
அன்புள்ள புத்திரசுவிகாரமாக்கப்பட்டவர்களே,
பரிசுத்த ஆவியானவர் மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரகாசிக்கச் செய்து கொண்டிருப்பதால் என்ன ஒரு அற்புதமான குளிர்காலம் நமக்கு இருக்கிறது. நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் கேள்விப்பட்ட, படித்த மற்றும் ஆய்ந்த காரியங்கள் இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் திரைநீக்கப்பட்டு வெளிப்பட்டு வருகின்றன.
இந்த நாளுக்காகவே மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறான். அவர்கள் அனைவரும் நாம் காணும் மற்றும் கேட்கும் காரியங்களைக் கேட்கவும் பார்க்கவும் ஆவலுடன் ஜெபித்தனர். பண்டைய தீர்க்கதரிசிகள் கூட இந்த நாளுக்காக ஏங்கினார்கள். கர்த்தரின் நிறைவையும் வருகையையும் அவர்கள் எப்படியாய் காண விரும்பினார்கள்.
இயேசுவின் சீஷர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மனிதர்கள் கூட, அவருடன் நடந்து பேசி, மறைக்கப்பட்டிருந்த எல்லாவற்றையும் பார்க்கவும் கேட்கவும் விரும்பினர். இது அவர்களுடைய நாளில், அவர்களுடைய காலத்தில் வெளிப்படுத்தப்பட்டு வெளிப்படும் என்று அவர்கள் ஜெபித்தனர்.
ஏழு சபைக் காலங்கள் முழுவதும், ஒவ்வொரு செய்தியாளரும், பவுல், மார்ட்டின் மற்றும் லூத்தர் ஆகியோர் மறைக்கப்பட்டிருந்த அனைத்து இரகசியங்களையும் அறிய விரும்பினர். வார்த்தையின் நிறைவேற்றம் அவர்களுடைய வாழ்நாளில் நடைபெறுவதைக் காண வேண்டும் என்பதே அவர்களின் வாஞ்சையாயிருந்தது. அவர்கள் கர்த்தருடைய வருகையைக் காண விரும்பினார்கள்.
தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. தேவனுக்கு ஒரு நேரம் இருந்தது. தேவன் ஒரு ஜனத்தை உடையவராயிருந்து, அவர் நம்…பேரில் காத்துக் கொண்டிருந்தார். காலங்களினூடாக, யாவரும் தவறிப் போயிருந்தனர். ஆனால் அவருடைய முன்னறிவினால், ஒரு ஜனம் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்: அவருடைய மகிமையான, பரிபூரண வார்த்தை மணவாட்டி. அவர்கள் அவரைக் கைவிடமாட்டார்கள். அவர்கள் ஒரு வார்த்தையையும் கூட சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் அவருடைய தூய கன்னிகை வார்த்தை மணவாட்டியாக இருப்பார்கள்.
இப்பொழுதே நேரம். இப்பொழுதே காலம். ஆதாம் வீழ்ந்து அவனது உரிமையை இழந்ததிலிருந்து அவர் காத்திருந்து தெரிந்து கொண்டவர்கள் நாமே. நாம் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம்.
நடக்கவிருந்த எல்லாவற்றின் முன்னோட்டத்தையும் தேவன் யோவானுக்குக் காண்பித்தார், ஆனால் அவனுக்கு எல்லா அர்த்தங்களும் தெரியாது. அவன் மேலே அழைக்கப்பட்டபோது, உள்ளும் புறமும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்தில் கண்டான், ஆனால் அந்தப் புத்தகத்தைத் திறக்கப் பத்திரவானாக யாரும் இல்லை.
எல்லாமே இழக்கப்பட்டிருந்த காரணத்தால் யோவான் மனங்கசந்து கூச்சலிட்டு அழுதான், நம்பிக்கையே இல்லாதிருந்தது. ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், மூப்பர்களில் ஒருவன் அவனிடத்தில், “அழவேண்டாம், இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்றான்.
அதுவே நேரமாயிருந்தது. அதுவே காலமாயிருந்தது. அந்த மனிதன் கண்ட எல்லாவற்றையும் எழுதும்படி தேவன் தெரிந்து கொண்டவனாய் அவன் இருந்தான். ஆனால் இன்னமும், அதனுடைய முழு அர்த்தமும் தெரியவில்லை.
தேவனோ காத்துக்கொண்டிருந்தார், அவருடைய மணவாட்டிக்கு அவருடைய சத்தமாய் இருக்கும்படி அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரமான ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தை அவர் உபயோகிக்கும்படியா அவன் பூமிக்கு வருவதற்காகவே காத்துக் கொண்டிருந்தார். எந்த தவறான புரிந்துகொள்ளுதலும் இல்லாதபடிக்கு அவர் உதட்டிலிருந்து செவிக்கு பேச விரும்பினார். அவர் தாமே பேசி தம்முடைய எல்லா இரகசியங்களையும் தம்முடைய அன்பான, முன்குறிக்கப்பட்ட, பரிபூரண இனிய இருதயமான மணவாட்டியாகிய…நமக்கு வெளிப்படுத்த விரும்பினார்!!
இந்த அற்புதமான காரியங்களையெல்லாம் நமக்குச் சொல்ல அவர் எவ்வளவு வாஞ்சித்துள்ளார். எப்படி ஒரு மனிதன் தன்னுடைய மனைவியிடம் அவளை நேசிப்பதாக திரும்ப திரும்ப சொல்லும்போது, அவள் அதைக் கேட்டு ஒருபோதும் சலிப்படைவதில்லையோ, அவ்வாறே அவர் நம்மை நேசிக்கிறார் என்றும், நம்மை தெரிந்து கொண்டார் என்றும், நமக்காக காத்திருந்தார் என்றும், நமக்காகவே இப்பொழுது வரவிருக்கிறார் என்றும், அவர் நம்மிடத்தில் திரும்ப திரும்ப சொல்ல விரும்புகிறார்.
அவர் தன்னுடைய சத்தத்தை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்றும், இதனால் தம்முடைய மணவாட்டி நாள் முழுக்க, ஒவ்வொரு நாளும் இயங்க பொத்தானை அழுத்தி கேட்க முடியும் என்றும், அவர்களுடைய இருதயங்களை அவருடைய வார்த்தை நிரப்புவதைக் கேட்க முடியும் என்பதையும் திரும்பத் திரும்ப அவர் கூறுவதை கேட்பதை நாம் எவ்வளவாய் விரும்புகிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவருடைய வார்த்தையின் பேரில் போஷிக்கப்படுவதனால் அவருடைய அன்பான மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறாள். நாம் அவருடைய சத்தத்தை தவிர, வேறு எதையும் கேட்க மாட்டோம். அருளப்பட்டிருக்கிற அவருடைய தூய வார்த்தையை மாத்திரமே நம்மால் உட்கொள்ள முடியும்.
நாம் மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் இருக்கிறோம். நாம் அதை நம்முடைய ஆத்மாக்களுக்குள்ளே உணர்கிறோம். அவர் வருகிறார். விவாக இசையானது இசைக்கப்படுகிறதை நாம் கேட்கிறோம். மணவாட்டி நடைப்பிரகாரத்தின் இடையில் நடக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறாள். எல்லோரும் நிற்க, மணவாட்டி அவளுடைய மணவாளனோடு வரவிருக்கிறாள். எல்லாமே ஆயத்தமாக்கப்பட்டுள்ளன. அந்த தருணமும் வந்துவிட்டது.
அவர் யாரையுமே நம்மைப் போல் நேசிக்கிறதில்லை. நாம் வேறு எதையும் அவரைப் போல் நேசிப்பதில்லை. நாம் அவருடனும், நாம் நேசிக்கிற அனைவருடனும், நித்தியத்தினூடாக ஒன்றாக இருக்கப் போகிறோம்.
வெளிப்படுத்தின விசேஷம், ஐந்தாம் அதிகாரம் பாகம் 1 61-0611 என்ற செய்தியை தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, கலியாணத்திற்க்காக எங்களோடு உங்களைத்தாமே ஆயத்தம் செய்து கொள்ள வரும்படிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்