அன்பான தெரிந்துகொள்ளப்பட்டவர்களே,
நம்முடைய கர்த்தராகிய இயேசு நம்மை மிகவும் நேசிக்கிறார், அதாவது நம்முடைய நாளில் நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவது அவருக்கு பிரியமாயிருந்தது. ஒருவர் பேரில் அவருக்கு 100% நம்பிக்கை இருந்தது. அந்த ஒருவருக்குள் அவர் வந்து ஜீவித்து, தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க அந்த மானிட சரீரத்தினூடாக அவரால் தம்மை வெளிப்படுத்த முடிந்தது.
அவருடைய தீர்க்கதரிசி நம்மை மிகவும் நேசித்ததால், எந்த புதிய செய்தியும் அவருடைய சிறிய கூடாரத்திலிருந்தே வரும் என்று அவர் நமக்கும், தேவனுக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தார். அவர் மறைந்துபோனபோதும் கூட தேவனுடைய மணவாட்டி ஆவிக்குரிய ஆகாரத்தை விருந்துண்ணும்படியாக அவர் அதைப் பதிவுசெய்து, சேமித்து வைத்தார்.
தேவன் அவருடைய தூதனான தீர்க்கதரிசி அவருடைய வார்த்தையை நமக்கு காத்துக் கொள்ளும்படியாக அவருடைய தீர்க்கதரிசிக்கு அவ்வளவாய் உதவி செய்தார்.
தேவன் தம்முடைய பலமுள்ள தூதனின் மூலமாக உரைத்து, முழுமையாக வெளிப்படுத்தி, நமக்கு முழு வேதாகமத்தையும் வியாக்கியானித்தார், எழுதப்பட்டிராமல் கூட இருந்த, அந்த கூர்நுனி கோபுரம் போன்ற கற்பாறையின் உச்சியை அவர் திறந்து, அதை தம்முடைய தூதனுக்கு வெளிப்படுத்தினார், எனவே அவரால் அவருடைய மணவாட்டியாகிய, நமக்கு அவருடைய மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் கூற முடிந்தது.சகோதரன் ராபர்சனுக்கு கூட தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார், அங்கு அவர் அக்கினி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியைத் தூக்கி மேற்கு நோக்கி கொண்டு சென்று, பின்னர் அவரைத் திரும்பக் கொண்டு வந்து, மாற்றப்பட்டிருந்த அவரை மேசையின் தலைப் பகுதியில் அமர வைத்ததையும் கண்டார்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவரிடம் பேசி, “இவர் என் ஊழியக்காரன். மோசே செய்தது போல ஜனங்களை வழி நடத்துவதற்கு, இந்த காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும்படிக்கு நான் அவரை அழைத்திருக்கிறேன். பேசி சிருஷ்டிக்கும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னார்.
மோசேயின் அழைப்பு என்னவாயிருந்தது? அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது? வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஜனங்களை வழிநடத்தும்படிக்கு தேவன் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால் தேவன் மோசேக்கு அளித்திருந்த ஆணையில் தலையிட முடிவு செய்த மனிதர் அங்கு எழுந்து, "நீ மிஞ்சிப் போகிறாய். இந்தக் கூட்டத்தில் நீ ஒருவன் மாத்திரமே இன்னார் இன்னார் என்று கூறி உன்னை பெரிதாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கிறாய்" என்றனர்.
தேவன் மோசேயினிடத்தில், “அவர்கள் மத்தியிலிருந்து உன்னைப் பிரித்துக் கொள். நான் அந்த முழு கூட்டத்தையும் கொன்று போட்டு, ஒரு புதிய சந்ததியை உருவாக்கி உன்னோடு அனுப்புவேன்" என்று சொல்லுமளவிற்கு இந்த செயல் அவரை மிகவும் கோபமூட்டினது. மோசே தேவனுடைய சந்நிதியில் விழுந்து, அப்படியானால் அவர் அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கூறினான்.
தேவன் நம்முடைய நாளில் ஜனங்களை அதம்பண்ணப்போகிறார் என்றால், மோசேயைப் போல ஜனங்களுக்கு யார் நிற்பார்? அவ்வாறு நிற்கக் கூடிய, அல்லது நிற்க முடிந்த ஒரு நபரை, தேவன் மோசையை ஏற்றுக்கொண்டதுபோல ஏற்றுக்கொள்ளக்கூடிய யாரையாவது நாம் எங்கே கண்டறிவோம்? தேவனுடைய கோபத்தையே தடை செய்து நிறுத்துமளவுக்கு இந்த பூமியில் அவருடைய வல்லமையான ஏழாம் தூதனான, அந்த ஒரு மனிதனுடைய ஜீவியம் மாத்திரமே அவருக்கு அதிக விசேஷித்ததாயிருக்கிறது.
தேவன் எப்பொழுதுமே ஒரு திட்டத்தை உடையவராயிருக்கிறார். அவருடைய மணவாட்டி அந்த திட்டத்தை அடையாளங் கண்டுகொண்டு, வார்த்தைக்கு வார்த்தை அதனோடு தரித்திருப்பாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சென்றடையும்படிக்கு அவர்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருக்கிற அந்த சத்தத்தோடு அவர்கள் தரித்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, நோவா புறா மற்றும் காகத்துடன் பேழையில் செய்தது போல், வேறு திசையில் செல்ல நிறைய இடம் கொடுத்தார். ஆனால் எப்போதும் பேழைக்குத் திரும்பும் புறாவைப் போலவே, மணவாட்டி எப்போதும் செய்திக்கும், அந்த சத்தத்திற்கும், ஒலிநாடாக்களுக்கும் திரும்புவாள்.
நம்முடைய நாளின் தீர்க்கதரிசி யாராயிருந்தார்? காலங்களினூடாக தம்முடைய ஜனங்களை வழிநடத்த இதற்கு முன்பு தேவன் அழைத்து அனுப்பியிருந்த வல்லமையான தீர்க்கதரிசிகள் இருந்து வந்திருக்கின்றனர்: ஆபிரகாம், மோசே, எலியா, எலிசா, ஆனால் அவர்களில் எவருமே நம்முடைய நாளின் வல்லமையான தீர்க்கதரிசியைப் போன்று இருந்ததில்லை. இவர் அவர்கள் எல்லோரைக் காட்டிலும் ஒரு மிக உயரிய பதவிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேவனுடைய எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்றை பேசி உருவாக்கும்படிக்கு தேவன் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். மூன்றாம் இழுப்பை வெளிப்படுத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார்.
நாம் என்னே ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஜனங்களாய், தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாய் இருக்கிறோம். நாம் எப்படி தாழ்ந்தவராக இருக்க முடியும்? நாம் எப்படி சோகமாக இருக்க முடியும்? சாத்தான் நம்மை மனத் தளர்வடையச் செய்ய முயற்சிக்கிறான், ஆனால் நமக்கோ ஜெயம் உண்டு, நாமோ பாதுகாப்பாக பேழையில், முத்திரையிடப்பட்டுள்ளோம். கதவுகள் மூடப்பட்டுள்ளன. எதுவுமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. நாமே அவருடைய திரும்பளிக்கப்பட்ட ஆதாம்.
அவர் நமக்காக, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்காக வருகிறார். நம்மில் சிலர் மரணத்தை ருசி பார்க்காமல், ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். மகிமை!!
உங்கள் ஒவ்வொருவரையும் போலவே, ஒவ்வொரு நாளும், அவருடைய வார்த்தையிலும், அவர் எனக்குக் கொடுத்துள்ள என் வெளிப்பாட்டிலும், மேலும் மேலும் பலமடைடைந்து, நானும் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். நான் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அவர் இன்று வரவில்லையென்றால், நாளை வரலாம், ஆனால் அவர் மிக விரைவில் வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் எனக்காகவும் உங்களுக்காகவும் வருகிறார்.
ஒரு சிறு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுருக்கிற ஆகாரமான இடைவெளியில் நிற்றல் 63-0623M என்ற செய்தியை நாங்கள் உற்று நோக்கி கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள். நாம் எண் 27-ம் பத்தியிலிருந்து செய்தியைத் தொடங்குவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
எண்ணாகமம 16:3-4
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,
நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்! என்னே ஒரு மகத்தான நேரம்! இரகசியங்கள், அந்தரங்கங்கள் யாவுமே அனுதினமும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் கடந்து வந்துள்ளதைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தையும் மற்றும் முன்னால் என்ன இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்.
என்ன சம்பவிக்கப்போகிறது என்பது வசனத்திற்கு வசனம் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் யார், யார் அங்கே இருப்பார்கள், நாமும் கூட என்ன செய்வோம் என்று அவர் தெளிவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். 1,44,000 யூதர்கள், உபத்திரவத்தால் சுத்திகரிக்கப்பட்ட சபை, திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் நகரத்திற்குள் தங்களுடைய கனத்தையும் மகிமையையும் கொண்டு வருவார்கள்.
ஆனால் அப்பொழுது அது நீங்களாக இருக்காது என்று அவர் நம்மிடம் சொல்கிறார்...ஓ இல்லை, நீ என்னுடைய மணவாட்டி, நீ அந்த நகரத்தில் என்னுடன் இருக்கிறாய். நீ திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்யப்போவதில்லை, நீ என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறாய். உன்னுடைய இராஜாவாகிய, என்னோடு நீ என்னுடைய இராணியாயிருக்கிறாய். உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் தெரிந்துகொண்ட ஐந்தின் ஒரு பாகத்தில் உள்ள நூறில் ஒரு பாகமாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த இடத்தை உங்களுக்காகவே…நீங்கள் அதை விரும்புகிற விதத்தில் நான் ஆயத்தம் செய்தேன்.
அவர் வாரந்தோறும், நாளுக்கு நாள், ஒவ்வொரு மணிநேரமும், அவருடைய அற்புதமான வார்த்தைகள் அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மிடம் பேசுகிறபடியால் நாம் அவருடைய மேஜையைச் சுற்றி ஒன்று கூடுவதை, சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் யார் என்பதையும்; அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும்; என்ன இருந்தது, என்ன உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பதையும் மீண்டும் மீண்டும் அவர் நமக்குச் சொல்கிறார்.
இது நமக்கு என்னப் பொருட்படுத்துகிறது, அல்லது அவர் இந்தக் காரியங்களை நம்மிடம் பேசுவதை நாம் கேட்கும்போது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தி, அந்த சத்தத்தைக் கேட்கும்போது, நாம் இந்த உலகத்தை விட்டு வெளியேறி, உடனடியாக அவருடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆத்துமாக்கள் ஆறுதலடைகின்றன. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு உள்ளிந்திரியங்களையும் அவருடைய ஆவியால் நிரப்புவதை நாம் உணர்கிறோம். இது விவரிக்கப்பட முடியாத ஒரு சந்தோஷமாக இருக்கிறது. தேவன் நம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு உரைக்கப்பட்ட வார்த்தையையும், அவர் நமக்காகவே உரைத்தார். நாம் எதைக் கேட்க வேண்டும், எப்போது அதைக் கேட்க வேண்டும் என்று சரியாக அவருக்குத் தெரியும்...பலமுறை நாம் அதைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும்... ஒவ்வொரு முறையும் அது நம்முடைய ஆத்துமாவை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.
தரிசனங்கள், சொப்பனங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது, காலத்தின் திரைக்கபால், வெள்ளை அங்கிகளில் நம்மைக் கண்டது, மூன்றாம் இழுப்பு, அணில்களைச் சிருஷ்டித்தல், தேவனுடைய பட்டயம் அவருடைய கரத்தில் பரிபூரணமாக பொருந்தியது, சேமித்து வைக்கப்பட்ட ஆகாரம், மேஜையின் தலைப்பகுதியில் அமர வைக்கப்பட்டிருப்பது, இடிமுழக்கங்கள், வல்லமையான தூதர்கள் வந்து அவரை தூக்கிச் சென்றது, அந்த விசேஷித்த ஏழாம் தூதன் அவருக்கு மிக முக்கியமானவராக காணப்பட்டது, பிரான்ஹாம் என்று உச்சரிக்கிற ஏழு மலைச் சிகரங்களின் நித்திய அடையாளம், ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அவைகளை மாத்திரமே கூறுங்கள் என்பதையும், நான் வார்த்தையின் பிழையின்மையைக் கொண்டிருக்கிறேன் என்பதையும், அவர் மிக உன்னத அழைப்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதையும், நான் உங்களுக்கு என்னுடைய வெளிப்பாட்டைச் சொல்வேன் என்பதையும், நான் உங்களுக்கு தேவ சத்தமாய் இருக்கிறேன், ஒலிநாடா உபதேசத்தோடு தரித்திருங்கள், நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப்போகிறேன், இலக்கணமற்ற கொச்சையான வார்த்தைகளில் இவைகளை குறித்து அவர் நமக்கு சொல்லுகிறதை நாம் கேட்க ஒருபோதும் களைப்படைகிறதில்லை…நாம் அவை யாவற்றையுமே விரும்புகிறோம்.
இதுவே என்னுடைய தரிசனம். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே தேவனுடைய பரிபூரண சித்தமாயும், நிறைவானதாயும் உள்ளது. ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண சித்தமாயும், நிறைவானதாயுமுள்ளது. உங்களால் பிரசிங்கிமார்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள் பேசுவதைக் கேட்க முடியும், ஆனால் ஒலிநாடாக்களோ, நீங்கள் கேட்கக் கூடிய மிக முக்கியமான சத்தமாயும், நிறைவானதாயும், இருக்க வேண்டியதாய் இருக்கிறது. ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் தேவன் தாமே அவருக்கு செவி கொடுங்கள் என்று கூறின ஒரே சத்தமாயும், நிறைவானதாயும் இருக்கிறது.
என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் யாருக்கும் எதிரானவன் அல்ல, நான் அந்த சத்தத்திற்காகவே இருக்கிறேன். இந்தச் செய்தியை நேசிப்பதாகவும் விசுவாசிப்பதாகவும் அறிவிக்கும் அனைவரையும் நாமும், நானும் நேசிக்க வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் என்று நான் ஜனங்களிடத்தில் தவறாக சொல்லிக் கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும் கூட, நான் உங்களை நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். நாம் அனைவரும் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். தயவு செய்து தேவன் உங்களை அழைத்ததை தொடர்ந்து செய்யுங்கள்; பிரசங்கிக்கவும், போதிக்கவும், ஒரு மேய்ப்பராகவும் இருங்கள், உங்கள் மந்தைக்கு அவர்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் எது என்பதைச் சொல்லுங்கள்.
ஒலிநாடாவில் உள்ள அந்த சத்தம் மாத்திரமே ஒவ்வொரு முறையும் மாறாமல் அதையே கூறுகிறது. அது ஒருபோதும் மாறுகிறதில்லை. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மணவாட்டி மாத்திரமே ஆமென் என்று கூற முடியும், ஆனால் மணவாட்டி மற்ற மனிதன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்றோ, நிறைவானது என்றோ சொல்ல முடியாது.
நீங்கள் அதை நம்பவில்லையென்றால், நீங்கள் மணவாட்டி அல்ல. நீங்கள் அதை நம்பினால், அப்பொழுது ஒலிநாடாவைக் கேட்பதே அவர்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் என்று உங்கள் மந்தையிடம் சொல்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் தங்களுடைய போதகர்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் மற்றும் அவர்களுடைய சபைகளை விட்டு வெளியேறுங்கள் என்று நான் சொல்கிறேன் என்று பல ஊழியக்காரர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன், இது உண்மையல்ல. நான் அதை ஒருபோதும் கூறவுமில்லை, எனவே அதை நம்பாதீர்கள்.
நான் இதுவரை கூறாத, எப்போதும் நம்பாத விஷயங்களை பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் அவர்களுக்காக பொறுப்பேற்க முடியாது, ஆனால் நான் என்ன கூறியிருக்கிறேனோ அதை மாத்திரமே நான் விசுவாசிக்கிறேன். நான் வெளிப்படையாய் தெளிவாகப் பேசி, நான் எதை விசுவாசிக்கிறேனோ அதை சரியாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் / நீங்கள் நான் என்ன கூறிக் கொண்டிருக்கிறேனோ / பொருட்படுத்துகிறேனோ அதன் பேரில் உங்களுடைய திரித்தலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
மணவாட்டி அனைவரும் ஒரே காரியத்தையே கூறிக் கொண்டிருப்பர். இரண்டு மனிதர் ஒரே காரியத்தை கூறுகிறதில்லை. ஒரே சத்தம். ஒரே தீர்க்கதரிசி. ஒரே மணவாட்டி.
உலகெங்கிலும் உள்ள பல விசுவாசிகள் அவருடைய மணவாட்டியாக இருக்க, நீங்கள் ஒரே நேரத்தில் செய்தியைக் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை…ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தைக் நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்…அந்த சத்தத்திற்கே முதலிடம் அளியுங்கள்.
ஏழாவது முத்திரை 63-0324E, என்ற செய்தியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பகுதியினர் ஒரே நேரத்தில் அந்த சத்தத்தைக் கேட்கப்போகிறபடியால்: நீங்களும் எங்களோடு கேட்கும் படி அழைக்கப்படுகின்றீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
உபாகமம் 29:16-19 I இராஜாக்கள் 12:25-30 எசேக்கியேல் 48:1-7, 23-29 மத்தேயு 24:31-32 வெளிப்படுத்தின விசேஷம் 7 வெளிப்படுத்தின விசேஷம் 8:1 வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7 வெளிப்படுத்தின விசேஷம் 14
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள சகோதரன் பிரான்ஹாம்,
அவருடைய மணவாட்டியை அழைக்க தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளராக நீர் அனுப்பப்பட்டிருக்கிறீர் என்று என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன். நீர் உலகத்துக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள தேவ சத்தமாய் இருக்கிறீர். வேதாகமத்தின் இரகசியங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்த அவர் தெரிந்துகொண்ட ஒருவராக நீர் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒலிநாடாக்களில் நீர் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன்.
நான் உம்மிடத்தில் கேட்க விரும்புகிற ஒரு கேள்வி என்னுடைய இருதயத்தில் உண்டு. கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலவிதமான காரியங்களைச் சொல்லுகிற பல மனிதர்களும், பல சத்தங்களும் உள்ளன. நான் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறேன். நான் பரிபூரண விசுவாசத்தைக் கொண்டிருக்க விரும்புகிறேன். நான் எவருக்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நீர் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன்.
எது மணவாட்டியை ஒன்று சேர்த்து நமக்குத் தேவையான எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை நமக்கு அளிக்கும்?
எடுத்துக் கொள்ளப்படுவதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக, வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், ஏழு இரகசியங்களுக்கு ஒப்பான ஏழு இடிமுழக்கங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டதா? அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டதா, ஆனால் இன்னும் இடிமுழக்கங்களாக நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லையா?
இல்லை, அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன; அதுதான் இடிமுழக்கங்களைக் குறித்தாயிருந்தது. அவை எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால்...ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முழங்கின, அவை என்னவென்று யாருமே அறிந்துகொள்ள முடியவில்லை…அவை என்னவென்று யோவான் அறிந்திருந்தான், ஆனால் அவன் அதை எழுத தடை செய்யப்பட்டான். அவர், “ஏழாம் தூதன், தன் நாட்களில் தன் சத்தத்தை முழங்கும்போது, ஏழு இடிமுழக்கங்களின் ஏழு இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்” என்றார். ஏழாம் தூதன் என்பவர் ஏழாம் சபை காலத்தின் ஒரு செய்தியாளர்.
தேவனுக்கு மகிமை. அதுதான் என்னுடைய பதில். ஏழு இடிமுழக்கங்களின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயும், இப்பொழுது மணவாட்டியை ஒன்றாக இணைத்துக்கொண்டு, நமக்கு தேவைப்படுகிற எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறது.
சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய கேள்விக்கு பதிலளித்தமைக்காக, உங்களுக்கு நன்றி. நான் என்னுடைய இருதயத்தில் கொண்டிருந்த கேள்விக்கான பதில் ஒலிநாடாக்களில் இருக்கும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
நான் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். நான் அனுதினமும் தொடர்ந்து இயங்கு பொத்தானை அழுத்தி, இன்னும் அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வேன்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, முத்திரைகளின் பேரிலான கேள்விகளும் பதில்களும் 63-0324M என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை எங்களோடு பெற்றுக் கொள்ள வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தீர்க்கதரிசியின் தேவனுடைய ஜனங்களே,
கவனியுங்கள், நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அது அவ்வளவு நன்மையானதாக உள்ளது, அது என் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. பாருங்கள், நீங்கள் அதை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அவருடைய பிரசனத்தில், நான் இதைக் கூறட்டும். அவருடைய கிருபையினால், அண்மையில், நான் என்னுடைய ஜனங்களை, வெள்ளை அங்கிகளில் காண அவரும் கூட என்னை அனுமதித்தார்.
கிழக்கு கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரை, நாடு முழுவதும், நாம் ஒன்று கூடுகிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் தேவனுடைய தீர்க்கதரிசி ஜனங்களாக ஒன்றாக இருக்கிறோம். நாம் ஒரு குழுவினராக இருக்கிறோம்.
தேவனுடைய தீர்க்கதரிசி இங்கே பூமியில் இருந்தபோது, மணவாட்டி இருக்க விரும்பிய, மகத்தான, மற்றும் ஒரே இடம், தொலைபேசி இணைப்புகளில் ஒன்றாக இணைந்து, அந்த சத்தம் "காலை வணக்கம் நண்பர்களே" என்று கூறுகிறதைக் கேட்க காத்திருந்ததேயாகும்.
எட்டாவது பென் தெருவின் மூலையில் அந்த கூட்டத்தார்களில் அமர்ந்திருப்பதை அவர்கள் எப்படி விரும்பியிருப்பார்கள். அவர்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் சந்தோஷமாக ஒரு இரவு காத்திருந்து ஒரு இருக்கையைப் பெறுவதற்கோ, அல்லது மணிக்கணக்கில் சுவர்களின் பக்கமாக நின்று சாய்ந்துகொள்வதற்கோ கழித்திருந்திருப்பார்கள். அந்த ஒரு ஆராதனையில் இருப்பதற்கு, தங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று, தங்களுடைய வேலையையும் இழந்துபோயிருப்பார்கள்.
அவர்களுடைய முழு ஜீவியமும் தீர்க்கதரிசி உரைத்த ஒவ்வொரு வார்த்தையிலும் நிலைக்கொண்டிருந்தது. அவர்கள் ஒரு காரியத்தையும் தவறவிட விரும்பவில்லை. ஒரு நாள் அந்த ஒலிநாடாவைப் பெற முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தாலும், தேவன் மனித உதடுகளால் உரைத்தத் தருணத்தில் மணவாட்டியுடன் இணைக்கப்பட்டிருக்க விரும்பினர்.
இதுவே அவர்களுடைய ஜீவியமாக இருந்தது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் அவர்கள் காத்திருந்தனர். அடுத்த செய்தியைக் கேட்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் பொருட்படவில்லை. இப்பொழுது, தேவனுடைய ஏழாம் தூதனான தீர்க்கதரிசி அவர்களுக்காக கூறினதை, ஒரே நேரத்தில், வார்த்தைக்கு வார்த்தை கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது என்பதை அவர்கள் அறிந்ததபடியால் எவ்வளவு உற்சாகமடைந்திருந்தார்கள்.
தேவன் ஒரு வழியைக் அருளியிருந்தார். அவர் தம்முடைய மணவாட்டி அவருடைய சத்தத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவருடைய மணவாட்டி ஒரே நேரத்தில் அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய தூதனான செய்தியாளர் மூலம் உரைக்கப்பட்ட அவருடைய சத்தமே அவருடைய மணவாட்டியை இணைக்கும் ஒரே சத்தமாய் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவருடைய மகத்தான திட்டம் நடந்து கொண்டிருந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் தங்களுடைய சபைகள் தொலைபேசி இணைப்பில் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமில்லை என்ற தரிசனத்தை அவர்கள் புரிந்திருந்தனர்.
அதைத்தான் அவர்கள் தங்களுடைய சபைகளுக்குப் போதித்திருந்தனர். “கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு, தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கிறார், அவர் அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறார். இது உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறது. இது மல்கியா 4, மற்றும் வெளிப்படுத்துதல் 10:7. அவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தேவனால் அழைக்கப்பட்ட மனிதனாயிருக்கிறார். நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசி இவர்தான். இப்பொழுது நாம் அனைவரும் அவருக்கு செவிகொடுக்க வேண்டும். பண்டைய யோவானைப் போல, நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்.
தேவனுடைய திட்டம் இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மணவாட்டி இன்னும் அவருடைய சத்தத்தில் இணைந்துகொண்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுது நாம் உலகம் முழுவதிலுமிருந்து இணைந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினர், ஒவ்வொரு வார்த்தையையும், ஒரே நேரத்தில் கேட்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை இந்தச் செய்தியை இதற்கு முன் நூறு முறை கேட்டிருக்கலாம், ஆனால் இந்த முறையோ முதல் முறை போல் உணர்கிறோம். முன்னெப்போதையும் விட ஒரு மகத்தான வெளிப்பாட்டைப் பெறப் போகிறோம் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
நாம் வேறெந்த இடத்திலும் இருக்க விரும்பவில்லை. இதைவிட முக்கியமானது எதுவுமில்லை. நமக்கு, இது தான் அது. இது நமக்கான தேவனுடைய திட்டமாயுள்ளது. இந்த சத்தம் அவருடைய மணவாட்டியை அழைத்துக்கொண்டும், ஒன்றிணைத்துக்கொண்டும், பரிபூரணப்படுத்திக்கொண்டும் இருக்கிறது...நாமே அந்த மணவாட்டியாய் இருக்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில், ஆறாவது முத்திரையை 63-0323: அவர் எங்களுக்கு வெளிப்படுத்துகிறபோது தேவனுடைய சத்தத்தை கேட்க நாங்கள் ஒன்றிணைகிறபடியால் எங்களுடன் சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யாத்திராகமம் 10:21-23
ஏசாயா 13:6-11
தானியேல் 12:1-3
மத்தேயு 24:1-30
மத்தேயு 27:45
பரி. யோவான் 10:27
வெளிப்படுத்தின விசேஷம் 6
வெளிப்படுத்தின விசேஷம் 11:3-6
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,
தேவன் தம்முடைய கடைசி வல்லமையை அனுப்பியுள்ளார். நம்முடைய பிதாக்களின் மூல விசுவாசத்தை நமக்கு திரும்ப அளிக்க அவர் தம்முடைய மகத்தான கழுகை அனுப்பினார். இது கழுகின் காலம். இனி வேறு மிருகங்களே இல்லை. இனி செய்தியாளர்களே இல்லை. இனி மனிதக் குழுவே இல்லை. அவ்வளவுதான். நாம் முடிவில் இருக்கிறோம். வெளிப்படுத்தல் 10:7-ன் சத்தம் வந்துவிட்டது, அவர் தம்முடைய மணவாட்டியை அழைக்க தம்முடைய மகத்தான தீர்க்கதரிசி கழுகைப் பயன்படுத்தியுள்ளார்.
நீங்கள் ஞாயிற்றுக்கிழமை நம்முடைய மேய்ப்பரான, தேவனுடைய மகத்தான கழுகுகிற்கு செவி கொடுத்துக் கொண்டிருந்திருந்திருந்தால், அவர் எங்களிடத்தில் கூறியதுபோல உங்களுக்கும் சொல்வதை நீங்கள் கேட்டிருந்திருப்பீர்கள்:
"ஏழு இடி முழக்கங்களான தேவனுடைய வார்த்தையைக் கொண்டு துண்டாக வெட்டி, வானங்களையும் கூட அடைக்கப்போகும் அந்தக் குழு நீங்களே. உங்களால் இதை அடைக்க, அல்லது அதை செய்ய, நீங்கள் விரும்பினதை செய்ய முடியும். உங்களுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் சத்துரு கொல்லப்படுகிறான், இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் அது கருக்கானதாயிருக்கிறது. நீங்கள் விரும்பினால் கோடிக்கணக்கான டன்கள் எடையுள்ள வண்டுகளை உங்களால் வரவழைக்க முடியும். நீங்கள் என்ன கூறினாலும், அது சம்பவிக்கப்போகிறது, ஏனென்றால் அது தேவனுடைய வாயிலிருந்து வருகிற தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது, ஆனால் அவர் எப்பொழுதுமே அதை கிரியை செய்ய மனிதனை உபயோகிக்கிறார்."
தேவன் அனுப்பின கழுகிற்கு செவி கொடுக்கும்படிக்கு; இயங்கு பொத்தானை அழுத்துவதன் முக்கியத்துவத்தை இதற்கு மேல் நான் எப்படி வலியுறுத்த முடியும்? அவர் இந்த செய்திக்கு ஒரு தேவதூதனை கூட நம்ப முடியாதபடிக்கு இது மிக முக்கியமானதாயும், அவ்வளவு பரிபூரணமானதாக…அவ்வளவு பரிபூரணமானதாக இருக்கிறது, வேறு எந்த மனிதனும் இல்லை, வேறு எந்த மனிதக் குழுவும் இல்லை, அவருடைய மகத்தான கழுகுத் தீர்க்கதரிசியைத் தவிர, அவர் அதை கொடுக்கக் கூடிய வேறொருவரும் இல்லை.
நாம் இதைக் குறித்து பேச முடியும், இதைப் போதிக்க முடியும், இதைப் பிரசங்கிக்கக் கூட முடியும், ஆனால் ஒரே ஒரு சத்தம் மாத்திரமே "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதை உடையதாய் இருக்கிறது, எனவே நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். உங்களுடைய நித்திய இலக்கை நீங்கள் வைக்கக்கூடியதற்கு ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உள்ளது. அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்ட ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உண்டு, அவருடைய மணவாட்டி மாத்திரமே அந்த வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வாள்.
உலகத் தோற்றத்திற்கு முன்பே அவருடைய எல்லா வார்த்தையையும் வெளிப்படுத்த அவர் தெரிந்துகொண்ட கழுகு தீர்க்கதரிசி ஒருவர் மாத்திரமே…வில்லியம் மரியன் பிரான்ஹாம், அவர், அவர் மட்டுமே, இந்த நாளுக்கான தேவனுடைய கழுகு செய்தியாளராய் இருக்கிறார். அவர், அவர் மட்டுமே, தேவனுடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பப்பட்டார்.
என்னுடைய அழைப்பும், அல்லது எந்த ஊழியக்காரர்களின் அழைப்பும்: உங்களை அவரிடம், தேவனுடைய மகத்தான கழுகினிடத்திற்கு வழி நடத்துவது என்ற ஒரே காரியமாகவே உள்ளது. அவர் தெரிந்துகொண்ட ஒருவர். அவருடைய அக்கினி ஸ்தம்பத்தால் அவர் ரூபகாரப்படுத்தின ஒருவர். அவர் புத்தகத்தை எடுத்து, முத்திரைகளை உடைத்து, அதை தம்முடைய ஜனங்களுக்கு, நமக்கு அதை வெளிப்படுத்த, பூமிக்கு அனுப்பின, அவர் தெரிந்துகொண்ட ஒருவர்.
ஒலிநாடாவில் அவர் பேசின வார்த்தைகள் அவருடைய வார்த்தைகள் அல்ல, அவை அவருடைய மணவாட்டி கேட்க ஒலிநாடாவில் பேசப்பட்டு, பதிவு செய்யப்பட்ட தேவனுடைய சிந்தனைகள்; அவருடைய மணவாட்டியாகிய, நீங்கள் மாத்திரமே அதைக் குறித்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறீர்கள்.
மணவாட்டியே, அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்! நாம் வந்துவிட்டோம். அவ்வளவுதான். விஞ்ஞான ஆராய்ச்சி அதை நிரூபித்துள்ளது. வார்த்தையின் ரூபகாரப்படுத்துதல் அதை நிரூபித்துள்ளது. நாம் இங்கே இருக்கிறோம்! இந்த வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது, இது சத்தியமாயுள்ளது. நீங்கள் அதை அடையாளங் கண்டுகொண்டபடியால், நாம் அவருடைய முழுமையான திரும்பளிக்கப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.
இனி யோசிக்க வேணடியதேயில்லை. இனி சந்தேகமேயில்லை. நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம். நாம் யார் என்பதை அடையாளங் கண்டு கொள்கிறோம். தேவனுடைய கிருபையினால், வெள்ளை அங்கிகளில் எல்லோரையும் காண அவர் தம்முடைய கழுகை அனுமதித்த அவர்கள் நாம்தான்.
மணவாட்டியே தைரியமாயிரு. நாம் கிட்டத்தட்ட அங்கே இருக்கிறோம். நாம் அதை உணர முடியும். அது முன்னெப்போதையும் விட இப்போது நமக்கு மிகவும் உண்மையானது. சத்துரு நம்மை வெறுக்கிறான், ஆனால் தேவன் நம்மை நேசிக்கிறார். அவர் நம்முடன் மாத்திரம் அல்ல, அவர் நமக்குள்ளும் இருக்கிறார். நாம் மாம்சமாக்கப்பட்ட அவருடைய வார்த்தையாக இருக்கிறோம்.
நாம் தவறிப் போக முடியாது, தவறி போக மாட்டோம் என்பதை அவர் சாத்தானுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார். விசுவாசமும் சந்தேகமும் மாத்திரமே உண்டு. நாம் விசுவாசத்தை மாத்திரமே உடையவர்களாக இருக்கிறோம். நம்முடையதில் அல்ல, அவருடைய வார்த்தையில், அது தவறிப் போக முடியாது. ஏன்? நாம் வார்த்தையாய் இருக்கிறோம். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே!
நீங்கள் அவரைத் தெரிந்துகொள்ள வில்லை, அவர் உங்களைத் தெரிந்து கொண்டார். சாத்தான் எப்படி எதையாவது உங்களுக்குச் செய்ய முடியும், தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார். அவருடைய வார்த்தையை விசுவாசிக்க நீங்கள் தவறிப் போக மாட்டீர்கள் என்று அவர் அறிந்திருந்த படியினால் அவர் உங்களைத் தெரிந்து கொண்டார். சாத்தான் உங்களிடத்தில், "ஆனால் நீங்கள் தவறிப்போய், தவறிப் போய், தவறிப்போய் இருக்கிறீர்கள்" என்று சொல்லுகிறான்…நீ சொல்வது சரிதான், நான் என்னுடைய மாம்சத்தில் தவறிப்போகிறேன், ஆனால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன், எனவே நான் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க தவறமாட்டேன்.
நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம் என்பதை…அவருடைய மற்றும் நம்முடைய சத்துருவுக்கும் அவர் நிரூபிக்கும்படியாக, நாம் சோதிக்கப்பட்டு தேவனுக்காக சோதனைகளினூடாகச் செல்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஐந்தாம் முத்திரை 63-0322 என்ற செய்திக்கு: தேவனுடைய மகத்தான கழுகு வெளிப்பாட்டைக் கொண்டு வரும்போது, மகத்தான பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வீடுகளையும், உங்களுடைய சபைகளையும், அல்லது நீங்கள் எங்கிருந்தாலும் நிரப்புவாராக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
தானியேல் 9:20-27
அப்போஸ்தலர் 15:13-14
ரோமர் 11:25-26
வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11 / 11:7-8 / 22:8-9