காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 3 ஆகஸ்ட், 2024

அன்புள்ள மறைவான மன்னாவை புசிப்பவர்களே,

தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தம்முடைய ஏழாம் தூதனான செய்தியாளரை அனுப்பினாரேயன்றி; மற்றொரு மனிதனை அல்ல, ஒரு மனிதக் குழுவை அல்ல, ஆனால் ஒரு மனிதனையே, ஏனெனில் செய்தியும் அவருடைய செய்தியாளரும் ஒன்றே. தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் அதை மனித உதடுகளின் மூலம் தம்முடைய மணவாட்டியிடம் பேசினார், அவர் அதை எப்படி சொன்னாரோ அதை அப்படியே நாம் விசுவாசிக்கிறோம்.

இன்றைக்கு எந்த சத்தம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்றும், அது நம்மிடத்தில் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் நாம் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நித்திய இலக்கு அந்த தீர்மானத்தைப் பொறுத்தது; எனவே நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் எது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். எந்த சத்தம் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறது? எந்த சத்தம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையதாயிருக்கிறது? இது என்னுடைய சத்தமாய், என்னுடைய வார்த்தைகளாய், என்னுடைய உபதேசமாக இருக்க முடியாது, ஆனால் அது வார்த்தையாக இருக்க வேண்டும், எனவே அது நமக்கு என்ன சொல்லுகிறது என்பதை புரிந்து கொள்ளும்படிக்கு நாம் வார்த்தைக்கு செல்ல வேண்டும்.

முடிவிலே நம்மை வழிநடத்த ஐந்து விதமான ஊழியத்தை அவர் எழுப்புவார் என்று அது நமக்குச் சொல்கிறதா? அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை பெற்றிருப்பதை நாம் வார்த்தையில் தெளிவாகக் காணலாம்; மிக முக்கியமான ஸ்தானங்கள், ஆனால் மணவாட்டியாய் இருக்க நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று எங்காவது வார்த்தை கூறுகிறதா?

தேவ சித்தத்திற்கு புறம்பாக அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சிக்கும் அநேக மனிதர்கள் இந்த கடைசி நாட்களில் எழும்புவார்கள் என்று தீர்க்கதரிசி நமக்கு சொன்னார். அவர் அவர்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பார், ஆனால் அவருடைய மணவாட்டியை வழிநடத்த அது அவருடைய பரிபூரண வழி அல்ல. அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினுடைய சத்தத்தை விசுவாசித்து கேட்பதே அவருடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது என்றும், அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வருவதாகவும் அவர் கூறினார். ஏனென்றால் அது, அது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறாவது என்பதை உடையதாய் இருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய தூதனை அனுப்பினார்; அதனால்தான் அவர் இவரைத் தெரிந்து கொண்டார்; அதனால்தான் அவர் அதை ஒலிப்பதிவு செய்திருந்தார். இதுவே அவருடைய மணவாட்டிக்கு ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரமாயும், மறைவான மன்னாவுமாயிருக்கிறது.

ஏனென்றால் இந்த ஏழு சபை காலங்களிலுமே, மனிதர்கள் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடைய சொந்த வார்த்தைக்கே மதிப்பு கொடுக்கிறார்களேத் தவிர, வேறொன்றையுமே நான் காணாதிருக்கிறேன். ஆகையால் நான் இந்த முடிவு காலத்திலே உங்களை என்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இது முடிவு பெற்றாயிற்று. நான் உங்களிடத்தில் சரியாக பேசப் போகிறேன். ஆம், நான் இங்கே சபையின் மத்தியில் இருக்கிறேன். உண்மையும், சத்தியமும், ஆமெனின் தேவனானவர் தம்மை வெளிப்படுத்துவார். அது என்னுடைய தீர்க்கதரிசி மூலமாய் இருக்கும்" என்கிறார்./u>. ஒ, ஆம், அது அவ்வண்ணமாகவே இருக்கிறது.

ஏழு சபை காலங்களிலுமே மனிதர் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடையதற்கே மதிப்பு கொடுக்கிறார்கள். இது இப்போது நம்மிடையே நடந்து கொண்டிருக்கவில்லையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டுமல்லவா? "சபையில் ஒலிநாடாக்களை இயக்காதீர்கள், ஆனால் உங்கள் போதகர் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், உங்கள் வீட்டில் ஒலிநாடாக்களை போட்டுக் கேளுங்கள்." அவர்கள் அவருடைய சத்தத்தை மிக முக்கியமான சத்தமாக ஒலிநாடாவில் இயக்குவதில்லை, ஆனால் அவர்களுடைய சத்தத்திற்கே முக்கியத்துவமளிக்கின்றனர்.

அவர்கள் தங்களையும், தங்களுடைய ஊழியத்தின் முக்கியத்துவத்தையும், மணவாட்டியை வழி நடத்துவதற்கும், வார்த்தையை கொண்டு வருவதற்குமான தங்களுடைய அழைப்பையும் ஜனங்களுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மணவாட்டி அதன் பேரில் நிற்க முடியாது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். அவர்கள் அதன் பேரில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; அது தேவனுடைய சத்தமேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அதைத்தான் வார்த்தை கூறுகிறது.

இன்றைக்கு ஜனங்களுடைய மனதில் உள்ள கேள்வி என்னவென்றால்: தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த யாரைத் தெரிந்து கொண்டார், ஒலிநாடாக்களையா அல்லது ஐந்து விதமான ஊழியத்தையா? அந்த ஊழியம் மணவாட்டியை பரிபூரணப்படுத்துமா? அந்த ஊழியம் மணவாட்டிக்கு வழிகாட்டுமா? தேவனுடைய வார்த்தையின்படி, அது ஒருபோதும் அவருடைய வழியாயிருந்ததேயில்லை.

இந்தச் செய்தியை பல ஆண்டுகளாகப் பின்பற்றி விசுவாசிப்பதாக கூறுகிற பல மனிதர்கள் இன்று இருக்கிறார்கள், ஆனால் இப்போது நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக தங்களுடைய ஊழியத்தையே முன்வைக்கிறார்கள்.

பிறகு எந்த ஊழியத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள்? உங்கள் நித்திய இலக்கை எந்த ஊழியத்தில் வைப்பீர்கள்? அவர்கள் அனைவரும் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். நான் அதை மறுக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை, ஆனால் ஐந்து விதமான ஊழியத்தின் பதவிகளில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க ஊழியர்களில் சிலர், "இது தேவனுடைய சத்தம் அல்ல, இது வெறுமனே வில்லியம் பிரான்ஹாமின் சத்தம்" என்று கூறுகிறார்கள். மற்றவர்கள், "ஒரே- மனிதனுடைய செய்தியின் நாட்கள் முடிந்துவிட்டன" அல்லது "இந்தச் செய்தி முற்றிலுமானதல்ல" என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறாரா?

நூற்றுக்கணக்கான தங்களுடைய தொடர் கூட்டங்களில் பிரசங்கித்த புருஷர்கள்; ஐந்து விதமான ஊழியத்தின் மகத்தான தலைவர்கள், இப்போது செய்தியை மறுதலித்து, "இந்த செய்தி தவறானது" என்று கூறுகிறார்கள்.

இன்றைக்கு பெரும்பாலான எல்லா ஊழியமும், “நீங்கள் சபையில் தேவனுடைய தூதனின் சத்தத்தைக் கேட்க வேண்டாம், உங்களுடைய வீடுகளில் மாத்திரமே கேட்க வேண்டும்” என்றும், சகோதரன் பிரான்ஹாம் சபையில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று ஒருபோதும் கூறவேயில்லை” என்றும் கூறுகிறது.

அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்றும், மனுஷகுமாரன் பேசுகிறார் என்றும் விசுவாசிப்பதாக கூறிவிட்டு, இப்படிப்பட்ட ஒரு வஞ்சகமான அறிக்கைக்கையை நம்புகிற ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ என்னால் நம்ப முடியவில்லை, இது உங்களுடைய வயிற்றில் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் மணவாட்டியாய் இருந்தால், அது அவ்வாறு செய்யும்.

தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்த சிந்தையை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் தம்முடைய ஜனங்களை வழிநடத்த எப்போதும் ஒரு மனிதனையே தெரிந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் அவர்களுடைய ஸ்தானத்தை பெற்றிருக்கிறார்கள், ஆனால் அவர் ஜனங்களை வழிநடத்தும்படி தெரிந்து கொண்டவரிடத்திற்கே ஜனங்களை அவர்கள் வழிநடத்த வேண்டும். ஜனங்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த ஊழியக்காரர்கள் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறதைக் கேளுங்கள். தீர்க்கதரிசியினுடைய ஊழியத்திற்கு முன்பாக தங்களுடைய ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் மேற்கோள்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி ரூபகாரப்படுத்தப்பட்டு, அவர் நிரூபித்திருக்கிற தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் எந்த மனிதனுடைய ஊழியம் மிக முக்கியமானதாக இருக்க முடியும்?

உண்மையாகவே அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்கள், அவர்கள் மேல் உண்மையான பரிசுத்த ஆவியிருக்க முடிந்தும், தவறாய் இருக்கிறார்கள் என்று அவர் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். உறுதியாக இருப்பதற்கு ஒரு வழி மாத்திரமே உள்ளது, மூல வார்த்தையுடன் தரித்திருங்கள், ஏனெனில் இந்த செய்தியும் செய்தியாளரும் ஒன்றே. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படிக்கு தேவன் ஒரு சத்தத்தை மாத்திரமே தெரிந்துகொண்டார்…ஒன்றே.

ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தத்திலிருந்து தேவனுடைய வார்த்தையை கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவும் இல்லை என்று உண்மையான ஊழியம் உங்களுக்கு சொல்லும். அவர்கள் பிரசங்கிக்கலாம், போதிக்கலாம் அல்லது அவர்கள் என்ன செய்ய அழைக்கப்பட்டாலும், அவர்கள் தேவனுடைய சத்தத்தை முதலில் வைக்க வேண்டும்; ஆனால் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்களுடைய ஊழியத்தையே முதலில் வைக்கிறார்கள். அவர்கள் விசுவாசிப்பதை அவர்களின் செயல்களே நிரூபிக்கின்றன.

சகோதரன் ஜோசப் ஊழியர்களை நம்புகிறதில்லை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய பிரசங்க பீடங்களில் தேவனுடைய சத்தத்தை முன்வைப்பதை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் தவிர்க்கிறார்கள். அவர் சபைக்கு செல்வதை நம்புகிறதில்லை. அவர்கள் ஒரு மனிதனை ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஜோசப்பின் கோட்பாட்டை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் அதே ஒலிநாடாக்களை இயக்கி கேட்பதன் மூலம் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். முக்கிய கேள்வியிலிருந்து மக்களை திசை திருப்புதல். அவர்களுடைய ஊழியம்தான் முதன்மையானது என்று தங்களுடைய ஜனங்களுக்கு போதிப்பதன் மூலம் அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய செயல் நிரூபிக்கிறது.

ஜனங்கள் ஒரே ஒலிநாடாவை ஒரே நேரத்தில் கேட்பது ஒரு ஸ்தாபனம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருந்தபோது, ஒரே நேரத்தில் ஜனங்கள் எல்லோரும் செய்திகளை தொலைபேசி இணைப்பின் மூலம் சரியாக கேட்கும்படி செய்யவில்லையா?

நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், சகோதரன் பிரான்ஹாம் இன்றைக்கு மாம்சத்தில் இங்கே இருந்திருந்தால், ஒரே நேரத்தில் அவர் பேசுவதை கேட்க எல்லா மணவாட்டியையும் தொலைபேசி இணைப்பில் இணைத்திருக்க மாட்டாரா? தேவன் அவரை பரமவீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ததைப் போல மணவாட்டியை தன்னுடைய ஊழியத்தின் பேரில் ஒன்றாகக் கொண்டுவர முயற்சிக்கமாட்டாரா?

நான் இங்கே ஒன்றை இடையில் கூறட்டும். விமர்சகர்கள் சொல்வார்கள், பாருங்கள், அவர் மனிதனின் பேரில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்; அவர்கள் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற ஒரு மனிதனை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்!! அதைக் குறித்தும் கூட வார்த்தை என்ன கூறுகிறது என்பதையும் நாம் பார்ப்போமாக:

ஏழாம் தூதனின் நாட்களில், லவோதிக்கேயா காலத்தில், அதனுடைய செய்தியாளன் பவுலுக்கு வெளிப்பட்டது போன்ற தேவ ரகசியங்களை. வெளிப்படுத்துவார். அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுவார். அந்தத் தீர்க்கதரிசியை அவருடைய சொந்த நாமத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அந்தத் தீர்க்கதரிசியினுடைய ஊழியத்தின் நற்பலனைப் பெறுவார்கள்.

மற்ற எல்லாவற்றையும் விட இது பிசாசுக்கு கோபத்தை உண்டாக்கப் போகிறது, மேலும் அவன் என்னை நோக்கி இன்னும் அதிகமாக தாக்குவான், ஆனால் ஜனங்களே, நீங்கள் இதை வார்த்தையுடன் சரிபார்ப்பது நல்லது. நான் இதைக் கூறினேன் என்பதனால் அல்ல, இல்லை, அப்படியானால் நான் மற்ற மனிதனைப் போல இருப்பேன், ஆனால் உங்கள் இருதயங்களையும் சிந்தனைகளையும் திறந்து வார்த்தையால் சரிபார்க்கவும். வேறு எந்த மனிதனாவது உங்களுக்கு கூறுவதையோ அல்லது வியாக்கியானிப்பதையோ அல்ல, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசி என்ன சொன்னார் என்பதையேயாகும்.

இந்தக் கடிதத்திற்குப் பிறகு அவர்கள் உங்களுக்கு மேற்கோளுக்குப் பின் மேற்கோளை மேற்கோளாக கொடுப்பார்கள், மேலும் ஒவ்வொரு மேற்கோளுக்கும் நான் ஆமென் என்று கூறுகிறேன், ஆனால் முக்கியமான காரியத்தைக் குறித்து என்ன? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்க வேண்டும் என்றா அல்லது அவர்களுடைய ஊழியத்திற்கு செவி கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல அவர்கள் மேற்கோள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் செய்தி, தீர்க்கதரிசி என்று கூறினால், அப்பொழுது அந்த சத்தத்தை உங்களுடைய சபையில் முதலில் வைக்கும்படி அவர்களுக்கு சொல்லுங்கள்.

மனித இயல்பின் அடிப்படையில், எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தில் ஒரு சிறிய குறிப்புகளில்கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர்.

அங்குதான் காரியமே உள்ளது. இந்த ஒரு மேற்கோள் அது முடியாது என்று உங்களுக்கு சொல்கிறது, மேலும் அது மனிதக் குழுவாக இருக்காது. இது மனித இயல்பின் அடிப்படையில் மட்டுமேயுள்ளபடியால், இது ஜனங்களை ஒன்றிணைக்கும் ஊழியம் அல்ல, அவர்கள் முக்கிய கோட்பாடுகளின் குறைவான விஷயங்களிலேயே பிரிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை, எனவே நீங்கள் மூல வார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.

அப்படியானால் இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப் போகின்றபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்?

யார் நம்மை வழிநடத்துவார்? பிழையற்ற வல்லமை கொண்ட ஒரு சத்தம் மணவாட்டியை வழிநடத்த வேண்டும்.

அதாவது பவுலின் நாட்களில் பரிபூரணமாக அளிக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தையை நாம் மீண்டும் ஒருமுறை பெற்றுக் கொள்வோம் என்பதை அதன் பொருளாகும்.

மகிமை…இது பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு எந்த குறுக்கீடும் தேவையில்லை, அது பரிபூரணமாக கொடுக்கப்பட்டபடியால், மணவாட்டியாகிய, நாம், ஒவ்வொரு வார்த்தையையும் பரிபூரணமாக புரிந்துகொண்டு விசுவாசிக்கிறோம்.

அங்குதான் காரியம் உள்ளது. அவர் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

அவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

அவர் யோவான் ஸ்நானனைப் போன்றும், பண்டைய எலியாவைப் போன்றும், உலகமார்க்கத்திற்கும், கல்விக்கும், ஸ்தாபனத்திற்கும் தொடர் பற்றவராயுள்ள ஒருவரையே அனுப்புகிறார்.

அவர் தேவன்கூறுவதை மாத்திரமே கேட்பார்.

அவர், "கர்த்தர் உரைக்கிறதாவதை" உடையவராயிருந்து, தேவனுக்காகவே பேசுவார்.

அவர் தேவனுக்காக பேசும் சத்தமாயிருந்து.

அவர் மல்கியா 4:6-ல் உரைக்கப்பட்டிருக்கிறபடியே, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.

அவர் கடைசி காலத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை திருப்பிக் கொண்டு வருவார், பவுல் கூறினதுபோன்ற சரியான சத்தியத்தைக் கூறுகிற ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கே அவர்கள் செவி கொடுப்பர்.

அவர்கள் கொண்டிருந்த சத்தியத்தைப் போன்ற சத்தியத்தையே அவர் திரும்ப அளிப்பார்.

அந்த நாளில் அவரோடுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை உண்மையாய் வெளிப்படுத்துகிறவர்களுமாயும், அவருடைய சரீரமாயும், அவருடைய சத்தமாயுமிருந்து, அவருடைய கிரியைகளைச் செய்கிறவர்களுமாயிருப்பர். அல்லேலூயா! உங்களுக்கு அது புரிகின்றதா?

நாம் அதை பார்க்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். நான் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, சரியான சத்தியத்தை அவர் நமக்கு அளிக்கவுள்ளபடியால், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை இணைக்கும் சத்தமான, தேவனுடைய வாய் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால் எங்களுடன் சேர்ந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

65-0725M — கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

 

 

சனி, 27 ஜூலை, 2024

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்று கூடுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 20 ஜூலை, 2024

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,

65-0718M - தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் என்ற செய்தியைக் கேட்க ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு நாம் ஒன்று கூடுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 13 ஜூலை, 2024

அன்புள்ள வெட்கப்படாத மணவாட்டியே,

இன்று போல் ஒரு காலமோ அல்லது ஜனங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. நாம் அவருக்குள் இருக்கிறோம், அவர் நமக்காக சம்பாதித்திருக்கிற அனைத்திற்கும் சுதந்திரவாளிகளாயிருக்கிறோம். அவர் தம்முடைய பரிசுத்தத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அவருக்குள்ளாக இருக்கும் வரை, நாம் தேவநீதியாகியிருக்கிறோம்.

நாம் அவருடைய மணவாட்டியாக இருப்போம் என்று தெய்வீக தீர்மானத்தின் மூலமாக அவர் நம்மை முன்னறிந்தார். அவர் நம்மைத் தெரிந்து கொண்டாரேயன்றி, நாம் அவரை ஒருபோதும் தெரிந்துகொள்ளவில்லை. நாம் நமக்கு சொந்தமானதன் பேரில் வரவில்லை, அது அவருடைய தெரிந்துகொள்ளுதலாக இருந்தது. இப்பொழுது அவர் நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் அவருடைய வார்த்தையின் முழு வெளிப்பாட்டை வைத்திருக்கிறார்.

நாளுக்கு நாள், அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டும், அவருடைய ஆவியை நம்மீது ஊற்றிக் கொண்டும், அவருடைய சொந்த ஜீவியத்தை நம்மில் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மணவாட்டி அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் அவருடைய பரிபூரண சித்தத்திலும், அவருடைய திட்டத்திலும் இருக்கிறோம் என்பதை அறிந்து, தங்களுடைய இதயங்களில் இதுபோன்று இதற்கு முன்பு ஒருபோதும் அதிகமாக நங்கூரமிடப்பட்டதில்லை.

தேவனுடைய அன்பும், இந்த செய்தியும் பொங்கி வழியுமளவிற்கு நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. நாம் கேட்பதற்கும், பேசுவதற்கும், ஐக்கியம் கொள்வதற்கும், அல்லது நாம் கேட்டதை ஒரு மேற்கோளாக எளிமையாக பகிர்ந்து கொள்வதற்கும், கர்த்தரை துதிப்பதற்கும் இதைத் தவிர வேறொன்றுமே இல்லை.

நாம் வனாந்தரத்தின் பின்புறத்தில் இருந்த மோசேயைப் போல இருக்கிறோம். நாம் சர்வவல்லமையுள்ள தேவனுடன் முகமுகமாய் சஞ்சரித்துள்ளோம், சரியாக வார்த்தையினாலும் இந்த வேளைக்கான வாக்குத்தத்தினாலும் நம்முடன் பேசுகிற சத்தத்தை நாம் புரிந்து கொள்கிறோம். அது நமக்கு ஏதோக் காரியத்தைச் செய்துள்ளது. நாம் அதைக் குறித்து வெட்கப்படவில்லை. நாம் அதை உலகுக்கு அறிவிக்க விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசுவே இந்த நேரத்தின் செய்தி என்றும், நாம் அவருடைய மணவாட்டி என்றும் விசுவாசிக்கிறோம்.

அவர் தம்முடைய வார்த்தையால் நம்மைப் பலப்படுத்தியிருக்கிறார். இது தேவன் அருளியிருக்கிற வழி என்பதை குறித்து, எந்த சந்தேகத்தின் நிழலும் இல்லை. தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்து தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்கவும், அதன்பின்னர் அவளைத் தம்முடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்தவும் தம்முடைய ஏழாம் தூதனைத் தெரிந்து கொண்டார்.

அவரையும் அவருடைய வார்த்தையையும் தவிர இந்த ஜீவியத்தில் எதுவும் இல்லை. நாம் அதை போதுமான அளவு பெற முடியவில்லை. இது நமக்கு ஜீவனை விட மேலானது. சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷமும் வல்லமையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. வார்த்தையானது இப்போது மணவாட்டியின் கரங்களிலும், செவிகளிலும் உள்ளது. தேவன் ஒரு மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்க, பிசாசும் ஒரு சபையை அழைத்துக் கொண்டிருக்கும்போது, வேறு பிரிக்கும் நேரம் இப்போது நடைபெறுகிறது.

கர்த்தாவே, நாங்கள் உம்மையும் உமது வார்த்தையையும் நேசிக்கிறோம், நாங்கள் போதுமான அளவு பெற முடியவில்லை. நாங்கள் அனுதினமும் உமது வார்த்தையின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, உமது அதிசீக்கிர வருகைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். பிதாவே, அது மிகவும் சமீபத்தில் இருக்க வேண்டும். கர்த்தாவே நாங்கள் அதை உணர முடிகிறது, நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.

பிதாவே, நாங்கள் இன்னும் அதிக உத்தமமாக இருந்து, எங்களுடைய உறுதிமொழிகளை புதுப்பித்துக் கொள்வோமாக. உம்முடைய வார்த்தையில் உள்ள எங்களுடைய விசுவாசம் எங்களுடைய இருதயங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். நீர் எல்லா சந்தேகங்களையும் எடுத்துப்போட்டுவிட்டீர். உம்முடைய வார்த்தையைத் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் உறுதியாக இருக்கிறோம், உலகிற்குச் சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை, நாங்கள் உம்முடைய ஒலிநாடா மணவாட்டியாய் இருக்கிறோம்.

வெட்கப்படுதல் 65-0711 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து கேட்கும்படி உலக மக்களை நான் அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மாற்கு 8:34-38

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 6 ஜூலை, 2024

அன்புள்ள பரிபூரண சித்த மணவாட்டியே,

நாளானது தாமதமாகவும், கர்த்தருடைய வருகையோ சமீபமாயுமிருக்கிறது. காலமானது ஏற்கனவே முடிவுறாமலிருக்குமானால், காலமோ சமீபித்துக்கொண்டிருக்க, வாசல் அடைபட்டுக் கொண்டிருக்கிறது. காற்றினால் அசைந்த நாணல் போல் இருக்கவும்; செவித்தினவுள்ளவர்களாயிருக்கவும்; யோசிப்பது மிகவும் தாமதமானது. இது தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரமாயுள்ளது. அவருடைய மணவாட்டியாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை மாற்றுகிறாரா? ஒருபோதும் இல்லையே. அப்படியானால், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நம் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நாம் தினமும் பாடுபட வேண்டும். நாம் அவருடைய சித்தத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அதை ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

தேவனோடு தரித்திருக்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்படிக்கு தன்னுடைய முழு நோக்கத்தையுமே இந்த செய்தியில் தீர்க்கதரிசி நமக்கு சொல்லுகிறார், ஆனால் பலர் அதைச் சுற்றிச் சென்று வேறு வழியைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தொடர்ந்து செல்கிறதையும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறதையும் காண்கிறார்கள், ஆனால் அவர்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல.

தீர்க்கதரிசி நம்மை மீண்டும் வார்த்தைக்கு கொண்டு சென்று, பார்ப்பதற்கும், படிப்பதற்கும், நமக்கு நினைவூட்டுவதற்கும் உதாரணங்களைத் தருகிறார், தேவன் தமது சிந்தையையோ அல்லது அவருடைய வழியையோ மாற்றுவதில்லை, அவர் தேவன், மாறுவதில்லை.

இப்பொழுது, இந்த இருவருமே ஆவிக்குரிய மனிதர்கள், இருவருமே தீர்க்கதரிசிகளாயிருந்தனர், இருவருமே அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை நாம் கவனிக்கிறோம். மோசே, கடமையின் பாதையில், ஒவ்வொரு நாளும் அவனுக்கு முன்பாக ஒரு புதிதாக அக்கினி ஸ்தம்பத்தோடு, கடமையின் பாதையிலிருக்க, தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் தங்கியிருந்தார். இதோ தேவனால் நியமிக்கப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட, மற்றொரு தேவனுடைய ஊழியக்காரன் வருகிறான், ஒரு தீர்க்கதரிசியாகிய அவனிடத்திற்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. இங்கே அபாயக் கோடு உள்ளது. அந்த மனிதன் தேவனுடையவனாய்—தேவனுடையவனாய் இருக்கவில்லையென்று எவரும் மறுக்க முடியாது, ஏனென்றால் தேவனுடைய ஆவி அவனிடத்தில் பேசியதாக வேதம் கூறியுள்ளது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.

கர்த்தாவே, அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது? இருவரும் தீர்க்கதரிசிகளாய் இருந்தபோது என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இருவரும் தேவனால் அழைக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்கள், தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்; தேவனுடைய தீர்க்கதரிசிகளிடத்திற்கே தேவனுடைய வார்த்தை வருகிறது. பரிசுத்த ஆவியானவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று இருவரும் கூறுகிறார்கள்.

தேவனுடைய ஏழாம் தூதன் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி சில மேற்கோள்களை மிகவும் கவனமாகப் படித்துப் படிப்போமாக. அவர் என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குத் தேவையேயன்றி சபை என்ன சொல்கிறது, வேத பண்டிதர் ஜோன்ஸ் என்ன சொல்லுகிறார், அல்லது வேறு யாரோ என்ன கூறுகிறார்கள் என்பதல்ல. தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதே நமக்கு வேண்டும்.

மோசே, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டிருந்தான், இந்த நேரத்துக்கான அவர்களுடைய தலைவனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்றும், ஆபிரகாம் இந்த எல்லாக் காரியங்களையும் வாக்குத்தத்தம் செய்திருந்தான் என்றும்,...

மோசேயின் ஸ்தானத்தை எவருமே எடுக்க முடியவில்லை. எத்தனை கோராகுகள் எழும்பினாலும், எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல; அதை பொருட்படுத்தாமல், தேவன் மோசேயை, அழைத்திருந்தார்.

ஜனங்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருந்த ஒருவன் மோசேயாயிருந்தான். மற்ற மனிதர்கள் எழும்பி, தாங்கள் அபிஷேகிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களாயும் கூட இருப்பதாகக் கூறினர். அவர்களையும் கூட வழிநடத்த தேவன் அழைத்திருந்தார். ஆனால் மோசே அவர்களை தேவனுடைய மூல பரிபூரண சித்தத்தில் வழிநடத்தும்படியான தலைவனாக இருந்தான்.

ஆனால், ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் அனுமதிக்கிற சித்தத்தை உடையவராயிருக்கிறார். கவனியுங்கள், அவர் அதை அனுமதிக்கிறார், சரி, ஆனால் அவர் அதை அவருடைய மகிமைக்காக கிரியை செய்வார், அவருடைய பரிபூரண சித்தத்தில். இப்பொழுது நீங்கள் நடக்க விரும்பினால்…

தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க யாரும் விரும்புவதில்லை. உண்மையான மணவாட்டி எல்லா நேரத்திலும், கிரயம் என்னவானாலும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கவே விரும்புகிறாள்.

ஒலிநாடாக்களை இயக்குவதன் முக்கியத்துவம் குறித்து பல கருத்து வேறுபாடுகள், எண்ணங்கள், குழப்பங்கள், அபிப்பிராயங்கள் உள்ளன.

இன்றைக்கு செய்தியை விசுவாசிக்கிறவர்களை பிரித்துள்ள பிரச்சினை இதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மணவாட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும், இருப்பாள் என்பதும் எங்களுக்குத் தெரியும்; அதுவே வார்த்தை.

இன்றைக்கு சபையில் ஆவியால் நிரப்பப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்கள் உள்ளனர். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அவர்களில் ஒருவர் கூட இல்லையே.

அவர்கள் எப்படி மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்? அவர்களுடைய ஊழியத்தின் பேரில் நாம் ஒன்றுபட முடியுமா? உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய மந்தையை வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் தேவனுடைய மூல திட்டத்திற்கு அவர்களை மீண்டும் வழிநடத்த, அவருடைய தலைவர், அவருடைய தீர்க்கதரிசியே அழைக்கப்பட்டிருக்கிறார். அவர்களுடைய ஊழியம் அல்ல.

ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று என்றும், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று விசுவாசிக்க வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கவில்லையென்றால்,, அவர்கள் வெறுமனே அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் உள்ளனர்.

இது மிக முக்கியமான சத்தம் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னால், அவர்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களால் எப்படி இயங்கு பொத்தானை அழுத்தி இயக்காமல் இருக்க முடியும்?

நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக, உறுதியாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு உறுதியான வழி மட்டுமே உள்ளது. அது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பதாகும்.

முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் செல்கிறது. அப்படியானால், அது அதைப் பெற்றுக் கொள்கிறது. அவன் ஒரு செம்மறியாடாக இருந்தால், அவன் அதனோடு வருகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் ஒலிநாடாவை உதைத்து வெளியே தள்ளுகிறான்.

நான் உறுதியாக இருக்க வேண்டும். எனது நித்திய இலக்குடன் என்னால் மேலோட்டமான தீர்மானத்தை எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது தவறு செய்கிறதில்லை என்பதை நான் அறிவேன். அது அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபுகாரப்படுத்தப்பட்டிருந்தது என்பதை நான் அறிவேன். அதுவே தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்த தெரிந்து கொண்ட ஒன்று என்பதை நான் அறிவேன். அந்த சத்தமே மணவாட்டியை இணைக்கக் கூடியதும், இணைக்கும் ஒரே சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்று கூற நான் கேட்கும் அந்த சத்தமாக அது இருக்கும் என்று நான் அறிவேன்.

நான் இயங்கு பொத்தானை அழுத்தி அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 65-0418E தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

நாம் செய்தியை 61-ம் பத்தியிலிருந்து துவங்குவோம்.

 

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்