அன்புள்ள சகோதரன் ஜோசப்,
1. இந்தச் செய்தியின் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
என் இருதயத்தின் ஆழத்திலிருந்தும், என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநார்களோடும் நான் அதை விசுவாசிக்கிறேன். இது தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசிக்கொண்டிருக்கிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறது.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியினூடாகப் பேசி கூறினார்:
எனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்ட வேண்டாம். எடுக்க வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களையும் அதில் சேர்க்கவும் வேண்டாம். அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள். தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்யுங்கள். இதனோடு கூட்டாதீர்கள்.
நீங்கள் இந்தக் கடைசி-கால செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கோரினால், அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்களும் கூட ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். சாத்தான் ஊழியத்தின் மூலம் அதை வெள்ளையடிக்க முயற்சித்து, “சகோதரன் பிரான்ஹாம் வேட்டையாடும் கதைகளைக் சொல்லிக் கொண்டிருந்தபோது அல்லது 'தேசத்தில் உங்களிடம் சிறந்த சமையற்காரர் இருக்கிறார்' அல்லது 'அதற்கான வேதவாக்கியம் என்னிடம் இல்லை', ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் உங்களுக்கு சொல்வேன்;' என்று கூறினபோது, நீங்கள் அந்த பகுதியை நம்ப வேண்டியதில்லை. எது வார்த்தை, எது வார்த்தையில்லை என்று புரிந்து கொள்ளும்படி நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார்" என்கிறான். அது ஏவாளிடத்தில் பேசி, நிச்சயமாகவே…அவர் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி பொருட்படுத்திக் கூறவில்லை என்று கூறின அதே பிசாசாய் இருக்கிறது. அதேவிதமாக தொனிக்கிறதா?
அவர் என்ன செய்யக் கூடாது என்று கட்டளையிட்டாரோ அதையே அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதையே கூறுங்கள் என்றும், உங்களுடைய கருத்துக்களை அதில் சேர்க்க வேண்டாம் அல்லது அதை புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அவர், "இந்தப் பாகத்தையும் அந்தப் பாகத்தையும் தவிர மற்ற அனைத்தும் என்றோ, எப்போது அதை பரிசுத்த ஆவியானவர் பேசிக்கொண்டிருந்தார் என்றும், எப்போது அது நான் மாத்திரமே பேசுவது என்றும் உங்களுடைய மேய்ப்பர் உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறவில்லை. இந்த பெரிய கற்களுக்கு மத்தியில் கடற்கரையில் நான் வெறுமனே ஒரு சிறிய கூழாங்கல்லாயிருக்கிறேன்.
2. சகோதரன் பிரான்ஹாம் மற்றும்/அல்லது அவருடைய ஒலிநாடாக்கள் முற்றிலுமானவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சகோதரன் பிரான்ஹாம் என்னுடைய முற்றிலுமானவர் அல்ல, ஆனால் அவர் ஒலிநாடாவில் பேசின செய்தியே முற்றிலுமாக என்னுடைய முற்றிலுமானதாயுள்ளது.
இது தவறானது என்றும், வேதமே முற்றிலுமானது என்றும் பலர் கூறுகின்றனர். என் நண்பரே, வேதமும் ஒலிநாடாவில் உள்ள செய்தியும் ஒன்றேதான். அதுதான் அந்தச் செய்தியின் சாராம்சம். ஒலிநாடாக்களில் உள்ள செய்தி வேதாகமத்தின் வியாக்கியானமாய் உள்ளது. அவைகள் ஒன்றாயும், வித்தியாசமற்றதாயுமுள்ளன.
எளிமையான உண்மை என்னவென்றால், 1: வேதம் என்பது வார்த்தை. 2: தீர்க்கதரிசியிடம் வார்த்தை வருகிறது. 3: தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருக்கிறார். 4: நம்முடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம், நம்முடைய நாளுக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயும் மற்றும் வார்த்தையை வியாக்கியானிப்பதற்கும் அனுப்பப்பட்டார். 5: தேவனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லை. அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஒலிநாடாவில் பேசுகிறபோது அதுவே அவருடைய வார்த்தையின் வியாக்கியானமாய் உள்ளது.
அவர் ஆபிரகாமோடும் இயேசு கிறிஸ்துவோடும் செய்ததைப் போலவே அவர் மீண்டும் வந்து மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பார் என்று வேதம் நமக்குச் சொல்கிறது. அவர் நமக்கு இன்னும் கூற வேண்டிய அநேக காரியங்கள் இருந்ததாகக் கூறினார். அவருடைய வார்த்தையில் மறைக்கப்பட்டிருக்கிற இந்த எல்லா மகத்தான ரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவதாகக் கூறினார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று அவர் கூறினார். அவர் தம்முடைய ஜனங்களை வழிநடத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் ஒரு குழுவை அனுப்புவதாக அவர் ஒருபோதும் கூறவில்லை, அவர் எப்போதும் செய்துள்ளதைப் போல அவர்தாமே தம்முடைய தீர்க்கதரிசி மூலம் ஜனங்களை வழிநடத்துவார். அவருடைய வார்த்தை மாற முடியாது.
3. மேய்ப்பர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒவ்வொரு சபையும் சுயாதிபத்தியமுள்ளதுபோல, ஒவ்வொரு மேய்ப்பரும் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி செய்ய அவர் உணர்கிறது போலவே செய்ய வேண்டும். மேய்ப்பர்கள் தங்களுடைய பிரசங்க பீடத்தில் ஒலிநாடாக்களை தொனிக்கச் செய்வதன் மூலம் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமிற்கு இடமளிக்க வேண்டும் என்று நான் நினைகிறேன் என்று, பலமுறை பிரசங்க பீடத்தில் அதை கூறியிருக்கிறேன். அவர்கள் பிரசங்கிப்பதை விட்டுவிட்டு, ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று, நான் ஒருபோதும் கூறியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சபைகளில் தேவனுடைய சத்தம் தொனிக்காமல் இருக்க கற்பனைக்கு வரக்கூடிய ஒவ்வொரு சாக்குப்போக்கையும் பயன்படுத்துகிறார்கள்.
தங்களுடைய சபைகளில் அந்த சத்தத்தை தொனிக்கச் செய்யாத மேய்ப்பர்களைக் குறித்து நான் எப்படி உணர்கிறேன் என்பதை தீர்க்கதரிசி கூற அனுமதிக்கிறேன்.
இப்பொழுது, சகோதரர் ஜூனியர் ஜாக்சனுக்கு அதனுடன் இணங்காமலிருக்க உரிமை இருந்தது. அவர் தன்னுடைய சபையில் விரும்புவது…ஜனங்கள் அனைவரும் கூட்டத்தில் அந்நிய பாஷைகள் போன்றவற்றை பேச விரும்புகிறார்கள். அதுதான் சகோதரன் ஜூனியரின் பிரச்சனைகளாகும்; அது-அது அவரைப் பொறுத்தது. ஆனால் நாம் விசுவாசிக்கிறது போலவே…ஜூனியர் ஜாக்சனும் இந்தச் செய்தியை விசுவாசிக்கிறார். அவர் நம்மில் ஒருவராயிருக்கிறார்.
4. ஊழியக்காரர்கள் பிரசங்கிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இல்லை, நான் அப்படிக் கூறினதேயில்லை, நான் அதை நம்புவதும் இல்லை. வார்த்தை நமக்குச் சொல்கிறது, மற்றும் சகோதரன் பிரான்ஹாம் இந்த கேள்விகளும் பதில்களும் என்ற செய்திகளில், ஊழியக்காரர்கள் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்.
இப்பொழுது கடிதத்தின் மூலமாக அல்லது: ஒரு துரிதமான அறிமுகத்தை செய்யும்படியாக, என்னுடைய சபைக்காக, நான் வழிநடத்தப்படுகிறதை உணருகிறேன், அதன்பின்னர் இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய ஒரே சத்தத்தை இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்போம். உலகத்திலேயே மகத்தான ஊழியத்தை நான் உடையவனாய் இருக்கிறேன் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன், எனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னுடைய சபைக்கு தேவனுடைய சத்தத்தை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
5. நேரடியாக ஒளிபரப்பப்படுகின்ற பிரான்ஹாம் கூடார ஆராதனைகளை நீங்கள் கேட்கவில்லையென்றால் நீங்கள் மணவாட்டியில்லையென்று நீர் நினைப்பதாக ஜனங்கள் கூறிக்கொண்டிருக்கிறார்களா?
என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் அதை ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நினைத்ததும் கூட இல்லை. யாரேனும் அத்தகைய ஒரு காரியத்தை கூறினால் அது தவறாகும். பிரான்ஹாம் கூடாரத்தின் மேய்ப்பராக, சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்க நான் வழிநடத்தப்படுகிறதை உணருகிறேன். சத்தமே மணவாட்டியை ஒருங்கிணைக்கிற ஒரே காரியமாய் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்.
நான் முன்பே கூறினதுபோல், ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு காரியமும் கர்த்தர் உரைக்கிறதாவது என்றும், அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்றும் நான் விசுவாசிக்கிறேன். நான் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று என்னால் கூற முடியும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் மணவாட்டியை வெளியே அழைக்கவே அனுப்பப்பட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஐந்து வகையான ஊழியத்தில் என்னுடைய ஸ்தானம், அந்தச் செய்தியாளனை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டி, அதன் பின்னர் இயங்கு பொத்தானை அழுத்துவதேயாகும். அந்த சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் மகத்தான காரியம் வேறொன்றுமேயில்லை. மகத்தான அபிஷேகம் அந்த ஒலிநாடாக்களில் உள்ளது, எனவே நான் ஏன் என்னுடைய சபைக்கு வேறு எதையாவது கொடுக்க வேண்டும்?
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கர்த்தர் என்னுடைய இருதயத்தில் வைத்துள்ள செய்தியை என்னுடைய சபையில் போட்டுக் கேட்க நான் உலகத்தையே அழைக்கிறேன். ஒரே நேரத்தில் கேட்கும்படி ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகிறீர்கள்.
ஒலிநாடாக்களில் சகோதரன் பிரான்ஹாம் கூறியதையே நான் என்னுடைய வழிகாட்டியாகப் பயன்படுத்துகிறேன்.
நாம் இப்பொழுது இந்த தொலைபேசி இணைப்பு முறையைப் பெற்றுள்ளோம், அது மிக, மிக அருமையாக உள்ளது. ஜனங்கள் தங்களுடைய வீடுகளிலேயே அல்லது அவர்களுடைய…அவர்களுடைய கூடும் இடங்களில், அவர்களுடைய சபைகள், போன்றவற்றில் அமர்ந்து ஆராதனையை கேட்க முடியும். நான் அதை பாராட்டுகிறேன்.
இப்பொழுது, மேய்ப்பரே, நீங்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதாவது, இது நான் இந்த காரியங்களை என்னுடைய சபைக்கு மாத்திரமே பேசுகிறதாயுள்ளது. அதை செய்ய எனக்கு ஒரு உரிமை உண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளை கண்காணிக்க பரிசுத்த ஆவியானவரால் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுகிற இந்த செய்தியும் மற்ற எல்லா செய்திகளும் என்னுடைய சபையோருக்கே நேரடியாக அளிக்கப்படுகின்றன. உங்களுடைய சபையோர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலொழிய அது உங்களுக்கானது அல்ல. ஆனால் அது இங்கே இந்த ஜனங்களுக்கு நேரடியாக அளிக்கப்படுகின்றது.
அது உலகம் முழுவதற்குமானதாய் உள்ளது. பண்டைய தேசங்களில் ஜனங்கள் ராத்திரியில் நள்ளிரவில் எழுந்து, அவர்கள் ஒரே நேரத்தில் தொடர் சங்கிலி ஜெபத்தை கைக்கொள்ளுகிறார்கள். உண்மையில், பல்லாயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் அதை கேட்கத்தான் வேண்டும்; நீங்கள்-நீங்கள் ஜெபத்தினால் பரலோகத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள், எனவே அவர் கேட்கத்தான் வேண்டும்.
6. சபைக்கு செல்வது தவறா?
நான் அதை ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நினைத்ததுமில்லை. நான் அவ்வாறு நினைத்திருந்தால் எனக்கு ஏன் ஒரு சபை வேண்டும்? பிரான்ஹாம் கூடாரத்தில் நாங்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று ஆராதனைகளை வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் நான் விஜிஆரில் (VGR) பணிபுரிந்துகொண்டே ஒவ்வொரு வாரமும் அநேக ஆராதனைகளுக்கு வர வேண்டியிருந்து எனக்கு மிகவும் கடினமானதாககிவிட்டது. பிரான்ஹாம் கூடாரத்தில் ஜனங்களுக்கு போதிய இடம் இல்லாதிருந்தபடியால் நாங்கள் அப்பொழுது இரண்டு ஆராதனைகளை வாரத்திற்கு வைத்திருந்தோம். எனவே நாங்கள் எங்களுடைய வாலிபப் பிள்ளைகளுக்காக நாங்கள் பயன்படுத்தியிருந்த எங்களுடைய கட்டடத்திற்கு இடம்பெயர்ந்தோம், அது ஓர் உடற்பயிற்சி கூடமாயிருந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு அறிக்கையை வெளியிட தேவன் என்னுடைய இருதயத்தில் பேசியிருந்தார். அவர்கள் ஒருநாள் இந்த சபைக் கதவுகளை மூடினாலும், நாம் எங்கிருந்தாலும் நம்முடைய மேய்ப்பரால் நம்முடன் பேசக் கூடும் என்பதை நாம் ஒரு இம்மியும் இழக்கமாட்டோம் என்று நான் கூறினேன். ஒரு மாதம் கழித்து, உலகெங்கிலும் உள்ள சபைகளை மூடிய கோவிட் தொற்று நமக்கு ஏற்பட்டது.
அந்த நேரத்தில், எங்களுக்கு ஒரு வழிபாட்டிடம் தேவைப்பட்டபடியால், உடற்பயிற்சி கூடத்தை மறுவடிவமைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நான் வழிநடத்தப்படுகிறதை உணர்ந்தேன். இவ்வாறு, சபையானது மறுசீரமைக்கப்படும்போது, நாங்கள் எங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக இருந்து, உலகெங்கிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பகுதியோடு ஒலிநாடாவில் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க ஒருங்கிணைந்தோம்.
நாங்கள் இப்போது கட்டிடத்தை முடித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சகோதரன் பிரான்ஹாம் இங்கு பிரன்ஹாம் கூடாரத்தில் இருந்ததைப் போலவே, நாங்கள் கட்டிய கூடுதல் வாகன நிறுத்துமிடத்தை நாங்கள் ஏற்கனவே விஞ்சிவிட்டோம். நாங்கள் ஜெபித்து, கர்த்தர் எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
ஜனங்களின் இருதயங்களில் இன்னும் பல, பல கேள்விகள் இருப்பதை நான் அறிவேன். நான் கூறியிருக்கிற பல காரியங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. சகோதரன் பிரான்ஹாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தாரானால், நான் எவ்வளவு அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்படுவேன்?
நான் கூறியுள்ளதில் தவறாக இருக்கலாம். நான் அவைகளை இன்னும் நன்றாக சொல்லாமலிருந்திருக்கலாம் அல்லது நான் அளித்த விதத்தில் இன்னும் தெளிவாக இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் சரியென்று நான் அறிந்த ஒரு காரியம், இந்த செய்தி பரிபூரணமானது. நீங்கள் எனக்கோ அல்லது நான் என்ன கூறுகிறேன் என்பதற்கோ செவிகொடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் இயங்கு பொத்தானை இயக்கி ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்.
கேள்விகளும் பதில்களும் #4 64-0830E என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மீண்டும் ஒருமுறை, பிரான்ஹாம் கூடாரத்தில் சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான கழுகுகளே,
64-0830M கேள்விகளும் பதில்களும் #3 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், உங்கள் இருதயத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களைக் கேட்க, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான நியமிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகையே,
தேவன் நம்மை மிக அதிகமாக நேசிக்கிறபடியால், அவர் தம்முடைய தீர்க்கதரிசியை நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கச் செய்கிறார், அந்த பதில்களை ஒலி நாடாவில் வைத்துவிட்டார். நமக்கு அதைக் குறித்த தேவை ஏற்படும்போது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசித்து, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதுதான்.
என்னிடம் பரிசுத்த ஆவி இருக்கிறதா?
தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிற போது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டு, அதை ஏற்றுக் கொள்ளும்போது, அதுவே பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது.
நீர் இந்த செய்தியை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், அது கர்த்தர் உரைக்கிறதாவது என நான் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், கர்த்தாவே நான் அதை உடையவனாய் இருக்கிறேனே!
ஆனால், நான் மிகவும் தோல்வியடைவது போல் தென்படுகிறது…மேலும் எனது கடந்த காலம் எப்படி?
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்றோ, அல்லது அதைப் பற்றி ஒன்றுமில்லை, அது தேவன் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாய் உள்ளது. அதுதான் அத்தாட்சியாயுள்ளது.
கர்த்தாவே, நீர் என் கடந்த காலத்தைப் பார்க்கிறதில்லை, நீர் என்னுடைய அநேக, அநேக தவறுகளையும் கூட இப்பொழுது பார்க்கிறதில்லை, நீர் என்னுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறீர்; தேவனுக்கு மகிமை, நான் பரிசுத்த ஆவியை உடையவனாய் இருக்கிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், நீர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் மாத்திரம் அல்ல என்று நீர் கூறினீர் என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தக் கடைசி காலத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியை யார் வழிநடத்திக் கொண்டிருப்பார்?
தேவனுடைய உதவியால், நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்.
என்னுடைய இருதயத்தில் அநேக காரியங்கள் உள்ளன, நான் என்ன செய்ய வேண்டும்?
தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, "நாம் போவோம்" என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் இப்பொழுது முக்கியம் வாய்ந்ததல்ல.
கர்த்தாவே உமக்கு நன்றி, நாங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். உம்முடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. உம்முடைய பரிசுத்த ஆவியானது உம்முடைய தீர்க்கதரிசி மூலம் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது, எனவே நாங்கள் உலகம் முழுவதிலுமிருந்து உம்முடைய வார்த்தையின் பேரில் ஒன்று கூடி, நாங்கள் புறப்பட்டு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம்.
என்னிடம் பல கேள்விகள் உள்ளன, எனக்கு வழிகாட்டுதல், உதவி, மற்றும் பதில்கள் தேவை. நான் அதை எங்கே பெற்றுக்கொள்வது?
நான் உங்களை நேசிக்கிறபடியால், நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கவே இங்கே இருக்கிறேன். நீங்கள் கிறிஸ்துவுக்கு நான் பெற்றெடுத்த என் பிள்ளைகள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் உரிமை கோருகிறேன். இன்றிரவு நான் உங்களை உரிமை கோருகிறேன்; நான் உங்களை எல்லா நேரத்திலும் உரிமை கோருகிறேன்; நான் உங்களை எப்பொழுதும் என்னுடைய சகோதர சகோதரியுமாகவே உரிமை கோருகிறேன்.
சகோதரன் பிரான்ஹாம் நாங்களும் கூட உம்மை நேசிக்கிறோம். எங்களுக்கு வழிகாட்டவும், எங்களை வழி நடத்தவுமே தேவன் உம்மை அனுப்பினார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை வார்த்தையை கொண்டு சரிபார்த்துள்ளோம், அது பரிபூரணமாக அமைந்துள்ளது.
சுவிசேஷத்தில் என்னுடைய தகப்பன் யார்?
நீங்கள் என் பிள்ளைகள்; நான்-நான் சுவிசேஷத்தில் உங்களுடைய தகப்பன், ஒரு குருவானவராயிருப்பது போன்ற தந்தை அல்ல, பவுல் அங்கே கூறினது போன்று நான் சுவிசேஷத்தில் உங்களுடைய தகப்பனாய் இருக்கிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், எங்களை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் உம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். வேதாகமத்தில் பவுல் கூறினது போலவே, நீர் என்ன கூறினீரோ அது சத்தியமாய் இருக்கிறபடியால், அதை நாங்கள் சரியாக பின்பற்றும்படி நீர் கூறிக்கொண்டிருக்கிறீர், நாங்கள் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் மாற்றக்கூடாது.
நீர் என்ன செய்ய வேண்டும் சகோதரன் பிரான்ஹாம்?
நான் உங்களை கிறிஸ்துவுக்குப் பெற்றெடுத்தேன், இப்பொழுது, நான்-நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன்; அது கிறிஸ்துவுக்கு உங்களை ஒரு கற்புள்ள கன்னிகையாக நியமிப்பதாயுள்ளது. என்னுடைய நம்பிக்கையை வீணாக்கிவிடாதீர்கள்! என்னுடைய நம்பிக்கையை வீணாக்கிவிடாதீர்கள்! நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாகத் தரித்திருங்கள்.
நீர் கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு கன்னிகைகளாக எங்களை அவருக்கு நியமித்திருக்கிறீர். நாங்கள் ஒருவரோடு ஒருவர் கூட சரசம் செய்ய மாட்டோம், நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் கேட்கின்ற ஒவ்வொரு வார்த்தையையும், உம்முடைய சேகரிக்கப்பட்ட வார்த்தையின் மூலமே சரிபார்த்து செய்கிறோம்.
சகோதரன் பிரான்ஹாம், அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு நான் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்ன?
வார்த்தையுடன் தரித்திருங்கள்.
நம்முடைய கேள்விகளுக்கான எல்லா பதில்களும் இந்த வார்த்தைகளால் அடக்கப்படலாம்:
வார்த்தையுடன் தரித்திருங்கள்.
இந்த செய்தியே நம்முடைய நாளுக்கான வார்த்தையாய் உள்ளது. சகோதரன் பிரான்ஹாம் நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருக்கிறார். ஒவ்வொரு காரியமும் வார்த்தையோடு சரியாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தினால், நமக்குத் தேவையான அனைத்தும் அந்த ஒலிநாடாக்களில் அங்கே அருளப்பட்டுள்ளது.
உங்களுக்கு பதில் தேவைபடுகிற எதையாவது உங்கள் இருதயத்தில் பெற்றுள்ளீர்களா? 64-0823E - கேள்விகளும் பதில்களும் #2 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், நாங்கள் எங்களுடைய எல்லா பதில்களையும் பெற்றுக்கொள்ளப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,
உங்களால் இங்கே கூடாரத்திற்கு வர முடியாவிட்டால், எங்காவது சபையைக் கண்டறிந்து; அதற்கு செல்லுங்கள். உங்களால் எங்களுடன் ஒலிநாடாக்களை கேட்க முடியாவிட்டால், எங்காவது ஒலிநாடாக்களைக் கேளுங்கள். ஒரு பிரசங்கியார், போதகர், அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் ஒலிநாடாக்களை இயக்கிக் கேட்பதேயாகும்.
இது என்னுடைய மூல ஆதாரமான வீடு; இது என்னுடைய தலைமையகம்; இங்குதான் நாங்கள் அமைத்துள்ளோம். இப்பொழுது, என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், நீங்கள் ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தாலும், இது தான் நம்முடைய தலைமையகம், இங்கேயே! நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டீர்கள் என்று, என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பக் கேட்டு, அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, அதை நினைவில் கொள்ளுங்கள்!
தீர்க்கதரிசி என்ன செய்து கொண்டிருந்தார்? ஆகாரத்தை சேமித்தார். நாம் புசிக்கும்படியான ஆகாரத்தை சேமித்தார், அதனால் நாம் விருந்துண்ணும்படியான ஒன்றைப் பெற்றுள்ளோம். நாம் நம்முடைய அறையில் வசதியாக நம்முடைய ஒலிநாடாக்களை அமர்ந்து கேட்கிறோம்.
நாடு முழுவதிற்கும் ஒரே ஒரு சிறிய களஞ்சியம், ஒரு சிறிய களஞ்சியம் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார். அவர் போய்விட்டப் பிறகு, நாம் இங்கே தரித்திருந்து கேட்கும்படியாக, அவர் ஏராளமான பொருட்களை வைத்துவிட்டார்; அடையாளம், முற்றிலுமானது, முத்திரைகள், ஏழு சபைக் காலங்கள், வருங்கால வீடு, அவருடைய வார்த்தையை நிரூபித்தல், அனைத்தும் நமக்காகவே.
அவர் வெகு தொலைவில் இருப்பது போல் தென்படுகிறது, ஆனால் இந்தக் காரியங்கள் உண்மை என்று நாம் இன்னமும் நினைவில் கொள்கிறோம். இதுவே நாம் தனித்து நடக்க வேண்டிய ஒரு ஜீவியமாய் உள்ளது.
களஞ்சியங்கள் நிரம்பியுள்ளன. மாசில்லாத தூய்மையான வார்த்தை என்று தேவனால் சான்றளிக்கப்பட்டுள்ள மற்றெந்த எந்த ஆகாரமும் இல்லையே.
நீங்கள் எங்களுடன் விருந்துண்ண விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய விருந்தினராக நாங்கள் மேஜையண்டை வந்து புசிக்கையில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் வரவேற்கிறோம்.
கேள்விகளும் பதில்களும் 64-0823M
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான பூமியின் உப்பானவர்களே,
இதற்கு மேல் சிறப்பான எதையும் பெற்றுக்கொள்ள முடியாததுபோல இது தென்படுகிறபோது, அவர் நமக்கு மற்றொரு முழு ஒலிநாடாவின் வெளிப்பாடுகளை அளிக்கிறார். நாம் முன்குறித்தலிலிருந்து பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளோம். அந்தக் காரணத்தினால்தான் நாம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையை கேட்க வருகிறோம்.
தேவன் உலகத்தை சிருஷ்டித்தபோது, நாம் அவருடைய சிந்தனையில் இருந்தோம். நம்முடைய குற்றம் சாட்டுபவன் தொடர்ந்து நம்மை சுட்டிக்காட்டி, பிதாவினிடத்தில், "அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள்," என்று சொல்லுகிறபோது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை மூடுகிறது. நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தேவன் நம்மைக் காண்கிறதில்லை, அவர் இயேசுவின் இரத்தத்தினூடாக நம்முடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறார்.
சாத்தானால் தொல்லைப்படுத்த முடியாது; அதாவது, அவனால் சோதிக்க முடியும், ஆனால் அவனால் ஒரு மீண்டும்- பிறந்த கிறிஸ்தவனை மேற்கொள்ள முடியாது. தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, அவனை முன்னதாகவே கண்டு, அவனை மீட்கும்படி இயேசுவை அனுப்பினபடியால், இரத்தம் அவனுக்காகப் பேசுகிறது. தேவனாலும் கூட அதை காணமுடியாமலிருக்கும்போது, அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? அவராலும் கூட…அவர் கேட்கிற ஒரே காரியம் உங்களுடைய சத்தமே. அவர் உங்களுடைய பிரதிநிதித்துவத்தை காண்கிறார். ஆமென். அது உண்மை. புரிகிறதா?
தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு இந்த காரியங்களைக் கூறினார். அது அவர் பேசிக்கொண்டிருந்ததல்ல; அவர் தேவனுடைய சிந்தனைகளை, வரவிருக்கின்ற காரியங்களின் அவருடைய தன்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளை வெளிப்படுத்த அவருடைய வாயை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளைக் கூறின பிறகு, அவைகள் நிறைவேற வேண்டும். "வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை."
அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனுஷகுமாரன் நமக்கு மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்டார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நம்முடைய தீர்க்கதரிசி அவரைக் குறித்து உரைத்திருந்த ஒவ்வொரு வேத வாக்கியத்தையும் நிறைவேற்றுகிறார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் அவருடைய மணவாட்டி: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் பரிசுத்த ஆவியின் உண்மையான அத்தாட்சியைப் பெற்றிருக்கிறோம்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா?
அப்படியானால் நாம் எதற்காக கவலைப்படுகின்றோம்? நாம் அவருக்காக நின்றால், அவர் நமக்காக நிற்பார் என்று, அவர் நமக்கு நிரூபித்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறிப்போக முடியாது.
இந்த செய்தியையும் இக்காலத்து செய்தியாளரையும் விசுவாசிக்கிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள். இந்த செய்தியையும் செய்தியாளரையும் விசுவாசிக்காத யாவரும், உலகத்தோடு அழிந்துபோவார்கள்.
சபையே கூர்ந்து கவனி. அநேகர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், இல்லையென்றால் வார்த்தையின் வெளிப்பாடே இல்லாதிருக்கிறார்கள். நாம் மனிதனுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக அவர்கள் உணருகிறார்கள். நீங்கள் உண்மையாகவே சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் திறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பது என்ன கூறுகிறது என்பதற்கு செவி கொடுங்கள்.
மணவாட்டியை எது ஒன்று சேர்க்கும்? தேவனோடு ஒன்றாயிருக்கும்படி மணவாட்டியை இணைப்பது எது?
"அந்த நாளிலே மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார்." என்ன? மணவாட்டியின் கலியாணத்திற்கு, சபையுடன் தலையை ஒன்று சேர்க்க, இணைக்க. மணவாளனின் அழைப்பு இதனூடாக வரும், மனுஷகுமாரன் இறங்கி வரும்போது, இவ்விருவரையும் ஒன்று சேர்க்க மானிட சரீரத்தில் இறங்கி வருவார். சபையானது வார்த்தையாக இருக்க வேண்டும், அவர் வார்த்தையாய் இருக்கிறார், இவ்விருவரும் ஒன்றாக இணைகின்றனர், மற்றும், அதை செய்வதற்கு, மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும்.
அதற்கு மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும். உங்களுடைய கருத்தல்ல, உங்களுடைய புரிந்துகொள்ளுதல் அல்ல, உங்களுடைய சிந்தனைகளோ உங்களுடைய பிரசங்கித்தலோ அல்ல. மனுஷகுமாரன் மணவாட்டியை மணவாளனோடு இணைப்பார், அது இப்பொழுதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது.
நாம் இப்பொழுது ஒரு விவாக விழாவில் மணவாளனோடு இருக்கிறோம், நாம் விரைவில் நம்முடைய கலியாண விருந்துக்காகவும் நம்முடைய தேன் நிலவிற்காகவும் புறப்பட்டு செல்வோம்.
வார்த்தையும் சபையும் ஒன்றாய் இருக்கின்றனர். மனுஷகுமாரன் என்னென்ன செய்தாரோ, அவர் வார்த்தையாய் இருந்தார், சபையும் அதே காரியத்தை செய்கிறது.
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினால் மாத்திரமே நாம் பிழைக்க முடியும்! நம்முடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான தேவனுடைய வாயாக இருக்கிறார் என்று தேவன் நிரூபித்திருக்கிறார். அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? அவர் அவ்வண்ணமாய்க் கூறி, அதன்பின்னர் அவர் அதை தம்முடைய வார்த்தையால் நிரூபித்தார்.
இந்த கடைசி நாட்களில் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற மணவாட்டி சபையாய் நாம் இருக்கிறோம். மற்ற எல்லோரிடத்திலும் இருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளோம்; அவருடைய இரத்தத்தினால் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அந்த பலவர்ணமானபட்சி.
பிதாவே, நான் அதைக் குறித்து நினைக்கும்போது, உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை என்றும், அவைகளில் ஒன்றும் தவறிப்போக முடியாது என்று அறிந்திருக்கும்போதும், எங்களுடைய இருதயங்கள் துள்ளி குதித்துக்கொண்டும், என்னுடைய இருதயம் துடித்துக்கொண்டுமிருக்கிறது.
இதுவே இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட ஒரே வழியாயிருக்கிறது. இதுவே ஒரு வார்த்தையையும் மாற்றக்கூடாது என்பதற்கான ஒரே வழியாயிருக்கிறது. நினைவிருக்கட்டும், பரிசுத்த ஆவியானவர் வந்து ஒரு நபரை அபிஷேகித்தும், அந்த நபர் இன்னமும் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்க முடியும். நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட மூல வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும்.
நீங்கள் இந்த வார்த்தையோடு தரித்திருக்க விரும்பி, எங்களோடு தேவனுடைய சத்தத்தைக் கேட்க விரும்பினால், அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 64-0816 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு., எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
நீங்கள் எங்களுடன் சேர்ந்து அல்லது எங்களுடன் ஒரே நேரத்தில் அதே ஒலிநாடாவைக் கேட்க வேண்டுமென்பதில்லை, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசிக்கு செவி கொடுங்கள் என்றே, நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 24:24
மாற்கு 5:21-43 / 16:15
லூக்கா 17:30 / 24:49
யோவான் 1:1 / 5:19 / 14:12
ரோமர் 4:20-22
I தெசலோனிக்கேயர் 5:21
எபிரெயர் 4:12-16 / 6:4-6 /13:8
I இராஜாக்கள் 10:1-3
யோவேல் 2:28
ஏசாயா 9:6
மல்கியா 4