அன்பான கழுகுக் குஞ்சுகளே,
பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் வந்து கூடும். நம்மைப் பொறுத்தவரை, அந்தப் புத்தம் புதிய மாம்ச மன்னாவை நாம் பெறுவதற்கு ஒரே ஒரு சரியான இடம் மாத்திரமே உண்டு: அது இயங்கு பொத்தானை அழுத்தி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான்.
புத்தம் புதிய மன்னாவைக் குறித்துப் பேசுகிறோமே, நம் விரல் நுனியில் நாம் வைத்திருப்பதைப் பற்றி நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா? தேவனுடைய சத்தம் தாமே, தம்முடைய பிரியமான மணவாட்டியிடம் ஒலிநாடாக்களில் பேசுகிறது; நாம் கேட்பது தேவன் தானா என்பதில் எந்த ஊகத்திற்கோ, ஆச்சரியத்திற்கோ, கேள்விக்கோ அல்லது சந்தேகத்திற்கோ இடமில்லை. அவர் தம்முடைய மணவாட்டியிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசும்படி ஒரு மனித சத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வெளிப்பாட்டின் மூலம், நாம் கேட்டுக்கொண்டிருக்கிற வார்த்தைகள் ஒரு மனிதனின் வார்த்தை அல்ல, அல்லது அவனுடைய வியாக்கியானமோ அல்லது கருத்தோ அதனுடன் சேர்க்கப்படவில்லை, ஆனால் அது கழுகுக் குஞ்சுகளாகிய நம்மிடம் பேசும் தேவனுடைய தூய வார்த்தையாயும், வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தையாயும் உள்ளது என்பதில் நம் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை அளிக்கக் கூடிய, நாம் செல்லக்கூடிய ஒரே இடம் இதுதான் என்று நாம் விசுவாசிக்கிறோம்.
நாம் வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொள்கிறோம். நம்முடைய வேதாகமங்களில் அவருடைய வார்த்தையை வாசிக்கிறோம். தேவனால் நியமிக்கப்பட்ட, அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டிப் பிரசங்கிப்பதையும் கூட நாம் கேட்கிறோம், ஆனால் நம்முடைய நாட்களில், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், அவருடைய உரைக்கப்பட்ட பரிபூரண வார்த்தையைக் கேட்கக்கூடிய ஒரு இடத்தை தேவன் நமக்கு அருளியுள்ளார்.
நம்முடைய இருதயத்தில் இருந்த கேள்விகளுக்கு பரிபூரண பதிலை பெற்றுக்கொள்ளும்படி, தம்முடைய மணவாட்டி கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பையும் கூட பிதா வழங்கினார்:
• பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒருவரிடம் சாத்தான் அந்நிய பாஷைகள் அல்லது தீர்க்கதரிசன வரத்தைப் பயன்படுத்த முடியுமா?
• மத்தேயு 12, வசனம் 32-ல் இயேசு எதைக் குறிப்பிட்டார்?
• தயவுசெய்து 1 கொரிந்தியர் 13:8-12-ஐ விளக்கவும்.
• ஆரோக்கியமான கணவனும் பிள்ளைகளும் இருக்கும்போது பெண்கள் பொது இடங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?
• ஒரு பெண் தன் தலைமுடியைச் சுருட்டுவது தவறா?
தேவன் தம்முடைய மணவாட்டியை ஆசீர்வதிக்கவும் பலப்படுத்தவும் பல வழிகளை அருளியுள்ளார், ஆனால் அவர்கள் கேட்பது அவருடைய பரிபூரண வார்த்தைதான் என்பதில் 100% நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரே ஒரு இடத்தை மட்டுமே அவர் வழங்கியுள்ளார். எந்தவொரு கலப்படத்திற்கும் சாத்தியமில்லாத, கழுகுக் குஞ்சுகள் பருகக்கக்கூடிய ஜீவத் தண்ணீரின் ஒரே ஊற்று அதுதான். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அந்த ஊற்றிலிருந்து பருகும்படிக்கு வர உங்களை அழைக்கிறேன், அங்கு நாம் 64-0823E "கேள்விகளும் பதில்களும் #2" என்ற செய்தியைக் கேட்போம்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்