ஞாயிறு
26 ஜனவரி 2025
61-0618
வெளிப்படுத்தின விசேஷம், ஐந்தாம் அதிகாரம் பாகம் II

அன்புள்ள இளைப்பாறுகிறவர்களே,

இது உண்மையிலேயே நம் ஜீவியத்தின் சிறந்த குளிர்காலம். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்; கிறிஸ்து மரித்த அனைத்தும் நமக்குச் சொந்தமானது என்ற தேவனுடைய அங்கீகார முத்திரையும் உள்ளது.

நாம் இப்பொழுது நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமான, பரிசுத்த ஆவியை பெற்றுள்ளோம். அது நாம் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்ற உறுதியாயும் முன்பணமாயும் உள்ளது. நாம் தேவனுடைய வாக்குதத்தில் இளைப்பாறிக் கொண்டும், அவருடைய சூரிய வெளிச்சத்தின் உஷ்ணத்தில் இருந்துகொண்டும், அவருடைய ரூபுகாரப்படுத்தப்பட்ட வார்த்தையையும் அவருடைய சத்தத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரமாய் இருக்கிறது. நாம் அங்கு செல்கிறோமா இல்லையா என்று நாம் கவலைப்படவில்லை, நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! அது நமக்கு எப்படித் தெரியும்? தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்! தேவன் அதை வாக்களித்தார், நாம் அந்த அச்சாரத்தைப் பெற்றுள்ளோம். நாம் அதைப் பெற்றுள்ளோம், கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டார்.

அதிலிருந்து விலகிப்போக வழியே இல்லை...உண்மையில், நாம் அங்கிருக்கிறோம்! நாம் செய்ய வேண்டியது எல்லாம் காத்திருக்க வேண்டியதுதான்; அவர் இப்பொழுது இங்கே இனத்தான் மீட்பரின் பணியை செய்து கொண்டிருக்கிறார். நாம் இப்பொழுது அதற்கான அச்சாரத்தைப் பெற்றிருக்கிறோம். அவர் நமக்காக திரும்ப வரப்போகிறதான அந்த நேரத்துக்காகவே நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே நாம் யாவரும் கல்யாண விருந்துக்கு சென்றுவிடுவோம்.

நமக்கு முன்னால் இருக்கும் அனைத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்முடைய சிந்தையினால் அனைத்தையும் கிரகித்துக்கொள்ள முடியாது. நாளுக்கு நாள் அவர் தம்முடைய வார்த்தையை அதிகமாக வெளிப்படுத்தி, இந்த மகத்தான வாக்குத்தத்தங்கள் நமக்குச் சொந்தமானவை என்று உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்.

உலகம் விழுந்து போய்க் கொண்டிருக்கிறது; அக்கினிகள், பூமியதிர்ச்சிகள் மற்றும் எங்கும் குழப்பம், ஆனாலும் உலகத்தை காப்பாற்ற ஒரு புதிய மீட்பன் அவர்களுக்கு உண்டு என்றும், அவர்களுடைய பொற்காலத்தை கொண்டு வருவான் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாமோ ஏற்கனவே நம்முடைய இரட்சகரைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய பொற்காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

இப்போது நாம் வெளிப்படுத்துதலின் 5-வது அத்தியாயத்திற்குள் நுழையும்போது இன்னும் கூடுதலான வெளிப்பாட்டிற்கு அவர் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஏழு முத்திரைகள் திறப்பதற்கு இங்கே ஒரு காட்சியை அமைத்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளிப்படுத்தின விசேஷம் 1 வது அத்தியாயத்தில் செய்தது போலவே, ஏழு சபை காலங்களுக்கான வழியைத் திறந்தார்.

மணவாட்டிக்கான மீதமுள்ள குளிர்காலம் எப்படி இருக்கும்? நாம் ஒரு சிறிய முன்னோட்டத்தைப் பார்ப்போமாக:

இப்பொழுது, எனக்கு நேரமில்லை. இங்கே அதைப்பற்றிய பின்னணியான விவரக்குறிப்பை நான் எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் நம்முடைய அடுத்த கூட்டத்தில் நாம் இதற்குள் செல்வதற்கு முன்… நான் எனது விடுமுறை நாட்கள் முடிந்து இங்கே திரும்ப வரும்போதோ அல்லது பிறிதொரு சமயத்திலோ ஒரு வேளை நான் இந்த தானியேலின் எழுபது வாரங்கள்’ பற்றி எடுத்துக்கொண்டு இங்கே இதனோடே அதை இணைத்து, பெந்தெகொஸ்தே யூபிலிக்கு அது எங்கே எடுத்துச் செல்லுகிறது என்பதை காண்பித்து, பிறகு இந்த ஏழு வாதை-… அந்த ஏழு முத்திரைகள் இடமாக திரும்ப வந்து, நாம் போய்விடுவதற்கு முன்பாக அவற்றைத் திறந்து, அது முடிவு நேரத்தில் இருப்பதைக் காண்பிக்கலாம், இந்த…

கர்த்தர் தம்முடைய மணவாட்டிக்காக எவ்வளவு அற்புதமான நேரத்தை வைத்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துதல். நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நம்மை உற்சாகப்படுத்த அவர் வருகிறார். அவருடைய சத்தத்தோடும் அவருடைய வார்த்தையோடும் தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்லுகிறார்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு காரியமும் இல்லை, அப்படியே இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்! இனி பாடுபடுதல் இல்லை, இனி கலக்கம் இல்லை, நாம் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!

61-0618-”வெளிப்படுத்தின விசேஷம் ஐந்தாம் அதிகாரம் பாகம் #II என்ற செய்தியை தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போகிறதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து இளைப்பாறுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்