ஜெபர்சன்வில் நேரம்: ...

இராபோஜனத்துக்கான திராட்சரசத்தை நான் எங்கே பெற்றுக் கொள்ள முடியும், அது கோஷர் திராட்சரசம் என்பதை நான் எப்படி அறிந்துகொள்ளவேன்?

கீழே உள்ள மூன்று விருப்பங்கள் அமெரிக்காவில் உள்ள விசுவாசிகளுக்கு மட்டுமே:

1. நீங்கள் wine.com என்ற வலைத்தளத்திற்குச் சென்று “கோஷர்” என்று தேடினால், அது இராப்போஜனத்துக்கு பயன்படுத்தக்கூடிய கோஷர் திராட்சரசப் பட்டியலைக் கொண்டு வரும்.https://www.wine.com/search/Kosher/124

2. நீங்கள் kosherwine.com என்ற வலைத்தளத்திற்குச் சென்றால், அது இராப்போஜனத்துக்கு பயன்படுத்தக்கூடிய கோஷர் திராட்சரச விபரத்தைக் கொண்டு வரும். https://www.kosherwine.com/

3. மற்றொரு வழி, உள்ளூர் க்ரோகர், மெய்ஜர் அல்லது வால்கிரீன்ஸை தொலைபேசியில் அழைத்து அவர்களிடம் கோஷர் திராட்சரசம் இருக்கிறதா என்று கேட்கலாம். பெரும்பாலானவர்கள் கோஷர் திராட்சரசத்தை வைத்திருப்பர்.

திராட்சரசம் அனுப்புவது மிகவும் கடினம். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கிறீர்களென்றால், உங்கள் உள்ளூர் அங்காடிகளில் உள்ளதா என்று நீங்கள் கண்டறியலாம் அல்லது உள்ளூரில் உள்ள ஒரு சபையில் இராப்போஜன திராட்சரசத்தைக் கேட்கலாம்.

*திராட்சரசம் கோஷரா என்பதை அறிய, கோஷர் சான்றிதழ் சின்னங்களைப் பார்த்து அறிந்து கொள்ள ஒரு வழி உள்ளது. மிகவும் பொதுவான குறியீடுகளில் ஒன்று வட்டத்தின் உள்ளே 'U' போல் தெரியும், இது 'வைதீக ரபீக்களின் ஐக்கியம்' மூலம் சான்றளிக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கும். மற்ற சான்றிதழ் சின்னங்களில் ஒரு வட்டத்திற்குள் 'K' அல்லது நட்சத்திரத்திற்குள் 'K' போடப்பட்டிருக்கும். ஒரு 'cRc' முத்திரை அல்லது ஒரு எபிரெய 'ר‎כש' முத்திரையும் திராட்சரசம் கோஷர் என்பதைக் காண்பிக்கும்.

*இராபோஜனத்துக்கான பிரபலமான திராட்சரசம் மோகன் டேவிட் கான்கார்ட் எனப்படும் திராட்சரசம் ஆகும்.

கால்களைக் கழுவுதல்

கால்களைக் கழுவும் தொட்டிகள் உங்கள் கால்களை மூழ்க வைக்கும் அளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்க வேண்டும்.

உங்களிடம் ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய ஏதேனும் ஒன்று இல்லாவிட்டால், இதோ இரண்டு பரிந்துரைகள்: