இராப்போஜன அப்பம்
இராப்போஜன அப்பம் "அவசரத்தின் அப்பம்" அல்லது "பாஸ்கா அப்பம்" என்றும் அறியப்படுகிறது. எகிப்தில் பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் விடுவிக்கப்பட்டபோது, அப்பத்தை உப்பிப்போகச் செய்ய புளிப்புடன் அல்லது புளிக்க வைத்து பாரம்பரிய முறையில் அப்பத்தைச் சுட அவர்களுக்கு நேரம் இல்லை. இது அவர்களின் பயணத்திற்கான அவசரத்தில் புளிப்பில்லாத மாவால் செய்யப்பட்டது.
கர்த்தராகிய இயேசு இங்கே பூமியில் தம்முடைய சீஷர்களுடன் கடைசியாகச் செய்த காரியங்களில் ஒன்று இராப்போஜனம் எடுத்துக் கொண்டதாயிருந்தது; மேலும் விசித்திரமாக, சகோதரன் பிரான்ஹாம் கடைசியாகப் பிரசங்கித்த செய்தி 65-1212 இராப்போஜனம்.
தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்தவர்களால் அப்பம் செய்யப்பட வேண்டும் என்று வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு விசுவாசி மட்டுமே ஒரு இராப்போஜன ஆராதனைக்கான அப்பத்தை ஆயத்தப்படுத்த வேண்டும்.
• இராப்போஜன அப்பத்தை தயாரிக்க, முதலில் மாவையும் தண்ணீரையும் கலக்கவும். முதலில் ½ கோப்பை வெந்நீரை எடுத்துக்கொண்டு, மேலும் மேசைக்கரண்டியில் தேவைப்படும் தண்ணீரை சேர்த்து, மென்மையான மாவாக மாறும் வரை (கையால் அல்லது கலக்கும் கருவியான மிக்சியில்) பிசையவும்
• மாவு சிறிது பிசையப்பட்டுவிட்டபடியால், மாவை மேற்பரப்பில் மிக மெல்லியதாக உருட்டவும்.
• ஒரு முட்கரண்டியைக் கொண்டு மாவை மூன்று அல்லது நான்கு முறை குத்தவும், அதனால் சமைக்கும்போது அது தட்டையாக இருக்கும். உருட்டப்பட்ட மாவை காகிதத்தோல் கொண்ட ஒரு தாளில் வைக்கவும்.
• 400F என்ற அளவிற்கு ஏற்கனவே சூடேற்றப்பட்ட அடுப்பில் 15 நிமிடங்களுக்கு அப்பத்தைச் சுடவும். அல்லது, உருட்டிய மாவை முன்னரே சூடாக்கப்பட்ட கனமான வாணலியில் வைக்கவும். வாணலியில் இருபுறமும் வேக வைக்க உருட்டப்பட்ட மாவை ஒரு முறை திருப்பிப் போடவும். எண்ணெய் தேவையில்லை.
• இப்போது உங்கள் கைகளால் அப்பத்தை சிறிய துண்டுகளாக உடைக்கவும். அப்பத்தின் துண்டிக்கப்பட்ட விளிம்புகள் கர்த்தராகிய இயேசுவின் நொறுக்கப்பட்ட சரீரத்தைக் குறிக்கிறது.
அப்பம் கூடுதலாக இருந்தால், இன்னும் ஜெபம் ஏறெடுக்கப்படாதபடியினால் தள்ளி வைத்துவிடலாம்.
இராப்போஜன ஆராதனையில் அப்பத்திற்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டவுடன், மீதமுள்ள அப்பம் ஒரு புதிய நாள் விடியலுக்கு முன் எரிக்கப்பட வேண்டும். எரிக்கப்பட்ட அப்பமானது வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் பயணத்திற்கு மாதிரியாயுள்ளது, ஒவ்வொரு நாளும் பரலோகத்திலிருந்து புதிய மன்னா விழுந்தது. முந்தைய நாள் அப்பம் மாசுபட்டும் நல்லதல்லாததுமாயிருந்தது. அதாவது, ஓய்வு நாளில், யாரும் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, மேலும் வெளியிலிருந்து புதிய மன்னாவை சேகரிக்க வேண்டும். அந்த சமயத்தில், முந்தைய நாளில் ஆகாரம் அவர்களுடைய கூடாரங்களில் சேகரிக்கப்பட்டு, ஓய்வு நாளில் அவர்கள் சாப்பிடுவதற்காக கர்த்தர் அதைப் பாதுகாத்தார். (குறிப்பு - யாத்திராகமம் 16)
சகோதரன் பிரான்ஹாம் ஏழு சபை காலங்களுக்கு எரிக்கப்படுகிற அப்பத்தை மாதிரியாகக் காண்பித்தார், ஏனெனில் ஒவ்வொரு சபைக் காலமும் அடுத்த சபைக் காலம் கொண்டுவரும் புதிய மன்னாவுக்கு வழிவகுக்க முழுவதுமாக அழிய வேண்டும். மேலும், ஒரு விசுவாசியின் தனிப்பட்ட அனுபவத்திற்கும், ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவர் நம் ஜீவியங்களில் புதிதாக வருவதற்கு அனுமதிக்க, நாம் எவ்வாறு அனுதினமும் மரிக்க வேண்டும் என்பதையும் மாதிரியாகக் காண்பித்தார்.
அனைத்து அப்பமும் முற்றிலும் எரிந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த, அப்பத்தை ஒரு சிறிய காகிதப் பையில் வைத்து, சூடான நெருப்பின் நடுவில் வைக்கவும். மீதமுள்ள அனைத்து எச்சங்களும் எரிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.
இந்த கோஷர் அப்பம், இது ஒரு கிறிஸ்தவனால் உண்டாக்கப்பட்டது. இது புளிப்பில்லாத அப்பம். நீங்கள் கவனிப்பீர்களானால், அதை நீங்கள் வாயில் போடும்போது, மிகவும் சொறசொறப்பாயும், கசப்பாயுமுள்ளது. அது சுருக்கம் விழுந்து, உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டுள்ளது. இது கர்த்தராகிய இயேசுவின் உடைக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட சரீரத்தைக் குறிக்கிறது. ஓ, அதை நான் நினைக்கும்போதெல்லாம், என் இருதயத் துடிப்பு நின்றுவிடும்போல் தோன்றுகிறது! அவர் நொறுக்கப்பட்டு, காயப்பட்டு, அடிக்கப்பட்டார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, களங்கமற்ற தேவனுடைய குமாரன்! அவர் ஏன் அப்படி செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் குற்றவாளியாயிருப்பதால். அவருடைய பலியின் மூலம் நான் அவரைப் போல தேவனுடைய குமாரனாக ஆக வேண்டும் என்பதற்காக அவர் என்னைப் போல பாவியானார். என்ன ஒரு தியாகம்!
62-1231 போட்டி
இராப்போஜன திராட்சரசம்
இராப்போஜன திராட்சரசம் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது, இது நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரிக்கிறது, மேலும் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைச் தெரிவிக்க எடுக்கப்படுகிறது. இராப்போஜன திராட்சரசம் என்பது திராட்சை சாறாக இருக்கக்கூடாது, அது பழையதாகும்போது புளிப்பாகி, கெட்டுப்போகும், ஆனால் அது பழையதாக ஆக மேலும் வலுவடையும் உண்மையான திராட்சரசம்; அது தன் வலிமையை இழக்காது.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நாளாக நாளாக புளிப்பாகி, கெட்டுப்போகாமல், விசுவாசிக்கு நாட்கள் செல்லச் செல்ல வலுவடைந்து மேலும் சிறப்பாகிறது.
வேதாகமத்தில், திராட்சரசம் என்பது விசுவாசிக்கு வெளிப்படுத்தப்படும்போது, வார்த்தையினால் ஏற்படும் ஊக்கமளித்தலைக் குறிக்கிறது.
58 எனக்கு அளிக்கப்பட்டதின்படி, திராட்சரசம், வெளிப்பாடு அளிக்கப்படும் ஊக்க உணர்ச்சிக்கு அடையாளமாயுள்ளது என்று நான் கூறினேன். பார்த்தீர்களா? ஏதாவதொன்று வெளிப்படும்போது, அது விசுவாசிக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஏனெனில் அது வெளிப்பாட்டினால் அவனுக்கு வழங்கப்படுகின்றது. புரிகிறதா? அது தேவன் கூறியிருக்கிற ஏதோ ஒரு காரியமாயிருக்கிறது. அது ஒரு இரகசியம்; எனவே அவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது, பாருங்கள், ஆனால், சற்று பின்னர் தேவன் அதை வெளிப்படுத்தி, அதன்பின்னர் அதை ரூபகாரப்படுத்துகிறார்.
63-0321 - நான்காம் முத்திரை
அப்பத்தைப் போன்று “பரிசுத்த கரங்களால்” திராட்சரசம் தயாரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. கோஷர் திராட்சரசத்தை அல்லது பஸ்கா திராட்சரசத்தை கடையில் வாங்கலாம். இருப்பினும், நீங்களே திராட்சரசத்தை எவ்வாறு தயாரிப்பது என்ற வழிமுறைகளுக்கு, இந்தப் பக்கத்தில் உள்ள ரெசிபி கார்டுகளுக்கு செல்லவும்.
ஜெபர்சன்வில்லில் உள்ள எங்கள் உள்ளூர் சபைக்கு திராட்சரசம் மற்றும் சிறிய பிளாஸ்டிக் கோப்பைகளை வழங்குவோம். இராப்போஜன ஆராதனையில், திராட்சரசத்தை சிறிய கோப்பைகளில் எடுத்துக்கொள்ளலாம், ஒவ்வொருவருக்கும் ஒன்று என்றப்பிரகாரமாக, அல்லது ஒரு பெரிய கோப்பையிலேயே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளலாம். அப்பத்தைப் போலல்லாமல், இராப்போஜனம் எடுத்துக்கொண்ட பிறகு, மீதமுள்ள இராப்போஜன திராட்சரசத்தை கீழே ஊற்றிவிடலாம்.
இராப்போஜனம் எடுப்பது, கர்த்தரின் சரீரத்தையும் இரத்தத்தையுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அது எப்போதுமே விசுவாசிக்கு "வெற்றியைக்" குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மரணத்தின்போது, இராப்போஜனம் கொடுக்க ஆரம்பிக்கப்படுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஆபிரகாம் தேவனோடு இராப்போஜனம் எடுத்துக் கொண்டான்.
அவனுடைய சகோதரன், லோத்தை மீட்பதற்காக இராஜாக்களை சங்கரித்து, அவன் பெரும் வெற்றியைப் பெற்ற பிறகு, ஆபிரகாம் மெல்கிசேதேக்கை சந்தித்தான், அவர்கள் ஒன்றாக இராப்போஜனம் எடுத்துக்கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் நாம் இராப்போஜனம் எடுத்துக் கொள்ளும்போது, அப்பமும் திராட்சரசமும் நம்முடைய ஜீவியங்களில் சத்துருவுக்கு எதிரான வெற்றியையே குறிக்கிறது. ஒரு நாள், யுத்தம் முடிவடைந்ததும், ஆபிரகாமின் சந்ததியாகிய நாம், அந்த மகத்தான இராப்போஜன ஆராதனைக்காக நம்முடைய கர்த்தரை ஆகாயத்தில் சந்தித்து, கலியாண விருந்தில் அவருடன் முகமுகமாய் போஜனம்பண்ணுவோம்.
யுத்தம் முடிந்ததும், மெல்கிசேதேக்கு தன்னுடைய ஜெயங்கொண்ட குமாரனுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தார்; தன்னையே ஒரு பங்காக அவனுக்கு கொடுத்தார் என்பதை கவனியுங்கள்! இப்பொழுது நாம் இதை இங்கே புரிந்துகொள்ள விரும்புகிறோம்.
யாக்கோபு இரவெல்லாம் போராடினான், அவர் அவனை ஆசீர்வதிக்கும் மட்டும் அவன் அவரை விடவில்லை. அது உண்மை. ஜீவனுக்காக போராட்டம்! யுத்தத்திற்குப் பிறகு தேவன் தம்மையே உனக்குத் தருவார். அது தான் அவருடைய உண்மையான இராப்போஜனம். சிறிய அப்பமும் திராட்சரசமும் அதற்கு அடையாளமாக அமைந்துள்ளது. நீங்கள் போராடி தேவனுடைய பாகமாக்கப்படவில்லையென்றால் அதில் பங்குக்கொள்ளகூடாது.
நினைவிருக்கட்டும், இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு முன்பு வரையில், அந்த சமயத்தில் இராப்போஜனம் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் நியமிக்கப்பட்டது.
ஆனால் மெல்கிசேதேக்கு, அவருடைய பிள்ளையாகிய ஆபிரகாம் வெற்றியுடன் திரும்பின பிறகு, மெல்கிசேதேக்கு அவனை சந்தித்து அவனுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தார்; இந்த பூமிக்குரிய யுத்தம் முடிவுற்றப் பிறகே, நாம் அவரை ஆகாயத்தில் சந்தித்து, மீண்டும் இராப்போஜனம் எடுத்துக்கொள்வோம் என்பதையே இது காட்டுகிறது. அது கலியாண விருந்தாயிருக்கும். “இது முதல் இந்தத் திராட்சப் பழரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையன்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். அது சரிதானே?
மறுபடியும் கவனியுங்கள், ஆபிரகாம் வீட்டிற்கு செல்வதற்கு முன் மெல்கிசேதேக்கு அவனை சந்தித்தார். இங்கே நாம் என்ன ஒரு அழகான மாதிரியைப் பெற்றுள்ளோம்! யுத்தத்திற்கு பிறகு, ஆபிரகாம் வீட்டிற்கு திரும்பி செல்லும் முன் மெல்கிசேதேக்கு அவனை சந்தித்தார்.
நாம் வீட்டிற்கு செல்வதற்குமுன், நாம் இயேசுவை ஆகாயத்தில் சந்திப்போம். அது உண்மை. "நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம்" என்று இரண்டாம் தெசலோனிக்கேயர் நமக்குச் சொல்கிறது."
65-0221E யார் இந்த மெல்கிசேதேக்கு?
செய்முறை அட்டைகள்