காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 25 ஜூன், 2022

அன்பான உயரிய விசுவாசமுள்ள மணவாட்டியே,

இது முறையற்ற இலக்கணத்துடன் கூடிய ஒரு எளிமையான கடிதம் என்பதை நான் அறிவேன், ஆனால் நம்முடைய தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிந்ததுகொள்ள நான் விரும்புகிறேன். ஒலிநாடாவில் அவர் ஏதேனும் ஒன்றைக் கூற நாம் கேட்கும்போது, நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், அதன்பின்னர் தேவன் தாமே நேரடியாக நம்மிடம் பேசுவதுபோல அதைத் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்கிறோம்.

இது பிரசங்கிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இது மனிதனாயிருக்க முடியாது, இது தேவனாயிருக்க வேண்டும்.

இயேசுவானவர் இங்கே இருந்தபோது தோன்றினதான காணக்கூடிய அதே அடையாளங்கள் இன்றைக்கு பூமியில் தோன்றியுள்ளன என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் கண்ட அதே அக்கினி ஸ்தம்பம், அதே தன்மையுடன்,நம்முடைய நாளில் வந்து, அதே காரியத்தைச் செய்கிறது. இது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறதாயுள்ளது:

அவர் தம்மை மேசியாவாக அடையாளங்காட்டின அதே ஆவிக்குரிய அடையாளம், இன்றைக்கும் அவரை அடையாளங்காட்டியுள்ளது. அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறாரே!

இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவதாயுள்ளது என்று நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே உங்களால் இந்த மகத்தான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை விசுவாசிக்காத ஒருவராக இருந்து, "இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறுமனே சகோதரன் பிரான்ஹாம் பேசுகிறது," என்று அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்றால்: அப்படியானால் இது உங்களுக்கானது அல்ல.

மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவன் இருந்தான், அது மோசே. மீதமுள்ளவர்கள் அந்த செய்தியைப் பின்பற்றினர். புரிகிறதா?

ஆனால் இன்றைக்கு, அந்த விதமாக இதை விசுவாசிக்கிற நமக்கு, நம்முடைய இருதயங்கள் மிகுந்த சந்தோஷத்தினால் நிறைந்து, பொங்கி வழிகிறபடியால், நம்மால் நம்மைக் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

அவர் நம்மை மீட்டுள்ளார் என்பதை நான் உணருகிறேன். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் இருக்கின்றன என்பதை நான் உணருகிறேன். நாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.

இந்தச் செய்தி தேவனுடைய சத்தம் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்றே நாம் விசுவாசிக்கிறபடியால், தேவன் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவது போன்றே நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

நான் இதை இந்த விதமாக கூறுவேனாக, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் தோன்றி அவருடைய சபையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம். நானும் உங்களோடு விசுவாசிக்கிறேன்.

நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மாம்சத்தில் தோன்றி, அவருடைய மணவாட்டியிடம் ஒலிநாடாவின் மூலம் பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் இயங்கு பொத்தானை அழுத்தும்போது நம்முடைய விசுவாசம் புதிய உச்சங்களை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவன் தாமே நம்மிடம் பேசிக்கொண்டிருப்பதாகும். நமக்கு 100% சுத்தமான வார்த்தை மாத்திரமே வேண்டும்.

நான் உங்களிடம் ஒன்றை கேட்கட்டும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் உங்களுடைய மேய்ப்பரா? அவர் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாவது தூதனாகிய செய்தியாளனா? அவர் தேவனிடம் செய்யும்படி கேட்டுக்கொண்டதை, தேவன் செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஞாயிற்றுக்கிழமை வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி நீங்கள் மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப்போகிறீர்கள்.

நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசித்தாலொழிய, உங்களால் வேறெந்த வழியிலும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்றே அவர் கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.

நான், உங்களுடைய மேய்ப்பன், உங்களுடைய சகோதரன் என்ற முறையில், எனக்குள்ள விசுவாசத்தைக்கொண்டு, நான் அதை உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொண்டேன். நான் கேட்டுக்கொண்டதை நான் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதை என்னுடன் சேர்ந்து விசுவாசித்தால்; எனக்குள்ள விசுவாசத்தை, நான் இந்த வேளையில் அதை உங்களுக்குக் அளிக்கிறேன்.

நமக்கு, அவர் நம்முடைய மேய்ப்பர். நம்முடைய மேய்ப்பரான, தேவனுடைய தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிதான விசுவாசம் உலகில் வேறு யாருக்குமே இல்லை. இப்பொழுது தேவனுடைய தீர்க்கதரிசி அவருடைய பெரிதான விசுவாசத்தை நமக்குக் கொடுக்கும்படி தேவனிடம் கேட்டுக்கொண்டார். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்பொழுது உங்களுடைய விசுவாசமாயுள்ளது...மகிமை, நாம் விசுவாசிக்கிறோமே!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி அவ்வாறிருக்காது, ஏனென்றால் இப்பொழுது நாம் அவருடைய விசுவாசத்தை பெற்றுள்ளோம்.

இப்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய துன்பத்தையும், உங்களுடைய சுகவீனத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அதனிடம், "நீ போகத்தான் வேண்டும்" என்று கூறுங்கள், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையோடு, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தையும், அதனோடு சேர்த்து என்னுடைய விசுவாசத்தையும் பெற்றுள்ளீர்கள், அதை ரூபகாரப்படுத்தி, அவர் இங்கே இருக்கிறார் என்று நீரூபிக்க அவருடைய சர்வவல்லமையானது இங்கே இருக்கிறபடியால், அது உங்களை இந்த நேரத்தில் சுகமாக்கும்.

நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு இந்த பெரிதான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து நான் என்ன கூற முடியும்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும், நீங்கள் வந்து அதைக் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மணவாட்டியுடன் வந்து கேளுங்கள்: உங்களிலிருக்கிறவர் 63-1110E, என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் எங்களிடம் சொல்லி,கர்த்தர் உரைக்கிறதாவது எங்களிடம் பேசப்போகிறபடியால், கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம்.

ஞாயிற்றுக்கிழமை அதே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், பரவாயில்லை, எந்த நேரத்திலும் இயங்கு பொத்தானை அழுத்தி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்துக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


சனி, 18 ஜூன், 2022

அன்புள்ள பிதாவே, உம்முடைய விலையேறப்பெற்ற மணவாட்டியை ஊக்குவிக்க, ஏதோ சில சிறிய வழியில், நீர் என்னை பயன்படுத்தும்படியாக, இன்றைக்கு என்னால் என்ன எழுத முடியும்?

தேவன் நம்முடைய நாளில் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று பெயரிடப்பட்ட ஒரு மனிதனுக்குள் வந்து, மானிட சரீரத்தில் ஜீவித்தார், அதனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி நிறைவேற்ற முடிந்தது. அதுவே நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயுள்ளது.

அந்த சத்தத்தைக் கேட்பதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதுமே இன்றைக்கு தேவன் அருளியுள்ள ஒரே வழியாயுள்ளது. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், அவருடைய மணவாட்டியை வழிநடத்தவும் ஒரு மனிதனை மாத்திரமே அனுப்பி, அவர் மூலமாக மட்டுமே பேசினார்.

அவர் தம்முடைய திட்டத்தை அல்லது காரியங்களை செய்யும் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் அதை முதல் முறை எப்படிச் செய்தாரோ, அவர் ஒவ்வொரு முறையும் அதை அவ்வாறே செய்கிறார். அவர் தாமே தம்முடைய ஜனங்களை, அக்கினி ஸ்தம்பத்தினால் வழிநடத்துகிறார்.

நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, பிசாசு எதையும் செய்யவோ அல்லது உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளும்படி எதையும் கூறவோ முடியாது, ஒன்றுமே செய்ய முடியாது! அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களை முன்குறித்தார். அப்பொழுதே அவர் உங்களை அறிந்திருந்தார், அப்பொழுதே நீங்கள் அவருடன் இருந்தீர்கள். அவர் உங்கள் பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருந்தார். அவர் உங்களுடைய ஏற்றத் தாழ்வுகளை அறிந்திருந்தார். அவர் உங்களுடைய தோல்விகளை, உங்களுடைய தவறுகளை அறிந்திருந்தபோதிலும், அவர் உங்களை நேசித்தார், ஏனென்றால் நீங்கள் அவருடைய பாகமாக இருந்தீர்கள்.

உங்களுடைய ஆத்துமாவால் அவருடைய வார்த்தையை மட்டுமே புசிக்க முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து, அவர் பேரில் தியானித்து, உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அவருடைய சத்தம் உங்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்கும்போது, அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. அவர் உங்களிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசி, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி, நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று நினைப்பூட்டுகையில், நீங்கள் அவரோடு கூட உன்னதங்களில் வீற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பிசாசு உங்களைத் தாக்கி, தாக்கி, தாக்கிக்கொண்டேயிருக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் தாழ்ந்து போய், நீங்கள் ஒரு முற்றிலுமான தோல்வியை உணரலாம்; மற்ற எவருமே அந்த அளவிற்கு தோல்வியுறாததுபோல நீங்கள் அவரிடத்தில் தோல்வியுற்றிருப்பதுபோல் உணரலாம். நீங்கள் மிகவும் மோசமாகிவிட்டாலும், எங்கோ, உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்தில், "எதுவுமே உங்களை என்னுடைய வார்த்தையிலிருந்து வேறுபிரிக்க முடியாது, நீங்கள் என்னுடைய வார்த்தையாயிருக்கிறீர்கள். நான் தானே உங்களுடைய பெயரை என்னுடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தேன்:" என்று உங்களிடம் சொல்லுகிற அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள்.

இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்? ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது: என்று உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் அந்த அமர்ந்த மெல்லிய சுத்தமான: 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள் என்ற செய்தியை கேட்க நாங்கள் கூடி வருகையில், நீங்கள் மணவாட்டியோடு சேர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம் 15:16
பரி. மத்தேயு 23: 27-34
பரி. யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1 பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6

 


சனி, 11 ஜூன், 2022

அன்பான தேவனுடைய இரத்தத்தால்- பிணைக்கப்பட்ட, அடையாளத்தால்-பிணைக்கப்பட்ட, உடன்படிக்கை ஜனங்களே,

நினைவிருக்கட்டும், நாம் ஏவாள் அல்ல, நாம் சாத்தானுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த சந்தேகக்காரர்களில் ஒருவர் அல்ல. நமக்கு இந்த வார்த்தையில் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கிறது! அவர் எழுதின மற்றும் ஒலிநாடாக்களில் பேசின ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் நாம் பற்றிக்கொண்டிருக்கிறோம். இது நமக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.

நாம் நமக்குள்ளாக சுதந்தரித்துக்கொள்ள வேண்டிய ஏதோ மகத்தான விசுவாசத்திற்காக நாம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கவில்லை. நாம் போதியளவு நல்லவர்களாயிருக்க முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை; நாம் ஒருபோதும் போதியளவு நல்லவர்களாக இருக்கமாட்டோம், நாம் எப்பொழுதுமே தோல்வியுறுவோம். அவர் நம்மிடம் விசுவாசங்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னது அதுவல்ல. அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்பி விசுவாசங்கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாம் அதை விசுவாசிக்கிறபடியால், அது நமக்கு அவருடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.

பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பற்றி பிதாவிடம் என்ன சொல்லி அறிக்கை கொடுத்து வருகிறார் என்பதை நாம் கேட்போமாக.

“நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளேன். உலகம் முழுவதும் சிதறியுள்ள சில சிறிய குழுக்களை நான் தேடி கண்டுபிடித்துள்ளேன். நான் சில பையன்களை அவர்களுடைய வீட்டிற்கு ஒலிநாடாக்களோடு அனுப்பி, சில ஒலிநாடாக்களை இயக்கச் செய்தேன். அவர்கள் அந்த ஒலிநாடாக்களைக் கேட்டபோது, அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தனர். இப்போது அவர்கள் செய்தியைப் பெறுவதற்காக தங்களுடைய வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். அவர்கள் உம்முடைய வார்த்தையைக் கேட்கக் கூடிவரும் உம்முடைய முன்குறிக்கப்பட்ட கழுகுகளாயிருக்கின்றனர்.

அடையாளத்தின் கீழ், இந்த மணி நேரத்தின் செய்தியின் கீழ் வரும் அனைவரும் இரட்சிக்கப்படுவர் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உம்மோடும் உம்முடைய வார்த்தையோடும் ஒன்றாகிவிடுவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இது அவர்கள் பேரில் கிரியை செய்திருந்தால், அப்பொழுது அந்த அடையாளத்தை அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பயன்படுத்துங்கள். அதை அவர்களுடைய அன்பார்ந்தவர்களுக்குப் பயன்படுத்தி, அவர்களையும் அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள், அவர்களும் கூட இரட்சிக்கப்படுவார்கள்.

ஒலிநாடாவை கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் நான் சொன்னேன்: நான் அவர்களை தேவனுக்காக உரிமை கோருகிறேன். நான் அதைக் கூறினபோது, அவர்கள் அதை முழு இருதயங்களோடும், முழு ஆத்துமாக்களோடும் விசுவாசித்தனர். அவர்கள் என்னுடைய ஜனங்கள், ஒலிநாடாக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிற அவர்களே நான் நேசிப்பவர்கள்.

ஏழு முத்திரைகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனிக்கும்படி நான் அவர்களிடம் சொன்னேன்: ஜனங்களை ஒன்றிணைத்தல், ஒன்றுபட்ட அடையாளங்கள், கடைசி நாட்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு, இந்த ஒரு காரியத்தில் மூடப்பட்ட, அடையாளம்.”

ஓ, சபையே, எழும்பி உன்னை அசைத்துக்கொள்! உன்னுடைய மனசாட்சியே உன்னைக் குத்தட்டும், இந்த வேளையில், நீயே விழித்தெழு! நாம் பதறல் கொள்ள வேண்டும், இல்லையேல் அழிந்துபோக வேண்டும்! ஏதோ ஒன்று கர்த்தரிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறதே! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் அறிவேன். ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது, நாம் பதறல் கொள்வது நல்லது. அது மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையேள்ளது. அது நம்மூடாக கடந்து செல்லுகையில், நாம் அதை காணமாட்டோம்.

ஏதோ நடக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். கர்த்தருடைய வருகை திடீரென, இரகசியமாக சென்றுவிடுவதாயிருக்கும். நாம் பதற்றமடைந்துள்ளோம். நேரம் சமீபித்துவிட்டது. நம்முடைய நாளுக்கான அடையாளத்தை நாம் அடையாளங்கண்டுகொண்டோம், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பதறலின் நேரங்களில், துரிதமாக எடுக்கப்பட்ட பாஸ்காவின் அடையாளங்களை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். நாம் உலகம் முழுவதும், அவருடைய வார்த்தையின் பேரில் கூடிவருகிறோம்.

நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, ஜெபர்ஸன்வில் நேரப்படி, 63-0901E - பதறல்கள்: என்ற செய்தியின் வார்த்தையைக் கேட்க கூடி வருகையில், இந்த மகத்தான நிகழ்வின் ஒரு பாகமாயிருக்க வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 


 

ஆராதனைக்கு முன் படிப்பதற்கான வேத வாக்கியம்:

யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 4 ஜூன், 2022

அன்பான கழுகுகளே, நாம் யாவரும் ஒன்றுசேர்ந்து இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி 63-0901M அடையாளம் என்ற செய்தியை கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


தொடர்புடைய சேவைகள்
சனி, 28 மே, 2022

அன்பான பரிபூரண விசுவாசமுள்ள மணவாட்டியே,

மீண்டும் ஒருமுறை, இந்த செய்தி, தேவனுடைய தனிப்பட்ட காதல் கடிதங்களாய், அவருடைய இரத்தத்தால் எழுதப்பட்டு, அவரது சத்தத்தால் உரைக்கப்பட்டு, நமக்கு என்னவென்று பொருட்படுத்திக் கூறுவதை என்னால் வார்த்தைகளால் கண்டறிய முடியாது. மற்ற அனைத்துமே ஒன்றுமில்லை. நாம் அவரை நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம், அது நமக்கு அவருக்கான பரிபூரண அன்பைக் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தையிலிருந்து எதுவுமே நம்மை அசைக்க முடியாது. அவர் ஒரு நண்பருக்கு ஒரு நண்பராக நம்முடன் உரையாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு எந்த மனநிறைவும் நம்முடைய வாழ்வில் இல்லை.

இது நம்மாலும் கூட அல்ல, இது அவர் நம்மில் ஜீவித்து, தம்மையே அழைக்கிறார். இது ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறதாயுள்ளது. சுத்த மகிழ்ச்சியோடு இயங்கு பொத்தானை அழுத்த, தேவன் ஒரு மானிட சத்தத்தை உபயோகித்து, நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நம்மிடம் சொல்வதை கேட்பதாகும். உலகத் தோற்த்திற்கு முன்னே அவர் நம்மை நேசித்தார் என்று நம்மிடம் சொல்கிறது; ஏனென்றால், நமக்குள் இருந்த எல்லாவற்றோடும் நாம் அவரை நேசிப்போம் என்பதையும், அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்போம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

நமக்குத் தேவையான அனைத்தையும், அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒன்றும் தவறிப்போகவில்லை. நமக்காக தம்முடைய இருதயத்தில் வைத்திருந்த முழு அன்பையும் நமக்குச் சொல்லும்படியாக, அவர் தம்முடைய வார்த்தையை எழுத்து வடிவில் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

அப்படியானால் அவர் நம்மிடம் கூறினது போல் அவருடைய அன்பு இன்னும் அதிகமாகிறது: “நான் மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்து, எந்த தவறான புரிந்துகொள்ளுதலும், எந்த குழுப்பமும், எந்த வியாக்கியானமும் தேவைப்படாதபடிக்கு, உங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசுவேன். நான் என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு, என் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவேன், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பிதா என்னில் இருக்கிறதையும், நான் உங்களில் இருக்கிறதையும், நீங்கள் என்னில் இருக்கிறதையும், நாம் ஒன்றாயிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய மாம்சம் என்னுடைய மாம்சமாயும், உங்களுடைய எலும்பு என்னுடைய எலும்பாயும், என்னுடைய ஆவி உங்களுடைய ஆவியாயுமிருக்கிறது.

என் இருதயத்தில் உள்ள அனைத்தையும் நான் மிக விரிவாகச் சொல்வேன். நான் உங்களுக்காக எழுதியிருக்கிற, உரைத்திருக்கிற வார்த்தைகளை, ஒரு சந்தேகமுமில்லாமல் நீங்கள் அறிந்துகொள்ளும்படி நான் அதை மிகவும் தெளிவாக்குவேன், அவை ஒருபோதும் தவறிப்போகாது.

நான் உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தைத் தருவேன், அது எல்லாச் சூழ்நிலைகளையும் ஆளுகை செய்கின்ற ஒன்றாய் இருக்கும்.சத்துரு என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்று என் வார்த்தை கூறுகிறதில் நீங்கள் பரிபூரண விசுவாசம் வைத்துள்ளபடியால், அதுவே அதனை ஆளுகை செய்யும். சத்துரு உங்களுக்கு என்ன சொல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் பொருட்படுத்துவதுமில்லை, நீங்கள் அவனுக்கு செவிகொடுப்பதுமில்லை. என்னுடைய ஆவி ஏற்கனவே உங்களுக்கு கூறியிருப்பதைத் தவிர வேறெந்த காரியத்திற்கும் உங்களுடைய செவிகள் செவிடாயுள்ளன. இது உங்கள் இதயங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதிலிருந்து உங்களை எதுவுமே எப்போதுமே அசைக்கப்போவதில்லை."

இந்தச் செய்தியை அறிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் அந்த பரிபூரண விசுவாசம், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது, அவருடைய வார்த்தையில் நம்முடையது என்று அவர் நமக்குச் சொன்ன ஒவ்வொரு வாக்குத்தத்திற்காகவும் நாம் அதே பரிபூரண விசுவாசத்தையே பயன்படுத்துகிறோம். நாம் சுகவீனமாயிருந்து, சுகமளித்தல் தேவைப்பட்டால், அது நம்முடையது. நமக்கு ஏதேனும் தேவையாயிருந்தால், நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும், ஏனென்றால் நாம் அவருடைய ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் காண்பிக்கும், கடைசி நாளின் அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாக்களாய் இருக்கிறோம்.

அவர் தம்மையே நமக்குள் ஊற்றிக் கொண்டிருப்பது ஒரு காதல் விவகாரமாயுள்ளது. அந்த மகத்தான கலியாண விருந்துக்காக நாம் அவருடன் ஒன்றாகிவிடுகிறோம். அவருடைய ஆவி இங்கே நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்வதேயாகும்.

நாம் தேவனின் 7-ம் தூதனாகிய செய்தியாளன் அல்ல, ஆனால் நாம் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். நம்முடைய கரங்கள் அவருடைய கரங்களாயுள்ளன. ஒலிநாடாவில் உரைக்கப்பட்டவை கர்த்தர் உரைக்கிறதாவது என்றே நாம் விசுவாசிக்கிறோம். அது ஜீவனுள்ள வார்த்தையாயுள்ளது.

அவருடைய தீர்க்கதரிசியே நம்முடைய மேய்ப்பர். ஒலிப்பதிவுசெய்யப்பட்ட வார்த்தையை நாம் கேட்கும்போது, அது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்றே நாம் விசுவாசிக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கும்படியான பரிபூரண விசுவாசத்தை பெற்றுள்ளோம்.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் உலகம் முழுவதும் ஒன்றுகூடும்போது, தேவன் தம்முடைய மணவாட்டியை தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையில் ஒன்றுகூட்டி வருவதால், நம்முடைய விசுவாசம் அதிக, அதிகமாக உயர்த்தப்படுகிறது.

நாளை மற்றெந்த நாளையும் போன்றிருக்காது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நம்முடைய பரிபூரண விசுவாசத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமக்குத் தேவையான எல்லாவற்றிற்கும், நாம் அதைப் பயன்படுத்துவோம், மேலும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளன் மூலமாக அக்கினி ஸ்தம்பம் பேசி நமக்குச் சொல்கிறதை நாம் ஏற்றுக்கொள்வோம்:

உங்களுக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் என்னை "உங்களுடைய மேய்ப்பர் ” என்று அழைத்துள்ளீர்கள்; நீங்கள் சொன்னது சரியே, நான் அவ்வாறே இருக்கிறேன். உங்கள் மேய்ப்பராகிய, நான், இயேசு கிறிஸ்துவினாலே அடையாளங் கண்டுகொள்ளப்பட்டு, அவருடைய கிரியையை செய்வேனேயாகில், அப்பொழுது என் வார்த்தையை விசுவாசியுங்கள். இந்த விசுவாசத்தின் கிரியை நடப்பிக்கையில், உங்கள் மீது கைகளை வைக்கையில், உங்களைத் துன்பப்படுத்துகிற, இன்னல்களையும் வியாதியையும் நான் கடிந்துகொண்டிருக்கிறேன், உங்கள் விண்ணப்பம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள் என்றே விசுவாசியுங்கள், ஏனென்றால் விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். நீங்கள் ஜெபிக்கும்போது நீங்கள் கேட்டதை பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள். நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய சுகமளித்தலையும் நான் என்னுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றும், அது அளிக்கப்பட்டுவிட்டது என்றே நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன், எனக்குள்ளாக இருக்கிற எல்லாவற்றோடும் நான் அதை விசுவாசிக்கிறேன்.

இந்த நாளுக்காக உரைக்கப்பட்டு, ஒலிப்பதிவுசெய்யப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட, தேவனுடைய சத்தமே இந்தச் செய்தி என்று நம்மில் உள்ள யாவற்றோடும் நாம் விசுவாசிக்கிறோம். நாம் எதைக் கேட்டாலும், நாம் பெற்றுக்கொள்வோம் என்று நாம் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது நம்முடையது என்று கூறுகிற கர்த்தர் உரைக்கிறதாவதாக உள்ளது.

பரிபூரண விசுவாசம் 63-0825E என்ற செய்தியில் உங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவனுடைய தீர்க்கதரிசி நமக்குச் சொல்வதைத் கேட்கையில் அதைப் பெற்றுக்கொள்ள, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மாற்கு 11:22-26 / 16:15-18
பரி. யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21

 


தொடர்புடைய சேவைகள்