ஞாயிறு
19 ஜூன் 2022
63-1110M
இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்

அன்புள்ள பிதாவே, உம்முடைய விலையேறப்பெற்ற மணவாட்டியை ஊக்குவிக்க, ஏதோ சில சிறிய வழியில், நீர் என்னை பயன்படுத்தும்படியாக, இன்றைக்கு என்னால் என்ன எழுத முடியும்?

தேவன் நம்முடைய நாளில் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று பெயரிடப்பட்ட ஒரு மனிதனுக்குள் வந்து, மானிட சரீரத்தில் ஜீவித்தார், அதனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி நிறைவேற்ற முடிந்தது. அதுவே நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயுள்ளது.

அந்த சத்தத்தைக் கேட்பதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதுமே இன்றைக்கு தேவன் அருளியுள்ள ஒரே வழியாயுள்ளது. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், அவருடைய மணவாட்டியை வழிநடத்தவும் ஒரு மனிதனை மாத்திரமே அனுப்பி, அவர் மூலமாக மட்டுமே பேசினார்.

அவர் தம்முடைய திட்டத்தை அல்லது காரியங்களை செய்யும் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் அதை முதல் முறை எப்படிச் செய்தாரோ, அவர் ஒவ்வொரு முறையும் அதை அவ்வாறே செய்கிறார். அவர் தாமே தம்முடைய ஜனங்களை, அக்கினி ஸ்தம்பத்தினால் வழிநடத்துகிறார்.

நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, பிசாசு எதையும் செய்யவோ அல்லது உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளும்படி எதையும் கூறவோ முடியாது, ஒன்றுமே செய்ய முடியாது! அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களை முன்குறித்தார். அப்பொழுதே அவர் உங்களை அறிந்திருந்தார், அப்பொழுதே நீங்கள் அவருடன் இருந்தீர்கள். அவர் உங்கள் பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருந்தார். அவர் உங்களுடைய ஏற்றத் தாழ்வுகளை அறிந்திருந்தார். அவர் உங்களுடைய தோல்விகளை, உங்களுடைய தவறுகளை அறிந்திருந்தபோதிலும், அவர் உங்களை நேசித்தார், ஏனென்றால் நீங்கள் அவருடைய பாகமாக இருந்தீர்கள்.

உங்களுடைய ஆத்துமாவால் அவருடைய வார்த்தையை மட்டுமே புசிக்க முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து, அவர் பேரில் தியானித்து, உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அவருடைய சத்தம் உங்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்கும்போது, அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. அவர் உங்களிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசி, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி, நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று நினைப்பூட்டுகையில், நீங்கள் அவரோடு கூட உன்னதங்களில் வீற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பிசாசு உங்களைத் தாக்கி, தாக்கி, தாக்கிக்கொண்டேயிருக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் தாழ்ந்து போய், நீங்கள் ஒரு முற்றிலுமான தோல்வியை உணரலாம்; மற்ற எவருமே அந்த அளவிற்கு தோல்வியுறாததுபோல நீங்கள் அவரிடத்தில் தோல்வியுற்றிருப்பதுபோல் உணரலாம். நீங்கள் மிகவும் மோசமாகிவிட்டாலும், எங்கோ, உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்தில், "எதுவுமே உங்களை என்னுடைய வார்த்தையிலிருந்து வேறுபிரிக்க முடியாது, நீங்கள் என்னுடைய வார்த்தையாயிருக்கிறீர்கள். நான் தானே உங்களுடைய பெயரை என்னுடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தேன்:" என்று உங்களிடம் சொல்லுகிற அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள்.

இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்? ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது: என்று உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் அந்த அமர்ந்த மெல்லிய சுத்தமான: 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள் என்ற செய்தியை கேட்க நாங்கள் கூடி வருகையில், நீங்கள் மணவாட்டியோடு சேர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம் 15:16
பரி. மத்தேயு 23: 27-34
பரி. யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1 பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6