காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 21 டிசம்பர், 2024

அன்புள்ள திருமதி. இயேசுவே,

ஓ தேவாட்டுக் குட்டியே, நீர் உலகத்திற்கு தேவனுடைய மகத்தான சுற்றப்பட்ட வெகுமதியாய் இருக்கிறீர். எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியாக உம்மையே நீர் எங்களுக்கு அளித்திருக்கிறீர். நீ முதல் நட்சத்திரத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் பூமியை, சந்திரனை, சூரிய குடும்பத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் எங்களை அறிந்து, உம்முடைய மணவாட்டியாக இருக்கும்படி எங்களை தெரிந்து கொண்டீர்.

நீர் எங்களை அப்பொழுது கண்டபோது, நீர் எங்களை நேசித்தீர். நாங்கள் உம்முடைய மாம்சத்தின் மாம்சமும், உம்முடைய எலும்பின் எலும்புமாயிருந்தோம்; நாங்கள் உம்முடைய ஒரு பாகமாக இருந்தோம். நீர் எப்படியாய் எங்களை நேசித்து, எங்களோடு ஐக்கியம் கொள்ள விரும்பினீர். நீர் உம்முடைய நித்திய ஜீவனை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினீர். நாங்கள் உம்முடைய திருமதி. இயேசுவாய் இருப்போம் என்பதை அப்பொழுதே நாங்கள் அறிந்து கொண்டோம்.

நாங்கள் தவறிப் போவோம் என்பதை நீர் கண்டீர், எனவே எங்களை திரும்பவும் மீட்டெடுக்க ஒரு வழியை நீர் அளிக்க வேண்டியதாயிருந்தது. நாங்கள் இழக்கப்பட்டு நம்பிக்கையற்றவர்களாக இருந்தோம். ஒரே ஒரு வழி இருந்தது, நீர் ஒரு “புது சிருஷ்டியாக” வேண்டியதாயிருந்தது. தேவனும் மனிதனும் ஒன்றாக மாறவேண்டியதாயிருந்தது. நாங்கள் உம்மைப் போலாகும்படிக்கு நீர் எங்களைப் போலாக வேண்டியதாய் இருந்தது. இவ்வாறு, நீர் ஏதேன் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உம்முடைய பெரிய திட்டத்தை செயல்படுத்தினீர். உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியான எங்களுடன் இருக்க நீர் மிகவும் வாஞ்சித்தீர், ஆனால் ஆதியிலே இழக்கப்பட்டிருந்த யாவற்றையும் நீர் எங்களுக்கு மீண்டும் திரும்பளிக்க வேண்டியதாய் இருந்தது என்பதை முதலில் நீர் அறிந்திருந்தீர். நீர் உம்முடைய திட்டத்தை முடிக்க இந்நாள் வரை காத்துக் கொண்டேயிருந்தீர்.

அந்த நாளானது வந்துவிட்டது. நீர் ஆதியில் கண்ட அந்த சிறிய குழு இங்கே உள்ளது. எல்லாவற்றைக் காட்டிலும் உம்மையும் உம்முடைய வார்த்தையையும் உம்முடைய இனிய இருதயம் நேசிக்கிறாள்.

நீர் ஆபிரகாமுடன் செய்தது போல, நீர் ஒரு புது சிருஷ்டியானபோது செய்தது போல, இது நீர் மானிட மாம்சத்தில் வந்து உம்மையே வெளிப்படுத்த வேண்டிய நேரமாயிருந்தது. உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த உம்முடைய மகத்தான எல்லா இரகசியங்களையும் நீர் எங்களுக்கு வெளிப்படுத்தும்படியாக இந்த நாளுக்காக நீர் எவ்வளவாய் வாஞ்சித்திருந்தீர்.

நீர் உம்முடைய மணவாட்டியைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறீர். நீர் எப்படி அவளைக் காண்பித்து சாத்தானிடம், “நீ அவர்களுக்கு என்ன செய்ய முயற்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் அசைய மாட்டார்கள்; அவர்கள் என் வார்த்தை, என்னுடைய சத்தத்தின் பேரில் சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் என்னுடைய பரிபூரண வார்த்தை மணவாட்டி” என்று சொல்ல விரும்புகிறீர். அவர்கள் எனக்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாகவும் என்னுடைய வார்த்தைக்கு உண்மையாய் தரித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு நித்திய வெகுமதியை கொடுப்பேன். எனக்கு இருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுக்கிறேன். நாங்கள் ஒன்றாக இருப்போம்.

நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம், “இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை எங்களுடைய வீட்டுக்குள் வரவேற்போமாக. நாங்கள் உமக்கு எண்ணெய் பூசி, உம்முடைய பாதங்களை எங்களுடைய கண்ணீரால் கழுவி, அவைகளை முத்தம் செய்வோம். நாங்கள் எப்படியாய் உம்மை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உமக்கு சொல்வோமாக.”

எங்களுக்கு இருக்கிற எல்லாவற்றையும், நாங்கள் இயேசுவே உமக்கு அளிக்கிறோம். அதுவே உமக்கு எங்களுடைய வெகுமதியாய் உள்ளது. நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை போற்றுகிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசுவை உங்களுடைய வீட்டில், உங்களுடைய சபையில், உங்களுடைய காரில், நீங்கள் எங்கே இருந்தாலும், மனிதனுக்கு எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியான: தேவன் தாமே பேசி உங்களோடு ஐக்கியங்கொள்ளுகிறதை பெற்றுக் கொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

60-1225 தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி

 

 

திங்கள், 16 டிசம்பர், 2024

அன்புள்ள மணவாட்டியே,

இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திற்கு முந்தைய மாலை மீண்டும் ஒரு சிறப்பு செய்தியும், இராப்போஜன ஆராதனையும் நடத்த வேண்டும் என்று கர்த்தர் என் இருதயத்தில் வைத்துள்ளார். நண்பர்களே, புத்தாண்டின் தொடக்கத்தில் தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, கர்த்தருடைய இராப்போஜனத்தில் கலந்துகொண்டு, அவருடைய சேவைக்காக நம்முடைய ஜீவியங்களை மீண்டும் அர்ப்பணிப்பதை விட என்ன பெரிய காரியத்தை நாம் செய்ய முடியும். உலகத்தை ஒதுக்கிவிட்டு, இந்த விசேஷமான வார்த்தையில் மணவாட்டியுடன் ஒன்றுபடுவது என்னே ஒரு புனிதமான நேரமாக இருக்கும், “கர்த்தாவே, நாங்கள் ஆண்டு முழுவதும் செய்த எல்லா தவறுகளையும் எங்களுக்கு மன்னியும்; இப்போது நாங்கள் உம்மை அணுகி கொண்டிருக்கிறோம், இந்த வரவிருக்கும் ஆண்டில் நீர் எங்கள் கையைப் பிடித்து எங்களுக்கு வழிகாட்டுவீரா என்று கேட்கிறோம். நாங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு உமக்கு சேவை செய்வோமாக, அது உமது தெய்வீக சித்தத்தில் இருந்தால், அது மகத்தான எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறவிருக்கும் ஆண்டாக இருப்பதாக. கர்த்தாவே, நித்தியத்தினூடாக உம்மோடு ஜிவிக்க நாங்கள் பரமவீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்” என்று நாம் நம்முடைய இருதயத்திலிருந்து சொல்கிறோம். இந்த விசேஷமான மறு பிரதிஷ்டை சேவைக்காக அவருடைய சிங்காசனத்தை சுற்றிக் கூடிவர நான் காத்திருக்க முடியவில்லை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

ஜெபர்சன்வில் பகுதியில் உள்ள விசுவாசிகளுக்கு, எங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில் இரவு 7:00 மணிக்கு ஒலிநாடாவை இயக்கத் தொடங்க விரும்புகிறேன். நாங்கள் முன்பு செய்தது போல், முழுமையான செய்தியும், இராஜபோஜன ஆராதனையும் அந்த நேரத்தில் வாய்ஸ் ரேடியோவில் இருக்கும். டிசம்பர் 18, புதன்கிழமை அன்று மதியம் 1:00 முதல் 5:00 மணி வரை, நீங்கள் YFYC கட்டிடத்தில் எடுத்துச் செல்வதற்காக எங்களிடம் இராப்போஜன திராட்சை ரசப் பொதிகள் கிடைக்கும்.

ஜெபர்சன்வில் பகுதிக்கு வெளியே வசிக்கும் நீங்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த சிறப்பு ஆராதனையை வைத்துக் கொள்ளுங்கள். செய்தியையும், இராப்போஜன ஆராதனையையும் விரைவில் பதிவிறக்கக்கூடிய இணைப்பு நமக்கு கொடுக்கப்படும்.

நாங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை நெருங்குகையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஒரு அற்புதமான மற்றும் பாதுகாப்பான விடுமுறை காலமும், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் சந்தோஷத்தால் நிரப்பப்பட்ட, ஒரு மகிழ்வார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்... வார்த்தை.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

சகோதரன் ஜோசப்

 

 

சனி, 14 டிசம்பர், 2024

அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,

நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 60-1218 விளங்காத சத்தம் என்ற செய்தியைக் கேட்போமாக.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 7 டிசம்பர், 2024

அன்பான தெரிந்து கொள்ளப் பட்டவர்களே,

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

ஊழியக்காரர்களே, தாமதமாகும் முன் தேவனுடைய தூதனுக்கு உங்கள் வாசல்களைத் திறவுங்கள். ஒலிநாடாக்களை இயக்குவதன் மூலம் தேவனுடைய சத்தத்தை உங்களுடைய பிரசங்க பீடங்களில் மீண்டும் கொண்டு வாருங்கள். இது பிழையற்ற வார்த்தைகளுடன் நம்முடைய நாளுக்கான ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தமாயுள்ளது. இது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடுள்ள சத்தமாயுள்ளது. இது மாத்திரமே மணவாட்டி யாவரும் ஆமென் என்று சொல்லக்கூடிய சத்தமாயுள்ளது.

இது எல்லா காலத்திலும் மிக மகத்தான காலம. தம்முடைய கிருபையின் நாட்கள் முடிவடையும் போது இயேசு தம்மைப் பற்றிய விளக்கத்தை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார். நேரமானது முடிவுக்கு வந்துவிட்டது. இந்த கடைசி காலத்தில் அவர் தம்முடைய குணாதிசயங்களை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் தம்முடைய சொந்த மகிமையான உன்னத தெய்வீக தன்மையை பற்றிய ஒரு இறுதிப் பார்வையை நமக்கு அளித்துள்ளார். இந்தக் காலம் அவரைக் குறித்த தலைக்கல் வெளிப்பாடாயுள்ளது.

தேவன் இந்த லவோதிக்கேயா காலத்தில் வந்து மானிட மாம்சத்தின் மூலமாகப் பேசினார். அவருடைய வார்த்தை மணவாட்டியை வழிநடத்தவும் பரிபூரணப்படுத்தவும் அவருடைய சத்தம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. அவருடைய சொந்த சத்தத்தைத் தவிர, அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்தக் கூடிய வேறு சத்தம் எதுவும் இல்லை.

இந்த கடைசி காலத்தில், ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய சத்தம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது; சபைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் ஒலிநாடாக்களை இயக்கமாட்டார்கள். எனவே தேவன், “நான் உங்கள் அனைவருக்கும் எதிராகப் போகிறேன். நான் உங்களை என் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடுவேன். இதுவே முடிவு” என்று கூறுகிறார்.

“ஏனென்றால் இந்த ஏழு சபை காலங்களிலுமே, மனிதர்கள் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடைய வார்த்தைக்கே மதிப்பு கொடுக்கிறதைத் தவிர, வேறொன்றையுமே நான் காணாதிருக்கிறேன். ஆகையால் நான் இந்த முடிவு காலத்திலே உங்களை என்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இது முடிவு பெற்றாயிற்று. நான் உங்களிடத்தில் சரியாக பேசப் போகிறேன். ஆம், நான் இங்கே சபையின் மத்தியில் இருக்கிறேன். உண்மையும், சத்தியமும், ஆமெனின் தேவனானவர் தம்மை வெளிப்படுத்துவார். அது என்னுடைய தீர்க்கதரிசி மூலமாய் இருக்கும்" என்கிறார்.

முன்பு இருந்ததைப் போலவே, ஆகாபின் நாட்களில் தங்களுடைய மூதாதையர்கள் செய்ததைப் போன்ற முறைமைக்கே அவர்களும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நானூறு பேராயிருந்தனர், அவர்கள் அனைவரும் கருத்தொற்றுமையில் இருந்தனர்; அவர்கள் அனைவரும் ஒரே காரியத்தையே கூறி, மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் ஒரு தீர்க்கதரிசி, சரியாக ஒருவரே சரியானவராயிருந்தார், மற்ற அனைவரும் தவறாயிருந்தனர், ஏனென்றால் தேவன் ஒருவரிடம் மட்டுமே வெளிப்பாட்டை ஒப்படைத்திருந்தார்.

இது எல்லா ஊழியங்களும் பொய்யாயுள்ளன என்றும், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறவில்லை. ஊழியத்திற்கான ஒரு அழைப்போடுள்ள ஒரு மனிதனால் பிரசங்கிக்கவோ அல்லது கற்பிக்கவோ முடியாது என்று நான் கூறவில்லை. நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக இருக்கிறபடியால், மணவாட்டிக்கு தேவனுடைய சத்தத்தை, ஒலிநாடாக்களை இயக்குவதே உண்மையான ஐந்து வகையான ஊழியம் என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன். ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் மாத்திரமே கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே சத்தமாக உள்ளது.

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனென்றால் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

நிச்சயமாகவே இன்றைக்கான சரியான வழியை நீங்கள் எப்படி அறிவீர்கள்? விசுவாசிகளிடையே இப்படி ஒரு பிரிவினை உள்ளது. ஐந்து வகையான ஊழியம் மணவாட்டியைப் பரிபூரணபடுத்தும் என்று ஒரு குழுவினர் கூறுகிறார்கள், மற்றொரு குழுவினர் இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் என்று கூறுகின்றனர். நாம் பிளவுபடக் கூடாது; நாம் ஒரே மணவாட்டியாக ஒன்றுபட வேண்டும். சரியான பதில் என்ன?

உங்கள் இருதயங்களை ஒன்றாகத் திறந்து, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் மணவாட்டிக்கு என்ன கூறிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்போமாக. ஏனென்றால் சகோதரன் பிரான்ஹாம் அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்று நாம் யாவரும் ஒப்புக்கொள்கிறோம்.

மனித இயல்பின் அடிப் படையில், எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தில் ஒரு சிறிய குறிப்புகளில்கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர். அப்படியானால் இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப் போகின்றபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்? அதாவது பவுலின் நாட்களில் பரிபூரணமாக அளிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையை நாம் மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்வோம் என்பதே அதன் பொருளாகும். அதை யார் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நான் உங்களுக்கு கூறவுள்ளேன். அது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட அல்லது ஏனோக்கு முதல் இந்நாள் வரையிலும் எந்த தீர்க்கதரிசியும் ரூபகாரப்படுத்தப்படாத விதத்தில் இன்னும் அதிகமாக முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும். ஏனெனில், இந்த மனிதன் தலைக்கல் தீர்க்கதரிசன ஊழியத்தை அவசியம் பெற்றிருப்பார். தேவன் அதை அவருக்குத் தெரிவிப்பார். அவர் தனக்காக பேசவேண்டிய அவசியமே இருக்காது. தேவன் அடையாளத்தின் சத்தத்தினால் அவருக்காக பேசுவார். ஆமென்.

எனவே, அவருடைய தூதனால் உரைக்கப்பட்ட இந்தச் செய்தி பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்துகொள்ளப்படுகிறது.

தேவன் தம்முடைய ஏழாவது தூதனாகிய செய்தியாளரையும், அவருடைய செய்தியைப் பற்றியும் வேறு என்ன கூறினார்?

அவர் தேவன் கூறுவதை மாத்திரமே கேட்பார்.

அவர், "கர்த்தர் உரைக்கிறதாவதை” உடையவராயிருந்து, தேவனுக்காகவே பேசுவார்.

அவர் தேவனுக்காக பேசும் சத்தமாயிருப்பார்.

அவர் மல்கியா 4:6-ல் உரைக்கப்பட்டிருக்கிறபடியே, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.

அவர் கடைசி காலத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை திருப்பிக் கொண்டு வருவார். பவுல் கூறினதுபோன்ற சரியான சத்தியத்தைக் கூறுகிற ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கே அவர்கள் செவி கொடுப்பர்.

● அவர்கள் கொண்டிருந்த சத்தியத்தைப் போன்ற சத்தியத்தையே அவர் திரும்ப அளிப்பார்.

பின்னர் அவர் நம்மைப் பற்றி என்ன கூறினார்?

அந்த நாளில் அவரோடுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை உண்மையாய் வெளிப்படுத்துகிறவர்களுமாயும், அவருடைய சரீரமாயும், அவருடைய சத்தமாயுமிருந்து, அவருடைய கிரியை களைச் செய்கிறவர்களுமாயிருப்பர். அல்லேலூயா! உங்களுக்கு அது புரிகின்றதா?

நீங்கள் இன்னும் ஏதேனும் சந்தேகத்தில் இருந்தால், தேவனுடைய ஆவியினால் உங்களை நிரப்பவும், உங்களை வழிநடத்தவும் அவரிடம் கேளுங்கள், ஏனென்றால் "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஏமாற்றப்பட முடியாது" என்று வார்த்தை கூறுகிறது. நீங்கள் மணவாட்டியாயிருந்தால் எந்த மனிதனும் உங்களை ஏமாற்ற முடியாது.

மெத்தோடிஸ்டுகள் தவறிப்போனபோது, தேவன் மற்றவர்களை எழுப்பினார். எனவே இது காலா காலங்களினூடாக இவ்வாறு நிகழ்ந்து வந்து, இந்தக் கடைசி நாளில் தேசத்தில் மீண்டும் மற்றொரு ஜனங்கள் இந்த கடைசி காலத்திற்கென கடைசி சத்தமாய் இருக்கும் அவர்களுடைய செய்தியாளனின் கீழ் இருக்கின்றனர்.

ஆம் ஐயா. இனி சபையானது "தேவனுக்காக பரிந்து பேசுகிற சத்தமாய்" இருக்காது. அது தனக்கு சொந்தமானதையே பேசுகிறதாயிருக்கிறது. ஆகையால் தேவன் அவளை விட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கிறார். எனவே அவர் அவளை தீர்க்கதரிசியினூடாகவும், மணவாட்டியினூடாகவும் கலங்கச் செய்வார். ஏனென்றால் தேவனுடைய சத்தம் அவளுக்குள்ளாக இருக்கும். ஆம் அது அவ்வாறே இருக்கிறது, ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரம் 17ம் வசனத்தில், “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்" என்றே அது கூறுகிறது. இன்னும் ஒருவிசை இந்த உலகமானது பெந்தேகொஸ்தே நாளில் தேவனிடத்திலிருந்து நேரடியாக தேவனுடைய சத்தத்தைக் கேட்டதுபோல கேட்கும்; ஆனால் உண்மையிலேயே அந்த வார்த்தையான மணவாட்டியானவள் முதலாம் காலத்தில் புறக்கணிக்கப்பட்டது போலவே புறக்கணிக்கப்படுவாள்.

மணவாட்டிக்கு ஒரு சத்தம் உள்ளது, ஆனால் அது ஒலிநாடாக்களில் உள்ளதை மட்டுமே கூறும். ஏனென்றால் அந்த சத்தம் நேரடியாக தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்கிறது, எனவே அது பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்து கொள்ளப்பட்டதால் அதற்கு வியாக்கியானம் தேவையில்லை.

லவோதிக்கேயா சபையின் காலம் 60-1211E என்ற செய்தியை அந்த சத்தம் எங்களுக்கு வெளிப்படுத்த நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 30 நவம்பர், 2024

காலை வணக்கம் நண்பர்களே,

உலகம் முழுவதிலுமிருந்து கிறிஸ்துவின் மணவாட்டி ஒருமனதாக ஒன்றுபட முடியும்போது, அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம், தேவனுடைய சத்தம், சடுதியாய் வர முடிந்த ஒரு நேரம் உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை.

வேதவாக்கியங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது இணையும் நேர வித்தின் அடையாளம். நாம் தேவனுடைய பிரசனத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, தேவனுடைய சத்தத்தை கேட்பதன் மூலம் மணவாட்டி தாமே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கையில் கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அவருடைய ஐந்து வகையான ஊழியத்தால் நாம் பரிபூரணப்படுத்தப்படுகிறோம்.

கிருபை வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளே என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? சபையில் ஐந்து வரங்கள் உள்ளன என்று வேதம் கூறியுள்ளது. தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், அல்லது மிஷினரிகளையும், அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும் வைத்துள்ளார்.

பிரசங்கியார்: நான் வீதியில் போகிறேன். அப்பொழுது யாரோ, "நீங்கள் ஒரு பிரசங்கியா?" என்று கேட்பார். அதற்கு நான், “ஆம் ஐயா. ஓ ஆம், நான் ஒரு பிரசங்கியார்" என்று கூறுவேன்.

போதகர்: இப்போது இன்று காலை நான் ஒருபோதும் பிரசங்கிக்காததற்குக் காரணம், நாம் ஒரு உரையை எடுத்து பிரசங்கிக்கையில் அதைத் தவிர்ப்பதை விட போதிக்கையில் அதை நன்றாகப் புரிந்துகொள்வோம் என்று நான் எண்ணினேன். நாங்கள் அதை அப்படியே போதிப்போம்.

அப்போஸ்தலர்: "மிஷனரி" என்ற வார்த்தைக்கு "அனுப்பப்பட்டவர்" என்று பொருள். "அப்போஸ்தலர்" என்றால் "அனுப்பப்பட்டவர்" என்று பொருள். ஒரு மிஷனரி ஒரு அப்போஸ்தலன். நீங்கள் அறிந்திருக்கிறபடி, நான் - நான், நான் ஒரு மிஷனரி, சுவிசேஷப் பணியில், மிஷனரி ஊழியத்தில், சுமார் ஏழு முறை உலகம் முழுவதுமுள்ள வெளிநாடுகளை சுற்றி வந்திருக்கிறேன்.

தீர்க்கதரிசி: நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் செய்யும்படிக்கு நான் என்ன சொல்கிறேனோ அதை போய் செய்யுங்கள்.

மேய்ப்பர்: நான் உங்களுக்கு என்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் என்னை உங்களுடைய மேய்ப்பர் என்று அழைக்கிறீர்கள், நீங்கள் நன்றாகச் சொல்கிறீர்கள், ஏனென்றால் நான் அப்படித்தான் இருக்கிறேன்.

இலட்சக்கணக்கான மக்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை நான் கண்டு, “அவர்கள் யாவரும் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?” என்று கேட்டேன். அப்பொழுது, “இல்லை, அவர்கள் உன் ஊழியத்தில் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள்” என்று பதில் வந்தது. அதன்பின்னர் நான் கூறினேன், நான்—நான், “நான் இயேசுவைக் காண வேண்டும்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “அதற்கு இன்னும் சமயம் வரவில்லை. அவர் வருவதற்கு முன்னர் ஒரு சமயம் உண்டாயிருக்கும். ஆனால் அவர் முதலில் உன்னிடம் வருவார், அப்பொழுது நீ பிரசங்கித்த வார்த்தையின்படியே நியாயந்தீர்க்கப்படுவாய்” என்றார்.

அப்பொழுது நாங்கள் அனைவரும் எங்களுடைய கரங்களை உயர்த்தி, "நாங்கள் அதன் பேரில்தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!” என்றோம்.

ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் என்னைச் சுற்றி எழத் தொடங்குகிறார்கள். என்னுடைய சரீரத்தில் ஒரு மாற்றம் வருவதை நான் உணர்கிறேன். என் நரை முடி, அது போய்விட்டது. என் முகத்தைப் பாருங்கள்...என் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. என் வலிகள் மற்றும் வேதனைகள் ... அவை போய்விட்டன. என் மனச்சோர்வு உணர்வு உடனடியாக மறைந்துவிட்டது. நான் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாக்கப்பட்டிருக்கிறேன்.

பின்னர் நாம் நம்மைச் சுற்றிப் பார்க்கத் துவங்கி, நம்முடைய அன்புக்குரியவர்களைக் காண்போம். ஓ என்னே, அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள்...மகிமை, என்னுடைய மகன்... என்னுடைய மகள். தாத்தா, பாட்டி, நான் உங்கள் இருவரையும் மிகவும் இழந்துவிட்டேன். ஏய்... என்னுடைய பழைய நண்பன் இருக்கிறான். ஓ பாருங்கள், இது சகோதரன் பிரான்ஹாம், நம்முடைய தீர்க்கதரிசி, அல்லேலூயா!! அது இங்கே உள்ளது. அது சம்பவித்துக் கொண்டிருக்கிறது!

பின்னர் ஒன்றாக, ஒரே நேரத்தில், பூமிக்கு அப்பாலுள்ள விண்வெளியில் எங்கோ நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். நாம் கர்த்தரை அவருடைய பாதையிலே சந்திப்போம். நாம் அங்கே இந்தப் பூமியின் வளையங்களில் அவருடன் நின்று மீட்பின் கீதங்களைப் பாடுவோம். அவர் நமக்கு அளித்துள்ள மீட்பின் கிருபைக்காக அவரைப் பாடித், துதிப்போம்.

அவருடைய மணவாட்டிக்காக எவ்வளவோ காத்திருக்கிறது. நித்தியம் முழுவதும் நாம் ஒருவருக்கொருவர் மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுடன் என்ன ஒரு நேரத்தைக் கொண்டிருக்கப் போகிறோம். கர்த்தாவே, எங்களுடைய இருதயத்தில் நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை அழிவுக்குரிய மானிட வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

அவர் உங்களை மணவாட்டி என்று அழைப்பதையும், அவருடன் அது எப்படி இருக்கப் போகிறது என்பதை உங்களிடத்தில் சொல்வதையும் நீங்கள் கேட்க விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் அளவுக்கதிகமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

60-1211M பத்து கன்னிகைகளும், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களும்