அன்பான உண்மையுள்ள மணவாட்டியே,
அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
- இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அது பரிபூரணமான எண்ணிக்கையாகும். இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அப்பொழுது பரலோகத்தால் அதை எழுத முடியவில்லை. அங்கே ஒன்றும் சம்பவியாததால், பரலோகத்தால் அதை அறியமுடியவில்லை. யாரும் அதை அறியமுடியாது. அது ஓய்வின் நேரமாயிருந்தது. அது மிகவும் மகத்தானதாயிருந்ததால், அது தூதர்களும் அறியாதவாறு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
- அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன்:…
அங்கே ஏதோ ஒன்று கூறப்பட்டது. அது வெறும் ஒரு சத்தம் மாத்திரமே அல்ல. ஏதோ ஒன்று கூறப்பட்டது. அவன் அதை எழுதப் புறப்பட்டான்.
…அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் என்னிடம் கூறக் கேட்டேன்…
அந்த சத்தங்கள், அந்த இடி முழக்கங்கள் எங்கேயிருந்தன என்பதைக் கவனியுங்கள். பரலோகத்தில் அல்ல; பூமியின் மேல்! அந்த இடி முழக்கங்கள் வானங்களிலிருந்து ஒருபோதும் சத்தமிடவில்லை.அவை பூமியிலிருந்து சத்தமிட்டன. - ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண்ணிக்கையாகும். ஏதோ ஒன்று எழுத்துக் கூட்டி வாசிப்பது போல் ஏழு இடிகளும் ஒரே வரிசையில் ஒவ்வொன்றாக முழங்குகின்றன.
ஒரு உண்மையான தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது; சீக்கிரத்தில் வரவிருக்கும் அவருடைய எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவே நாம் கர்த்தரிடத்தில்: “மணவாட்டிக்குத் தேவையான எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை எது கொடுக்கும்”? என்று கேட்க வேண்டும்.
- எடுத்துக் கொள்ளப்படுவதற்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
- இங்கே இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கின்ற ஏழு இடிமுழக்கங்கள், அது ஏதோ ஒரு இரகசியம். இது தான் "இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தல் ” என்று வேதாகமம் கூறுகிறதல்லவா? ஏன், அப்படியானால், அதைக் குறித்த ஏதோ ஒரு மறைக்கப்பட்ட இரகசியம் அங்கே இருக்கின்றது. ஹும்! அது என்ன ? அந்த ஏழு இடி முழக்கங்கள் அதை வைத்திருக்கின்றது. யோவான் அதை எழுதவேண்டுமென்றிருந்தான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் கீழே வந்து, “அதை எழுதாதே. ஆனால், அதை முத்திரையிடு, அதற்கு முத்திரை போடு. புஸ்தகத்தின் பின்புறத்தில் அதை வைத்து விடு" என்று கூறினது. அது வெளிப்படுத்தப்பட வேண்டும். அது இரகசியங்கள். .
பரிசுத்த ஆவியானவர், ஊழியத்தின் மூலம், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைத் தம்முடைய மணவாட்டிக்குத் தரும் ஏழு இடி முழக்கங்களின் வெளிப்பாட்டைத் அவர்களுக்கு வெளிப்படுத்தப் போகிறாரா?
- இப்பொழுது மல்கியா 4-ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தின விசேஷம் 10 : 6-லும் கூறப்பட்டுள்ள இந்த செய்தியாளன் இரண்டு காரியங்களைச் செய்யப் போகிறார். ஒன்று: மல்கியா 4-ன்படி, அவர் பிள்ளைகளின் இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். இரண்டாவது: வெளிப்படுத்தின விசேஷம் 10-ல் உள்ள ஏழு முத்திரைகளில் அடங்கியிருக்கின்ற வெளிப்பாடுகளான ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார்.
இது எளிமையானது:
அந்த ஏழு இடி முழக்கங்களினூடான இரகசியம் மணவாட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைக் கொடுக்கும். தேவன் மாத்திரமே, அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளர் மூலம், ஏழு இடிமுழுக்கங்களைகளை மணவாட்டிக்கு வெளிப்படுத்துவார்.
ஏழு இடிமுழக்கங்கள் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், அந்த வெளிப்பாட்டை நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்திலிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை; என்னிடமிருந்து அல்ல, உங்கள் உள்ளூர் மேய்ப்பர், சுவிசேஷகர் அல்லது போதகரிடமிருந்து அல்ல, ஆனால் இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், உலகத்திற்கே தேவனுடைய மேய்ப்பராயிருக்கிறவரிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
எல்லா இரகசியங்களும் வெளிப்படுத்தப்படுவதைக் கேட்க வாருங்கள்; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவன் பேசி, எளிமையில் தம்மை வெளிப்படுத்தி: ஏழாவது முத்திரையை 63-0324E நமக்கு கொண்டுவருவதை நாம் கேட்கையில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்று, எண்ணையினால் உங்கள் தீவட்டிகளை நிரப்புங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிப்பதற்கான வேத வசனங்கள்:
உபாகமம் 29:16-19
I இராஜாக்கள் 12:25-30
எசேக்கியேல் 48:1-7, 23-29
மத்தேயு 24:31-32
வெளிப்படுத்தின விசேஷம் 7
வெளிப்படுத்தின விசேஷம் 8:1
வெளிப்படுத்துதல் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 14
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள இளைப்பாறுகிற மணவாட்டியே,
பயம், பீதி, ஏவுகணைகள், அணு குண்டுகள், அழிவு, பொய்கள், வஞ்சகம், அரசியல், மரணம் என நேற்று உலகில் நடந்ததைக் கேட்க இன்று உலகம் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் மணவாட்டியோ இயங்கு பொத்தானை அழுத்தி, வெள்ளை அங்கிகள், நீதிமானாக்கப்படுதல், முன்குறித்தல், ஊக்குவிக்கப்படுதல், வெளிப்பாடு, சத்தியம், ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல், நித்திய ஜீவன் என்று கூறி அவர்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
பயப்படாதே அன்பே, நான் உன்னுடன் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் இருக்கிறேன். இது என்னுடைய மகத்தான திட்டத்தைக் குறித்த யாவற்றையும் நான் உங்களிடம் கூறியிருப்பதாயுள்ளது. இப்பொழுது, உங்களுடைய கண்களுக்கு முன்பாக இவை அனைத்தும் படிப்படியாக வெளிப்படுகிறது.
அவர்கள் கூறுவதோ: இது நம்முடைய வாழ்வின் மிக மோசமான நாட்கள்; எல்லாம் நாளை முடியலாம்.
நாம் கூறுவதோ: இது நம்முடைய வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்; எல்லாம் நாளை முடியலாம்.
தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார், அவருடைய வார்த்தை. அவர் தம்முடைய மணவாட்டியை அழைக்கவும், அவர்களுக்காக அவர் ஆயத்தப்படுத்தியுள்ள அவர்களுடைய புதிய வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்லவும் அவர் தம்முடைய தூதன் தீர்க்கதரிசியை தம்முடைய வார்த்தையுடன் அனுப்பினார்.
இதே ஆறுதலையும், சாமாதானத்தையும் மற்றும் நாம் பெற்றுள்ள உறுதியையும் நீங்கள் விரும்பினால்; அவர் தம்முடைய மணவாட்டிக்காக ஆயத்தம்பண்ணியுள்ள அந்த பரலோக வீட்டிற்குள் நீங்கள் வந்து வசிக்க விரும்பினால்; ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்டிருக்கிற ஒரே வழியை கேட்பதற்கு எங்களுடன் சேர்ந்துகொண்டு, முத்திரைகள் மீதுள்ள கேள்விகள் பதில்களில் 63-0324M: அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் நம்மிடத்தில் முழங்குவதைக் கேளுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை நீங்கள் கேட்கப்போகும் தலைப்புச் செய்திகளின் ஒரு சிறிய முன்னோட்டம்.
மணவாட்டியை எது இணைக்கும்: வார்த்தையே
வார்த்தை யாருக்கு வருகிறது: தீர்க்கதரிசிக்கே.
அந்த வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி யார்: தீர்க்கதரிசியே.
உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருப்பது யார்: தீர்க்கதரிசியே.
யாருடைய வார்த்தைகளால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம்: தீர்க்கதரிசியால்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தேவனுடைய ஆடுகளே,
நம்முடைய ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தரின் பிரசன்னத்தில் இருப்பதை விட, மகத்தான காரியம் என்னவாயிருக்க முடியும், நாம் இதைவிட எவ்வளவு சிலாக்கியம் பெற்ற ஜனங்களாய் இருக்க முடியும்?
அதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தரின் பிரசன்னம் நம்மோடு உள்ளது. நாம் வந்தடைந்துள்ளோம் என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். நாம் இங்கே இருக்கிறோம்! அவர் நமக்கு அளித்துள்ள வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது. அது சத்தியமாயிருக்கிறது. நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டி ஆடுகளாயிருக்கிறோம்.
நாம் ஒவ்வொரு வாரமும் அவருடைய காதல் கடிதங்கள்: "என் அன்பான ஆட்டுக்குட்டிகளே, நான் என் ஆடுகளுக்கான அழைப்பை விடுத்துள்ளேன். வெள்ளாடுகளுக்கு இது தெரியாது, ஆனால் நீங்கள் அதை அடையாளங்கண்டு கொண்டீர்கள். நீங்கள் உண்மையாக தரித்திருக்கிறீர்கள், ஏனென்றால் என் ஆடுகள் என்னை அறிந்திருக்கின்றன, அவைகள் அந்நியனைப் பின்பற்றாது. இது என்னுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஆவிக்குரிய அடையாள சத்தமாக மாத்திரமே இருக்க வேண்டும்" என்று நமக்குச் சொல்வதைக் கேட்கிறோம்.
நீங்கள் சுற்றி சரசமாடிவில்லை அல்லது மற்றெவரையுங் கூட நோக்கிப்பார்க்கவில்லை; நீங்கள் என்னுடைய சத்தத்துக்கு உண்மையாக தரித்திருக்கிறீர்கள். உங்களுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பரியாசம்பண்ணப்பட்டு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் என் வார்த்தையுடன் தரித்திருந்தால் உங்களுக்காக நான் திரும்பி வருவேன் என்று நான் உங்களிடத்தில் கூறினேன், நீங்கள் தரித்திருக்கிறீர்கள். நான் வருவேன் என்று உங்களுக்கு வாக்களித்தபடியே இப்பொழுது நான் உங்களுக்காக வருகிறேன். நீங்கள் நீர்பாய்ச்சிக்கொண்டிருக்கிற வார்த்தையே உங்களை நம்முடைய புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருகிறது.
நாம் பெற்றுள்ள வெளிப்பாட்டை மற்றவர்கள் பெறாமலிருக்கலாம், மேலும் நாம் மனிதர்களுக்கே மரியாதையை செலுத்துகிறோம் என்று கூறலாம்; அல்லது நம்முடைய கர்த்தரை அல்ல மனிதனையே ஆராதிக்கிறோம் என்றும் கூறலாம். அவர்கள் எவ்வளவு குருடராயிருக்கிறார்கள். அது அவ்வண்ணமே உண்மையாக இருந்தால், அப்பொழுது காலத்தின் திரைக்கு அப்பாலுள்ள கிறிஸ்துவின் மணவாட்டியும் கூட தவறாயிருந்தார்கள்.
மணவாட்டி தம்மிடம் ஓடிவந்து, "எங்கள் விலையேறப்பெற்ற சகோதரனே" என்று கூறினதை தீர்க்கதரிசி கண்டபோது, அவர்கள் அவரைப் பற்றிப்பிடித்து ஒரு உயரிய இடத்தில் வைத்தார்கள். என்ன... கிறிஸ்துவின் மணவாட்டி தீர்க்கதரிசியை ஒரு உயரிய இடத்தில் வைத்ததன் மூலம் பட்சபாதம் காட்டிக்கொண்டிருந்தார்களா? அவர்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று நீங்கள் கூறுகிறீர்களா?
அதன்பிறகு, மணவாட்டி யாவரும் தங்களுடைய வெள்ளை அங்கியில் நின்றுகொண்டு, "நீர் சுவிசேஷத்துடன் செல்லாமலிருந்திருந்தால், நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்" என்று சத்தமிட ஆரம்பித்தனர். If அவர் செல்லாதிருந்திருந்தால் அவர்கள் அங்கு இருந்திருக்கமாட்டார்களல்லவா?
அப்போது மேலிருந்து ஒரு சத்தம், அவர் நமக்குப் பிரசங்கித்த வார்த்தையின்படி நாம் நியாயந்தீர்க்கப்படுவோம், அதன்பின்னர் அவர் நம்மை அவருக்கு அளிப்பார் என்றுரைத்தது.
வேறொருவர் கூறின அல்லது அவர் கூறினதை யாரோ ஒருவர் விளக்கினதன் மூலம் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம் என்று அந்த சத்தம் கூறவில்லை, ஆனால் அவர் என்ன கூறினார்என்பதன் மூலமேயாகும். அதன்பின்னர் அவர்நம்மை அவருக்கு அளிப்பார்.
நான் தனியுரிமையை எடுத்துக்கொண்டு, நான் பெற்றுள்ள அதே வெளிப்பாட்டைக் கொண்ட மணவாட்டியின் பாகமானவர்களின் சார்பாகப் பேசவும், நாம் எப்படி உணர்கிறோம் என்றும் கூறுவேனாக. நாம் நியாயந்தீர்க்கப்படப் போகிறோமென்றால், நமது நித்திய இலக்கு தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் சொன்ன வார்த்தையைப் பொறுத்தது என்றால், நம் நாளுக்கான அந்த வார்த்தையை நாம் தேவனுடைய சத்தத்திலிருந்து மட்டுமே கேட்க வேண்டும். யாரோ ஒருவர் என்ன விளக்குகிறார், அல்லது என்ன கூறுகிறார் என்பதன் பேரில் நம்முடைய நித்திய இலக்கை சார்ந்திருக்க முடியாது மற்றும் சார்ந்திருக்கவும் மாட்மோம், ஆனால் அவர் என்ன கூறினார் என்பதன் பேரிலேயாகும். நம்மால் தேவனுடைய சத்தத்தை மாத்திரமே கேட்க முடியும், மேலும் வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனுடைய ஒரே சத்தமாயிருக்கிறார்…தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்.
நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டேன், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன்.
எனவே மணவாட்டி மறுபுறம் செய்துகொண்டிருந்ததைப் போலவே நாமும் செய்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு நாம் மகிழ்ச்சியாயும், கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயுமிருக்கிறோம்.எல்லா மகிமையும், கனமும், துதியும் நம்முடைய ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமே உரியது. தேவனைத் தொழுதுகொள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 22:9-ல் தீர்க்கதரிசி நமக்குச் கூறினதுபோல…நாம் செய்து, அவரை மிகவும் நேசிக்கிறோம்.
நேரம் தாமதமாகிவிட்டது. சம்பவித்துக்கொண்டிருக்கிற யாவற்றையும் நாம் வாசிக்க முடிந்ததைக் காட்டிலும் வேதவசனங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் தம்முடைய மணவாட்டிக்காக சீக்கிரமாக வருகிறார். உலகம் இணைந்து கொண்டிருக்கிறது. மணவாட்டி இணைந்து கொண்டிருக்கிறாள். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான நிலை உருவாக்கப்படுகிறது.
வார்த்தையைப் பிரசங்கிக்கும் தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களுக்காக நாம் கர்த்தரைத் துதிக்கிறோம், ஆனால் ஊழியக்காரர்களே, நீங்களும் உங்களுடைய ஜனங்களும் முதலில் நியாயந்தீர்க்கப்படப் போகும் சத்தத்திற்கு இடமளியுங்கள். உங்களுடைய சபைகளில் ஒன்றுகூடி, ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஆறாவது முத்திரையைக் 63-0323 கேட்கும்போது, நாம் இணைந்து, நாம் நியாயந்தீர்க்கப்படவுள்ள வார்த்தைகளை தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேட்கும்போது, பேழைக்குள் வந்து நம்முடன் இரட்சிக்கப்பட விரும்புகிற யாவரையும் நாங்கள் அழைக்கிறோம்.
இது தேவனுடைய ஆடுகளுக்கான ஆடுகளின் ஆகாரம். எதுவும் கூட்டப்படவில்லை, எதுவும் எடுத்துப்போடப்படவில்லை, எதுவும் விளக்கப்படவில்லை, தூய்மையான கலப்படமற்ற ஆடுகளின் ஆகாரம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
“இந்த பிரசங்கத்தைக் கேட்பதற்காக ஆயத்தமாக படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யாத்திராகமம் 10:21-23
ஏசாயா 13:6-11
தானியல் 12:1-3
மத்தேயு 24:1-30
மத்தேயு 27:45
பரி.யோவான் 10:27
வெளிப்படுத்தின விசேஷம் 6
வெளிப்படுத்தின விசேஷம் 11:3-6