ஞாயிறு
08 மார்ச் 2026
65-0219
இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள மேம்பட்ட ராஜரீக வித்தே,

நாம் ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கிய நேரம் இங்கே உள்ளது. நாம் வந்தடைந்துவிட்டோம். அது நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் நாம்: இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிற்று என்பதைக் கூற முடியும்.

மணவாட்டியோடு வெளிப்படுத்தலினால் என்னே ஒரு ஊக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நம்முடைய இருதயங்களிலும் ஆத்துமாக்களிலும், "கர்த்தாவே, இது எப்படி மகத்தான தாகவும், அற்புதமானதாகவும் இருக்க முடியும்?" என்று நாம் உணர்கிறோம். அவருடைய சத்தம் நம்மை அழைத்து, "நீ என்னுடைய இனிய இருதயம். நான் உன்னை என் மணவாட்டியாக இருக்கும் படிக்கு தெரிந்து கொண்டேன். நான் உனக்கு வாக்களித்தபடி, நான் உனக்காக வருகிறேன். நான் என் வழியில் இருக்கிறேன். சீக்கிரத்தில் நாம் நித்தியத்திற்காக ஒன்றாக இருப்போம்" என்று கூறுவதைக் நாம் கேட்கும்போது, அவர் மீண்டும் நம்மிடையே வந்து, நம்மை அபிஷேகிக்கிறார்.

நாம் உலகம் முழுவதிலுமிருந்து கூக்குரலிடுகிறோம், நம்முடைய அல்லேலூயாக்கள், மகிமைகள், துதிகள் மற்றும் அவருக்கு ஆராதனை செய்வதன் மூலம் பரலோகத்தைத் தாக்குகிறோம். சாத்தான் தோற்கடிக்கப்பட்டான். பிதாவானவர் நம்முடைய எல்லா சந்தேகங்களையும், நம்முடைய எல்லா நிச்சயமற்ற தன்மைகளையும், அனைத்தையும் நீக்கிவிட்டார். நாம் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும், நாம் ஆபிரகாமின் மேம்பட்ட ராஜரீக சந்ததி என்று அறிவிக்க முடியும். வாக்குப்பண்ணப்பட்ட ராஜரீக குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி.

கர்த்தருடைய பிரசன்னம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமக்குத் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவதால் மிகவும் அற்புதமாக உள்ளது. அவர் தம்முடைய மணவாட்டியை தம்முடைய வார்த்தையுடன் ஒன்றிணைத்து, நம்மை ஏக சிந்தையோடு ஏக மனதோடு ஒரே குழுவாக வைத்து, தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேட்டு, அவருடைய வார்த்தையால் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறார்.

நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் நம் ஆத்துமாவிற்குள் பீறிட்டு பாய்கிற ஒரு ஆர்ட்டீசியன் ஊற்றைப் போன்றது; தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பீறிட்டு, தள்ளி, புதியதாக பொங்கி வழிகிறது. நாம் பருகி, பருகி, பருகி நம்முடைய ஆத்துமாக்களைப் புதுப்பித்துக் கொள்கிறோம்.

என் சகோதர சகோதரிகளே, அவருக்கு ஒரு கன்னிகையான வார்த்தை மணவாட்டி இருப்பாள் என்று கூறும் வேதவாக்கியங்களின் நிறைவேறுதலாய் நாம் இருக்கிறோம். நாம்: இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்பதாய் இருக்கிறோம்.

தேவன் தாமே பரலோகத்திலிருந்து தம்முடைய ஏழாம் தூதனிடம் பேசி, “கிறிஸ்துவின் முதல் வருகையை முன்னறிவிக்க யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டதைப் போலவே, உன்னுடைய செய்தியும் உலகம் முழுவதும் அவருடைய இரண்டாவது வருகையை முன்னறிவிக்கும்” என்றார். எனவே மணவாட்டி: இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்று கூற முடியும்.

நம்முடைய காலத்தில் தேவனுடைய சத்தம் மனித உதடுகள் வழியாகப் பேசப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, நம் ஒவ்வொருவரிடமும், கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேச முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமா? யாருடைய வார்த்தையையும், யாருடைய எண்ணங்களையும், யாருடைய யோசனைகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அமர்ந்து அவருடைய கலப்படமற்ற வார்த்தையை நம்மிடத்தில் நேரடியாக பேசுகிற அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்பதை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.

இன்று என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது?

கிழக்கில் உதிக்கும் அதே—அதே சூ-ரி-ய-னே மேற்கில் அதே சூ-ரி-ய-னா-க அஸ்தமிக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்திலும் அதே தேவ கு-மா-ர-னாய் இருக்கிறார், இன்றிரவும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற தம்மை, சபையின் மத்தியில் அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். சாயங்கால குமாரனின் வெளிச்சம் வந்துவிட்டது. இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நமக்கு முன்பாக நிறைவேறிற்று.

“ஒலிநாடாக்களை இயக்குவது தேவன் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற வழி” என்று கூறி விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோமா”?

ஒலிநாடாக்களை கேட்பதை விட மகத்தானது ஏதாவது இருக்கிறதா?

நான் நேற்றிரவு கூறினதுபோல, எப்பொழுதுமே மூன்றில், தேவன் சுட்டிக்காட்டப்படுகிறார். ஆண்புணர்ச்சிக்காரர்கள், லோத்தியர்கள், ஆபிரகாமியர்கள் இருந்தனர். இன்றிரவு அது அதே நிலையில் உள்ளது, உலகம் அந்த விதமாக அமைந்துள்ளது.

கவனியுங்கள், ஆபிரகாமோடு தங்கியிருந்த ஒருவர் தாமே தேவனாயிருந்தார். மற்ற இருவரும் தூதனின் செய்தியாளர்களாயிருந்தனர்.

அப்படியானால் ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது யார்?

நான் உங்களை ஒன்று கேட்கட்டும். இப்பொழுது இந்த அமைப்பைப் பாருங்கள். ஆபிரகாம் தன்னோடு பேசின இந்த மனிதனை “ஏலோகிம்” என்று அழைத்தான். ஏலோஹீம் என்ற எபிரெய வார்த்தைக்கு “எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர், அந்த ஒருவர் நித்தியமானவர்” என்று பொருள்படுகிறார், ஏலோஹீம், தேவன் தாமே!

இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது எவ்வளவு முக்கியமானது?

…“என்றோ ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே காரியத்தை செய்வார், அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும் மன்னிக்கப்படமாட்டாது” என்றார். அது இந்த நாளிலே, ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். “அதற்கு விரோதமாய் ஒரு வார்த்தைப் பேசினாலும்; அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்று கூறினார்.

நம்முடைய கடந்த வாரத்தின் அல்லேலூயாக்களும் கர்த்தரைத் துதிப்பதும் இந்த ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதற்கான ஒரு ஆயத்தமாக மட்டுமே இருந்தது, மணவாட்டி மீண்டும் ஒன்றுபட்டு, தேவன் நம்மை ஊக்குவிப்பதையும், நாம் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நமக்கு உறுதியளிப்பதையும் கேட்கிறபடியால், அவர் சீக்கிரத்தில் நம்முடைய மகத்தான கலியாண விருந்துக்கும், பின்னர் நம்முடைய வருங்கால வீட்டிற்கும் நம்மை அழைத்துச் செல்ல வருகிறார்.

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 65-0219 - "இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று"

 

வேதவாக்கியங்கள்:

பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16

 

இந்த வார இறுதியில் ஜெபர்சன்வில்லில் நேர மாற்றத்தைப் பற்றி மறந்துவிடாதீர்கள்.