
அன்புள்ள வெண்வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்களே,
தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்கும் போது, நம்முடைய ஆத்துமாவில் ஏதோ காரியம் ஆழமாக சம்பவிக்கிறது. நம்முடைய முழு சரீரமும் மறுரூபமாக்கப்பட்டு நம்மை சுற்றியுள்ள உலகம் மறைந்து போவதாக தென்படுகிறது.
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும் தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும்போது, நம்முடைய இருதயங்களிலும், நம்முடைய சிந்தைகளிலும், நம்முடைய ஆத்துமாக்களிலும் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி ஒருவரால் வெளிப்படுத்த முடியும்?
நம்முடைய தீர்க்கதரிசியைப் போலவே, நாம் மூன்றாம் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக உணரும்போது, நம்முடைய ஆவி இந்த அழிவுள்ள சரீரத்தைவிட்டு வெளியேறுவது போல் தென்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தும்போது நாம் என்ன உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
யோவான் பத்மூ தீவில் வைக்கப்பட்டு, அவன் கண்டதை எழுதி வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், அதனால் அது காலங்களினூடாக செல்லும். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட 7-வது தூதனாகிய செய்தியாளனினூடாக நமக்கு அந்த ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் வரையில் அவைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர் யோவான் தனக்கு மேலே அதே சத்தத்தைக் கேட்டு மூன்றாம் வானத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அந்த சத்தம் அவனுக்கு சபைக் காலங்களையும், யூதர்களின் வருகையையும், வாதைகளின் ஊற்றப்படுதலையும், எடுத்துக்கொள்ளப்படுதலையும், மீண்டும் வருவதையும், ஆயிர வருட அரசாட்சியையும், அவருடைய இரட்சிக்கப்பட்ட நித்திய பரம இல்லத்தையும் காண்பித்தது. அவர் யோவானை அழைத்துச் சென்று, அவர் செய்வேன் என்று அவனுக்கு கூறினது போன்ற முழு காரியத்தின் ஒத்திகையையும் காண்பித்தார்.
ஆனால் யோவான் ஒத்திகையைக் கண்டபோது யார் அவனைப் பார்த்தது? இன்று வரை உண்மையாகவே யாருக்கும் தெரியாது.
வருகையில் அவன் கண்ட முதலாவது காரியம் மோசேயாக இருந்தது. அவன் உயிர்த்தெழுப்பப்படும் மரித்த பரிசுத்தவான்களை பிரதிநிதித்துவப்படுத்தினான்; ஆறு சபைக் காலங்கள் முழுவதிலும் நித்திரையடைந்திருந்தவர்கள்.
ஆனால் அங்கே மோசே மட்டும் நின்று கொண்டிருக்கவில்லை, ஆனால் எலியாவும் கூட அங்கே இருந்தான்.
நின்று கொண்டிருந்த எலியா யார்?
ஆனால் அங்கே எலியா; கடைசி நாளின் தூதன், தன்னுடைய குழுவினரோடு, மறுரூபமாக்கப்பட, எடுத்துக்கொள்ளப்படப் போகிறவர்களோடு இருந்தான்.
மகிமை...அல்லேலூயா…அங்கே நின்று கொண்டிருந்த யோவானைக் கண்டது யார்?
தேவனுடைய 7வது தூதனாகிய செய்தியாளன், வில்லியம் மரியன் பிரான்ஹாம், அவருடைய மறுரூபமாக்கப்பட, எடுத்துக் கொள்ளப்படவுள்ள குழுவாகிய…நம் ஒவ்வொருவரோடும் இருந்த அவரைத் தவிர வேறு யாருமில்லையே!!
எலியாவோ மறுரூபப்படுத்தப்படும் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினான். மோசே தான் முந்தினவன். எலியா அதன்பின் என்பது நினைவிருக்கட்டும். கடைசி நாளுக்குரிய தூதனாயிருக்கும்படி எலியா வைக்கப்பட்டிருந்தான், அவனோடும், அவனுடைய குழுவினரோடும் உயிர்த்தெழுதல்…பாருங்கள், எடுத்துக் கொள்ளப்படுதல் வரும் என்பதையே பொருட்படுத்திக் கூறிகிறேன். மோசே உயிர்த்தெழுதலை பெறும் கூட்டத்தையும், எலியா மறுரூபப்படுத்தப்படும் குழுவினரையும் கொண்டு வருகிறார்கள். அங்கே, அவர்கள் இருவருமே அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
திரைநீக்கப்படுதலையும், வெளிப்படுத்துதலையும், வெளிப்பாட்டையும் குறித்துப் பேசுகிறோம்.
இங்கே அது இருக்கிறது! நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரை இப்பொழுதே நம்மிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். நீங்கள்…அவர் உங்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டும் போதித்துக் கொண்டும், எது சரியானது எது தவறானது என்றும் நீங்கள் கண்டுக் கொள்ளச் செய்ய முயன்று கொண்டும் இருக்கிறார். அது பரிசுத்த ஆவியானவர் தாமே மானிட உதடுகள் மூலம் பேசிக் கொண்டும், மனித இனத்தின் நடுவில் கிரியை செய்து கொண்டும், இரக்கத்தையும் கிருபையையும் காண்பிக்க முயன்று கொண்டும் இருக்கிறார்.
ஜீவ அப்பத்தைப் புசிப்பதற்காக பூமி முழுவதிலுமிருந்து வருகிறதாக அவருடைய தூதன் கண்ட வெண் வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்கள் நாமே. நாம் அவருடன் நிச்சயிக்கப்பட்டு, விவாகம் செய்து கொண்டு, அவருடைய நிச்சயதார்த்த முத்தத்தை நம்முடைய இருதயத்தில் உணர்ந்துள்ளோம். நாம் தாமே அவருக்கு, அவருடைய சத்தத்திற்கு மாத்திரமே உறுதிமொழியளித்தோம். நாம் நம்மை வேறெந்த சத்தத்தோடும் தீட்டுப்படுத்திக் கொண்டதில்லை, தீட்டுப்படுத்தவும் மாட்டோம்.
தேவனுடைய பிரசனத்திற்குள்ளாக; யோவான் சென்றது போல மணவாட்டி மேலே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சபையில் எடுத்துக் கொள்ளப்படுதலில் நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். அது நம்முடைய ஆத்துமாவை எப்படி சுற்றி வளைக்கிறது!
அடுத்து அவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
நியாயத்தீர்ப்புகள்; பதுமராகக் கல், அது எதைக் குறிக்கிறது; அது என்ன பங்கு வகித்தது. வச்சிரக் கல், மற்றும் எல்லா வெவ்வேறு கற்களுமே. அவர் இவை அனைத்தையும் எசேக்கியேல் மூலம் எடுத்துச் சென்று, மீண்டும் ஆதியாகமத்திற்கு வந்து, மீண்டும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வந்து, வேதாகமத்தின் மையத்திற்கு வந்து, அதை ஒன்றாக இணைப்பார்; இந்த எல்லா வெவ்வேறு கற்களையும், நிறங்களையுமே.
அதே பரிசுத்த ஆவியானவர், அதே தேவன், அதே அடையாளங்களை, அதே அற்புதங்களைக் காட்டுகிறார், அவர் வாக்குறுதியளித்தபடியே அதே காரியத்தை செய்கிறார். இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி அவருடைய சத்தத்தை கேட்பதன் மூலம் தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொள்கிறதாயிருக்கிறது.
காலங்களினூடாக மறைக்கப்பட்டிருந்த ரகசியங்களை வெளிப்படுத்த, இந்த கடைசி காலத்திற்கு தேவனுடைய செய்தியாளனாகிய எலியா பேசுவதை கேட்க, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 12:00 மணிக்கு நாங்கள் உன்னதங்களில் வீற்றிருக்கப் போகிறபடியால் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 60-1231 வெளிப்படுத்தின விசேஷம், அதிகாரம் நான்கு பாகம் I
● போட்டி 62-1231: என்ற செய்தியே செவ்வாய் இரவு, நம்முடைய புத்தாண்டினுடைய செய்தி என்பதை நினைவில் கொள்ளவும். புத்தாண்டைத் தொடங்க இதைவிட சிறந்த வழி இல்லை.