அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,
கர்த்தருடைய வருகைக்காக நாம் காத்திருக்கிறோம். நம்முடைய தீவட்டிகளை சுத்தம் செய்து, முழுவதும் எண்ணெய்யால் நிரப்பி, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை இரவும் பகலும் கேட்கிறோம். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபிக்கிறோம்; ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, தரித்திருப்பதன் மூலம் நாம் நம்மை தொடர்ந்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்கள் முதலில் விழித்தெழப்ப்படுவதற்காக நாம் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நொடியில், நாம் அவர்களைப் பார்ப்போம்; தந்தைகள், தாய்மார்கள், கணவர்கள், மனைவிகள், சகோதர சகோதரிகள். அங்கே அவர்கள் நமக்கு முன்பாக நிற்கிறார்கள். நாம் வந்துவிட்டோம், நேரமும் வந்துவிட்டது என்பதை அந்த நொடியில் அறிந்துகொள்வோம். எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசம் நம்முடைய ஆத்துமாக்களையும், சிந்தைகளையும், சரீரங்களையும் நிரப்பும். அப்பொழுது கர்த்தருடைய கிருபையின் எடுத்துக் கொள்ளப்படுதலில் அழிவுள்ள இந்த சரீரங்கள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும்.
பின்னர் நாம் ஒன்றுகூடத் துவங்குவோம். உயிரோடிருக்கும் நாம் மாற்றப்படுவோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் மரணத்தைக் காணாது. திடீரென்று, ஏதோ ஒன்று நம்மீது செல்வது போல் இருக்கும்...நாம் மாற்றப்படுவோம். ஒரு வயோதிக மனிதனிலிருந்து ஒரு வாலிப மனிதனாக, ஒரு வயோதிக ஸ்தீரியிலிருந்து ஒரு வாலிப ஸ்தீரியாக.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஏற்கனவே உயிர்த்தெழுப்பப்பட்டவர்களுடன் நாம் ஒரு சிந்தனையைப் போல பயணித்துக்கொண்டிருப்போம். பிறகு...மகிமை...ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திப்பதற்கு நாம் அவர்களோடு எடுத்துக்கொள்ளப்படுவோம்.
என்னே ஒரு நேரம் நமக்காக வந்து கொண்டிருக்கிறது. தாக்கப்பட்டு, மனச்சோர்வடைந்து, திடனற்றுப்போகும்படிக்கே சத்துரு நம்மைத் தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கிறான், ஆனால் தேவனுக்கு மகிமை, அவனால் முடியவில்லை. அவர் யாராய் இருக்கிறார் என்பதைக் குறித்தும்; அவர் நம்மை வெளியே அழைக்க அனுப்பப்பட்டார் என்பதைக் குறித்தும்; நாம் யாராக இருக்கிறோம் என்பதைக் குறித்தும், நாம் யாராய் இருக்கப் போகிறோம் என்பதைக் குறித்து அல்ல, நாம் யாராய் இருக்கிறோம் என்பதை குறித்த வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். இப்பொழுதே அது நம்முடைய ஆத்மாவிலும், சிந்தையிலும் மற்றும் ஆவியிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதை நம்மிடத்திலிருந்து எதுவுமே எடுத்துப் போட முடியாது. நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்? தேவன் அவ்வண்ணமாய் கூறினாரே!
சாத்தானே, இது எங்களுடைய வீடு அல்ல, இது எல்லாம் உன்னுடையது, உன்னால் அதை எடுத்துக் கொள்ள முடியும். அதனுடைய பாகம் எதுவுமே எங்களுக்கு தேவையில்லை, அது எங்களுக்கு இனிமேல் தேவையில்லை. எங்களுக்காக கட்டப்பட்டிருக்கிற ஒரு எதிர்கால வீட்டை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், பிசாசே, எங்களுக்கு அறிவிப்பு கிடைத்துள்ளது, அது ஆயத்தமாக உள்ளது. கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. உனக்காக இன்னும் சில செய்திகளை நான் பெற்றுள்ளேன், வெகு சீக்கிரத்தில், நாங்கள் அவருடன் 1000 ஆண்டுகள் தடையின்றி தேனிலவைக் கொண்டாடும்படிக்கு அவர் எங்களைப் அழைத்துச் செல்ல வருகிறார், ஆனால் நீ அழைக்கப்படவில்லை, நீ அங்கு இருக்கமாட்டாய்.
நாங்கள் ஒவ்வொரு முறையும் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்பொழுது என்ன மகிமையான காரியங்களை இந்த செய்தி எங்களுக்கு வெளிப்படுத்துகிறது. தேவனே இந்த எல்லா காரியங்களையும் எங்களிடத்தில் கூறும்படியாக அவர்தாமே இறங்கி வந்து, மானிட உதடுகளினூடாக பேசினார். அவர் நம்மைத் தெரிந்து கொண்டு உண்மையான மற்றும் தம்மைக் குறித்த முழு வெளிப்பாட்டையும் நமக்கு அளித்தார்.
அவர் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார், மோசேயின் நாளுக்கான வார்த்தையாய் அல்ல. மோசே அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; நோவாவின் நாட்களுக்கான வார்த்தையாய் அல்ல, நோவா அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; எலியாவின் நாளுக்கான வார்த்தையாய்…அல்ல, எலியா அந்த நாளுக்கான வார்த்தையாயிருந்தான்; ஆனால் அவர் நிகழ்கால வார்த்தையாயிருந்தார், அவர்களோ முன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
நீங்கள் ஆயத்தமா?....இதோ அது வருகிறது. இது இரட்டை குழலைக் கொண்ட அதிக சக்தி வாய்ந்த ஒரு துப்பாக்கியாய் உள்ளது, நாம் அதை மிகவும் விரும்புகிறோம்!!
அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறதே! தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிறபோது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ அல்ல, அல்லது அதைப்பற்றி ஒன்றுமில்லை. அது தேவன் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாகவே உள்ளது. அதுதான் அத்தாட்சி.
அல்லேலூயா, அவர் உள்ளே பதிய வைத்தார். இப்பொழுது அதை இறுகப் பற்றிக்கொள்ள நாம் அவருக்கு செவிகொடுப்போமாக.
யோவான் 14-ல், அவர் பரிசுத்த ஆவியின் அத்தாட்சியைத் தருகிறார். அவர், “நான் அநேகங் காரியங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கான நேரத்தை நான் பெற்றிருக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது அவர் உங்களுக்குச் சொல்லுவார், நான் உங்களிடம் சொன்ன காரியங்களை குறித்து உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களையும் கூட உங்களுக்கு அறிவிப்பார்” என்றார். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அதுதான் அத்தாட்சி. அதை முன்னறிவித்துக்கொண்டு…எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக வியாக்கியானத்தை உரைப்பது. இப்பொழுது, அது ஒரு தீர்க்கதரிசியின் அடையாளமல்லவா?
பரிசுத்த ஆவியானவரே ஒவ்வொரு காலத்திலும் தீர்க்கதரிசியாய் இருக்கிறார். அவர் நம்முடைய காலத்தின் தீர்க்கதரிசி. வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது. அது தேவன் பேசி, தம்மை தம்முடைய தீர்க்கதரிசியினூடாக வெளிப்படுத்துகிறதாயுள்ளது. அவரே அந்த நாளுக்கான வார்த்தையாய் இருக்கிறார். தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு, வார்த்தையின் பரிபூரண வியாக்கியானம் ஒலிநாடாவில் உள்ளது.
“நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.” எனவே ஒரு சிறு பிள்ளையைப் போல் மேலும் கீழும் குதித்தல், அந்நிய பாஷையில் பேசுதல் போன்ற இந்த சிறு காரியங்கள் அனைத்தும், நிறைவானது வரும்போது...நாம் இன்றைக்கு, தேவனுடைய உதவியினால், தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு கூடிய வார்த்தையின் நிறைவான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளோமே!. அப்பொழுது குறைவானது ஒழிந்துபோம். “நான் குழந்தையாயிருந்தபோது, குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ, குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” ஆமென்!
நிறைவானது வந்துவிட்டதே; வார்த்தையின் பரிபூரண வியாக்கியானம். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள். அவருடைய மணவாட்டிக்கு தேவைப்படுகிறதெல்லாம், அவள் விரும்புகிறதெல்லாம் அவ்வளவுதான்.
தெய்வீக ரூபகாரப்படுத்துதலோடு, ஒரு பரிபூரண வியாக்கியானத்தோடு, பரிபூரண வார்த்தையை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வந்து இயங்கு பொத்தானை அழுத்தி எங்களோடு கேளுங்கள்.
கேள்விகளும் பதில்களும் #2 64-0823E
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்பான ஒலிநாடாவைக் கேட்பவர்களே,
என்னால் இதைப் போதுமானதாகக் கூற முடியாது, நம்முடைய நாளுக்கான அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தூதனாகிய செய்தியாளர் மூலமாக நம்மிடத்தில் பேசுகிற தேவனுடைய சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் பெரியது எதுவுமில்லை. வெளிப்படுத்துதலுக்குப் பின் வெளிப்படுத்துதலை கர்த்தர் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு செய்தியும் நாம் இதற்கு முன் கேட்காதது போல் உள்ளது. இது ஜீவனுள்ள வார்த்தையாய், புதிய மன்னாவாய், தேவன் தம்முடைய மணவாட்டிக்காக சேமித்து வைத்துள்ள ஆகாரமாய் உள்ளது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதேயாகும்.
சீக்கிரத்தில் வரவிருக்கும் நம்முடைய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த யாவற்றையும் நாம் கேள்விப்படுகிறோம். நாம் போய்க் கொண்டிருக்கிறோம்...மகிமை, நாம் கலியாண விருந்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம். அவருடைய முன்னறிவினால் அங்கே இருக்க அவர் நம்மை முன்குறித்தார், அதை எதுவும் தடுக்கப்போவதில்லை. இங்கே வார்த்தை அந்த நபருடன் ஒன்றிணைகிறது, அவர்கள் இருவரும் ஒன்றாகிறார்கள். அது மனுஷகுமாரனை வெளிப்படுத்துகிறது. வார்த்தையும் சபையும் ஒன்றாகிறது. மனுஷகுமாரன் எதைச் செய்தாரோ, அவர் வார்த்தையாக இருந்தார், சபையும் அதே காரியத்தைச் செய்கிறது.
நான் தொடர்வதற்கு முன், நீங்கள் அதை மீண்டும் படிக்க விரும்பலாம்!! பிசாசு நம்மை எப்படி வீழ்த்த முடியும்? நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைக் கேளுங்கள். நாம் யார் என்று கேளுங்கள். இப்போது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள்.
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? அவருடைய முன்னறிவினால் நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிற நம்முடைய கலியாண விருந்திற்கு, அங்கு நாம், அவருடைய வார்த்தையும் சபையும், அவருடன் ஒன்றாகிறது, மனுஷகுமாரன் எதை செய்தாரோ, நாமும் அதையே செய்கிறோம்!!
பின்னர் நாம் நம்முடைய வருங்கால வீட்டைக் குறித்த எல்லாவற்றையும் கேள்விப்படுகிறோம். திவ்விய சிற்பாசாரி நம்முடைய புதிய நகரத்தை வடிவமைத்திருக்கிறார், அங்கே அவர் தன்னுடைய மணவாட்டியாகிய, நம்மோடு வசிப்பார். அவர் கட்டியெழுப்பி, நாம் விரும்பும் வண்ணமாகவே; ஒவ்வொரு சிறு காரியத்தையும் சரியாக நம்முடைய தொடுதலுக்காகவே வைத்திருக்கிறார். அங்கே ஒரு வெளிச்சமும் தேவைப்படாது, ஏனென்றால் ஆட்டுக்குட்டியானவரே நம்முடைய விளக்காயிருப்பார். அங்கே தீர்க்கதரிசி நம்முடைய பக்கத்து வீட்டில் வசிப்பார்; அவர் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரராக இருப்பார். நாம் அந்த மரங்களில் இருந்து புசித்து, நாம் அந்த பொன்னான வீதிகளில் அந்த ஊற்றண்டை நடந்து சென்று பருகுவோம். பூமியின் மீது தூதர்கள் வட்டமிடுவதோடு, நாம் தேவனுடைய பரதீசில் நடந்து கொண்டு, கீதங்களை பாடிக் கொண்டிருப்போம். மகிமை! அல்லேலூயா!
அவருடைய வார்த்தையை நமக்கு நிரூபித்தல்; அவர், அக்கினிஸ்தம்பமாய், “இவருக்குச் செவிகொடுங்கள்,” என்று உலகிற்கு கூறி, நிரூபிக்கும்படியாக தன்னுடைய தூதனாகிய செய்தியாளரோடு தம்முடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். நாம் ஒரு வார்த்தையையும் சந்தேகிக்கக்கூடாது, ஏனென்றால் இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தை அல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. பின்னர் அவர் நம்மிடம் சொன்னார், முன்குறித்தலிலிருந்து நமக்கு பிரதிநிதித்துவம் உள்ளது என்று நமக்கு உறுதியளிக்கிறது. அவர் நம்மைக் காண்கிறதில்லை, இயேசுவின் இரத்தத்தின் மூலம் நம்முடைய சத்தத்தை மட்டுமே கேட்கிறார். நாம் அவருடைய பார்வையில் பரிபூரணமாயிருக்கிறோம்.
ஆழமானது முன்னெப்போதும் இல்லாதபடி ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது, பிதாவானவர் தம்முடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையால் நம்மை நிரப்பிக் கொண்டிருக்கிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு நமக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஜீவனுள்ள வார்த்தையின் செய்திக்கு முடிவே இல்லை. நாம் அவருடைய மணவாட்டி என்பதை அறிவதை விட பெரியது எதுவுமில்லை. அந்த சத்தத்தைக் கேட்பது, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது, கர்த்தருடைய பரிபூரண சித்தம் என்பதை அறிவதில் உள்ள உறுதியாகும்; அவருடைய திட்டத்தை அவர் அருளியுள்ளார்.
இன்னும் நிறைய இருக்கிறது! இது அவருடைய மணவாட்டிக்கான வற்றாத வார்த்தையான ஜீவத்தண்ணீராய் இருக்கிறது. நாம் நம்முடைய ஜீவியம் முழுவதும் ஒருபோதும் இதைப் போன்ற தாகமடைந்ததில்லை, ஆனால் நமக்கு வேண்டியளவு முழுமையாக பருக பருக நாம் ஒருபோதும் இந்தளவுக்கு புத்துணர்ச்சியடைந்ததில்லை.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பாகத்தினருடன் கூடி, அவர் அடுத்து என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க மிகவும் மணவாட்டி மிகவும் உற்சாகமடைகிறாள். நம்மால் இங்கே கூடாரத்திற்கு வர முடியாவிட்டால், எங்காவது ஏதாவது சபைக்குச் செல்லுங்கள்; அங்கு செல்லுங்கள் என்று எங்களிடம் சொன்னார்.
தீர்க்கதரிசி தம்முடைய தலைமையகமாக அமைத்திருக்கிற, அவருடைய சொந்த சபையில் நாம் அனைவரும் ஒன்று கூடி இருக்க முடியாது. ஆனால் நாம் நமது சபைகளை அல்லது நமது இல்லங்களை சபைகளாக மாற்றலாம், அங்கு அவரைப் பிரசங்க பீடத்தில் நிறுத்தலாம். அங்கே வெளிப்படுத்தப்பட்டிருந்த பரிபூரண வார்த்தையால் நாம் போஷிக்கப்பட முடியும்.
உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை விட பெரிய கூட்டமும் இல்லை, பெரிய அபிஷேகமும் இல்லை, பெரிய இடமும் எதுவுமில்லை.
அவர் மீண்டும் ஒருமுறை நம்மிடத்தில் அவருடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக பேசி, நம்முடைய இருதயங்களில் நாம் கொண்டுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து, நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம் என்று நமக்கு உறுதி அளிக்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தைக் கேட்க எங்களுடன் வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஞாயிறு செய்தி: கேள்விகளும் பதில்களும் #1 64-0823M
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டி-சபையே,
மனுஷகுமாரன் வந்து, தம்முடைய மணவாட்டிக்கு மாம்ச சரீரத்தில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அதைக் கூறியிருக்கிறார், நாம் அதை விசுவாசிக்கிறோம், அவர் அதை நிரூபித்துள்ளார். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பதனால் நம்மை ஆயத்தப்படுத்தியிருக்கிற அவருடைய மணவாட்டி-சபை நாமே.
மரித்தோரின் உயிர்த்தெழுதல் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். ஒரு ஆயிர வருட அரசாட்சி இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். ஒரு புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார், ஏனென்றால் அவருடைய வார்த்தை அவ்வாறு கூறினது.
நாமே அங்கே இருப்பவர்களாக இருப்போம். அவர் அதை நிரூபிப்பார். நாமே இந்த வார்த்தையின் பாகமாக்கப்பட்டிருக்கிறவர்கள். அங்கே இருக்கும்படி அவர் நம்மை முன்குறித்திருக்கிறார். அவருடைய முன்னறிவினால் ஒரு எடுத்துக்கொள்ளப்படுதல் இருக்கப் போகிறது, அதைத் தடுக்கப்போகிறது எதுவுமே இல்லை, நாம் அங்கே இருக்கப் போகிறோம்!
உரைக்கப்பட்ட ஒரு வார்த்தையை மட்டுமே ஜனங்களை சந்தேகப்பட வைக்க சாத்தான் நீண்ட காலமாக முயற்சித்துள்ளான். நீங்கள் அதை செய்யாதீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள். அங்கிருக்க ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தை அல்ல, இது பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாக்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் உள்ளது.
பிரதான ஆசாரியனா, பேராயரா, போப் ஆண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள குருவானவரா, மேய்ப்பரா? “தேவனே! “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலுமே.” அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எவ்விதம் அறிந்துகொள்வது? அவர் அவ்வண்ணமாய் கூறுகிறார், அதன் பிறகு அவர் அதை நிரூபிக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை நிரூபிக்கிறார்.
தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இது ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய வார்த்தை என்று அவர் நிரூபித்திருக்கிறார். வில்லியம் மரியன் பிரான்ஹாம் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்பதையும்; நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தம் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். செய்தியையும் செய்தியாளனையும் விசுவாசிக்காத யாவரும் அழிந்து போவார்கள்.
இப்பொழுது, நான் இந்த கூட்டத்தாரிடத்தில் மாத்திரம் இதைப் பேசிக் கொண்டிருக்கவில்லை. இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, நீங்கள் பாருங்கள், மேலும் இது உலகம் முழுவதும் செல்கிறது. உலகிலுள்ள ஜனங்களே, ஏவாள் ஒரு வார்த்தையை, ஒரு வார்த்தையை ஒரு வாக்கியத்தை அல்ல, ஒரு பத்தியை அல்ல, ஒரு வார்த்தையை, அவ்வளவுதான் அவிசுவாசித்தாள் என்பது உங்களுக்கு புரிகிறதா.
அவர் வார்த்தையாயிருக்கிறார், நாம் அவருடைய வார்த்தையின் பாகமாக இருந்தோம். அந்த காரணத்தால் தான் ஜீவியத்தில் நம்முடைய ஸ்தானத்தை உறுதிப்படுத்த, நாம் இங்கே இருக்கிறோம். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதற்கே. வார்த்தையுடன் தரித்திருக்கவே. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மணவாட்டியை சுட்டிக்காட்டவே.
நம்முடைய நாளில், மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் சபையை தலையினிடத்தில் இணைத்துள்ளார்; மணவாட்டியின் கலியாணத்தை ஒன்றிணைத்தார். மணவாளனின் அழைப்பு வந்துவிட்டது. இருவரையும் ஒன்றாக இணைக்க மனுஷகுமாரன் மானிட மாம்சத்தில் வந்திருக்கிறார். அவர் வார்த்தையாயிருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையாக இருக்கிறோம், இருவரும் ஒன்றாக இணைகிறார்கள்.
இதற்கு வெளிப்படுகிற மனுஷகுமாரனின் வெளிப்படுத்துதலே தேவைப்படும்…ஒரு குருவானவர் அல்ல…இயேசு கிறிஸ்து, நமக்கு மத்தியில் மாம்ச சரீரத்தில் இறங்கி வந்து, மணவாட்டியை, சபையையும் அவரையும் ஒன்றாக இணைக்கும்படியாக தம்முடைய வார்த்தையை மிகவும் தத்ரூபமாக்குவார், அதன் பின்னரே கல்யாண விருந்துக்கு பரலோக வீட்டிற்குச் செல்வாள். ஆமென்.
வார்த்தையின் வெளிப்படுத்துதலே மணவாட்டியை ஒன்றிணைக்கும். அது மீண்டும் மனுஷ குமாரனை வெளிப்படுத்துகிறது, சபை இறையியலாளர்களை அல்ல. மனுஷ குமாரனையே! வார்த்தையும் சபையும் ஒன்றாகிறது. மனுஷகுமாரன் செய்திருந்ததெல்லாம் வார்த்தையாய் இருந்தது. அவருடைய மணவாட்டியாகிய நாமும், அதேக் காரியத்தை செய்வோம்.
நாம் பரிசுத்த ஆவினால், அவருடைய வார்த்தையினால், அவருடைய சத்தத்தினால் ஒன்றிணைக்கப்பட்டு, கலியாண விருந்துக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். வார்த்தை நம்மை ஒன்றிணைத்திருக்கிறது, இரண்டும் ஒன்றாகிறது.
நாம் ஒலிநாடாக்கள், ஒலிநாடாக்கள், ஒலிநாடாக்கள் என்றே சொல்கிறோம். நீங்கள் உங்களுடைய வீடுகளில், உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும். ஒலிநாடாக்களை இயக்குவதின் பேரில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக நாம் விமர்சிக்கப்படுகிறோம். நாம் ஏன் அப்படிக் கூறுகிறோம்? ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது யார்?
இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், அவருக்கு பின்னால் இருந்த சாராளின் மனதிலிருந்த சிந்தனைகளைப் பகுத்தறிந்து, அங்கே ஆபிரகாமிடம் பேசிக் கொண்டிருந்தவர் இயேசுவல்ல. அது இயேசுவல்ல, அவர் அப்பொழுது பிறந்திருக்கவில்லை. அது மாம்ச சரீரத்தில் இருந்த ஒரு மனிதனாயிருந்தது. ஆபிரகாம் அவரை “ஏலோகிம், சர்வ வல்லமையுள்ளவர்” என்றழைத்தான்.
மனுஷகுமாரன் நம்முடைய நாளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும்; தேவன் மானிட உதடுகளினூடாக பேசுகிறார் என்றும் நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக அந்த சத்தத்தை வைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி எவரும் காணாதிருக்க முடியும்?
நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை காணாத மற்றும் விசுவாசிக்காத மற்றவர்களை நான் விமர்சித்துக் கொண்டிருக்கவில்லை; அவர்கள் நம்முடைய சகோதரரும் சகோதரிகளுமாய் இருக்கிறார்கள், ஆனால் நான் மிகவும் திருப்தியடைந்தவனாயும், மிகவும் நிறைந்தவனாயும், இது அவருடைய மணவாட்டிக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் இருக்கிறது என்று மிகவும் உறுதிப்படுத்தப்பட்டவனாகவும் இருக்கிறேன். என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. எனக்கும் என் வீட்டாருக்குமோவென்றால், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே ஒரே வழியாய் இருக்கிறது.
அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 64-0816 என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெஃபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் வந்து ஒன்றிணையுமாறு உலகத்தை மீண்டும் ஒருமுறை நான் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 24:24
பரி. மாற்கு 5:21-43 / 16:15
பரி. லூக்கா 17:30 / 24:49
பரி. யோவான் 1:1 / 5:19 / 14:12
ரோமர் 4:20-22
I தெசலோனிக்கேயர் 5:21
எபிரெயர் 4:12-16 / 6:4-6 /13:8
I இராஜாக்கள் 10:1-3
யோவேல் 2:28
ஏசாயா 9:6
மல்கியா 4
தொடர்புடைய சேவைகள்
அன்பான பூமியின் உப்பானவர்களே,
ஓ அன்புள்ள மணவாட்டியே, வார்த்தையின் பிரசன்னத்தில், முதிர்ச்சி யடைந்து, நாம் யாராக இருக்கிறோம் என்றும், நாம் எங்கிருந்து வந்தோம் என்றும், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் அடையாளங் கண்டு கொண்டு, ஒன்று கூடி உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டு, என்னே ஒரு நேரத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம்.
நாம் இப்பொழுது தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம் என்பதை, நம்முடைய இருதயங்களின் ஆழத்திலிருந்து, அறிந்து கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு இருப்போம் என்பதல்ல, நாம் இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம். நாம் தேவனுடைய சிந்தனையின் தன்மைகளாக இருக்கிறோம்.
சாத்தான் நம்மைத் தாக்கி, நம்முடைய தவறுகளையும், நம்முடைய கடந்த காலத்தையும், நம்முடைய அனுதின தோல்விகளையும் நமக்குக் காண்பிக்க முயற்சிக்கும்போது; அவன் தன்னுடைய பொய்களால் நம்முடைய மனதிலும் உள்ளத்திலும் நம்மை உடைக்க முயற்சிக்கும்போது, நாம் அவனுக்கு நினைவூட்டி, அவனிடம், "தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, என்னை முன்னதாகவேக் கண்டார்; அது உண்மை சாத்தானே, என்னை, அவர் என்னை மீட்கவே இயேசுவை அனுப்பினார்" என்று சொல்லுகிறோம். ஒரு அடியாயிற்றே!
“இப்போது சாத்தானே, என்னை விட்டுப் போ, ஏனென்றால் அவருடைய குமாரனின் இரத்தம் எனக்காகப் பேசுகிறது. என்னால் பாவம் செய்ய முடியாது. என்னுடைய தவறை, ஆம், என்னுடைய பல தவறுகளை, தேவனால் கூட பார்க்க முடியாது. அவர் கேட்கும் ஒரே காரியம் என்னுடைய சத்தம் அவரை ஆராதிப்பதையும் ஸ்தோத்தரிப்பதையும் மாத்திரமேயாகும், மேலும் அவர் காண்கிறதோ என்னுடைய பிரதிநிதித்துவம் என்ற ஒரே காரியத்தையேயாகும்.”
நம்முடைய பிரதிநிதித்துவம் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கிலிருந்து நம்மை ஒன்று கூட்டி, அவருடைய மணவாட்டிக்காக அவர் அருளியிருக்கிற வார்த்தையின் கீழ் நம்மை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே அவர் கனப்படுத்தும் ஒரே காரியமாய் இருக்கிறது, ஏனென்றால் இதுவே அவருடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.
அவர் நமக்கு அடுத்து என்ன சொல்லி வெளிப்படுத்தப்போகிறார்? அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பலமுறை பேசுவதையும், நம்முடைய புதிய வீடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் நம்மிடம் கூறுவதையும் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால் இந்த முறையோ அது பற்றி நாம் இதுவரை கேள்விப்படாதது போல் இருக்கப் போகிறது.
திவ்விய சிற்பாசாரி இதை அவருடைய அருமையானவர்களுக்காக வடிவமைத்திருக்கிறார். பார்த்தீர்களா? ஓ, திவ்விய ஜீவனுக்கு அதிபதியானவரும் திவ்விய சுபாவமும், திவ்விய சிற்பாசிரியருமானவர் திவ்விய தேவனால் திவ்வியமாக முன்குறிக்கப்பட்டிருக்கிற ஒரு திவ்விய தன்மைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிற இந்த ஒரு இடம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்! அந்த நகரம் பார்ப்பதற்கு எப்படியிருக்கும்! அதைக் குறித்து நினைத்துப் பாருங்கள்.
நாம் நம்முடைய சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய உற்சாகமும் எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசி, நாம் அவருடன் நித்தியம் முழுவதும் ஜீவிக்கும்படியாக அவர் இப்போது நம்முடைய புதிய வீட்டை உருவாக்கி வடிவமைத்து வருகிறார் என்பதை நமக்கு சொல்வதைக் கேட்க நம்முடைய இதயங்கள் துடிக்கின்றன.
முன்குறித்தல், பிரதிநிதித்துவம், காலம், எட்டாம் நாள், பரிசுத்த பர்வதம், கூர்நுனி கோபுரங்கள் மற்றும் பரிசுத்த சபைக் கூடுதலைக் குறித்த எல்லாவற்றையும் அவர் நமக்குச் சொல்லும்போது, நாம் வேறு என்ன கேட்போம், ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப்படும்?
இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து நம்முடைய சிந்தனைகளை நாம் மூடிட முடியுமா? நம்முடைய புதிய வீடு எப்படி இருக்கும் என்பதை குறித்து தேவன் நமக்கு சொல்லும்படியாக அவர் தம்முடைய மணவாட்டியை உலகம் முழுவதிலுமிருந்து கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவர் நமக்குச் சொல்லப் போகிறார். என்னே ஒரு மகிமையான நேரத்தை நாம் உடையவர்களாக இருப்போம்.
மறுபுறம், நம்முடைய யுத்தங்கள் ஒருபோதும் கடினமாக இருந்ததில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் சாத்தான் நம்மைத் தாக்குகிறான். அவனுடைய தாக்குதல்கள் ஒருபோதும் இலகுவாகவோ அல்லது விலகிப் போவதாகவோ தெரியவில்லை.
ஆனால் தேவனுக்கு மகிமை, அவருடைய வார்த்தையில் நம்முடைய விசுவாசம் இதற்குமேல் ஒருபோதும் உயர்ந்ததில்லை. நாம் அசைக்கப்பட முடியாதபடி, நாம் யார் என்பதை அறிவதில் உள்ள நம்முடைய விசுவாசம் நம்முடைய ஆத்துமாவில் ஆழமாக நங்கூரமிடப்பட்டுள்ளது.
நாம் பயப்பட ஒன்றுமில்லை; அதைக் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. பிதாவானவரே நம்மை குறித்த முழுப் பொறுப்பாயிருக்கிறார். அவர் நம்முடைய ஒவ்வொரு அடிச்சுவடுகளையும் வழிநடத்தி வழிகாட்டுகிறார். அவர் நம்மை அவருடைய உள்ளங்கையில் தாங்குகிறார். பொய்யுரைத்து ஏமாற்றும் சாத்தானுடைய முடிவு சமீபித்துவிட்டது, அவனும் அதை அறிந்திருக்கிறான். பயப்படுகிற ஒருவன் அவனே, அவன் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை மணவாட்டியிடம் தொடர்பு கொண்டிருப்பதையும், அவன் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுகிறதையும் அவன் அறிந்திருக்கிறான்.
நாம் வார்த்தையாயிருக்கிறோம். நாம் ஆதியிலிருந்து அவருக்குள் இருந்தோம். நாம் என்றோ ஒரு நாள் இருக்கப் போகிறோம் என்று அல்ல, நாம் இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம். நாம் வார்த்தையாக இருந்தால், நாம் விசுவாசித்தால் மாத்திரமே, அப்பொழுதே நாம் அந்த வார்த்தையை பேச முடியும்,...நாம் விசுவாசிக்கிறோமே.
நீங்கள் (வார்த்தைக்கு) ஒரு விசுவாசியாய் அல்லது நீங்கள் (வார்த்தை அல்ல) என்று சந்தேகப்படுபவராய் இருக்கிறீர்கள். ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கிற ஒரு தசைநாரும் நம்முடைய சரீரத்தில் இல்லை. அங்கு தான் காரியமே உள்ளது! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்பதை சாத்தானுக்கு நாம் நிரூபித்துவிட்டோம். நாம் பாதத்தின் அடிபாகத் தோலாயிருக்கலாம், ஆனால் நாம் இன்னமும் அந்த சரீரத்தின் பாகமாய் இருக்கிறோமே!!!
ஆகையால் அந்தப் பொய்யன் நம்மில் ஒருவருக்குப் பின் வரும்போது, மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றாகக் கூடி வந்து, நாம் அவனை வார்த்தையினால் அடிக்கிறோம், அவனை அடிக்கிறோம்.
நம்மில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டால், நாம் ஒன்றுபட்டு அவனை அடிக்கிறோமே! நம்மில் ஒருவர் திடனற்றுப்போகும் நிலையை அடைந்தால், நாம் அனைவரும் என்ன செய்கிறோம்? அவனை அடிக்கிறோமே!
மணவாட்டியே, நாம் பரம வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறோம். வேளையானது வந்துவிட்டது. மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். நாம் பேழைக்குள் இருக்கிறோம். அவர் வாசலை மூடிவிட்டபடியால், நாம் பாதுகாப்பாக உள்ளே இருக்கிறோம். மணவாளனுடன் இணைக்கப்பட மணவாட்டி நடைப் பிரகாரத்தில் நடந்து வருவதற்கான இசையை நம்மால் கேட்க முடிகிறது.
நாம் 1000 வருடங்களாக நம்முடைய தேனிலவில் இருப்போம், அதன்பிறகு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வருங்கால வீட்டிற்கு அவரோடு செல்வோம்.
நண்பர்களே, இதை தவறவிடாதீர்கள். ஒலிநாடாக்களே: தேவனால் அருளப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே வழியாக மாத்திரமே உள்ளது. இது அக்கினி ஸ்தம்பம் அவருடைய மணவாட்டியினிடத்தில் பேசிக்கொண்டும், வழிநடத்திக் கொண்டுமிருக்கிறதாயுமுள்ளது.
நீங்கள் என்ன செய்தாலும், இந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சத்தத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன்பாக வைக்கவும். விசுவாசம் கேட்பதன் மூலமும், வார்த்தையைக் கேட்பதன் மூலமும் வருகிறது, வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. ஒலிநாடாக்களின் மூலமாக தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற நம்முடைய நாளுக்கான தீர்க்கதரிசியே பரிசுத்த ஆவியாக இருக்கிறார்.
பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்பதைக் குறித்து எல்லாவற்றையும் தேவன் தம்முடைய வல்லமையான தூதன் மூலமாக பேசி நமக்கு சொல்லவிருக்கிற படியால், மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்றிணைக்கப்பட்டு, எல்லோரும் ஒரே நேரத்தில், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்புள்ள ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து பருகுபவர்களே,
கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள மிக முக்கியமான ஈஸ்டர் வார இறுதிக்குப் பிறகு மணவாட்டி ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டாள். நாம் அவரோடு உள்ளே அடைத்துக்கொண்டு, ஐக்கியங்கொண்டு, வார இறுதி முழுவதும் அவரை ஆராதித்தோம். அவருடைய பிரசன்னம் நம்முடைய வீடுகளையும் நம்முடைய சபைகளையும் நிரப்பியது.
நாம் இவ்வளவு மகத்தான எதிர்பார்ப்புகளில் இருந்தோம். இது நமக்கான தேவனுடைய சித்தமாயிருந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம். தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். நாம் உலகத்தையும் அதனுடைய எல்லா கவனச்சிதறல்களையும் மூடிவிட்டோம். நாம் உலகம் முழுவதிலுமிருந்து ஒருமனதாக ஒன்றுபட்டோம். நாம் உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்து கொண்டு, அவர் வழியில் நம்மோடு பேசும்படியாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தோம்.
நம்முடைய இருதயங்கள், “கர்த்தாவே, என்னை இன்னும் அதிகமாக உம்மைப் போலாக்கும். உம்முடைய அதி சீக்கிர வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்தும். எனக்கு அதிகமான வெளிப்பாட்டைத் தாரும். உம்முடைய பரிசுத்த ஆவியானது என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநார்களையும் நிரப்புவதாக,” என்று கதறிக்கொண்டிருந்தன.
ஒவ்வொரு ஆராதனையும் துவங்கும்போது, நாம் நமக்குள்ளே, “அது எப்படி இருக்கும்? என் வாழ்நாள் முழுவதும் இந்த செய்திகளை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் நான் அவைகளை முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது போல, இப்போது அவை அனைத்தும் புதிதாகத் தோன்றுகின்றன” என்று கூறிக்கொண்டோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் தம்முடைய வார்த்தையை நம் இருதயங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆழ்ந்த வெளிப்பாடு நம்முடைய இருதயங்களுக்குள்ளாக மீண்டும் வருகிறது...அது அவரே...அவர்தான். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்.
நான் அல்ல! அவரே! அந்த ஒருவர் அவரே! நான் சற்றுமுன் உங்களுக்குக் கூறினேன், அவர் என்னுடைய சரீரத்தை எடுத்துக் கொண்டார். அவர் என்னுடைய நாவை எடுத்துக்கொள்கிறார், என்னுடைய கண்களை எடுத்துக்கொள்கிறார், ஏனென்றால் நான் அதை அவரிடத்தில் சமர்ப்பிப்பேன் என்று அவர் அறிந்திருந்தார், எனவே அவர் வந்து, நான் அதைச் செய்யும்படிச் செய்தார். எனவே அது நானல்லவே! அது அவராயுள்ளதே! அங்கே உங்களோடிருப்பது நானல்ல, அங்கே உங்களோடிருப்பது அவராகும். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். ஓ, தேவனே, தேவனே; அதை விசுவாசியுங்கள். ஓ, ஜனங்களே; அவரை விசுவாசியுங்கள். அவரை விசுவாசியுங்கள். அவர் இங்கே இருக்கிறார்.
இன்றைக்கு நிமிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற தேவனுடைய சத்தமாக ஒலிநடாக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும்படியான வெளிப்பாட்டை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். அவைகள் அவருடைய வார்த்தைகள், அவருடைய சத்தம்…நித்திய ஜீவனின் வார்த்தைகளை அவர் நம்மிடத்தில் பேசுவதற்கு நாம் செவி கொடுக்கும்படியாக அவருடைய சத்தம் பதிவு செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது. அவைகள் அவருடைய மணவாட்டிக்கான அவருடைய அருளப்பட்ட வழியாயிருக்கின்றன.
இது புதிய, சுத்தமான, பொங்கி பொங்கி வழிகிற ஆர்ட்டீசியன் ஊற்றாயுள்ளது. நாம் எவ்வளவு அதிகமாகப் பருகினோமோ, அவ்வளவு அதிகமாக,, “இன்னும் அதிகமாக கர்த்தாவே, இன்னும் அதிகமாக. கர்த்தாவே என் பாத்திரத்தை நிரப்பும், கர்த்தாவே அதை நிரப்பும்” என்று கதறினோம். அவர் நிரப்பினாரே! நாம் அதிகமாக பருக, அவர் நமக்கு அதிகமாகவே தருகிறார்.
ஆகையால் சாத்தான் சுவிசேஷத்தின் வல்லமையால் தோற்கடிக்கப்பட்டான் என்று அறிவிக்கப்பட்டான். நமக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பரலோகத்தின் தேவனால் நியமிக்கப்பட்ட தம்முடைய தூதனை அனுப்பினார். வார்த்தையை எழுதின தேவனால் அனுப்பப்பட்ட அவருடைய தூதன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த அப்பொழுது இருந்தார். "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஜனங்களே வெளியே வாருங்கள்".
பிசாசு ஒவ்வொரு சுகவீனமான நபரையும், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிருந்தது. இப்போது தேவனுடைய வல்லமை நம்மை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பெலத்திற்கும் உயர்த்தியுள்ளது.
ஆகையால், நாம் நம்முடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து கூறினோம்:
“நான் இப்பொழுதே அந்த இயேசு கிறிஸ்துவை, உயிர்த்தெழுந்த தேவ குமாரனாக ஏற்றுக் கொள்கிறேன். அவர் என்னுடைய இரட்சகராயிருக்கிறார், அவர் என்னுடைய இராஜாவாக இருக்கிறார், அவர் என்னுடைய சுகமளிப்பவராக இருக்கிறார். நான் இப்பொழுதே குணமாக்கப்பட்டிருக்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எனக்காக மரித்த அவருக்காக நான் ஜீவிப்பேன். எனக்காக உயிர்த்தெழுந்த அவருக்காக என்னால் மிகச் சிறந்த முறையில்…பணியாற்றும்படி புறப்பட்டுப்போக புதிதான ஜீவனோடு இங்கிருந்து நான் எழும்புவேன். அல்லேலூயா!”
இது நாம் அனுதினமும் பருகுகிற ஆர்ட்டீசியன் தண்ணீராயுள்ளது. இது மாத்திரமே எல்லா நேரத்திலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிற பரலோகத்திலிருந்து நேரடியாக வரும் ஊற்றாகும். இது தனக்குத் தானே நிரப்பிக் கொள்கிறது. எப்போதும் புதியதாகவும் சுத்தமாகவும் இருக்கும். அது ஒருபோதும் தேக்கமடையாது. இது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிற ஜீவனுள்ள தண்ணீராய், எல்லா நேரத்திலும் மணவாட்டிக்கு புதியதான ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகிறது.
அது எப்போதுமே ஒரு பொங்கி வழிதலாய் இருந்து வருகிறது. நாம் அதை அடித்து மேலிழுக்கவோ, அதை சுற்றவோ, அதை முறுக்கவோ அல்லது இணைக்கவோ தேவையில்லை. இது தேவனுடைய ஊற்றின் ஜீவ தண்ணீராய் இருக்கிறது, வேறு எதையும் பருகுவதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.
இன்றைக்கு நாம், “எங்களுடைய தண்ணீர் நீங்கள் குடிக்கக்கூடிய மிகச் சிறந்த தண்ணீராயுள்ளது. நாங்கள் அதை எங்களுடைய 7 படிநிலையில் வடிகட்டும் செயல்முறை மூலம் பயன்படுத்தியுள்ளோம். அதன்பின்னர் நீரேற்றத்தில் உங்களுக்கு தேவைப்படுகிறது என்று நாங்கள் நினைக்கிற தண்ணீரில் நாங்கள் வடிகட்டிய அனைத்து தாதுக்களையும் மீண்டும் சேர்த்துள்ளோம்” என்பதை கேட்கிறோம்.
தேவனுக்கு மகிமை, நாம் எதைப் பருகிக் கொண்டிருக்கிறோம் அல்லது எதைச் சேர்த்திருக்கிறோம் அல்லது வடிகட்டியிருக்கிறோம் என்ற ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோத் தேவையில்லை. நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியமும் நம்முடைய தண்ணீரில் உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்த, அது பீறிட்டு வருகிறபோது பருக வேண்டும் என்பதேயாகும்.
இந்தத் தண்ணீரைப் பருகுவது என்னே ஒரு ஆறுதல். அதிலிருந்து பருகுவதற்கு நாம் அநேக மைல்கள் வெளியே செல்வோம், ஆனால் நாம் இதற்கு அவ்வாறு செல்ல வேண்டியதில்லை. நாம் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்கிறோம். நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், பணியில், நம்முடைய கார்களை ஓட்டும்போதும், ஒரு நடைபயிற்சியை செய்யும்போதுமே…நாம் பருகுகிறோம், நாம் பருகுகிறோம், நாம் பருகுகிறோம்.
ஓ உலகமே, தேவன் அருளியிருக்கிற ஊற்றிலிருந்து பருகு வாருங்கள். இந்த ஒரு இடம் மாத்திரமே, “நான் பருகக்கூடாத எந்த காரியத்தையும் நான் பருகாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் என்னை பாதுகாத்துக் கொள்வார் என்று நான் ஜெபிக்கிறேன்” என்று நீங்கள் கவலைப்பட்டுக் கூற வேண்டியிராததாயுள்ளது. இது முழுவதுமே பரலோக ஊற்றுகளிலிருந்து பாய்கிற சுத்தமான ரூபரகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாய் உள்ளது.
அவனுடைய மணவாட்டி பருகுவதற்கு வேறு இடமில்லையே!
வெடிப்புள்ள தொட்டிகள் 64-0726E என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடைய ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து எங்களுடன் பருக வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
சங்கீதம் 36:9
எரேமியா 2:12-13
பரி. யோவான் 3:16
வெளிப்படுத்தின விசேஷம் 13 வது அதிகாரம்