ஞாயிறு
22 பிப்ரவரி 2026
65-0217
கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிபோகும் ஒரு மனிதன்
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள ஆட்டுக்குட்டிகளே,

"நாம் தேவனுடைய ஆட்டுக்குட்டிகள், அவர் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரை அனுப்பி அழைத்து, தம்முடைய சேமித்து வைக்கப்பட்ட மறைவான மன்னாவை போஷிக்கிறார்,” என்று கூறுவது என்னே ஒரு கனமும் சிலாக்கியமுமாயிருக்கிறது.

இந்தச் செய்தி அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்த அனுப்பப்பட்டிருக்கிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். கோதுமையிலிருந்து பதர் விலகிச் செல்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், இப்போது அவருடைய மணவாட்டி முதிர்ச்சியடையும்படிக்கு இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்படிக்கு குமாரனின் பிரசன்னத்தில் இருக்கிறாள்.

அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம், நண்பரே, இங்கே உள்ள எங்கள் சிறிய மக்கள் குழு, அது கிறிஸ்துவுக்கு அவ்வளவாக முதிர்ச்சியடையும் வரை, அது அவருடைய மேஜையில் அப்பமாக மாறும் வரை, குமாரனின் பிரசன்னத்தில் தரித்திருக்கிறோம். அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன்.

இயங்கு பொத்தானை அழுத்தி நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தம் பேசுவதைக் கேட்காத எவரும் கர்த்தருடைய சமூகத்திலிருந்து விலகி ஓடிப் போகிற ஒரு நபராக இருக்கிறீர்கள்.

நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும், அல்லது அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் அது உண்டு, நீங்கள் இந்த காரியங்களை எதிர்கொள்ள வேண்டும்.

இன்றைக்கான இந்த மேற்கோள் எவ்வளவு உண்மையும் முக்கியமானதுமாயுள்ளது. தேவனால் அழைக்கப்பட்டவர்களிடையே அதிக பிரிவினை உள்ளது. தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படி சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது மிகவும் அவசியமா, அல்லது இப்போது வார்த்தையை பிரசங்கிற ஊழியம் செய்வது மிகவும் அவசியமா?

ஜனங்களுக்கு முன்பாக வார்த்தையை வைத்திருக்க இங்கே தேவன் அழைத்து ஊழியத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மேய்ப்பர்கள். வார்த்தை இதைக் கற்பிக்கிறது. தேவன் அழைத்து வைத்த மனிதர்களாக அவர்கள் மதிக்கப்பட வேண்டும், கனப்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் மணவாட்டி இல்லை என்று நாம் ஒருபோதும் சொல்ல முடியாது, சொல்லக்கூடாது. அது தவறு, தீர்க்கதரிசி நமக்குக் கற்பித்தபடி அல்ல. ஜனங்கள், "அவர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதில்லையென்றால், அவர்கள் வார்த்தைக்கு எதிரானவர்கள்" என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தை ஒருபோதும் சொல்லக்கூடாது. அது நீங்கள் தவறான ஆவியை உடையவர்களாயிருப்பதையே காட்டுகிறது.

மற்றவர்கள், "அவர்கள் அனைவரும் பிரான்ஹாம் கூடாரத்தில் நேரடி ஒலிபரப்பைக் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளதையும் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் ஒருபோதும் அப்படி ஒரு காரியத்தை சொல்லக்கூடாது. யார் மணவாட்டி, யார் மணவாட்டி இல்லை என்பதை தேவன் மாத்திரமே அறிந்திருக்கிறார். அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறுவது மணவாட்டியின் ஆவி அல்ல.

பிரான்ஹாம் கூடாரத்தில் நேரடியாக கேட்டுக் கொண்டிருக்கிற சில ஜனங்களும் கூட, “நீங்கள் ஒலிநாடாக்களை உங்களுடைய வீட்டில் நேரடியாக கேட்காமல் சபைக்கு சென்று அதைக் கேட்டால் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்!” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு சகோதர சகோதரிகளே. நீங்கள் அப்படிச் கூறிக் கொண்டிருந்தால், நிறுத்துங்கள், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். அவர்கள் கர்த்தரால் செய்யும்படி வழி நடத்தப்படுவதை உணர்கிறதையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

பிரசங்கிப்பது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழி என்று அநேக ஊழியக்காரர்கள் நினைக்கிறார்கள். நாம் காரியங்களை வேறுவிதமாகப் பார்க்கிறோம், அது பரவாயில்லை. சகோதரன் பிரான்ஹாம் எத்தனை முறை இதே ஒப்பீட்டைச் செய்திருக்கிறார்? சகோதரன் ஜாக்சன் தவறாய் இருந்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்து ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கும் அவருடைய சபைக்கும் எதிராக அவர்கள் கூடிக் கொண்டிருக்கிற இந்த காரியத்தையும் அவர் கண்டனம் செய்தார் என்பதை நாம் இப்பொழுது தான் கேள்விகளும் & பதில்களும் என்பதன் பேரில் அவரைக் குறித்து கேட்டோம்.

பிரான்ஹாம் கூடாரத்திற்கு தேவன் அருளியிருக்கிற வழி என்று நான் நம்புகிறபடியால் இந்தக் கடிதம் மூலம் நான் பிரசிங்கத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள். அவர்கள் கர்த்தரையும் இந்தச் செய்தியையும் நேசிக்கிறார்கள். அந்த விதமாகத்தான் கர்த்தர் தங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் உணர்கிறார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

அவர்கள் அதை ஒரு வழியில் பார்க்கிறார்கள், நாம் அதை வேறு வழியில் பார்க்கிறோம், அது பரவாயில்லை. நான் அதை அவர்களின் வழியில் பார்க்க முடியாது, என்னுடையதை அவர்களால் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், தேவன் அருளியிருக்கிற பல வழிகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பரிபூரண வழி மாத்திரமே உள்ளது, எனக்கோ, அது இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே ஆகும்.

இங்கே நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நான் ஜெபிக்கிறேன். ஜனங்களுக்காக கைகளை வைத்து ஜெபிப்பது 100% வார்த்தையின்படியுள்ளது. வேதத்தின்படி, எண்ணெய் பூசுவதும், நோயுற்றவர்களுக்காக ஜெபிப்பதும் தேவனுடைய வார்த்தையின்படி வேதவாக்கியமாயிருக்கிறது. சகோதரன் பிரான்ஹாம், வார்த்தையாக இருக்கும்படி இரண்டையுமே நமக்குப் பிரசங்கித்து, கற்பித்தார். ஆனால் தேவன் அளித்திருக்கிற அவருடைய பரிபூரணமான வழியை நான் விரும்புகிறேன்...தேவன் அவ்வண்ணமாய்க் கூறின காரணத்தால் அப்படியே விசுவாசிக்கிறேன். நான் அதைத்தான் செய்ய முயற்சி செய்கிறேன்.

ஆனால் இப்போது சுகமளித்தலுக்காக, "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" என்று அவர் கூறுகிறதே தேவனுடைய இரக்கமாயுள்ளது. இப்போது, முதலில் வார்த்தை அவ்வாறு கூறுகிறது, அது போதுமானதாக இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் வார்த்தையை விசுவாசிக்கவில்லையென்றால், அதை எவ்வாறு கற்பிப்பது என்பதை அறிய ஆவியினால் ஏவப்பட்ட மனிதர்கள் போன்ற வரங்கள் சபையில் உள்ளன, அது உங்களுக்கு மிகவும் தெளிவாக்குகிறது, அதுதான், விசுவாசிப்பதற்குரிய விசுவாசம்.

5 -விதமான ஊழியத்தை நான் நம்புகிறேன். வார்த்தையைப் பிரசங்கிக்க மற்றும் கற்பிக்க தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களை நான் நம்புகிறேன். ஆனால், எனக்கான தேவனுடைய பரிபூரண வழி ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஒலிநாடாக்களைக் கேட்பதில், நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, நான் கேட்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, என் நித்திய இலக்கை வைக்கக்கூடிய இடத்திற்கு, ஒலிநாடாக்களைத் தவிர, வேறு எந்த நபரும், ஊழியரும் இல்லை, வேறு எந்த இடமும் இல்லை.

காலத்தின் தொடக்கத்திலிருந்து இதற்கு முன்பு ஒருபோதும் தேவன் தம்முடைய மக்களுக்கு தம்முடைய சத்தத்தை தாங்களாகவே உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதைக் கேட்கும் வாய்ப்பையும் திறனையும் ஒருபோதும் வழங்கியதில்லை. ஒவ்வொரு இரகசியமும் ஒலிநாடாக்களில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்படுகிறது. மணவாட்டி பரிபூரணமாக்கப்பட வேண்டிய ஒவ்வொரு காரியமும் ஒலிநாடாக்களில் உள்ளன.

ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய வார்த்தையாயுள்ளது. எனக்குப் புரியாமல் இருக்கலாம் அல்லது எல்லாவற்றையும் விளக்க முடியாமல் போகலாம், ஆனால் நான் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் சொல்ல வேண்டும் என்று அவர் என்னிடம் கோருகிறார், மேலும் நான் அதைச் செய்யக்கூடிய ஒரே இடம் ஒலிநாடாக்களில் மாத்திரமே உள்ளது.

ஆனால் நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்ய வேண்டும் என்னும் போது, நீங்கள் உண்மையென்று அறிந்துள்ள ஒன்றின் மேல் உறுதியாக நிற்க வேண்டும் என்னும் போது, அதுதான் மிகவும் கடினமான செயல், அங்கு தான் சரியாக உரசல் ஏற்படுகின்றது.

எனக்குள்ள எல்லாவற்றோடும் நான் விசுவாசிக்கிறேன், நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தில், நினிவேக்குச் செல்லும் கப்பலில் இருக்கிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, தேவன் தம்முடைய ஆட்டுக்குட்டிகளிடம் பேசுவதைக் கேட்கும்போது, உலகம் எங்களுடன் எங்கள் கப்பலில் பயணம் செய்யும் படி வர நான் விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தி: 65-0217 "கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப் போகும் ஒரு மனிதன்"

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30