அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியைக் கேட்போமாக. ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் இது ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, பரிபூரணம் 57-0419 என்ற செய்தியைக் கேட்போமாக. ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் இது ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஈஸ்டர் அட்டவணை
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திரும்பளிக்கப்பட்ட மணவாட்டி மரமே,
ஆண்டு முழுவதும், உலகத்தை முழுவதுமாக மூடிவிட்டு, என்னுடைய சாதனங்கள் அனைத்தையும் அணைத்துவிட்டு, நாள் முழுவதும் ஜெபம் செய்யவும், அவருடைய சத்தம் என்னுடைய இருதயத்தில் பேசுவதைக் கேட்கவும், அவருடன் ஐக்கியங்கொள்ளவும், அவருடைய சேவைக்கென்று என்னுடைய ஜீவியத்தை முழுவதுமாக மறுபரிசீலனை செய்ய முடியும் என்பதற்காகவே நான் வார இறுதியில் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நமக்கு ஈஸ்டர் நாளாக இருக்க வேண்டும், ஆனால் இந்த வார இறுதியில் மிகவும் சிறப்பான, புனிதமான வேளை; மணவாட்டி ஒன்று கூடி வழிபட ஒரு ஒதுக்கப்பட்ட நேரம். என் நண்பர்களே அதைக் குறித்து நான் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். ஒரு இரகசிய இடத்தில், அங்கே ஆவியில், அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டு, தேவனோடு அடைக்கப்படுவதற்கான நேரம் வரும் வரை என்னால் காத்திருந்து பொறுத்திருக்க முடியவில்லை; உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் மணவாட்டியுடன் சேர்ந்து, உன்னதங்களிலே வீற்றிருத்தல். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! இது உண்மையிலேயே நம்முடைய ஜீவியங்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் புனிதமான வார இறுதியாக இருக்க வேண்டும்.
ஓ, நாம் இங்கே இன்னும் ஒரு நிமிடம் நிறுத்துவோமாக. "உன்னதங்களிலே.” இப்பொழுது எங்கோ ஓரிடத்தில் அல்ல, ஆனால் உன்னதங்களில். நாம் "உன்னதங்களில்" ஒன்று கூடியிருக்கிறோம். அதுவே விசுவாசியின் ஸ்தானம் என்பதை பொருட்படுத்துகிறது. அதாவது, எனக்கு ஜெபிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஜெபிக்கப்பட்டிருந்தால், அல்லது சபைக்கு ஜெபிக்கப்பட்டிருந்தால், நாம் செய்திக்காக ஆயத்தமாய் இருக்கிறோம், நாம் தாமே பரிசுத்தவான்களாக ஒன்று கூடி, வெளியே அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய ஆசிர்வாதங்களினால் நிரப்பப்பட்டு, அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, இப்பொழுது உன்னதங்களிலே ஒன்று கூடி உட்கார்ந்திருக்கிறோம், நம்முடைய ஆத்துமாக்களில் நாம் பரலோகத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறோம். நம்முடைய ஆவிகள் நம்மை ஒரு பரலோக சூழலுக்கு கொண்டு வந்துள்ளன. ஓ, சகோதரனே! அங்கு தான் நீங்கள் இருக்கிறீர்கள், ஒரு பரலோக சூழலிலே! ஓ, இன்று இரவு என்ன சம்பவிக்கக் கூடும், நாம் இங்கே ஒரு பரலோக சூழலில் உட்கார்ந்து கொண்டிருப்போமானால் இன்றிரவு என்ன சம்பவிக்க கூடும், புதிதாக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு இருதயத்தின் மேலும் பரிசுத்த ஆவியானவர் அசைவாடி கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக்கினால் என்னவாயிருக்கும்? பாவங்கள் யாவும் இரத்தத்தின் கீழிருக்க, பரிபூரண ஆராதனையில், நம்முடைய கரங்கள் தேவனிடத்தில் உயர்த்தப்பட்டிருப்பதோடு, நம்முடைய இருதயங்களும் உயர்த்தப்பட்டிருக்க, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே உட்கார்ந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட ஒன்றில் நீங்கள் எப்பொழுதாகிலும் உட்கார்ந்திருக்கிறீர்களா? ஓ, "தேவனே நான் ஒருபோதும் இங்கிருந்து சென்று விட அனுமதியாதேயும்" என்று கூறி சந்தோஷத்தினால் அழுமளவிற்கு நான் அமர்ந்திருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே!
அவர் எதனால் நம்மை ஆசிர்வதித்திருக்கிறார்? தெய்வீக சுகமளித்தல், முன்னறிதல், வெளிப்பாடு, தரிசனங்கள், வல்லமைகள், அந்நியபாஷைகளில் பேசுதல், வியாக்கியானித்தல்கள், ஞானம், அறிவு, எல்லா உன்னத ஆசிர்வாதங்கள், சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷம், ஒவ்வொரு இருதயமும் ஆவியினால் நிறைந்து, ஒருமித்து நடந்து, உன்னதங்களில் ஒருமித்து உட்கார்ந்திருத்தல், நம்மிடையே எவ்வித பொல்லாத சிந்தனையுமின்றி, ஒரு புகைப்பிடித்தலும் இல்லாமல், ஒரு குட்டை ஆடையும் கூட அணியாமல், இந்த ஒன்று, அது மற்றது என்றிலில்லாமல், ஒரு பொல்லாத சிந்தனையும் இல்லாமல், ஒருவருக்கு விரோதமாக மற்றவர் எதையும் கொண்டிராமல், எல்லோரும் ஒருவரோடொருவர் அன்புடனும், இசைவுடனும் பேசி, எல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்போது, "பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு முழக்கமுண்டானது. அங்கு தான் உங்கள் காரியமே உள்ளது. "உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.”
கர்த்தராகிய இயேசுவே இந்த ஈஸ்டர் வார இறுதியில் உமக்கான எங்களுடைய ஆராதனையை ஏற்றுக்கொள்ளும். நாங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே பிரவேசிப்போமாக; நாங்கள் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்போமாக. ஒரு தீய சிந்தனையும் இல்லாமல், ஒரு கவனச்சிதறலும் இல்லாமல், ஆனால் ஏக மனதோடு, ஒரே நிலையில் இருக்க; அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு முழக்கமுண்டாகி எங்கள் ஒவ்வொருவருடைய வீடுகளுக்குள்ளும் வருவதாக. "கர்த்தராகிய இயேசுவே வாரும்", நாங்கள் உம்மை முகமகமாய் காண ஆயத்தமாய் இருக்கிறோம்.
ஏனென்றால் எங்களுடைய நாளின் சாயங்கால வெளிச்ச செய்தியினூடாக மணவாட்டி திரும்பளிக்கப்பட்டிருக்கிறாள்; மல்கியா 4-ன் செய்தியினூடாகவே. அவருடைய சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்தலுக்காக கர்த்தாவே நாங்களும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், கைகளினால் கட்டப்பட்ட ஒரு சபையில் அல்ல, ஆனால் உம்முடைய தீர்க்கதரிசியாகிய, ஒரு நபருக்குள், மகத்தான அடையாளங்கள் மற்றும் அற்புதங்களின் மூலமாக கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்துதலும் நிரூபிக்கப்பட்டது, அவர் மீண்டும் தேவனுடைய முழு வார்த்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது அது உலகெங்கிலுமுள்ள உம்முடைய மணவாட்டிக்குள் ஜீவித்து கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசனத்தின் படி, இந்த மகத்தான சாயங்கால வெளிச்சத்தை காணும்படி எங்களை ஜீவிக்க அனுமதித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
சாயங்கால வெளிச்சம் எதற்காக தோன்றியிருக்கிறது? சாயங்கால வெளிச்சம் எதற்காக உள்ளது? திரும்பளிக்க. வியூ! நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்களா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்.-ஆசி.] காலை வெளிச்சம் தோன்றின அதே நோக்கத்திற்காகவே சாயங்கால வெளிச்சமும் தோன்றினது, இருளின் காலங்களில் ரோமாபுரி வெட்டிப் போட்டதை திரும்ப அளிக்கவே. சாயங்கால வெளிச்சம் பிரகாசிப்பதன் மூலமாக தேவன் திரும்பளிக்கப் போகிறார் (எதை?), தேவனுடைய வார்த்தையை மீண்டும் திரும்ப அளிக்கவே, அவருடைய சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்துதல். அவர் செய்த ஒவ்வொரு காரியமும் சரியாக அவர் செய்த விதமாகவே அது மீண்டும் சாயங்கால வெளிச்சத்தில் இருக்கும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? ஓ, அது அற்புதமாயில்லையா? ["ஆமென்."] சரியாக தீர்க்கதரிசனத்தின்படி, இப்பொழுது சாயங்கால வெளிச்சத்தை, அதை காணும்படியாகவே இங்கே நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும்படிக்கேயாகும்.
உண்மையான மணவாட்டி, அவள் அந்த பாவங்களை ஒருபோதும் செய்யாதது போல இருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தபோதிலும், நீதிமானாக்கப்படுதலிலேயே நின்றுவிடுகிறதில்லை; அவள் சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவள் பரிசுத்தமாக்கப்படுகிறதிலேயே நின்று விடுகிறதில்லை; அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிருந்தாலும், பெந்தெகொஸ்தேயிலேயே அவள் நின்றுவிடுகிறதில்லை; ஆனால் அவள் நம்முடைய நாளுக்கான வார்த்தைக்கு செல்கிறாள்: மல்கியா 4, அந்த வார்த்தையே ஒரு மனிதனில் மீண்டும் மாம்சமானது. "நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்," அதுவே மணவாட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தைக் கொண்டு வரும். அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை ஒலிநாடாக்களை கேட்பதனால் மாத்திரமே வர முடியும், அவருடைய அற்புதமான நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
அவர்களில் ஒருவரான, மார்டின் லூத்தர், அவர் ஒரு வெளிச்சத்தை பிரகாசிக்கத் துவங்கினார், அது மிகச் சிறிய பலமாய், நீதிமானாக்கப்படுதலைக் குறித்ததாயிருந்தது.
பின்பு வெஸ்லி தோன்றினார், இன்னும் பலமாய், பரிசுத்தமாக்கப்படுதல்.
வெஸ்லிக்குப் பிறகு, அவரைக் காட்டிலும் பலமானது உண்டானது, பெந்தெகொஸ்தே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், மற்றொரு மகத்தான தீர்க்கதரிசியில். புரிகிறதா?
ஆனால் கடைசி நாட்களில், மல்கியா 4, அதே வார்த்தையுடன் எலியா வரவிருக்கின்றார். "தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடம் வந்தது." சாயங்கால வெளிச்சத்தில், திரும்ப அளிக்க மற்றும் திரும்பக் கொண்டு வருவதற்கு, வர வேண்டியதாய் இருக்கிறது. எதற்கு? "பிள்ளைகளுடைய இருதயங்களை தேவனுடைய விசுவாசத்திற்கு திருப்புவதற்கே." நான்காம் வெளிச்சம்.
ஈஸ்டர் வார இறுதியில், உங்கள் வீடுகளில், வார்த்தையின் பேரில் கூடி வந்து, நாம் கர்த்தரை ஆராதிப்போமாக. புகைப்படங்கள் எடுக்க, அனுதின மேற்கோளைக் கேட்க, செய்தித் தொகுப்பு (டேபிள்) பயன்பாட்டிலிருந்து ஒலிநாடாக்களில் செய்தியை இயக்க, லைப் லைன் பயன்பாட்டினை பயன்படுத்த, அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பிற்குத் தவிர உங்களுடைய தொலைபேசிகளை அணைத்து வைக்கவும்.
பின்வரும் அட்டவணைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:
வியாழக்கிழமை
இஸ்ரவேல் புத்திரர் யாத்திரைக்கு முன், பஸ்காவை நினைவுகூரும் வகையில், கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனம் எடுத்துக்கொண்டது வியாழன் இரவாயிருந்தது. நம்முடைய புனித வார இறுதிக்கு முன், நம்முடைய வீடுகளில் கர்த்தரோடு ஐக்கியங்கொண்டு, நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிக்கும்படியாயும், நம்முடைய பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு தரும்படியாயும் அவரிடம் கேட்பதற்கு நமக்கு என்ன ஒரு வாய்ப்பு உள்ளது.
தேவனே, இப்பொழுதே எங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே, அங்கு இரத்தம் இருக்கின்றதா? இல்லையென்றால், நீர் இப்பொழுது அதைத் தடவி, எங்களுடைய பாவங்களைப் போக்கி, அவைகளை மூடி, அவைகளை, இந்த உலகத்தின் பாவங்களை எங்களிடத்திலிருந்து விலக்கிப்போட்டு, கர்த்தாவே, தேவனுடைய குமாரனும், எங்கள் இரட்சகருமான, எங்களுடைய ஆட்டுக்குட்டியானவரின் சரீரத்தைப் புசிக்கவும் இரத்தத்தை பானம்பண்ணவும் வரப்போகும் இந்நேரத்தில், எங்களுடைய பிதாவின் பார்வையில் நாங்கள் பரிசுத்தமும் சமர்ப்பிக்கப்படத்தக்கவர்களுமாக இருக்க வேண்டும் என்று-என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
நாம் யாவரும் உங்களுடைய உள்ளூர் நேர மண்டலத்தில் மாலை 6:00 மணிக்குத் தொடங்கி, இராப்போஜனம் 57-0418 -என்ற செய்தியைக் கேட்போமாக, அதன் பிறகு லைஃப்லைன் பயன்பாட்டில் இயங்கும் நம்முடைய விசேஷித்த இராப்போஜன ஆராதனைக்குச் செல்வோம், அல்லது கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கம் செய்யலாம்.
செய்தியைத் தொடர்ந்து, நாம் நம்முடைய குடும்பங்களுடன் நம்முடைய வீடுகளில் கூடி, கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வோம்.
ஒலிநாடா செய்தி மற்றும் இராப்போஜன ஆராதனை இரண்டையும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு விரைவில் எங்களிடம் கிடைக்கும், அல்லது, அது (வாய்ஸ் ரேடியோவில்) வானொலி சத்தத்தில் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை
காலை 9:00மணிக்கு நாம் நம்முடைய குடும்பத்தினருடன் ஜெபத்திற்குச் சென்று, பின்னர் மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கு, கர்த்தர் நம்முடன் இருக்கும்படியாயும், நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கும்போது நம்முடைய வீடுகளை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படியாயும் அழைப்போமாக.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வாரியில் அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, பிதாவுக்குப் பிரியமானதையே எப்பொழுதும் செய்ய நம்மை அர்ப்பணிப்போமாக.
அது அவரை முழுமையாகப் பிரதிபலித்தது என்பதை இப்பொழுது நாம் கண்டறிகிறோம். சிற்பி இப்பொழுது அவருடைய குமாரனை, தேவனை, இம்மானுவேலை அழைத்து, சிறந்த வேலைப்பாட்டில் வார்த்தையைப் பிரதிபலித்தார். சற்று யோசித்துப் பாருங்கள், தேவன் தம்மை அங்கே, அந்த சரீரத்தில் அடையாளம் கண்டுகொண்டு, அவராக, அவரும் தேவனும் ஒன்றாகும் வரை, அந்த ஒரு நபர் அப்படியே ஒப்புக்கொடுத்தார். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள்ளே வாசம் செய்கிறார். நான் எப்பொழுதும் பிதாவிற்கு பிரியமானதையே செய்கிறேன்."
இன்றைக்கு கிறிஸ்தவனுக்கு அதை போன்ற ஒரு சாட்சி இருக்கக்கூடுமானால் எப்படியிருக்கும்? நீங்கள் இங்கு யூமாவில் உள்ள வீதியில் ஒரு சிறந்த வேலைப்பாடாய் இருப்பீர்கள். நீங்கள், "நான் எப்பொழுதும் தேவனுக்கு பிரியமானதையே செய்கிறேன்" என்று உங்களால் கூற முடியும்போது, நீங்கள் கழுவும் தொட்டியின் பின்னால் ஒரு துவைக்கும் பெண்ணாக இருந்தாலும், நீங்கள் இன்னமும் தேவனுக்கு ஒரு சிறந்த வேலைப்பாடாய் இருப்பீர்கள், முழு உலகமும் இயேசு கிறிஸ்துவின் கிரியை உங்களுக்குள் பிரதிபலிப்பதைக் காண முடியும்.
பிறகு பிற்பகல் 12:30 மணிக்கு, பரிபூரணம் 57-0419 என்ற செய்தியைக் கேட்க, நாம் நம்முடைய வீடுகளில் ஒன்று கூடுவோமாக.
பிறகு, நம்முடைய கர்த்தரின் சிலுவையேற்றத்தின் நினைவாக, மாலை 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் ஒன்றாக இணைவோம்.
சனிக்கிழமை
நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை காலை 9:00 மணிக்கும், பிற்பகல் 12:00 மணிக்கும் ஜெபத்தில் ஒன்றிணைந்து, அவர் நமக்கு மத்தியில் நமக்காகச் செய்யும் மகத்தான காரியங்களுக்காக நம்முடைய இருதயங்களைத் ஆயத்தப்படுத்துவோமாக.
கர்த்தாவே! தயவுக் கூரும் கர்த்தாவே! ஓ, நான் மிகவும் அதிகமாய் பாடியிருக்கலாம். நான் மிக அதிகமாய்ப் பிரசங்கித்திருக்கலாம். நான் மிக அதிகமாகச் சத்தமிட்டிருக்கலாம். நான் மிக அதிகமாகக் கதறியிருக்கலாம். ஆனால் என்னால் மிக அதிகமாக ஒருபோதும் ஜெபிக்க முடிந்ததில்லை. ஓ, தேவனே, என்னை ஆராய்ந்துப் பார்த்து, என்னைச் சோதித்தறியும்.
சற்று முன்னர், அந்த ஆழமானக் குளங்கள், எப்படி அந்த நட்சத்திரங்களை அவைகள் பிரதிபலிக்கின்றன என்பதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம்; கர்த்தாவே, எங்களுக்குள்ளாக உம்முடைய ஆவியின் ஆழத்தை வையும், தீர்க்கதரிசியாகிய தாவீது கூறினது போல, “அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை வழிநடத்தியருளும்,” சிற்றலைகளைக் கொண்ட தண்ணீர்களண்டை அல்ல. கர்த்தாவே, அங்கே அமர்ந்தத் தண்ணீர்களண்டை, என்னை நடத்தும். என்னை அமைதிப்படுத்தும்.
பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியை: வார்த்தையைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்.
இது உலகம் முழுவதும் உள்ள அவருடைய மணவாட்டிக்கான என்னே ஒரு மகிழ்ச்சியும் மிக முக்கியமுமான நாளாய் இருக்கப்போகிறது.
பிறகு, மாலை 3:00 மணிக்கு, மீண்டும் ஜெபத்தில் சேர்வோம்.
ஞாயிற்றுக்கிழமை
மணவாட்டி மரம் திரும்பளிக்கப்படுதலில் பங்குகொண்டு, அதைக் கேட்பதற்கு என்னே ஒரு பரிபூரணமான நாள்.
சகோதரன் பிரான்ஹாம் காலை 5:00 மணியளவில் அவருடைய சிறிய நண்பனான ராபின் பறவை அவரை எழுப்பியது போல, நாம் முதலில் அதிகாலையில் எழுந்திருப்போமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்துவோமாக:
இன்று காலை ஐந்து மணிக்கு, என்னுடைய சிறிய நண்பன் ஒரு சிவந்த மார்புடன் ஜன்னலருகே பறந்து வந்து என்னை எழுப்பினான். “அவர் உயிர்த்தெழுந்தார்" என்று கூறினது, அதனுடைய சிறிய இருதயமே வெடித்துவிடுவது போல் காணப்பட்டது.
காலை 9:00 மணிக்கு, நம்முடைய சங்கிலி ஜெபத்தில் நாம் மீண்டும் ஒருமுறை இணைந்து, ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.
பிற்பகல் 12:30 மணிக்கு, மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல் 62-0422 என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோம்.
இந்த ஆராதனைக்குப் பிறகு, நாம் மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றிணைந்து, உலகெங்கிலும் அவரோடும் அவருடைய மணவாட்டியோடும் அவர் நமக்கு அளித்துள்ள அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி செலுத்துவோமாக.
வெளிநாடுகளில் உள்ள என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே, ஜெஃபர்சன்வில் நேரத்திலும், இந்த அட்டவணையிலும் உள்ள அனைத்து ஜெப நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இயக்கப்படும் ஒலிநாடாவிற்காகவும் எங்களுடன் ஒன்றிணைய, உங்களை நான் அழைக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிற்பகல் ஜெபர்சன்வில் நேரத்தில் ஒலிநாடாக்களை இயக்குவது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அந்த செய்திகளை இயக்க தயங்க வேண்டாம். எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:30 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நம்முடைய ஞாயிறு செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
படைப்புகள், எழுதும் தாள்கள் மற்றும் பயிற்சிகள் மற்றும் இளம் அஸ்திபார (YF) வினாடி வினாக்களில் ஒரு பகுதியாக இருக்க உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அழைக்க நான் விரும்புகிறேன், உங்கள் முழு குடும்பமும் ஒன்றுசேர்ந்து மகிழ முடியும். இந்த வார இறுதியில் நாம் கேட்கப்போகும் இவை அனைத்தும் வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருப்பதால் நீங்கள் அவைகளை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.
வார இறுதி அட்டவணையில், இராப்போஜன ஆராதனைக்காக ஆயத்தமாகும் தகவல், படைப்புகளின் திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் பொருள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.
ஆராதனை, துதித்தல் மற்றும் சுகமளித்தல் முழுவதும் நிறைந்த ஒரு வார இறுதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மணவாட்டியுடன் உலகெங்கிலும் ஒன்றாக வர அழைப்பது எனக்கு அப்பேர்ப்பட்ட ஒரு கனத்திற்குரியதாய் உள்ளது. இது உண்மையாகவே உங்கள் ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் வார இறுதி என்றே நான் நம்புகிறேன்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
ஒலிநாடா ஆராதனை
ஈஸ்டர் வார இறுதிக்கான பிரசங்கங்கள் கீழே உள்ளன. வியாழக்கிழமை இராப்போஜனம்/கால் கழுவுதல் ஆராதனை பதிவிறக்கத்தின் ஒரு பகுதியாகும்.
வியாழக்கிழமை- மாலை 6:00 மணி (உள்ளூர் நேரம்)
57-0418இராப்போஜனம்(விசேஷித்த இராப்போஜன ஆராதனை)
வெள்ளிக்கிழமை - மதியம் 12:30 (உள்ளூர் நேரம்)
57-0419பரிபூரணம்
சனிக்கிழமை- பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)
57-0420கல்லறையிலிடுதல்
ஞாயிற்றுக்கிழமை- பிற்பகல் 12:30 (ஜெபர்சன்வில் நேரம்)
62-0422மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையாயுள்ளவர்களே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உலகெங்கிலும் உள்ள இந்த "ஒலிநாடாவை கேட்கிற ஜனங்கள்" மூலம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பல சபைகள் திகைப்புற்று, பதற்றமடைந்து, திகைப்படைந்து, பிரமிப்படைந்து, குழப்பமுற்று, தடுமாற்றமடைந்தும் கூட இருக்கின்றன.
இது கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பாய், குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, நம்மை ஆயத்தப்படுத்துகிறதாயுள்ளது. நம்முடைய பரலோக மணவாளன் அவரோடு இருக்கும் நம்முடைய வருங்கால வீட்டைப் பற்றி நம்மிடம் சொல்லிக்கொண்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு அவர் நம்மிடம் கூறினார்: “இந்த உலகம் உங்களுடைய வீடு அல்ல, இது சாத்தானின் ஏதேன், நான் அதை அக்கினியால் அழிப்பேன். நீங்கள் என்னுடைய இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், உலகத் தோற்றத்திற்கு முன்பே என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி நான் தெரிந்துகொண்டேன். இப்போது, இந்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு என்னுடைய அதிசீக்கிரமான வருகையான ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்."
இப்படிப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் நாம் இருக்கிறோம். நம்மால் அதை ஆகாயத்தில் உணர முடியும். காரியங்களோ மிக துரிதமாக சம்பவித்துக் கொண்டிருக்கிறன.
இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறினதோ, அதுவே ஒவ்வொரு நாளும் சம்பவித்துக்கொண்டிருக்கிறது. காரணம், இது அங்கே வேகமாக, அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து கொண்டிருக்கிறது, அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன, என்னால் அவைகளை தொடர்ந்து மனதில் வைத்திருக்கக் கூட முடியவில்லை. நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருந்து, அவருடைய சபையுடன் ஒன்றாக இணைக்கப்படத்தக்கதாக, வார்த்தையோடு வார்த்தையாகிறோம்.
இந்த நாளின் மணவாட்டியான, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியான நமக்காக இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் காரியங்கள் வெளிப்படுவதை நாம் மாத்திரமே காண்கிறவர்களாக இருக்கிறோம்.
அவர் இந்த காலத்திற்கென நம்மை முன்குறித்திருக்கிறார், எவருமே நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. நாம் அவரோடு ஐக்கியங்கொள்ளும்படியாக குமாரரும் குமாரத்திகளுமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறோம்; அதுதான் அவருக்குத் தேவையாயிருக்கிறது.
நாம் வார்த்தையின் மேல் வார்த்தையாகவும், மூல உயிரணுவின் மேல் உயிரணுவாயும், ஜீவனின் மேல் ஜீவனாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் பரிபூரண வளர்ச்சியாயுமிருக்கிறோம்.
உங்களுக்கு தேவை இருந்தால், அதைப் பேசுங்கள். நீங்கள் வார்த்தையின் மேல் வார்த்தையாய் இருக்கிறீர்கள். நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் உள்ள இருளைப் பார்க்காதீர்கள்; சுகவீனம், வியாதி, கொலை, விரக்தி, அவர்கள் ஒரு மனிதனா அல்லது ஒரு ஸ்திரீயா என்று தெரியாத ஜனங்களின் பைத்தியக்காரத்தனம். நாம் மணவாட்டியாய், முன்குறிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
எதற்கும் பயப்படாதீர்கள். மகிழ்ச்சியாயிருந்து களிகூருங்கள். காலம் சமீபித்துவிட்டது. நாம் இந்த தொற்றுநோய் மருத்துவமனை வீட்டை விட்டுச் செல்ல ஆயத்தமாயிக் கொண்டிருக்கிறோம். மகிமை!!!
ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற செய்தியைக் கேட்பதற்காக எங்களுடன் வந்து ஆயத்தமாகுங்கள். நீங்கள் இருந்து வருகிற விதமாக ஒருபோதும் இருக்க மாட்டீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
சங்கீதம் 27:1-5
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியே,
கர்த்தராகிய இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீட்டிற்கு வந்து, உங்களுடைய ஓய்விருக்கையில் அமர்ந்து, உங்களுடைய கண்களைப் பார்த்து, உங்களிடம் நேரடியாகப் பேசுவதற்கு நீங்கள் என்னக் கொடுப்பீர்கள்
உங்களால் பேச முடியாது. நீங்கள் பேச விரும்பமாட்டீர்கள். நீங்கள் செய்ய விரும்புவதெல்லாம் அவரைப் பார்த்து அழுவதுதான். நீங்கள் உங்களுடைய வாயைத் திறக்கக்கூட பயப்படுவீர்கள். உங்களால் என்னக் கூற முடியும்? கர்த்தாவே, நீர் இங்கே என்னுடைய வீட்டில் இருக்க நான் மிகவும் அப்பாத்திரனாயிருக்கிறேன் என்றே, நீங்கள் உங்களுடைய சிந்தையில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நான் தாழ்ந்தவர்களிலேயே மிகவும் தாழ்ந்தவனாயிருக்கிறேன். கர்த்தாவே நான் அநேக முறை உம்மிடத்தில் தவறியிருக்கிறேன், ஆனாலும் கர்த்தாவே, நான் உம்மை மிகவும் நேசிக்கிறேன்.
நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் சரியாக அறிந்திருக்கிறார் என்பதையும், அவருக்கு மறைவானது எதுவுமில்லை என்றும், அப்பொழுது நீங்கள் உங்களுடைய இருதயத்தில் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். என் இருதயத்தின் இரகசியங்களை அவர் அறிந்திருக்கிறார்.
அவருடைய விலையேறப்பெற்ற கண்களை நீங்கள் பார்க்கும்போது, அத்தகைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் காண்பீர்கள். அவர் வாய் திறவாமலே உங்களிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் உண்மையாகவே இங்கே, என்னுடைய வீட்டில், என்னுடன் இருக்கிறார் என்று, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
அவர் உங்களிடம் ஏதோ சொல்லப் போகிறார் என்பதை நீங்கள் கண்டவுடனே, உங்களுடைய இருதயமும் கூட இன்னும் அதிகமாக துடிக்கத் தொடங்கும். உடனே, நீங்கள் இதுவரை கேட்டிராத இனிமையான சத்தம், “என்னுடைய அன்பான இனிய இருதயமே, கவலைப்படாதே, உன்னுடைய பெயர் என்னுடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உள்ளது. உன்னுடைய இயற்கை இணைப்பையொட்டிய பழைய புத்தகத்தில் அல்ல, ஆனால் என்னுடைய புதிய மணவாட்டிப் புத்தகத்திலே. இது என்னுடனான உன்னுடைய விவாகச் சான்றிதழ்.
என் அன்பே, உன்னுடைய பாவங்கள் மற்றும் தோல்விகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருக்கிறது மட்டுமின்றி, நீ எனக்கு நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். என்னுடைய பார்வையில், நீ ஒருபோதும் எந்த தவறையும் செய்யவேயில்லை.
நீ என்னுடைய விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமற்ற மகனாயும் மகளாயும் இருக்கிறாய். என்னுடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரால் கழுவப்பட்டிருக்கிற என்னுடைய கலப்படமற்ற மணவாட்டியாய்; நீ சுத்தமாக நின்றுகொண்டிருக்கிறாய்.
ஒரு சந்திரனோ, நட்சத்திரங்களோ அல்லது ஒரு மூலக்கூறோ இருப்பதற்கு முன்பே, நீ என்னுடைய மகனாய், மகளாய் இருந்தாய். நீ ஆரம்பத்தில் என்னில் இருந்த தன்மைகளின் சரீரப்பிரகாரமான வெளிப்படுத்தலாய் இருக்கிறாய்.
நீங்கள் என்னுடைய தன்மைகளின், என்னுடைய சிந்தனைகளின் வெளிப்படுத்துதலாய் இருக்கிறபடியால் உங்களுடைய ஆவிக்குரிய மரபணுக்கள் எனக்குள் இருந்தன. உலகத் தோற்றத்திற்கு முன்பே நீங்கள் எனக்குள் இருந்தீர்கள்.
நீங்கள் என்னுடைய ஆவிக்குரிய மணவாட்டியாய் குமாரனின் பிரசன்னத்தில் இருந்து, என்னுடைய வார்த்தையை கேட்பதன் மூலம் முதிர்ச்சியடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரு எழுப்புதலை பெற்றுக்கொள்ளத் துவங்கி, திரும்பி வந்து, என்னுடைய வார்த்தையோடு உங்களை சரிபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியான மணவாட்டியாய் இருக்கிறீர்கள்.
நீங்கள் இப்பொழுது என்னுடன் ஒரு ஆவிக்குரிய இணைப்பில் இருந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக் கொண்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்டு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாளில் என்ன சம்பவிக்கும் என்று நான் உங்களிடத்தில் சொன்னேனோ, அது நாளுக்கு நாள், அப்படியே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. வார்த்தையே வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது.
நீ இந்த கடைசி நாளுக்கான உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளாய்; இந்த செய்தியின் மூலம் என்னுடைய மணவாட்டியை ஒன்றுசேர்தல். வேறு எந்தக் காலத்திலும் நான் அதை வாக்களிக்கவேயில்லை. நான் அதை உனக்கு இந்தக் காலத்தில் வாக்களிக்கிறேன்: மல்கியா 4, லூக்கா 17:30, பரிசுத்த யோவான் 14:12, யோவேல் 2:38.
இந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நன்றி தெரிவிக்கும் விருந்து ஒன்றைக் கொண்டாடப்போகிறோம், அப்பொழுது நான் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் சொல்வேன். நான் உங்களுடன் பல மணிநேரம் செலவழித்து, ஐக்கியங்கொண்டு, என்னுடைய வார்த்தையின் பேரில் விருந்துண்பேன். என்னுடைய வார்த்தையோடும், என்னுடைய தீர்க்கதரிசியோடும், என்னுடைய சத்தத்தோடும், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தரித்திருப்பதனால், நீங்கள் என்னுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நான் வாசலண்டையிலே நின்று, தட்டிக் கொண்டிருக்கிறேன் என்று, நான் என்னுடைய வார்த்தையில் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். அநேகர் செவிகொடுத்து தங்களுடைய வாசலைத் திறக்கமாட்டார்கள், ஆனால் வெளிப்பாட்டினால், நீங்கள் உங்களுடைய வாசலைத் திறந்து என்னை உள்ளே வரவேற்றிருக்கிறீர்கள்.
அவர்கள் தங்களுடைய சபைகளில் என்னுடைய சத்தத்தை தொனிக்கச் செய்ய உடன்படுகிறதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தங்களுடைய மனதை வார்த்தையால் ஆராய அனுமதித்தால், அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். கிறிஸ்து, அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையானது, உங்களுடைய சொந்த மனசாட்சியை ஆராயட்டும். அது உண்மையா அல்லது இல்லையா என்று பார்க்கும்படி, அவர் உங்களுக்குள் வரட்டும்.
உங்களை ஒன்று சேர்ப்பது ஒரு ஸ்தாபனமாக இருக்காது என்று நான் உங்களுக்கு சொன்னேன், வேதாகமத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளின் பேரில் கூட அவர்களால் ஒத்துப்போக முடியாது. அது ஒரு மனிதக் குழுவாக இருக்கும் என்று நான் எப்போதாவது உங்களிடத்தில் சொன்னேனா? இல்லையே! இது ஒரு மனிதனின் செய்தி என்றே நான் உங்களிடத்தில் சொன்னேன்; நீங்கள் கேட்டு கீழ்ப்படிந்தீர்கள்.
அவர்கள் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய மூல திட்டத்தைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாததால், நான் அவர்களுக்கு பிரசங்கிமார்களையும், போதகர்களையும், அப்போஸ்தலர்களையும், மேய்ப்பர்களையும் மற்றும் தீர்க்கதரிசிகளையும் அனுப்பினேன். ஆனால் என்னுடைய மூல மற்றும் பரிபூரண திட்டத்திற்கு, என்னுடைய பலமுள்ள தூதனிடத்திற்கு, திரும்பிச் செல்லும்படி சுட்டிக்காட்ட அவர்கள் அனுப்பப்பட்டனர். ஏனென்றால் அது உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் உள்ளது.
அவர்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள், ஆனால் உங்களை வழிநடத்த எனக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் மாத்திரமே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே தீர்க்கதரிசியாயிருக்கிறார். அவர் மூலமாக உரைக்கப்பட்ட என்னுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்றும், அவர் கூறின எந்த காரியத்தோடு எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப் போடுவோ வேண்டாம் என்றும், ஒலிநாடாக்களில் அவர் அவைகளை கூறினவாறே அப்படியே கூறுங்கள் என்றும், நான் உங்களுக்கு அநேக முறை சொல்லியிருக்கவில்லையா? அதுவே தீர்க்கதரிசி, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறதாகும்.
உங்களை என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி அழைக்க நான் அனுப்பின ஒருவராய் அவர் இருக்கிறார். அவரே உங்களை என்னிடத்தில் அறிமுகப்படுத்துகிற ஒருவராய் இருக்கிறார். என்னுடைய மணவாட்டியான, உங்களைப் பற்றிய முன்னோட்டத்தை அவருக்குக் காண்பித்த போது நான் உடன் நின்றவர் அவரே. சபைகளில், இவைகளை உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்க, இயேசுவாகிய நான் என்னுடைய தூதனை அனுப்பியிருக்கிறேன் என்று நான் சொன்னபோது, அவரைக் குறித்த எல்லாவற்றையும் வெளிப்பாடுகளில் நான் உங்களிடத்தில் சொன்னேன். இது நான் தான், நான் அவருடைய சரீரத்தையும், அவருடைய சத்தத்தையும் உங்களிடம் பேச பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்."
நாம் அவரோடு ஒன்றுகூடியிருப்பது என்னே ஒரு அற்புதமான நாள். நம்முடைய ஜீவியங்களில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தியாகவோ இருந்ததில்லை. இதுதான் அதுவாகும். இதற்காகத்தான் நம்முடைய ஜீவிய காலமெல்லாம் நாம் காத்துக்கொண்டு வருகிறோம்.
நம்முடைய இருதயங்களிலோ அல்லது நம்முடைய சிந்தைகளிலோ சந்தேகத்தின் ஒரு நிழலும் இல்லை. ஏனென்றால், நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உங்களை ஒன்றிணைக்கும், உங்களை பரிபூரணப்படுத்தும் மற்றும் உங்களை ஒன்றாகக் கொண்டு வரும்…நான், நானே என்னுடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறேன். அவருடைய வார்த்தைகள் அல்ல, என் வார்த்தைகள். இதுவே என்னுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.
மேஜையானது விரிக்கப்பட்டிருக்கிறது. இது முட்டைக்கோஸ், கிழுங்கு வகைகள் மற்றும் முள்ளங்கிகளால் நிறைந்ததுள்ளது…வார்த்தையின் மேல் வார்த்தை, வார்த்தையின் மேல். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் நன்றி தெரிவிக்கும் விருந்தினைக் கொண்டாடப்போகிறோம். மணவாட்டி தங்களுடைய மேஜைகளை சுற்றி ஒன்று கூடி அவர்களிடம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கப்போகிறபடியால், அது உலகத்தைச் சுற்றிலும் ஒரு யூபிலியாக இருக்கும். நம்முடைய வீடுகளும் சபைகளும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படும். நம்முடைய மகிமையான, அல்லேலூயாக்கள், கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதைத் தவிர நாம் பேசாமல் இருப்போம்.
அவர் நம்மை போஷிக்கிறபடியால், மணவாட்டியினுடைய குடும்ப நன்றி கூறும் கூடுகையின் ஒரு பாகமாக இருக்க வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை, சரியாக பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி நாங்கள் விருந்தினை துவங்கவுள்ளதால், தாமதமாக வரவேண்டாம். அவர் அங்கு இருப்பார், ஏனென்றால் அவர் அங்கிருப்பேன் என்று என்னிடம் கூறினார்.
நான் வருகிறேன், உங்களுடைய கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பைக் குறித்த 65-1125 எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருப்பேன்.
நான் உங்களை அங்கே மேஜையண்டையில் காண்பேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
மற்றொரு பெயரான: அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டி