அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,
உங்களால் இங்கே கூடாரத்திற்கு வர முடியாவிட்டால், எங்காவது சபையைக் கண்டறிந்து; அதற்கு செல்லுங்கள். உங்களால் எங்களுடன் ஒலிநாடாக்களை கேட்க முடியாவிட்டால், எங்காவது ஒலிநாடாக்களைக் கேளுங்கள். ஒரு பிரசங்கியார், போதகர், அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் அல்லது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் ஒலிநாடாக்களை இயக்கிக் கேட்பதேயாகும்.
இது என்னுடைய மூல ஆதாரமான வீடு; இது என்னுடைய தலைமையகம்; இங்குதான் நாங்கள் அமைத்துள்ளோம். இப்பொழுது, என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், நீங்கள் ஒரு காரியத்தை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தாலும், இது தான் நம்முடைய தலைமையகம், இங்கேயே! நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டீர்கள் என்று, என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பக் கேட்டு, அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, அதை நினைவில் கொள்ளுங்கள்!
தீர்க்கதரிசி என்ன செய்து கொண்டிருந்தார்? ஆகாரத்தை சேமித்தார். நாம் புசிக்கும்படியான ஆகாரத்தை சேமித்தார், அதனால் நாம் விருந்துண்ணும்படியான ஒன்றைப் பெற்றுள்ளோம். நாம் நம்முடைய அறையில் வசதியாக நம்முடைய ஒலிநாடாக்களை அமர்ந்து கேட்கிறோம்.
நாடு முழுவதிற்கும் ஒரே ஒரு சிறிய களஞ்சியம், ஒரு சிறிய களஞ்சியம் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார். அவர் போய்விட்டப் பிறகு, நாம் இங்கே தரித்திருந்து கேட்கும்படியாக, அவர் ஏராளமான பொருட்களை வைத்துவிட்டார்; அடையாளம், முற்றிலுமானது, முத்திரைகள், ஏழு சபைக் காலங்கள், வருங்கால வீடு, அவருடைய வார்த்தையை நிரூபித்தல், அனைத்தும் நமக்காகவே.
அவர் வெகு தொலைவில் இருப்பது போல் தென்படுகிறது, ஆனால் இந்தக் காரியங்கள் உண்மை என்று நாம் இன்னமும் நினைவில் கொள்கிறோம். இதுவே நாம் தனித்து நடக்க வேண்டிய ஒரு ஜீவியமாய் உள்ளது.
களஞ்சியங்கள் நிரம்பியுள்ளன. மாசில்லாத தூய்மையான வார்த்தை என்று தேவனால் சான்றளிக்கப்பட்டுள்ள மற்றெந்த எந்த ஆகாரமும் இல்லையே.
நீங்கள் எங்களுடன் விருந்துண்ண விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய விருந்தினராக நாங்கள் மேஜையண்டை வந்து புசிக்கையில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் வரவேற்கிறோம்.
கேள்விகளும் பதில்களும் 64-0823M
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான பூமியின் உப்பானவர்களே,
இதற்கு மேல் சிறப்பான எதையும் பெற்றுக்கொள்ள முடியாததுபோல இது தென்படுகிறபோது, அவர் நமக்கு மற்றொரு முழு ஒலிநாடாவின் வெளிப்பாடுகளை அளிக்கிறார். நாம் முன்குறித்தலிலிருந்து பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளோம். அந்தக் காரணத்தினால்தான் நாம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையை கேட்க வருகிறோம்.
தேவன் உலகத்தை சிருஷ்டித்தபோது, நாம் அவருடைய சிந்தனையில் இருந்தோம். நம்முடைய குற்றம் சாட்டுபவன் தொடர்ந்து நம்மை சுட்டிக்காட்டி, பிதாவினிடத்தில், "அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள்," என்று சொல்லுகிறபோது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை மூடுகிறது. நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தேவன் நம்மைக் காண்கிறதில்லை, அவர் இயேசுவின் இரத்தத்தினூடாக நம்முடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறார்.
சாத்தானால் தொல்லைப்படுத்த முடியாது; அதாவது, அவனால் சோதிக்க முடியும், ஆனால் அவனால் ஒரு மீண்டும்- பிறந்த கிறிஸ்தவனை மேற்கொள்ள முடியாது. தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, அவனை முன்னதாகவே கண்டு, அவனை மீட்கும்படி இயேசுவை அனுப்பினபடியால், இரத்தம் அவனுக்காகப் பேசுகிறது. தேவனாலும் கூட அதை காணமுடியாமலிருக்கும்போது, அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? அவராலும் கூட…அவர் கேட்கிற ஒரே காரியம் உங்களுடைய சத்தமே. அவர் உங்களுடைய பிரதிநிதித்துவத்தை காண்கிறார். ஆமென். அது உண்மை. புரிகிறதா?
தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு இந்த காரியங்களைக் கூறினார். அது அவர் பேசிக்கொண்டிருந்ததல்ல; அவர் தேவனுடைய சிந்தனைகளை, வரவிருக்கின்ற காரியங்களின் அவருடைய தன்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளை வெளிப்படுத்த அவருடைய வாயை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளைக் கூறின பிறகு, அவைகள் நிறைவேற வேண்டும். "வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை."
அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனுஷகுமாரன் நமக்கு மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்டார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நம்முடைய தீர்க்கதரிசி அவரைக் குறித்து உரைத்திருந்த ஒவ்வொரு வேத வாக்கியத்தையும் நிறைவேற்றுகிறார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் அவருடைய மணவாட்டி: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் பரிசுத்த ஆவியின் உண்மையான அத்தாட்சியைப் பெற்றிருக்கிறோம்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா?
அப்படியானால் நாம் எதற்காக கவலைப்படுகின்றோம்? நாம் அவருக்காக நின்றால், அவர் நமக்காக நிற்பார் என்று, அவர் நமக்கு நிரூபித்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறிப்போக முடியாது.
இந்த செய்தியையும் இக்காலத்து செய்தியாளரையும் விசுவாசிக்கிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள். இந்த செய்தியையும் செய்தியாளரையும் விசுவாசிக்காத யாவரும், உலகத்தோடு அழிந்துபோவார்கள்.
சபையே கூர்ந்து கவனி. அநேகர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், இல்லையென்றால் வார்த்தையின் வெளிப்பாடே இல்லாதிருக்கிறார்கள். நாம் மனிதனுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக அவர்கள் உணருகிறார்கள். நீங்கள் உண்மையாகவே சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் திறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பது என்ன கூறுகிறது என்பதற்கு செவி கொடுங்கள்.
மணவாட்டியை எது ஒன்று சேர்க்கும்? தேவனோடு ஒன்றாயிருக்கும்படி மணவாட்டியை இணைப்பது எது?
"அந்த நாளிலே மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார்." என்ன? மணவாட்டியின் கலியாணத்திற்கு, சபையுடன் தலையை ஒன்று சேர்க்க, இணைக்க. மணவாளனின் அழைப்பு இதனூடாக வரும், மனுஷகுமாரன் இறங்கி வரும்போது, இவ்விருவரையும் ஒன்று சேர்க்க மானிட சரீரத்தில் இறங்கி வருவார். சபையானது வார்த்தையாக இருக்க வேண்டும், அவர் வார்த்தையாய் இருக்கிறார், இவ்விருவரும் ஒன்றாக இணைகின்றனர், மற்றும், அதை செய்வதற்கு, மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும்.
அதற்கு மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும். உங்களுடைய கருத்தல்ல, உங்களுடைய புரிந்துகொள்ளுதல் அல்ல, உங்களுடைய சிந்தனைகளோ உங்களுடைய பிரசங்கித்தலோ அல்ல. மனுஷகுமாரன் மணவாட்டியை மணவாளனோடு இணைப்பார், அது இப்பொழுதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது.
நாம் இப்பொழுது ஒரு விவாக விழாவில் மணவாளனோடு இருக்கிறோம், நாம் விரைவில் நம்முடைய கலியாண விருந்துக்காகவும் நம்முடைய தேன் நிலவிற்காகவும் புறப்பட்டு செல்வோம்.
வார்த்தையும் சபையும் ஒன்றாய் இருக்கின்றனர். மனுஷகுமாரன் என்னென்ன செய்தாரோ, அவர் வார்த்தையாய் இருந்தார், சபையும் அதே காரியத்தை செய்கிறது.
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினால் மாத்திரமே நாம் பிழைக்க முடியும்! நம்முடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான தேவனுடைய வாயாக இருக்கிறார் என்று தேவன் நிரூபித்திருக்கிறார். அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? அவர் அவ்வண்ணமாய்க் கூறி, அதன்பின்னர் அவர் அதை தம்முடைய வார்த்தையால் நிரூபித்தார்.
இந்த கடைசி நாட்களில் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற மணவாட்டி சபையாய் நாம் இருக்கிறோம். மற்ற எல்லோரிடத்திலும் இருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளோம்; அவருடைய இரத்தத்தினால் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அந்த பலவர்ணமானபட்சி.
பிதாவே, நான் அதைக் குறித்து நினைக்கும்போது, உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை என்றும், அவைகளில் ஒன்றும் தவறிப்போக முடியாது என்று அறிந்திருக்கும்போதும், எங்களுடைய இருதயங்கள் துள்ளி குதித்துக்கொண்டும், என்னுடைய இருதயம் துடித்துக்கொண்டுமிருக்கிறது.
இதுவே இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட ஒரே வழியாயிருக்கிறது. இதுவே ஒரு வார்த்தையையும் மாற்றக்கூடாது என்பதற்கான ஒரே வழியாயிருக்கிறது. நினைவிருக்கட்டும், பரிசுத்த ஆவியானவர் வந்து ஒரு நபரை அபிஷேகித்தும், அந்த நபர் இன்னமும் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்க முடியும். நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட மூல வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும்.
நீங்கள் இந்த வார்த்தையோடு தரித்திருக்க விரும்பி, எங்களோடு தேவனுடைய சத்தத்தைக் கேட்க விரும்பினால், அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 64-0816 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு., எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
நீங்கள் எங்களுடன் சேர்ந்து அல்லது எங்களுடன் ஒரே நேரத்தில் அதே ஒலிநாடாவைக் கேட்க வேண்டுமென்பதில்லை, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசிக்கு செவி கொடுங்கள் என்றே, நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 24:24
மாற்கு 5:21-43 / 16:15
லூக்கா 17:30 / 24:49
யோவான் 1:1 / 5:19 / 14:12
ரோமர் 4:20-22
I தெசலோனிக்கேயர் 5:21
எபிரெயர் 4:12-16 / 6:4-6 /13:8
I இராஜாக்கள் 10:1-3
யோவேல் 2:28
ஏசாயா 9:6
மல்கியா 4
தொடர்புடைய சேவைகள்
தீர்க்கதரிசிக்கு அன்பான நண்பர்களே,
தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்க இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் ஒன்றுகூடுவதைப் பற்றி நினைக்கும் போது என் இருதயம் உற்சாகத்தினால் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருப்பதும், அவர் தம்முடைய மணவாட்டியினிடத்தில், உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பெரிதான சந்தோஷம் என் ஜீவியத்தில் எதுவுமே இல்லை.
இந்த உலகில் எனக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருகிறது, அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. "காலை வணக்கம் நண்பர்களே" என்று நான் கேட்கும்போது, அது நித்திய ஜீவனின் வார்த்தைகளை என்னிடத்தில் பேசுகிறபடியால், நான் வசதியாக அமர்ந்து, இளைப்பாறி, அந்த ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து பருகுகிறேன். தேவன் அவரை எனக்கும் உங்களுக்கும் அனுப்பினார் என்பதை, சிந்தித்துப் பார்க்க வேண்டும், நாம் தேவனுடைய தீர்க்கதரிசி மற்றும் செய்தியாளனின் நண்பர்களாய் இருக்கிறோம்.
அவர் நம்முடைய வருங்கால பரலோக வீட்டைக் குறித்த யாவற்றையும் நமக்கு சொல்லும்படி தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பி மிக அதிகமாய் நம்மை நேசிக்கிறார். யோவானிடத்தில் சொல்லப்பட்டதை காட்டிலும் அதிகமான விவரத்தோடு கூட, அதைப் பற்றின எல்லாவற்றையும் நம்மிடத்தில் கூற அவர் மிகவும் உற்சாகமடைந்தார். அவர் எங்களுக்கு வெளிப்படுத்தினார், அது ஒரு சதுரமாக வடிவமைக்கப்பட்ட நகரம் அல்ல, ஆனால் ஒரு கூர்நுனி கோபுர நகரம், அங்கே ஆட்டுக்குட்டியானவர் அதன் உச்சியின் மேலிருந்து உலகத்தின் ஒளியாய் இருப்பார்.
வீதிகள் பொன்னினால் உண்டாக்கப்பட்டவை என்றும், நாம் ஜீவிக்கும் வீடுகளோ தெளிவான பளிங்குபோன்ற பொன்னாயிருக்கும் என்றும் அவர் நம்மை தெரிந்துகொள்ளச் செய்கிறார். அவர் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் சரியாக நம்முடைய மனதைத் தொடும் வண்ணமாகவே, நாம் விரும்பும் விதமாகவே அமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எதையும் செய்யாமல் விட்டுவிடவில்லை. தெய்வீக கட்டிடக் கலைஞர் நமக்காக, அவருக்கு பிரியமானவர்களுக்காக, இதை வடிவமைத்துள்ளார்.
ஜீவ விருட்சங்கள் அங்கே இருந்து, பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். நகரத்தின் வாசல்கள் இரவில் அடைக்கப்படுவதில்லை, ஏனென்றால் அங்கு இரவே கிடையாது, அவரே நம்முடைய ஒளியாக இருப்பார்.
அங்கே யார் இருக்கப்போகிறார்கள்?
நோவா தீர்க்கதரிசியுடன் புதிய பூமியில் யார் வெளியே வந்தார்கள்? அவருடன் பேழைக்குள் சென்றவர்கள். அது சரியா? அவர்கள் தான் வெளியே வருகிறார்கள். புரிகிறதா? நோவாவினுடைய செய்தியின் மூலம் உள்ளே சென்றவர்களே, புதிய பூமியின் தண்ணீர் ஞானஸ்நானத்திற்குப் பிறகு அதில் வெளியே வந்தவர்களாயிருந்தனர்.
என்னுடைய நண்பர்களே, அவர் நம்மைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறாரே! நாம் இன்றைக்கான நம்முடைய பேழையில்; அவருடைய வார்த்தையான, இந்த செய்தியில், நம்முடைய நோவா தீர்க்கதரிசியோடு இருக்கிறோம். அப்பால் உள்ள அந்த தேசத்தில், ஆட்டுக்குட்டியானவரே அங்கே அந்த நகரத்தில் விளக்காயிருக்கிறார், அவர் நம்மை அறிந்துகொள்வார். நாம் அவருடைய ஜனங்களாயும், கிரீடத்தில் உள்ள அவருடைய இரத்தினங்களாயும் இருக்கிறோம். நாம் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து, நான்கு சதுரமாக கட்டப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு வந்துள்ளோம். அந்த நகரத்திற்காகவே ஆபிரகாம் காத்துக்கொண்டிருந்தான்.
வார்த்தை தன்னை ரூபகாரப்படுத்துவதை நான் காண்கையில், சந்தேகத்திற் கிடமின்றி, அந்த நாளிலே, உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பார்க்கிலும் என்னுடைய கிரீடத்தின் இரத்தினங்களாக பிரகாசமாக ஜொலிப்பீர்கள் என்பதை, நான் அறிவேன்.
சந்தேகத்திற்கிடமின்றி நாம் அவருடைய கிரீடத்தின் இரத்தினங்களாக இருக்கிறோம் என்றும், அந்நாளிலே உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பார்க்கிலும் பிரகாசமாய் ஜொலிப்போம் என்பதையும், அவர் அறிந்திருந்தார் என்று, தேவனுடைய தீர்க்கதரிசி கூறினதை, நம்மால் கற்பனை செய்து பார்க்கக்கூட துவங்க முடியுமா…அல்லேலூயா...மகிமை...கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்.
நண்பர்களே, உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடி அமர்ந்து, இந்த ஒலிநாடாக்களில் அவருடைய வார்த்தையைக் கேட்டு, போஷிக்கப்படுவதே, இப்பொழுது அற்புதமாயிருக்கிறது என்று நாம் நினைத்தால், நாம் அவருடன் நகரத்தில் ஜீவிக்கும்போது அது எப்படி இருக்கும்!
தேவனுடைய தீர்க்கதரிசி நம்முடைய அண்டை-வீட்டுக்காரராக இருப்பார். நாம் அவரோடு அந்த மரங்களிலிருந்து புசித்து, அந்த வீதிகளில் நாம் ஒன்றாக நடப்போம். நாம் அந்த நீரூற்றண்டைக்கு அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து சென்று, அந்த நீரூற்றிலிருந்து பருகி, தேவனுடைய பரதீசியில் நடந்து, தேவ தூதர்கள் பூமியை சுற்றி வட்டமிட்டடிருக்க, கீதங்களைப் பாடுவோம்.
ஓ, அது என்னே ஒரு நாளாயிருக்கும்! அது முழுவதுமே பெருமதிப்புடையது. பாதையோ கரடுமுரடானதாகத் தென்பட்டு, சில சமயங்களில் அது கடினமாகிவிடுகிறது, ஆனால், ஓ, நான் அவரைக் காணும்போது அது மிக அற்பமானதாக, மிக அற்பமானதாகவே இருக்கும். அவர்கள் கூறியுள்ள காரியங்கள் மற்றும் மோசமான பெயர்கள் என்னவாயிருந்தாலும், நான் அவரை அந்த அழகான, அழகான தேவனுடைய நகரத்தில் காணும்போது அது என்னவாயிருக்கும்?
நண்பர்களே, அந்த நகரத்தைப் பார்க்கவும், அதில் இருக்கவும் நான் மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறேன். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரோடும், அவருடைய தீர்க்கதரிசியோடும், உங்கள் ஒவ்வொருவரோடும் அங்கே இருக்க வாஞ்சிக்கிறேன்.
நான் அந்த அழகான நகரத்திற்கு புறப்பட ஆயத்தமாயுள்ளேன்
என்னுடைய கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற
அந்த அழகான நகரத்திற்கு நான் போக புறப்பட்டுவிட்டேன்;
அங்கே எல்லா காலங்களிலும் மீட்கப்பட்டோர்,
வெள்ளை சிங்காசனத்தை சுற்றி "மகிமை!" என்று பாடுவரே.
பரலோகம் செல்ல நான் அநேக சமயங்களில் மிகுந்த ஆவல் கொண்டவனாய் இருக்கிறேன்,
அதனுடைய மகிமைகளை நான் அங்கே நின்று பார்ப்பேன்;
அந்த அழகான பொன்னான நகரத்தில்
என்னுடைய இரட்சகரை நான் காணும் போது அது என்னே ஒரு சந்தோஷமாக இருக்கும்!
தீர்க்கதரிசியின் நண்பர்களே, பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் அவர் எங்களிடம் பேசுவதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு தேவனுடைய சத்தம் எங்களிடம் பேசுவதைக் கேட்க அவருடைய சிங்காசனத்தை சுற்றி நாங்கள் ஒன்றுகூடுகையில், எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் உலகத்திலுள்ள எல்லோரையும் அழைக்கிறேன். இது உங்களுடைய ஜீவியத்தில் மிக மகிழ்ச்சியான ஒரு முக்கிய நாளாயிருக்கும் என்பதை, என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி.மத்தேயு 19:28
பரி. யோவான் 14: 1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21: 1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-வது அதிகாரம் / 28:10 / 65:17-25 மல்கியா 3:6
அன்புள்ள ஆர்ட்டீசியன் தண்ணீரை பருகுபவர்களே,
நாம் ஓட்டுப்போடப்பட்டிருக்கவில்லை, நாம் உற்பத்தியான வார்த்தையின் அசலான பாகமாக இருக்கிறோம்.பரிசுத்த ஆவியானவர் தாமே, அதை முதிர்ச்சியடைய செய்து, ரூபகாரப்படுத்தி, நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் அதனுடைய ரூபகாரப்படுத்துதலின் வல்லமையிலும், அது என்னவாய் உள்ளது என்ற வெளிப்பாட்டிலும் அதை அதனுடைய பரிபூரணத்தில் ஏற்றுக்கொண்டு, நாம் அதனுடைய ஒரு பாகமாகியிருக்கிறோம். அது நமக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானது.
பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரு தாழ்மையான, தகுதியற்ற பாத்திரத்தின் மூலம் பேசி, "இதோ என் செங்கோல், என் வார்த்தை, அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்று, செய்தியைக் கொண்டு வாருங்கள்" என்றார். அவர் தம்முடைய மணவாட்டியாக நம்மை உருவாக்க, அவருடைய வார்த்தையை எடுத்து, நம்மை வெட்டியெடுத்தார்.
ஜனங்கள் சபைகளைவிட்டு வெளியேறி ஒலிநாடாக்களை போட்டுக் கேட்கப் போவதை காண்பது ஆசாரியர்களை தொல்லைப்படுத்தியிருக்கிறது. அவர்கள், "உங்களில் யாராவது கூட்டங்களில் கலந்துகொண்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள், நாங்கள் உங்களை எங்களுடைய ஸ்தாபன அமைப்பிலிருந்து வெளியேற்றுவோம்" என்றார்கள்.
அவர்களுடைய பிரதியுத்தரமோ: நீங்கள் எங்களைப் புறக்கணிக்கலாம், நாங்களோ எப்படியும் போய்கொண்டிருக்கிறோமே! நாங்கள் கர்த்தராகிய இயேசுவோடு, எங்களுடைய அடிக்கப்பட்ட கன்மலையோடு, தூதனுடைய ஆகாரத்தை, பரத்திலிருந்து வந்த சேகரிக்கப்பட்ட மன்னாவைப் புசித்துக் கொண்டு, கன்மலையிலிருந்து தண்ணீரைப் பருகிக்கொண்டு பயணத்தில் இருக்கிறோம். நாங்கள் எதைப் பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை குறித்து ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை, அது சுத்த வார்த்தையேயல்லாமல் வேறொன்றுமில்லை.
நாம் எப்பொழுதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு எழுப்புதலைப் பெற்றுள்ளோம். நம்முடைய ஊற்று எப்பொழுதுமே பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு முடிவே இல்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தும் ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல, குளிர்ந்த குடிநீரைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் அதன் பேரில் சார்ந்திருந்து, அதன் பேரில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அங்கு சென்று அதை பருகுவதேயாகும்.
நாம் அனுதினமும் அந்த பீறிட்டு பெருக்கெடுக்கும் ஊற்றினால் ஜீவிக்கிறோம்! நாம் ஒருபோதும் இழுக்கவோ, தோண்டவோ, அழுத்தி மேலெழும்பச் செய்யவோ அல்லது எதையுமே செய்ய வேண்டியதில்லை; அவருடைய அருளப்பட்ட வழியில், இலவசமாக பங்குகொள்ளகிறோம். நீங்கள் விரும்புகிற உங்களுடைய மனிதனால்-உண்டாக்கப்பட்ட எல்லா முறைமைகளையும், உங்களுடைய பழைய தேக்கமடைந்த எல்லா கிணறுகளையும் எடுத்துக்கொள்ளலாம்; எங்களுக்காக, நாங்கள் அவருடைய சுத்த ஊற்றண்டைக்கு வந்துள்ளோம். அதுவே எங்களுடைய சந்தோஷம். அதுவே எங்களுடைய வெளிச்சமும் பெலனுமாயிருக்கிறது.
அவரே என்னுடைய தண்ணீர். அவரே என்னுடைய ஜீவன். அவரே என்னுடைய சுகமளிப்பவர். அவரே என்னுடைய இரட்சகர். அவரே என்னுடைய ராஜா. எனக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் அவரில் காணப்படுகிறது. நான் ஏன் வேறேதோ காரியத்திற்கு செல்ல வேண்டும்?
எங்களைப் பொறுத்தவரை, வேறெங்கும் செல்லாமல் நேரடியாக தேவன் அருளியிருக்கிற ஊற்றண்டைக்கே செல்கிறோம். நாங்கள் என்னத்தைக் குடிப்போம் என்று ஒருபோதும் கவலைப்படுவதேயில்லை. பெரிய அழுக்கான பொருட்களை வடிகட்டிவிட்டு, ஆனால் அழுக்கடைந்த அதன் சாரத்தை விட்டுவிடுகிற பழைய கந்தலான வடிகட்டும் துணியை ஒருபோதும் உபயோகிக்க வேண்டியதில்லை. நாம் நமக்குத் தேவையான அனைத்து தாதுக்களோடும், ஊட்டச்சத்துக்களுடனும் சுத்தமான ஆர்ட்டீசியன் நீரைப் பெறுகிறோம்.
அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்: என் சிறு பிள்ளைகளே, இனி எதற்கும் கவலைப்பட வேண்டாம், பரிசுத்த ஆவியின் அசலான அத்தாட்சி உங்களிடம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், நீங்கள் என்னுடையவர்கள். நாம் ஒன்றாயிருக்கிறோம். கணவனும் மனைவியுமாகவே.
நான் உங்களுக்காக ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே வருகிறேன். நான் உங்களுக்கு ஒரு புதிய வீட்டை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய இறுதித் திட்டங்களை நீங்கள் விரும்புவீர்கள். இப்போது இது உங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது என்பதை நான் அறிவேன், மேலும் உங்களுக்கு பல பரிசோதனைகளும், சோதனைகளும் உள்ளன, உங்களுடைய சுமைகள் பாரமானவைகளாயுள்ளன. ஆனால் மறந்துவிடாதீர்கள், நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை, நான் உங்களுக்கு என்னுடைய வார்த்தையைக் கொடுத்துள்ளேன். நீங்கள் என்னுடைய வார்த்தையாயிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்துள்ளேன். வார்த்தையைப் பேசுங்கள், சந்தேகப்பட வேண்டாம். உங்களுடைய விசுவாசமும், மேலும் கூடுதலாக என்னுடைய தீர்க்கதரிசி உங்களுக்கு அளித்த அவருடைய விசுவாசமும் உங்களிடம் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 64-0726E வெடிப்புள்ள தொட்டிகள் என்ற செய்தியை கேட்கவும், வடிகட்டிகளே தேவையில்லாத சுத்தமான வார்த்தையை இந்த ஆர்ட்டீசியன் ஊற்று பீறிட்டுப் பொங்குவதால், இதிலிருந்து பருக நீங்கள் எங்களோடு சேர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
சங்கீதம் 36:9 எரேமியா 2:12-13 பரி. யோவான் 3:16 வெளிப்படுத்தின விசேஷம் 13-வது அதிகாரம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
சங்கீதம் 36:9
எரேமியா 2:12-13
பரி. யோவான் 3:16
வெளிப்படுத்தின விசேஷம் 13-வது அதிகாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான வெட்டியெடுக்கப்பட்டவர்களே,
நாம் ஏன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!!
நாம் கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டோம். தேவனுடைய தீர்க்கதரிசியான மல்கியா 4-ன் மூலம் உரைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. நாமே அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்திற்கு உண்மையாக தரித்திருக்கிறவர்களாய் இருக்கிறோம். நாமே அவர் அளித்திருக்கிற மகத்தான கிரயத்தின் முத்தான, அவருடைய செய்திக்கும், அவருடைய செய்தியாளனுக்குமான உண்மையான வெளிப்பாடாக இருக்கிறோம்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் வார்த்தையை எடுத்து, ஒவ்வொரு சிறு எழுத்தையும் ஒவ்வொரு சிறு உறுப்பையும் விசுவாசிக்கிற ஒரு மணவாட்டியை வெட்டியெடுத்துள்ளார். அவர் செய்வதாக வாக்களித்தபடியே அவர் நம்மை வெட்டியெடுத்துள்ளார். நாம் தேவனுடைய ஆடுகளாயும், தேவனுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறவர்களாயும் இருக்கிறோம்! "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது" என்றவாறே, நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கிறோம்.
நாம் தேசம் முழுவதிலுமிருந்து; நியூயார்க், மாசசூசெட்ஸ், பாஸ்டன், மைனே, டென்னசி, ஜார்ஜியா, அலபாமா மற்றும் தேசம் முழுவதிலிருந்துமே உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து மெக்சிகோ, ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, நாம் ஒரே செய்தி, ஒரே சத்தத்தின் கீழே ஒன்றுகூடிக்கொண்டிருக்கிறோம், இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான மணவாட்டியை இணைத்துக் கொண்டிருக்கிறது.
நம்முடைய தீர்க்கதரிசி, தேவனுடைய செய்தியாளர், மனுஷகுமாரன் தன்னை மாம்சத்தில் வெளிப்படுத்தி, "சாத்தானே, என்னுடைய வழியை விட்டு விலகு, நான் ராஜாவின் செய்தியை உடையவனாயிருக்கிறேன். நான் ராஜாவினுடைய செய்தியாளன். நான் இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை உடையவனாயிருக்கிறேன். நான் அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து, வழிநடத்த முன்குறிக்கப்பட்டிருக்கிறேன்.
"நான் ஒரு ஜனத்தை வெளியே இழுத்து, இந்தக் காரியங்களிலிருந்து அவர்களை வெட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் ரூபகாரப்படுத்துதலோடு; தேவன் இங்கு நின்றுகொண்டிருக்கிறார் என்று, வேத வாக்கியங்களினால், அவர்களுக்கு காண்பிக்கும்படி; அவர்களை வெளியே இழுக்கிறேன்.
அவர் ஜீவனுக்கு முன்குறித்திருந்த ஜனங்கள் பூமியின் மேல் இருக்கிறதை தேவன் அடையாளம் கண்டு கொண்டார். அவர் தம்முடைய செய்தியாளனை அனுப்பி தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க இதுவே நேரம் என்பதை அடையாளம் கண்டு கொண்டார், எனவே அவர் அதை செய்தார். நாமே அதை அடையாளம் கண்டு கொண்டவர்களாக இருக்கிறோம். நாமே ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்போம் என்று அவர் அறிந்திருந்தார்.
தேவன் மானிட சரீரத்திலிருந்து தன்னிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதை ஆபிரகாம் அடையாளம் கண்டு கொண்டான். அவன் அவருடைய அடையாளத்தை அடையாளம் கண்டு கொண்டு அவரை ஆ-ண்-ட-வ-ரே, எலோஹிம் என்று அழைத்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான். அது அந்த நாளில் இருந்தது போலவே, மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படும்போது, எலோஹிம், மானிட சரீரத்தினூடாக பேசுகிறார் என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டோம்.
நாம் அவருடைய பாகமாயும், அவருடைய குமாரனின் பாகமாயும் இருக்கிறோம், நாம் அவருடன் என்றென்றும் நிலைத்திருப்போம். இது நம்முடைய அழைப்பினாலோ அல்லது நம்முடைய தெரிந்துகொள்ளுதலினாலோ அல்ல, ஆனால் அவருடைய தெரிந்துகொள்ளுதலினாலே. நமக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. அவரே உலகத் தோற்றத்திற்கு முன்னர் நம்மைத் தெரிந்துகொண்டவராய் இருக்கிறார்.
நீங்கள் எவ்வளவுதான் பிரசங்கித்தாலும், நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது முதிர்ச்சியடையப்பட முடியாது, அது வெளிப்படுத்தப்பட முடியாது, அது ரூபகாரப்படுத்தப்பட முடியாது; "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்ற வார்த்தையை கூறினவரால் மாத்திரமே முடியும். இந்த நாளில் சம்பவிக்கும் என்று அவர் முன்னுரைத்திருக்கிறதை வெளிப்படுத்தும்படியாக அல்லது நிரூபிக்கும்படியாக அல்லது ரூபகாரப்படுத்தும்படியாக ஒரு-ஒரு-ஒரு வல்லமை, பரிசுத்த ஆவியானவர் தாமே வர வேண்டியதாய் இருக்கிறது. சாயங்கால வெளிச்சம் அதை உருவாக்குகிறது. என்னே ஒரு நேரம்!
நாம் அவருக்கு முன்னால் கடந்து சென்ற போது அவர் நம்மை ஒரு தரிசனத்தில் கண்டார். மணவாட்டி ஆரம்பத்தில் இருந்த அதே நிலையில், அல்பாவும் ஒமேகாவுமாக, நாம் இருந்தோம். சிலர் அணிவகுப்பின் வரிசையை விட்டு விலகுவதை அவர் கவனித்துகொண்டிருந்து, அவளை திரும்பவும் அணிவகுப்புக்குள் இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார், ஆனால் நாமே "நாங்கள் அதன்பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்" என்று சத்தமிட்டவர்கள்.
கவனியுங்கள், "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல," அவன் தொடர்ந்து வருவான், அவர்களைப் போன்ற சிலர். இப்பொழுது இல்லை, அவர் இங்கு மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட்டைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை; அவர்கள் காட்சியிலேயே இல்லை. புரிகிறதா? “ஆனால், யந்நேயும் யம்பிரேயும் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து நின்றதுபோல, அவர்களும் எதிர்த்து நிற்பார்கள்; சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிற துர்பத்தியுள்ள மனிதர்,” வேதாகமத்திற்கு பதிலாக, சபையின் உபதேசங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் தாறுமாறாக்கப்பட்டுள்ளனர்.
நம்முடைய நாளுக்கான உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையுடன் நாம் எவ்வளவு கவனமாக தரித்திருக்க வேண்டும். வார்த்தை யாரிடம் வருகிறது என்பதை நாம் எப்போதும் அடையாளம் கண்டு கொண்டு, நினைவில் கொண்டிருக்க வேண்டும். வார்த்தையின் ஒரே தெய்வீக வியாக்கியானி யார்? நம்முடைய நாளுக்கான வார்த்தை யார்?
"என் வார்த்தையே ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது" என்ற தேவனுடைய வார்த்தையான, தேவ ஆவியானவர், மணவாட்டியை அவளுடைய ஸ்தானத்தில் பொருத்துவார். காரணம், அவள் வார்த்தையில் தன்னுடைய ஸ்தானத்தை அடையாளம் கண்டுகொள்வாள், அப்பொழுது அவள் கிறிஸ்துவில், அவளுடைய ஸ்தானத்தில் அவள் பொருத்தப்படுவாள்.
உன்னுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல் 64-0726M என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஏலோகிம் அவருடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி எங்களுக்கு அதைக் கொண்டு வருவதை நாங்கள் கேட்கையில், வார்த்தையில் உங்களுடைய ஸ்தானத்தை அடையாளம் கண்டு கொண்டு உங்களுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட, நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தத்தை நீங்கள் கேட்க வரும்படி அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஓசியா: அதிகாரம் 6
எசேக்கியேல்: அதிகாரம் 37
மல்கியா: 3:1 / 4:5-6
11தீமோத்தேயு: 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம்: அதிகாரம் 11
தேவனே, ஒரு எழுப்புதலை எனக்குள்ளாக சிருஷ்டியும். நானே அந்த எழுப்புதலாய் இருக்கட்டும். நாங்கள் ஒவ்வொருவரும் அந்த எழுப்புதலாய் இருப்போமாக, அந்த எழுப்புதல் எனக்குள்ளாக இருக்கட்டும். கர்த்தாவே, என்னை பசியுள்ளவனாக்கும், என்னை தாகமுள்ளவனாக்கும். கர்த்தாவே, எனக்குள்ளாக தேவைப்படுகின்றதை, எனக்குள்ளே சிருஷ்டியும். இந்த மணி நேரம் முதற்கொண்டு, நான் உம்முடையவனாய் இருக்கட்டும்; அதிக அர்ப்பணிக்கப்பட்ட ஊழியக்காரனாய், ஒரு மேலான ஊழியக்காரனாய், உம்மால் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவனாயும் இருப்பேனாக; அதிக ஆற்றலுள்ளவனாய், அதிக தாழ்மையாயுள்ளவனாய், அதிக தயவுள்ளவனாய், ஊழியம் செய்ய அதிக உற்சாகமுள்ளவனாய் இருப்பேனாக; அதிக உறுதியான காரியங்களையே எதிர்நோக்கி, பின்னானவைகளையும், எதிர்மறையான காரியங்களையும் மறப்பேனாக. நான் கிறிஸ்துவின் பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர்வேனாக. ஆமென்.
சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்