காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 1 ஜூன், 2024

அன்புள்ள ஆபிரகாமின் ராஜரீக சந்ததியே,

பரலோகத்தில் இருந்து விழுந்து கொண்டிருக்கிற புதிய மன்னாவினால் தங்களுடைய ஆத்மாக்களை போஷிக்கும்படி, தொலைபேசி இணைப்புகள் மூலமாக கேட்டு, உலகம் முழுவதிலும் ஒன்று கூடியிருக்கிற அவர்களுக்கு, நான் வாழ்த்துக்களை அனுப்புகிறேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கிரையமாய் இருக்கிறீர்கள்.

கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு தெய்வீக ஒலியின் கீழ் கேட்கிற ஒவ்வொரு செவிக்கும் இந்த வார்த்தைகளை நீர் அபிஷேகிக்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். இங்கே இருக்கிற சிலராய் இருந்தாலும், அல்லது தேசத்தில் எங்கிருந்து கேட்கிறவர்களாயிருந்தாலும் சரி.

உலகம் முழுவதிலுமிருந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்மிடத்தில் பேசுகிற தேவனுடைய சத்தத்தின் தெய்வீக ஒலியைக் கேட்க, தேவன் நம் ஒவ்வொருவருடைய செவிகளையும் அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார்.

அது என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், எந்த காரியத்தையும் எதிர்கொள்ளும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிற, அசலான, மீண்டும் பிறந்த தேவனுடைய சபையாக நாம் இருக்கிறோம், ஏனென்றால் இது உண்மையான கலப்படமற்ற தேவனுடைய சத்தம் பேசுகிறதாயுள்ளது.

தேவன் தம்முடைய மணவாட்டி சபையாகிய, நம்மில் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருகிறார். நாம் வித்தை சுமந்து செல்லும் தண்டுகள் அல்ல. நாம் ராஜரீக வித்தாக இருக்கிறோம். அவருக்குள் இருந்த அவருடைய ஜீவியத்தின் முழுமையும் உண்மையான, அசலான, மணவாட்டி சபையாகிய, நமக்குள் மீண்டும் உருவாகி, முழு தேவனுடைய வார்த்தையானது அதனுடைய முழுமையிலும், அதனுடைய வல்லமையிலும் வெளிப்படுகிறது.

இதற்குப் பிறகு சபைக் காலங்கள் இருக்க முடியாது. நாம் முடிவில் இருக்கிறோம், சகோதர சகோதரிகளே. நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!

நாம் முடிவில் இருக்கிறோம். நாம் வந்தடைந்துவிட்டோம். நாம் யாராய் இருக்கிறோம் என்பதை மணவாட்டி அடையாளம் கண்டு கொண்டாள். இது வித்தான மணவாட்டியின் நேரம். பதர்கள் மரித்துவிட்டன. பதர்கள் காய்ந்துவிட்டன. நாம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையின் கன்னிப் பிறப்பாக இருக்கிறோம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

நாம் தொடப்படமாட்டோம். நமக்குள் மனித கையாளுமையே இருக்காது. நாம் மணவாட்டியின் கன்னிப் பிறப்பாய் இருக்கிறோம். நாம் சுத்தமான கன்னி வார்த்தைக்கு உண்மையாக தரித்திருக்கும்படிக்கு தேவனால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். வித்தானது முதிர்ச்சடையும்படியாக குமாரனுடைய பிரசன்னத்தில், பரிசுத்த ஆவிக்குள், மனுஷகுமாருடைய சத்தத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நமக்கு, ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு: இயங்கு பொத்தானை அழுத்தி மனுஷ குமாரனுடைய சத்தத்தை கேட்பதேயாகும்.

இந்த உலகத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு சபை எங்கோ உள்ளது, அது வெளியே இழுக்கப்பட்டு, அந்த காரியங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டபடியால், தேவனுடைய வெளிப்படுத்துதல் அதனுடைய கவனத்தை கவர்ந்துள்ளது என்றே நான் கூறுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம்.

நாம் தேவனுடைய கழுகுகள். நமக்குள் எந்த சமரசமும் இல்லை. நாம் புதிய மன்னாவை மட்டுமே புசிக்க முடியும். நாம் கொழுத்த கன்றுகளைப் போல இருக்கிறோம். சேமித்து வைக்கப்பட்டு நமக்காக அருளப்பட்டிருக்கிற ஆகாரத்தை மாத்திரமே நாம் புசிக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள தேவனுடைய கழுகுகள் புதிய மன்னாவை விரும்புவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் அதைக் கண்டுபிடிக்கும் வரை அவைகள் அதைத் தொடர்ந்து தேடிக்கொண்டேயிருக்கும். அவை மேலும் மேலும் உயர பறக்கும். இந்த பள்ளத்தாக்கில் ஏதுமில்லையென்றால், அது இன்னும் சற்று உயர எழும்பும். தேவனுடைய சத்தத்திலிருந்து வருகிற புதிய தேவனுடைய வார்த்தையே அவைகளுக்குத் தேவை. அவைகளினுடைய நித்திய இலக்கு அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருப்பதாய் இருக்கிறது. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடுகின்றன.

அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய அவருடைய ஆவி நம்மீது வந்திருக்கிறது. இது மீண்டும் தானியத்தின் மறுஉற்பத்தியாகும். நாம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் ஏற்றுக் கொண்டு, இல்லாததை இருக்கிறது போல் அழைக்கிற ஆபிரகாமினுடைய ராஜரீக விசுவாச சந்ததியாக இருக்கிறோம். நாம் சந்தேகிக்க முடியாது அல்லது தேவனுடைய வார்த்தையை தவறான இடத்தில் பொருத்த முடியாது, ஏனென்றால் நாம் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், மாறாதவராயிருக்கிறார்.

அன்புள்ள தேவனே, உலகின் சில முட்டாள்தனங்களுக்காக, நாங்கள் அதன் பேரில் பின்வாங்காமல் இருப்போமாக, ஆனால் எங்களுடைய முழு இருதயத்தோடு நாங்கள் அவரை இன்றிரவு ஏற்றுக் கொள்வோமாக. கர்த்தாவே, நான் உம்முடைய எல்லா வார்த்தைகளையும் விசுவாசித்து, நேற்றும், இன்றும், என்றும் மாறாதிருக்கிற வார்த்தையாகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, இந்த காலத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிற பாகமானதை இன்றைக்கு விசுவாசிக்கும்படியாக, எனக்குள்ளாக ஒரு நல்ல ஆவியை, ஜீவனின் ஆவியை சிருஷ்டியும். கர்த்தாவே, இதை அருளும். நான் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

அவர் எங்களுக்கு தேவனுடைய வாக்குத்தத்தமான: கழுகின் ஆகாரத்தை அளிக்கிறபடியால் கடைசி காலத்திற்கான தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை கேட்கும்படி வர நான் உங்களை அழைக்கிறேன். அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு இந்த தேவனுடைய வார்த்தையில் ஒரு கன்னி விசுவாசமே இதற்கு தேவைப்படுகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

நேரம்:
பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்

செய்தி:
வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை 65-0218

வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி லூக்கா 17:30
பரி. யோவான் 5:24 / 14:12
ரோமர் 8:1
கலாத்தியர் 4:27-31
எபிரெயர் 13:8
1 யோவான் 5:7
வெளிப்படுத்துதின விசேஷம் 10
மல்கியா 4

 


 

ஆனால், "நானும் என் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று நீர் கூற வரும்போது, இந்த மற்ற காரியங்கள், அப்பொழுது அதிலிருந்து பதரானது விலகிவிடுகிறது. ஆனால் உண்மையான, அசலான மணவாட்டி சபை தேவனுடைய முழு வார்த்தையையும் அதன் முழுமையிலும், அதன் வல்லமையிலும் வெளிப்படுத்தும், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

65-0218 - "வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை"

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்

 

இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார், அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய மணவாட்டி மீது ஒரு ஆவி வருகிறது. புரிகிறதா? இது தானியத்தை மீண்டும் மறு உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

65-0218 - "வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை"

சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்

சனி, 25 மே, 2024

அன்புள்ள நினிவே பயணிகளே,

பிதாவே, உம்முடைய பிணம் எங்கே இருக்கிறதோ, அங்கே உம்முடைய கழுகுகள் ஒன்று கூடுகின்றன. உம்முடைய தெய்வீக மன்னாவில் நீர் எங்களை போஷித்துக்கொண்டிருக்கிறீர். எங்களுக்கு உண்மையாகவே தேவையாயிருக்கிறதை எங்களுடைய ஆத்மாக்களுக்கு தாரும். பிதாவே, நாங்கள் உமக்காக தாகமாக இருக்கிறோம். நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம்.

உம்முடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் நாங்கள் உம்முடைய சமுகத்தில் இருந்து கொண்டு, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். மணவாட்டி தங்களுடைய சிந்தனைகளை உறுதி செய்து அதை எதிர்கொள்ள வேண்டும். அது சரியாக அல்லது தவறாக இருக்க வேண்டும். உம்முடைய ரூபகாராப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பது உம்முடைய மணவாட்டி செய்ய வேண்டிய முக்கியமான காரியமா அல்லது இல்லையா? இது சரியாக இருந்தால், நாம் அதை செய்வோமாக. இனி காத்திருக்க வேண்டாம், எது சத்தியம், எது சரி என்பதை இப்போது கண்டறிந்து, அதனுடன் தரித்திருங்கள். இதுவே சத்தியம் என்பதையும், இதுவே இந்நாளுக்கான உம்முடைய அருளப்பட்ட வழி என்பதையும் நாங்கள் அறிவோம்.

நான் முறையிட வேண்டும், “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? தேவன் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?” நாம் அதை வார்த்தையில் காண்கிறோம். நீர் அதை வாக்களித்தீர். யார் அமைதியாக இருக்க முடியும்?

நமக்கு புகழ் வாய்ந்த கருத்து தேவையில்லை; நமக்கு சத்தியமே தேவை. தேவன் சத்தியம் என்று கூறியிருக்கிறதைத் தவிர வேறொன்றையும் நாம் எதிர்கொள்ளத் தேவையில்லை- நமக்குத் (தேவை) தேவையில்லை

நீங்கள் எந்த கப்பலில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நீங்கள் மனுஷகுமாரனிடமிருந்து நேரடியாக உரைக்கப்பட்ட வார்த்தையை புசிக்கிறீர்களா, அல்லது வேறு ஏதாவதா? அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் மற்ற சத்தங்களை கேட்க வேண்டும் என்று யாராவது உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா? உங்களுடைய வீடுகளிலோ அல்லது உங்களுடைய சபைகளிலோ ஒலிநாடாக்களை இயக்குவது மணவாட்டி செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் அல்லவா?

நீங்கள் யாருடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அந்தச் சத்தம் உங்களுக்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது? உங்களுக்காகவும், மற்றும் உங்களுடைய குடும்பத்தின் நித்திய இலக்கிற்காக எந்த சத்தத்தை முன் வைக்கிறீர்கள்?

அது நானல்ல, அது ஏழாம் தூதன் அல்ல, ஓ, இல்லை; அது மனுஷகுமாரனுடைய வெளிப்படுத்துதலாயிருந்தது. அது தூதனுடைய, அவனுடைய செய்தி அல்ல; அது தேவன் வெளிப்படுத்தின இரகசியமாயிருந்தது. அது ஒரு மனிதன் அல்ல; அது தேவனாயிருக்கிறது. தூதன் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த செய்தியாளனாயிருந்தார். மனுஷகுமாரன் கிறிஸ்துவாயிருக்கிறார்; அவரைத்தான் நீங்கள் போஷித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதன், அவனுடைய வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நீங்கள் மனுஷ குமாரனுடைய தவறாத சரீரத்தின்- வார்த்தையினால் போஷித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்த சத்தத்தை, மனுஷகுமாரனுடைய தவறாத சரீரதத்தின்-வார்த்தையாக, முதலில் உங்கள் முன் வைக்காத எந்த சத்தத்தையும் கேட்காதீர்கள். அவர்கள் பிரசங்கிக்கலாம், கற்பிக்கலாம் அல்லது தேவன் அவர்களை செய்யும்படி அழைத்துள்ள அனைத்தையும் செய்யலாம், ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அவை அல்ல.

அவர்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாகக் கூடும் போது, அவர்கள் அந்தக் சத்தத்தை ஒலிக்கச் செய்து, “இந்தச் சத்தமே, கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம். இது, இது மட்டுமே, கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உங்களுக்கு சொல்வார்கள்.

நீங்கள் எந்த சத்தத்தை விரும்புகிறீர்கள்? ஏன் அவர் தம்முடைய சத்தத்தை பதிவு செய்து சேமித்து வைத்தார்? நம்முடைய நாளுக்காக தம்முடைய வார்த்தையைப் பேச தேவன் யாருடைய சத்தத்தை தெரிந்து கொண்டார்?

அவர் அருளிய தீர்க்கதரிசியின் மூலம், அங்கு போய் அந்த செய்தியை பிரசங்கிக்கும் படி அவர் நியமித்த ஒருவன், இப்பொழுது, அவர் வேறொரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம் என்பது போன்று காணப்பட்டது, ஆனால் அவர் யோனாவை அதற்கென்று நியமித்தார். எலியாவும் கூட அதைச் செய்திருக்க முடியாது. எரேமியாவும் அதை செய்திருக்க முடியாது, மோசேயும் அதை செய்திருக்க முடியாது, அது யோனா மாத்திரமே நினிவேக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. அவ்வளவு தான். அவர் அவனுக்கு கட்டளையிட்டு, அவனைப் போகும்படி சொன்னார். அவர், “அங்கே போ, யோனா, நினிவேக்குப் போ” என்று கூறுகிறபோது, யோனாவைத் தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாது.

இந்த ஜீவியத்திற்கு தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார். இந்த சத்தம் நமக்கு நித்திய ஜீவனின் வார்த்தைகளை உரைக்கிறது. நமக்கு, இதுவே தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது. இதுவே நம்முடைய கப்பல். நீங்கள் தர்ஷீசுக்கு செல்லும் கப்பலில் இருந்தால், மிகத் தாமதமாகிவிடும் முன் இறங்கிவிடுங்கள்.

நீங்கள் எந்த வழியில் செல்வது அல்லது என்ன செய்வது என்று உங்களுடைய இருதயத்தில் யோசித்துக்கொண்டிருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, எங்களிடம் வாருங்கள். எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள்ளுங்கள். நாங்கள் கூக்குரலிட, நினிவேக்கு சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் விரும்பினால் கீழ் நோக்கி செல்லுகிற அந்த தர்ஷிஷ் கப்பலில் போக நாங்கள் விட்டுவிடுகிறோம். நாம் தேவனுக்கு முன்பாக ஒரு கடமையைப் பெற்றுள்ளோம், அதுவே நாம் பொறுப்பேற்க வேண்டிய ஒரு செய்தி.

ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யாத சபைக்கு நீங்கள் சென்றால், அது தர்ஷிஷுக்கு போகிற ஒரு கப்பல் என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக யாராவது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை முன் வைக்கவில்லையென்றால், உங்கள் கப்பலின் தலைமையில் யார் இருக்கிறார்கள் என்றும், உங்களுடைய கப்பல் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க நீங்கள் சரிபார்ப்பது நல்லது.

கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் 65-0217 என்ற செய்தியை எங்களுக்கு கப்பலின் தலைவர் கொண்டு வந்து பேசப் போகின்றபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.

நாம் உடனடியாக இந்த எழுப்புதலைத் தொடங்குவோமாக. சரியே! நீங்கள் எதற்காக தாமதிக்கிறீர்கள்? கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், அவர் ஒரு மணவாட்டியைப் பெற்றுக் கொள்வார், அது ஆயத்தமாயுள்ளது. நமக்கு தர்ஷீசுக்குப் போகும் கப்பல்கள் எதுவும் வேண்டாம். நாம் நினிவேக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஹூ! நாம் மகிமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஆமென்! அது உண்மை. தேவன் ஆசீர்வதிக்கப் போகும் இடத்திற்கு நாம் போய்க்கொண்டிருக்கிறோம், அதைத்தான் நாம் செய்ய விரும்புகிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

யோனா 1:1-3
மல்கியா 4
பரி. யோவான் 14:12
லூக்கா 17:30

 

 

சனி, 18 மே, 2024

அன்புள்ள ஒலிநாடா குடும்பத்தினரே,

நான் உங்களை, என்னுடைய குடும்பமாக, நாம் இருக்கும்…நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பமாகவே பொருட்படுத்திக் கூறுகிறேன்.

அது நாம், தீர்க்கதரிசியினுடைய ஒலிநாடா குடும்பம் என்பதாய் உள்ளது; உலகம் முழுவதும் சிதறியிருக்கும் அவருடைய பிள்ளைகள், அவர் கிறிஸ்துவுக்குப் பெற்றவர்கள். இந்த கடைசி நாட்களில் பிதாவானவர் தம்மைக் குறித்து அளித்துள்ள வெளிப்பாட்டைப் பெற்றவர்கள்.

இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட விரும்புகிறேன், பாருங்கள், பிதாவானவர் அவ்விதம் செய்வார், அப்பொழுது நாம்—நாம் ஒருபோதும் அலைந்து திரிய வேண்டிய அவசியமிராத ஒரு வீடு உண்டாகும்.

நான் அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்ட விரும்புகிறேன். அது இப்போதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி, அவருடைய வார்த்தை, இந்த ஒலி நாடாக்கள் அதைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றன: மணவாட்டி அனைவரையும் ஒன்றிணைத்து, உலகம் முழுவதிலும் இருந்து நம்மை ஒரு தனிப் பிரிவாக ஒன்றிணைக்கிறது. அவருடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே, அவரது மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்.

நீங்கள், நீங்கள் ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்: அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். புரிகிறதா? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும், மேலும்—மேலும் ஓ, என்னே, ஒவ்வொரு காரியமும் முன்பு இருந்ததைவிட (புரிகிறதா?) வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த ஆவி.

நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதபடி, நம்முடைய இருதயங்களும், சிந்தனைகளும் மற்றும் ஆத்துமாக்களும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றால் நிறைந்துள்ளன. நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் அதிக வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது. அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நாம் யார் என்றும், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். தேவன் நம்முடைய இருதயங்களில் வைத்துள்ளவற்றிலிருந்து நம்மை அசைக்க எதுவுமே இல்லை. இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இந்நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் இருக்கிறது. எந்த யூகமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை, பரிசுத்த ஆவியிடம், "நான் கேட்டது உண்மையான வார்த்தையா?" "நான் அதை வார்த்தை மூலம் சரிபார்க்க வேண்டுமா?" என்று கேட்கிறதில்லை.

நாம் அல்ல. ஒலிநாடாக்களில் நாம் கேட்பது வார்த்தைதான். ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் அந்த வார்த்தையே மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருக்கும்படி, அக்கினி ஸ்தம்பத்தால், பரிசுத்த ஆவியானவராலே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே வார்த்தையாயுள்ளது.

யாராவது நம்மிடம், “ஒலிநாடாக்களில் சகோதரன் பிரான்ஹாம் பேசிய யாவுமே, அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை அல்ல. அது வெறுமனே மனிதன் தான். எது வார்த்தை என்றும், எது சகோதரன் பிரான்ஹாம் பேசிக்கொண்டிருந்தது என்பதற்கும் பரிசுத்த ஆவியானவராலே நாம் வழிநடத்தப்படுகிறோம்” என்று கூறினால்.

நமக்கல்ல. நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று தீர்க்கதரிசி நமக்கு சொன்னதை நாம் அப்படியே எளிமையாக விசுவாசிக்கிறோம்.

நீங்கள் ஒருபோதும் அந்த வார்த்தையை மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். மோசே கூறினதை, தேவன் கனப்படுத்தினார், ஏனென்றால் தேவனுடைய வார்த்தை மோசேக்குள் இருந்தது.

தீர்க்கதரிசி கூறினதை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம், நாம் அதை விசுவாசிக்கிறோம்; ஏனென்றால் அது நம்முடைய இருதயங்களில் இரும்பு பேனாவால் பொறிக்கப்பட்டுள்ளது. ஒலிநாடாவில் அவர் என்ன கூறினாரோ, தேவன் அதை கனப்படுத்தினார், நாம் அதை விசுவாசிக்கிறோம்.

தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதை உட்கார்ந்து கேட்பதை விட பெரிய கனத்துக்குரியது வேறெதுவும் இல்லை. 64-0830E கேள்விகளும் பதில்களும் #4 என்ற செய்தியில் அவர் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தம்முடைய மணவாட்டியிடம் பேசி, கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பார். எங்களுடன் இணைந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன். இது நீங்கள் ஒருபோதும் வருத்தப்படாத ஒரு முடிவு.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 11 மே, 2024

அன்பான கற்புள்ள கன்னிகை மணவாட்டியே,

ஒவ்வொரு வாரமும் இயங்கு பொத்தானை அழுத்தி, நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தை கேட்கும்படி உங்களை ஊக்குவிக்க நான் எப்படி விரும்புகிறேன். ஏனென்றால் இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய பரிபூரண திட்டம் என்பதை நான் அறிவேன்.

இது ஜோசப் பிரான்ஹாம் கூறுவதோ அல்லது விசுவாசிப்பதோ அல்ல. இது தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் நமக்கு கூறியிருக்கிறதாயிருக்கிறது:

நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறேன்.

இந்தச் செய்தியைக் குறித்த வெளிப்பாட்டை நீங்கள் பெற்றிருந்தால், அந்த ஒரு சிறிய மேற்கோளே நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்ல போதுமானதாயிருக்கும்; நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக அது உள்ளது என்பதை, ஒவ்வொரு விசுவாசியும், உங்களுடைய சபைகளுக்கு சொல்லுங்கள்.

இயங்கு பொத்தானை அழுத்தும்போது நாம் கேட்கும் வார்த்தைகள், நேரடியாக நம்மிடம் பேசும் தேவனுடைய சத்தம் என்று நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு வினாடியும் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும்படியாக பிதாவானவர் அதை ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்தார்; அதனால் அவர் நம்மை ஊக்குவிப்பதையும், ஆசீர்வதிப்பதையும், அபிஷேகிப்பதையும், நம்முடைய எல்லா பயங்களையும் சந்தேகங்களையும் போக்குவதையும், வெறுமனை இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலமே யாவற்றையும் நாம் கேட்கலாம்.

நமக்கு என்னவெல்லாம் தேவையோ அப்போதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும்படியாகவே, அது இருக்கிறது. நாம் தான் வார்த்தை என்பதை நினைவுபடுத்த அவர் அங்கே இருக்கிறார். அவர் நம்முடனும், நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளும் இருக்கிறார். சாத்தான் பொய்யுரைத்து ஏமாற்றும் ஒருவனாய் இருக்கிறான். அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். அந்த வார்த்தையை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிந்து, தேவன் தம்முடைய முன்னறிவினால் அதை நமக்குக் கொடுத்தார். ஆரம்பத்திலிருந்தே நாம் அவருடன் இருந்தோம்.

தேவனுடைய சத்தமாய் இருக்கும்படி அக்னி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே சத்தத்தை காட்டிலும் வேறு எந்த மகத்தான சத்தத்தை நம்மால் கேட்க முடியும்?

வேறு சத்தமே இல்லை.

கடந்த வாரம் அந்த சத்தம் நமக்கு என்ன சொன்னது?

உங்களை நான் எப்பொழுதும் என்னுடைய சகோதரனும் என்னுடைய சகோதரியுமாக உரிமை கோருகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். நான்-நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், ஒரு குருவானவராய் இருப்பது போன்ற பிதாவாக அல்ல. பவுல் அங்கே கூறினது போன்றே, நான்-நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது, நான்-நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன்; அதாவது உங்களை ஒரு கற்புள்ள கன்னியாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்! என்னை ஏமாற்றி விடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.

நாம் வார்த்தைக்கு, அந்த சத்தத்துக்கு ஒரு கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை, நாம் அதைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது: இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதாகும்.

நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன். ஒரு தீர்க்கதரிசி என்று கூறுவதை விசுவாசிப்பீர்களானால், நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறதற்கு செவிகொடுங்கள். புரிகிறதா? நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்வதைச் அப்படியே செய்யுங்கள்.

ஆம், தேவனுடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள், அந்த மனிதர்களில் நானும் ஒருவன் என்றே நான் ஜெபிக்கிறேன். அவருடைய வார்த்தையை உங்கள் முன் வைத்து, இந்தச் செய்தியை, தேவனுடைய வார்த்தையை, அந்த சத்தத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காக நான் அவரால் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்.

பேதுரு கூறினது போல, தேவன் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த அழைத்த ஒரே ஒரு சத்தம் மட்டுமே உள்ளது என்பதை எப்போதும் உங்களுக்கு நினைப்பூட்ட அசதியாயிரேன். தேவன் ரூபகாரப்படுத்தின ஒரே சத்தம். “அவருக்குச் செவிகொடுங்கள்” என்று தேவன் கூறின ஒரு சத்தம். "நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன்" என்று தேவன் கூறின ஒரு சத்தம்.

இதை உங்கள் முழு மனதுடன் நினைவில் கொள்ளுங்கள்: அந்த வார்த்தையுடன் தரித்திருங்கள்! அந்த வார்த்தையை விட்டுவிடாதீர்கள்! அதற்கு முரணான எந்த காரியத்தையும், அது எதுவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அதை விட்டுவிடுங்கள். அதன் பின்னர் அது சரி என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஒருவரும் பிரசங்கிக்க கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றும், எல்லா ஊழியக்காரர்களுக்கும் நான் விரோதமாக இருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றும், நான் ஏன் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதையும் நான் நிச்சயமாக புரிந்து கொள்கிறேன். ”சகோதரன் பிரான்ஹாமைத் தவிர நீங்கள் வேறொரு ஊழியக்காரருக்கு செவி கொடுத்தால், நீங்கள் மணவாட்டி அல்ல.” நான் பலமுறை கூறியது போல், நான் அப்படிச் ஒருபோதும் கூறினதுமில்லை அல்லது அதை நம்புகிறதுமில்லை.

நான் எப்படி உணர்கிறேன் மற்றும் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கடந்த வாரம் தீர்க்கதரிசி அதை சரியாக விளக்கினார்.

சகோதரன் பிரான்ஹாம் இங்கு இருந்த சமயத்தில் ஜெபர்சன்வில் பகுதியில் குறைந்தது மூன்று செய்தி சபைகள் இருந்தன. கடந்த ஞாயிறு ஆராதனையில், மாலை ஆராதனைக்கு உள்ளூர் போதகர்கள் இல்லை என்று கூறினார். அவர்கள் தங்களுடைய சொந்த மாலை ஆராதனைகளை வைத்திருந்தனர். இதனால், அவர்கள் மாலை ஆராதனைக்கு சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க வரவேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் தங்களுடைய சபைகளில் ஆராதனைகளை நடத்த வேண்டியதாய் இருந்தது. அதுதான் அவர்களுடைய முடிவு, அதைச் செய்ய அவர்கள் வழிநடத்தப்பட்டனர் என்று உணர்ந்தார்கள், சகோதரர் பிரான்ஹாமும் அதை ஒப்புக்கொண்டார்.

இன்றைக்கும் ஜெஃபர்சன்வில் பகுதியில் பல சபைகள் உள்ளன. அவர்களும் கூட கர்த்தரால் வழிநடத்தப்படுவதை உணரும் படி செய்ய வேண்டும். அவர்கள் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும் என்று நினைக்கவில்லையென்றால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர்கள் செய்யும்படி வழி நடத்தப்படுவதாக என்ன உணருகிறார்களோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இன்னமும் இந்த செய்தியை நேசிக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். ஆனால் நாம் செய்யும்படி வழிநடத்தப்படுவதாக என்ன உணருகிறோமோ அதை நாம் செய்ய வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது. நாம் தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க விரும்புகிறோம்.

ஆகஸ்ட் 30, 1964 அன்று சகோதரன் பிரான்ஹாம் பேசினது போலவே, 64-0830M கேள்விகளும் பதில்களும் #3 என்ற செய்தியை தீர்க்கதரிசி நமக்கு கொண்டு வருவதை மீண்டும் ஒருமுறை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்
சனி, 4 மே, 2024

அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,

கர்த்தருடைய வருகைக்காக நாம் காத்திருக்கிறோம். நம்முடைய தீவட்டிகளை சுத்தம் செய்து, முழுவதும் எண்ணெய்யால் நிரப்பி, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை இரவும் பகலும் கேட்கிறோம். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபிக்கிறோம்; ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, தரித்திருப்பதன் மூலம் நாம் நம்மை தொடர்ந்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் விழித்தெழப்ப்படுவதற்காக நாம் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நொடியில், நாம் அவர்களைப் பார்ப்போம்; தந்தைகள், தாய்மார்கள், கணவர்கள், மனைவிகள், சகோதர சகோதரிகள். அங்கே அவர்கள் நமக்கு முன்பாக நிற்கிறார்கள். நாம் வந்துவிட்டோம், நேரமும் வந்துவிட்டது என்பதை அந்த நொடியில் அறிந்துகொள்வோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் நம்முடைய ஆத்துமாக்களையும், சிந்தைகளையும், சரீரங்களையும் நிரப்பும். அப்பொழுது கர்த்தருடைய கிருபையின் எடுத்துக் கொள்ளப்படுதலில் அழிவுள்ள இந்த சரீரங்கள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும்.

பின்னர் நாம் ஒன்றுகூடத் துவங்குவோம். உயிரோடிருக்கும் நாம் மாற்றப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காணாது. திடீரென்று, ஏதோ ஒன்று நம்மீது செல்வது போல் இருக்கும்...நாம் மாற்றப்படுவோம். ஒரு வயோதிக மனிதனிலிருந்து ஒரு வாலிப மனிதனாக, ஒரு வயோதிக ஸ்தீரியிலிருந்து ஒரு வாலிப ஸ்தீரியாக.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஏற்கனவே உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுடன் நாம் ஒரு சிந்தனையைப் போல பயணித்துக்கொண்டிருப்போம். பிறகு...மகிமை...ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திப்பதற்கு நாம் அவர்களோடு எடுத்துக்கொள்ளப்படுவோம்.

என்னே ஒரு நேரம் நமக்காக வந்து கொண்டிருக்கிறது. தாக்கப்பட்டு, மனச்சோர்வடைந்து, திடனற்றுப்போகும்படிக்கே சத்துரு நம்மைத் தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கிறான், ஆனால் தேவனுக்கு மகிமை, அவனால் முடியவில்லை. அவர் யாராய் இருக்கிறார் என்பதைக் குறித்தும்; அவர் நம்மை வெளியே அழைக்க அனுப்பப்பட்டார் என்பதைக் குறித்தும்; நாம் யாராக இருக்கிறோம் என்பதைக் குறித்தும், நாம் யாராய் இருக்கப் போகிறோம் என்பதைக் குறித்து அல்ல, நாம் யாராய் இருக்கிறோம் என்பதை குறித்த வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். இப்பொழுதே அது நம்முடைய ஆத்மாவிலும், சிந்தையிலும் மற்றும் ஆவியிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதை நம்மிடத்திலிருந்து எதுவுமே எடுத்துப் போட முடியாது. நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்? தேவன் அவ்வண்ணமாய் கூறினாரே!

சாத்தானே, இது எங்களுடைய வீடு அல்ல, இது எல்லாம் உன்னுடையது, உன்னால் அதை எடுத்துக் கொள்ள முடியும். அதனுடைய பாகம் எதுவுமே எங்களுக்கு தேவையில்லை, அது எங்களுக்கு இனிமேல் தேவையில்லை. எங்களுக்காக கட்டப்பட்டிருக்கிற ஒரு எதிர்கால வீட்டை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், பிசாசே, எங்களுக்கு அறிவிப்பு கிடைத்துள்ளது, அது ஆயத்தமாக உள்ளது. கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. உனக்காக இன்னும் சில செய்திகளை நான் பெற்றுள்ளேன், வெகு சீக்கிரத்தில், நாங்கள் அவருடன் 1000 ஆண்டுகள் தடையின்றி தேனிலவைக் கொண்டாடும்படிக்கு அவர் எங்களைப் அழைத்துச் செல்ல வருகிறார், ஆனால் நீ அழைக்கப்படவில்லை, நீ அங்கு இருக்கமாட்டாய்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்பொழுது என்ன மகிமையான காரியங்களை இந்த செய்தி எங்களுக்கு வெளிப்படுத்துகிறது. தேவனே இந்த எல்லா காரியங்களையும் எங்களிடத்தில் கூறும்படியாக அவர்தாமே இறங்கி வந்து, மானிட உதடுகளினூடாக பேசினார். அவர் நம்மைத் தெரிந்து கொண்டு உண்மையான மற்றும் தம்மைக் குறித்த முழு வெளிப்பாட்டையும் நமக்கு அளித்தார்.

அவர் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார், மோசேயின் நாளுக்கான வார்த்தையாய் அல்ல. மோசே அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; நோவாவின் நாட்களுக்கான வார்த்தையாய் அல்ல, நோவா அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; எலியாவின் நாளுக்கான வார்த்தையாய்…அல்ல, எலியா அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; ஆனால் அவர் நிகழ்கால வார்த்தையாயிருந்தார், அவர்களோ முன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

நீங்கள் ஆயத்தமா?....இதோ அது வருகிறது. இது இரட்டை குழலைக் கொண்ட அதிக சக்தி வாய்ந்த ஒரு துப்பாக்கியாய் உள்ளது, நாம் அதை மிகவும் விரும்புகிறோம்!!

அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறதே! தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிறபோது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ அல்ல, அல்லது அதைப்பற்றி ஒன்றுமில்லை. அது தேவன் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாகவே உள்ளது. அதுதான் அத்தாட்சி.

அல்லேலூயா, அவர் உள்ளே பதிய வைத்தார். இப்பொழுது அதை இறுகப் பற்றிக்கொள்ள நாம் அவருக்கு செவிகொடுப்போமாக.

யோவான் 14-ல், அவர் பரிசுத்த ஆவியின் அத்தாட்சியைத் தருகிறார். அவர், “நான் அநேகங் காரியங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கான நேரத்தை நான் பெற்றிருக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது அவர் உங்களுக்குச் சொல்லுவார், நான் உங்களிடம் சொன்ன காரியங்களை குறித்து உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களையும் கூட உங்களுக்கு அறிவிப்பார்” என்றார். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அதுதான் அத்தாட்சி. அதை முன்னறிவித்துக்கொண்டு…எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக வியாக்கியானத்தை உரைப்பது. இப்பொழுது, அது ஒரு தீர்க்கதரிசியின் அடையாளமல்லவா?

பரிசுத்த ஆவியானவரே ஒவ்வொரு காலத்திலும் தீர்க்கதரிசியாய் இருக்கிறார். அவர் நம்முடைய காலத்தின் தீர்க்கதரிசி. வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது. அது தேவன் பேசி, தம்மை தம்முடைய தீர்க்கதரிசியினூடாக வெளிப்படுத்துகிறதாயுள்ளது. அவரே அந்த நாளுக்கான வார்த்தையாய் இருக்கிறார். தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு, வார்த்தையின் பரிபூரண வியாக்கியானம் ஒலிநாடாவில் உள்ளது.

“நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.” எனவே ஒரு சிறு பிள்ளையைப் போல் மேலும் கீழும் குதித்தல், அந்நிய பாஷையில் பேசுதல் போன்ற இந்த சிறு காரியங்கள் அனைத்தும், நிறைவானது வரும்போது...நாம் இன்றைக்கு, தேவனுடைய உதவியினால், தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு கூடிய வார்த்தையின் நிறைவான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளோமே!. அப்பொழுது குறைவானது ஒழிந்துபோம். “நான் குழந்தையாயிருந்தபோது, குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ, குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” ஆமென்!

நிறைவானது வந்துவிட்டதே; வார்த்தையின் பரிபூரண வியாக்கியானம். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள். அவருடைய மணவாட்டிக்கு தேவைப்படுகிறதெல்லாம், அவள் விரும்புகிறதெல்லாம் அவ்வளவுதான்.

தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு, ஒரு பரிபூரண வியாக்கியானத்தோடு, பரிபூரண வார்த்தையை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வந்து இயங்கு பொத்தானை அழுத்தி எங்களோடு கேளுங்கள்.

கேள்விகளும் பதில்களும் #2 64-0823E

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

தொடர்புடைய சேவைகள்