

அன்புள்ள இக்காலத்து ஜனங்களே,

பிதாவே, நாங்கள் உம்மை மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் என்ன உணர்கிறோம் என்பதை எப்படி எங்களால் வெளிப்படுத்த துவங்க முடியும்? நீங்கள் எங்களைத் தெரிந்துகொண்டீர், எங்களை முன்குறித்தீர், எங்களுக்காக உம்முடைய ஜீவனை கொடுக்க ஒரு ஜீவனுள்ள மனிதனானீர்.

நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, நீர் உம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக எங்களுக்காக உம்முடைய சிந்தைகளை எழுதினீர். அதன்பின்னர், நீர் வாக்களித்தபடி, உம்முடைய வார்த்தையை வியாக்கியானித்து வெளிப்படுத்த, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்களின் மூலம் நீர் மீண்டும் ஒருமுறை, உம்மையே வெளிப்படுத்த மானிட சரீரத்தில் வந்தீர்.

உம்முடைய சொந்த தெரிந்து கொள்ளுதலினால், இக்காலத்தின் மனிதனாய் இருக்க நீர் வில்லியம் மரியன் பிரான்ஹாமை தெரிந்துகொண்டீர். எங்களுடைய கவனத்தை ஈர்க்க நீர் அவரைத் தெரிந்துகொண்டீர். நீர் அவருடைய கரங்களை அசைத்தீர். தரிசனங்களில் நீர் அவருடைய கண்களை அசைத்தீர். நீர் அவருக்குக் காண்பித்ததைத் தவிர அவரால் வேறு எதையுமே சொல்ல முடியவில்லை.

நீர் அவருடைய வாயில் அருளியதைத் தவிர வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை. அவருடைய நாவு, விரல்கள் மற்றும் அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் நீர் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தீர். அவர் உம்மோடு முழுக் கட்டுப்பாட்டில் இருந்தார்.

அதன்பின்னர், மீண்டும் ஒரு முறை உம்முடைய தெரிந்துகொள்ளுதலினால், இக்காலத்து ஜனங்களாக இருக்கும்படி எங்களை நீர் தெரிந்துகொண்டீர். இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தை, மீண்டும் தோற்றுவிக்க, உம்முடைய வார்த்தையின் ஏவுதலினால் உம்முடைய சிறுபான்மையான கூட்டம் கூடியது. நாங்கள் உம்முடைய வார்த்தையாய் வார்த்தையோடு இணைந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் வேறு எதையும் செய்ய முடியாது.

பிதாவே, நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம்; எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. எங்களுடைய சிந்தனையோ, எங்களுடைய எண்ணங்களோ, அல்லது வேறு எந்த மனிதன் கூறுகிறதோ எங்களுக்குத் தேவையில்லை, உம்முடைய சித்தம் மாத்திரமே தேவை.

நாங்கள் உம்முடைய மணவாட்டியாய் இருக்க வேண்டுமென்று நீர் கூறினதை புரிந்துகொள்ளும்படி உம்முடைய வார்த்தைக்கு நாங்கள் சென்றுள்ளோம். உம்முடைய வார்த்தையால் இந்த உலகத்தை ஒருநாள் நீர் நியாயந்தீர்க்கப்போகிறீர் என்று கூறினீர். உம்முடைய வார்த்தை, உம்மால் முன்குறிக்கப்பட்டு மற்றும் முன்நியமிக்கப்பட்டிருந்த உம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரமே வருகிறது என்று நீர் சொன்னீர்.

அது ஒரு வேதபண்டிதனிடத்திற்கோ அல்லது ஒரு கூட்ட மனிதரிடத்திற்கோ வராமல், உம்முடைய தீர்க்கதரிசியினிடத்திற்கே வருகிறது என்று நீர் எங்களிடத்தில் சொன்னீர். அவர் மாத்திரமே உம்முடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருப்பார். இது அவருடைய எண்ணங்களோ, அவருடைய யோசனைகளோ, அவருடைய வியாக்கியானமோ அல்ல, ஆனால் நீர் அவர் மூலமாக பேசி, உம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறீர்.

ஒவ்வொரு காலத்திலும், ஜனங்கள் உம்முடைய வார்த்தைக்கு மனிதர் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க அனுமதிக்க, அதுவே அவர்கள் குருடாயிருக்க காரணமாகிறது. பரிசேயர் மற்றும் சதுசேயரிடம் அது செய்த அதே காரியத்தையே செய்கிறது. அந்தக் காரணத்தினால் ஜனங்கள் அதை இன்றைக்கு பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். உம்முடைய தீர்க்கதரிசி அவர்களுக்கு செய்யும்படி சொன்னதைப் போன்ற வார்த்தைக்கு செவி கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களோ அதைக் குறித்து வேறு யாரோ சொல்லுகிறதற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாவது நான் என்னுடைய வார்த்தையை அனுப்புகிறேன், அப்பொழுது ஜனங்கள் என்னுடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அப்பொழுது நான் அவர்களுக்கு ஊழியத்தை அனுப்புகிறேன் என்று, நீர் கூறினீர். ஒவ்வொரு காலத்திலும் ஊழியம் வழிதவறி செல்கிறது என்றும்; அவர்கள் எல்லோரும் அல்ல, ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், தாங்களாகவே ஜனங்களை வழி நடத்துகிறார்கள் என்றும் கூட நீர் கூறினீர். நாங்கள் உம்முடைய மூலத் திட்டத்தில் இருக்க விரும்புகிறோம்.

ஊழியக்காரர்கள் தங்களுக்குள்ளே உடன்பட முடியாதபடி, இது மிகவும் குழப்பமாய் இருக்கிறது. சகோ. X- என்பவரோடு சகோ. Y உடன்பட முடியவில்லை; சகோ. Y என்பவர் சகோ. Z என்பவரோடு உடன்படுகிறதில்லை. அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்பட முடியவில்லை. நாம் ஒலிநாடாக்களை சபையில் இயக்கக் கூடாது என்ற, ஒரு காரியத்தில் மாத்திரமே அவர்கள் உடன்படுவதாக தெரிகிறது.

அது மீண்டும் ஒருமுறை மிகுந்த குழப்பமாயுள்ள, பாபிலோனாயுள்ளது. ஒரே ஒரு மாதிரி வடிவம் மாத்திரமே உள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், அந்த மாதிரி வடிவத்திற்கு ஏற்றவாறு நம்மை நாமே வெட்டிக்கொள்ள வேண்டுமேயன்றி, நமக்குப் பொருந்துமாறு அந்த மாதிரி வடிவத்தை வெட்ட முயற்சிக்கக் கூடாது.

எத்தனையோ ஊழியங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களோடும், தங்களுடைய சொந்த வியாக்கியானங்கள் மற்றும் உபதேசங்களோடு எழும்பியிருக்கின்றன. அவை அனைத்துமே பயனற்று போய்விட்டன. நியமிக்கப்பட்ட பெரிய ஊழியர்கள் தாங்கள் பிரசங்கித்துக்கொண்டும் மற்றும் இக்காலத்து செய்தியை மேற்கோள் காட்டிக்கொண்டுமிருப்பதால், அவர்களுடைய ஊழியமே இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாய் இருக்கிறதேயன்றி, ஒலிநாடாக்கள் அல்ல என்று கூறுகிறவர்களாக எழும்பியுள்ளனர்.

அவர்களுடைய சபைகளுக்கு சென்று, பல வருடங்களாக அவர்களுக்கு செவிகொடுக்கிற விசுவாசமுள்ள ஜனங்களை அவர்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வருகை தருகின்ற பல ஊழியக்காரர்களையும், கூட்டங்களையும், எழுப்புதல்களையும் பிரசங்கிப்பதையும், அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதுவே உங்களுடைய அருளப்பட்ட வழியேயன்றி, ஒலிநாடாக்கள் அல்ல என்று கூறுகிறவர்களை உடையவர்களாக இருக்கின்றனர். அதன்பின்னர் ஒருநாள் அவர்கள், செய்தி உண்மையானது அல்ல என்று கூறுகிறார்கள்.

அவர் என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை ஒலிநாடாக்களை கொண்டு அவர்கள் சரிபார்த்துக் கொண்டிருக்கவில்லையா? அவர் கூறினதே வார்த்தையாக இருக்க வேண்டும் என்றும், இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தார்களா? மிக முக்கியமான சத்தமாக தங்களை வைத்துக்கொண்டிருந்ததற்கு பதிலாக, ஜனங்களுக்கான உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தமான, ஒலிநாடாக்களை அவர் இயக்கியிருந்திருப்பாரானால், அப்பொழுது அவர்கள் இந்தக் கடைசி கால உபதேசத்தில் கேட்டுக்கொண்டிருந்தது ஒரு கள்ள அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த ஒன்று என்பதை தெரிந்துகொண்டிருந்திருப்பார்கள்.

உங்களுக்கு ஒரு போதகர் தேவையில்லை என்பது அதன் அர்த்தமல்ல. அவர்கள் அனைவரும் கள்ள அபிஷேகம்பண்ணப்பட்ட போதகர்கள் என்றும் அர்த்தமல்ல. சகோதரன் பிரான்ஹாம் கூறினதை சரியாகப் பிரசங்கிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் அர்த்தமல்ல. ஒலிநாடாக்களில் உள்ள செய்தியை நீங்கள் கேட்க வேண்டும் என்பதே மிக முக்கியமான காரியம் என்பதைத்தான் அது பொருட்படுத்துகிறது; அது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது.

இது வழிகாட்டுதலாயுள்ளது. இது முற்றிலுமானதாய் உள்ளது. இது முடிவான வார்த்தையாய் உள்ளது. இது மாத்திரமே பரிபூரண வார்த்தையாக உள்ளது. ஒரு மேய்ப்பர், உங்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டி, தன்னுடைய ஜனங்களோடு அந்த சுத்தமான வார்த்தைக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தாலொழிய, ஏதோ தவறு நேரிடும்.

ஊழியத்தில் ஏன் அவர்களுடைய சபைகளில் உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை இயக்கக் கூடாது? இது வார்த்தை என்று தாங்கள் விசுவாசிப்பதாக அவர்கள் கூறும்போது அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? அவர்கள் எல்லா வகையான சாக்குப்போக்குகளையும் கூறி மற்றும் இன்றைக்கான உங்களுடைய அருளப்பட்ட வழி அவர்களுடைய ஊழியமேயன்றி, ஒலிநாடாவில் உள்ள உங்களுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் அல்ல என்று ஏன் கூறுகிறார்கள்?

உங்களுடைய சத்தத்தைக் கேட்க "இயங்கு பொத்தானை அழுத்துங்கள்" என்று கூறுவதால், நாம் ஒரு மனிதனை ஆராதித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், நீங்கள் அந்த மனிதனின் மூலம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்றும் சொல்லி ஜனங்களை ஏன் பயமுறுத்துகிறார்கள்?

நாங்கள் பிதாவே உம்மை மாத்திரமே ஆராதிக்கிறோம். நாங்கள் அதை உம்முடைய வார்த்தையைக் கொண்டு மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறோம். இன்றைக்கான உம்முடைய அருளப்பட்ட வழியாய் இது மாத்திரமே உள்ளது: என்று நாங்கள் ஒலிநாடாக்களில் கேட்கிற ஒவ்வொரு செய்தியோடும் உம்முடைய தீர்க்கதரிசி மூலமாக நீர் எங்களுக்குச் சொல்லுகிறீர்.

உம்முடைய வார்த்தைக்கு நேரடியாக செல்வதைத் தவிர உம்முடைய மணவாட்டி வேறெங்கு செல்ல முடியும். நாங்கள் உம்முடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டியாக இருக்கிறோம். நாங்கள் உம்முடைய அக்னி ஸ்தம்பத்தோடு தரித்திருக்க வேண்டும். அதுவே நாங்கள் திருப்தியடையக்கூடிய மற்றும் நாங்கள் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூறக்கூடிய ஒரே ஸ்தலமாயுமுள்ளது.

பிதாவே, நீர் உம்முடைய சபைக்கு புறம்பேயிருந்து உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம், அது எங்களுடைய இருதயத்தை உடைக்கிறது. தாழ்ப்பாளோ உள்ளே இருக்கிறது, நீர் உள்ளே வருவதற்காக நாங்கள் கதவைத் திறந்துள்ளோம். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். நாங்கள் வேறு எதையும் எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் உம்முடைய வார்த்தையால் கர்ப்பந்தரிக்கப்பட்டுள்ளோம்.

உம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டிற்காக பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட உம்முடைய வார்த்தைக்காகவே நாங்கள் இருக்கிறோம். நாங்கள் ஒருநாள் நியாயத்தீர்ப்பில் உமக்கு முன்பாக நிற்போம். "பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிறோம்" என்பதை நாங்கள் எங்களுடைய முழு இருதயத்தோடு கூற விரும்புகிறோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தத்தைக் கேட்க உங்களுடைய மேய்ப்பரை, உங்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டியை ஊக்கப்படுத்துங்கள். ஒலிநாடாக்களில் கூறுகிற தேவனுடைய வார்த்தையினாலே நீங்கள் ஒருநாளில் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். வேறு ஏதாவது ஒரு வாய்ப்பை நீங்கள் எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்?

தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள் 65-0801e என்ற செய்தியை தேவன் தெரிந்துகொண்ட மனித உதடுகளின் மூலமாக அவர் பேசுவதை கேட்கப்போகின்றபடியால்; இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகின்றீர்கள். அவர் தன்னுடைய வரத்திற்கு, தன்னுடைய பண்பினை அளித்தவர். அவரே இவருக்கு அவருடைய சுபாவத்தை, அவருடைய பாணியை, அது என்னவாக இருந்தாலும், அவர் எப்படி தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், அவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையும் அளித்தார். இக்காலத்து ஜனங்களை கவரும்படி இக்காலத்து மனிதனாய் அவர் வில்லியம் மரியன் பிரான்ஹாமை உருவாக்கினார், மற்றும் நாமே இக்காலத்து ஜனங்களாய் இருக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

வேதவாக்கியங்கள்:

ஆதியாகமம்: 22:17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41:9
சகரியா 11:12 / 13:7
ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12
மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 15:26
பரி. லூக்கா: 17:30 / 24:12-35
ரோமர்: 8:5-13
எபிரெயர்: 1:1 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம்: 1:1-3 / அதிகாரம் 10

 


சனி, 28 ஜனவரி, 2023

அன்புள்ள கிறிஸ்துவினுடைய எளிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே,

நாம் வேறு ஒன்றாக இருக்க முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நமக்கு வேறு எதுவும் தெரியாது. நமக்கு வேறு எதுவும் வேண்டாம். சுத்தமான மாமிசம் எங்கு உள்ளதோ, அந்தக் காலத்தின் வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்த, கழுகுகள் ஒன்று கூடும். வார்த்தை நமக்குள் உயிர்ப்பிக்கிறது.

நாம் எல்லோரையும் போல் இல்லை! நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ஜனமாய், கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்களாய், இந்த நாளுக்காக அவருடைய வாக்குத்தத்தத்தின் பலனைக் கொடுப்பதற்காக, வார்த்தைக்கும் தேவனுடைய ஆவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்பதனால் நாம் தொடர்ந்து முழு வளர்ச்சியுடன் முதிர்ச்சியடைந்து வருகிறோம்.

இந்த ஒலிநாடாக்களை மீண்டும் ஆலோசித்துப் பார்க்குமாறு தீர்க்கதரிசி நமக்குக் கூறினார். நீங்கள் ஒரு ஒலிநாடா பதிவு செய்யும் கருவியை வைத்திருந்தால், ஒரு ஜனக் குழுவை ஒன்று சேர்த்து, அதை இயக்கி, மிக கவனமாக கூர்ந்து கேளுங்கள். அவர் நமக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற, அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை; அவரே தம்முடைய சொந்த வியாக்கியானத்தை செய்கிறார். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்."

இதுதான் வேதாகமமாக உள்ளது, இதிலிருந்து ஒரு வார்த்தை எடுக்கப்படவோ அல்லது இதனோடு கூட்டப்படவோ கூடாது. அப்படியே அந்த சத்தத்தோடு தரித்திருங்கள். "அவர்கள் ஒரு அந்நியனுக்குப் பின்செல்லமாட்டார்கள்."

இன்றைக்கு தேவன் அருளியுள்ள வழியை எப்படி யாரும் காணாமல் இருக்க முடியும்? ஆனால் தேவனுக்கு மகிமை, நாம் அதைக் காண முடியும், ஏனென்றால் நாம் அதைக் காணும்படி தெரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். நாம் வஞ்சிக்கப்படமாட்டோம், நாம் வஞ்சிக்கப்பட முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, அது அப்படியே ஒரு நிமிடம் பதியட்டும், நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறோம்!! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று தேவன் தாமே, மானிட உதடுகள் மூலமாக பேசி, நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் பயப்படுவதற்கு முற்றிலுமாக ஒன்றும் இல்லை. நமக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் நம்முடையதாய் இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் கர்த்தர் நம்மிடத்திற்கு வருகை தர வேண்டும் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். எல்லோரையும் உட்கார வைக்க நம்மிடத்தில் இங்கு இடமில்லை, எல்லோரும் ஜெபர்சன்வில்லுக்கு வர முடியாது, எனவே நாம் அவர்களுக்கு இணையதள ஊடகம் மூலம் வார்த்தையை அனுப்ப வேண்டும்.

நாம் நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், நம்முடைய கார்களில், உலகம் முழுவதிலுமிருந்து நம்முடைய சிறிய ஒலிபெருக்கிகளை சுற்றிக் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

அவர்கள் நம்முடன் ஆப்பிரிக்காவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் மெக்சிகோவில் ஒன்று கூட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா என்று, பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

நாம் இங்கே வீட்டில் கூட்டப்படுகிற சபையில், கூடாரத்தில் கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் ஒரே குழுவினராக, விசுவாசிகளாக ஒன்று சேர்ந்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய நாமத்திற்காக இப்பொல்லாத காலத்திலிருந்து தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாக இருக்கிறோம். நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்று சாத்தானுக்கு சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த மூல மணவாட்டி மரத்தின் பாகமாக இருக்கிறோம். அந்த வார்த்தையினால் நம்முடைய ஜீவியம் வெளிப்படுத்தப்படுகின்றதை நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

அவரில் சம்பவிக்கவிருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் இயேசு நேரடியான பதிலாய் இருந்தார் என்று நம்புவது அனைவருக்கும் எளிதானது, ஏனென்றால் அது சம்பவித்ததைக் காண அவர்கள் பின்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பொல்லாத காலத்தில், அதை மற்றொரு விதத்தில் வியாக்கானிப்பதன் மூலம், அப்பொழுது அவர்கள் செய்த அதே காரியத்தை இவர்களும் செய்துகொண்டு, ஒரு பொய்யை விசுவாசிக்கும்படி கொடிய வஞ்சகத்திற்குள்ளாக ஜனங்கள் செல்ல காரணமாகியுள்ளனர். இந்தக் காலத்திற்காக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிற அதே வார்த்தையாக இது உள்ளது என்பதை அவர்கள் மாத்திரம் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்கும்.

இந்த செய்தியே, மணவாட்டியை ஒன்று சேர்க்கக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. இந்த செய்தியே, நாம் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரியமாய் உள்ளது. ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தமே, கர்த்தர் உரைக்கிறதாவது என்று ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தமாய் உள்ளது.

இப்பொழுது, ​​வெறுமனே ஒரு குளிர்ந்த, சம்பிரதாயமான, வெற்றச்சார முறையான சபைகள், முதலியன, மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரம், அது நிலைக்காது; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதற்கு எந்த கவனத்தையும் ஒருபோதும் செலுத்த மாட்டார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட அங்கே ஒரு உண்மையான காரியத்தைப் போலவே இருக்கிறது. நீங்கள் யாவரும் செய்ய வேண்டியது ஒரு வார்த்தையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதேயாகும். வாக்களிக்கப்பட்ட காலமாயும்; மிக மகத்தான நேரமாயுமுள்ளதே! கிறிஸ்தவர்கள், எங்கும், நாம் ஜீவித்துகொண்டிருக்கிற வேளையை கவனித்துக் கொண்டிருக்கிறார்களே! குறித்துக் கொண்டு, வாசித்து, மிகவும் கூர்ந்து செவி கொடுங்கள்.

இப்பொல்லாத காலத்தின் தேவன் அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஜனங்கள் கேட்பதை தடுப்பதன் மூலம் அவர்களை வஞ்சிக்கும்படி அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறான். ஆதியிலே அவன் ஏவாளிடத்தில் செய்ததுபோல, அவர்கள் வெறுமனே ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்யவே அவன் முயற்சிக்கிறான்.

ஆனால் கிறிஸ்துவினுடைய வார்த்தை-மணவாட்டியோ ஒரு தலையண்டைக்கு வந்து கொண்டிருக்கிறாள். நாம் எங்கிருந்து ஆரம்பித்தோமோ அந்தத் துணையுடன் நாம் மீண்டும் இணைந்துகொண்டிருக்கிறோம். யாத்திரையின் நேரம் சமீபித்துவிட்டது. தேவன் தம்முடைய வார்த்தையோடு தரித்திருக்கிற அவருடைய மணவாட்டிக்காக வருகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இங்கே கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை அழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த காலத்திற்காக, அவளுக்கென அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை ரூபுகாரப்படுத்துவதன் மூலம் அவர் அதைச் செய்துகொண்டு, அது கிறிஸ்து என்று காண்பித்துக்கொண்டிருக்கிறார்.

உங்களிடத்தில் நேரடியாக பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்க, உலகெங்கிலுமுள்ள மணவாட்டி ஒன்றிணைவதை விட மகத்தானது எதுவுமில்லை. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சத்தியம் என்று நம்பும்படிக்கு, வியப்புறவோ அல்லது ஜெபிக்கவோ கூட வேண்டியதில்லை. ஏனென்றால் அது மாத்திரமே ரூபகாரப்படுத்தப்பட்ட, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற சத்தமாகும்.

கேட்கும்படிக்கு எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள்:

இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M: என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு., ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் கேட்கப்போகிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24-வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14-வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7-வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14

 


சனி, 21 ஜனவரி, 2023

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே, நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0725E மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 14 ஜனவரி, 2023

அன்புள்ள செம்மறியாடுகளை தொழுவத்தில் கூட்டிச்சேர்ப்பவர்களே,

ஒவ்வொரு வாரமும் தேவனுடைய ஆட்டுத் தொழுவத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் கூடிவருவதில் நான் மிகவும் திருப்தியடைந்து, கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன், அங்கு நாம் நம்முடைய மறைவான இடத்தில் மறைந்திருந்து, அந்த மறைவான ஆகாரத்தை உண்டு, ஜீவிப்பவர்களாக இருக்கிறோம். இது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாகவும், ரூபகாரப்படுத்துதலாகவும் மற்றும் அவரையே நமக்கு வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாயும் உள்ளது.

மற்றவர்கள் அதை நோக்கிப் பார்த்தும், அதைப் புரிந்துகொள்ளாதபடிக்கு அவர் தம்மையே மறைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாகிய, நமக்கோ, நாம் அதை தெளிவான காட்சியில் கண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தையும், அவருடைய தீர்க்கதரிசியும் ஒன்றாகவும் மற்றும் மாறாதது என்பதாலும், நாம் அவைகளுடன் தரித்திருக்கிறோம்.

நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் இந்த வேதாகம தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். இது வார்த்தையாயுள்ளது.

இன்றைக்கு பல அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள், "நீங்கள் தரித்திருக்க வேண்டியது பரிசுத்த ஆவியானவரோடேயல்லாமல், தீர்க்கதரிசியோடல்ல" என்று கூறுகிறார்கள். பண்டைய தீர்க்கதரிசிகளைப்போலவே, நமக்கு ஒரு கேள்வி இருந்தால், அதற்கு சரியான பதில் இருக்க வேண்டும். நமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி என்ன கூறினார் என்று பார்க்க நாம் வார்த்தைக்குச் செல்ல வேண்டும்.

ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி உண்டு, அது அவர் அதைச் செய்வதாக வாக்களித்ததுபோல வார்த்தை மாம்சமானதாயுள்ளது.

அவர் வாக்களித்த ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி, மல்கியா 4, லூக்கா 17, மனுஷகுமாரன் தம்மை மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்துதல்.

ஆம், அபிஷேகம்பண்ணப்பட்ட மனுஷர் உள்ளனர். ஆம், அவர்களுக்கு ஒரு அழைப்பு உள்ளது. ஆம், அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆம், அவர்களுக்கு சரியான நோக்கமும், குறிக்கோளும் உள்ளது.

அப்படியானால் எது சரி, எது தவறு என்று எப்படி தெரிந்துகொள்வது?

கவனியுங்கள், அவர்கள் ஒரேவிதமாக காணப்படுகின்றனர். அவர்கள் ஒரே விதமாக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கவனியுங்கள், "அவர்களுடைய கனி..."

இந்தக் காரியங்களைக் கூற நான் வெறுக்கிறேன், ஆனால் வேளையோ தாமதமாகி, நேரமோ விரைந்தோடிக்கொண்டிருக்கிறது. பவுல் சபையைக் குறித்து எச்சரித்த அந்த கொடிதான ஓநாய்களால் இன்றைக்கு சொல்லப்படுவதும் பிரசங்கிக்கப்படுவதும், கள்ள அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் வருவார்கள் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறினதும் இதுதான். அவர்கள் கூறியதுபோலவே, இவர்கள் இங்கே நமக்கு மத்தியில் இருக்கிறார்கள்.

ஒரு ஊழியக்காரரிடத்திலிருந்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஒரு பகுதி இதோ உள்ளது. தேவனுடைய தீர்க்கதரிசியின் மேல் சந்தேகத்தைப் போட அவர்களுடைய கனி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசியை பின்பற்றி, இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் நாம் தெய்வீகத் தன்மை கொண்ட ஜனங்கள் என்று அவர்கள் தங்களுடைய ஜனங்களை எச்சரிக்கிறார்கள்.

இது எவ்வளவு வஞ்சனையாயுள்ளது என்பதை கவனியுங்கள்.

வில்லியம் பிரான்ஹாமினுடைய பிரசங்கங்களின் வெளியீடுகளை இப்பொழுது நாம் தேவனுடைய சத்தம் என்று அழைக்கும் வகையில் இந்த பிசாசு நம்முடைய செய்தி வரிசையில் ஊடுருவியுள்ளதால் நான் புண்படுத்தப்பட்டேன். வில்லியம் பிரான்ஹாம் உண்மையில் தேவனுடைய சத்தமாயிருக்கவில்லை, ஆனால் சரியாகக் கூறினால் தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனித சத்தமாய் இருந்தார். அவர் தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று வேதம் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் சரியாகக் கூறினால் வேதம் அவரை 7-ம் தூதனுடைய சத்தமாகவே அடையாளப்படுத்துகிறது. (வெளி. 3:14; 10:7).

நாம் வார்த்தைக்குச் செல்வோம், தேவனுடைய தீர்க்கதரிசியே இந்தக் கள்ள உபதேசத்தை வெளிப்படுத்தட்டும்.

"நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டேன், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்."

இப்பொழுது நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள், இந்த கள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியையா, அல்லது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட செய்தியாளராகிய ஏழாம் தூதனையா? இதுபோன்ற காரியங்களை நம்பும் அல்லது உங்களுக்குக் கற்பிக்கும் எந்த ஊழியக்காரனின் கீழும் நீங்கள் எப்படி அமர்ந்திருக்க முடியும்? இன்னும் நேரம் இருக்கும்போதே நீங்கள் வார்த்தைக்குள் வந்துவிடுவது நல்லது.

வில்லியம் பிரான்ஹாமை முற்றிலுமானவராக்குவதாலும், அவரை தெய்வீகத் தன்மை கொண்டவராக இந்த செய்திக் குழுவினர் ஆக்குவதாலும் ஒரு பயங்கரமான தவறு நடந்துள்ளது. வில்லியம் பிரான்ஹாம் ஒருபோதும் முற்றிலுமானவராயிருக்கவில்லை! தேவனுடைய வார்த்தையே முற்றிலுமானது.

ஆமென், தேவனுடைய வார்த்தையே நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளது, வார்த்தை யாரிடம் வந்தது, உங்களிடத்திற்கா அல்லது அவரிடத்திற்கா? தேவனுடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி யார், நீங்களா அல்லது அவரா? கர்த்தர் உரைக்கிறதாவது என்று யாரை அக்கினி ஸ்தம்பம் ரூபகாரப்படுத்தினது, உங்களையா அல்லது அவரையா?

ஏனெனில் உங்களுக்கு இரண்டு மனிதர் இருந்தால், நீங்கள் இரண்டு கருத்துக்களைப் பெற்றிருப்பீர்கள்.

நமக்கு இரண்டு மனிதர்களோ, அவர்களுடைய கருத்துகளோ தேவையில்லை, ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி என்ன கூறியுள்ளார் என்பதே நமக்குத் தேவை.

மேலும் இது ஒரு முடிவான முற்றிலுமானதற்கே வர வேண்டும், மேலும் என்னுடைய முற்றிலுமானது வார்த்தையாய், வேதாகமமாக உள்ளது.

நீங்கள் கூறினதுபோல, அது இருக்கிறது, வேதம் அவருடைய மற்றும் நம்முடைய முற்றிலுமானதாய் இருக்கிறது, ஆனால் அதன்பின்னர் அவர் கூறுவதோ:

நம்முடைய சகோதரர்களே, நீங்கள், நீங்கள் என்னை ஒருவிதமான உங்களுடைய முற்றிலுமானவராக பார்க்கிறீர்கள் என்று நான் அறிவேன்.

எனவே ஒரு நிமிடம் காத்திருங்கள், அது நீங்கள் கூறினதற்கு முரணாகத் தெரிகிறது. நாங்கள் அவரை எங்களுடைய முற்றிலுமானவராக நோக்கிப் பார்க்க வேண்டும் என்றே அவர் கூறினார்.

நான் தேவனைப் பின்பற்றும் வரை என்று, பவுல் வேதத்தில் கூறியதுபோல், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல் நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்."

அது அபிஷேகிக்கப்பட்டிருக்கவில்லையா? அவர் எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

கடந்த வாரம் தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு என்ன சொன்னார்?

ஒரு மனிதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையாகவே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, செய்தியும் செய்தியாளனும் ஒன்றாகவும், ஒரே விதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம்.

நீங்கள் அவைகளைப் பிரிக்க முடியாது என்று அவர் கூறினார், அவை ஒன்றுதான், ஆனால் நாம் பிரிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

வில்லியம் பிரான்ஹாம் எந்த அழிவுள்ள மனிதனைக் காட்டிலும் வித்தியாசமானவர் அல்ல, ஏனெனில் அவர் எலியா இருந்ததைப் போலவே, பாடுள்ள ஒரு மனிதனைப் போல இருந்தார்.

ஆமென், அவர் நிச்சயமாக ஒரு மனிதராக இருந்தார், ஆனால் தேவன் தம்முடைய எல்லா வார்த்தைகளையும் வெளிப்படுத்தவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்தவும் தெரிந்துகொண்ட மனிதனாக அவர் இருந்தார். ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய் என்று தேவன் கூறின ஒருவராய் அவர் இருந்தார்.

அதே காரியம், அபிஷேகம்பண்ணப்பட்ட, பெந்தெகொஸ்தேவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆனால் "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்ற ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையின் தற்போதைய வாக்குத்தத்தத்தை மறுதலித்தல்.

அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களா என்ற வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? உண்மையான தீர்க்கதரிசியிலிருந்து கள்ள தீர்க்கதரிசிகளை நாம் அறிந்துகொள்ள அவர் நமக்கு உதாரணங்களைத் தருகிறார்.

பிலேயாம் மற்றும் மோசே. மிகாயா மற்றும் சிதேக்கியா. எரேமியா மற்றும் அனனியா. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருவரும் தேவனுடைய தீர்க்கதரிசிகளாக அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தனர், ஆனால் அவர் நம்மை என்ன செய்யும்படி கூறினாரென்றால், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியோடு தரித்திருங்கள் என்பதேயாகும். நீங்கள் தேவன் அருளியுள்ள வழியை பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதற்குமான ஒரே வழியாய் அது உள்ளது.

அவர் அதைச் செய்கிறபோது அவர் அருகில் இருக்கிற ஒருவனாய் மாத்திரமே நான் இருக்கிறேன். அதைக் கூறும்படி அவர் உபயோகித்த ஒரு சத்தமாக மாத்திரமே நான் இருந்தேன். நான் என்ன அறிந்திருந்தேன் என்பதாய் அது இருக்கவில்லை; அவர் அதை என் மூலமாக உரைக்க நான் என்னையே அர்ப்பணித்ததாகவே அது உள்ளது.

மணவாட்டிக்கு விருப்பமும், தேவையுமாயிருக்கிறதும் அவ்வளவுதான். ஒரே சத்தம். ஒரே தீர்க்கதரிசி. ஒரே செய்தி. ஒரே செய்தியாளர்.

ஓ பிதாவே, உம்முடைய கிருபை இரக்கம் எங்களிடத்தில் இருப்பதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களால் கூடாதது ஒன்றுமேயில்லை என்று நீர் எங்களுக்கு சொன்னீர். நம்மால் கூடாதது ஒன்றுமேயில்லை. விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று, நாம் விசுவாசிக்கிறோம்.

கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-0725M என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் நாம் பெற்றுள்ள தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சத்தம் நமக்கு சொல்லவிருக்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வந்து எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்