
அன்புள்ள திருமதி. இயேசு கிறிஸ்துவே,
நம்முடைய பெயர்கள் அழைக்கப்படுவதை கேட்க நாம் எவ்வளவு விரும்புகிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர் யாருக்கு வரப்போகிறாரோ அவர்களாகவே நாம் இருக்கிறோம். வாக்குத்தத்தமபண்ணப்பட்ட ராஜரீக குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி. அவருடைய மேம்பட்ட ராஜரீக ஆபிரகாமின் வித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாயும் விசுவாசமுள்ளதாகவும் இருந்து வருகிறது.
நாம் வேறு எந்த வார்த்தையுடனும் விபச்சாரம் செய்திருக்கவில்லை, அல்லது சரசமாடவும் கூட இல்லை; நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையோடும் தரித்திருக்கிறோம்.
இன்றைக்கு உலகில் பல அருமையான கிறிஸ்தவ பெண்கள், விசுவாசமுள்ள பெண்கள் உள்ளனர்; ஆனால் திருமதி இயேசு கிறிஸ்துவாக ஒருவள் மட்டுமே இருக்கிறாள். அவருடன் பரமவீட்டிற்குப் போகிறவர்கள் நாம்தான். நாமே அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மனைவியாய் இருக்கிறோம்.
அவர் முன்பு வந்தவிதமாகவே, மீண்டும் ஒருமுறை வருவார் என்று அவருடைய வார்த்தையில் சொன்னார். அவர் நின்று, மானிட சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தி, வார்த்தையை வாசித்து, "இந்த வேதவாக்கியம் உங்களுடைய பார்வையில் இன்றைய தினம் நிறைவேறிற்று," என்று நம்மிடத்தில் கூற, நாம் அவரை அடையாளங்கண்டுகொண்டு, அவருடைய மணவாட்டியாக திருமதி. இயேசு கிறிஸ்துவானோம்.
மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், மேற்கு அரைக்கோளத்தில் அதே தேவனுடைய கு-மா-ர-னா-க நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, தம்மை தம்முடைய மணவாட்டியின் மத்தியில் அடையாளம் காண்பித்திருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது.
நான் எந்தக் காரியத்தை குறித்தாவது ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட சரியான பதிலாக ஏதாவது இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உண்மையான, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, நம்முடைய ஜீவியங்களில் எழுகின்ற ஒவ்வொரு கேள்விக்கும், உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நம்முடைய நாளில் ஜனங்களுக்கு மத்தியில் பல கேள்விகளும், கருத்து மாறுபாடுகளும் உள்ளன.
- தேவனுடைய தீர்க்கதரிசியின் ஒலிநாடாக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?
- ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?
- நம்முடைய முற்றிலுமானது எது? அவர் ஒலிநாடாவில் கூறினதா, அல்லது எது வார்த்தை, எது வார்த்தையல்ல என்று பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் தீர்மானிக்கும்படி வழிநடத்துகிறதா?
- நமக்கு ஒரு மனிதனோ, அல்லது மனிதக் குழுவோ, அதை நமக்காக விளக்கிக் கூற இருக்க வேண்டுமா?
- அவர் எலியா தீர்க்கதரிசியை அனுப்பிய பிறகு, அதை உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டிய ஒரு கூட்ட மனிதரை அவர் அனுப்புவார் என்று வார்த்தை கூறுகிறதா?
- வார்த்தையை வியாக்கியானிக்க அல்லது அதை நமக்காக விளக்கிக் கூற யாராவது நமக்கு தேவைப்படுகிறதா?
- நாம் நம்முடைய வீடுகளில், கார்களில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரம் ஒலிநாடாக்களை கேட்டுவிட்டு, நாம் சபைக்கு செல்லும்போது போதகரின் பிரசங்கத்திற்கே செவிகொடுக்க வேண்டுமா?
- நம்முடைய சபைகளில் ஒலிநாடாக்களை நாம் இயக்க வேண்டுமா?
- இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமா அல்லது இல்லையா?
இப்பொழுது, இது ஒரு வேதாகம கேள்வியாயிருந்தால், அப்பொழுது அது ஒரு வேதாகம பதிலை உடையதாய் இருக்க வேண்டும். அது ஒரு கூட்ட மனித குழுவிலிருந்தோ, எந்த குறிப்பிட்ட ஐக்கியத்தில் இருந்தோ அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ, அல்லது சில ஸ்தாபனத்தில் இருந்தோ வரக்கூடாது. அது வேதத்திலிருந்தே நேரடியாக வரவேண்டும்...
எனவே நாம் நம்முடைய கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறிய வேண்டுமானால், நாம் வேதவாக்கியங்களிடத்திற்கே செல்ல வேண்டும். அடுத்து, வேத வாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானி யார் என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனக்காக தீர்மானிக்கிறானா?
ஒரு தீர்க்கதரிசி என்பது வார்த்தையைப் பேசுவதற்கு மாத்திரமே என்று பொருள்படாமல், முன்கூட்டியே அறிவிப்பவராயும், எழுதப்பட்ட தெய்வீக வார்த்தையின், வார்த்தையின் ஒரு தெய்வீக வியாக்கியானியாயும் கூட இருக்கிறார்.
ஆகவே, தீர்க்கதரிசி வேதவாக்கியங்களின் தெய்வீக வியாக்கியானியாய் இருந்தால், அப்பொழுது அந்த தீர்க்கதரிசி கூறினதே தம்முடைய மணவாட்டிக்கு ஏற்கனவே வியாக்கியானிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, அவ்வளவுதான்.
இது ஊழியத்திலிருந்தோ, அல்லது தேவன் அவர்களை அழைத்திருக்கிற ஸ்தானத்திலிருந்தோ எடுத்துப் போடுகிறதில்லை. தங்களுடைய மந்தைக்கு முன்பாக தேவனுடைய தீர்க்க தரிசியினால் உரைக்கப்பட்ட அந்த வார்த்தையை கடைபிடிக்கும்படிக்கு அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜனங்களுக்கு அந்த செய்தியாளனையும், அந்த மணி நேரத்தின் செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய தீர்க்கதரிசி ஒலிநாடாவில் கூறின வார்த்தைகளால் நிதானித்தறியப்பட வேண்டும். அவர்கள் ஒரு வார்த்தையும் மாற்றக் கூடாது, அல்லது அவர்கள் சொந்தமாக வியாக்கியானிக்கவும் கூட கூடாது. தேவனுடைய வேதவாக்கியங்கள் அவருடைய தீர்க்கதரிசியால் மாத்திரமே வியாக்கியானிக்கப்படுகின்றன.
இப்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரும், நிச்சயமாகவே, உங்களால் அவர்களுடைய கருத்தினைப் புரிந்துகொள்ள முடியும், நான் அவர்களைக் குறை கூற முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் அவை சத்தியம் என்றும், அவர்கள் சத்தியத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் உரிமை கோருகிறார்கள். அந்த சபைகளைச் சேர்ந்த ஜனங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய-தங்களுடைய இலக்கை, தங்களுடைய நித்திய இலக்கை, அந்த சபையின் போதனையின் மீது குறியிலக்காக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கேள்விகளை உண்டாக்குமளவிற்கு, ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாய் இருக்கிறார்கள்.
தேவனுடைய தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி உங்களுடைய முற்றிலுமானதாக இல்லையென்றால், யாரோ ஒரு மனிதனோ அல்லது மனிதர்களோ கூறுகிற வார்த்தையே உங்களுடைய முற்றிலுமானதாய் இருந்தால், அப்பொழுது உங்களுடைய நித்திய இலக்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதன் பேரிலேயே நிலைத்திருக்கிறது.
என்னுடைய வார்த்தைகள் எவருக்கும், எல்லா ஊழியங்களுக்குமே முற்றிலும் எதிராக இருப்பதாக தென்படுகிறது. நான் எதிராக இல்லை. தேவன் உண்மையான மனிதர்களை தம்முடைய சபையில், தம்முடைய மந்தைகளின் மீது வைத்து, அவர்களுக்கு முன்பாக இந்த செய்தியை காத்துக்கொள்ளும்படி செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கித்து விசுவாசிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஏன் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய பிரசங்க பீடங்களில் வைத்து கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தத்தைக் கேட்க வைப்பதில்லை? அவர்கள் ஏன் தங்களுடைய ஊழியத்தை அந்தக் சத்தத்திற்கு, சமமாகவும் முக்கியமானதாகவும் வைக்கிறார்கள்?
மல்கியா 3-ல், "வழியை ஆயத்தப்படுத்த என் முகத்திற்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புவேன்" என்று கூறப்பட்டிருந்தது. வழியை ஆயத்தப்படுத்த அனுப்பப்பட்ட அந்த ஒருவனே அவரை, அந்த ஸ்தலத்தை அடையாளம் காட்டினான். "அது அவரே! எந்த தவறும் இல்லை. அது அவரே! அவரைப் பின்தொடருகிற அடையாளத்தை நான் காண்கிறேன். அது அவர் என்று எனக்குத் தெரியும்; ஒரு ஒளி வானத்திலிருந்து இறங்கி அவர்மீது செல்கிறது." அது அவர்தான் என்பதற்கு, அது உறுதியாய் இருந்தது.
ஆகையால், என் சகோதரனே, முடிவிலே, நான் உங்களிடத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நாம் இதை இப்படிக் கூறலாம். மல்கியா 4-ல் அவர், "நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று எபிரெயர் 13:8-ல் உள்ளதை தவறிழைக்கும் சபைக்குக் காண்பிக்கும்படியாகவும், ஒரு அக்கினி ஸ்தம்பம் பின்தொடரும்படியான, மற்றொரு கழுகானது நமக்கும் கூட வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா"? இன்னொருவர் வனாந்தரத்திலிருந்து பறந்து வருவார் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கவில்லையா?
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? அந்த அக்கினி ஸ்தம்பத்தையே. யார் அந்த அக்கினி ஸ்தம்பம்? அந்தக் கழுகு, மல்கியா 4. அவர் யாராயிருந்தார் என்பதை ரூபகாரப்படுத்தும்படியாக தன்னுடைய தலைக்கு மேல் அக்கினி ஸ்தம்பத்தை உடையவராயிருந்தது யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
ஒவ்வொரு முறையும் நாம் கூடும்போது, நாம் அந்த சத்தத்தை ஜனங்களுக்கு முன்பாக வைக்க வேண்டும். நாம் தேவனுடைய சத்தத்தையே முதலில் வைக்க வேண்டும், அந்த மனிதனை ஆராதிக்காமல், அந்த மனிதனுக்குள் இருக்கிற தேவனையே ஆராதிக்க வேண்டும்.
அந்த மனிதனே தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க தெரிந்துகொண்டவராயிருக்கிறார். அந்த மனிதனே தேவன் தம்முடைய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தத் தெரிந்துகொண்ட மனிதனாய் இருக்கிறார். தேவன், "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்," வேறு யாரோ ஒருவரை அல்ல அல்லது வேறு யாரோ ஒருவர் கூறுகிறதையும் அல்ல, வில்லியம் மரியம் பிரான்ஹாமாகிய, உன்னையே என்று கூறின ஒருவராய் இருக்கிறார். அந்த மனிதனே இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்தும் ஒருவராய் இருக்கிறார்.
நான் கூறுகிற எந்த காரியத்திற்கும் மாறாக எதையாவது எந்த மனிதனோ அல்லது ஸ்திரீயோ கூட்டிக் கூறினால், அதை நான் கூறுகிறதாக நம்பவேண்டாம்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட வாயானது எங்களிடத்தில் பேசி 65-0220 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் என்ன என்பதை சொல்ல நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, திருமதி இயேசு கிறிஸ்துவாக மாற எங்களுடன் வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
உபாகமம் 16:1-3
யாத்திராகமம் 12:3-6
மல்கியா 3-வது & 4-வது அதிகாரங்கள்
லூக்கா 17:30
ரோமர் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:7