ஞாயிறு
25 செப்டம்பர் 2022
64-0816
அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

அன்பான பூமியின் உப்பானவர்களே,

இதற்கு மேல் சிறப்பான எதையும் பெற்றுக்கொள்ள முடியாததுபோல இது தென்படுகிறபோது, அவர் நமக்கு மற்றொரு முழு ஒலிநாடாவின் வெளிப்பாடுகளை அளிக்கிறார். நாம் முன்குறித்தலிலிருந்து பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளோம். அந்தக் காரணத்தினால்தான் நாம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையை கேட்க வருகிறோம்.

தேவன் உலகத்தை சிருஷ்டித்தபோது, நாம் அவருடைய சிந்தனையில் இருந்தோம். நம்முடைய குற்றம் சாட்டுபவன் தொடர்ந்து நம்மை சுட்டிக்காட்டி, பிதாவினிடத்தில், "அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள், அவர்கள் இதை செய்தார்கள்," என்று சொல்லுகிறபோது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை மூடுகிறது. நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தேவன் நம்மைக் காண்கிறதில்லை, அவர் இயேசுவின் இரத்தத்தினூடாக நம்முடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறார்.

சாத்தானால் தொல்லைப்படுத்த முடியாது; அதாவது, அவனால் சோதிக்க முடியும், ஆனால் அவனால் ஒரு மீண்டும்- பிறந்த கிறிஸ்தவனை மேற்கொள்ள முடியாது. தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, அவனை முன்னதாகவே கண்டு, அவனை மீட்கும்படி இயேசுவை அனுப்பினபடியால், இரத்தம் அவனுக்காகப் பேசுகிறது. தேவனாலும் கூட அதை காணமுடியாமலிருக்கும்போது, அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? அவராலும் கூட…அவர் கேட்கிற ஒரே காரியம் உங்களுடைய சத்தமே. அவர் உங்களுடைய பிரதிநிதித்துவத்தை காண்கிறார். ஆமென். அது உண்மை. புரிகிறதா?

தேவனுடைய தீர்க்கதரிசி நமக்கு இந்த காரியங்களைக் கூறினார். அது அவர் பேசிக்கொண்டிருந்ததல்ல; அவர் தேவனுடைய சிந்தனைகளை, வரவிருக்கின்ற காரியங்களின் அவருடைய தன்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளை வெளிப்படுத்த அவருடைய வாயை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அவைகளைக் கூறின பிறகு, அவைகள் நிறைவேற வேண்டும். "வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை."

அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனுஷகுமாரன் நமக்கு மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்டார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நம்முடைய தீர்க்கதரிசி அவரைக் குறித்து உரைத்திருந்த ஒவ்வொரு வேத வாக்கியத்தையும் நிறைவேற்றுகிறார்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் அவருடைய மணவாட்டி: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா? நாம் பரிசுத்த ஆவியின் உண்மையான அத்தாட்சியைப் பெற்றிருக்கிறோம்: என்று அவர் நமக்கு நிரூபித்திருக்கவில்லையா?

அப்படியானால் நாம் எதற்காக கவலைப்படுகின்றோம்? நாம் அவருக்காக நின்றால், அவர் நமக்காக நிற்பார் என்று, அவர் நமக்கு நிரூபித்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறிப்போக முடியாது.

இந்த செய்தியையும் இக்காலத்து செய்தியாளரையும் விசுவாசிக்கிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள். இந்த செய்தியையும் செய்தியாளரையும் விசுவாசிக்காத யாவரும், உலகத்தோடு அழிந்துபோவார்கள்.

சபையே கூர்ந்து கவனி. அநேகர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், இல்லையென்றால் வார்த்தையின் வெளிப்பாடே இல்லாதிருக்கிறார்கள். நாம் மனிதனுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக அவர்கள் உணருகிறார்கள். நீங்கள் உண்மையாகவே சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் திறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பது என்ன கூறுகிறது என்பதற்கு செவி கொடுங்கள்.

மணவாட்டியை எது ஒன்று சேர்க்கும்? தேவனோடு ஒன்றாயிருக்கும்படி மணவாட்டியை இணைப்பது எது?

"அந்த நாளிலே மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார்." என்ன? மணவாட்டியின் கலியாணத்திற்கு, சபையுடன் தலையை ஒன்று சேர்க்க, இணைக்க. மணவாளனின் அழைப்பு இதனூடாக வரும், மனுஷகுமாரன் இறங்கி வரும்போது, இவ்விருவரையும் ஒன்று சேர்க்க மானிட சரீரத்தில் இறங்கி வருவார். சபையானது வார்த்தையாக இருக்க வேண்டும், அவர் வார்த்தையாய் இருக்கிறார், இவ்விருவரும் ஒன்றாக இணைகின்றனர், மற்றும், அதை செய்வதற்கு, மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும்.

அதற்கு மனுஷகுமாரன் வெளிப்படுகின்ற வெளிப்படுத்துதலே தேவையாகும். உங்களுடைய கருத்தல்ல, உங்களுடைய புரிந்துகொள்ளுதல் அல்ல, உங்களுடைய சிந்தனைகளோ உங்களுடைய பிரசங்கித்தலோ அல்ல. மனுஷகுமாரன் மணவாட்டியை மணவாளனோடு இணைப்பார், அது இப்பொழுதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது.

நாம் இப்பொழுது ஒரு விவாக விழாவில் மணவாளனோடு இருக்கிறோம், நாம் விரைவில் நம்முடைய கலியாண விருந்துக்காகவும் நம்முடைய தேன் நிலவிற்காகவும் புறப்பட்டு செல்வோம்.

வார்த்தையும் சபையும் ஒன்றாய் இருக்கின்றனர். மனுஷகுமாரன் என்னென்ன செய்தாரோ, அவர் வார்த்தையாய் இருந்தார், சபையும் அதே காரியத்தை செய்கிறது.

தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினால் மாத்திரமே நாம் பிழைக்க முடியும்! நம்முடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான தேவனுடைய வாயாக இருக்கிறார் என்று தேவன் நிரூபித்திருக்கிறார். அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்? அவர் அவ்வண்ணமாய்க் கூறி, அதன்பின்னர் அவர் அதை தம்முடைய வார்த்தையால் நிரூபித்தார்.

இந்த கடைசி நாட்களில் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற மணவாட்டி சபையாய் நாம் இருக்கிறோம். மற்ற எல்லோரிடத்திலும் இருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளோம்; அவருடைய இரத்தத்தினால் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அந்த பலவர்ணமானபட்சி.

பிதாவே, நான் அதைக் குறித்து நினைக்கும்போது, உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை என்றும், அவைகளில் ஒன்றும் தவறிப்போக முடியாது என்று அறிந்திருக்கும்போதும், எங்களுடைய இருதயங்கள் துள்ளி குதித்துக்கொண்டும், என்னுடைய இருதயம் துடித்துக்கொண்டுமிருக்கிறது.

இதுவே இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட ஒரே வழியாயிருக்கிறது. இதுவே ஒரு வார்த்தையையும் மாற்றக்கூடாது என்பதற்கான ஒரே வழியாயிருக்கிறது. நினைவிருக்கட்டும், பரிசுத்த ஆவியானவர் வந்து ஒரு நபரை அபிஷேகித்தும், அந்த நபர் இன்னமும் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்க முடியும். நாம் ரூபகாரப்படுத்தப்பட்ட மூல வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும்.

நீங்கள் இந்த வார்த்தையோடு தரித்திருக்க விரும்பி, எங்களோடு தேவனுடைய சத்தத்தைக் கேட்க விரும்பினால், அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 64-0816 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு., எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் எங்களுடன் சேர்ந்து அல்லது எங்களுடன் ஒரே நேரத்தில் அதே ஒலிநாடாவைக் கேட்க வேண்டுமென்பதில்லை, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசிக்கு செவி கொடுங்கள் என்றே, நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 24:24
மாற்கு 5:21-43 / 16:15
லூக்கா 17:30 / 24:49
யோவான் 1:1 / 5:19 / 14:12
ரோமர் 4:20-22
I தெசலோனிக்கேயர் 5:21
எபிரெயர் 4:12-16 / 6:4-6 /13:8
I இராஜாக்கள் 10:1-3
யோவேல் 2:28
ஏசாயா 9:6
மல்கியா 4