அன்புள்ள விலையேறப்பெற்றதை ஆய்பவர்களே,
இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நமக்குள் பொங்கி வழிந்துகொண்டிருக்கும் வெளிப்படுத்தலின் ஆர்ட்டீசியன் ஊற்று ஒன்று உண்டு. இந்தச் செய்தியை நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் கேட்டிருக்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் எப்பொழுதும் விசுவாசித்து வருகிறோம், ஆனாலும் இப்பொழுது அது இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நமக்குள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிற தேவனின் இரகசியமான காரியங்களை நாம் புசித்துக்கொண்டிருக்கிற காலமாய் இப்பொழுது இது உள்ளது, இப்பொழுதே அந்த நேரமாய் உள்ளது. ஜனங்கள் சிரிக்கிற காரியமே நாம் ஜெபம் செய்கிற காரியத்தைக் குறித்துதான். ஜனங்கள் "பைத்தியம்" என்று அழைக்கும் காரியத்தை நாம் "மகத்தானது!" என்று அழைக்கிறோம். அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு ஒரே ஒரு அருளப்பட்ட வழி மாத்திரமே உண்டு என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், அது இயங்கு பொத்தானை அழுத்துவதே.
ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நாம் மறைவான மன்னாவை, ஆவிக்குரிய ஆதாரத்தைப் பெற்றுக்கொண்டோம், அதாவது இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் தம்மை ரூபகாரப்படுத்துகிற, இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதலின் நன்மை மற்றும் கிருபையின் பேரில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்.
மணவாட்டி கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், அது அவருடைய பரிபூரண சித்தம் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்துகிறார். அது நாம் என்ன நினைக்கிறோம் என்பதையே அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதல்ல, அது என்ன பொருள்படுகிறது என்று நாம் நினைக்கிறோம் என்பதுமல்ல, அவர் கூறிக்கொண்டிருக்கிறது சரியாகத்தான் இருக்கிறது, மற்றவர்களால் அதை எளிதாக புரிந்துகொள்ள முடியவில்லை; அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றனர். தேவன் அதை மறைத்திருக்கிறார். அவர்கள் அதை சரியாகப் பார்க்கிறார்கள், ஆனால் அதைப் புரிந்துகொள்ளுகிறதில்லை. நம்மைப் பொறுத்தவரை, அதுவோ நாம் புரிந்து கொள்ளுகிற எல்லாமுமாயிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் நாம் கூடிவரும்போது, அவர் என்ன சொல்லப் போகிறார் மற்றும் நமக்கு என்ன வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் கேட்பதற்கு நம்மால் காத்திருக்க முடியவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் நமக்கு சில சிறிய மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகளை தரப் போவதில்லை, அவர் நமக்கு முழு தங்கத்தையே அளிக்கப்போகிறார் மற்றும் நாங்கள் அதைப் பெறுவதை உறுதிசெய்ய மீண்டும் மீண்டும் அதை முழங்குவார்.
தீர்க்கதரிசி நீண்ட காலமாக தேவனுடைய சமுகத்தில் இருந்து வந்தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளோ, அல்லது வேறு எந்த காலத்திலுமே, அவர்கள் வார்த்தையாகி, அவர்களுடைய செய்தி வார்த்தையாகவே மாறுகின்ற வரையில், அவர்கள் தேவனுடைய சமூகத்தில் ஜீவித்தனர். மேலும், நினைவிருக்கட்டும், அவன், "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறினான்.
ஒரு மனிதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையாகவே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, செய்தியும் செய்தியாளனும் ஒன்றாகவும், ஒரே விதமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம்.
அப்பொழுது ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வருகிறபோது, அவனும் செய்தியும் ஒன்றே.
பரலோகம் அதை அறிவிக்கிறது, வேதாகமம் அதை அறிவிக்கிறது, செய்தி அதை அறிவிக்கிறது, எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது.
தீர்க்கதரிசி, வார்த்தை, செய்தி; செய்தியாளர், செய்தி மற்றும் செய்தி, ஒரே மாதிரியாக இருந்தது.
எந்த மனிதனும் அவனுடைய செய்தியும் ஒன்றாயிருக்கிறது.
ஒரு தங்கச் சுரங்கத்தைப் பற்றி பேசுவோம்.
நீங்கள் ஏதேனும் வெளிப்பாட்டை உடையவராய் இருந்தால், அவர் அதை அழகாக தெளிவுபடுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்; செய்தியும் செய்தியாளரும் ஒரே மாதிரியாயிருக்கின்றனர். அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா…அதையே!! அதன்பின்னர் நீங்கள் செய்தியிலிருந்து செய்தியாளரை, ஊழியர்களை பிரிக்க முடியாது.
நீங்கள் செய்தியாளரை உங்களுடைய சபையில் அவர் கொண்டு வந்த செய்தியோடு அந்த ஸ்தானத்தில் வைக்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் முழு செய்தியையும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் மணவாட்டி அல்ல.
ஓ! மீண்டும், இது செய்தியையும் செய்தியாளரையும் ஒன்றாக்குகிறது. ஆவிக்குரிய ஆகாரம் ஆயத்தமாக இருக்கிறது, அது இப்பொழுது இந்த காலமாய் உள்ளது.
நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய வேளையை விசுவாசிக்கிற, நமக்காக, அவர் அனுப்பிய செய்தியாளர், அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும்; இந்த காரியங்கள் மறைவான ஆகாரமாய் இருக்கின்றன.
இந்தச் செய்தியை நாம் எப்படியாய் நேசிக்கிறோம், மேலும் “இதற்குமேல் வேறு எப்படி இருக்க முடியும்?” என்று நீங்கள் நினைக்கும்போது, நாம் இப்பொழுது யார் என்று சொல்வதன் மூலம் அவர் அதில் ஒரு தலைக்கல்லைப் பொருத்துகிறார்.
மணவாட்டியான, ஜீவனுள்ள சபையில் ஜீவனுள்ள தேவனின் அதிகாரத்தை நீங்கள் காணவில்லையா? வியாதியஸ்தர் சுகமாக்கப்படுகின்றனர், மரித்தோர் உயிரோடெழுப்பப்படுகின்றனர், முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் காண்கிறார்கள், சுவிசேஷம் அதனுடைய வல்லமையோடு புறப்பட்டுச் செல்கிறது, ஏனென்றால் செய்தியும் செய்தியாளனும் ஒரே விதமாக இருக்கிறார்கள். வார்த்தை சபையில், அந்த நபரில் இருக்கிறது.
அந்த வார்த்தை நமக்குள் இருக்கிறது. நாம் தான் செய்தி. நாம் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். இந்த செய்தியும் நாமும் ஒன்றாயிருக்கிறோம்!! மேலும் மேலும் மேலும் பொங்கி வழிவதைக் குறித்தேப் பேசுகிறோம்.
மணவாட்டி கணவனின் பாகமாக இருக்கிறாள், சபை அதேவிதமாக கிறிஸ்துவைப் போன்றுள்ளது. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்."
நாம் கணவனின் பாகமாக இருக்கிறோம்!!
நாமும் அதே விதமாக கிறிஸ்துவைப் போன்றவர்கள்!!
இப்பொழுது இது மகத்தானதாய் தொனிக்கிறது என்றும், இந்த மேற்கோள்களை வெறுமனே படிப்பதே உங்களுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி: 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் என்ற செய்தியை நாம் கேட்கும் போது, தேவனுடைய சத்தம் அவைகளை உங்களுக்கு உதட்டிலிருந்து செவிக்கு சொல்வதைக் கேட்கும் வரை காத்திருங்கள்.
நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். உங்களால் சேர்ந்துகொள்ள முடியாவிட்டால், எந்த நேரத்திலாவது இயங்கு பொத்தானை அழுத்தி, எந்த செய்தியையாவது, எங்காவது, தேவனுடைய செய்தியாளர் உங்களுக்கு தேவனுடைய செய்தியைக் கொண்டு வருகிறதைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
இன்றைக்கும் அது அவ்விதமாகவே உள்ளது, பஞ்ச காலத்தில் பிள்ளைகளை ஆதரிக்கும்படி, தேவனுடைய செய்தியை பின்தொடருகிற, ஜீவ அப்பத்தையே அவர்கள் புசிக்கிறார்கள்.
படிக்க வேண்டிய வேதவசனங்கள்
1 இராஜாக்கள் 17:1-7
ஆமோஸ் 3:7
யோவேல் 2:28
மல்கியா 4:4
லூக்கா 17:30
பரி. யோவான் 14:12
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்றுகொண்டிருக்கிற மணவாட்டியே,
இந்தப் புத்தாண்டில் என்ன நடக்கப் போகிறது?
மணவாட்டி வார்த்தையுடன் தரித்திருப்பதன் மூலம் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். நாம் இராப்போஜனம் எடுத்து, நம்முடைய வீட்டிற்கு அடையாளத்தைப் போட்டு, உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் நம்மை முத்தரையிட்டுக்கொண்டோம். நாம் சமரசம் செய்யப்படவில்லை, ஆனால் தேவனுடைய உண்மையான சத்தத்திற்கு நம்மை கன்னிகைகளாகக் காத்துக் கொண்டுள்ளோம்.
நாம் என்னே ஒரு மகிமையான நேரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசிகள் யாவரும் காணும்படி வாஞ்சித்திருந்த ஒரு நேரம் இதுவே; இந்த வேளையே. இயல்பாகவே சபையானது புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். கடைசியான முடிவின் நேரங்கள் அணுகிக்கொண்டிருக்க, நாமோ நித்தியத்திற்குள்ளாக செல்ல துரிதமாக மங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஒழுங்கில் தரித்திருந்து; நம்முடைய நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியில் நம்முடைய பார்வையை வைத்திருக்க வேண்டும்: அவருடைய வார்த்தை, அவருடைய தீர்க்கதரிசி, நம்முடைய நாளுக்கான வார்த்தையாயிருக்கிறார்.
அவர் கிறிஸ்துவை இங்கு எப்படிக்கொண்டு வந்தார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாகவே. அது சரிதானே? அவர் இங்கு தன்னுடைய மணவாட்டியை எப்படிக் கொண்டு வருவார்? தீர்க்கதரிசிகளின் வார்த்தை மூலமாகவே.
என்ன செய்யப்பட முடியும்? என்ன செய்ய வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார்: தீர்க்கதரிசியினிடத்தில் கலந்தாலோசிக்க வேண்டும், வேதாகமத்தில், நாம் அதிலிருந்து எதையும் கூட்டவோ அல்லது எடுக்கவோ முடியாது. நாம் அவ்வாறு செய்தால் தேவன் ஜீவ புஸ்தகத்தில் இருந்து நம்மை எடுத்துப்போடுகிறார்.
காலமானது மிகவும் தாமதமாகிவிட்டது, நாம் அவருடைய மணவாட்டியாக இருக்க நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக அவருக்கு ஒரு சேவையை செய்ய ஒருபோதும் விரும்புவதில்லை, அது எவ்வளவு நன்றாக தென்பட்டாலும் சரி. தேவன் அதை இன்றைக்கு எப்படி செய்யப் போகிறார் என்ற ஒரு வாக்குத்தத்தை அவர் உண்டுபண்ணினார். தேவன் அதை எப்படி செய்வார் என்று அவருடைய வார்த்தையில் அவர் இங்கே சரியாக கூறிவிட்டார்.
அவர் தன்னுடைய மணவாட்டியை எப்படி எடுத்துக்கொள்வார்? வார்த்தை மூலமாகவே; ஒரு புதிய வண்டியின் மூலமாயல்ல, ஏதோ ஒரு வேதபண்டிதனுடைய கருத்தின் மூலமாக அல்ல. ஆனால் அவருடைய வார்த்தையின்படியே அவர் அவளை அடையாளங் கண்டுகொள்வார். எனவே அதிலிருந்து ஒரு காரியத்தை கூட்டவோ அல்லது இப்பொழுது அதிலிருந்து ஒரு காரியத்தை எடுக்கவோ கூடாது. அது இருக்கிற விதமாகவே அதை விட்டுவிடுங்கள். புரிகிறதா?
இன்றைக்கான கர்த்தருடைய சித்தம் என்ன என்று கூறுகிற பல அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள் இருப்பதால் சில ஜனங்களுக்கு, இது மிகவும் குழப்பமாக இருக்கக் கூடும். அவர்கள், "சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவது தவறாகும், சகோதரன் பிரான்ஹாம் அதை ஒருபோதும் கூறினதேயில்லை. ஊழியமே இப்பொழுது மிகவும் முக்கியமானது, அது இன்றைக்கான தேவன் அருளியுள்ள வழியாயுள்ளது. உங்கள் போதகருடன் தரித்திருங்கள்" என்று கூறுகிறார்கள்.
எனவே, ஒலிநாடாக்களைக் கேட்பது சரிதான், ஆனால் சபையில் கேட்கக் கூடாது அல்லவா? ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்க வேண்டியதில்லை, எது வார்த்தை, எது வார்த்தை இல்லை என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு சொல்கிறதையே விசுவாசிக்க வேண்டும். ஊழியத்திற்கு செவிகொடுப்பது மணவாட்டியை பரிபூரணப்படுத்துமா? நான் என்னுடைய மேய்ப்பரோடு தரித்திருக்கவில்லையென்றால் என்னால் மணவாட்டியாய் இருக்க முடியாது. நான் ஒலிநாடாக்களை இயக்கினால், நான் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கிறேனா?
ஒவ்வொரு விசுவாசியும் சரியானதைச் செய்து, தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறார். யாரும் தவறு செய்ய விரும்பவில்லை அல்லது அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க விரும்பவில்லை. ஒரு சீரான, சரியான வழி இருக்க வேண்டும்.
எந்த ஊழியக்காரர்களுக்கு…அவர்கள் எல்லோருக்கும் நாம் செவி கொடுக்க வேண்டுமா? நாம் வீட்டிற்குச் சென்று ஒலிநாடாக்களை கேட்பதன் மூலம் அவர்கள் கூறுகிறது வார்த்தையாக இருக்கிறதா என்று ஆய்ந்து பார்க்க வேண்டுமா அல்லது நாம் கேட்காமலேயே அவர்களுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் எது முற்றிலுமானது, நம்முடைய மேய்ப்பருடைய வார்த்தையா, அல்லது ஒலிநாடாவில் சகோதரன் பிரான்ஹாம் என்ன கூறினார் என்பதா?
அவர்கள் வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும், ஆமென். அவர்கள் வார்த்தையை ஜனங்களுக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டும், ஆமென். ஆனால் அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் காட்டிலும் அவர்கள் முக்கியமானவர்களாக இருக்கவில்லை. ஒலிநாடாக்களில் என்ன உள்ளது என்பதை மாத்திரமே அவர்கள் கூற வேண்டும். அதுவே மணவாட்டியினுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது.
உங்களுக்கு ஐந்து கட்டாயங்கள் உள்ளன. அது அந்த விதமாகத்தான் இருக்க வேண்டும். அவருடைய நேரம், அவருடைய காலம், அது இருக்கும் என்று அவர் கூறினபோது; அவர் தெரிந்துகொண்ட மனிதன்; அது தீர்க்கதரிசிக்கு வரவேண்டும்; தீர்க்கதரிசியோ ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.
நான் ஊழியத்தை கண்டிக்கவோ அல்லது அவர்களுக்கு ஒரு ஸ்தானம் இல்லை என்று கூறவோ முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை, அப்படி இல்லையே. ஊழியத்தில் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஜனங்களுக்கு ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தை இயக்குவது என்பதையே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறுகிற எந்த காரியமாயினும், அல்லது ஒரு ஊழியக்காரர் கூறுகிற எந்த காரியமாயினும், அல்லது ஒரு சாதாரண அங்கத்தினர் கூறுகிற எந்த காரியமாயிருந்தாலும் கூட, அது வார்த்தைக்கு வார்த்தை தேவனுடைய தீர்க்கதரிசி என்ன கூறியுள்ளார் என்பதன் பேரில் இருக்க வேண்டும்.
நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை நான் வெறுக்கிறேன், நான் உங்களுடைய மேய்ப்பருக்கு எதிரானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது என் இருதயத்தில் இல்லை. இந்த செய்தியில், நாம் ஒன்றிணைய முடிந்த இந்த ஒரே காரியத்தினால் மாத்திரமே மணவாட்டி ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
.இப்படிப்பட்ட பிரிவினை, குழப்பம், மக்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள ஒரு காலத்தில், ஞாயிற்றுக்கிழமை நாம் கேட்கப்போகும் இந்தச் செய்தி நமது நாளுக்கான மிக முக்கியமான செய்திகளில் ஒன்று என்றே நான் விசுவாசிக்கிறேன்.
நம்முடைய இருதயத்தைத் திறந்து, சபைக்கும், ஒலிநாடாவில் கேட்கப்போகும் ஜனங்களுக்கும், எல்லா நாடுகளிலும் இணையதள இணைப்பில் உள்ள ஜனங்களுக்கும் தேவன் என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போமாக.
வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நாம் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. தேவனுடைய சத்தம் உண்மையாகவே நாம் மிகவும் கூர்ந்து செவிகொடுக்க வேண்டும் என்றும், அவர் கூறிக்கொண்டிருக்கிறதை புரிந்துகொள்ளத் தவறக்கூடாது என்றும் விரும்புகிறது.
மோசே தேவனாலும் அக்னி ஸ்தம்பத்தாலும் ரூபகாரப்படுத்தப்பட்டிருந்த பிறகு, அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லும்படியான தேவனுடைய ஊழியக்காரனாயிருக்க அவன் நிரூபிக்கப்பட்டான் என்று அறிந்த பிறகே, மோசே இஸ்ரவேலரிடம் பேசிக் கொண்டிருந்ததுபோலவே அவர் பேசினார். ஆனால் அவர்கள் அந்த தேசத்திற்குள் செல்வதற்கு முன், அவன் அவர்களிடம்: "நான் உங்களுக்கு எதிராக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன், நான் கூறியுள்ளதில் ஒன்றையும் சேர்க்காதீர்கள் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையையும் எடுத்துப்போடாதீர்கள்" என்று சொன்னான்.
எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கூறுகிறேன். நீங்கள் ஒரு காரியத்தையும் கூட்டவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம், உங்களுடைய சொந்த கருத்துக்களை அதில் சேர்க்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே நீங்கள் கூறுங்கள், தேவனாகிய கர்த்தர் என்ன செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறாரோ அதை அப்படியே சரியாகச் செய்யுங்கள்; இதனோடு கூட்டாதீர்கள்!
ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை மாத்திரமே நாம் கூறும்படிக்கு தேவனாகிய கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறதாய் இது உள்ளது. நம்முடைய கருத்துக்களையோ, நம்முடைய எண்ணங்களையோ, அல்லது நம்முடைய வியாக்கியானத்தையோ அதனுடன் சேர்க்கவோ, எடுத்துப்போடவோ, நுழைக்கவோ முடியாது. ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே கூறுங்கள்.
தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் சத்தியமாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசித்தால், அப்பொழுது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியமான இயங்கு பொத்தானை அழுத்துவது என்றில்லாமல் எப்படி இருக்க முடியும்?
அவர் வந்தபோது, எப்படி தம்மை அடையாளங் காட்டினார்? வனாந்தரத்திலிருந்து வந்த, எலியாவின் ஆவியை தன் மீது கொண்டிருந்த ஒரு மனிதன் மூலமாகவே. அவர் தம்முடைய மணவாட்டியை எப்படி அடையாளம் காட்டுவார்? சோதோமின் நாட்களில் இருந்ததைப்போலவே, அவர் பூமியை அழிப்பதற்கு முன்பே, அதே காரியத்தை அவர் மல்கியா 4-ல் வாக்களித்தார்.
அன்புள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேச மணவாட்டியே, உங்களிடம் உண்மையான வெளிப்பாடு உள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் யாரென்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளீர்கள். இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் தேவனுடைய திட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையாய் இருக்கிறீர்கள். நீங்கள் மணவாளனின் பாகமாக இருக்கிறீர்கள். மகிமை!!!
புத்தாண்டைத் தொடங்க என்னே ஒரு வழி, இயங்கு பொத்தானை அழுத்தி, தேவனுடைய கட்டளையை பின்பற்றி, மணவாட்டி ஒன்றாக இணைக்கப்படுகின்றாள்.
நாங்கள்: 65-0718M தேவசித்தமாயில்லாமல் அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் என்ற செய்தியை நாங்கள் கேட்கவுள்ளபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களோடு எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
உபாகமம் 4:1-4 / 4:25-261 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரி. மாற்கு 7:7
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 3
பரி. மத்தேயு 11:1-15
1 கொரிந்தியர் 13:1
பிரசங்க மொழிபெயர்ப்புகள்
அன்புள்ள மணவாட்டியான ரெபெக்காளே,
பிதாவானவர் தம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான எலியேசரை, தம்முடைய மணவாட்டியான ரெபெக்காளைத் தேட அனுப்பியுள்ளார். நாம் அவரை அடையாளம் கண்டுகொண்டோம், அவருடைய செய்தியாளனான ஏழாம் தூதன், வில்லியம் மரியன் பிரான்ஹாமையே: அழைக்கவும், கூட்டவும், வழிநடத்தவும், இறுதியாக அவருக்கு நம்மை அறிமுகப்படுத்தவும் கட்டளையிட்டுள்ளார்.
அவர் நமக்கு தம்முடைய உயிர்ப்பிக்கும் வல்லமையின் ஒரு மகத்தான பொழிவை அளித்து, அழைக்கப்பட்ட ஒரு ஜனமாய் உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்டு, தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, நம்முடைய நிலைமையையும், நம்முடைய ஸ்தானத்தையும், நம்முடைய பொறுப்புகளையும் அடையாளம் கண்டு கொள்ளும்படியாக நம்மை அழைத்து வந்துள்ளார். நாம் செய்கிற கூறுகிற காரியங்களில் அவர் நமக்கு வழிகாட்டிக் கொண்டும், நம்மை வழிநடத்திக் கொண்டும், அவருடைய நாமத்திற்கு கனத்தையும் மகிமையையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
அதிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடிய எதுவும், எங்கும் இல்லை, எதுவுமே இல்லை. நாம் தேவனுடைய இராஜ்யத்தில் நித்தியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். பிதாவானவர் நம்முடைய பயண இலக்கின் முடிவுக்கு நம்மேல் தம்முடைய முத்திரையை முத்திரையிட்டுள்ளார்.
பிசாசு இரவும் பகலும் நம்மைத் தாக்குகிறான். அவன் நமக்கு ஒவ்வொரு காரியத்தையும் கூறி, நம்மை குற்றப்படுத்தி, நாம் அந்த மணவாட்டியல்ல என்று நம்மை நினைக்கும்படி செய்ய முயற்சிக்கிறான். அவன் நம்மை திசைத்திருப்ப முயற்சிக்கும்படி நம்முடைய வழியில், சுகவீனம் துக்கம் போன்ற ஒவ்வொரு காரியத்தையும் எறிகிறான், ஆனால் நாமோ அவனுக்கு செவிசாய்க்கிறதில்லை. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இப்பொழுது நமக்குள்ளிருந்து, நம்மை முத்திரையிட்டு, அந்த வார்த்தையின் மையமாக்கியுள்ளது. நாம் நம்முடைய ஒட்டகத்திலிருந்து குதித்திறங்கி, நம்முடைய மகத்தான கல்யாண விருந்துக்கு அவரண்டை செல்லும் நம்முடைய வழியில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
நாம் விசுவாசிப்பதில் வெட்கப்படவில்லை; மாறாக, உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம், தம்முடைய மணவாட்டியான ரெபெக்காளை வெளியே அழைக்கவும், வழிநடத்தவும் அவர் அனுப்பின தம்முடைய உண்மையுள்ள தீர்க்கதரிசி எலியேசரால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஒலிநாடாவில் கேட்டு விசுவாசிக்கிற ஜனங்களாய் நாம் இருக்கிறோம். நாம் ஒரு வார்த்தையையும் கூட்டுகிறதோ அல்லது எடுக்கிறதோயில்லை. இந்த செய்தி நம்முடைய முற்றிலுமானதாய் உள்ளது.
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, தேவனுடைய முழு வல்லமையையும், தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய அன்பையும் கொண்டுள்ள ஒரு மனிதன் ஒலிநாடாவில் அவன் கேட்டிருக்கிற செய்தியை குறித்து ஒரு மனிதனிடத்தில் சில காரியத்தைக் குறித்து ஒரு சில நிமிடங்களாவது பேசாமல் எப்படி இருக்க முடியும்?
இந்த கடைசி கால செய்தியில் விசுவாசிகளாய் இருப்பதாக உரிமை கோருகிற ஜனங்களை சந்திக்கும்போது, உங்களால் அவர்களிடத்தில் ஒரு சில நிமிடங்கள் பேசி, ஒலிநாடாக்களை இயக்குவதில் அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை சரியாக சொல்ல முடியும். அவர்கள் ஒலிநாடாக்களை கேட்கும் ஜனங்களாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் ஒலிநாடாக்களை கேட்காதவர்களாக இருக்க வேண்டும்.
உங்களுடைய சபையிலோ அல்லது வீட்டிலோ நீங்கள் ஒலிநாடாக்களை இயக்குகிறீர்கள் என்று சொன்னால், அவர்கள் அதை அவமானமாகவோ அல்லது தவறானதாகவோ கூட கருதுவது கற்பனை செய்ய முடியாததாயுள்ளது. இது வார்த்தைக்கு எதிரானது என்றும், தேவன் அருளியுள்ள வழி அல்ல என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு "ஒலிநாடாவைக் கேட்கும் நபர்" என்று சொல்வதால், நீங்கள் இழிவாக பார்க்கப்படுகிறீர்கள்.
தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குகிற ஊழியக்காரர்கள் விமர்சிக்கப்பட்டு, சோம்பேறி என்று கூட அழைக்கப்படுகின்றனர். நீங்கள் ஒரே நேரத்தில் ஒரே ஒலிநாடாவை கேட்டால், பாருங்கள், நீங்கள் ஒரு ஊழியக்காராகக் கூட இருக்கவில்லை, நீங்கள் ஒரு ஸ்தாபனமாய், அல்லது ஒரு மனிதனை வழிபடுபவராக இருக்கிறீர்கள்.
நமக்கு முன்னிருந்த அந்த ஜனங்கள் எல்லாரும் தங்களுடைய சபைகளிலும் வீடுகளிலும் தொலைபேசி இணைப்புகளிலிருந்து, ஒரே நேரத்தில் சகோதரன் பிரான்ஹாம் பேசவதைக் கேட்டுக்கொண்டிருந்த யாவரும், அவர்களும் கூட ஒரு ஸ்தாபனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேவனுடைய திட்டத்திற்குப் புறம்பாக இருந்திருக்க வேண்டும். அவர்களோ வெட்கப்படாதிருந்தனர், நாமும் வெட்கப்படுகிறதில்லை.
சில நிமிடங்களில் நீங்கள் ஜனங்களுடன் பேசும்போது, அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்வீர்கள்: ஆம், நாம் இயங்கு பொத்தானை அழுத்துகிறோம். ஆம், நாம் நம்முடைய சபையில் அல்லது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ஒலிநாடாக்களை கேட்கிறோம். ஆம், ஒரே ஒலிநாடாவையே, ஒரே சமயத்திலே.
ஏன் மற்றவர்கள், “நாங்கள் ஞாயிறு காலை, ஞாயிறு இரவு, மற்றும் புதன் இரவு சபைக்குச் செல்கிறோம். எங்களுக்கு அப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான போதகர் இருக்கிறார்; அவர் அதை மிகத் தெளிவாகவும், நாங்கள் புரிந்துகொள்ளும்படியாக மிக எளிமையாகவும் கூறுகிறார். நான் அதை புரிந்துகொள்ளும்படியாக அவர் செய்தியை விளக்குகிறார். மணவாட்டியாய் இருக்க உங்களுக்கு ஒரு ஊழியம் இருக்க வேண்டும். சபையில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் கூறினதேயில்லை" என்று கூறுகிறார்கள்.
அப்படியானால் மிக முக்கியமான காரியம் என்று நீங்கள் எதைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? பிரசங்கிமார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையா, சகோதரன் ஜோசப் என்ன சொல்கிறார் என்பதையா, அல்லது ஒலிநாடாவில் தேவனுடைய சத்தம் என்ன கூறுகிறது என்பதையா? உங்களுடைய முற்றிலுமானது என்ன? ஒலிநாடாவில் என்ன உள்ளது என்பதா அல்லது வேறு யாரோ ஒருவர் என்ன கூறுகிறார் என்பதா?
ஊழியம் அற்புதமானதுதான், வார்த்தையில் உள்ளதே. நமக்கு அவைகள் தேவை. ஆனால் மிக முக்கியமானது, பிரசங்கமா அல்லது ஒலிநாடாக்களா?
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் சபை வாழ்க்கையில் ஒலிநாடாக்கள் மிக முக்கியமான காரியமல்லவென்றால், அப்பொழுது ஏதோ தவறு உள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத் திட்டத்திலிருந்து விலகியிருக்கிறீர்கள். அந்தத் திட்ட ஒழுங்கிற்கேத் திரும்பி வாருங்கள்.
ஒரு மனிதன் எப்போதாவது தேவனை சந்திக்கிறபோது; ஏதோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட கிரியையினாலோ, அல்லது ஏதோ ஒரு வகை உணர்ச்சி மிகுதியினாலோ, அல்லது ஏதோ ஒரு மதப் போதகம் அல்லது கோட்பாடு, அல்லது தனக்கான ஒரு-ஒரு ஆறுதலாக அவன் ஏற்றுக்கொண்டுள்ள ஏதோ ஒரு கொள்கையோ அல்ல, ஆனால் மோசே செய்ததுபோல உண்மையாகவே அவன் வனாந்திரத்தின் பின்பக்கத்திற்கு வந்து சர்வ வல்லமையுள்ள தேவனோடு முகமுகமாய் சந்தித்து, அந்த சத்தம் உங்களிடத்தில் பேச, அது தேவனுடைய வார்த்தையுடனும், இந்த நேரத்துக்குரிய வாக்குத்தத்துடனும் சரியாக இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறதாயுள்ளதே! பாருங்கள், நீங்கள் அதைக் குறித்து வெட்கப்படுவதில்லை, அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறது.
நம்முடைய நாளில், அந்த பாரம்பரியத் திரையோ கிழிக்கப்பட்டுள்ளது. இதோ அக்கினி ஸ்தம்பம் நின்று, இந்த நாளுக்கான வார்த்தையை வெளிப்படுத்துகிறது. தெய்வத்துவம் மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. இந்நாளுக்கான நம்முடைய ஷெக்கினா மகிமை. மானிட சரீரத்தில் திரையிடப்பட்ட, தேவன் நின்று நமக்கு முன்பாக பேசுகிறார்.
மோசே வார்த்தையை உடையவனாய் இருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், வார்த்தையானது வெளிப்படுத்தப்பட்ட பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். புரிகிறதா? ஆனால் வார்த்தையானது அறிவிக்கப்படும்படி அவனுக்குள் இருந்தபோது, அவன் தேவனாய் இருந்தான்; பாருங்கள், அப்பொழுது அவன் மோசேயாயிருக்கவில்லை. அவன் அந்த காலத்திற்கான கர்த்தருடைய வார்த்தையை உடையவனாய் இருந்தான்.
இந்த ஞாயிற்றுக்கிழமை ரெபெக்காள்களாகிய நமக்கு என்ன ஒரு கிறிஸ்துமஸாக இருக்கும். நாள் முழுவதும், நாள் முழுவதும் வெவ்வேறு நேரங்களிலுமே. நம்முடைய எலியேசர் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைப்பதை நாம் கேட்டுக்கொண்டு, நாம் வெட்கப்படவில்லை என்றே அவரிடம் சொல்லிக்கொண்டிருப்போம்.
"அவருடைய பிரசன்னத்தால்" நிரப்பப்பட்ட, ஒரு அற்புதமான கிறிஸ்துமஸை கர்த்தர் உங்களுக்கு அளிப்பாராக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-0711 வெட்கப்படுதல்
வேதவாக்கியம்: பரி. மாற்கு 8:34-38
தொடர்புடைய சேவைகள்
அன்பான சகோதர சகோதரிகளே,
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையே கிறிஸ்துமஸாக இருப்பதால், அன்றைய செய்தியைக் கேட்பதற்கு நமக்கு நியமிக்கப்பட்ட நேரம் இல்லை என்பதை என்னுடைய இருதயத்தில் நான் உணர்ந்துள்ளேன். கிறிஸ்மஸ் காலையில் தங்களுடைய அன்பளிப்புகளைத் திறக்க மிகவும் உற்சாகமாக இருக்கும் பல குடும்பங்களில் சிறிய குழந்தைகள் உள்ளனர், மேலும் செய்தியைக் கேட்பதற்கு அல்லது பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை காத்திருக்க வைப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
மேலும், அதே சமயத்தில், கிறிஸ்துமஸ் நேரத்திலே, உங்களுக்குத் தெரியும், சிறு பிள்ளைகளுக்கு, உங்களால் அவர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் கூறமுடியாது. அவர்களுக்கு, அப்படியே, இது அவர்களுக்கான கிறிஸ்துமஸ் நேரமாயிருக்கிறது. அவர்கள் தங்களுடைய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை நிரப்பும் சிறு உறையை மேலே வெறுமையாய் தொங்க வைக்கமாட்டார்கள், அதில் ஏதாவது இருக்கும். அது நம்முடைய தேசத்திலும்கூட, ஒரு பாரம்பரியமாயுள்ளது, அதாவது அவர்கள் பரிசுப்பொருள் நிரப்பும் உறையைத் தொங்கவிட்டு, மற்ற ஏதோ ஒன்றை வைத்திருப்பர். ஏன், நான் ஒரு சிறுபிள்ளையாயிருந்தபோது, நானும் செய்துள்ளேன், அது வேதத்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தாலும்கூட, அது பழகிப்போனதாயிருக்கிறது. அதே சமயத்தில், பிள்ளைகளிடத்தில், அவர்களிடத்தில் மற்ற பிள்ளைகள், “பாருங்கள், நான் கிறிஸ்துமஸிற்காக இதைப் பெற்றுள்ளேன். நான் இதைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறுவதைக் கேட்கிறார்கள். சிறு நபர்கள் நின்று சுற்றும் முற்றும், நோக்கிப் பார்ப்பதை, நீங்கள் அறிவீர்கள். உங்களால், உங்களால் அவர்களைப் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்ய முடியாது. புரிகிறதா? ஆகையால், கிறிஸ்துமஸ் அப்படியே இங்கேயே இருந்த இடத்திலேயே இருக்கப்போகிறது. ஆம்.
சிலர் அன்றைய தினம் பிற்பகுதியில் தங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் முன்னேற்பாடுகளை கொண்டுள்ளபடியால், சீக்கிரம் எழுந்து செய்தியைக் கேட்க விரும்பும் மற்றவர்களும் இருக்கலாம். எனவே ஒவ்வொரு குடும்பமும் செய்தியைக் கேட்பதற்கு அவர்களின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன். கிறிஸ்துமஸ் தினத்தன்று லைஃப்லைனில் (Lifeline) செய்தியை மூன்று வெவ்வேறு முறை ஒளிபரப்புவோம்: காலை 9:00 மணி. - பிற்பகல் 12.00 மணி. - மாலை 5:00 மணி.. இந்த நேரத்தில் நீங்கள் கேட்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம், ஆனால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ சிறந்த நேரத்தைத் தேர்வு செய்யவும். மிக முக்கியமான காரியம் என்னவென்றால், இயங்கு பொத்தானை அழுத்தவும்.
இந்தக் காலையில், என்னுடைய மேலங்கியை மேடையின் மேல் அணிந்திருப்பது, ஒரு விதமான வேடிக்கையாகக் காணப்படலாம். ஆனால் நானோ சபையோர் எனக்கு அளித்த இந்த அழகான மேலங்கியை வெளிக்காட்ட மிகவும் மகிழ்ச்சியுடையவனாயிருந்தேன். அன்றொரு நாள் சகோதரன் நெவில் இங்கே ஒரு அருமையான சூட் அணிந்து வந்ததை நான் கண்டேன், அது அவருக்கு எவ்வளவு அருமையாய் பொருந்துகிறது என்று, நான் எண்ணினேன், பாருங்கள், நான்—நான்…அது மிகவும் அருமையானதாய் காணப்பட்டது, சபையாரும் அதைக் குறித்து பேசிக் கொண்டனர், அப்பொழுது நான், “மேடையின் மீது நானும் என்னுடைய மேலங்கியை அணிந்துகொள்ளலாமே” என்று எண்ணினேன். நான் சற்று…
நாம் ஒருபோதும் வளரப்போவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று, நான் நம்புகிறேன். நாம் எப்பொழுதும்…நான் உயரமாய் வளரும்படி விரும்புகிறதில்லை. சகோதரன் லூத்தர், அதைக் குறித்து என்ன? இல்லை. நான் ஒருபோதும் வளர விரும்புகிறதில்லை. நாம் எப்பொழுதுமே சிறு பிள்ளைகளாகவே தரித்திருக்க விரும்புகிறோம்.
கர்த்தர் தம்முடைய முழுமையான பிரசன்னத்தினால் ஒரு அற்புதமான விடுமுறையை உங்களுக்கு அளிப்பாராக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்புள்ள மேசியானிக்களே,
நாம் தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்; அவருடைய அதே ஆவியால், அதே கிரியைகளினால், அதே வல்லமையால், அதே அடையாளங்களால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். அது கழுகிலிருந்து கழுகுக்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியப் பிரகாரமான, அல்லது நமக்குத் தேவையாய் இருக்கிற எந்த தேவையானாலும், இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் நம்முடைய ஒவ்வொரு சரீரங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்ற வரையிலும் சென்றுள்ளது. அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் ஜீவித்துக்கொண்டும், நமக்குள்ளே வாசம் செய்துகொண்டும் இருக்கிறது. நாம் தேவனுடைய மேசியானிக்களாய் இருக்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் இந்த செய்தியின் வெளிப்பாடு; நாம் யார், நாம் எங்கிருந்து வருகிறோம், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மேலும் மேலும் பெரிதாக்குகிறது. நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆச்சரியப்படுகிறோம், அது இதற்குமேல் எப்படி இன்னும் மகிமையாக இருக்க முடியும்? அது இதற்கு மேல் இன்னும் எப்படி தெளிவாக இருக்க முடியும்? ஆனால் நாம் கேட்கும் ஒவ்வொரு புதிய ஒலிநாடாவிலும், தேவன் நம்மிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசி, அவருடைய வார்த்தையை நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்தி, நாம் யார் என்பதை, நமக்கு உறுதியளிக்கிறார்.
தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும் என்பதே எந்தவொரு விசுவாசியினுடைய இருதயத்திலும் உள்ள மிக மகத்தான வாஞ்சையாய் இருக்கிறது. நாம் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க ஒருபோதும் விரும்புகிறதில்லை. அவருக்குப் பிரியமில்லாத எந்தக் காரியத்தையாவது நாம் செய்துள்ளதாக உணர்ந்தால், நம்முடைய இருதயங்கள் உடைந்துபோய், நாம் நொறுங்கிவிடுகிறோம். தேவனுக்கு ஒரு பரிபூரண சித்தம் இருப்பதை நாம் அறிவோம், எனவே நாம் அவருடைய பரிபூரண சித்தத் திட்டத்தில் இருக்கவே விரும்புகிறோம்.
என்னுடைய ஜீவியத்தில், மணவாட்டியின் ஒவ்வொரு அங்கத்தினரும், சபை அங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் என இருவருமே செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம், இயங்கு பொத்தானை அழுத்துவது என்றே நான் கூறுவதன் மூலம் நான் ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளேன். இது மாத்திரமே நீங்கள் கேட்க வேண்டிய மற்றும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படிய வேண்டிய நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
இது ஜனங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான தனிப்பட்ட சத்தம் என்பதால், ஊழியத்தில் மீண்டும் அவர்களுடைய பிரசங்க பீடத்தில் சகோதரன் பிரான்ஹாமுக்கு இடமளித்து, அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டியதாய் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.
இதுவே அவருடைய திட்டமும், பரிபூரண சித்தமுமாயிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கும் இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்காக என் வாழ்க்கையில் நான் அதிகமான விமர்சனங்களைப் பெற்றுள்ளேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, எபேசியர் 4-ன் ஐந்து வகையான ஊழியத்தை நான் நம்புகிறதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இது பொய் என்பதை நான் பலமுறை, பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன். நான் அவ்வாறு ஒருபோதும் கூறினதுமில்லை, அதை எப்போதுமே அவ்வாறு நம்பினதுமில்லை. அனேகர் என்னுடைய வார்த்தைகளை திரித்து, நான் ஒருபோதும் கூறியிராத அல்லது விசுவாசிக்காத காரியங்களை ஜனங்களுக்கு சொல்லுகிறார்கள், ஆனாலும் அது எதிர்பார்க்கப்பட வேண்டியதாய் உள்ளது.
வேத வார்த்தையின் சத்தியம் என்ற ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் இந்த செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கூறினால், அப்பொழுது தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பதே தேவனுடைய வார்த்தையின் வியாக்கியானமாய் இருக்கிறபடியால், அதையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் மாத்திரமே அந்த வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார்.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் "யார் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டால், நீங்கள் ஒவ்வொருவரும், "ஆம், அதுவே என் இருதயத்தினுடைய வாஞ்சை" என்று கூறுவீர்கள். ஆகவே, தேவனுடைய பரிபூரண சித்தம் என்ன என்று தீர்க்கதரிசி கூறினதையே நாம் பார்க்க வேண்டும்.
குறிப்பு: ஒலிநாடாவில் உள்ள செய்தி உங்களுடைய முற்றிலுமானதல்லவென்றால், நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையென்றால், இந்தக் கடிதத்தைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு விசுவாசி அல்ல, எனவே இது உங்களுக்கானதல்ல. தேவன் ஒலிநாடாவில் என்ன கூறினார் என்பதோடு மாத்திரமே என்னால் தரித்திருக்க முடியும்.
அவர் என்னக் கூறினார் என்பதே நமக்கு வேண்டும்; சபை என்னக் கூறினது என்பதல்ல, வேதபண்டிதர் ஜோன்ஸ் என்னக் கூறினார், யாரோ ஒருவர் என்னக் கூறினார் என்பதல்ல. கர்த்தர் உரைக்கிறதாவது என்னக் கூறினது, வார்த்தை என்னக் கூறினது என்பதே நமக்கு வேண்டும்.
நாம் அவருடைய சித்தத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் நம்மை கீழ்படியச் செய்ய வேண்டும். நாம் அதைக் கேள்வி கேட்கக்கூடாது. நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதற்கு ஒரு சுற்று வழியை கண்டறிய முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
அநேகர் சுற்றிச் சென்று வேறு வழியில் செல்ல விரும்புகிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், ஆனால் நீங்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல. தேவன் உங்களை ஏதாவது செய்ய அனுமதிப்பார், அதைச் செய்வதில் உங்களை ஆசீர்வதிக்கவும் கூட செய்வார், ஆனால் அது இன்னமும் அவருடைய பரிபூரண சித்தம் அல்ல.
தேவன் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க பூமிக்கு அவருடைய செய்தியாளனான ஏழாம் தூதனை அனுப்பினார். அது மனுஷகுமாரன் தம்மை மானிட சரீரத்தில் வெளிப்படுத்துவதாக இருந்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். இது அவருடைய மணவாட்டிக்காக பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட அதே தேவனுடைய சத்தமாய் இருக்கிறது.
தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசியினிடத்தில், "நீ ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய வழியில் ஒன்றுமே நிற்காது" என்று சொன்னார். அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவராய் அவர் இருந்தார். அவருடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. எத்தனை கோராக்கள் எழும்பினாலும், அல்லது எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல, அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் அழைத்ததோ வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பவராகவே இருந்தது. அதுவே தேவனுடைய திட்டமும், அவருடைய பரிபூரண சித்தமுமாய் இருக்கிறது.
ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் ஒரு அனுமதிக்கும் சித்தத்தை உடையவராய் இருக்கிறார்.
இப்பொழுது, தேவன் நல்லவராகவே இருக்கிறார்…அவர் தன்னுடைய வார்த்தையை அனுப்புகிறார். நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அதன்பின்னர் அவர் சபையில் ஐந்து வகையான உத்தியோகங்களை வைக்கிறார்: முதலாவது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள், சுவிசேஷர்கள். அவர்கள் சபையின் சீர்பொருந்துதலுக்காகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு, காலங்களினூடாக ஜனங்கள் தேவனுடைய பரிபூரண திட்டமான: அவருடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாததனால் மாத்திரமே இந்த ஊழியம் எழுப்பப்பட்டது. தேவனுடைய தீர்க்கதரிசி உரைத்த வார்த்தையை நாம் எளிமையாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கோ வேறு யாரும் அல்லது வேறு எந்த காரியமும் தேவையே இல்லை.
அப்படியானால், ஒலிநாடாக்களோடு தரித்திருங்கள், ஏனென்றால் அதுவே தேவனுடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது: என்கிற அவருடைய பரிபூரண திட்டத்திற்கு ஜனங்களை திரும்ப கொண்டு வருவது ஊழியத்தின் பணியாக உள்ளது. அப்படியானால் அந்த பரிபூரண சித்த திட்டத்தை அவர்களுக்கு முன்பாக எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க: இயங்கு பொத்தானை அழுத்துங்கள்.
நீங்கள் திரும்பி வந்து, நீங்கள் எங்கு துவங்கினீர்களோ, அல்லது நீங்கள் எங்கு விட்டீர்களோ அங்கிருந்து ஆரம்பித்து, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் எற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
மேய்ப்பர்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
தேவனுடைய தீர்க்கதரிசி கூட்டங்களுக்குச் சென்றபோது அவர் என்ன செய்தார்? வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும், மற்றும் அது போன்ற காரியங்களுக்குமாகவா? அவர் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துள்ளபடியினால், ஆடுகள் அதைக் கேட்கும் விதத்தில் அவர் ஒரு மறைமுகமான விதத்தில் காரியங்களைக் கூறுவார். இல்லாவிட்டால், அது தூண்டிலின் மீது இருந்த இரையாயிருந்தது. ஜனங்களை எழுச்சியுறச் செய்ய, அவர் பகுத்தறிதல் போன்ற அடையாளங்களை அவர்களுக்குக் காண்பித்து, அவர்களுடைய இருதயங்களின் இரகசியங்களை அறிந்துகொண்டார். ஆனால் அப்பொழுதும் மிக முக்கியமான காரியம் என்னவாக இருந்தது என்று அவர் கூறினார்:
முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் அனுப்பப்படுகிறது. அப்பொழுது, அது சென்றடைந்துவிட்டது. அவன் ஒரு செம்மறியாடாயிருந்தால், அவன் அதனோடு சரிப்படுத்திக்கொள்ளுகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் அந்த ஒலி நாடாவை வெளியே உதைத்துத் தள்ளுகிறான்.
நீங்கள் ஒரு செம்மறியாடா அல்லது நீங்கள் ஒரு வெள்ளாடா? தேவனுடைய சிறிய குழு அந்த வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளது. இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருந்ததுபோல, அவருடைய மூல திட்டத்திலும் இருக்கிறோம்.
அவருடைய வார்த்தையுடன் சரியாக தரித்திருங்கள், ஏனென்றால் அதுவே முடிவில் வார்த்தையாக, வார்த்தைக்கு வார்த்தையாக வெளிப்படப்போகிறது. "யாராகிலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால், அல்லது அதனோடு ஒன்றைக் கூட்டினாலுமே!" அது அந்த வார்த்தையாகவே, தரித்திருக்க வேண்டும்.
நான் அவருடைய வார்த்தையின்படி அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறேன் என்பதை, ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம், அறிந்துகொள்வதற்கு நான் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நான் அதற்கு என்னுடைய வியாக்கியானத்தையோ, அல்லது அதற்கு என்னுடைய புரிந்துகொள்ளுதலையோ சேர்த்துக்கொண்டிருக்கவில்லை, ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவதும், அவருடைய பரிபூரண சித்தமும் என்ன என்பதையே நான் என்னுடைய சொந்த செவிகளினால் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவன் தமது வார்த்தையைக் குறித்த தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? 65-0418E என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எங்களுடன் வந்து தியானிக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். இந்தச் செய்தியில் பல நுணுக்கங்கள் உள்ளன, நாம் கேட்டு முடிக்கும்போது, நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்