அன்புள்ள பரிபூரண சித்த மணவாட்டியே,
நாளானது தாமதமாகவும், கர்த்தருடைய வருகையோ சமீபமாயுமிருக்கிறது. காலமானது ஏற்கனவே முடிவுறாமலிருக்குமானால், காலமோ சமீபித்துக்கொண்டிருக்க, வாசல் அடைபட்டுக் கொண்டிருக்கிறது. காற்றினால் அசைந்த நாணல் போல் இருக்கவும்; செவித்தினவுள்ளவர்களாயிருக்கவும்; யோசிப்பது மிகவும் தாமதமானது. இது தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரமாயுள்ளது. அவருடைய மணவாட்டியாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை மாற்றுகிறாரா? ஒருபோதும் இல்லையே. அப்படியானால், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க நம் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நாம் தினமும் பாடுபட வேண்டும். நாம் அவருடைய சித்தத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அதை ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதைச் சுற்றி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள். அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
தேவனோடு தரித்திருக்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்படிக்கு தன்னுடைய முழு நோக்கத்தையுமே இந்த செய்தியில் தீர்க்கதரிசி நமக்கு சொல்லுகிறார், ஆனால் பலர் அதைச் சுற்றிச் சென்று வேறு வழியைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தொடர்ந்து செல்கிறதையும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறதையும் காண்கிறார்கள், ஆனால் அவர்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்களேயன்றி, அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல.
தீர்க்கதரிசி நம்மை மீண்டும் வார்த்தைக்கு கொண்டு சென்று, பார்ப்பதற்கும், படிப்பதற்கும், நமக்கு நினைவூட்டுவதற்கும் உதாரணங்களைத் தருகிறார், தேவன் தமது சிந்தையையோ அல்லது அவருடைய வழியையோ மாற்றுவதில்லை, அவர் தேவன், மாறுவதில்லை.
இப்பொழுது, இந்த இருவருமே ஆவிக்குரிய மனிதர்கள், இருவருமே தீர்க்கதரிசிகளாயிருந்தனர், இருவருமே அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை நாம் கவனிக்கிறோம். மோசே, கடமையின் பாதையில், ஒவ்வொரு நாளும் அவனுக்கு முன்பாக ஒரு புதிதாக அக்கினி ஸ்தம்பத்தோடு, கடமையின் பாதையிலிருக்க, தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் தங்கியிருந்தார். இதோ தேவனால் நியமிக்கப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட, மற்றொரு தேவனுடைய ஊழியக்காரன் வருகிறான், ஒரு தீர்க்கதரிசியாகிய அவனிடத்திற்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. இங்கே அபாயக் கோடு உள்ளது. அந்த மனிதன் தேவனுடையவனாய்—தேவனுடையவனாய் இருக்கவில்லையென்று எவரும் மறுக்க முடியாது, ஏனென்றால் தேவனுடைய ஆவி அவனிடத்தில் பேசியதாக வேதம் கூறியுள்ளது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.
கர்த்தாவே, அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது? இருவரும் தீர்க்கதரிசிகளாய் இருந்தபோது என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இருவரும் தேவனால் அழைக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்கள், தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்; தேவனுடைய தீர்க்கதரிசிகளிடத்திற்கே தேவனுடைய வார்த்தை வருகிறது. பரிசுத்த ஆவியானவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று இருவரும் கூறுகிறார்கள்.
தேவனுடைய ஏழாம் தூதன் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றி சில மேற்கோள்களை மிகவும் கவனமாகப் படித்துப் படிப்போமாக. அவர் என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குத் தேவையேயன்றி சபை என்ன சொல்கிறது, வேத பண்டிதர் ஜோன்ஸ் என்ன சொல்லுகிறார், அல்லது வேறு யாரோ என்ன கூறுகிறார்கள் என்பதல்ல. தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதே நமக்கு வேண்டும்.
மோசே, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டிருந்தான், இந்த நேரத்துக்கான அவர்களுடைய தலைவனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்றும், ஆபிரகாம் இந்த எல்லாக் காரியங்களையும் வாக்குத்தத்தம் செய்திருந்தான் என்றும்,...
மோசேயின் ஸ்தானத்தை எவருமே எடுக்க முடியவில்லை. எத்தனை கோராகுகள் எழும்பினாலும், எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல; அதை பொருட்படுத்தாமல், தேவன் மோசேயை, அழைத்திருந்தார்.
ஜனங்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருந்த ஒருவன் மோசேயாயிருந்தான். மற்ற மனிதர்கள் எழும்பி, தாங்கள் அபிஷேகிக்கப்பட்டிருப்பதாகவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களாயும் கூட இருப்பதாகக் கூறினர். அவர்களையும் கூட வழிநடத்த தேவன் அழைத்திருந்தார். ஆனால் மோசே அவர்களை தேவனுடைய மூல பரிபூரண சித்தத்தில் வழிநடத்தும்படியான தலைவனாக இருந்தான்.
ஆனால், ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் அனுமதிக்கிற சித்தத்தை உடையவராயிருக்கிறார். கவனியுங்கள், அவர் அதை அனுமதிக்கிறார், சரி, ஆனால் அவர் அதை அவருடைய மகிமைக்காக கிரியை செய்வார், அவருடைய பரிபூரண சித்தத்தில். இப்பொழுது நீங்கள் நடக்க விரும்பினால்…
தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தில் இருக்க யாரும் விரும்புவதில்லை. உண்மையான மணவாட்டி எல்லா நேரத்திலும், கிரயம் என்னவானாலும், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கவே விரும்புகிறாள்.
ஒலிநாடாக்களை இயக்குவதன் முக்கியத்துவம் குறித்து பல கருத்து வேறுபாடுகள், எண்ணங்கள், குழப்பங்கள், அபிப்பிராயங்கள் உள்ளன.
இன்றைக்கு செய்தியை விசுவாசிக்கிறவர்களை பிரித்துள்ள பிரச்சினை இதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மணவாட்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும், இருப்பாள் என்பதும் எங்களுக்குத் தெரியும்; அதுவே வார்த்தை.
இன்றைக்கு சபையில் ஆவியால் நிரப்பப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்கள் உள்ளனர். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்ட மனிதர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அவர்களில் ஒருவர் கூட இல்லையே.
அவர்கள் எப்படி மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும்? அவர்களுடைய ஊழியத்தின் பேரில் நாம் ஒன்றுபட முடியுமா? உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய மந்தையை வழிநடத்த அழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் தேவனுடைய மூல திட்டத்திற்கு அவர்களை மீண்டும் வழிநடத்த, அவருடைய தலைவர், அவருடைய தீர்க்கதரிசியே அழைக்கப்பட்டிருக்கிறார். அவர்களுடைய ஊழியம் அல்ல.
ஒலிநாடாக்களில் உள்ள சத்தமே நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று என்றும், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று விசுவாசிக்க வேண்டும் என்று அவர்கள் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கவில்லையென்றால்,, அவர்கள் வெறுமனே அவருடைய அனுமதிக்கும் சித்தத்தில் உள்ளனர்.
இது மிக முக்கியமான சத்தம் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னால், அவர்கள் அதை உண்மையாக விசுவாசித்தால், நீங்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களால் எப்படி இயங்கு பொத்தானை அழுத்தி இயக்காமல் இருக்க முடியும்?
நீங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக, உறுதியாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு உறுதியான வழி மட்டுமே உள்ளது. அது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்பதாகும்.
முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் செல்கிறது. அப்படியானால், அது அதைப் பெற்றுக் கொள்கிறது. அவன் ஒரு செம்மறியாடாக இருந்தால், அவன் அதனோடு வருகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் ஒலிநாடாவை உதைத்து வெளியே தள்ளுகிறான்.
நான் உறுதியாக இருக்க வேண்டும். எனது நித்திய இலக்குடன் என்னால் மேலோட்டமான தீர்மானத்தை எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது தவறு செய்கிறதில்லை என்பதை நான் அறிவேன். அது அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபுகாரப்படுத்தப்பட்டிருந்தது என்பதை நான் அறிவேன். அதுவே தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்த தெரிந்து கொண்ட ஒன்று என்பதை நான் அறிவேன். அந்த சத்தமே மணவாட்டியை இணைக்கக் கூடியதும், இணைக்கும் ஒரே சத்தமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்று கூற நான் கேட்கும் அந்த சத்தமாக அது இருக்கும் என்று நான் அறிவேன்.
நான் இயங்கு பொத்தானை அழுத்தி அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 65-0418E தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நாம் செய்தியை 61-ம் பத்தியிலிருந்து துவங்குவோம்.
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 19வது அதிகாரம்
எண்ணாகமம் 22:31
பரி. மத்தேயு 28:19
லூக்கா 17:30
வெளிப்படுத்தின விசேஷம் 17வது அதிகாரம்
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,
“யார் இந்த மெல்கிசேதேக்கு?” - 65-0221E என்ற செய்தியைக் கேட்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி நாம் ஒன்று கூடுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள தூய கலப்படமற்ற வார்த்தையின் மணவாட்டியே,
நாம் கலப்படமற்ற, எந்த மனிதனுடைய அமைப்பினாலும், எந்த மனிதனாலும் உருவாக்கப்பட்ட கோட்பாட்டினாலும் தொடப்படாத அவருடைய அருமையான எளிய சீமாட்டியாய் இருக்கிறோம். நாம் முற்றிலும் கலப்படமற்ற, வார்த்தையின் மணவாட்டி! நாம் கருவுற்ற தேவனுடைய குமாரத்தி.
நாம் அவருடைய மூல வார்த்தையாக இருக்கிற, அவருடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் பிள்ளைகளாய் இருக்கிறோமே! தேவனில் பாவமே இல்லை, நாம் அவருடைய சொந்த சாயலில் இருக்கிறபடியால், இதனால் நமக்குள் எந்த பாவமும் இல்லை. நாம் எப்படி விழ முடியும்? இது சாத்தியமற்றது...சாத்தியமற்றதே! நாம் அவருடைய ஒரு பாகமாக, அவருடைய மூல வார்த்தையாயிருக்கிறோம்.
எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் இதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? வெளிப்பாடு. முழு வேதமும், இந்த செய்தியும், தேவனுடைய வார்த்தை, அனைத்துமே ஒரு வெளிப்பாடாகும். இந்த சத்தத்திற்கும் மற்ற எல்லா சத்தங்களுக்கும் இடையே உள்ள உண்மையை நாம் அறிவோம், ஏனெனில் இது ஒரு வெளிப்பாடு. நம்முடைய வெளிப்பாடு சரியாக வார்த்தையுடன் உள்ளதேயன்றி, வார்த்தைக்கு முரணானது அல்ல.
இந்தக் கல்லின் மேல்” (வார்த்தை என்றால் என்ன என்பது பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடு) “நான் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் அசைக்காது." அவருடைய மனைவி மற்ற மனிதரோடு சோதிக்கப்படமாட்டாள். "நான் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை ஒருபோதும் அசைக்கவே முடியாது."
நாம் அவருடைய வார்த்தைக்கும் அவருடைய சத்தத்திற்கும் மாத்திரமே உண்மையாகவும், உத்தமமாகவும் இருப்போம். நாம் வேறொரு மனிதனால் ஒருபோதும் தீட்டுப்பட்டு விபச்சாரம் செய்யமாட்டோம். நாம் அவருடைய கன்னிகை வார்த்தையான மணவாட்டியாக இருப்போம். நாம் வேறு எந்த வார்த்தையையும் பார்க்கவோ, கேட்கவோ அல்லது சரசமாடவோ மாட்டோம்.
அது நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் உள்ளது. நமக்கு வேறொரு கணவர் இருக்க முடியாது, ஆனால் நமக்கு ஒரே கணவர்தான், இயேசு கிறிஸ்து, ஒரே மனுஷன், தேவன், இம்மானுவேல். அவருடைய மனைவி பல்லாயிரம், பல்லாயிரக்கணக்கானோராய் இருப்பர். மணவாட்டி வார்த்தையிலிருந்து வர வேண்டும் என்பதை அது காண்பிக்கிறது. "ஒரே கர்த்தராகிய இயேசு, ஆனால் அவருடைய மணவாட்டியோ பலர், ஒருமை."
இது அனைவருக்கும் அல்ல, தீர்க்கதரிசியின் குழுவிற்கு மட்டுமே என்பதை நாம் நினைவில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய செய்தியை பின்பற்றுபவர்களுக்கே. இந்த செய்தி அவர்களுக்கு மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் அவரை மேற்பார்வையிட கொடுத்த சிறிய மந்தைக்கே.
தீர்க்கதரிசி நமக்கு என்ன சொல்லுகிறார் என்பதற்காக தேவன் அவரைப் பொறுப்பாளியாக்குவார், மேலும் தேவன் நம்மை, தேசம் முழுவதிலுமிருந்து அவரால் மன மாற்றமடைந்தவர்களையும், அவர் கிறிஸ்துவிடம் வழிநடத்தியவர்களையும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதற்கு பொறுப்பாளியாக்குவாரேயன்றி, ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார்.
நாம் எப்படி அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அவர் சொல்வதை நாம் உட்கார்ந்து கேட்பது நமக்கு எவ்வளவு அற்புதமானது. எப்படி அவருடைய முதல் மணவாட்டியும், இரண்டாவது மணவாட்டியும் அவரிடத்தில் தவறிப்போயினர்; ஆனால் அவருடைய மகத்தான கடைசி கால மணவாட்டியான நாம் அவரிடம் ஒருபோதும் தவறிப்போகமாட்டோம். நாம் கடைசி வரை அவருடைய உண்மையான, உத்தமமான, கன்னிகை வார்த்தை மணவாட்டியாக இருப்போம்.
அவருடைய வார்த்தையில் உள்ள நம்முடைய விசுவாசம் ஒவ்வொரு நாளும் மகத்தானதாய் வளருகிறது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு, கீழ்ப்படிந்து, அவருடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, நம்முடைய வேதாகமங்களைப் படித்து, நாள் முழுவதும் ஜெபித்து அவரை ஆராதிப்பதன் மூலம் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவர் சீக்கிரத்தில் வருவார் என்பது நமக்குத் தெரியும். இனி எந்த நிமிடமும். நோவாவைப் போலவே, அவர் நேற்று வருவார் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்; ஒருவேளை நாளை காலையோ, பிற்பகலோ, மாலையோ, ஆனால் அவர் வருவார் என்பது நமக்குத் தெரியும். தேவனுடைய தீர்க்கதரிசியும், அவருடைய வார்த்தையும் எந்த தவறும் செய்கிறதில்லை, அவர் வருகிறார். இது 7-வது நாள் என்று நாம் உணருகிறோம், மேகங்கள் உருவாகி, பெரிய மழைத் துளிகள் விழுவதை நாம் காணலாம்; வேளையானது சமீபித்து விட்டது.
நாம் பேழையில் நன்கு பாதுகாப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி: விவாகமும் விவாகரத்தும் 65-0221M என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், தேவனுடைய சத்தம் எங்களைத் தேற்றுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், எங்களுடன் சேர்ந்து கொள்ள வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
பரி. மத்தேயு 5:31-32 / 16:18 / 19:1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்துவே,
நம்முடைய ஜீவியத்தில் எந்த காரியத்தைக் குறித்தாவது ஒரு கேள்வியைக் நாம் கேட்டால், அதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு நெருக்கமாக ஏதாவது இருக்கலாம், ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு உண்மையான, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, நம்முடைய ஜீவியங்களில் எழும் ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.
நமக்கு ஒரு வேதாகம கேள்வி இருந்தால், ஒரு வேதாகம பதில் இருக்க வேண்டும். இது மனிதக் குழுவிலிருந்தோ, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஐக்கியத்தின் மூலமாகவோ, அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ, அல்லது சில ஸ்தாபனத்திடமிருந்தோ வருவதை நாம் விரும்பவில்லை. அது வேதத்திலிருந்து நேராக வர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: தேவனை ஆராதிக்கும்படியான அவருடைய உண்மையான, சரியான இடம் எது?
தேவன் மனிதனை சந்திக்கும்படி தெரிந்து கொண்டது; ஒரு சபையில் அல்ல, ஒரு ஸ்தாபனத்தில் அல்ல, ஒரு கோட்பாட்டில் அல்ல, ஆனால் கிறிஸ்துவிலே. அதுவே தேவன் ஒரு மனிதனை சந்திக்கும் ஒரே ஸ்தலமாக உள்ளது, அவனால் தேவனை ஆராதிக்க முடிந்தது, கிறிஸ்துவில் இருக்கிறது. அதுதான் ஒரே ஸ்தலமாக உள்ளது. நீங்கள் மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கர், பிராட்டஸ்டென்ட் என எதுவாக இருந்தாலும், நீங்கள் தேவனை சரியாக ஆராதிக்க ஒரே ஒரு ஸ்தலம் மட்டுமே உள்ளது, அது கிறிஸ்துவில் உள்ளது.
தேவனை ஆராதிக்கும்படி அவர் தெரிந்து கொண்ட, சரியான ஸ்தலம் இயேசு கிறிஸ்துவில் மாத்திரமே உள்ளது; அது மாத்திரமே அவருடைய அருளப்பட்ட வழியாய் உள்ளது.
மல்கியா 4-ல் ஒரு கழுகை வேதம் நமக்கு வாக்களித்தது; நாம் பின்பற்ற வேண்டிய ஒரு அக்கினி ஸ்தம்பம். தவறிழைக்கும் சபையை அவர் எபிரேயர் 13:8, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், மாறாதவர் என்று காட்டுவார். லூக்கா 17:30-ல் மனுஷகுமாரன் (கழுகு) தம்முடைய மணவாட்டிக்குத் தம்மை வெளிப்படுத்துவார் என்றும் கூட நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படுத்துதல் 4:7-ல், நான்கு ஜீவன்கள் இருந்ததாக அது நமக்குச் சொல்கிறது, முதலாவது சிங்கம். அடுத்த ஜீவன் ஒரு காளையாயிருந்து. அதன் பின்னர், அடுத்து வருவது ஒரு மனிதனாயிருந்தது; அந்த மனிதர் சீர்திருத்தவாதிகளாய், மனிதனின் கல்வி, இறையியல் போன்றவற்றை உடையவர்களாக இருந்தனர்.
ஆனால் சாயங்கால நேரத்தில், வரவிருந்த கடைசி ஜீவன் ஒரு பறக்கும் கழுகு என்று வேதம் கூறியுள்ளது. தேவன் தம்முடைய கடைசி கால மணவாட்டிக்கு ஒரு கழுகை அருளுவார்; மனுஷகுமாரன் தாமே, தம்முடைய மணவாட்டியை வழிநடத்த மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்.
பழைய ஏற்பாட்டில் உள்ள, பழைய காரியங்கள் அனைத்தும், வரவிருக்கும் காரியங்களின் நிழல்களாயிருந்தன என்று வேதாகமம் கூட கூறுகிறது. அந்த நிழல் நெருங்க நெருங்க, எதிர்மறையானது நேர்மறையில் விழுங்கப்படுகிறது. அப்பொழுது என்ன நடந்தது என்பதோ இன்றைக்கு என்ன நடக்கும் என்பதற்கு ஒரு நிழலாய் உள்ளது.
I சாமுவேல் 8-ல், ஜனங்களை வழிநடத்துவதற்கு தேவன் சாமுவேல் தீர்க்கதரிசியை அருளியிருந்ததாக பழைய ஏற்பாடு நமக்குச் சொல்கிறது. ஜனங்கள் அவரை அணுகி, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று சொன்னார்கள். சாமுவேலினுடைய இருதயம் கிட்டத்தட்ட நின்றுவிடுமளவிற்கு அவன் மிகவும் கலக்கமடைந்தான்.
இந்த அர்ப்பணிக்கப்பட்ட வேதத்தால்- ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினூடாக தம்முடைய ஜனங்களை தேவன் வழிநடத்திக் கொண்டிருந்தார், ஆயினும் அவன் புறக்கணிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தான். அவன் ஜனங்களைக் கூட்டி, பிள்ளைகளை போல் சுமந்து வந்து, அவர்களை செழிப்படைய செய்து, அவர்களை ஆசிர்வதித்திருந்த தேவனை விட்டு அவர்கள் விலகாதபடிக்கு அவர்களிடத்தில் மன்றாடினான். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக இருந்தனர்.
அவர்கள் சாமுவேலிடம், “உம்முடைய வழிநடத்துதலில் நீர் ஒருபோதும் தவறாயிருந்து வரவில்லை. உம்முடைய நிதி பரிவர்த்தனைகளில் நீர் ஒருபோதும் நேர்மையற்றவராக இருந்ததில்லை. கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்ப எங்களை வைத்திருக்க உம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளீர். தேவனுடைய அற்புதங்கள், ஞானம், தேவைகளை சந்தித்தல் மற்றும் பாதுகாப்பை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் அதில் விசுவாசங் கொண்டுள்ளோம். நாங்கள் அதை விரும்புகிறோம். மேலும் அது இல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் எங்களை யுத்தத்திற்கு வழிநடத்த ஒரு ராஜா எங்களுக்கு வேண்டும் என்பதேயாகும்.
இப்போது நிச்சயமாக நாங்கள் யுத்தத்திற்கு செல்லும்போது யூதாவைப் பின்தொடர்ந்து ஆசாரியர்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது இன்னும் எங்கள் நோக்கம், நாங்கள் எக்காளங்களை ஊதி ஆரவாரம் செய்து பாடுவோம். நாங்கள் அதை நிறுத்த நினைக்கவில்லை. ஆனால் எங்களை வழிநடத்த எங்களில் ஒருவரான ராஜா வேண்டும்.
இது அந்த நாளின் ஸ்தாபன ஜனங்களாக இருக்கவில்லை. இது உண்மையாகவே அவர் ஜனங்களை வழிநடத்த தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தார் என்று அவர்கள் உரிமைக் கோரினதாயிருந்தது.
“ஆம், நீர் ஒரு தீர்க்கதரிசி. நாங்கள் செய்தியை விசுவாசிக்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையை உமக்கு வெளிப்படுத்துகிறார், நாங்கள் அதை விரும்புகிறோம், அது இல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை, ஆனால் உம்மைத் தவிர வேறு யாராவது எங்களை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; எங்களுக்கு சொந்தமான ஒருவர். நீர் எங்களுக்குக் கொண்டு வந்த செய்தியை நாங்கள் விசுவாசிக்கிறோம் என்று நாங்கள் இன்னும் சொல்ல விரும்புகிறோம். இது வார்த்தை. நீர் தீர்க்கதரிசி, ஆனால் நீரோ அல்லது உம்முடைய சத்தமோ மாத்திரமே மிக முக்கியமானது அல்ல.”
இன்றைக்கு உலகில் அருமையான ஜனங்கள், அருமையான சபைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு திருமதி. இயேசு கிறிஸ்துதான் இருக்கிறாள். நாமே அவளாக இருக்கிறோம், அந்த ஒருவளுக்காகவே அவர் வருகிறார்; அவருடைய கற்புள்ள கன்னிகையான வார்த்தை மணவாட்டி கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருக்கும்படியான தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட ஒரே சத்தத்தோடு தரித்திருப்பாள்.
நீங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினால், அப்பொழுது நாங்கள் உலகம் முழுவதும் தொலைபேசி இணைப்பில் கேட்டுக் கொண்டிருப்போம். இதுதான் சம்பவிக்கப் போகிறது.
இன்றிரவு இந்த இடத்தில் இங்கே இருக்கிற என் சகோதர, சகோதரிகள், என் நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் தூரத்தில் இருப்பவர்கள் மேலும் அசைவாடும். கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரையிலும் பல்வேறுபட்ட மாநிலங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள தேவனே, அங்கே டூசான் வனாந்தரத்தினூ டாகவும், கலிபோர்னியாவிலும், மேலே நெவேடா மற்றும் ஐடாஹோவிலும், கிழக்கிலும் மற்றும் சுற்றிலுமுள்ள, கீழே டெக்ஸாஸிலும், இந்த அழைப்பு கொடுக்கப்பட்டு, ஜனங்கள் சிறு சபைகளிலும், பெட்ரோல் நிரப்பும் நிலையங்களிலும், வீடுகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். ஓ தேவனே, இழக்கப்பட்ட மனிதனோ அல்லது ஸ்திரீயோ, பையனோ அல்லது பெண்ணோ, இந்த வேளையில் உம்மண்டை வருவார்களாக. இதை இப்பொழுதே அருளும். நேரம் இருக்கும்பொழுதே அவர்கள் இந்த பாதுகாப்பான ஸ்தலத்தை கண்டடைய வேண்டுமென்று, நான் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்.
இப்பொழுதும், கர்த்தாவே, இந்த சவால் சந்திக்கப்பட்டாயிற்று, பெரிய பொய்யுரைத்து ஏமாற்றும், அந்த சாத்தான், ஒரு தேவனுடைய பிள்ளையை பிடித்து வைத்திருக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அவன் தோற்கடிக்கப்பட்டவனாயிருக்கிறான். இயேசு கிறிஸ்து, ஒரே ஆராதனை ஸ்தலம், ஒரே உண்மையான நாமம், அவனை கல்வாரியில் தோற்கடித்தது. ஒவ்வொரு சுகவீனத்தையும், ஒவ்வொரு வியாதியையும் அவர் தோற்கடித்தார் என்று நாங்கள் இப்போது அவருடைய இரத்தத்தை உரிமை கோருகிறோம்.
இந்தக் கூட்டத்தாரை விட்டுப் போகும்படி நான் சாத்தானுக்கு கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த ஜனங்களை விட்டு வெளியே வா, அவர்கள் விடுதலையடைவார்களாக.
எழுதப்பட்ட வார்த்தையின் அடிப்படையில் தங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும், நீங்கள் உங்களுடைய காலூன்று எழும்பி நின்று, “நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இப்பொழுதே என்னுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்கிறேன்” என்று உங்களுடைய சாட்சியைக் கூறுங்கள்.
தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! அங்குதான் காரியம். ஊனமுற்றவர்களும் மற்றவர்களும் எழுவதை, இங்கே பாருங்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! அவ்வளவுதான். அப்படியே விசுவாசியுங்கள். அவர் இங்கே இருக்கிறார்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் 65-0220
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
உபாகமம் 16:1-3
யாத்திராகமம் 12:3-6
மல்கியா 3வது & 4வது அதிகாரங்கள்
லூக்கா 17:30
ரோமர் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:7
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மேம்பட்ட ஆவிக்குரிய ராஜரீக வித்தான மணவாட்டியே,
இனி காத்திருக்க வேண்டாம், இனி யோசிக்க வேண்டாம், நாம் வந்தடைந்துவிட்டோம்! நாம் மேம்பட்ட ஆவிக்குரிய ராஜரீக வித்தான மணவாட்டியாக இருக்கிறோம். ராஜரீக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்கு ஆவிக்குரிய வித்து. எதிர்காலத்தில் சில குழு அல்ல; வரப்போகும் அடுத்த சந்ததி அல்ல; நாம் கடைசி நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், நாம் இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்புவதைக் காணும் சந்ததியாய் இருக்கிறோம்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
அதே சுவிசேஷம், அதே வல்லமை, நேற்று இருந்த அதே மனுஷகுமாரன், இன்றும், என்றும் இருப்பார்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஐக்கிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் இந்த ஒலிநாடாவை தொலைபேசி இணைப்புகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிற அன்பான நண்பர்களே; கிழக்கில் வந்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவ கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அதே தேவ கு-மா-ர-னா-ய் இருந்து கொண்டு, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக, இன்றிரவு சபைக்கு மத்தியில் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார். குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
அந்த காலத்திற்கான வாக்குத்தத்த வார்த்தையோடு தம்மை அடையாளங் காண்பித்து, அவருடைய நாளில் மேடையில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த மேசியாவின் சத்தமானது, உலகத்தை சுற்றிலும் உள்ள இன்றைய அவருடைய மணவாட்டியினிடத்தில்: நான் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவ சத்தமாய் இருக்கிறேன். என்னுடைய வார்த்தையோடு தரித்திருக்கிற நீங்கள் என்னுடைய ராஜரீக ஆவிக்குரிய வித்தான மணவாட்டியாய் இருக்கிறீர்கள் என்று ஒலிநாடாவிலே நம்மிடத்தில் சொல்லுகிற அதே மேசியாவின் சத்தமாய் இருக்கிறது.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
இன்றைக்கு ஜனங்களுக்கு மத்தியில் அப்பேர்ப்பட்ட ஒரு கொந்தளிப்பு நிலவுகிறபடியால், அவர்கள் தேவனுடைய சத்தியத்தை காணத் தவறுகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பல வியாக்கியானங்கள் இருப்பதால் தான் அது அவ்வாறு உள்ளது. அவருடைய வார்த்தையை வியாக்கியானிப்பதற்கு தேவனுக்கு எவரும் தேவைப்படுகிறதில்லை. அவரே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை வியாக்கியானிக்க அவருடைய வெளிப்படுத்தின விசேஷம் 10 7-ல் உள்ள சத்தத்தின் நாட்களில் தீர்க்கதரிசியாகிய தூதனை தம்முடைய மணவாட்டிக்கு அனுப்பினார். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
நீங்களோ, "இயேசு பூமியில் இருந்தபோது நான் அங்கு இருந்திருந்தால், நான் இன்ன- இன்னதை செய்திருப்பேன்" என்று கூறலாம். சரி, அது உங்களுடைய காலமாய் இருக்கவில்லை. ஆனால், இது உங்களுடைய காலம், இது உங்களுடைய நேரம். எந்த சத்தத்தை நீங்கள் தேவனுடைய சத்தம் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?
எந்த சத்தம் உங்களுக்கு மிக முக்கியமான சத்தமாக இருக்கிறது?
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
பிசாசு அவருடைய மணவாட்டியைத் தாக்குவதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சென்று கொண்டிருக்கிறான். நீங்கள் ஒரு வியாதியைப் பெற்றுக் கொண்டீர்கள் என்றோ அல்லது ஏதோ ஒரு விதமான சுகவீனம் அல்லது உங்களுடைய குடும்பத்தை தாக்குவதைக் குறித்தோ அவன் உங்களை சிந்திக்க வைக்கலாம். சில நேரங்களில் தேவன் நீங்கள் மேலோ, சுற்றிலுமோ அல்லது வேறு எங்குமே காண முடியாதபடிக்கு மிகுந்த இருளை அனுமதிக்கிறார். அதன் பின்னர் நீங்களோ, “நான் ஆகாரினுடைய வித்தும் அல்ல, நான் சாராளினுடைய வித்தும் அல்ல, நான் மரியாளுடைய வித்தும் கூட அல்ல, நான் தேவனுடைய மேம்பட்ட ராஜரீக ஆவிக்குரிய ஆபிரகாமின் வித்தாயிருக்கிறேன். நான் எனக்காக தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை எடுத்துக் கொள்கிறேன், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். நான் அசைக்கப்படேன். அது எவ்விதமாய் காணப்பட்டாலும், பிசாசு என்னக் கூறினாலும் அதை பொருட்படுத்துகிறதில்லை. எனக்கு எது தேவையாயிருந்தாலும், நான் தேவனை அவருடைய வார்த்தையில் ஏற்றுக்கொள்வேன்” என்று கூறும்படியாக, அவர் வந்து உங்களுக்காக அதனூடாக ஒரு வழியை உருவாக்குகிறார்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
தேவனுடைய சத்தம் உரைத்திருக்கிறது, உங்களுக்கு தேவையான எல்லா ஆவிக்குரிய ஆதாரத்தையும் நான் சேமித்து வைத்துள்ளேன். அவைகள் ஒலிநாடாக்களில் உள்ளவைகள் மாத்திரமே என்று கூறுங்கள். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன். என்னுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. வம்பு செய்யவோ அல்லது சண்டையிடவோ வேண்டாம், ஒருவரையொருவர் நேசியுங்கள், ஆனால் என்னுடைய வார்த்தையோடு தரித்திருங்கள்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
மடிந்துவிட வேண்டாம். மனச்சோர்வடைய வேண்டாம். உங்கள் சந்தோஷத்தை சாத்தான் கொள்ளையிட விடாதீர்கள். நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அந்த மகத்தான கலியாண விருந்திலே அது என்னவாயிருக்கப் போகிறது என்பதையும், அவர் உங்களுக்காக கட்டியிருக்கிற அந்த அழகான நகரத்தில் ஜீவிக்கப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரோடும், இதற்கு முன்பே சென்றுள்ள யாவரோடும் அங்கே நீங்கள் நித்தியத்தினூடாக இருக்கப்போகிறீர்கள்.
இனி சுகவீனமே இல்லை. இனி கவலைகளே இல்லை. இனி மரணமே இல்லை. இனி யுத்தங்களே இல்லை. அவரோடு நித்திய ஜீவன் மாத்திரமே. அப்பொழுது நாம் இவ்வாறு கூறுவோம்:
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று!
நாம் மந்தமான நிலையில், “நான் இந்த இடத்தைக் குறித்து மிகவும் வெறுப்பாயிருக்கிறேன். நான் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன்” என்று கூறாதிருப்போமாக. நாம் இதை இந்தவிதமாகக் கூறுவோமாக: “அவர் இப்பொழுது எனக்காக எந்த நிமிடமும் வருவார்...மகிமை! என்னால் காத்திருக்க முடியாது. என்னுடைய அன்புக்குரியவர்கள் அனைவரையும் பார்க்கப் போகிறேன். அவர்கள் என் முன் தோன்றப்போகிறார்கள், அப்பொழுது நான் அறிந்து கொள்வேன், அது முடிந்துவிட்டது, நாம் வந்தடைந்துவிட்டோம்.”
அப்பொழுது, ஒரு இமைப் பொழுதிற்குள்ளாகவே, நாம் மறுபுறத்தில் ஒன்றாக இருப்போம்.
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் சமீபமாயிருக்கிறபடியால், நாம் சந்தோஷப்பட்டு களிகூருவோமாக, அவளுடைய மணவாட்டி…அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.
இந்த வேதவாக்கியம், இன்றையத்தினம் நிறைவேறிற்று 65-0219
என்ற செய்தியை நாங்கள் கேட்க போகிறபடியால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், எங்களுடன் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் கலந்துகொள்ள விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வந்து ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. யோவான் 16வது அதிகாரம்
ஏசாயா 61:1-2
பரி. லூக்கா 4:16