அன்பான வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சங்களே,
நாம் யாவரும் இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி ஒன்று கூடி 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் என்ற செய்தியைக் கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி.யோவான் 14:12
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பே,
கண்ணாடியைப் பார்த்து, தன்னைப் பார்ப்பதை உணராத சிறு பையனைப் போல, நாம் இப்பொழுது தேவனுடைய கண்ணாடியை, அவருடைய வார்த்தையைப் பார்த்துக்கொண்டு, பிதாவே, அது நான்தான், நான் உம்முடைய வார்த்தையின் பிரதிபலிப்பாயிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறோம். நான் வெளிப்படுத்தப்பட்ட உம்முடைய வார்த்தையாயிருக்கிறேன். நான் ஒரு விசுவாசி, நான் உம்முடைய மணவாட்டி!
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியும் நம்முடைய விசுவாசத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. விசுவாசிகள், பாவனை விசுவாசிகள் அல்லது அவிசுவாசிகள்: ஆகிய மூன்று வகைகளில் ஒன்றிற்குள் நாம் பொருந்த வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார். நாம் அவருடைய கண்ணாடியில் பார்த்தபோது, "நான் காண்கிறேன், எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுமில்லாமல், நாம் விசுவாசிகள். ஒரு விசுவாசி மட்டுமே ஒரு சிறு எழுத்தையும், ஒரு சிறு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பான்; பிதாவே, அது நான்தான்” என்று நாம் சத்தமிட்டோம்.
ஒலிநாடாவில் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைத் தவிர, நம்மைத் திருப்திப்படுத்தி, ஜீவனைத் தரக்கூடியது எதுவுமே இல்லை. ஜீவன் வரக்கூடிய ஒரே வழி, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமான, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமேயாகும்.
ஆயத்தமாகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2022 அன்று இன்னும் நிறைய வரவிருக்கிறது. விளக்கைப் போடப்போகிற ஒரு மனிதன் இங்கே இருக்கிறார், அவர் அதைச் செய்யும்போது, தேவன் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசி, அவருடைய வார்த்தையைக் குறித்து அதிகமாக வெளிப்படுத்தப்போகிறபடியால், ஆமென், அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை என்று சத்தமிட்டு, கூச்சலிடுவதனால் நம் அனைவருக்கும் தொண்டை வலி உண்டாக்கும்.
இன்றுள்ள அதே சூரிய வெளிச்சம், ஜூலை மாதத்தில் அறுவடைக்கென்று தானியத்தை முதிர்வடையச் செய்வது போல. நான் கூறுவதன் அர்த்தம் புரிகிறதா? இப்பொழுது டிசம்பர் மாதத்தில் உள்ள சூரிய வெளிச்சம் ஜூலை மாதத்தில் இருந்தால் பயனில்லை. அது அதிக வெப்பமுள்ளதாயிருக்க வேண்டும். ஏனெனில் கோதுமை முதிர்ச்சியடைந்து, அதை ஏற்றுக்கொள்ள தயாராயுள்ளது. ஆமென்! நிச்சயமாக அது அப்படித்தான் உள்ளது.
அறுவடை ஆயத்தமாயுள்ளதே! நாம் மிகவும் வளர்ச்சியடைந்து, அதை உட்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறோம். இயேசு ஒரு பந்தியை வைத்துள்ளார், அங்கே தேவனுடைய பரிசுத்தவான்கள் இந்நாளின் பரிபூரணமான ஆகாரத்தை புசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் இன்றைக்கு நம்முடன் இருக்கிறார் என்பதை சுவிசேஷ ஒளி ரூபகாரப்படுத்தி நிரூபிக்கிறது. பரிசுத்தவான்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய ஆதாரத்தைப் புசித்துக்கொண்டு, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
நம்முடைய மேய்ப்பர், பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி மூலம் பேசும்போது, அந்த திருப்பானைத் திருப்பி, வெளிப்படுத்தலின் ஒளியை பிரகாசிக்கச் செய்யும்போது, அவர் நம்முடைய நாளில் யாராயிருக்கிறார் என்று அவர் நமக்குச் சொல்வார். அவர் சத்தமிட்டு நம்மை எச்சரிப்பார், நீங்கள் உறக்கத்தில் இல்லை என்றே நான் நம்புகிறேன்.
நோவா தன்னுடைய நாளில் ஒளியாக இருந்தான். மோசே தன்னுடைய காலத்தின் ஒளியாக இருந்தான், இப்பொழுது நான் உங்களுடைய நாளில் ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியை உங்களுக்கு அனுப்பியுள்ளேன், அவர் மூலம் என்னுடைய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அவர் உங்களுடைய நாளில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். அவரே இந்நாளின் வெளிச்சமாய் இருக்கிறார்.
கடந்த முறை நான் இங்கே பூமியில் மாம்சத்தில் இருந்தபோது, நான் அசலான ஐந்து அப்பங்களை எடுத்து, அந்த அப்பங்களை பிட்க ஆரம்பித்தேன். அந்த அசலானதிலிருந்து, நான் அப்பமுண்டாக்கி, அதினால் ஐயாயிரம் பேரைப் போஷித்தேன்.
அதன்பின்னர் நான் ஒரு மீனைப் பெற்றுக்கொண்டு, அந்த மீனிலிருந்து இன்னொரு மீனையும் இன்னொரு மீனையும் உண்டாக்கி ஐயாயிரம் பேரைப் போஷித்தேன்.
ஆனால் உங்களுடைய நாளில், என்னிடம் எதுவுமே இல்லை. நான், "அது அங்கே உண்டாகக்கடவது என்று கூறுங்கள்" என்று உரைத்தேன், அங்கே எதுவுமே இல்லாமலிருந்தும், அது உண்டானது. எனக்கு ஒரு அணிலும் இல்லாதிருந்தது; அங்கு ஒன்றுமே இல்லாதிருந்தது. நான், “உண்டாகக்கடவது" என்று கூறின போது, அங்கே உண்டாயிருந்தது. என்னுடைய வார்த்தை தவறாதது, அது நிறைவேற வேண்டும்.
இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, அவர்கள் தங்களுடைய பிரயாணத்தின்போது, அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய மன்னாவைப் புசித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தனர். அந்த அக்கினி ஸ்தம்பம் இயேசு கிறிஸ்துவாயிருந்தது.
இன்றைக்கு அவர் அதே அக்கினி ஸ்தம்பமாய், அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற இங்கே பூமியில் இருந்தபோது செய்த அதே காரியங்களை செய்துகொண்டு மீண்டும் நம்முடன் இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00., மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 63-1229M “விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்”, என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், எங்களுடைய மேய்ப்பர், பரிசுத்த ஆவியானவர், அக்கினி ஸ்தம்பம், அவருடைய வெளிப்பாட்டின் ஒளியை பிரகாசிக்கச் செய்யவுள்ளபடியால், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
ஆதியாகமம் 1:3, அதிகாரம் 2
சங்கீதம் 22
யோவேல் 2:28
ஏசாயா 7:14, 9:6, 28:10, 42:1-7
பரி. மத்தேயு 4:12-17, அதிகாரங்கள் 24 மற்றும் 28
பரி. மாற்கு 16-ம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள விசுவாசியே,
சகலத்தையும் உண்டாக்கி, ஒழுங்குபடுத்திய தேவன், நம்மை மீட்பதற்காக, நம்மிடையே மாம்சமானார், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அதன்பின்னர் அவர் கடைசி நாட்களில் இந்த பாவ பூமியில் இங்கே நின்று, அவருடைய வார்த்தையை அப்படியே நிரூபிக்க வேண்டும் என்றே, அவர் தம்முடைய மகத்தான பிரசன்னத்தால் நம்மை மிகவும் கனப்படுத்துகிறார், ஏனென்றால் அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவர்.
பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிர்ப்பித்திருக்கிறார். அது ஜீவனுள்ளதாகிவிட்டது. விசுவாசத்தினால் நாம் அதைக் காண்கிறோம். வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறியுள்ளபடியால் அது அவ்வண்ணமாகவே உள்ளது என்பதை நாம் அறிவோம், மேலும் ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிரப்பிக்கிறார். தேவனுடைய வார்த்தை மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் என்று தீர்க்கதரிசி கூறினதுபோலவே, இப்பொழுது நாம் அதனால் இணைக்கப்பட்டிருக்கிறோம்.
விசுவாசி அதை விசுவாசிக்கிறான், (எதை?) வார்த்தையை விசுவாசிக்கிறான். சபைக் கோட்பாட்டை அல்ல; வார்த்தையையே! வேறு யாரோ ஒருவர் கூறுகிறதை அல்ல; வார்த்தை என்ன கூறுகிறது என்பதையே! இப்பொழுது, நினைவிருக்கட்டும், அதுதான் விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி, “அது எப்படி இருக்க முடியும்? அது எனக்கு விளக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்குமே!” என்று கூறுவதில்லை. அதுதான் அவிசுவாசி, அதாவது, அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், “அது வார்த்தையாயிருந்தால், அது வார்த்தையே! அது உண்மையே.” அதுதான் விசுவாசி.
நீங்கள் ஒவ்வொரு சிறு எழுத்தையும், ஒவ்வொரு எழுத்தின் சிறு உறுப்பையும், அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் விசுவாசிக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள், “நான் அதை விசுவாசிப்பதில்லை. சில வார்த்தைகள் தேவனுடையது, சில வார்த்தைகள் மனிதனுடையது, அவைகளில் சில வேட்டையாடுதலின்போது நிகழ்ந்த கட்டுக் கதைகள்” என்று கூறினால், பாருங்கள், அப்படியானால் நீங்கள் ஒரு அவிசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி அதை விசுவாசிக்கிறான், அது எப்படித் தென்பட்டாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன கூறினாலும், அது எவ்வளவுதான் சாத்தியமற்றது என்பதாய் தென்பட்டாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசிக்கிறோம்!
இங்குள்ள ஒவ்வொரு நபரும், தற்போது, இந்த ஒலி நாடாவைக் கேட்கிற ஒவ்வொரு நபரும்; என்றோ ஒரு நாளில் நான் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், இந்த ஒலிநாடாக்கள் அப்பொழுதும் ஜீவனுள்ளதாயிருக்கும். அது உண்மையே. புரிகிறதா? நீங்கள் இந்த வகுப்பினரில் ஒருவராயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளில் ஒருவராயிருக்கத்தான் வேண்டும்.
நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் எந்த வகுப்பின ஜனங்களாய் இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க, உங்களுடைய ஜீவியத்தையே பார்க்க வேண்டும். நீங்கள், “அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படிக்கு அவர் எங்களிடம் கூறினார். சரியாக ஒலிநாடாவில் உள்ளதையே சொல்ல வேண்டும், ஒரு வார்த்தையையும் மாற்ற வேண்டாம். அவர் என்ன கூறினார் என்பதனால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, அவர் என்ன கூறினார் என்று யாரோ ஒருவர் கூறினதினாலுமல்ல, அவர் என்ன பொருட்படுத்தி கூறினார் என்று யாரோ ஒருவர் கூறுவதானாலும் அல்ல, ஆனால் ஒளிநாடாக்கள் என்ன கூறுகிறது என்பதன் மூலமேயாகும்.
இல்லையென்றால், நீங்கள், "அவர் மட்டும் பரிசுத்த மனிதன் அல்ல. அவர் செய்த இந்தக் காரியங்களைச் செய்ய மற்ற ஜனங்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியை மிக மிஞ்சின ஸ்தானத்தில் பொருத்துகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு வித்தியாசமான காலம்" என்று கூறுகிற, கோரா மற்றும் தாத்தானோடும் போகப் போகின்றீர்களா?
நீங்கள் இந்த வகுப்பினர்களில் ஒருவராய் இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுடைய தற்போதைய நிலையில், உங்களுடைய தற்போதைய மனநிலையில், அதாவது, காணக்கூடிய இந்த கூட்டத்தாரில் இங்கு இருக்கிற நீங்கள், இந்த ஒலி நாடாவை கேட்க போகும் காணமுடியாத கூட்டத்தாரில் இருக்கப்போகும் நீங்களும், இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு உங்களுடைய தற்போதைய மனநிலை, நீங்கள் எந்த வகுப்பினராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறது. இது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் வார்த்தையில் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா, அதனோடு தரித்திருப்பீர்களா, நீங்கள் வெளியே நடந்து செல்வீர்களா அல்லது அந்த ஒலிநாடாவை நிறுத்திவிடுவீர்களா என்பதை உங்களுக்கு சரியாக சொல்கிறது.
கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம், நாம் உண்மையான விசுவாசிகள், வேறு யாரோ ஒருவரால் சம்மதிக்கவைக்கப்பட்டவர்கள் அல்ல; வேறு ஏதோவொன்றாலும் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வார்த்தையைத் தாமே வெளிப்படுத்தினார். நாம் வார்த்தை தெளிவாக்கப்பட்டதையும், ரூபகாரப்படுத்தப்பட்டதையும், வெளிப்படுத்தப்பட்டதையும் காண்கிறோம்.
சோதனைகளினால், கடுமையான பாதைகளினால், கடுமையான உபத்திரவத்தினால் நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம், ஆனால் நம் இருதயங்களின் விசுவாசம் அந்த வார்த்தையின் பொருளுக்கே துடிக்கிறது. நாம் இப்பொழுது வனைவதற்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயும், அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டவர்களாயும் இருக்கிறோம். நாம் ஜீவனுள்ள உதாரணங்களாயிருக்கிறோம், தேவனுடைய வார்த்தை நம் மூலமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறது. நாம் எங்கு நிற்போம் என்பதைப் பார்க்க, நம்மை மிக அடிமட்டத்தில் கீழே தள்ள, நம்மை உலுக்கும்படி சோதனைகள் உண்டாகின்றன. ஆனால் நாம் அசைக்கப்பட முடியாது, நாம் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் நிற்கிறோம்.
நீங்கள் யார் என்பதை அவர் சொல்லும்போது கேளுங்கள்.
தேவன் உலகத்தை வார்த்தையை உரைத்து சிருஷ்டித்தபோது, உங்களுடைய ஒவ்வொரு பாகமும் இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுதே உங்களுடைய சரீரத்தை அவர் இங்கே வைத்தார். தேவனைத் தவிர வேறு எதுவும் அதைப் பறித்துக்கொள்ள முடியாது.
அதை உங்களிடமிருந்து எதுவும் பறிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்களோ, "நான் வெறுமனே ஒரு இல்லத்தரசி" என்று கூறுகிறீர்கள். உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாதே! தேவன், தம்முடைய மகத்தான நடைமுறை திட்டத்தில், கிறிஸ்துவின் சரீரத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறார், உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர் எவருமே இல்லை.
மகிமை...அல்லேலூயா...தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரத்தைக் கேட்பது இன்னும் அதிகமாகவும் மகத்தானதாகவும் இருக்கிறது. நாம் யார் என்பதை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளர் மூலம் நமக்குச் சொல்லி அவர் பேசுகிறதை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய விசுவாசம் அதிகமாகிறது. தெரிந்துகொள்வதினால் உண்டாகும் மகிழ்ச்சியோ:
- நாம் “உண்மையான விசுவாசிகள்”
- நாம் “அவர்களில் ஒருவர்”
- நாம் “மணவாட்டி”
கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நாம் கூடும்போது, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரமே மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டியின் பாகமானவர்களே, என்னுடன் இயங்கு பொத்தானை அழுத்தி: மூன்று வகைகளான விசுவாசிகள் 63-1124E. என்ற செய்தியை கேட்கும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன். இதைத்தான் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுவே நமக்கான, தேவனுடைய திட்டமாயிருக்கிறது.
- தேவன் உங்களுடைய இருதயத்தில் எந்த ஒலிநாடாவை வைத்தாலும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
- நீங்கள் தெரிந்து கொள்ளும் நேரத்தில் கேட்க: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
- உங்களுக்கான என்னுடைய செய்தியாயிருக்கிறபடியால்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி.யோவான் 6:60-71
தொடர்புடைய சேவைகள்
அன்பான கழுகுகளே, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, நாம் யாவரும் ஒன்று கூடி கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? - 63-1124M என்ற செய்தியைக் கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான உயரிய விசுவாசமுள்ள மணவாட்டியே,
இது முறையற்ற இலக்கணத்துடன் கூடிய ஒரு எளிமையான கடிதம் என்பதை நான் அறிவேன், ஆனால் நம்முடைய தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிந்ததுகொள்ள நான் விரும்புகிறேன். ஒலிநாடாவில் அவர் ஏதேனும் ஒன்றைக் கூற நாம் கேட்கும்போது, நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், அதன்பின்னர் தேவன் தாமே நேரடியாக நம்மிடம் பேசுவதுபோல அதைத் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்கிறோம்.
இது பிரசங்கிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இது மனிதனாயிருக்க முடியாது, இது தேவனாயிருக்க வேண்டும்.
இயேசுவானவர் இங்கே இருந்தபோது தோன்றினதான காணக்கூடிய அதே அடையாளங்கள் இன்றைக்கு பூமியில் தோன்றியுள்ளன என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் கண்ட அதே அக்கினி ஸ்தம்பம், அதே தன்மையுடன்,நம்முடைய நாளில் வந்து, அதே காரியத்தைச் செய்கிறது. இது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறதாயுள்ளது:
அவர் தம்மை மேசியாவாக அடையாளங்காட்டின அதே ஆவிக்குரிய அடையாளம், இன்றைக்கும் அவரை அடையாளங்காட்டியுள்ளது. அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறாரே!
இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவதாயுள்ளது என்று நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே உங்களால் இந்த மகத்தான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை விசுவாசிக்காத ஒருவராக இருந்து, "இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறுமனே சகோதரன் பிரான்ஹாம் பேசுகிறது," என்று அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்றால்: அப்படியானால் இது உங்களுக்கானது அல்ல.
மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவன் இருந்தான், அது மோசே. மீதமுள்ளவர்கள் அந்த செய்தியைப் பின்பற்றினர். புரிகிறதா?
ஆனால் இன்றைக்கு, அந்த விதமாக இதை விசுவாசிக்கிற நமக்கு, நம்முடைய இருதயங்கள் மிகுந்த சந்தோஷத்தினால் நிறைந்து, பொங்கி வழிகிறபடியால், நம்மால் நம்மைக் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அவர் நம்மை மீட்டுள்ளார் என்பதை நான் உணருகிறேன். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் இருக்கின்றன என்பதை நான் உணருகிறேன். நாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.
இந்தச் செய்தி தேவனுடைய சத்தம் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்றே நாம் விசுவாசிக்கிறபடியால், தேவன் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவது போன்றே நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
நான் இதை இந்த விதமாக கூறுவேனாக, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் தோன்றி அவருடைய சபையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம். நானும் உங்களோடு விசுவாசிக்கிறேன்.
நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மாம்சத்தில் தோன்றி, அவருடைய மணவாட்டியிடம் ஒலிநாடாவின் மூலம் பேசுகிறார்.
ஒவ்வொரு முறையும் நாம் இயங்கு பொத்தானை அழுத்தும்போது நம்முடைய விசுவாசம் புதிய உச்சங்களை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவன் தாமே நம்மிடம் பேசிக்கொண்டிருப்பதாகும். நமக்கு 100% சுத்தமான வார்த்தை மாத்திரமே வேண்டும்.
நான் உங்களிடம் ஒன்றை கேட்கட்டும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் உங்களுடைய மேய்ப்பரா? அவர் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாவது தூதனாகிய செய்தியாளனா? அவர் தேவனிடம் செய்யும்படி கேட்டுக்கொண்டதை, தேவன் செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஞாயிற்றுக்கிழமை வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி நீங்கள் மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப்போகிறீர்கள்.
நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசித்தாலொழிய, உங்களால் வேறெந்த வழியிலும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்றே அவர் கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
நான், உங்களுடைய மேய்ப்பன், உங்களுடைய சகோதரன் என்ற முறையில், எனக்குள்ள விசுவாசத்தைக்கொண்டு, நான் அதை உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொண்டேன். நான் கேட்டுக்கொண்டதை நான் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதை என்னுடன் சேர்ந்து விசுவாசித்தால்; எனக்குள்ள விசுவாசத்தை, நான் இந்த வேளையில் அதை உங்களுக்குக் அளிக்கிறேன்.
நமக்கு, அவர் நம்முடைய மேய்ப்பர். நம்முடைய மேய்ப்பரான, தேவனுடைய தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிதான விசுவாசம் உலகில் வேறு யாருக்குமே இல்லை. இப்பொழுது தேவனுடைய தீர்க்கதரிசி அவருடைய பெரிதான விசுவாசத்தை நமக்குக் கொடுக்கும்படி தேவனிடம் கேட்டுக்கொண்டார். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்பொழுது உங்களுடைய விசுவாசமாயுள்ளது...மகிமை, நாம் விசுவாசிக்கிறோமே!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி அவ்வாறிருக்காது, ஏனென்றால் இப்பொழுது நாம் அவருடைய விசுவாசத்தை பெற்றுள்ளோம்.
இப்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய துன்பத்தையும், உங்களுடைய சுகவீனத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அதனிடம், "நீ போகத்தான் வேண்டும்" என்று கூறுங்கள், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையோடு, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தையும், அதனோடு சேர்த்து என்னுடைய விசுவாசத்தையும் பெற்றுள்ளீர்கள், அதை ரூபகாரப்படுத்தி, அவர் இங்கே இருக்கிறார் என்று நீரூபிக்க அவருடைய சர்வவல்லமையானது இங்கே இருக்கிறபடியால், அது உங்களை இந்த நேரத்தில் சுகமாக்கும்.
நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு இந்த பெரிதான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து நான் என்ன கூற முடியும்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும், நீங்கள் வந்து அதைக் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மணவாட்டியுடன் வந்து கேளுங்கள்: உங்களிலிருக்கிறவர் 63-1110E, என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் எங்களிடம் சொல்லி,கர்த்தர் உரைக்கிறதாவது எங்களிடம் பேசப்போகிறபடியால், கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம்.
ஞாயிற்றுக்கிழமை அதே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், பரவாயில்லை, எந்த நேரத்திலும் இயங்கு பொத்தானை அழுத்தி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்துக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்