காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 20 டிசம்பர், 2025

அன்பான பிரியமானவர்களே,

தேவன் மாறுகிறதில்லை. அவருடைய வார்த்தை மாறுகிறதில்லை. அவருடைய திட்டம் மாறுகிறதில்லை. அவருடைய மணவாட்டியும் மாறுகிறதில்லை; நாம் வார்த்தையுடனே நிலைத்திருப்போம். அது நமக்கு ஜீவனை விட மேலானது; அது ஜீவத் தண்ணீர்களின் ஊற்றாயுள்ளது.

நாம் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருக்கிற ஒரே காரியம், வார்த்தையைக் கேட்பதுதான், அதுவே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாக பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாக்களில் வைக்கப்பட்டிருக்கிறது. நாம் பார்க்கிற ஒரே காரியம் ஒரு கோட்பாட்டை அல்ல, மனிதருடைய ஒரு குழுவை அல்ல, இயேசுவைத் தவிர வேறு எதையும் நாம் காண்கிறதில்லை, அவரே நம்முடைய நாளில் மாம்சமான வார்த்தையாயிருக்கிறார்.

தேவன் நம்முடைய பாளயத்தில் இருக்கிறார். நாம் மகிமைக்கு செல்லும் பாதையில் அக்கினி ஸ்ம்பத்தினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம், அது அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியான மல்கியா 4-ன் மூலமாக தேவன் தாமே பேசிக் கொண்டிருப்பதாக இருக்கிறது. நாம் அந்த மறைவான மன்னாவைப் புசித்துக் கொண்டும், மணவாட்டி மாத்திரமே பருகக்கூடிய ஜீவனுள்ள தண்ணீரைப் பருகிக் கொண்டிருக்கிறோம்.

தேவன் தம்முடைய வழிகளை மாற்றுகிறதில்லை, பிசாசும் தன்னுடைய வழிகளை மாற்றுகிறதில்லை. அவன் இன்னும் அதிக தந்திரசாலியாகிவிட்டதைத் தவிர, 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவன் என்ன செய்தானோ, அவன் இன்றைக்கும் அதே காரியத்தையே செய்து கொண்டிருக்கிறான்.

இப்பொழுது, நானூறு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் தேவன் அவர்கள் மத்தியில் நடந்து வந்தார். வேதவாக்கியத்தின்படியே, அவர் மாமிசமாகி அவர்கள் மத்தியில் வாசம் பண்ண வேண்டும், ''அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்.'' ஆனால் அவர் ஜனங்களின் மத்தியில் தோன்றின்போதோ, அவர்கள், “நாங்கள் இந்த மனிதனை எங்கள் மீது ஆளுகை செய்யவிட மாட்டோம்!...” என்றனர்.

வேதவசனத்தின்படி, மனுஷகுமாரன் மீண்டும் ஒருமுறை வந்து, மானிட மாம்சத்தில் ஜீவித்து, தம்மை வெளிப்படுத்துவார். அவர் அவ்வாறே செய்தார், அவர்களும் அதே காரியத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் செய்தியை மேற்கோள் காட்டிப் பிரசங்கிக்கிறார்கள், ஆனால் அந்த மனிதன் அவர்களை ஆள அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.

சரியாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது:

அப்பொழுது எப்படி இருந்ததோ, அப்படியே இப்பொழுதும் இருக்கிறது! லவோதிக்கேயா சபை அவரை வெளியே தள்ளிவிடும் என்று வேதாகமம் கூறியது, அவர் உள்ளே வர முயற்சி செய்து, கதவைத் தட்டிக்கொண்டிருந்தார். எங்கோ ஏதோ தவறு இருக்கிறது. இப்போது, ஏன்? அவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனிப் பாளயத்தை அமைத்துக்கொண்டார்கள்.

ஒரு மனிதன், “சகோதரரன் பிரான்ஹாம் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அவர் ஏழாம் தூதனாய் இருந்தார். அவர் எலியாவாயிருந்தார். நாங்கள் செய்தியை விசுவாசிக்கிறோம்” என்று கூற முடியும். தங்களுடைய சபையில் ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்தை ஒலிக்கவிடாமல் இருப்பதற்கு, அது என்னவாயிருந்தாலும், அதன் பின்னர் ஏதோ ஒரு விதமான சாக்குபோக்கினை உண்டாக்கிக்கொள்கின்றனர்…எங்கோ ஏதோ தவறு இருக்கிறது. இப்போது, ஏன்? அவர்கள் தங்களுடைய சொந்த பாளையத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

நான் இந்த காரியங்களை சபையைப் பிரிப்பதற்காகச் கூறவில்லை, தேவனுடைய வார்த்தையே அதைச் செய்கிறது. நாம் ஒன்றாக இணைய வேண்டும், ஒருவருக்கொருவர் மற்றும் அவருடன் ஒரே ஐக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அதைச் செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது: ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே. அது தேவனுடைய கர்த்தர் உரைக்கிறதாவது என்பது மாத்திரமேயாகும்.

தேவன் தம்முடைய பரிபூரண வழியை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அது மிகவும் மகிமையானது, அதே சமயத்தில் மிகவும் எளிமையானது. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய மணவாட்டி என்று அவர் நமக்குச் சொல்லகிறதையும், நமக்கு உறுதியளிக்கிறதையும், நம்மை உற்சாகப்படுத்துகிறதையும் நாம் கேட்கிறோம். நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம். அவருக்குச் செவிகொடுங்கள் என்பதன் மூலம் நாம் நம்மைத் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்தச் செய்தி நாளைய செய்தித்தாளைவிட தற்காலத்திற்குப் பொருத்தமானது. நாம் நிறைவேற்றப்படும் தீர்க்கதரிசனமாக இருக்கிறோம். நாம் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியின் மூலமும், இந்த நாளில், இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது என்பதை தேவன் நமக்கு நிரூபிக்கிறார்.

இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும். கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது...அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, அல்லது நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்கள் இருதயங்களில் காணப்படும் உத்தமத்தை இன்று காலை நோக்கிப் பார்த்து, கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் அவர்களுக்கு என்ன தேவையோ அவர்களுக்கு அவைகளை அளிப்பாராக.

ஒரு நிமிடம் பொறுங்கள்... உலகத்திற்கான தேவனுடைய சத்தம் இப்போது என்ன தீர்க்கதரிசனம் உரைத்துச் சொன்னது?...ஜனங்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சபைகளிலோ ஒலிநாடாக்களை இயக்குவார்கள்.

ஆனால் நாம் வீடுகளில் ஒலிநாடா ஆராதனை நடத்த முடியாதா என்று கூறுவதன் மூலம் நாம் விமர்சிக்கப்பட்டு, கடிந்துகொள்ளப்படுகிறோமா? சகோதரன் பிரான்ஹாம் உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று ஒருபோதும் கூறவில்லையா?

தேவனுக்கே மகிமை, அதைக் கேளுங்கள், அதைப் படியுங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. அவர் அதைக் கூறினது மட்டுமல்லாமல், உங்கள் வீடுகளிலும், சபைகளிலும் ஒலிநாடாக்களைப் இயக்குவதன் மூலம், பரலோகத்தின் மகத்தான தேவன் நம்முடைய இருதயங்களின் உத்தமத்தை கனம்பண்ணி, தேவையுள்ளவர்களைக் குணமாக்கி, நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பார்!!

ஜனங்கள் தங்களுடைய போதகர்களுக்குச் செவிகொடுத்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தையைக் கேட்பதில்லை என்பதை இந்த ஒரு மேற்கோள் நிரூபிக்கிறது அல்லது நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும், தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவது அவருடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது என்று வார்த்தையின் மூலம் அவர்களுக்கு நிரூபித்து, அவர்களுக்கு அவர்கள் சவாலிடலாம்.

அநேகர் கூறுவதுபோல நான் வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது தவறாக மேற்கோள் காட்டிக்கொண்டோ இருக்கவில்லை. நீங்களாகவே அதைக் கேட்டுப் படித்துப் பாருங்கள்.

இது மிகவும் எளிமையானதும், மிகவும் பரிபூரணமானதுமாயுள்ளது, இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதைக் கேளுங்கள். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்" என்று கூறுங்கள். நீங்கள் அதை முழுமையாகக் கூட புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, நீங்கள் அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும்.

“நான் பாளயத்துக்குப் புறம்பே செல்ல விரும்புகிறேன். அது என்னை கிரயமாக்கினாலும் பொருட்படுத்தாமல், நான் என்னுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு அனுதினமும் அதை சுமப்பேன். நான் பாளயத்துக்குப் புறம்பே செல்வேன். ஜனங்கள் என்னைக் குறித்து என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், பாளயத்துக்குப் புறம்பே அவரைப் பின்பற்ற விரும்புகிறேன். நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்.”

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்து ஒலித்தடையைத் தாண்டி தேவனுடைய வார்த்தைக்குள் வாருங்கள். மனிதனின் பாளயத்திற்கு அப்பால் செல்லத் தயாராக இருக்கும் ஒரு மனிதனைக் கொண்டு தேவன் செய்யக்கூடியதும் செய்யப்போவதுமான காரியங்களுக்கு எல்லையே இல்லை.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 64-0719E பாளயத்திற்கு புறம்பே செல்லுதல்

வேதவசனங்கள்: எபிரேயர் 13:10-14 / மத்தேயு 17:4-8

 

 

சனி, 13 டிசம்பர், 2025

அன்புள்ள பரிபூரண மணவாட்டியே,

இது வெறும் ஒப்பனை அல்ல, நண்பர்களே. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வேதமாயுள்ளது.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் மணவாட்டியாக இருக்க விரும்புகிறான், ஆனால் அவருடைய மணவாட்டியோ சிறிய தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே என்பதை நாம் அறிவோம். அவருக்கு ஒரு அனுமதிக்கும் சித்தம் இருப்பதை நாம் அறிவோம், ஆனால் அவருடைய மணவாட்டியோ அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். எனவே, நாம் தேவனை அவருடைய வார்த்தையில் தேட வேண்டும், பின்னர் வெளிப்படுத்தல் மூலம், அவருடைய மணவாட்டியாக எப்படி மாறுவது என்ற அவருடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிந்துகொள்வோம்.

நாம் வேதத்தை ஆராய வேண்டும், ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தையைப் பற்றிய தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை என்பதை நாம் அறிவோம். தேவன் ஒருபோதும் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை. அவர் எந்தக் காரியத்தையும் ஒருபோதும் மாற்றுகிறதில்லை. முதல் முறை அவர் அதைச் செய்த விதம் பரிபூரணமானது. நேற்று அவர் என்ன செய்தாரோ அதையே அவர் இன்றைக்கும் செய்வார்.

அவர் ஒரு மனிதனை ஆதியிலிருந்து எப்படி இரட்சித்தாரோ, இன்றைக்கும் அதே வழியில் ஒரு மனிதனைக் இரட்சிக்க வேண்டும். முதல் மனிதனை எப்படிக் குணப்படுத்தினாரோ, இன்றைக்கும் அதே வழியி்ல் அவர் அதைச் செய்ய வேண்டும். தேவன் தம்முடைய மணவாட்டியை எப்படி அழைத்து வழிநடத்தத் தெரிந்து கொண்டாரோ, இன்றைக்கும் அதே வழியில் அவர் அதைச் செய்வார்; ஏனென்றால் அவர் தேவன், மாற்ற முடியாது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது.

எனவே, நாம் அவருடைய வார்த்தையைப் வாசிக்கும்போது, ஒவ்வொரு காலத்திற்கும் அவர் தம்முடைய மணவாட்டியை எப்படி அழைத்து வழிநடத்தத் தெரிந்து கொண்டார் என்பதை நாம் தெளிவாகக் காண முடியும். அவர் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவர்களுடைய நாளுக்கான வார்த்தையாயிருந்தனர் என்று அவர் கூறினார். அவர் ஒருபோதும் ஒரு மனிதர்களின் குழுவை உடையவர்களாக இருந்ததில்லை என்று தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்; அவர்களுக்கு வெவ்வேறு வழிகள், வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன, மேலும் முக்கியமாக, தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று அவர் கூறினார்.

எனவே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் என்ன உரைத்தனரோ அதிலிருந்து சேர்க்கப்படவோ அல்லது எடுக்கப்படவோ முடியாது. வார்த்தைக்கு வார்த்தை அவர் உரைத்ததாய் இருக்க வேண்டும். தேவன் அருளியிருக்கிற வழி என்ன என்று மிகவும் எளிமையாக நீங்கள் என்னிடம் கேட்டால்….தீர்க்கதரிசியுடன் தரித்திருங்கள் என்பதேயாகும்.

இப்போது, ஆதியிலிருந்தே தேவன் அருளியிருக்கிற வழி என்ன என்பதை நாம் சரியாக அறிவது மட்டுமல்லாமல், தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அப்படியே நிரூபிக்கும்படியாக,கர்த்தர் தம்முடைய தூதன் மூலமாகவும் பேசி, எதிர்காலத்தில் அவர் என்ன செய்வார் என்று நமக்குச் சொல்வார்.

அவருடைய மணவாட்டி (நாம்) இந்த பூமியை விட்டு வெளியேறி கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்ட பிறகு, தேவன் 144,000 தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களை எப்படி அழைக்கப் போகிறார்? ஒரு கூட்ட மனிதர்களைக் கொண்டா?

இப்பொழுது இந்த சபை (மணவாட்டி) ஒன்றாக சேர்க்கப்பட்டவுடன், அவள் எடுத்துக்கொள்ளப்படுகிறாள்: அந்த ஏழாம் முத்திரையின் இரகசியம், அல்லது ஏழாம் முத்திரை, இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுதல். யூதர்கள் ஏழாவது எக்காளத்தின் இரகசியத்தினால் அழைக்கப்படுகின்றனர், அது இரண்டு தீர்க்கதரிசிகள் எலியாவும் மோசேயும், அவர்கள் திரும்பி வருகின்றனர்.

எனவே மணவாட்டி ஒன்றாக சேர்க்கப்பட்டவுடன், நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம். மணவாட்டியை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரே ஒரு காரியம் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவி அவருடைய வார்த்தையாயுள்ளது, இன்றைக்கான அவருடைய வார்த்தை தேவனுடைய சத்தமாயுள்ளது, தேவனுடைய சத்தமாய்...

நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டிருந்தால், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன். புரிகிறதா? நான் அதை மீண்டும் கூறுகிறேன், நீங்கள் பாருங்கள், அந்த நேரத்தில் ஆவியின் ஏவுதலின் கீழ் இருந்தேன்.

நான் இங்கே குறுக்கிட்டு கூறுவேனாக, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தூதனாகிய செய்தியாளரிடமிருந்து கூறப்படுகிற இந்த ஒரு மேற்கோள் மட்டுமே இந்த கடைசி கால செய்தியில் விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் தங்களுடைய சபையில் தங்களுடைய போதகரிடம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்படிக்கு அல்லது பதவி விலகச் செய்து தேவனிடத்திலிருந்து வருகிற உண்மையான வெளிப்பாட்டோடு அவர்கள் ஒரு போதருக்கு வாக்களிக்க போதுமானதாகும்.

எனவே, எக்காளம் தொனித்து, இரண்டு தீர்க்கதரிசிகளும் தோன்றும்போது, அவர்கள் வரும்போது அவர் தம்முடைய ஏழாம் தூதனையும் அவருடைய மணவாட்டியையும் ஒரே நேரத்தில் பூமியில் வைத்திருக்க முடியாது. எனவே அவர் யூதர்களை எப்படி அழைக்கிறார்? அவர் தம்முடைய புறஜாதி மணவாட்டியை அழைத்திருக்கிற அதே வழியில்.

யூதர்கள் ஏழாவது எக்காளத்தின் இரகசியத்தால் அழைக்கப்படுகிறார்கள், இது இரண்டு தீர்க்கதரிசிகள்...

மணவாட்டி மேலே செல்வதற்காக ஆயத்தமாயிருக்க வேண்டும்; அப்பொழுது தேவனுடைய இரண்டு ஊழியக்காரர்கள், வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ள இரண்டு ஊழியக்காரர்கள், அந்த இரண்டு தீர்க்கதரிசிகள், காட்சியில் தோன்றி, ஏழாம் எக்காளத்தை ஊதி, கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்.

மிகத் தெளிவாக, தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். இவ்வாறு, அவருடைய மணவாட்டி அவருடைய அருளப்பட்ட வழியுடன், அவருடைய தூதனான தீர்க்கதரிசியோடு, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பாள்.

பின்னர் அதை மிகத் தெளிவாக, தேவன் மீண்டும் ஒருமுறை பேசி தம்முடைய மணவாட்டியிடம் சொல்கிறார்: நீங்கள் எனக்கும் என்னுடைய அருளப்பட்ட வழிக்கும் உண்மையாக தரித்துள்ளீர்கள், எனவே உங்களுடைய நாளுக்கான என்னுடைய அருளப்பட்ட வழி உங்களிடம் இவ்வாறு கூறுவதாக:

ஏழாம் தூதன், செய்தியாளர், "இதோ உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!" என்று கூறுகிறார்.

அந்த சத்தம் மிகவும் முக்கியமானது; ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய ஏழாம் தூதனின் மூலமாக பேசுகிற தேவனுடைய சத்தம். தேவன் அந்த சத்தத்தை, அவருடைய ஏழாம் தூதனின் சத்தத்தை, ஒரு குழுவை அல்ல…என்னையல்ல…உங்களுடைய மேய்ப்பரை அல்ல…நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்மை நமக்கு அறிமுகப்படுத்த அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தையே உபயோகிக்க போகிறார்.

இவ்வாறு, நமக்குத் தெரியும்:

• நாம் அவருடைய மணவாட்டி.

• நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம்.

• இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் இன்றைக்கான அவருடைய திட்டத்தை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினர் இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு கூடி, நம்முடைய போதகர், தேவனுடைய தூதனான செய்தியாளர், வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்கள், உலகத் தோற்றம் முதற்கொண்டு, தேவன் அவர்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்டு நாம் ஒன்றிணைக்கப்பட வேண்டிய வாய்ப்பை இதற்கு முன்பு எப்போதுமே பெற்றிருந்த வேறெந்த சபையும் இல்லை, வேறு எந்த ஜனக் குழுவும் இல்லை என்பதை பேசி நமக்கு வெளிப்படுத்துவதை கேட்போம்.

நாம் என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள். நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மணவாட்டி மணவாளனோடு ஒன்றாகிக் கொண்டிருக்கிறாள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

எக்காளங்களின் பண்டிகை 64-0719M.

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8

 

 

சனி, 6 டிசம்பர், 2025

அன்புள்ள வார்த்தை மணவாட்டியே,

நாம் மிகவும் இருண்ட வேளைகளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நமக்கு எந்த பயமும் இல்லை, போதகர் வந்திருக்கிறார். கடைசி நாளில் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற அவர் வந்திருக்கிறார். அப்பொழுது அவர் என்னவாக இருந்தாரோ, இன்றைக்கு அவர் அவ்வாறே இருக்கிறார். அப்போது அவருடைய வெளிப்படுத்துதலும், அடையாளமும் என்னவாக இருந்ததோ, அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அவர் இன்னும் தேவனுடைய வார்த்தையாக இருந்து, அவருடைய பலமுள்ள ஏழாம் தூதனில் மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், நாம் அவருடைய ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டியாக இருக்கிறோம்.

விவாதம் செய்யவோ அல்லது வம்பு செய்யவோ நமக்கு நேரமில்லை; நாம் அந்த நாளைக் கடந்துவிட்டோம்; நாம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம், நாம் அங்கு சென்றடைய வேண்டும். பரிசுத்த ஆவி நம்மிடையே வந்துள்ளார். கர்த்தராகிய இயேசு ஆவியின் ரூபத்தில் அவர் தம்முடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார் என்று அவருடைய தீர்க்கதரிசி மூலமாக தாமே வெளிப்பட்டு, வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் வருவார் என்று கூறினார். அவர் இதைச் செய்வார் என்று கூறினார். கடைசி நாட்களில் அவர் காட்சியில் எழும்பி, முதல் முறையாக மாம்சத்தில் வந்தபோது செய்ததைப் போலவே இந்தக் காரியங்களை செய்வார் என்றும், இங்கே அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? ஒன்றுமில்லை!!!

மகிமைக்கான பாதையில் நாம் இருக்கிறோம்! எதுவும் நம்மைத் தடுக்கப் போவதில்லை. தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தப் போகிறார். என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. விசுவாசிப்பதா அல்லது விசுவாசிக்க வேண்டாமா என்ற நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வருகிற அந்த வேறுபிரிக்கும் கோடு வந்துவிட்டது.

நீங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பிறந்தீர்கள். ஒளி உங்கள்மேல் பட்டபோது, அது உங்களிடமிருந்து எல்லா இருளையும் நீக்கியது. அவருடைய சத்தம் ஒலிநாடாக்களில் உங்களிடம் பேசுவதை நீங்கள் கேட்டபோது, ஏதோ நடந்தது. அது உங்களுடைய ஆத்துமாவிடம் பேசியது. அது, “போதகர் வந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். சோர்வடையாதீர்கள், பயப்படாதீர்கள், நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் என்னுடைய மணவாட்டி” என்று கூறியது.

ஓ மக்களே, உறுதியாக இருங்கள்! அதில் எந்த அரைகுறையான வாய்ப்பையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்: ஒலிநாடாக்களில் அவர் பதிவு செய்த அவருடைய வார்த்தை. போதகர் வந்து உங்களுக்காக அழைக்கிறார். தேவனுடைய அருளப்பட்ட வழியில் வாருங்கள்.

போதகர் மீண்டும் ஒருமுறை தம்முடைய மணவாட்டியை உலகம் முழுவதும் தம்முடைய சத்தத்தால் ஒன்றிணைக்கப் போகிறார். அவர் நம்மை ஊக்குவிக்கப் போகிறார், நமக்கு உறுதியளிக்கப் போகிறார், நம்மை குணப்படுத்தப் போகிறார், அவருடைய வல்லமையான பிரசன்னத்திற்குள் நம்மைக் கொண்டு வந்து நமக்குச் சொல்கிறார்:

போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். ஓ பாவியே, ஓ, சுகவீனமான நபரே, போதகர் மானிடர்களில், விசுவாசிக்களுக்கிடையே வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நீ காணவில்லையா? தம்மை விசுவாசிக்கிற பிள்ளைகளை சுகத்திற்கு அழைக்கவே அவர் வந்திருக்கிறார். பாவியை மனந்திரும்புதலுக்குள் அழைக்கவே அவர் வந்துள்ளார். பின் வாங்கிப் போனவனே, சபை அங்கத்தினனே, போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் தம்முடைய பிள்ளைகளை மீண்டும் ஒருமுறை ஒன்றுகூட்டி, நம்முடைய வீடுகளிலும், நம்முடைய சபைகளிலும், நம்முடைய கூட்டங்களிலும் நுழைந்து, நம்மை அழைத்து, “போதகர் வந்து அழைத்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய தேவை என்னவாயிருந்தாலும், அது உங்களுடையது” என்று கூறும்போது, மணவாட்டிக்கு அவருடைய பரிசுத்த ஆவியின் பொழிதல் எப்பேர்ப்பட்டதாய் இருக்கும்.

சகோதர சகோதரிகளே, அந்த வார்த்தைகள் உங்களுடைய இருதயங்களில் ஆழமாகப் பதியட்டும். உங்களுக்கு எது தேவையோ, போதகர் வந்து அதை உங்களுக்குக் கொடுக்கிறார்.

பரலோகப் பிதாவே, ஓ, கர்த்தாவே, அது மீண்டும் சம்பவிக்கட்டும். நான், “இயேசு வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” என்று இந்த எல்லாக் காரியங்களையும் கூறியுள்ளேன். அவர் வரும்போது, அவர் என்ன செய்கிறார்? அவர் அழைக்கிறார். ஆண்டவரே, அது மீண்டும் நடந்தேரட்டும். ஆவியின் ரூபத்தில் உள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பரிசுத்த ஆவியானது இன்றிரவு ஜனங்களின் மத்தியில் வரட்டும். அவர் இன்றிரவு வந்து, தன்னை வெளிப்படுத்தட்டும், அதன் பின்னர் தன்னையே வெளிப்படுத்தட்டும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 64-0213 அதன் பின்னர் இயேசு வந்து அழைத்தார்
நேரம்: பிற்பகல் 12:00 மணி ஜெபர்சன்வில் நேரம்
வேதவசனங்கள்: பரி. யோவான் 11:18-28

 

 

சனி, 29 நவம்பர், 2025

அன்புள்ள தேவனுடைய சிறந்தவேலைப்பாடே,

தண்டு, பட்டுக் குஞ்சம் மற்றும் உமியில் இருந்த அனைத்து உண்மையான ஜீவனும் இப்போது நம்மில் சேர்ந்து கொண்டிருக்கிறது, தேவனுடைய ராஜரீக வித்து, அவருடைய சிறந்த வேலைப்பாடுகள், அறுவடைக்குத் ஆயத்தமாக, உயிர்த்தெழுதலுக்காக ஆயத்தமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அல்பா ஒமேகாவாகிவிட்டது. முதலாவது கடைசியாகிவிட்டது, கடைசி இப்போது முதலாகிவிட்டது. நாம் ஒரு செயல்முறையின் மூலம் வந்து அவருடைய சிறந்த வேலைப்பாடுகளாக மாறிவிட்டோம், அவரிடமிருந்து அடிக்கப்பட்ட ஒரு துண்டு.

மணவாட்டியும் மணவாளனும் ஒன்றாயிருக்கிறார்கள்!

தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு நம் ஒவ்வொருவரின் முன்னோட்டத்தையும், அவருடைய சிறந்த வேலைப்பாடுகளையும், ஒரு தரிசனத்தில் காண்பித்தார். அவர் அங்கே நின்று, மணவாட்டி தனக்கு முன்னால் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது,

அவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்தார். நம் அனைவரின் கண்களும் அவரையே நோக்கியிருந்தன. அவர் தன்னுடைய ஜீவியத்தில் இதுவரை கண்டிராத மிகவும் இனிமையான தோற்றமுடைய ஜனங்களாக நாம் இருந்தோம் என்று அவர் கூறினார். நம்மைப் பற்றி ஒரு தோற்றம் மட்டுமே இருந்தது. நாம் அவருக்கு மிகவும் அழகாகத் காணப்பட்டோம்.

நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு மணவாட்டியின் தரிசனமாயிருந்தது; அவள் எப்படி இருப்பாள் என்றும், அவள் எப்படி காணப்படுவாள் என்றும், அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதையும் சரியாக நமக்கு சொல்லிக் கொண்டிருந்தார். கூர்ந்து கவனியுங்கள்.

அவள் எல்லா தேசங்களிலிருந்தும் வருவாள், அதுவே மணவாட்டியாகும். ஒவ்வொருவரும் நீண்ட கூந்தல் உடையவர்களாயும், ஒப்பனையே இல்லாமல், மிக அழகான பெண்களாயிருந்தனர். அவர்கள் என்னைப் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அது எல்லா தேசங்களிலிருந்தும் வரும் மணவாட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. புரிகிறதா? அவர்கள் வார்த்தையின் ஒழுங்கில் பரிபூரணமாக அணிவகுத்து சென்றபோது, அவள், ஒவ்வொருவரும் ஒரு தேசத்தைக் பிரதிநிதித்துவப்படுத்தினர்,

மணவாட்டி, நான் அதை மீண்டும் கூறட்டும், ஒவ்வொரு தேசத்திலிருந்தும் வந்த மணவாட்டி தங்களுடைய போதகரின் மீது, ஒரு மனிதக் குழு மீது தங்களுடைய கண்களை வைத்து நோக்கிப்பார்த்துக் கொண்டிருந்தாள்...இல்லை, அவர் கூறினது அப்படியல்ல. அவர்கள் தீர்க்கதரிசியின் மீது கண்களை வைத்து நோக்கிப்பார்த்துக் கொண்டிருந்தனர், அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தீர்க்கதரிசியின் மீது தங்கள் கண்களை வைத்திருக்கும் வரை, அவர்கள் பரிபூரணமாக அணிவகுத்துச் சென்றனர். ஆனால் பின்னர் அவர் நம்மை எச்சரிக்கிறார், ஏதோ நடந்தது. சிலர் அவரைப் பார்க்காமல், குழப்பத்தில் மூழ்கிய வேறு ஒன்றைப் பார்க்கத் தொடங்கினர்.

மேலும், அதன்பின்னர், நான் அவளை கவனிக்க வேண்டும். அவள் கடந்து செல்லவாளானால், அவள் கடந்து சென்று கொண்டிருந்த போது, நான் கவனிக்கவில்லையென்றால், அவள் வார்த்தையினின்று அடி பிசகி விடுவாள். அது என்னுடைய நேரமாக இருக்கலாம், நான் முடிவுறும் போது, பாருங்கள், நான் முடிவுறும்போது அல்லது அது என்னவாக இருந்தாலும் சரி.

அவர் அவளைப் பார்க்க வேண்டும், இல்லையெனில் அவள் கடந்து செல்லும்போது அவள் அடி பிசகிவிடுவாள். ஆனால் பின்னர் அவர் கூறுகையில், ஒருவேளை அது என் நேரமாக இருக்கலாம், நான் முடிவுறும்போது, நான் இங்கே இல்லாதபோது, அவர்கள் அவர் மீது தங்கள் கண்களை வைத்திராமல் அடி பிசகிப் போகலாம்.

அவர் மணவாட்டியை தெளிவாக எச்சரித்துக் கொண்டிருந்தார், நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தின் பேரில் உங்களுடைய கண்களை வைத்திருக்க வேண்டும். அதுவே இன்றைக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது. அதுவே மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும் சத்தமாக இருக்கிறது. உங்கள் கண்களையும் செவிகளையும் சத்தத்திலிருந்து விலக்கினால், நீங்கள் எல்லை மீறின குழப்பத்திற்குள் மூழ்குவீர்கள்.

ஒவ்வொரு செய்தியும் மிகத்தெளிவாகிக் கொண்டிருக்கிறது. வல்லமையுள்ள தேவன் நமக்கு முன்பாக திரைநீக்கப்பட்டு, நாம் மாத்திரமே புசிக்கக்கூடிய மறைவான மன்னாவினால் தம்முடைய மணவாட்டியைப் போஷித்துக் கொண்டிருக்கிறார். இது மற்ற யாவருக்குமான மிக விசேஷித்ததாய் இருக்கிறது, ஆனால் அது மணவாட்டிக்கான மறைவான ஆகாரமாக இருக்கிறது.

என்னே ஒரு நன்றி செலுத்துதலை மணவாட்டி உடையவளாயிருந்து, வார்த்தையின் பேரில் விருந்துண்டு அவருடைய பரிபூரண வார்த்தையைக்கொண்ட சிறந்த வேலைப்பாடான மணவாட்டியாகிக் கொண்டிருக்கிறாள்.

மணவாளனைப் போல, "மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, சபைகளால் புறக்கணிக்கப்பட்டு" தனித்து நிற்கிறாள். மணவாட்டி அந்த வழியில் நிற்கிறாள். அது என்ன? இது அவருடைய சிறந்த வேலைப்பாடு, பாருங்கள், அது அவர் மூலம் செயல்படக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. புறக்கணிக்கப்படுகிறதே!

தேவனுக்கான ஒரு சிறந்த வேலைப்பாடாகும்படிக்கு தேவன் தம்முடைய பலமுள்ள தூதன் மூலமாக செதுக்கி, மெருகேற்றப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12: 00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 64-0705 சிறந்த வேலைப்பாடு

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஏசாயா 53:1-12
மல்கியா 3:6
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 9:7
பரி. யோவான் 12:24 / 14:19

 

 

சனி, 22 நவம்பர், 2025

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

நாம் என்னே மகிமையான நேரங்களை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். வார்த்தையும் மணவாட்டியும் ஒன்றாயும் மாறாததாயும் உள்ளது. ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் நாம் திரைக்குப் பின்னால் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் தோலுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். தேவன், மீண்டும் ஒருமுறை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் மனித தோலுக்குப் பின்னால் தம்மை மறைத்துக் கொள்கிறார். இனி எந்த கேள்வியும் இல்லை. நாம் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, வார்த்தை மாம்சமான, பரிபூரண வார்த்தை மணவாட்டி என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை.

உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றிணையும்போது, அவருடைய சத்தம் பேசி, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்ற முழுமையான வெளிப்பாட்டை நமக்கு முழுமையாக வெளிப்படுத்துகிறதற்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வார்த்தையின் வெளிப்பாடு, எலோஹிம், மாம்சத்தில் உள்ள தேவன் தம்முடைய மணவாட்டியிடம் பேசுகிறார். மாம்சத்தில் உள்ள தேவன் நம் ஒவ்வொருவரிலும் ஜீவித்து வாசம் செய்கிறார். தேவனுடைய முடிவான திட்டம் இப்பொழுது நம் ஒவ்வொருவரிலும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

விசித்திரமான தோற்றமுடைய திருகாணிகளை கொண்ட விநோதமானவர்கள் மற்றும் முட்டாள்கள் என்று அழைக்கப்படுவதற்கு நாம் கர்த்தருக்கு மிகவும் மகிழ்ச்சியாயும், நன்றியுள்ளவர்களாயும் இருக்கிறோம். ஆனால் நாம் யாருடன் இணைக்கப்பட்டுள்ளோம் என்றும், யார் என்பதும் நமக்குத் தெரியும்: தேவனுடைய ஒலிநாடாவுடன் இணைக்கப்பட்டுள்ள மணவாட்டி; அது நம்மை அவரிடம் இழுத்து, நாம் அவருடன் ஒன்றாக மாறும்போது மேலும் மேலும் இறுக்கமாகி வருகிறது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

நாம் திரையைக் கடந்து அக்கினி ஸ்ம்பத்துக்குள் சென்று தேவனுடைய ஆசீர்வாதங்களுடன் வெளியே வந்துள்ளோம்! ஜனங்களால் அதைக் காண முடியாது. அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நமக்கு, அது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் நாம் நமது இசையமைப்பாளர் மற்றும் இயக்குநரின் அதே ஆவியில் இருக்கிறோம். அது தம்முடைய மணவாட்டியை வழிநடத்துகிற ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயுள்ளது.

நாம் சமுகத்தப்பத்தினாலும், வேறு பிரிக்கப்பட்ட ஜனங்களுக்கு மாத்திரமே அளிக்கப்படுகிற மன்னாவினாலும் நாம் ஜீவித்து கொண்டிருக்கிறோம். அதுவே நாம் சாப்பிடக்கூடிய ஒரே காரியமாயுள்ளது. அது நாம் புசிக்கும்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே காரியமாயுள்ளது. மேலும் அது அனுமதிக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, அது என்ன என்பதை அறிந்த மக்களுக்கு மட்டுமேயாகும்.

நாம் யார் என்று அவர் நமக்குச் சொல்வதைக் கேட்க நான் விரும்புகிறேன்:

பெந்தெகொஸ்தே நாளன்று இறங்கிய அதே பரிசுத்த ஆவி இன்றைக்கு வெளிப்பட்டு, மகிமைக்கு, மகிமையின் மேல் மகிமையடைகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன், அதே அடையாளங்களுடனும், அதே அற்புதங்களுடன், அதே ஞானஸ்நானத்துடனும்; அதேவிதமான ஜனங்களுடன், அதே விதமாக நடந்து, அதே வல்லமையோடு, அதே உணர்வோடு அதனுடைய மூல வித்திற்குத் திரும்பி, அது மகிமையின் மேல் மகிமையடைகிறது.

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு நாம் மூல வித்திற்கு திரும்புகிறோம். அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஞானஸ்நானம், அதே வகையான மக்கள், அதே வழியில், அதே வல்லமையுடன், அதே உணர்வுடன் செயல்படுகிறோம்.

நாம் அவருடைய பரிபூரணமான, முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட, வார்த்தை ஒலிநாடா மணவாட்டி!

நாம் ஜெயங்கொள்கிறோம். நிலைத்திருக்கிறோம். நிற்கிறோம். அவருடைய மணவாட்டிக்காகச் சேமிக்கப்பட்டிருக்கிற அவருடைய தூய வார்த்தையில் நிலைத்திருக்கிறோம். அது நாளுக்கு நாள் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது. நாம் யார் என்பதை அறிந்து நமது விசுவாசம் புதிய உயரங்களை எட்டியுள்ளது, அது இதுதான்:

மறுக்க முடியாதது, பேரம் பேச முடியாதது, எல்லாவற்றிற்கும் மேலாக, அது நிபந்தனையற்றது.

நீங்கள் எப்போதையும் விட மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா?
கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதில் 1000% திருப்தி அடைய விரும்புகிறீர்களா?
தேவனுடைய வார்த்தையால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட விரும்புகிறீர்களா?

அப்படியானால், வல்லமையுள்ள தேவன் நமக்கு முன்பாக திரைநீக்கப்பட்டார் 64-0629: என்ற செய்தியில் தேவனுடைய சத்தம் நித்திய ஜீவனின் வார்த்தைகளை எங்களிடத்தில் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, பிரான்ஹாம் கூடாரத்தில், எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்