அன்புள்ள கழுகுக்குஞ்சுகளே,
தேவனுடைய சத்தம் நாம் இதுவரை இல்லாத உயரத்திற்கு நம்மை அழைத்துச் சென்று, அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறது. அவர் நம்மை ஆகாயத்தில் உயர அழைத்துச் செல்லும்போது, அவருடைய வல்லமையான செட்டைகளுக்குள் நாம் நம்முடைய சிறிய அலகுகளைக் குத்திப் பிடித்துக்கொண்டோம். மேகமூட்டமான ஆகாயங்கள் அனைத்திற்கும் மேலாக நாம் சுற்றி வருகிறோம். நித்தியத்தையே நம்மால் காண முடிகிறது. இது நமக்கு ஒரு முழுமையான புதிய வெளிப்பாடாயுள்ளது. அவர் நம்மை எவ்வளவு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறாரோ, அது அவ்வளவு தெளிவாகிறது. நான் அதைக் காண்கிறேன்…நான் அதைக் காண்கிறேன் என்றே: நாம் சத்தமிடுகிறோம்.
அவர் இப்பொழுது தன்னுடைய வல்லமையான சிறகுகளில் கொண்டு சென்று, அவைகளுக்கு ஒரு பெரிய குலுக்கலைக் கொடுத்து, "என் குஞ்சுகளே பறந்து செல்லுங்கள், பறந்து செல்லுங்கள்" என்று நம்மிடம் சொன்னார். முதலில் நாம் மிகவும் பயமடைந்தோம். சத்துருவோ நம்முடைய சிந்தனைகளை பல சந்தேகங்களினால் நிரப்பிக்கொண்டிருந்தான். என்னால் முடியாது, என்னால் முடியாது. அப்பொழுது நாம், "உங்களால் முடியும், நீங்கள் என்னுடைய கழுகுக்குஞ்சுகள், உங்களுடைய சிறகுகளை அடிக்கத் தொடங்குங்கள்!!" என்று அவர் சத்தமிட்டு, நம்மிடம் இடிமுழக்கமிடுவதைக் கேட்டோம்.
பின்னர், நம்முடைய சிறிய செட்டைகள் திடீரென இயற்கையாகவே படபடக்க ஆரம்பிக்கின்றன. அவருடைய வார்த்தையை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, நாம் யார், என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு உறுதியளிக்கிறது, நம்முடைய செட்டைகள் வலுவடைகின்றன. பட, பட, பட...இயங்கு பொத்தானை அழுத்துங்கள், இயங்கு பொத்தானை அழுத்துங்கள், இயங்கு பொத்தானை அழுத்துங்கள்…அப்பொழுது திடீரென்று, நாம் பறந்துகொண்டிருக்கிறோம். நாம் கழுகுகள்.
ஒரு சிறிய பயம் நம்முடைய சிந்தனைகளில் நுழைய முயற்சிக்கும் போது, நாம் சுற்றிப் பார்த்துவிட்டு அவருடைய சத்தத்தைக் கேட்க ஆரம்பிக்கிறோம். நாம் விழ ஆரம்பித்தால் நம்மைப் பிடிப்பதற்காக நமக்குப் பக்கத்தில், அங்கே அவர் பறந்துகொண்டிருக்கிறார். நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை நாம் உணருகிறோம், தகப்பனாகிய கழுகானவர் அங்கே நம்மோடு உள்ளார். நாம் செய்யும் ஒவ்வொரு அசைவையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். நமக்கு எதுவுமே சம்பவிக்க அவர் அனுமதிக்கமாட்டார்.
நாம் இதுவரை ஒருபோதும் உணர்ந்திராததைப் போன்ற அப்பேர்ப்பட்ட சுதந்திரமும் உறுதியுமாயிற்றே. நீங்கள் என்னுடைய கழுகுக்குஞ்சுகள் என்று, அவர் நம்மிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் உங்களிடம் விட்டுச் சென்ற என் சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னதற்கு நீங்கள் கீழ்படிந்து சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒலிநாடாக்களில் அவர் நம்மிடம் எந்த காரியத்தையாவது கூறும்போது, நாம் அதைப் போய் செய்வோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் இது அவருடைய வார்த்தையாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அவர் அதற்குப் பின்னால் நிற்பார். இது வேதாகமத்தில் எழுதப்படாவிட்டாலும் கூட, அவர் எப்படியும், அதன் பின்னால் நிற்பார்.
இது அதற்கு புறம்பாக இருந்தால், அவர் அதை அவருடைய தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்துவார் என்பதை, நாம் அறிவோம். தேவனுடைய எல்லா இரகசியங்களும் அவருடைய தீர்க்கதரிசிக்கு, அவருக்கு மாத்திரமே தெரியப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் உணருகிறோம், எனவே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எந்த காரியமும், அது ஒலிநாடாவில் உள்ளது.
ஊக்கப்படுத்துதலைக் கொண்டு வருகிற வெளிப்படுத்துதலின் வல்லமையைக் குறித்துப் பேசுகிறோம். நாம் அதை நம்முடைய உச்ச குரல்களில் சத்தமிட விரும்புகிறோம். நான் ஒரு ஒலிநாடா கழுகு என்பதை, உலகம் அறிந்துகொள்ள நாம் விரும்புகிறோம்!
தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப்பாகிறது. அதாவது அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தையை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அப்பொழுது, நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், இது இன்னும் சிந்தையாகவே இருக்கின்றது.
இது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மகிமை. இப்போது நாம் அதை பேச விரும்புகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே என்னை முன் குறித்து, என்னைத் தெரிந்துகொண்டார். நான் மாம்சமாக்கப்பட்ட அவருடைய ஜீவ வார்த்தையாக இருக்கிறேன். அவர் என்னிடம் கேளுங்கள் அப்போது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்னார். தட்டுங்கள், அது திறக்கப்படும். நம்முடைய தேவை என்னவாயிருந்தாலும், நாம் அதைப் பேசுகிறோம்.
இது கழுகுக் காலம், நாம் அவருடைய கழுகுக்குஞ்சுகள். நாம் நம்முடைய ஜீவியத்தில் இதைவிட ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தி அடைந்தவர்களாகவோ இருந்ததேயில்லை. பயமேயில்லை. கவலைகளேயில்லை.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய வல்லமையான கழுகு நம்மிடத்தில் சத்தமிட்டு நான்காம் முத்திரையை 63-0321 வெளிப்படுத்துகிற போது, எங்களுடன் புதிய உயரத்திற்கு பறக்க வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நான்காவது முத்திரை 63-0321 என்ற பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வேதவசனங்கள்.
பரி. மத்தேயு 4
பரி. லூக்கா 24:49
பரி. யோவான் 6:63
அப்போஸ்தலர் 2:38
வெளிப்படுத்தின விசேஷம் 2:18-23, 6:7-8, 10:1-7, 12:13, 13:1-14, 16:12-16, 19:15-17
ஆதியாகமம் 1:1
சங்கீதம் 16:8-11
II சாமுவேல் 6:14
எரேமியா 32
யோவேல் 2:28
ஆமோஸ் 3:7
மல்கியா 4
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஊக்குவிக்கப்பட்ட மணவாட்டியே,
ஆயத்தமாகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் பெற்றிருந்ததைவிட வெளிப்படுத்துதல் மூலம் அதிக ஊக்கமளித்தலை நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் வார்த்தையில் நிறைந்திருப்பீர்கள். அது மிகவும் நன்றாகவும், தெளிவாகவும் இருக்கும்...மேலும் அவர் அதைப் பேசினபோதிருந்ததைக் காட்டிலும் கூடத் தெளிவாகவும் இருக்கும். அதைப் பெற்றுக்கொள்ள ஒரே ஒரு வழி மாத்திரமே உள்ளது, நீங்கள் அதற்கு இயங்கு பொத்தானை அழுத்தி கேட்க வேண்டும்!
ஒலிநாடாக்களைப் பெற்று, அவைகளை கவனமாக கூர்ந்து கேளுங்கள். ஏனெனில், நீங்கள் அதை ஒலிநாடாவில் கேட்கலாம், ஏனெனில் அவைகள் திரும்பி போட்டு கேட்கப்படும்போது, அவைகள் உண்மையாகவே நன்மையாகவும், மிகத் தெளிவாகவும் இருக்கின்றன. எனவே, நீங்கள் அதைத் தெளிவாகக் கேட்கலாம்.
தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்ன கூறினார்? வேதாகமத்தின் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட ஒருவர்; வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு முத்திரைகளையும், இடிமுழக்கங்களையும், மற்றும் அவருடைய எல்லா வார்த்தையும் அளிக்க அவர் தெரிந்துகொண்ட ஒருவர். அவருடைய மணவாட்டியை வெளியே அழைக்க அவர் தெரிந்துகொண்ட தூதன். இந்த கடைசி நாட்களில் அவருடைய சத்தமாக இருக்கும்படி அவர் தெரிந்து கொண்ட ஒருவர்.
நாம் செய்யும்படிக்கு அவர் என்ன கூறினார் என்பதை நாம் உறுதியாக புரிந்துகொள்ளும்படிக்கு மீண்டும் ஒருமுறை அந்த மேற்கோளை நாம் வாசிப்போமாக.
"நீங்கள் அதைப் பெறுவீர்கள்", எங்கே?
"நீங்கள் அதைத் தெளிவாகப் பெறுவீர்கள்", எங்கே?
இயங்கு பொத்தானை அழுத்தி அந்த ஒலிநாடாக்களை கேட்பது எவ்வளவு முக்கியமானது என்பதை குறித்து பேசுகிறோம். மகிமை!! இது என்னுடைய வார்த்தையல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு சொல்லுகிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, அதை அங்கே பெறுங்கள்... ஒலிநாடாக்களில். பிரசங்கிமார்களே, என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.
இந்தச் செய்தியை தாங்கள் விசுவாசிப்பதாகக் கூறும் எந்தவொரு நபரும் ஒலிநாடாக்களை இயக்கிக் கேட்பது மணவாட்டி செய்யக்கூடிய மகத்தான காரியம் அல்ல என்று எப்படி கூற முடியும்? ஒரு மேய்ப்பர் எவ்வாறு தனது ஊழியத்தை தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு மேலாக வைக்க முடியும்? அதை மேற்கோள் காட்டுவதற்காக மட்டும் அல்ல....நான் இப்போதும் கூட அதைச் செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் அவருடைய மந்தைக்கு அந்த சத்தத்தை இயக்குவதனால் அவர்கள் "அங்கே அதை தெளிவாகப் பெற்றுக்கொள்ள முடியும்."
உலகத்திலே மகத்தான ஊழியம் ஒலிநாடா ஊழியமே. இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதைக் காட்டிலும் மகத்தானது வேறொன்றுமில்லை. ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே, அவருடைய மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிற ஒரே ஒரு சத்தமாக இருக்கிறது.
மீண்டும் ஒருமுறை நான் தெளிவுபடுத்தட்டும். நான் எந்த ஊழியக்காரர் பிரசங்கிப்பதற்கும் எதிராக இருக்கவில்லை, ஒரு ஊழியக்காரனால் பிரசங்கிக்கவோ அல்லது போதிக்கவோ முடியாது என்று நான் நினைக்கிறதில்லை. ஆனால் எனக்கும் என்னுடைய ஊழியத்தையும் பொறுத்தவரையில், ஒலிப்பதிவு செய்யப்பட்டு காந்த ஒலிநாடாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தைக்கு செவி கொடுக்கும்படி உலகத்திற்கு சொல்லவே நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். இது தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்றும், இது, இது மாத்திரமே, உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது என்றும் நான் விசுவாசிக்கிறேன். இது உங்களுக்கு தேவைப்படுகிற ஒவ்வொரு காரியத்தையும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உட்பட அளிக்கும், ஏனென்றால் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
மணவாட்டிக்கு என்னுடைய வார்த்தை தேவைப்படுகிறதில்லை, நான் மற்ற எல்லா ஊழியக்காரர்களைப் போல வார்த்தையை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஊழியத்திற்கு செவி கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்றும், உங்களுடைய அழைப்பையும் நீங்கள் கூறி மேற்கோள் காட்டுகிறீர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தமே மிக முக்கியமான ஊழியம் என்பதை நான் ஜனங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். வேறெதுவுமே மகத்தானதில்லை. அவர்கள் வேறெந்த காரியத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
எந்த ஊழியக்காரர் மீதோ அல்லது எந்த ஊழியத்தின் மீதோ தவறான ஆவியை அல்லது தவறான மனப்பான்மையை ஜனங்கள் கொண்டிருக்க நான் இந்தக் காரியங்களை கூறிக்கொண்டிருக்கவில்லை, அப்படியல்லவே. நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் என்னுடைய சகோதரர்கள். தேவன் அவர்களுடைய ஜீவியங்களில் ஒரு அழைப்பை விடுத்துள்ளார். தேவனுடைய அபிஷேக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிராக நான் பேசத் துணிவேனா, ஆனால் நான் பேசும்படி கட்டாயப்படுத்தப்படுகிறேன் என்றும், அநேகர் தங்களுடைய ஊழியத்தின் பேரில் அதிக முக்கியத்துவத்தை அளித்து, மணவாட்டி கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமான ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தத்திற்கு முக்கியத்தும் அளிக்கவில்லை என்றே கூறுகிறேன்.
நான், "சகோதரன் பிரான்ஹாமை மீண்டும் உங்களுடைய பிரசங்க பீடத்திற்கு கொண்டு வாருங்கள்" என்றே கூறினேன், மேலும் சகோதரன் பிரான்ஹாம் அதை ஒருபோதும் ஒலிநாடாவில் கூறவேயில்லை என்பதைத் தங்களுடைய ஜனங்களுக்கு சொல்ல அநேக ஊழியக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து, வார்த்தையை எடுத்து அதை ஜனங்களுக்கு அளிக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும்; அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதற்கு அல்ல என்றும் சாக்குபோக்குகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மேய்ப்பர் அவர்களுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்கினால் அது தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள், அவர்கள் ஒலிநாடாக்களை தங்களுடைய சபைகளில் கேட்டுக்கொண்டிருந்தால், அது ஊழியம் அல்லவென்றும், அவர்கள் மணவாட்டியும் அல்லவென்றும் கூறுவதன் மூலம் ஜனங்களை விமர்சிக்கிறார்கள்.
எத்தனையோ சாக்குபோக்குகளை அவர்கள் பயன்படுத்தி ஜனங்களிடம் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தங்களுடைய ஜனங்களிடம், "நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான காரியம் ஒலிநாடாக்களே" என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் அப்படிக் கூறிவிட்டால், "அப்படியானால் ஒலிநாடாக்கள் மிக முக்கியமானதாக இருந்தால் நம்முடைய சபையில் நாம் ஏன் இயக்கக் கூடாது?"...என்று ஜனங்கள் கேட்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நாம் செவி கொடுக்கப்போவது இவருக்கே:
தேவன் தாமே ஒரு மனிதனில் வெளிப்பட்டு, அவருக்குப் பின்னாக யார் இருந்தது என்பதையும்; சாராள் என்ன செய்தாள் என்பதையும், கூடாரத்தில் நகைத்தாள் என்பதையும் சொன்னார். இந்த கடைசி நாட்களைக் குறித்து, மல்கியா, மற்றும் இந்த எல்லா வேத வாக்கியங்களும் முன்னுரைத்துள்ளன. எபிரெயர் 4- “வார்த்தை” திரும்ப வரும்பொழுது என்று கூறியுள்ளது. மல்கியா 4- அது ஒரு மனிதன் மூலம் திரும்ப வரும் என்று கூறியுள்ளது.
அந்த வார்த்தை ஒரு மனிதனால் திரும்பி வந்துள்ளது, ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய சத்தத்தை நாம் பெற்றுள்ளோம், நாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதையே கேட்கப்போகிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, காந்த ஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட மாம்சமாக்கப்பட்ட வார்த்தைக்கு நாம் செவிகொடுப்போம் என்று மீண்டும் ஒருமுறை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது: மூன்றாம் முத்திரை 63-0320 என்ற செய்தியின் பேரில் நமக்கு வெளிப்பாட்டை அளிக்கிறது.
மணவாட்டியே, நாம் என்னே ஒரு நேரத்தை உடையவர்களாக இருப்போம். என்னே சந்தோஷம் நம்முடைய இருதயங்களை நிரப்பும். தேவன் தாமே சாத்தானிடத்தில்: “அவர்களை விட்டுவிடு. அவர்களில் ஒருவரை நீ பிடித்துவிடுவாயானால், என்னுடைய சிறு மந்தை என்னுடைய எண்ணையினாலும் சுத்த வார்த்தையின் திராட்சை ரசத்தாலும் நிரப்பப்பட்டுள்ளது, எனவே 'மரியாளே வாழ்க' என்பதற்கும், உன்னுடைய கோட்பாடுகள் சிலவற்றை கூறுவதற்கும் அவர்களை நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம். உன்னுடைய கரங்களை அவர்களிடத்திலிருந்து விலக்கி வை. அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர், ஏனெனில் அவர்கள் என்னுடைய எண்ணெயால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் என் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறார்கள். ‘நான் அவர்களை மறுபடியும் உயிரோடெழுப்புவேன்.’ அதை சேதப்படுத்தாதே! அவர்களை குழப்பமுறச் செய்ய முயற்சிக்காதே...அவர்களை விட்டு அகன்று நில்" என்று சொன்னதை நாம் கேட்கிறபடியால், என்னே சமாதானம் நம்முடைய ஆத்மாக்களை ஆறுதல் படுத்தும்.
நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நம்மிடம் வார்த்தை இருக்கிறது. நாம் வார்த்தையாயிருக்கிறோம். நாம் வேறெதற்காகவும் நிறுத்துவதில்லை. நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். சாத்தானே, அப்பாலே போ, ஒவ்வொரு காரியமும் எங்களுக்கு சொந்தமானதாய் இருக்கிறது. தேவன் அவண்ணமாய் கூறினார். அது எழுதப்பட்டிருக்கிறதே!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள் வேதவசனங்கள்
பரி. மத்தேயு 25:3-4
பரி. யோவான் 1:1, 1:14, 14:12, 17:17
அப்போஸ்தலர் 2வது அதிகாரம்
I தீமோத்தேயு 3:16
எபிரெயர் 4:12, 13:8
I யோவான் 5:7
லேவியராகமம் 8:12
எரேமியா 32வது அதிகாரம்
யோவேல் 2:28
சகரியா 4:12
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே,
1933 ஆம் ஆண்டு ஓஹையோ நதியில் அக்கினி ஸ்தம்பம் தோன்றிய அந்த நாளிலிருந்தே, மணவாட்டி இந்தச் செய்தியைப் பற்றியோ அல்லது இதனுடைய செய்தியாளரைப் பற்றியோ சந்தேகித்திருக்கவில்லை. தேவன் தம்முடைய மணவாட்டியை அழைக்க அவர் பூமிக்கு அனுப்பின அவருடைய வல்லமையான 7-ம் தூதனாகிய செய்தியாளரே வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
அந்த நாளிலிருந்தே, தேவன் தம்முடைய வருகைக்காகத் தம்முடைய மணவாட்டியை ஒன்றுசேர்த்து வருகிறார். நாம் அத்தகைய மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் இருக்கிறோம்; ஏனென்றால் அது எந்த நாளிலும் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் நம்முடைய விசுவாசத்தைக் உருவாக்கிக்கொண்டு, நாம் அவருடைய உண்மையுள்ள மணவாட்டி என்பதை, நமக்கு சொல்லிக்கொண்டும், நமக்கு உறுதியளித்துக்கொண்டும் வருகிறார். நாம் அவருடைய சேமிக்கப்பட்ட ஆகாரத்தோடு தரித்திருப்பதன் மூலம், நம்முடைய தேவை என்னவாக இருந்தாலும் அங்கே, அது ஒலிநாடாக்களில் உள்ளது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
அதை நாம் எப்படி உறுதியாக அறிவோம்? தேவன் தம்முடையத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் அதை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வார்த்தை கூறுகிறது. தேவன் எந்த காரியத்தையாவது வெளிப்படுத்தப் போவதாக அல்லது எந்த காரியத்தையாவது செய்யப்போவதாக இருந்தாலும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை நமக்கு அளிக்கப் போவதாக இருந்தாலும், அவர் அதை நம்முடைய தீர்க்கதரிசி மூலமாக, அவருடைய தீர்க்கதரிசி மூலமாக மாத்திரமே இடிமுழக்கமிடப்போகிறார் என்பதை நாம் இதனால் அறிந்திருக்கிறோம்.
யோசனையின் நாட்கள் முடிவுற்றன. மணவாட்டி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளாள். தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் ஒலிநாடாக்களில் பேசுவதைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமேயில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவனாலே ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தைகளாய் மாத்திரமே உள்ளன.
வேளையானது தாமதமாகிவிட்டதையும், நம்மைச் சுற்றிலும் நம்முடைய சத்துருவின் துர்நாற்றத்தின் வாடை வீசும் அழுத்தத்தையும் நம்மால் உணர முடிகிறது. போர்கள் அணிவகுத்து நிற்கின்றன, சாத்தான் எல்லா முனைகளிலும் தாக்கிக் கொண்டிருக்கிறான், ஆனாலும் நாம் ஆவிக்குரிய ஆகாரத்தை பெற்றுள்ளதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, நாம் இரவும் பகலும் எஜமானுடைய மேஜையண்டையிலே அமர்ந்துகொண்டு அந்த மறைவான மன்னாவை விருந்துண்கிறோம். அவர் நம்மிடத்தில், "எல்லாம் நன்றாக இருக்கிறது என் இனிய இருதயமே. நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று நான் உன்னிடத்தில் சொன்னேன். தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிரு. அந்த பிசாசுகளை துரத்து. நான் உனக்கு என்னுடைய அணுகுண்டை, என்னுடைய வார்த்தையை கொடுத்திருக்கிறேன் அதை பயன்படுத்து. நான் அதை நினைத்தேன், அதன் பின்னர் அது எழுதப்பட்டு, இப்பொழுது, உன்னுடைய நாளில், கர்த்தர் உரைக்கிறதாவது, நீ என்னுடைய மணவாட்டி, நீ மாமிசமாக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறாய் என்று, நான் உனக்கு சொல்வதை நீ கேட்கும்படியாக அதை நான் உரைத்திருக்கிறேன்" என்று சொல்லும்போது அனுதினமும் நமக்கு அவர் தொடர்ந்து அதிக அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தேவன் மானிட உதடுகளினூடாக உரைத்து, அவருடைய வார்த்தையை நமக்கு கொடுத்திருக்கிறார்; நாம் பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. இது நம்முடைய வார்த்தைகளோ, நம்முடைய சிந்தனைகளோ, நம்முடைய கற்பனையோ அல்ல, அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. நம்முடைய விசுவாசம் அவருடைய வார்த்தையில் இருக்கிறது, அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போக முடியாதே!
இப்போது, இந்த முத்திரைகள் திறப்பதை நாம் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவர் மீண்டும் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதையும், நம்முடைய பெயர்கள் அங்கே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடியும். நம்மால் நம்மை அடக்கிக்கொள்ள முடியவில்லை...ஆம், அங்கே என்னுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது. அவர் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.
உங்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று தேவனுடைய சத்தம் உங்களிடத்தில்சொல்லுகிறபடியால், இரண்டாம் முத்திரை 63-0319 என்ற செய்தியைக் கேட்க, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 4:8 / 11:25-26 / 24:6
பரி. மாற்கு 16:16
பரி. யோவான் 14:12
2 தெசலோனிக்கேயர் 2:3
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 2:6 / 6:3-4 / 17வது அதிகாரம் / 19:11-16
யோவேல் 2:25
ஆமோஸ் 3:6-7
தொடர்புடைய சேவைகள்
அன்பானவர்களே...நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப்போகிறேன்,
தேவன், மகத்தான சிருஷ்டிகர், ஆல்பாவும் ஒமேகாவும், பள்ளத்தாக்கின் லீலியும், சாரோனின் ரோஜாவும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியுமானவர், அக்கினி ஸ்தம்பமான, தேவன் தாமே பூமிக்கு வந்து மனித உதடுகளின் வழியாக நம்மிடம் பேசி, மகிமை!, அதைக் காந்த ஒலிநாடாவில் பதிவுசெய்து வைத்தார், அதனால் அவர் உங்களை…"உங்களை" அவருடைய மணவாட்டி என்று அழைப்பதை நீங்கள் கேட்கலாம்.
என் நண்பர்களே அதை கற்பனை செய்து பாருங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உங்கள் கண்களைப் பார்த்து: “நீங்கள் என்னுடைய மணவாட்டி. நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களுக்காக இவ்வளவு காலம் காத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள். நீங்கள் என் மாம்சத்தின் மாம்சமும், என் எலும்பின் எலும்புமாயிருக்கிறீர்கள். நான் பூமியை அல்லது நட்சத்திரங்களை உண்டாக்குவதற்கு முன்பே நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நாம் நித்தியத்தை ஒன்றாகக் கழிப்போம். இப்பொழுது, நான் உங்களுக்காக வருகிறேன்."
அது மாத்திரமே நம் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை கொடுக்க வேண்டும். பிசாசு உங்கள் மீது எதை எறிய முடியும், உங்களிடத்தில் எதைச் சொல்ல முடியும், உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதை உங்கள் மீது வைக்க முடியும்? ஒன்றுமில்லையே, நீங்கள் கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருக்கிறீர்களே! நீங்கள் அவருடைய வார்த்தையால் மாம்சமாக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள், நீங்கள் திருமதி. இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறீர்கள்.
எவராலும், எந்த மொழியிலும், நமக்கு என்ன அர்த்தம் என்பதை எப்படி எழுதவும் வெளிப்படுத்தவும் முடியும்? உங்களால் வெறுமனே அதைச் செய்ய முடியாது.
நீங்கள் சரியான வெளிப்படுத்துதலைப் பெற்று இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்டாலொழிய இந்த வார்த்தைகளை கேட்கும்படியான கனத்தையும் சிலாக்கியத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் இந்த உலகத்தில் எங்குமே இல்லை.
காலத்தின் தொடக்கத்திலிருந்தே உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மிக மகத்தான நிகழ்வுகள், இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, நாமும் அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறோம். அவர் இந்த நாளுக்காக, இந்த மணிநேரத்திற்காக, இந்த ஜனத்திற்காகக் காத்திருந்தார்; உங்களுக்காக, அவருடைய மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவே.
ஏழு முத்திரைகளின் இரகசியத்தின் வெளிப்பாடு, இடிமுழக்கங்களால் வெளிப்படுத்தப்பட்டு, நம்முடைய பரிபூரணத்திற்காக, முழுமையாக திரும்ப அளிக்கப்பட்ட அவருடைய ஆதாம், அவருடைய வருகை, இவை அனைத்தும் இப்போது வெளிப்படுத்தப்பட்டு, அவருடைய மணவாட்டியான உங்களுக்குள் இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கிறதே!
மோசேயின் நாளில் இல்லை. நோவாவின் நாளில் இல்லை. இயேசுவின் நாளில் இல்லை, யோவான் அல்லது பவுலின் நாளிலும் கூட இல்லை; அது இப்போது, உங்களுடன் சம்பவித்துக் கொண்டிருக்கிறது.
நாம் அதைத் தவறவிட விரும்பவில்லை. அவருடைய வருகைக்காக நாம் ஆயத்தமாயிருக்க விரும்புகிறோம். அதைச் செய்ய, நம்முடைய பதில்களுக்காக நாம் வார்த்தைக்கு செல்லும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம். என்னுடைய யோசனையோ, அல்லது ஏதோ ஒரு மனிதனுடைய யோசனையோ அல்லது சிந்தனைகளோ அல்ல, ஆனால் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தை என்ன கூறுகிறது என்பதேயாகும்.
மணவாட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்" என்று சொல்லி ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். எனவே மணவாட்டியை ஒன்று சேர்த்து இணைக்கப்போவது என்ன என்பதைப் பார்க்க நாம் தேவனுடைய வார்த்தையில் நோக்கிப் பார்க்க வேண்டும்.
பின்னர் வேதத்தில் எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் வரப்போவதாயுள்ளன. அது சரி. ஆகவே எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று, நான் நம்புகிறேன்.
அது அங்கே சரியாக வார்த்தையில் உள்ளது. ஏழு இடிமுழக்கங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்க்கும்படியாக நம்முடைய நாளில் வெளிப்படுத்தப்படும்.
அதன்பின்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடுத்த கேள்வி: இடிமுழக்கங்கள் என்றால் என்ன?
“இடிமுழக்கம்” உண்டானபொழுது. ஒரு பலத்த இடிமுழக்கம் என்பது தேவனுடைய சத்தம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறே கூறுகின்றது, பாருங்கள், “ஒரு இடிமுழக்கம்.” அது ஒரு இடிமுழக்கமாயிருந்தது என்று அவர்கள் நினைத்தனர், ஆனால் அது தேவனாயிருந்தது. அது அவருக்கு வெளிப்பட்டதனால், அவர் அதைப் புரிந்து கொண்டார். புரிகிறதா? அது ஒரு இடிமுழக்கமாயிருந்து.
எனவே இடிமுழக்கங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை மணவாட்டிக்கு (நமக்குக்) கொடுக்கும்படி அவர்களை ஒன்று சேர்த்து கொண்டுவரும்படியான தேவனுடைய சத்தமாய் இருக்கின்றன. அங்குதான் நம்முடைய பதிலே உள்ளது.
மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது யார்? வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
இப்பொழுது, தேவனுடைய கிருபையால், நான் உங்களுடைய சகோதரனாக இருக்கிறேன், ஆனால் கர்த்தருடைய தூதன் கீழே இறங்குகிறபோது, அப்பொழுது, அது உங்களுக்கு தேவனுடைய சத்தமாக மாறுகிறது... நானாகவே எதையும் கூற முடியாது, ஆனால் அவர் எனக்குக் என்ன காண்பிக்கிறாரோ, அதையே நான் கூறுகிறேன். நீங்கள் அதை விசுவாசித்து, என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
நாம் ஒன்று கூடி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள, அவருடைய மணவாட்டிக்கான அவருடைய இடிமுழக்கத்தை கேட்கும்போது, இதை விசுவாசித்து, இந்த ஞாயிற்றுக்கிழமை என்ன சம்பவிக்கிறது என்றும், என்ன நடக்கிறது என்பதையும் கவனியுங்கள்.
"இப்பொழுது நாம் உன்னதங்களில் வீற்றிருப்பதை” குறித்துப் பேசுகிறோமே? அது எவ்விதம் இருக்கும்! எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் முன்பு, பூமியில் நாம் இருந்துகொண்டு, நாம் இப்பொழுது உள்ள நிலைமையில் இருந்துகொண்டே இந்தவிதமாக நம்மால் உணர முடிந்தால்; சுவர்களில் சாய்ந்து கொண்டு, மழையில் நின்று, இதைக் கேட்டு, இவ்வளவாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமானால்; அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணும்போது அது என்னவாயிருக்கும்! ஓ, என்னே! ஓ, அது ஒரு மகிமையான நேரமாயிருக்கும்.
இந்த மகிமையான நேரத்தில் தவறவிட்டுவிடாதீர்கள். ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, 63-0318 முதலாம் முத்திரை என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது எங்களோடு சேர்ந்துகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 10:1 / 11:1-14 / 24:6 / 28:19
பரி. யோவான் 12:23-28
அப்போஸ்தலர் 2:38
2 தெசலோனிக்கேயர் 2:3-12
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2 / 10:1-7 / 12:7-9 / 13:16 / 19:11-16
மல்கியா 3வது மற்றும் 4வது அதிகாரங்கள்
தானியேல் 8:23-25 / 11:21 / 9:25-27
பிரசங்க மொழிபெயர்ப்புகள்
தொடர்புடைய சேவைகள்
அன்பான சிறு குட்டையின் லீலி புஷ்பங்களே,
நாம் சேற்று நீருக்கு மேலே உந்தித் தள்ளி, நம்முடைய இதழ்களை விரித்துள்ளோம். நம்முடைய சிறிய பூவிதழ்கள் வெளியேப் பரப்பப்பட்டு, பள்ளத்தாக்கின் லீலியை இப்பொழுது பிரதிபலிக்கின்றன. நாம் நம்முடைய ஜீவியங்களை தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் முழுமையாக அர்ப்பணித்துள்ளோம்.
நாம் கடைசி-காலத்தில் இருந்து கொண்டு, கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தசைநாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் வரையிலான ஒரு சில நிமிடங்களுக்காகவே நாம் நம்மை நிலையாக வைத்திருக்கிறோம். நாம் மேலே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
அந்த நாளும் வந்துவிட்டது. அவர் உண்மையாகவே தம்மோடு ஒன்றாயிருக்கும்படி தமக்கென்று தம்முடைய ஜனங்களை ஒன்று சேர்த்து அழைத்துக் கொண்டிருக்கிறார். இது இயேசு கிறிஸ்து நம்முடைய மாம்சத்தில் தம்முடைய ஆவியினால் ஜீவித்துக்கொண்டு, அவர் செய்த அதே காரியங்களை உலகத்திற்கு ஒரு அடையாளமாகச் செய்து கொண்டிருப்பதாகும்.
வேதாகமத்தில் மிகவும் உன்னதமான காரியம் நம்முடைய நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தூதனாலும், வேறெந்தகாரியத்தாலும் கூட, அதை செய்ய முடியாமல், ஆட்டுக்குட்டியானவரால் மாத்திரமே செய்ய முடிந்த ஒரு செயல். அவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து, அதைத் திறந்து, முத்திரைகளை உடைத்து, அவருடைய மணவாட்டியாகிய, நமக்கு அதை வெளிப்படுத்தும்படிக்கு, தம்முடைய ஏழாம் தூதனிடத்திற்கு, அதை பூமிக்கு அனுப்பினார்.
சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களோ; வார்த்தையை அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருப்பது, வார்த்தைகளால் விவரிப்பதற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. நாம் நம்முடைய சத்தங்களை உயர்த்தி, ஆரவாரமிட்டு அல்லேலுயா என்று சத்தமிடுகிறோமே! ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வந்ததைக் காட்டிலும் அபிஷேகமும், வல்லமையும், மகிமையும், வெளிப்படுத்துதலும், அவருடைய வார்த்தையின் வெளிப்பாடும் மகத்தானதாய் இருக்கிறது. வானத்திலும், பூமியிலும், பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் மற்றும் நாம் யாவருமே: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக, ஆமென்! ஆமென், ஆமென் என்று மகா சத்தமிடுகிறோம்!
ஒவ்வொரு சிருஷ்டியும், ஆதி காலத்திலிருந்து வந்த ஒவ்வொரு மனிதனும் இந்த நாள் வருவதற்கு காத்திருந்தான். தேவனே வந்து புஸ்தகத்தை எடுத்து, அதை உடைத்துத் திறந்து, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டிக்கு எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த, தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட தூதன் பூமிக்கு வரும் வரை அவரும் கூட காத்திருந்தார்.
பூமியில் உள்ள எந்த மனிதனும், ஆதிகாலம் முதற்கொண்டு, எப்போதும் அறிந்திராததை இப்பொழுது நாம் அறிந்துகொள்கிறோம். எல்லாமே வீழ்ச்சியுற்று இழக்கப்பட்டிருந்தன. எல்லாமே அவருடைய வார்த்தையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. மணவாட்டிக்கு தேவைப்படுகிற ஒவ்வொரு காரியமும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு தேவனுடைய ஒரு சிறு பண்டகசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
காலத்தின் திரைக்கு அப்பால் அவர் நம்மைக் காண்பித்திருக்கிறார், நாம் நம்மையே அவருடன் மறுபுறத்தில் காண்கிறோம். வார்த்தையைக் கேட்பதன் மூலம் மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.
நாம் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்திருக்கிறோம். எதுவுமே நம்மை அசைக்க முடியாது. எதுவுமே நம்மை பயமுறுத்த முடியாது. எதுவுமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. எந்த ஒரு வார்த்தையின் பேரிலும் நாம் நம்மை விட்டுக்கொடுக்க முடியாது. நாம் வார்த்தையாயிருக்கிறோம்.
நாம் அவருக்காக நம்முடைய கரங்களில் நம்முடைய மலர்ச் சென்டோடு காத்துக் கொண்டிருக்கிறோம். இதுவே கிட்டத்தட்ட அந்த நேரமாய் உள்ளது. பண்டைய கடிகாரம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவருதையும், சக்கரங்களின் கீழிருந்து புழுதியைக் கிளப்புகிறதையும் நாம் கேட்கிறோம். குதிரைகள் இழுத்துகொண்டு வந்த பண்டைய வண்டியோ வந்து நிறுத்தப்படவுள்ளது.
அவர் வரும்போது நாம் இந்த பழைய உலகத்திலிருந்து அவருடைய கரங்களுக்குள் தாவிச் செல்வோம். அவர் நம்மை பிடித்து, "நான் உனக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்யப்போயிருந்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது, தேனே" என்று கூறுவார்.
அவருடைய வருகை மிக சமீபத்தில் உள்ளது. நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ஏழு முத்திரைகளை மீண்டும் ஒருமுறை நாம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புவதால் நாம் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் இதற்கு முன்பு நாம் அதை ஒருபோதும் கேட்காததுபோல் இருப்பதால், நாம் அதிக வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதை நாம் அறிவோம்.
இந்த செய்தி அப்பொழுது பதிவு செய்யப்பட்டபோது இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு இந்த செய்தியைக் கேட்டு ஜீவிப்பது மகத்தானதாய் உள்ளது. அவர் இப்பொழுது நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். என்ன சம்பவிக்கக் கூடும்?
ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, 63-0317E ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு என்ற செய்தியைக் கேட்டு மகிழ எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இது மணவாட்டி புசிக்கும்படியாக கர்த்தர் ஆயத்தம்பண்ணியிருக்கிற சேமிக்கப்பட்ட ஆகாரமாய் உள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
லேவியராகமம: 25:47-55
எரேமியா: 32:1-15
சகரியா: 3:8-9 / 4:10
ரோமர்: 8:22-23
எபேசியர்: 1:13-14 / 4:30
வெளிப்படுத்தினவிசேஷம்: 1:12-18 / 5வது அதிகாரம் / 10:1-7 / 11:18