
அன்பான சிறு குட்டையின் லீலி புஷ்பங்களே,
நாம் சேற்று நீருக்கு மேலே உந்தித் தள்ளி, நம்முடைய இதழ்களை விரித்துள்ளோம். நம்முடைய சிறிய பூவிதழ்கள் வெளியேப் பரப்பப்பட்டு, பள்ளத்தாக்கின் லீலியை இப்பொழுது பிரதிபலிக்கின்றன. நாம் நம்முடைய ஜீவியங்களை தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் முழுமையாக அர்ப்பணித்துள்ளோம்.
நாம் கடைசி-காலத்தில் இருந்து கொண்டு, கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தசைநாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் வரையிலான ஒரு சில நிமிடங்களுக்காகவே நாம் நம்மை நிலையாக வைத்திருக்கிறோம். நாம் மேலே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
அந்த நாளும் வந்துவிட்டது. அவர் உண்மையாகவே தம்மோடு ஒன்றாயிருக்கும்படி தமக்கென்று தம்முடைய ஜனங்களை ஒன்று சேர்த்து அழைத்துக் கொண்டிருக்கிறார். இது இயேசு கிறிஸ்து நம்முடைய மாம்சத்தில் தம்முடைய ஆவியினால் ஜீவித்துக்கொண்டு, அவர் செய்த அதே காரியங்களை உலகத்திற்கு ஒரு அடையாளமாகச் செய்து கொண்டிருப்பதாகும்.
வேதாகமத்தில் மிகவும் உன்னதமான காரியம் நம்முடைய நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தூதனாலும், வேறெந்தகாரியத்தாலும் கூட, அதை செய்ய முடியாமல், ஆட்டுக்குட்டியானவரால் மாத்திரமே செய்ய முடிந்த ஒரு செயல். அவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து, அதைத் திறந்து, முத்திரைகளை உடைத்து, அவருடைய மணவாட்டியாகிய, நமக்கு அதை வெளிப்படுத்தும்படிக்கு, தம்முடைய ஏழாம் தூதனிடத்திற்கு, அதை பூமிக்கு அனுப்பினார்.
சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களோ; வார்த்தையை அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருப்பது, வார்த்தைகளால் விவரிப்பதற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. நாம் நம்முடைய சத்தங்களை உயர்த்தி, ஆரவாரமிட்டு அல்லேலுயா என்று சத்தமிடுகிறோமே! ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வந்ததைக் காட்டிலும் அபிஷேகமும், வல்லமையும், மகிமையும், வெளிப்படுத்துதலும், அவருடைய வார்த்தையின் வெளிப்பாடும் மகத்தானதாய் இருக்கிறது. வானத்திலும், பூமியிலும், பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் மற்றும் நாம் யாவருமே: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக, ஆமென்! ஆமென், ஆமென் என்று மகா சத்தமிடுகிறோம்!
ஒவ்வொரு சிருஷ்டியும், ஆதி காலத்திலிருந்து வந்த ஒவ்வொரு மனிதனும் இந்த நாள் வருவதற்கு காத்திருந்தான். தேவனே வந்து புஸ்தகத்தை எடுத்து, அதை உடைத்துத் திறந்து, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டிக்கு எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த, தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட தூதன் பூமிக்கு வரும் வரை அவரும் கூட காத்திருந்தார்.
பூமியில் உள்ள எந்த மனிதனும், ஆதிகாலம் முதற்கொண்டு, எப்போதும் அறிந்திராததை இப்பொழுது நாம் அறிந்துகொள்கிறோம். எல்லாமே வீழ்ச்சியுற்று இழக்கப்பட்டிருந்தன. எல்லாமே அவருடைய வார்த்தையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. மணவாட்டிக்கு தேவைப்படுகிற ஒவ்வொரு காரியமும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு தேவனுடைய ஒரு சிறு பண்டகசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
காலத்தின் திரைக்கு அப்பால் அவர் நம்மைக் காண்பித்திருக்கிறார், நாம் நம்மையே அவருடன் மறுபுறத்தில் காண்கிறோம். வார்த்தையைக் கேட்பதன் மூலம் மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.
நாம் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்திருக்கிறோம். எதுவுமே நம்மை அசைக்க முடியாது. எதுவுமே நம்மை பயமுறுத்த முடியாது. எதுவுமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. எந்த ஒரு வார்த்தையின் பேரிலும் நாம் நம்மை விட்டுக்கொடுக்க முடியாது. நாம் வார்த்தையாயிருக்கிறோம்.
நாம் அவருக்காக நம்முடைய கரங்களில் நம்முடைய மலர்ச் சென்டோடு காத்துக் கொண்டிருக்கிறோம். இதுவே கிட்டத்தட்ட அந்த நேரமாய் உள்ளது. பண்டைய கடிகாரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவருதையும், சக்கரங்களின் கீழிருந்து புழுதியைக் கிளப்புகிறதையும் நாம் கேட்கிறோம். குதிரைகள் இழுத்துகொண்டு வந்த பண்டைய வண்டியோ வந்து நிறுத்தப்படவுள்ளது.
அவர் வரும்போது நாம் இந்த பழைய உலகத்திலிருந்து அவருடைய கரங்களுக்குள் தாவிச் செல்வோம். அவர் நம்மை பிடித்து, "நான் உனக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்யப்போயிருந்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது, தேனே" என்று கூறுவார்.
அவருடைய வருகை மிக சமீபத்தில் உள்ளது. நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ஏழு முத்திரைகளை மீண்டும் ஒருமுறை நாம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புவதால் நாம் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் இதற்கு முன்பு நாம் அதை ஒருபோதும் கேட்காததுபோல் இருப்பதால், நாம் அதிக வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதை நாம் அறிவோம்.
இந்த செய்தி அப்பொழுது பதிவு செய்யப்பட்டபோது இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு இந்த செய்தியைக் கேட்டு ஜீவிப்பது மகத்தானதாய் உள்ளது. அவர் இப்பொழுது நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். என்ன சம்பவிக்கக் கூடும்?
ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, 63-0317E ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு என்ற செய்தியைக் கேட்டு மகிழ எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இது மணவாட்டி புசிக்கும்படியாக கர்த்தர் ஆயத்தம்பண்ணியிருக்கிற சேமிக்கப்பட்ட ஆகாரமாய் உள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
லேவியராகமம: 25:47-55
எரேமியா: 32:1-15
சகரியா: 3:8-9 / 4:10
ரோமர்: 8:22-23
எபேசியர்: 1:13-14 / 4:30
வெளிப்படுத்தினவிசேஷம்: 1:12-18 / 5வது அதிகாரம் / 10:1-7 / 11:18
பிரசங்க மொழிபெயர்ப்புகள்