
அன்புள்ள பயமற்ற மணவாட்டியே,
எச்சரிக்கை!! எச்சரிக்கை!! சிவப்பு விளக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. திரையானது இறங்கும் நேரம் வந்துவிட்டது. நாம் எல்லாவற்றையும், ஒவ்வொரு காரியத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆயத்தமாக இருக்க வேண்டும். நாம் முடிவில் இருக்கிறோம். ஆரம்பம் முதல் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
1963-க்கு அப்பால் அறுபது வருடங்கள் தொடங்கி இன்று செப்டம்பர் 2023 வரை, நம்முடைய நாளில் நடக்கும் அனைத்தையும் பார்க்க தேவன் தம்முடைய வல்லமையான கழுகு செய்தியாளரை உயரே பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார்…உலகத்தின் நிலைமை, ஸ்திரீகளின் ஒழுக்கக்கேடு, சபையில் அதனுடைய நிலை, ஜனங்களின் பைத்தியக்காரத்தனம்; பொல்லாதவர், குருடர், நிர்வாணமானவர், அரசாங்கத்தின் அனைத்துக் கிளைகளிலும் மகா வேசி, அரசியலில் ஊழல் எப்படி இருக்கும் என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும் எச்சரித்துள்ளார்.
அது எவ்வாறு இருக்கும் என்று அவர் நமக்கு சொன்னபடியே அது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுவதை இப்பொழுது நாம் காண்கிறோம். இந்த எல்லா காரியங்களும் நடந்தேறுவதை கண்டிருக்கிறவர்கள் நாம்தான். ஒவ்வொரு காரியமும் அந்த நிலையில் உள்ளது. அது பெரிய அளவிலான ஒரு பெரிய அசுத்தமான பானையாக மாறிவிட்டது.
உலகம் முழுவதும் பீதி நிலையில் உள்ளது. நம்பிக்கை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. பூமியை அச்சம் மூடிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் போய்விட்டது, காரணமே இல்லாமல் கொலைகள், பெண்கள் ஆண்களாக இருக்க விரும்புகின்றனர், ஆண்கள் பெண்களாக இருக்க விரும்புகின்றனர். எந்தக் காரியமும் மற்றும் ஒவ்வொரு காரியமும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்த நேரத்திலும் என்ன நடக்கலாம்? அது ஒரு எரிமலை போன்று உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியும்; அது எந்த நொடியும் வெடிக்கும். அவர்களின் முகங்களில், அவர்களின் செயல்களில் நீங்கள் அதைக் காண்கிறீர்கள், நம்பிக்கையேயில்லை, பயமே.
கிறிஸ்தவ சபைகள் என்று அழைக்கப்படுபவை கூட திருநங்கைகளை போதகர்களாக, மக்களின் ஆவிக்குரிய தலைவர்களாக அரவணைத்து வருகின்றன. அது சோதோம் கொமோராவை விட மோசமாகிவிட்டது. சாத்தானும் அவனுடைய ராஜ்யமும் ஒன்றுபட்டு ஒன்றாகிவிட்டன. அவன் தன்னுடைய இலக்கை அடைந்துவிட்டான்.
ஆனால் தேவனுக்கே மகிமை, இந்த குழப்பம் மற்றும் பயத்தின் மத்தியில், பிதாவானவர் நம்மை, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனக்குழுவை, அவருடைய இனிய இருதயமான மணவாட்டியை, பாதுகாப்பாக அவருடைய கரங்களில் காத்துக்கொண்டார், மேலும் நாம் அவருடன் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு ஆவிக்குரிய ஐக்கியத்தை உடையவர்களாயிருக்கிறோம். இதுவே நம்முடைய ஜீவியங்களின் மிகப் மகத்தான நேரம். இது அற்புதம். இது மகிமையானது. இது இயற்கைக்கு மேம்பட்டது. இது நாம் வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
நம்முடைய மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டது. வேதம் இந்த நாளில் என்ன நடக்கும் என்று கூறினதோ, அதுவே நாளுக்கு நாள், நடந்து கொண்டிருக்கிறது.
காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, நம்மால் அதை கணக்கிட கூட முடியாத அளவிற்கு மிக வேகமாக சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம்; அவருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும், அங்கு வார்த்தை வார்த்தையாகிறது.
இவை அனைத்தும் நம்மைச் சுற்றி நடப்பதால், நாம் மகிழ்ச்சியாகவோ, அதிக மனநிறைவாகவோ அல்லது திருப்தியாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் சொல்லி முடியாத சந்தோஷத்தினாலும் மகிமையினாலும் நிரம்பி வழிகின்றன. இது ஒரு நம்ப முடியாத உண்மை.
ஆரம்பத்திலிருந்தே, நாம் தேவனுடைய ஒரு குமாரனாக குமாரத்தியாக இருக்க முன்குறிக்கப்பட்டிருந்தோம் என்பதை அறிந்து, முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுதல் அடைந்துகொண்டிருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாய், கிறிஸ்துவின் இரத்தத்தில் கழுவப்பட்டவர்களாய் இருக்கிறோம். விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமில்லாத தேவனுடைய குமாரன், ஒரு தூய்மையான, அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரினால் கழுவின கலப்படமற்ற வார்த்தை மணவாட்டியுடன் நிற்கிறார். காலத்தின் துவக்கத்திற்கு முன்பே நாம் பிதாவின் மடியில் முன்குறிக்கப்பட்டோம்; அவர் எப்படி இருந்தாரோ அதே போல...மகிமை!! அல்லேலூயா!
நாம் அது மட்டுமல்லாமல், முன்குறிக்கப்பட்ட விவாக அடையாளச் சின்னத்தை அணிந்துகொண்டு, மிக விரைவில் நாம் ஆகாயத்தில் கலியாணத்திற்கு செல்லவிருக்கிறோம். அவர் நம்மை அறிந்திருக்கிறார்…அதை பற்றி தியானியுங்கள், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருந்தார், அதனால் அவர் விவாக அடையாளச் சின்னத்தை அங்கே நமக்கு அணிவித்து, அவருடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் நம்முடைய பெயரை எழுதினார், மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீதிமானாக்கப்பட்டோம்.
இவை அனைத்தையும் பெறுவதற்கு ஒரே ஒரு வழி உள்ளது, நீங்கள் தேவன் அருளிய ஒரே வழியின் மூலம் வர வேண்டும். மூல வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
இந்த வெளிப்படுத்துதலைப் பெற்றதற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் தெளிவாக உள்ளது. மாம்சமும் இரத்தமும் அதை நமக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்தில் உள்ள நம்முடைய பிதாவே அதை வெளிப்படுத்தினார், அதற்காக நாம் அவரை எப்படி நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த நம்முடைய சொற்களஞ்சியத்தில் வார்த்தைகளே இல்லை...ஆச்சரியமான கிருபை.
தேவனுடைய சத்தம் உங்களிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதைப் போன்றது எதுவுமே இல்லை. நம்முடைய ஆத்துமாவில் பெருக்கெடுக்கும் சந்தோஷம். வியப்பதற்கு ஒன்றுமேயில்லை, யூகிக்க ஒன்றுமேயில்லை, இல்லை, யோசிப்பதற்கு கூட ஒன்றுமேயில்லை, நமக்குத் தெரியும், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது. அந்த 100% உத்தரவாதத்தை ஒலிநாடாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் உங்களால் பெற முடியாது.
அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு 63-0623E: என்ற செய்தியை அவர் தம்முடைய வல்லமையான கழுகு தீர்க்கதரிசியின் மூலமாக பேசி நமக்கு கொண்டு வருகையில், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நாளைக் குறித்த எல்லாவற்றையும் தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் சொல்வதை நாங்கள் கேட்கப்போகிறபடியால் நீங்களும் எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
நாங்கள் ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடுவோம். உங்களால் எங்களுடன் சேர்ந்துகொள்ள முடியாவிட்டால், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், இயங்கு பொத்தானை அழுத்தி நித்திய ஜீவனின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 5:28 / 22:20 / 24வது அதிகாரம்
2 தீமோத்தேயு 4வது அதிகாரம்
யூதா 1:7
ஆதியாகமம் 6வது அதிகாரம்