காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 8 ஜூன், 2024

அன்புள்ள மேம்பட்ட ஆவிக்குரிய ராஜரீக வித்தான மணவாட்டியே,

இனி காத்திருக்க வேண்டாம், இனி யோசிக்க வேண்டாம், நாம் வந்தடைந்துவிட்டோம்! நாம் மேம்பட்ட ஆவிக்குரிய ராஜரீக வித்தான மணவாட்டியாக இருக்கிறோம். ராஜரீக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்கு ஆவிக்குரிய வித்து. எதிர்காலத்தில் சில குழு அல்ல; வரப்போகும் அடுத்த சந்ததி அல்ல; நாம் கடைசி நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், நாம் இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்புவதைக் காணும் சந்ததியாய் இருக்கிறோம்.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

அதே சுவிசேஷம், அதே வல்லமை, நேற்று இருந்த அதே மனுஷகுமாரன், இன்றும், என்றும் இருப்பார்.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஐக்கிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் இந்த ஒலிநாடாவை தொலைபேசி இணைப்புகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிற அன்பான நண்பர்களே; கிழக்கில் வந்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவ கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அதே தேவ கு-மா-ர-னா-ய் இருந்து கொண்டு, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக, இன்றிரவு சபைக்கு மத்தியில் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

அந்த காலத்திற்கான வாக்குத்தத்த வார்த்தையோடு தம்மை அடையாளங் காண்பித்து, அவருடைய நாளில் மேடையில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த மேசியாவின் சத்தமானது, உலகத்தை சுற்றிலும் உள்ள இன்றைய அவருடைய மணவாட்டியினிடத்தில்: நான் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவ சத்தமாய் இருக்கிறேன். என்னுடைய வார்த்தையோடு தரித்திருக்கிற நீங்கள் என்னுடைய ராஜரீக ஆவிக்குரிய வித்தான மணவாட்டியாய் இருக்கிறீர்கள் என்று ஒலிநாடாவிலே நம்மிடத்தில் சொல்லுகிற அதே மேசியாவின் சத்தமாய் இருக்கிறது.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

இன்றைக்கு ஜனங்களுக்கு மத்தியில் அப்பேர்ப்பட்ட ஒரு கொந்தளிப்பு நிலவுகிறபடியால், அவர்கள் தேவனுடைய சத்தியத்தை காணத் தவறுகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பல வியாக்கியானங்கள் இருப்பதால் தான் அது அவ்வாறு உள்ளது. அவருடைய வார்த்தையை வியாக்கியானிப்பதற்கு தேவனுக்கு எவரும் தேவைப்படுகிறதில்லை. அவரே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க அவருடைய வெளிப்படுத்தின விசேஷம் 10 7-ல் உள்ள சத்தத்தின் நாட்களில் தீர்க்கதரிசியாகிய தூதனை தம்முடைய மணவாட்டிக்கு அனுப்பினார். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

நீங்களோ, "இயேசு பூமியில் இருந்தபோது நான் அங்கு இருந்திருந்தால், நான் இன்ன- இன்னதை செய்திருப்பேன்" என்று கூறலாம். சரி, அது உங்களுடைய காலமாய் இருக்கவில்லை. ஆனால், இது உங்களுடைய காலம், இது உங்களுடைய நேரம். எந்த சத்தத்தை நீங்கள் தேவனுடைய சத்தம் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?

எந்த சத்தம் உங்களுக்கு மிக முக்கியமான சத்தமாக இருக்கிறது?

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

பிசாசு அவருடைய மணவாட்டியைத் தாக்குவதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சென்று கொண்டிருக்கிறான். நீங்கள் ஒரு வியாதியைப் பெற்றுக் கொண்டீர்கள் என்றோ அல்லது ஏதோ ஒரு விதமான சுகவீனம் அல்லது உங்களுடைய குடும்பத்தை தாக்குவதைக் குறித்தோ அவன் உங்களை சிந்திக்க வைக்கலாம். சில நேரங்களில் தேவன் நீங்கள் மேலோ, சுற்றிலுமோ அல்லது வேறு எங்குமே காண முடியாதபடிக்கு மிகுந்த இருளை அனுமதிக்கிறார். அதன் பின்னர் நீங்களோ, “நான் ஆகாரினுடைய வித்தும் அல்ல, நான் சாராளினுடைய வித்தும் அல்ல, நான் மரியாளுடைய வித்தும் கூட அல்ல, நான் தேவனுடைய மேம்பட்ட ராஜரீக ஆவிக்குரிய ஆபிரகாமின் வித்தாயிருக்கிறேன். நான் எனக்காக தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை எடுத்துக் கொள்கிறேன், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். நான் அசைக்கப்படேன். அது எவ்விதமாய் காணப்பட்டாலும், பிசாசு என்னக் கூறினாலும் அதை பொருட்படுத்துகிறதில்லை. எனக்கு எது தேவையாயிருந்தாலும், நான் தேவனை அவருடைய வார்த்தையில் ஏற்றுக்கொள்வேன்” என்று கூறும்படியாக, அவர் வந்து உங்களுக்காக அதனூடாக ஒரு வழியை உருவாக்குகிறார்.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

தேவனுடைய சத்தம் உரைத்திருக்கிறது, உங்களுக்கு தேவையான எல்லா ஆவிக்குரிய ஆதாரத்தையும் நான் சேமித்து வைத்துள்ளேன். அவைகள் ஒலிநாடாக்களில் உள்ளவைகள் மாத்திரமே என்று கூறுங்கள். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன். என்னுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. வம்பு செய்யவோ அல்லது சண்டையிடவோ வேண்டாம், ஒருவரையொருவர் நேசியுங்கள், ஆனால் என்னுடைய வார்த்தையோடு தரித்திருங்கள்.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

மடிந்துவிட வேண்டாம். மனச்சோர்வடைய வேண்டாம். உங்கள் சந்தோஷத்தை சாத்தான் கொள்ளையிட விடாதீர்கள். நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அந்த மகத்தான கலியாண விருந்திலே அது என்னவாயிருக்கப் போகிறது என்பதையும், அவர் உங்களுக்காக கட்டியிருக்கிற அந்த அழகான நகரத்தில் ஜீவிக்கப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரோடும், இதற்கு முன்பே சென்றுள்ள யாவரோடும் அங்கே நீங்கள் நித்தியத்தினூடாக இருக்கப்போகிறீர்கள்.

இனி சுகவீனமே இல்லை. இனி கவலைகளே இல்லை. இனி மரணமே இல்லை. இனி யுத்தங்களே இல்லை. அவரோடு நித்திய ஜீவன் மாத்திரமே. அப்பொழுது நாம் இவ்வாறு கூறுவோம்:

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!

நாம் மந்தமான நிலையில், “நான் இந்த இடத்தைக் குறித்து மிகவும் வெறுப்பாயிருக்கிறேன். நான் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்” என்று கூறாதிருப்போமாக. நாம் இதை இந்தவிதமாகக் கூறுவோமாக: “அவர் இப்பொழுது எனக்காக எந்த நிமிடமும் வருவார்...மகிமை! என்னால் காத்திருக்க முடியாது. என்னுடைய அன்புக்குரியவர்கள் அனைவரையும் பார்க்கப் போகிறேன். அவர்கள் என் முன் தோன்றப்போகிறார்கள், அப்பொழுது நான் அறிந்து கொள்வேன், அது முடிந்துவிட்டது, நாம் வந்தடைந்துவிட்டோம்.”

அப்பொழுது, ஒரு இமைப் பொழுதிற்குள்ளாகவே, நாம் மறுபுறத்தில் ஒன்றாக இருப்போம்.

ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் சமீபமாயிருக்கிறபடியால், நாம் சந்தோஷப்பட்டு களிகூருவோமாக, அவளுடைய மணவாட்டி…அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.

இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று 65-0219

என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், எங்களுடன் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் கலந்துகொள்ள விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வந்து ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16

சனி, 1 ஜூன், 2024

அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக சந்ததியே,

பரலோகத்தில் இருந்து விழுந்து கொண்டிருக்கிற புதிய மன்னாவினால் தங்களுடைய ஆத்மாக்களை போஷிக்கும்படி, தொலைபேசி இணைப்புகள் மூலமாக கேட்டு, உலகம் முழுவதிலும் ஒன்று கூடியிருக்கிற அவர்களுக்கு, நான் வாழ்த்துக்களை அனுப்புகிறேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கிரையமாய் இருக்கிறீர்கள்.

கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு தெய்வீக ஒலியின் கீழ் கேட்கிற ஒவ்வொரு செவிக்கும் இந்த வார்த்தைகளை நீர் அபிஷேகிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். இங்கே இருக்கிற சிலராய் இருந்தாலும், அல்லது தேசத்தில் எங்கிருந்து கேட்கிறவர்களாயிருந்தாலும் சரி.

உலகம் முழுவதிலுமிருந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்மிடத்தில் பேசுகிற தேவனுடைய சத்தத்தின் தெய்வீக ஒலியைக் கேட்க, தேவன் நம் ஒவ்வொருவருடைய செவிகளையும் அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார்.

அது என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், எந்த காரியத்தையும் எதிர்கொள்ளும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிற, அசலான, மீண்டும் பிறந்த தேவனுடைய சபையாக நாம் இருக்கிறோம், ஏனென்றால் இது உண்மையான கலப்படமற்ற தேவனுடைய சத்தம் பேசுகிறதாயுள்ளது.

தேவன் தம்முடைய மணவாட்டி சபையாகிய, நம்மில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருகிறார். நாம் வித்தை சுமந்து செல்லும் தண்டுகள் அல்ல. நாம் ராஜரீக வித்தாக இருக்கிறோம். அவருக்குள் இருந்த அவருடைய ஜீவியத்தின் முழுமையும் உண்மையான, அசலான, மணவாட்டி சபையாகிய, நமக்குள் மீண்டும் உருவாகி, முழு தேவனுடைய வார்த்தையானது அதனுடைய முழுமையிலும், அதனுடைய வல்லமையிலும் வெளிப்படுகிறது.

இதற்குப் பிறகு சபைக் காலங்கள் இருக்க முடியாது. நாம் முடிவில் இருக்கிறோம், சகோதர சகோதரிகளே. நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!

நாம் முடிவில் இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். நாம் யாராய் இருக்கிறோம் என்பதை மணவாட்டி அடையாளம் கண்டு கொண்டாள். இது வித்தான மணவாட்டியின் நேரம். பதர்கள் மரித்துவிட்டன. பதர்கள் காய்ந்துவிட்டன. நாம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையின் கன்னிப் பிறப்பாக இருக்கிறோம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

நாம் தொடப்படமாட்டோம். நமக்குள் மனித கையாளுமையே இருக்காது. நாம் மணவாட்டியின் கன்னிப் பிறப்பாய் இருக்கிறோம். நாம் சுத்தமான கன்னி வார்த்தைக்கு உண்மையாக தரித்திருக்கும்படிக்கு தேவனால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். வித்தானது முதிர்ச்சடையும்படியாக குமாரனுடைய பிரசன்னத்தில், பரிசுத்த ஆவிக்குள், மனுஷகுமாருடைய சத்தத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நமக்கு, ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு: இயங்கு பொத்தானை அழுத்தி மனுஷ குமாரனுடைய சத்தத்தை கேட்பதேயாகும்.

இந்த உலகத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு சபை எங்கோ உள்ளது, அது வெளியே இழுக்கப்பட்டு, அந்த காரியங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டபடியால், தேவனுடைய வெளிப்படுத்துதல் அதனுடைய கவனத்தை கவர்ந்துள்ளது என்றே நான் கூறுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம்.

நாம் தேவனுடைய கழுகுகள். நமக்குள் எந்த சமரசமும் இல்லை. நாம் புதிய மன்னாவை மட்டுமே புசிக்க முடியும். நாம் கொழுத்த கன்றுகளைப் போல இருக்கிறோம். சேமித்து வைக்கப்பட்டு நமக்காக அருளப்பட்டிருக்கிற ஆகாரத்தை மாத்திரமே நாம் புசிக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள தேவனுடைய கழுகுகள் புதிய மன்னாவை விரும்புவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை அவைகள் அதைத் தொடர்ந்து தேடிக்கொண்டேயிருக்கும். அவை மேலும் மேலும் உயர பறக்கும். இந்த பள்ளத்தாக்கில் ஏதுமில்லையென்றால், அது இன்னும் சற்று உயர எழும்பும். தேவனுடைய சத்தத்திலிருந்து வருகிற புதிய தேவனுடைய வார்த்தையே அவைகளுக்குத் தேவை. அவைகளினுடைய நித்திய இலக்கு அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருப்பதாய் இருக்கிறது. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடுகின்றன.

அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய அவருடைய ஆவி நம்மீது வந்திருக்கிறது. இது மீண்டும் தானியத்தின் மறுஉற்பத்தியாகும். நாம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் ஏற்றுக் கொண்டு, இல்லாததை இருக்கிறது போல் அழைக்கிற ஆபிரகாமினுடைய ராஜரீக விசுவாச சந்ததியாக இருக்கிறோம். நாம் சந்தேகிக்க முடியாது அல்லது தேவனுடைய வார்த்தையை தவறான இடத்தில் பொருத்த முடியாது, ஏனென்றால் நாம் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், மாறாதவராயிருக்கிறார்.

அன்புள்ள தேவனே, உலகின் சில முட்டாள்தனங்களுக்காக, நாங்கள் அதன் பேரில் பின்வாங்காமல் இருப்போமாக, ஆனால் எங்களுடைய முழு இருதயத்தோடு நாங்கள் அவரை இன்றிரவு ஏற்றுக் கொள்வோமாக. கர்த்தாவே, நான் உம்முடைய எல்லா வார்த்தைகளையும் விசுவாசித்து, நேற்றும், இன்றும், என்றும் மாறாதிருக்கிற வார்த்தையாகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, இந்த காலத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிற பாகமானதை இன்றைக்கு விசுவாசிக்கும்படியாக, எனக்குள்ளாக ஒரு நல்ல ஆவியை, ஜீவனின் ஆவியை சிருஷ்டியும். கர்த்தாவே, இதை அருளும். நான் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

அவர் எங்களுக்கு தேவனுடைய வாக்குத்தத்தமான: கழுகின் ஆகாரத்தை அளிக்கிறபடியால் கடைசி காலத்திற்கான தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை கேட்கும்படி வர நான் உங்களை அழைக்கிறேன். அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு இந்த தேவனுடைய வார்த்தையில் ஒரு கன்னி விசுவாசமே இதற்கு தேவைப்படுகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

நேரம்:
பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்

செய்தி:
வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை 65-0218

வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி லூக்கா 17:30
பரி. யோவான் 5:24 / 14:12
ரோமர் 8:1
கலாத்தியர் 4:27-31
எபிரெயர் 13:8
1 யோவான் 5:7
வெளிப்படுத்துதின விசேஷம் 10
மல்கியா 4

 


 

ஆனால், "நானும் என் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று நீர் கூற வரும்போது, இந்த மற்ற காரியங்கள், அப்பொழுது அதிலிருந்து பதரானது விலகிவிடுகிறது. ஆனால் உண்மையான, அசலான மணவாட்டி சபை தேவனுடைய முழு வார்த்தையையும் அதன் முழுமையிலும், அதன் வல்லமையிலும் வெளிப்படுத்தும், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

65-0218 - "வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை"

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்

 

இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார், அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய மணவாட்டி மீது ஒரு ஆவி வருகிறது. புரிகிறதா? இது தானியத்தை மீண்டும் மறு உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

65-0218 - "வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை"

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்

சனி, 25 மே, 2024

அன்புள்ள நினிவே பயணிகளே,

பிதாவே, உம்முடைய பிணம் எங்கே இருக்கிறதோ, அங்கே உம்முடைய கழுகுகள் ஒன்று கூடுகின்றன. உம்முடைய தெய்வீக மன்னாவில் நீர் எங்களை போஷித்துக்கொண்டிருக்கிறீர். எங்களுக்கு உண்மையாகவே தேவையாயிருக்கிறதை எங்களுடைய ஆத்மாக்களுக்கு தாரும். பிதாவே, நாங்கள் உமக்காக தாகமாக இருக்கிறோம். நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம்.

உம்முடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் நாங்கள் உம்முடைய சமுகத்தில் இருந்து கொண்டு, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். மணவாட்டி தங்களுடைய சிந்தனைகளை உறுதி செய்து அதை எதிர்கொள்ள வேண்டும். அது சரியாக அல்லது தவறாக இருக்க வேண்டும். உம்முடைய ரூபகாராப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பது உம்முடைய மணவாட்டி செய்ய வேண்டிய முக்கியமான காரியமா அல்லது இல்லையா? இது சரியாக இருந்தால், நாம் அதை செய்வோமாக. இனி காத்திருக்க வேண்டாம், எது சத்தியம், எது சரி என்பதை இப்போது கண்டறிந்து, அதனுடன் தரித்திருங்கள். இதுவே சத்தியம் என்பதையும், இதுவே இந்நாளுக்கான உம்முடைய அருளப்பட்ட வழி என்பதையும் நாங்கள் அறிவோம்.

நான் முறையிட வேண்டும், “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? தேவன் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?” நாம் அதை வார்த்தையில் காண்கிறோம். நீர் அதை வாக்களித்தீர். யார் அமைதியாக இருக்க முடியும்?

நமக்கு புகழ் வாய்ந்த கருத்து தேவையில்லை; நமக்கு சத்தியமே தேவை. தேவன் சத்தியம் என்று கூறியிருக்கிறதைத் தவிர வேறொன்றையும் நாம் எதிர்கொள்ளத் தேவையில்லை- நமக்குத் (தேவை) தேவையில்லை

நீங்கள் எந்த கப்பலில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நீங்கள் மனுஷகுமாரனிடமிருந்து நேரடியாக உரைக்கப்பட்ட வார்த்தையை புசிக்கிறீர்களா, அல்லது வேறு ஏதாவதா? அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் மற்ற சத்தங்களை கேட்க வேண்டும் என்று யாராவது உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா? உங்களுடைய வீடுகளிலோ அல்லது உங்களுடைய சபைகளிலோ ஒலிநாடாக்களை இயக்குவது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் அல்லவா?

நீங்கள் யாருடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அந்தச் சத்தம் உங்களுக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது? உங்களுக்காகவும், மற்றும் உங்களுடைய குடும்பத்தின் நித்திய இலக்கிற்காக எந்த சத்தத்தை முன் வைக்கிறீர்கள்?

அது நானல்ல, அது ஏழாம் தூதன் அல்ல, ஓ, இல்லை; அது மனுஷகுமாரனுடைய வெளிப்படுத்துதலாயிருந்தது. அது தூதனுடைய, அவனுடைய செய்தி அல்ல; அது தேவன் வெளிப்படுத்தின இரகசியமாயிருந்தது. அது ஒரு மனிதன் அல்ல; அது தேவனாயிருக்கிறது. தூதன் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த செய்தியாளனாயிருந்தார். மனுஷகுமாரன் கிறிஸ்துவாயிருக்கிறார்; அவரைத்தான் நீங்கள் போஷித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதன், அவனுடைய வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நீங்கள் மனுஷ குமாரனுடைய தவறாத சரீரத்தின்- வார்த்தையினால் போஷித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்த சத்தத்தை, மனுஷகுமாரனுடைய தவறாத சரீரதத்தின்-வார்த்தையாக, முதலில் உங்கள் முன் வைக்காத எந்த சத்தத்தையும் கேட்காதீர்கள். அவர்கள் பிரசங்கிக்கலாம், கற்பிக்கலாம் அல்லது தேவன் அவர்களை செய்யும்படி அழைத்துள்ள அனைத்தையும் செய்யலாம், ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அவை அல்ல.

அவர்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாகக் கூடும் போது, அவர்கள் அந்தக் சத்தத்தை ஒலிக்கச் செய்து, “இந்தச் சத்தமே, கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம். இது, இது மட்டுமே, கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உங்களுக்கு சொல்வார்கள்.

நீங்கள் எந்த சத்தத்தை விரும்புகிறீர்கள்? ஏன் அவர் தம்முடைய சத்தத்தை பதிவு செய்து சேமித்து வைத்தார்? நம்முடைய நாளுக்காக தம்முடைய வார்த்தையைப் பேச தேவன் யாருடைய சத்தத்தை தெரிந்து கொண்டார்?

அவர் அருளிய தீர்க்கதரிசியின் மூலம், அங்கு போய் அந்த செய்தியை பிரசங்கிக்கும் படி அவர் நியமித்த ஒருவன், இப்பொழுது, அவர் வேறொரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம் என்பது போன்று காணப்பட்டது, ஆனால் அவர் யோனாவை அதற்கென்று நியமித்தார். எலியாவும் கூட அதைச் செய்திருக்க முடியாது. எரேமியாவும் அதை செய்திருக்க முடியாது, மோசேயும் அதை செய்திருக்க முடியாது, அது யோனா மாத்திரமே நினிவேக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. அவ்வளவு தான். அவர் அவனுக்கு கட்டளையிட்டு, அவனைப் போகும்படி சொன்னார். அவர், “அங்கே போ, யோனா, நினிவேக்குப் போ” என்று கூறுகிறபோது, யோனாவைத் தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாது.

இந்த ஜீவியத்திற்கு தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார். இந்த சத்தம் நமக்கு நித்திய ஜீவனின் வார்த்தைகளை உரைக்கிறது. நமக்கு, இதுவே தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது. இதுவே நம்முடைய கப்பல். நீங்கள் தர்ஷீசுக்கு செல்லும் கப்பலில் இருந்தால், மிகத் தாமதமாகிவிடும் முன் இறங்கிவிடுங்கள்.

நீங்கள் எந்த வழியில் செல்வது அல்லது என்ன செய்வது என்று உங்களுடைய இருதயத்தில் யோசித்துக்கொண்டிருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, எங்களிடம் வாருங்கள். எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள்ளுங்கள். நாங்கள் கூக்குரலிட, நினிவேக்கு சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் விரும்பினால் கீழ் நோக்கி செல்லுகிற அந்த தர்ஷிஷ் கப்பலில் போக நாங்கள் விட்டுவிடுகிறோம். நாம் தேவனுக்கு முன்பாக ஒரு கடமையைப் பெற்றுள்ளோம், அதுவே நாம் பொறுப்பேற்க வேண்டிய ஒரு செய்தி.

ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யாத சபைக்கு நீங்கள் சென்றால், அது தர்ஷிஷுக்கு போகிற ஒரு கப்பல் என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக யாராவது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை முன் வைக்கவில்லையென்றால், உங்கள் கப்பலின் தலைமையில் யார் இருக்கிறார்கள் என்றும், உங்களுடைய கப்பல் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க நீங்கள் சரிபார்ப்பது நல்லது.

கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் 65-0217 என்ற செய்தியை எங்களுக்கு கப்பலின் தலைவர் கொண்டு வந்து பேசப் போகின்றபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.

நாம் உடனடியாக இந்த எழுப்புதலைத் தொடங்குவோமாக. சரியே! நீங்கள் எதற்காக தாமதிக்கிறீர்கள்? கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், அவர் ஒரு மணவாட்டியைப் பெற்றுக் கொள்வார், அது ஆயத்தமாயுள்ளது. நமக்கு தர்ஷீசுக்குப் போகும் கப்பல்கள் எதுவும் வேண்டாம். நாம் நினிவேக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஹூ! நாம் மகிமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஆமென்! அது உண்மை. தேவன் ஆசீர்வதிக்கப் போகும் இடத்திற்கு நாம் போய்க்கொண்டிருக்கிறோம், அதைத்தான் நாம் செய்ய விரும்புகிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30

 

 

சனி, 18 மே, 2024

அன்புள்ள ஒலிநாடா குடும்பத்தினரே,

நான் உங்களை, என்னுடைய குடும்பமாக, நாம் இருக்கும்…நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பமாகவே பொருட்படுத்திக் கூறுகிறேன்.

அது நாம், தீர்க்கதரிசியினுடைய ஒலிநாடா குடும்பம் என்பதாய் உள்ளது; உலகம் முழுவதும் சிதறியிருக்கும் அவருடைய பிள்ளைகள், அவர் கிறிஸ்துவுக்குப் பெற்றவர்கள். இந்த கடைசி நாட்களில் பிதாவானவர் தம்மைக் குறித்து அளித்துள்ள வெளிப்பாட்டைப் பெற்றவர்கள்.

இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட விரும்புகிறேன், பாருங்கள், பிதாவானவர் அவ்விதம் செய்வார், அப்பொழுது நாம்—நாம் ஒருபோதும் அலைந்து திரிய வேண்டிய அவசியமிராத ஒரு வீடு உண்டாகும்.

நான் அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்ட விரும்புகிறேன். அது இப்போதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி, அவருடைய வார்த்தை, இந்த ஒலி நாடாக்கள் அதைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றன: மணவாட்டி அனைவரையும் ஒன்றிணைத்து, உலகம் முழுவதிலும் இருந்து நம்மை ஒரு தனிப் பிரிவாக ஒன்றிணைக்கிறது. அவருடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே, அவரது மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்.

நீங்கள், நீங்கள் ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்: அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். புரிகிறதா? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும், மேலும்—மேலும் ஓ, என்னே, ஒவ்வொரு காரியமும் முன்பு இருந்ததைவிட (புரிகிறதா?) வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த ஆவி.

நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதபடி, நம்முடைய இருதயங்களும், சிந்தனைகளும் மற்றும் ஆத்துமாக்களும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றால் நிறைந்துள்ளன. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் அதிக வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது. அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நாம் யார் என்றும், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். தேவன் நம்முடைய இருதயங்களில் வைத்துள்ளவற்றிலிருந்து நம்மை அசைக்க எதுவுமே இல்லை. இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இந்நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் இருக்கிறது. எந்த யூகமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை, பரிசுத்த ஆவியிடம், "நான் கேட்டது உண்மையான வார்த்தையா?" "நான் அதை வார்த்தை மூலம் சரிபார்க்க வேண்டுமா?" என்று கேட்கிறதில்லை.

நாம் அல்ல. ஒலிநாடாக்களில் நாம் கேட்பது வார்த்தைதான். ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் அந்த வார்த்தையே மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருக்கும்படி, அக்கினி ஸ்தம்பத்தால், பரிசுத்த ஆவியானவராலே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே வார்த்தையாயுள்ளது.

யாராவது நம்மிடம், “ஒலிநாடாக்களில் சகோதரன் பிரான்ஹாம் பேசிய யாவுமே, அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை அல்ல. அது வெறுமனே மனிதன் தான். எது வார்த்தை என்றும், எது சகோதரன் பிரான்ஹாம் பேசிக்கொண்டிருந்தது என்பதற்கும் பரிசுத்த ஆவியானவராலே நாம் வழிநடத்தப்படுகிறோம்” என்று கூறினால்.

நமக்கல்ல. நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று தீர்க்கதரிசி நமக்கு சொன்னதை நாம் அப்படியே எளிமையாக விசுவாசிக்கிறோம்.

நீங்கள் ஒருபோதும் அந்த வார்த்தையை மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மோசே கூறினதை, தேவன் கனப்படுத்தினார், ஏனென்றால் தேவனுடைய வார்த்தை மோசேக்குள் இருந்தது.

தீர்க்கதரிசி கூறினதை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம், நாம் அதை விசுவாசிக்கிறோம்; ஏனென்றால் அது நம்முடைய இருதயங்களில் இரும்பு பேனாவால் பொறிக்கப்பட்டுள்ளது. ஒலிநாடாவில் அவர் என்ன கூறினாரோ, தேவன் அதை கனப்படுத்தினார், நாம் அதை விசுவாசிக்கிறோம்.

தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதை உட்கார்ந்து கேட்பதை விட பெரிய கனத்துக்குரியது வேறெதுவும் இல்லை. 64-0830E கேள்விகளும் பதில்களும் #4 என்ற செய்தியில் அவர் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தம்முடைய மணவாட்டியிடம் பேசி, கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பார். எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன். இது நீங்கள் ஒருபோதும் வருத்தப்படாத ஒரு முடிவு.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 11 மே, 2024

அன்பான கற்புள்ள கன்னிகை மணவாட்டியே,

ஒவ்வொரு வாரமும் இயங்கு பொத்தானை அழுத்தி, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தை கேட்கும்படி உங்களை ஊக்குவிக்க நான் எப்படி விரும்புகிறேன். ஏனென்றால் இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய பரிபூரண திட்டம் என்பதை நான் அறிவேன்.

இது ஜோசப் பிரான்ஹாம் கூறுவதோ அல்லது விசுவாசிப்பதோ அல்ல. இது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் நமக்கு கூறியிருக்கிறதாயிருக்கிறது:

நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறேன்.

இந்தச் செய்தியைக் குறித்த வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருந்தால், அந்த ஒரு சிறிய மேற்கோளே நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்ல போதுமானதாயிருக்கும்; நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக அது உள்ளது என்பதை, ஒவ்வொரு விசுவாசியும், உங்களுடைய சபைகளுக்கு சொல்லுங்கள்.

இயங்கு பொத்தானை அழுத்தும்போது நாம் கேட்கும் வார்த்தைகள், நேரடியாக நம்மிடம் பேசும் தேவனுடைய சத்தம் என்று நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு வினாடியும் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும்படியாக பிதாவானவர் அதை ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்தார்; அதனால் அவர் நம்மை ஊக்குவிப்பதையும், ஆசீர்வதிப்பதையும், அபிஷேகிப்பதையும், நம்முடைய எல்லா பயங்களையும் சந்தேகங்களையும் போக்குவதையும், வெறுமனை இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலமே யாவற்றையும் நாம் கேட்கலாம்.

நமக்கு என்னவெல்லாம் தேவையோ அப்போதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும்படியாகவே, அது இருக்கிறது. நாம் தான் வார்த்தை என்பதை நினைவுபடுத்த அவர் அங்கே இருக்கிறார். அவர் நம்முடனும், நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளும் இருக்கிறார். சாத்தான் பொய்யுரைத்து ஏமாற்றும் ஒருவனாய் இருக்கிறான். அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். அந்த வார்த்தையை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிந்து, தேவன் தம்முடைய முன்னறிவினால் அதை நமக்குக் கொடுத்தார். ஆரம்பத்திலிருந்தே நாம் அவருடன் இருந்தோம்.

தேவனுடைய சத்தமாய் இருக்கும்படி அக்னி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே சத்தத்தை காட்டிலும் வேறு எந்த மகத்தான சத்தத்தை நம்மால் கேட்க முடியும்?

வேறு சத்தமே இல்லை.

கடந்த வாரம் அந்த சத்தம் நமக்கு என்ன சொன்னது?

உங்களை நான் எப்பொழுதும் என்னுடைய சகோதரனும் என்னுடைய சகோதரியுமாக உரிமை கோருகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். நான்-நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், ஒரு குருவானவராய் இருப்பது போன்ற பிதாவாக அல்ல. பவுல் அங்கே கூறினது போன்றே, நான்-நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது, நான்-நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன்; அதாவது உங்களை ஒரு கற்புள்ள கன்னியாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்! என்னை ஏமாற்றி விடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.

நாம் வார்த்தைக்கு, அந்த சத்தத்துக்கு ஒரு கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை, நாம் அதைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது: இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்.

நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன். ஒரு தீர்க்கதரிசி என்று கூறுவதை விசுவாசிப்பீர்களானால், நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறதற்கு செவிகொடுங்கள். புரிகிறதா? நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்வதைச் அப்படியே செய்யுங்கள்.

ஆம், தேவனுடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள், அந்த மனிதர்களில் நானும் ஒருவன் என்றே நான் ஜெபிக்கிறேன். அவருடைய வார்த்தையை உங்கள் முன் வைத்து, இந்தச் செய்தியை, தேவனுடைய வார்த்தையை, அந்த சத்தத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காக நான் அவரால் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்.

பேதுரு கூறினது போல, தேவன் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த அழைத்த ஒரே ஒரு சத்தம் மட்டுமே உள்ளது என்பதை எப்போதும் உங்களுக்கு நினைப்பூட்ட அசதியாயிரேன். தேவன் ரூபகாரப்படுத்தின ஒரே சத்தம். “அவருக்குச் செவிகொடுங்கள்” என்று தேவன் கூறின ஒரு சத்தம். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன்" என்று தேவன் கூறின ஒரு சத்தம்.

இதை உங்கள் முழு மனதுடன் நினைவில் கொள்ளுங்கள்: அந்த வார்த்தையுடன் தரித்திருங்கள்! அந்த வார்த்தையை விட்டுவிடாதீர்கள்! அதற்கு முரணான எந்த காரியத்தையும், அது எதுவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அதை விட்டுவிடுங்கள். அதன் பின்னர் அது சரி என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஒருவரும் பிரசங்கிக்க கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றும், எல்லா ஊழியக்காரர்களுக்கும் நான் விரோதமாக இருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றும், நான் ஏன் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதையும் நான் நிச்சயமாக புரிந்து கொள்கிறேன். ”சகோதரன் பிரான்ஹாமைத் தவிர நீங்கள் வேறொரு ஊழியக்காரருக்கு செவி கொடுத்தால், நீங்கள் மணவாட்டி அல்ல.” நான் பலமுறை கூறியது போல், நான் அப்படிச் ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நம்புகிறதுமில்லை.

நான் எப்படி உணர்கிறேன் மற்றும் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கடந்த வாரம் தீர்க்கதரிசி அதை சரியாக விளக்கினார்.

சகோதரன் பிரான்ஹாம் இங்கு இருந்த சமயத்தில் ஜெபர்சன்வில் பகுதியில் குறைந்தது மூன்று செய்தி சபைகள் இருந்தன. கடந்த ஞாயிறு ஆராதனையில், மாலை ஆராதனைக்கு உள்ளூர் போதகர்கள் இல்லை என்று கூறினார். அவர்கள் தங்களுடைய சொந்த மாலை ஆராதனைகளை வைத்திருந்தனர். இதனால், அவர்கள் மாலை ஆராதனைக்கு சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க வரவேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் தங்களுடைய சபைகளில் ஆராதனைகளை நடத்த வேண்டியதாய் இருந்தது. அதுதான் அவர்களுடைய முடிவு, அதைச் செய்ய அவர்கள் வழிநடத்தப்பட்டனர் என்று உணர்ந்தார்கள், சகோதரர் பிரான்ஹாமும் அதை ஒப்புக்கொண்டார்.

இன்றைக்கும் ஜெஃபர்சன்வில் பகுதியில் பல சபைகள் உள்ளன. அவர்களும் கூட கர்த்தரால் வழிநடத்தப்படுவதை உணரும் படி செய்ய வேண்டும். அவர்கள் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று நினைக்கவில்லையென்றால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர்கள் செய்யும்படி வழி நடத்தப்படுவதாக என்ன உணருகிறார்களோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இன்னமும் இந்த செய்தியை நேசிக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். ஆனால் நாம் செய்யும்படி வழிநடத்தப்படுவதாக என்ன உணருகிறோமோ அதை நாம் செய்ய வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது. நாம் தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க விரும்புகிறோம்.

ஆகஸ்ட் 30, 1964 அன்று சகோதரன் பிரான்ஹாம் பேசினது போலவே, 64-0830M கேள்விகளும் பதில்களும் #3 என்ற செய்தியை தீர்க்கதரிசி நமக்கு கொண்டு வருவதை மீண்டும் ஒருமுறை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்