பிரான்ஹாம் கூடாரத்தின்
சுருக்கமான வரலாறு


சகோதரன் பிரான்ஹாம் மனம் மாறி ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட பிறகு, வேதபண்டிதர் ராய் E. டேவிஸ் என்ற போதகர் அவரை மிஷனரி பாப்டிஸ்ட் சபையில் நியமித்தார். 1933 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிஷனரி பாப்டிஸ்ட் சபைக் கட்டிடம் எரிந்து தரைமட்டமானபோது, சகோதரன் பிரான்ஹாம் வேதபண்டிதர் டேவிஸுக்கு உதவி போதகராக இருந்தார். தீ விபத்துக்குப் பிறகு, வேதபண்டிதர் டேவிஸ் தனது சொந்த மாநிலமான டெக்சாஸுக்குத் திரும்பினார், அவர் இல்லாத நேரத்தில், சபையை சகோதரன் பிரான்ஹாமின் கைகளில் விட்டுச் சென்றார். தீ விபத்து காரணமாக, சபையோருக்கு சபைக் கட்டிடம் இல்லாததால், சகோதரன் பிரான்ஹாம் ஒரு கூடாரம் அமைத்து ஜெபர்சன்வில்லில் தொடர்ந்து பிரசங்கித்து, அடிக்கடி எழுப்புதல் கூட்டங்களையும் நடத்தினார்.
1933 ஜூன் மாதம், இந்த எழுப்புதல்களில் ஒன்றைத் தொடர்ந்து நடந்த ஞானஸ்நான ஆராதனையில், சகோதரன் பிரான்ஹாம் ஓஹியோ நதிக்கரையில் ஸ்பிரிங் தெருவின் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தார், கர்த்தருக்கு தன்னுடைய இருதயத்தை அளிக்க முன்னதாகவே பீடத்தண்டைக்கு சென்றிருந்த எட்வர்ட் கோல்வின் என்ற மனிதனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அக்கினி ஸ்தம்பம் வல்லமையாக கீழே இறங்கி வர, ஒரு சத்தம் தொனித்தது, "கிறிஸ்துவின் முதல் வருகையை முன்னறிவிக்க யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தி உலகம் முழுவதும் சென்று, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை முன்னறிவிக்கும்.”
அந்த ஆண்டின் பிற்பகுதியில், சகோதரன் பிரான்ஹாம் தனது புதிய சபைக்கு அடிக்கல் நாட்டினார், அதற்கு "பிரான்ஹாம் கூடாரம்" என்று பொருத்தமாக பெயரிடப்பட்டது; புதிய சபையில் மேய்ப்பராயிருக்கும் போது, ஜீவிய வருமானத்திற்காக அவர் இந்தியானாவின் பொது சேவை நிறுவனத்திலும், இந்தியானா வேட்டை பாதுகாவலராகவும் கூட பணியாற்றினார்.
"கிறிஸ்துவின் முதல் வருகையை முன்னறிவிக்க யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தி உலகம் முழுவதும் சென்று, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை முன்னறிவிக்கும்.”

1937 ஜனவரியில், ஓஹியோ நதியில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் ஜெபர்சன்வில் பகுதியைத் தாக்கியது, அணைகளை உடைத்து நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. தாழ்வான பகுதியில் கட்டப்பட்ட கூடாரம், வெள்ளத்தால் முற்றிலுமாக மூழ்கியது. சபைக்குள் சகோதரன் பிரான்ஹாமின் வேதம் பிரசங்க மேடையில் வைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் உயர்ந்தபோது, பிரசங்க மேடை மற்றும் சபையில் இருந்த அனைத்து நாற்காலிகளும் கூரைக்கு மிதந்தன, பின்னர், தண்ணீர் வடிந்தபோது, வேதம் இன்னும் பாதுகாப்பாகவும், பிரசங்க மேடையில் உலர்ந்தும் இருந்தது.
1946 மே மாதத்தில், சகோதரன் பிரான்ஹாம் தூதனிடமிருந்து "உலக மக்களுக்கு தெய்வீக சுகமளிக்கும் வரத்தை எடுத்துச் செல்லும்" கட்டளையைப் பெற்றார். சகோதரன் கிரஹாம் ஸ்னெல்லிங், அதைத் தொடர்ந்து இன்னும் சிலர், தீர்க்கதரிசி களத்தில் இருந்தபோது, மனம் மாறி ஆர்மன் நெவில் என்ற உள்ளூர் மெதடிஸ்ட் ஊழியருக்கு சகோதரன் பிரான்ஹாம் ஞானஸ்நானம் கொடுக்கும் வரை, துணை போதகர்களாகச் செயல்பட்டனர். 1950களின் முற்பகுதியில் சகோதரன் பிரன்ஹாமுடன் சேர்ந்து சகோதரன் நெவில் கூடாரப் போதகராகப் 1965-ல் சகோதரன் பிரான்ஹாம் இறக்கும் வரை பணியாற்றினார்.

1970களின் முற்பகுதி வரை சகோதரர் நெவில் தொடர்ந்து சபைப் போதகராகப் பணியாற்றினார், அந்த நேரத்தில், சகோதரன் வில்லார்ட் காலின்ஸ் சகோதரன் நெவில் அவர்களுக்கு பதிலாக போதகராகப் பதவியேற்றார், மேலும் 2015-ல் அவர் ஓய்வு பெறும் வரை ஜெபர்சன்வில்லில் உள்ள விசுவாசிகளுக்கு உண்மையாகச் சேவை செய்தார். அப்போது சகோதரன் ஜோசப் பிரான்ஹாம் போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், சகோதரன் சாமுவேல் பார்பர் இணை போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக சபையானது சில புதுப்பித்தல்களுக்கு உட்பட்டுள்ளது, அவற்றில் மிக முக்கியமானது 1963-ல், சபையின் வடக்குப் பக்கத்தில் (இடது பக்கம், பிரசங்க மேடையை நோக்கி) கூடுதலாக ஒரு கட்டுமானம் செய்யப்பட்டது, இதன் கொள்ளளவு சுமார் 30% அதிகரித்து, 400 க்கும் மேற்பட்ட மக்களை அமர வைக்க முடிந்தது.
இன்று, கூடாரத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் வருகை தருகின்றனர். 2015 ஆம் ஆண்டு சகோதரன் ஜோசப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சபை 8வது மற்றும் பென் தெருவில் உள்ள கட்டிடத்தை விட விரைவாக வளர்ந்தது, இதனால் கூடாரத்தில் இரண்டு அல்லது மூன்று மடங்கு மக்கள் தங்கக்கூடிய ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையால், வாய்ஸ் ஆஃப் காட் ரெக்கார்டிங்ஸ் ஏற்கனவே செல்ஸ்பர்க்கில் இளைஞர் கூட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய கட்டிடத்தை வைத்திருந்தது, மேலும் கலந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் ஏராளமான இடங்களைக் கொண்டிருந்தது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை அங்கு மாற்றினோம், ஆனால் முதலில் தொடங்கிய விலையேறப்பெற்ற சிறிய கட்டிடத்தில் பிரார்த்தனைக்காக வாரத்திற்கு இரண்டு முறை கூடுகிறோம்.
தற்போது, 2020 ஆம் ஆண்டில், செல்ஸ்பர்க்கில் உள்ள கட்டிடத்தை புதுப்பித்து விரிவுபடுத்ததிக்கொண்டிருக்கிறோம், 1,100 பேருக்கு ஒரு மாடியின் முன்பாகம் மற்றும் நிரந்தர இருக்கைகளைச் சேர்க்கிறோம். இந்தப் புதுப்பித்தல் எங்களுக்குப் பள்ளி அறைகளையும், பெரிய பார்வையாளர்களுக்காக புனித இடத்தை விரிவுபடுத்த அனுமதிக்கும் ஒரு பெரிய பல்நோக்கு அறையையும், அதிக வாகன நிறுத்துமிடங்களையும், மிகவும் வசதியான நாற்காலிகளையும் வழங்கும்.
ஒவ்வொரு ஆராதனையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள், சகோதரன் ஜோசப் சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்குவதில் உறுதியாக நிற்கிறார், சில ஆராதனைகளிலோ அல்லது பெரும்பாலான ஆராதனைகளிலோ கூட அல்ல, ஆனால் ஒவ்வொரு ஆராதனையிலும். மல்கியா 4-ன் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதைக் கேட்க நீங்கள் நிம்மதியாக இருக்கக்கூடிய ஒரு இடத்திற்கு வர விரும்பினால், நீங்கள் பிரான்ஹாம் கூடாரத்தில் வீட்டில் இருப்பது போல் உணருவீர்கள்.
