ஞாயிறு
24 ஆகஸ்ட் 2025
65-1212
இராப்போஜனம்

அன்புள்ள ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாய் மாத்திரமேயுள்ள மணவாட்டியே,

இன்றைக்கான அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டிற்காக நாம் பரிசுத்த ஆவியானவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சகோதரன் பிரான்ஹாம் தன்னைக் குறித்து வேத வாக்கியங்களில் வாக்களிக்கப்பட்டுள்ளதை நிறைவேற்றுகிற தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவர்கள் விசுவாசிப்பதாக பலர் கூறுகிறார்கள், ஆனால் வார்த்தையின் உண்மையான வெளிப்பாடும், தேவனுடைய திட்டமும் அவர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

மணவாட்டி கேட்கிற ஒவ்வொரு அன்பின் மடல் செய்தியினால், இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியான, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை கேட்பதன் மூலமே நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை தேவன் நமக்கு உறுதிப்படுத்துகிறார்.

நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி நாம் அவரை பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்: எனவே தேவனுடைய வழிநடத்தும் தன்மை என்பது பரிசுத்த ஆவியினால் இந்த மணி நேரத்திற்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை பின்பற்றுவதேயாகும்.

நித்திய ஜீவனுக்கான ஒரே வழி: பரிசுத்த ஆவியானவர் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை பின்பற்ற உங்களை வழி நடத்துவதே யாகும். இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை யார் உடையவராயிருக்கிறார்? தேவன் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க யாரைத் தெரிந்து கொண்டார்? தேவன் இன்றைக்கான அவருடைய சத்தமாய் இருந்தது யார் என்று கூறினார்? இன்றைக்கு தேவனுடைய மணவாட்டிய வழிநடத்த ரூபுகாரப்படுத்தப்பட்ட தலைவராக இருந்தது என்று தேவன் தாமே கூறினது யாரை? ஊழியத்தையா?

நான் கூறினது போல், அந்த சிறிய கழுகு, மணவாளனின் சத்தத்தைக் கேட்டபோது, கடைசி நாட்களுக்கென அபிஷேகம் பண்ணப்பட்ட, ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், அது அதனன்டை சென்றது.

நோவா அவனுடைய காலத்தில் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான்.

மோசே அவனுடைய காலத்தில் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான்.

யோவான் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தான்.

அவர்கள் அதற்கு என்னவெல்லாம் திரித்துக் கூறுதலையோ அல்லது வியாக்கியானத்தையோ வைக்கலாம், ஆனால்:

வில்லியம் மரியன் பிரான்ஹாம் இன்றைக்கான தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாக இருக்கிறார்!!

எனவே தேவனுடைய வழிநடத்தும் தன்மை என்பது பரிசுத்த ஆவியினால் இந்த மணி நேரத்திற்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை பின்பற்றுவதேயாகும்.

மேலும் தேவனுடைய ருபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை உங்களுடைய சபையில் இயக்குவது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியமாயிருக்கவில்லையா? ஒரு வித்தியாசமான சத்தத்தைக் கேட்பது மிக முக்கியமா?

மணவாட்டியை ஒன்றிணைத்து வழிநடத்துவது ஒரு மனிதர் குழுவும் அவர்களின் ஊழியமும்தானா? ஊழியம் கூறுவதன் மூலம் மணவாட்டி ஒன்றிணைக்கப்படுவாளா? அவர்கள் அனைவரும் வித்தியாசமான ஒன்றைக் கூறுகிறார்கள், எனவே நாம் யாரைப் பின்பற்ற வேண்டும்?

இந்தச் செய்தியின் அவர்களுடைய வியாக்கியானத்தின்படி நாம் நியாயந்தீர்க்கப்படுவோமா? அவர்களுடைய ஊழியத்தை ரூபாகாரப்படுத்த அவர்கள் ஒரு அக்கினி ஸ்ம்பத்தை உடையவர்களாயிருக்கிறார்களா? வார்த்தையின் அவர்களுடைய வியாக்கியானம் உங்களுடைய முற்றிலுமானதாயிருக்கிறதா?

மணவாட்டி ஒன்றிணைக்கப்படுவாள் என்று தீர்க்கதரிசி கூறினார். கர்த்தர் வந்து தம்முடைய மணவாட்டியை ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு செல்ல இந்தத் தீர்க்கதரிசனத்தை எது நிறைவேற்றும் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்?

ஆகையால், தேவனுடைய ஜனங்கள் மறுபடியுமாக ஒன்று சேர ஆரம்பிக்கையில், அங்கே ஒற்றுமை உண்டு, அங்கே வல்லமை உண்டு. புரிகிறதா? தேவனுடைய ஜனங்கள் எப்பொழுதெல்லாம் முழுவதுமாக ஒன்று கூடுகின்றார்களோ, அப்பொழுது உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அதை ஒன்று சேர்க்கத் துவங்கும்போது எடுத்துக் கொள்ளப்படுதலின் நேரமாக அது இருக்கும், நிச்சயமாகவே, அவர்கள் ஒரு சிறு கூட்டமாகத்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு மகத்தான ஒன்று கூடுதல் இருக்கும்.

தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியை காட்டிலும், ஒரு மனிதனுடைய ஊழியத்தைச் சுற்றி ஒரு மகத்தான ஒன்று கூடுதல் இருக்குமா? நீங்கள் உங்களுடைய சபையில் ஒருபோதும் தேவனுடைய சத்தத்தை இயக்கக் கூடாது, அது தவறு என்று ஐந்து வகையான ஊழியக்காரர்களில் சிலர் கூறுகிறபடியால் அது ஒரு கூட்ட ஊழியக்காரர்களாக இருக்குமா? அப்படியானால் அவர்கள் மணவாட்டியை வழிநடத்துவார்களா?

தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்! அந்த மகத்தான ஒன்று கூடுதலில் நான் ஒன்றிணைக்கப்பட விரும்புகிறபடியால் நான் எந்த ஊழியக்காரனை பின்பற்ற வேண்டும்.

ஐந்து வகையான ஊழியர்களின் ஏழு இடி முழக்கங்கள் மணவாட்டியை பரிபூரணப்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு மனிதனின் ஊழியத்தின் நாட்கள் முடிவுற்றுவிட்டன என்று ஐந்து வகையான ஊழியக்காரர்களில் சிலர் கூறுகிறார்கள். நாம் பெந்தேகோஸ்தேக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஐந்து வகையான ஊழியக்காரர்களில் சிலர் கூறுகின்றனர். இந்த செய்தியானது முற்றிலுமானது அல்ல என்று சிலர் கூறுகின்றனர். நீங்கள் ஒலிநாடக்களை இயக்கினால் நீங்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒரு விசுவாசி என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் யாவரும் வித்தியாசமான ஒரு காரியத்தைக் கூறுகின்றனர், மேலும் யாவருமே வித்தியாசமான வியாக்கானங்களை, வித்தியாசமான கருத்துக்களை உடையவர்களாயிருக்கின்றனர், ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் பரிசுத்த ஆவினால் வழிநடத்தப்படுகின்றனர் என்றே கூறுகின்றனர்.

எந்த ஐந்து வகையான ஊழியரை நான் பின்பற்ற வேண்டும்? நான் "என்னுடைய" ஐந்து வகையான ஊழியத்தைக்கொண்ட போதகரைப் பின்பற்றும் வரை, நான் மணவாட்டியாக இருப்பேனா? ஐந்து வகையான ஊழியர்களின் பல வேறுபட்ட "குழுக்கள்" உள்ளன. இந்த 20 ஊழியர்கள் ஒன்றுகூடி தங்கள் கூட்டங்களை நடத்துகிறார்கள், ஆனால் வெவ்வேறு கூட்டங்களை நடத்தும் மற்ற 20 ஊழியர்களுடன் அவர்கள் முற்றிலும் உடன்படவில்லை... ஒன்றிணைக்கப்பட்டு, பரிபூரணப்பட நான் எந்தக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும்…அவர்களில் சிலரிடத்திலா…அவர்கள் எல்லோரிடத்திலுமா?

மேலும் இந்தக் குழப்பம் மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தப் போகிறது என்று ஜனங்கள் விசுவாசிக்கிறார்களா? அவர்கள் அனைவரும் தேவனால் அழைக்கப்பட்ட உண்மையான ஐந்து வகையான ஊழியர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் உங்களை பரிசுத்த ஆவியானவரால் உண்மையான வழிநடத்தும் தன்மைக்கு உங்களை அவர்கள் வழி நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உங்களைத் தங்களிடமும் தங்கள் ஊழியத்திடமும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு, முழு மணவாட்டியையும் ஒருபோதும் ஒன்றிணைக்கவோ அல்லது வழிநடத்தவோ முடியாததை அறிய உங்களுக்கு ஒரு வெளிப்பாடு கூட தேவையில்லை. வார்த்தை மாத்திரமே, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் தாமே மணவாட்டியை ஒன்றிணைக்கும்.

சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒரு போதகரைப் பின்பற்றினால், அவர் வார்த்தையைப் பிரசங்கித்து மேற்கோள் காட்டினால் விழித்தெழுவது நல்லது, அது அற்புதமானது மற்றும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதும் சரிதான், ஆனால் உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல, உங்களுடைய சபையில் ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தத்தை இயக்குவதன் மூலமே, மிக முக்கியமானதை, செய்து கொண்டிருக்கிறார்.

சகோதரன் பிரான்ஹாம் நமக்குச் சொன்னார்:

இப்பொழுது நாம் சரீரப் பிரகாரமாக ஆசரிப்பதற்கு மூன்று தெய்வீக நியமங்கள் நமக்களிக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று இராப்போஜனம், மற்றவை கால்களைக் கழுவுதல், தண்ணீர் ஞானஸ்நானம். இம்மூன்று காரியங்கள் மாத்திரமே. அந்த மூன்றும் பரிபூரணத்துக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. பாருங்கள்.

கர்த்தருக்குச் சித்தமானால், இந்த ஞாயிற்றுக்கிழமை இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல் ஆராதனையை நமக்கு நடத்த நான் விரும்புகிறேன். கடந்த காலத்தில் நாம் செய்துள்ளது போல், உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில் மாலை 5:00 மணிக்குத் தொடங்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அப்போஸ்தலர்கள் ஒவ்வொரு முறையும் ஒன்று கூடிய போது இராபோஜனத்தை அனுசரித்தனர் என்று சகோதரன் பிரன்ஹாம் கூறியிருந்தாலும், அவர் அதை மாலை நேரத்தில் அநுசரிக்க விரும்பினார், மேலும் அதை கர்த்தருடைய இராப்போஜனம் என்று குறிப்பிட்டார்.

செய்தி மற்றும் இராப்போஜன ஆராதனை வாய்ஸ் ரேடியோவில் இருக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாய்ஸ் ரேடியாவில் கேட்க முடியாதவர்களுக்கு, ஒரு பதிவிறக்கம் செய்யக்கூடிய கோப்பிற்கான ஓரு இணைப்பும் இருக்கும்.

சகோதரன் ஜோசப் பிரன்ஹாம்