அன்புள்ள தேவனுடைய கூடாரங்களே,
நான் அவருடைய சபையாயிருக்கிறேன். நீங்கள் அவருடைய சபையாயிருக்கிறீர்கள். நாம் தேவன் வாசம் செய்கிற கூடாரமாயிருக்கிறோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கிறோம்; நம்முடைய உள்ளத்தில் ஜீவனுள்ள தேவன் ஜீவிக்கிறார். நமது செய்கைகள் தேவனுடைய செய்கைகளாயிருக்கின்றன. மகிமை!!உலகம் முழுவதிலுமிருந்து சிறிய இடங்களில், நாம் அனைவரும் ஒன்று கூடுகிறோம்; இன்றைக்கான அவருடைய வார்த்தையான தேவனுடைய சத்தத்தின் பேரில் அனைவரும் ஒன்றுசேர்கின்றனர்.
இது மிகவும் அற்புதமாயுள்ளது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் மட்டுமேயன்றி, வேறு எதனோடும் இதற்கு இணைப்பு இல்லை. அது தான், முற்றிலுமானதே. நாம் தேவனுடைய சத்தத்தால் பரிபூரணப்படுத்தப்பட்டு உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் முழுமையாக முடிவுவரைக்குமாய் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவருமே! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும், வயதான பெண்ணாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும் அல்லது ஒரு இளைஞனாக இருந்தாலும், நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, நாம் அனைவருமே சென்று கொண்டிருக்கிறோம். நம்மில் ஒருவரும் கைவிடப்படப்போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்கிறோம், மேலும் "நாம் வேறெதற்காகவும் நிற்கப்போவதில்லை."
நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு மகத்தான ஒன்றுபட்ட குழு, அந்த மகிமையான வருகைக்காக காத்திருக்கிறது. நாம் பிரிக்கப்படக்கூடாது, ஆனால் மனிதன் சுவிசேஷத்தின் போதனையின் பாதையிலிருந்து வெளியேறிவிட்டான்.
எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காட்ட ஏதாவது வழி இருக்க வேண்டும். நீங்கள் எப்போதுமே செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த வியாக்கியானத்தையும் கொடுக்காமல், அதை அப்படியே படித்து, அதை அப்படியே விசுவாசியுங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வியாக்கியானத்தை முன்வைக்கிறான், அது வித்தியாசமான ஏதோக் காரியத்தை கூற வைக்கிறது. மணவாட்டிக்கு ஒரே ஒரு தேவனுடைய சத்தம் மாத்திரமே உள்ளது. இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்!
இந்த கூட்டத்தினருக்காக, நான் இதை இந்த ஒலிநாடாவில் கூறுகிறேன், நான் பரிசுத்த ஆவியின் ஏவுதலின் கீழ் இதைச் சொல்கிறேன்: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர் யார், அவர் இந்த வார்த்தையின் கீழ் வரட்டும்!
நம்முடைய நாளுக்கான வார்த்தைக்கு ஒரு சத்தம் உள்ளது. நம்முடைய தீர்க்கதரிசியே அந்த சத்தம். அந்த சத்தம் நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையாயிருக்கிறது. அந்தக் சத்தத்தைக் கேட்பதற்கும் இந்த மணிநேரத்தைப் பார்ப்பதற்கும் நாம் முன்குறிக்கப்பட்டிருந்தோம், மேலும் அந்த சத்தத்தைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுக்கப்போவது எதுவுமேயில்லை.
நம்முடைய விசுவாசம் அதைக் கண்டு, யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல் அதைக் கேட்கத் தேர்ந்தெடுக்கிறது. நாம் ஒரு வித்தியாசமான வழியில் நோக்கிப் பார்க்கும்படிக்கு நம்முடைய பார்வைகளை கீழ் நோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் வார்த்தையின் பேரிலான நடு மையத்தில் குறி வைத்து, நம்முடைய செவிகளை அந்த சத்தத்திற்கு செவி கொடுக்கிறோம்.
கர்த்தாவே, உம்மிடத்தில் ஒரு அர்ப்பணிப்புடன், எங்களுடைய இதயங்களிலிருந்து உம்முடைய செவிகளுக்கு ஏறெடுக்கும், இதுவே எங்களுடைய உத்தமமான ஜெபமாயுள்ளது.
இந்தநாள் முதற்கொண்டு, நம்முடைய ஜீவியங்கள் மாற வேண்டும் என்றும், அதாவது நம்முடைய சிந்தனையில் நாம் அதிக உறுதியாயிருப்போம் என்று அர்ப்பணிப்போமாக. நாம் இனிமையானவர்களாய், தாழ்மையுள்ளவர்களாய் ஜீவிக்க முயற்சித்து, அதாவது, நாம் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறதை, தேவன் ஒவ்வொருவருக்கும் அருளுவார் என்று விசுவாசிப்போமாக. நாம் ஒருவருக்கொருவர் விரோதமாக, அல்லது எந்த மனிதனுக்குமே விரோதமாக பொல்லாங்காய் பேசாதிருப்போமாக. நாம் நம்முடைய சத்துருக்களுக்காக ஜெபித்து, அவர்களை நேசித்து, நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நன்மை செய்வோமாக. யார் சரி என்றும், யார் தவறு என்பதையுங் குறித்து தேவனே நியாதிபதியாயிருக்கிறார்.
முறையிடுகிறது என்ன? சொல்! 63-0714M என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தை கேட்பதனால் உங்களுடைய விசுவாசத்தை அபிஷேகிக்கும்படிக்கு எங்களோடு வரும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,
நாம் யாவரும் ஒன்றுகூடி, ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த ஞாயிறு பிற்பகல் 5:00 மணிக்கு, குற்றச்சாட்டு 63-0707m என்ற செய்தியைக் கேட்போமாக.
நாம் அதைக் கேட்டப் பிறகு, 63-0707e இராப்போஜனம் என்ற செய்தியைக் கேட்கையில், நம்முடைய வீடுகளில் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்ளும் புனிதமான வாய்ப்பிற்காக நம்மைத் ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக. பிறகு நாம் இராப்போஜனம் மற்றும் பாதங்களைக் கழுவுதல் ஆராதனைகளை நடத்துவோம். குற்றச்சாட்டு செய்தி இயக்கப்பட்டதுபோலவே, வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில் மட்டும்) இராப்போஜனம் என்ற செய்தி ஒலிநாடா இயக்கப்படும், அதைத் தொடர்ந்து பியானோ இசை, கால்களைக் கழுவுதலை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு மேற்கோள் மற்றும் நற்செய்தி கீதங்கள் இயக்கப்படும், நாம் வழக்கமாக வீட்டில் இராப்போஜன ஆராதனைகளில் செய்வது போலவே.
இராபோஜன திராட்சை ரசம் பெறுவதற்கான/மற்றும் அப்பம் தயாரிப்பதற்கான வழிமுறைகளுக்காக இணைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ராஜாதி ராஜாவாகிய அவருடன் ஒரு விசேஷித்த நாளாக நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் அவரை அழைக்க கர்த்தர் ஒரு வழியை நமக்கு அருளியிருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் அவரது மேசையில் சந்திக்க நான் நிச்சயமாகவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
அப்பம் சுடுவதற்கு / திராட்சை ரசம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்
இராபோஜன திராட்சை ரசம் / கால் கழுவும் தொட்டிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்
தொடர்புடைய சேவைகள்
அன்பான தேவனுடைய தீர்க்கதரிசியின் மந்தையே,
நாம் ஜெபம் செய்வோமாக.
பரலோகப் பிதாவே, நித்தியத்தின் இந்தப் பக்கம் உலகம் முழுவதிலுமிருந்து மற்றொரு முறை ஒன்றுகூடியதற்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உம்முடைய சத்தம் எங்களிடத்தில் பேசுவதை கேட்பதற்கு; உம்மோடு ஏக சிந்தையும் ஏக மனதும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் முன்னோக்கி செல்லும் பயணத்திற்காக எங்களுக்கு தைரியத்தையும் பெலனையும் தரும்படிக்கு, உம்மிடமிருந்து வருகிற புதுப்பித்தலின் பெலனுக்காக மீண்டும் ஒருமுறை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.
எங்களுக்காக அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக்கொள்ள நாங்கள் ஒன்று கூடுகிறோம். பயணத்திற்கான பெலனை எங்களுக்குத் தரும்படிக்கு அந்த ஆவிக்குரிய மன்னாவை நீர் சேமித்து வைத்தீர். அதுவே வருகின்ற நாட்களினூடாக எங்களை தாங்கக்கூடிய ஒரே காரியமாய் இருக்கிறது.
நீர் உம்முடைய சபையை ஒழுங்கில் அமைப்பதற்கு முன்பு, நீர் எங்களை ஒரே இடத்தில் ஒருமனதாக, ஒன்று சேர்க்க வேண்டும் என்று, நீர் எங்களிடத்தில் சொன்னீர். அப்பொழுது நீர் வழிநடத்துவதற்காக எங்களுக்கு உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்புவீர்; ஏதோ உலக ஆலோசனை சபை சங்கத்தை அல்ல, சில மனிதக் குழுக்களை அல்ல, ஆனால் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதற்கே.
நீர் உம்முடைய தூதன் மூலமாக உரைத்து எங்களிடம் சொன்னீர்:
"நீங்கள் உங்கள் போதகரிடமும், இங்கு உங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள போதகத்திலும் நிலைகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த வார்த்தையில் தரித்திருங்கள். நீங்கள் அதை விட்டுவிடாதீர்கள்! என்ன வந்தாலும், போனாலும் பரவாயில்லை, நீங்கள் வார்த்தையில் தரித்திருங்கள். அந்த வார்த்தையிலே தரித்திருங்கள்!"
பிதாவே, நாங்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எங்களுடைய போதகரோடு தரித்திருக்கிறோம். இது எங்களுடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிற உம்முடைய தூய வார்த்தையை மட்டுமே பேசுகிற இன்றைக்கான தேவனுடைய சத்தமாய் உள்ளது.
சோதோமின் நாட்களில் இருந்ததுபோலவே, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும் என்று நீர் எங்களுக்குச் சொன்னீர்; அதாவது எங்களை வழிநடத்த இரண்டு காரியங்களை நாங்கள் பெற்றிருக்க வேண்டும், ஏனைய உலகத்திற்கு இரண்டு காரியங்கள் இருக்கும். அவர்களுடைய இரண்டு காரியங்கள் இரண்டு பிரசங்கிகளாக இருந்தன.
ஆனால் உங்களுடைய ஆவிக்குரிய சபைக்காக, உங்களுடைய முன்குறிக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாளாகிய மணவாட்டிக்காக, எங்களுடைய இரண்டு காரியங்களாக நீர் இருப்பீர், ஒரு மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியினால் எங்களை வழிநடத்தவே.
காற்று ஊளையிடட்டும். புயல்கள் அசைக்கட்டும். நாங்கள் எப்போதும், பாதுகாப்பாக இருக்கிறோம். உம்முடைய வார்த்தையில் நாங்கள் அங்கே இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். நேரமோ இங்கே வந்துவிட்டது. ஆவிக்குரிய யாத்திரை வந்துவிட்டது. நாங்கள் அனுதினமும் உம்மோடு சஞ்சரித்து, பேசி, உம்முடைய சத்தத்தைக் கேட்கிறோம். நாங்கள் உம்மோடு நிலையான ஐக்கியத்தில் இருக்கிறோம்.
நாங்கள் உம்முடைய கரங்களாகவும், உம்முடைய கண்களாகவும், உம்முடைய நாவாகவும் இருக்க விரும்புகிறோம். நீரே திராட்சை செடி, நாங்கள் உம்முடைய கொடிகள். பிதாவே, உம்முடைய கனியை தரும்படிக்கு, எங்களை ஊக்கப்படுத்தும்.
உம்முடைய சுவிசேஷத்திற்கு தகுதியான ஒரு ஜீவியத்தை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே வாஞ்சையாய் இருக்கிறது. பிதாவே, உமது பணியைத் தொடரவும், உமது வாக்களிக்கப்பட்ட வார்த்தையை நிறைவேற்றவும், எங்களின் மூலம் உம்மைப் பிரதிபலியும். எல்லா நீதியையும் நிறைவேற்றும்படிக்கு, இன்றைக்கான உம்முடைய செய்தியாளர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வாஞ்சையாய் இருக்கிறது.
நீர் எங்களிடம் கூறுவதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்:
"வானொலியில் அல்லது உள்ளே இதை கேட்பவர்களுக்கும்…அநேக நாடுகளில் ஒலி நாடாக்களில் இதை கேட்பவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: எல்லா கிருபையும் கொண்ட பரலோகத்தின் தேவன் தாமே, ஆசீர்வாதமான தமது பரிசுத்த ஆவியை நம்மெல்லோர் மேலும் பிரகாசிக்கச் செய்து, அதாவது நாம், இன்றிரவு முதல், இது முதற்கொண்டு, ஒரு தகுதியுள்ள வாழ்க்கை வாழும்படி செய்யக்கூடிய தேவன், “நான் இங்கே பிரியப்படுகிறேன், உலகத்தோற்ற முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய சந்தோஷத்துக்குள் பிரவேசியுங்கள்” என்பாராக! பரலோகத்தின் தேவன் தாமே தமது ஆசீர்வாதங்களை ஜனங்களாகிய உங்கள் எல்லோர் மேலும் அனுப்புவாராக!
மகிமை…பிதாவே, அது ஒலிநாடா தேசத்தில் உள்ள உம்முடைய மணவாட்டியான எங்களுக்கானதாயுள்ளது. உண்மையாகவே, நீர் உம்முடைய ஆசீர்வாதங்களை எங்கள் மேல் அனுப்பிக் கொண்டும், உம்முடைய வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்திக்கொண்டும், நாங்கள் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும், நீர் பிரியப்படுகின்றீர் என்றும், நாங்கள் உம்முடைய மணவாட்டி என்றும் எங்கள் இடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்.
அவருடைய மணவாட்டியை வெளியே அழைக்கவும், வழி நடத்தவும் அனுப்பப்பட்டிருக்கிற உலகத்திற்கான தேவனுடைய மேய்ப்பரான, எங்களுடைய மேய்ப்பர் பேசுவதை நீங்கள் கேட்க விரும்பினால், உன்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா? 63-0630E என்ற ஒரு செய்தியை தேவனிடத்திலிருந்து அவர் எங்களுக்கு கொண்டு வருகின்றபடியால், அவர் பேசுகிற நித்திய ஜீவனின் வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
சிறப்பு அறிவிப்பு: கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அக்டோபர் 15-ஆம் தேதி, வீட்டில் ஒரு இராப்போஜனம் / கால் கழுவும் ஆராதனையையும் நாம் நடத்துவோம்.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள யாத்ரீக மணவாட்டியே,
இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காரியங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க முடியாது; அது இன்று தான் நடந்துகொண்டிருக்கிறது. இதுதான் வேளை! இதுவே நேரம்! அது நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இதுவே. தேவன் அதை வாக்களித்தார், அது இங்கே உள்ளது.
நமக்கு ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் உண்டு; இந்த தேசத்தின் அக்கிரமம் நிறைவாக்கப்பட்டுள்ளது. வேளையானது வந்துவிட்டது. அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இதுவே. வெறுமனே மற்றொரு நாட்டுக்கு செல்வது அல்ல, ஆனால் நம்முடைய வருங்கால பரலோக வீட்டிற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள், நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பது ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானதாகும். இதை நிரூபிக்கும்படிக்கு தேவன் தம்முடைய வார்த்தையினால், நமக்கு மத்தியிலே மாம்சத்தில் வெளிப்பட்டதாய் இது உள்ளது. மற்ற எந்த தீர்க்கதரிசியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக செய்த ஒரு தீர்க்கதரிசி. இது அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு, ஆயிர வருட அரசாட்சிக்கு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிற அக்கினி ஸ்தம்பமாகும்.
அவர் நம்முடைய தீர்க்கதரிசியைத் தெரிந்துகொண்டு, அவர் தவறாக புரிந்து கொள்ளப்படாதபடிக்கு, இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளமான அக்கினி ஸ்தம்பத்தை அவருக்கு அளித்தார். தீர்க்கதரிசி என்னக் கூறினாரோ அது தேவனுடைய வார்த்தைகளாய் இருக்கின்றன. அவர் நம்முடைய தீர்க்கதரிசியைக் கொண்டு சென்று, அவருக்குப் பயிற்சியளித்து, அதன்பின்னர் நமக்குத் தம்மை ரூபகாரப்படுத்தும்படிக்கு, அவருடைய வார்த்தையின் முழு வெளிப்பாட்டையும் நமக்குத் தரும்படிக்கு அக்கினி ஸ்தம்பத்தோடு அவரை நம்மிடத்திற்கு திரும்ப அனுப்பினார்.
அந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நாம் செல்ல விரும்பினால், நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது, தேவனால் தம்முடைய திட்டத்தை மாற்ற முடியாது, அவர் மாற்றவும் மாட்டார். அவர் தேவனாய் இருக்கிறார், அவரால் அதை மாற்ற முடியாது. அவர் ஒரு குழுவுடன் ஒருபோதும் தொடர்புகொள்ளமாட்டார். அவர் ஒருபோதும் அவ்வாறு தொடர்பு கொண்டதில்லை. அவர் நம்முடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறார். இந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த மல்கியா 4-ஐ அனுப்புவதாக அவர் தம்முடைய வார்த்தையில் நமக்கு வாக்களித்து, அதையே அவர் செய்துள்ளார்.
ஆனால், நீங்கள் பாருங்கள், கர்த்தரால் உண்டாயிருந்தது என்று ஆகாப் கருதியிருந்த ஒரு முறைமையை அவன் உடையவனாயிருந்தான். அவன், "நான் அவர்களில் நானூறு பேருக்கு, பள்ளிப்படிப்பும் பயிற்சியும் அளித்து வைத்துள்ளேன்" என்றான். இன்றைக்கு ஊழியக் குழுக்கள் செய்வது போல, அவர்கள் எபிரெய தீர்க்கதரிசிகளாக உரிமை கோருகிறார்கள்.
அநேகர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் தேவனுடைய ஏழாம் தூதனான செய்தியாளர், நம்முடைய மேய்ப்பர், அவருடைய மணவாட்டியை வழிநடத்த உலகின் மேய்ப்பராக இருக்கிறார், பண்டைய எலியாவைப் போலவே.
அவர் மல்கியா 4:5-ஆகவும், வெளிப்படுத்துதல் 10:7-ஆகவும் இருக்கிறார். வேதம் அவரைக் குறித்து முன்னறிவித்த அனைத்து வேதவாக்கியங்களின் நிறைவேறுதலாய் அவர் இருக்கிறார். அதுவே இந்தச் செய்தியாய், இந்தச் சத்தமாய், அதுவே தம்முடைய மணவாட்டியை அழைக்கிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறது. இதுவே இன்றைக்கான தேவனுடைய திட்ட வரைபடமாக இருக்கிறது.
இது அதே அபிஷேகிக்கப்பட்ட முறைமையினால், அதே அக்கினி ஸ்தம்பமாக இருக்கிறது. அதே தேவன் அதே காரியங்களைச் செய்கிறார்.
இப்பொழுது வார்த்தை மாம்சமாகி, அவருடைய வார்த்தையான மணவாட்டியாகிய, நம்முடைய மாம்சத்தில் நம்மிடையே வாசமாயிருக்கிறது.
நம்மை இரட்சித்த, நம்மை முன்குறித்த, நம்மை நீதிமான்களாக்கின, அவர் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும்: நாம் அவரிடத்தில் கதறி, அவருக்கு நன்றி கூறி, அவரைத் துதித்து, அவரை ஆராதிப்போமாக.
அவர் இப்போது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்; நமக்கு வெளிப்பாட்டின் மேல் வெளிப்பாட்டை தந்து, நாம் யாராய் இருக்கிறோம் என்பதை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நமக்காக எல்லாவற்றையும் செய்யப் போகிறார்…நித்தியத்தினூடாக அவரோடு இருக்கும்படியாக, அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கிற நம்முடைய வருங்கால பரலோக வீட்டிற்கு நம்மை கொண்டு செல்ல அவருடைய மணவாட்டியான நம்மை அழைத்துச் செல்லவே வருகிறார்.
நமக்கு தேவை என்னவாயிருந்தாலும், அவரிடத்தில் முறையிடுவோம். அதைத்தான் அவருடைய பிள்ளைகள் செய்யும்படிக்கு அவர் விரும்புகிறார். நாம் திருப்தியடைந்து நமக்குத் தேவைப்படுகிறதை பெற்றுக் கொள்ளும்படியாக அவரிடத்தில் முறையிடுவோம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மூன்றாம் யாத்திரை 63-0630M என்ற செய்தியை குறித்த எல்லாவற்றையும் உலகத்திற்கு தேவனுடைய மேய்ப்பராயிருக்கிற வில்லியம் மரியன் பிரான்ஹாம் எங்களிடத்தில் சொல்வதைக் கேட்க அவருடைய மணவாட்டியின் ஒரு பாகத்தோடு வந்து இணைந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 3:1-12
ஆதியாகமம் அதிகாரம் 37
ஆதியாகமம் அதிகாரம் 43
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள பயமற்ற மணவாட்டியே,
எச்சரிக்கை!! எச்சரிக்கை!! சிவப்பு விளக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. திரையானது இறங்கும் நேரம் வந்துவிட்டது. நாம் எல்லாவற்றையும், ஒவ்வொரு காரியத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆயத்தமாக இருக்க வேண்டும். நாம் முடிவில் இருக்கிறோம். ஆரம்பம் முதல் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
1963-க்கு அப்பால் அறுபது வருடங்கள் தொடங்கி இன்று செப்டம்பர் 2023 வரை, நம்முடைய நாளில் நடக்கும் அனைத்தையும் பார்க்க தேவன் தம்முடைய வல்லமையான கழுகு செய்தியாளரை உயரே பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார்…உலகத்தின் நிலைமை, ஸ்திரீகளின் ஒழுக்கக்கேடு, சபையில் அதனுடைய நிலை, ஜனங்களின் பைத்தியக்காரத்தனம்; பொல்லாதவர், குருடர், நிர்வாணமானவர், அரசாங்கத்தின் அனைத்துக் கிளைகளிலும் மகா வேசி, அரசியலில் ஊழல் எப்படி இருக்கும் என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும் எச்சரித்துள்ளார்.
அது எவ்வாறு இருக்கும் என்று அவர் நமக்கு சொன்னபடியே அது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுவதை இப்பொழுது நாம் காண்கிறோம். இந்த எல்லா காரியங்களும் நடந்தேறுவதை கண்டிருக்கிறவர்கள் நாம்தான். ஒவ்வொரு காரியமும் அந்த நிலையில் உள்ளது. அது பெரிய அளவிலான ஒரு பெரிய அசுத்தமான பானையாக மாறிவிட்டது.
உலகம் முழுவதும் பீதி நிலையில் உள்ளது. நம்பிக்கை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. பூமியை அச்சம் மூடிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் போய்விட்டது, காரணமே இல்லாமல் கொலைகள், பெண்கள் ஆண்களாக இருக்க விரும்புகின்றனர், ஆண்கள் பெண்களாக இருக்க விரும்புகின்றனர். எந்தக் காரியமும் மற்றும் ஒவ்வொரு காரியமும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்த நேரத்திலும் என்ன நடக்கலாம்? அது ஒரு எரிமலை போன்று உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியும்; அது எந்த நொடியும் வெடிக்கும். அவர்களின் முகங்களில், அவர்களின் செயல்களில் நீங்கள் அதைக் காண்கிறீர்கள், நம்பிக்கையேயில்லை, பயமே.
கிறிஸ்தவ சபைகள் என்று அழைக்கப்படுபவை கூட திருநங்கைகளை போதகர்களாக, மக்களின் ஆவிக்குரிய தலைவர்களாக அரவணைத்து வருகின்றன. அது சோதோம் கொமோராவை விட மோசமாகிவிட்டது. சாத்தானும் அவனுடைய ராஜ்யமும் ஒன்றுபட்டு ஒன்றாகிவிட்டன. அவன் தன்னுடைய இலக்கை அடைந்துவிட்டான்.
ஆனால் தேவனுக்கே மகிமை, இந்த குழப்பம் மற்றும் பயத்தின் மத்தியில், பிதாவானவர் நம்மை, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனக்குழுவை, அவருடைய இனிய இருதயமான மணவாட்டியை, பாதுகாப்பாக அவருடைய கரங்களில் காத்துக்கொண்டார், மேலும் நாம் அவருடன் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு ஆவிக்குரிய ஐக்கியத்தை உடையவர்களாயிருக்கிறோம். இதுவே நம்முடைய ஜீவியங்களின் மிகப் மகத்தான நேரம். இது அற்புதம். இது மகிமையானது. இது இயற்கைக்கு மேம்பட்டது. இது நாம் வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
நம்முடைய மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது; வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டது. வேதம் இந்த நாளில் என்ன நடக்கும் என்று கூறினதோ, அதுவே நாளுக்கு நாள், நடந்து கொண்டிருக்கிறது.
காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, நம்மால் அதை கணக்கிட கூட முடியாத அளவிற்கு மிக வேகமாக சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம்; அவருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும், அங்கு வார்த்தை வார்த்தையாகிறது.
இவை அனைத்தும் நம்மைச் சுற்றி நடப்பதால், நாம் மகிழ்ச்சியாகவோ, அதிக மனநிறைவாகவோ அல்லது திருப்தியாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் சொல்லி முடியாத சந்தோஷத்தினாலும் மகிமையினாலும் நிரம்பி வழிகின்றன. இது ஒரு நம்ப முடியாத உண்மை.
ஆரம்பத்திலிருந்தே, நாம் தேவனுடைய ஒரு குமாரனாக குமாரத்தியாக இருக்க முன்குறிக்கப்பட்டிருந்தோம் என்பதை அறிந்து, முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுதல் அடைந்துகொண்டிருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாய், கிறிஸ்துவின் இரத்தத்தில் கழுவப்பட்டவர்களாய் இருக்கிறோம். விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமில்லாத தேவனுடைய குமாரன், ஒரு தூய்மையான, அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரினால் கழுவின கலப்படமற்ற வார்த்தை மணவாட்டியுடன் நிற்கிறார். காலத்தின் துவக்கத்திற்கு முன்பே நாம் பிதாவின் மடியில் முன்குறிக்கப்பட்டோம்; அவர் எப்படி இருந்தாரோ அதே போல...மகிமை!! அல்லேலூயா!
நாம் அது மட்டுமல்லாமல், முன்குறிக்கப்பட்ட விவாக அடையாளச் சின்னத்தை அணிந்துகொண்டு, மிக விரைவில் நாம் ஆகாயத்தில் கலியாணத்திற்கு செல்லவிருக்கிறோம். அவர் நம்மை அறிந்திருக்கிறார்…அதை பற்றி தியானியுங்கள், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருந்தார், அதனால் அவர் விவாக அடையாளச் சின்னத்தை அங்கே நமக்கு அணிவித்து, அவருடைய ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் நம்முடைய பெயரை எழுதினார், மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீதிமானாக்கப்பட்டோம்.
இவை அனைத்தையும் பெறுவதற்கு ஒரே ஒரு வழி உள்ளது, நீங்கள் தேவன் அருளிய ஒரே வழியின் மூலம் வர வேண்டும். மூல வார்த்தையை, இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
இந்த வெளிப்படுத்துதலைப் பெற்றதற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் தெளிவாக உள்ளது. மாம்சமும் இரத்தமும் அதை நமக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்தில் உள்ள நம்முடைய பிதாவே அதை வெளிப்படுத்தினார், அதற்காக நாம் அவரை எப்படி நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த நம்முடைய சொற்களஞ்சியத்தில் வார்த்தைகளே இல்லை...ஆச்சரியமான கிருபை.
தேவனுடைய சத்தம் உங்களிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதைப் போன்றது எதுவுமே இல்லை. நம்முடைய ஆத்துமாவில் பெருக்கெடுக்கும் சந்தோஷம். வியப்பதற்கு ஒன்றுமேயில்லை, யூகிக்க ஒன்றுமேயில்லை, இல்லை, யோசிப்பதற்கு கூட ஒன்றுமேயில்லை, நமக்குத் தெரியும், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக உள்ளது. அந்த 100% உத்தரவாதத்தை ஒலிநாடாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் உங்களால் பெற முடியாது.
அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு 63-0623E: என்ற செய்தியை அவர் தம்முடைய வல்லமையான கழுகு தீர்க்கதரிசியின் மூலமாக பேசி நமக்கு கொண்டு வருகையில், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நாளைக் குறித்த எல்லாவற்றையும் தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் சொல்வதை நாங்கள் கேட்கப்போகிறபடியால் நீங்களும் எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
நாங்கள் ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடுவோம். உங்களால் எங்களுடன் சேர்ந்துகொள்ள முடியாவிட்டால், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், இயங்கு பொத்தானை அழுத்தி நித்திய ஜீவனின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 5:28 / 22:20 / 24வது அதிகாரம்
2 தீமோத்தேயு 4வது அதிகாரம்
யூதா 1:7
ஆதியாகமம் 6வது அதிகாரம்