Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டியே,
நான் இந்தக் காலை இங்கு அமர்ந்து கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மணவாட்டி கேட்கும் இந்தச் செய்தியைக் கேட்கும்போதும், படிக்கும்போதும், ஆய்ந்துப் பார்க்கும்போதும் அப்படிப்பட்ட அபிஷேகத்தை உணருகிறேன். என்னுடைய முழு சரீரமும் அபிஷேகிக்கப்பட்டுள்ளது. இந்த அபிஷேகத்தால் நாம் அனைவரும் உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடுவோம் என்பதை அறிந்து என் இருதயம் மிகுந்த சந்தோஷத்தால் பொங்கி வழிகிறது. அவர் நம் ஒவ்வொருவரிடமும் பேசுகிறபோதும், அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறபோதும், நாம் அனைவரும் ஒரே நேரத்தில் களி கூர்ந்து, கர்த்தரைப் துதித்துக்கொண்டிருப்போம்.
அபிஷேகம் மிகவும் மகத்தானதாக இருக்கும், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் "அல்லேலூயா, ஆமென், கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்" என்று ஆரவாரமிட்டு சத்தமிடுதலும் இருக்கும், அதே நேரத்தில் நாம் நமது துதிகளோடு ஆராதிப்பதன் மூலம் பரலோகத்தில் வெற்றி முழக்கமிடுவோம்.
என்ன நடந்து கொண்டிருக்கும்? தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைந்துப் பேசிக்கொண்டிருப்பார். அவர் வெளிப்படுத்துகிறபோது, தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறபோது, ஏக மனதோடு, ஒருமனப்பட்டு, நாம் ஒரே குழுவாக இருப்போம்.
நீங்கள் செல்லக்கூடிய சிறந்த இடம் எதுவுமில்லை, நீங்கள் கேட்கக்கூடிய சிறந்த சத்தம் எதுவுமில்லை; ஒலிநாடாக்களில் நேரடியாக உங்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தத்தை விட மகத்தான அபிஷேகம் வேறெதுவும் இல்லை.
தேவன் ஆதியிலிருந்தே தம்முடைய வார்த்தையைக் கண்காணித்து வந்துள்ளார், மேலும் தம்முடைய எல்லாப் பிள்ளைகளும் சென்று அவர் பேசுவதையும், அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதையும் கேட்கக்கூடிய ஒரு இடத்தை அருளியுள்ளார். யூகிக்கவோ, எதிர்பார்க்கவோ, யோசிக்கவோ இல்லாத ஒரு இடம்; கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கேட்க இது தேவன் அருளியிருக்கிற ஸ்தலமாகும்.
அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்போது, அது உங்கள் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஏற்றப்பட்ட ஒரு பெரிய ஒளியைப் போன்றது... நீங்கள், "இதுதான். நான் அதைப் பார்க்கிறேன். நான் வார்த்தையுடன் ஒன்றாக இருக்கிறேன். நான் வார்த்தை. நான் மணவாட்டி. நான் வந்துவிட்டேன்" என்று சத்தமிடுகிறீர்கள்.
அது சம்பவித்துக் கொண்டிருக்கிறது, அவர்கள் அதை அறிவதில்லை. பாருங்கள், அதுதான். பார்த்தீர்களா? ஆம், ஐயா. உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.” பார்த்தீர்களா? அப்படித்தான் கூறப்பட்டுள்ளது. பிணம் என்றால் என்ன? வார்த்தை. அவரே வார்த்தை, பிணம், கிறிஸ்து! “கிறிஸ்து உங்களுக்குள்” நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது எவ்வளவு உண்மை!
நாம் வார்த்தையைக் கேட்க கூடிவரும்போது, நம்முடைய எல்லா கவலைகளும், நம்முடைய எல்லா மன அழுத்தமும், நம்முடைய எல்லா பிரச்சினைகளும் எளிமையாக மறைந்துவிடும். நமக்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து நாம் களிகூருகிறோம்; நாம் அவருடைய மணவாட்டி. அவர் நம்முடன் மட்டுமல்ல, ஆனால் அவர் நமக்குள்ளும் இருக்கிறார். நாம் வித்தான வார்த்தை மணவாட்டி. ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக இருக்கிறது. அவருடைய நேரமும் பரிபூரணமாக இருக்கிறது. நாம் பரிபூரணமாயிருக்கிறோம்.
நாம் வெளிப்படுத்தப்பட்ட அவரது கன்னிப்-பிறப்பான வார்த்தை என்று சொல்வதில் நாம் மிகவும் திருப்தியடைகிறோம், மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராய், நமக்குள் ஜீவித்துக்கொண்டும், வாசம் செய்து கொண்டும் இருக்கிறார். அல்லேலூயா!
ஒரு வார்த்தையின் பேரில் கூட நாம் ஒப்புரவாக முடியாது. நாம் ஒலிநாடாக்களில் சத்தத்தைக் கேட்க வேண்டும்.
நீங்கள் எப்போதாவது ஒரு கழுகு ஒப்புரவாகுவதைக் கண்டிருக்கிறீர்களா? இல்லை ஐயா. அதற்குள் விட்டுக்கொடுக்கும் தன்மையே கிடையாது. ஒரு உண்மையான கிறிஸ்தவனும் அவ்வாறில்லை. அவன் மென்மையானவன் அல்ல. அதைக் கண்டுபிடிக்கும் வரை வேட்டையாடுவான். ஆமென். ஆம், ஐயா. அவன் தன் ஆகாரத்தைக் கண்டுபிடிப்பான். அவனுக்குப் புதிய மன்னா வேண்டும். அவன் அங்குச் சென்று அதைக் கண்டுபிடிக்கும் வரையில் தோண்டியெடுப்பான். அவன் இன்னும் உயரப் பறந்து செல்வான். இந்தப் பள்ளத்தாக்கில் ஒன்றுமே இல்லையென்றால், அவன் சற்று உயரமாக எழும்புவான். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களால் பார்க்க முடியும். எனவே இக்காலத்து கழுகுகள் உயர பறந்து சென்று, தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமாயுள்ளது, பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட ராஜாளிகளின் ஆகாரத்தினால் ஜீவிக்காமல், அதிலிருந்து வெளியேற வேண்டும்.
ஆயத்தமாகுங்கள் மணவாட்டியே, 65-0218 வித்து பதருடன் சுந்தரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிற படியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, அங்குள்ள மகத்தான அபிஷேகத்தின் கீழ் அமர்ந்து அந்த புதிதான மன்னாவை நாம் புசிப்போம்.
தேவன் அருளியுள்ள இன்றைக்கான பரிபூரண வழியின் பேரில் விருந்துண்டு மகிழ உலகெங்கிலும் உள்ள மணவாட்டியை எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் அழைக்கிறோம். மணவாட்டி ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்லக்கூடிய ஒரே இடம். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்டு அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதனால் உன்னத பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பேசி அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேதவாக்கியங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 5:24 / 14:12
ரோமர் 8:1
கலாத்தியர் 4: 27-31
எபிரெயர் 13:8
1 யோவான் 5:7
வெளிப்படுத்தின விசேஷம் 10
மல்கியா 4