Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள ராஜரீக குடும்பத்தினரே,
கர்த்தர் தம்முடைய தூதன் மூலம் பேசி, உங்களிடத்தில், “எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள், ராஜரீக இரத்தத்தைக் கொண்ட ஒரு ராஜரீக குடும்பம். உங்களுடைய இரத்தத்தைக் காட்டிலும் சிறந்த இரத்தம் இந்த உலகத்தில் இல்லை. நீங்கள் கிறிஸ்துவுக்கு நான் பெற்றெடுத்துள்ள, உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்ற என் பிள்ளைகள்,” என்று சொல்வதை நீங்கள் போய் கேட்கக் கூடிய ஒரே ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட இடம் மாத்திரமே உண்டு.
நாம் நம்முடைய நரம்புகளில் ஓடுகிற ராஜரீக இரத்தத்துடன் கூடிய தேவனுடைய ராஜரீக குடும்பம். அவருடைய வல்லமையுள்ள தீர்க்கதரிசியின் மூலமாக தேவனுடைய சத்தம் பேசுவதால் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்துள்ள பிள்ளைகள். இதை விட சிறப்பாக இருக்க முடியாது என் நண்பர்களே.
சகோதரன் பிரான்ஹாம், மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஜெபர்சன்வில் அல்லது அரிசோனாவுக்குச் செல்ல வேண்டுமா?
"ஒரு படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள்; நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரை விட்டுவிடுவேன்; இரண்டு பேர் ஒரு வயலில் இருப்பார்கள், நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரை விட்டுவிடுவேன்." பார்த்தீர்களா? எனவே அவர்கள் அநேகமாக...உலகம் முழுவதும், பொதுவான விஷயங்களைக் கொண்டிருக்க அவர்கள் ஒரே இடத்தில் கூடிவர மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிறிய குழுக்கள் பூமியெங்கும் சிதறடிக்கப்படுவார்கள்.
ஆகவே, சரீரப்பிரகாரமாக, நாம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்க மாட்டோம். ஆனால் தேவனுக்கு மகிமை, அவர் தனது மணவாட்டியை ஒன்றிணைக்க இன்னும் கூட பெரிய திட்டத்தை வைத்திருந்தார்.
நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று, அவர் இந்த தேசத்தை சுற்றி மட்டுமல்ல, உலகின் 7 கண்டங்களிலிருந்தும் நம்மை கூட்டி சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்காவிலிருந்து அண்டார்டிகா வரை. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா. தேவனுடைய சத்தத்தைக் கேட்க அவர் தனது மணவாட்டியை ஒரு குழுவாக கூட்டி ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் நம்மை சபைக்குச் செல்லச் சொன்னார்; அவர்கள் பாதி வார்த்தையைக் கற்பிக்கும் இடத்திலும் கூட, அவர்கள் முழு வார்த்தையையும் கற்பிக்கும் ஒரு சபையை நாம் கண்டுபிடிக்கும் வரை. மணவாட்டி இப்பொழுது அந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, ஒலிநாடவில் உள்ள தேவனுடைய சத்தமே முழு வார்த்தையாகும்.
நீங்கள் உங்களுடைய வீட்டில் ஒலிநாடாவைக் கேட்கும் சபையாக இருந்தாலும், பல குடும்பங்கள் கூடியிருக்கும் உங்களுடைய சபையாக இருந்தாலும், அல்லது அமேசான் அல்லது ஆப்பிரிக்காவின் காடுகளில் உள்ள ஒரு குடிசையில் இருந்தாலும், தேவனுடைய சத்தம் உதட்டிலிருந்து உங்களுடைய செவிக்கு பேசுவதை கேட்க நீங்கள் எங்கு இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க முடிகிறதோ, அங்கு நீங்கள் ஒரு முழு வார்த்தை சபையில் இருப்பீர்கள்.
நாங்கள் அந்த முழு வார்த்தை சபையை கண்டுபிடித்துள்ளபடியால், கேள்விகள் மற்றும் பதில்கள் #4 64-0830E. என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ள வரும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்