ஞாயிறு
02 பிப்ரவரி 2025
61-0730M
காபிரியேல் தானியேலுக்கு அறிவித்தக் கட்டளைகள்

அன்பான தீர்மானிக்கப்பட்டவர்களே,

ஏழு சபை காலங்களைப் படித்தபோது என்ன ஒரு அற்புதமான குளிர்காலத்தை நாம் அனுபவித்து வருகிறோம், பின்னர் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுகளின் புத்தகத்தில் தேவன் நமக்கு இன்னும் கூட அதிகமாக வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் எப்படி சபைக் காலங்களாக இருந்தன, பின்னர் யோவான் 4-வது அதிகாரத்தில் எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டான் என்றும், 5-வது அதிகாரத்தில் வரவிருக்கும் காரியங்களையும் நமக்குக் காண்பிக்கிறது.

6 வது அதிகாரத்தில், வெளிப்படுத்தின விசேஷம் 6 வது அதிகாரத்திலிருந்து 19 வது அதிகாரம் வரை நடக்கும் காரியங்களைக் காண யோவான் மீண்டும் பூமியில் எப்படி இறங்கினான் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

தேவனுடைய சத்தம் அவருடைய பலமுள்ள ஏழாம் தூதன் மூலமாக பேசி, அடுத்து என்ன வெளிப்படப் போகிறது என்று நமக்குச் சொல்வதை நாம் கேட்க போகிறபடியால் மணவாட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு ஆசீர்வதிக்கப்படுவாள்.

நாம் தானியேலின் எழுபது வாரங்கள் பற்றிய சிறந்த ஆய்வைத் தொடங்குவோம் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஏழு முத்திரைகளுக்குள் செல்வதற்கு முன்பு அது மீதமுள்ள செய்தியில் இணையும் என்று தீர்க்கதரிசி கூறினார்; ஏழு எக்காளங்கள்; மூன்று ஆபத்துக்கள்; சூரியனில் ஸ்தீரி; சிவப்பான மிருகமாகிய பிசாசு தள்ளப்படுதல்; இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் முத்திரையிடப்படுதல்; இந்த நேரத்திற்கு இடையே யாவும் சம்பவிக்கிறது.

தானியேல் புத்தகம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நேரம் மற்றும் காலத்திற்கான சரியான நாள்காட்டியாகும், அது எவ்வளவு சிக்கலாக்கப்பட்டுள்ளதாக தோன்றினாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவன் அதை உடைத்து நமக்காக அதை எளிதாக்குவார்.

அவருடைய ஜனங்களைத் தேற்றி இப்பொழுது என்ன சமீபமாயிருக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு கூறவும், இன்று இக்காலையில் இங்கே பிரசன்னமாயிருப்பவர்களுக்கும், இந்த ஒலிநாடாக்கள் உலகம் பூராவிலும் போகப் போகிறதே அவ்விடங்களிலுள்ள தேசங்களில் இதைக் கேட்பவர்களுக்கும், நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதைக் கூறத்தக்கதாகவே இப்பொழுது நான் என்னத் தேடிக் கொண்டி ருக்கிறேன் என்பதை தேவன் அறிவார்.

அந்த நாளுக்காகவும் அந்த நேரத்திற்காகவும் ஏங்கி ஜெபித்துக்கொண்டிருக்கும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாய் நாம் இருக்கிறோம். நம்முடைய கண்கள் பரலோகத்தை நோக்கியவாறு இருக்க, அவருடைய வருகைக்காக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் யாவரும் தானியேலைப் போல் ஜெபத்திலும் வேண்டுதல்களிலும் நம்முடைய முகங்களை பரலோகத்தை நோக்கியவாறு வைத்திருப்போம், வார்த்தையை வாசித்து, அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் கர்த்தருடைய வருகை விரைவில் நெருங்குகிறது என்பதை நாம் அறிந்துள்ள காரணத்தால், நாம் முடிவில் இருக்கிறோம்.

மிக எளிதாக நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பாரத்தையும், ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு சிறிய அவநம்பிக்கையையும் ஒதுக்கி வைக்க பிதாவே எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய நேரம் வரையறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, நாங்கள் பரம அழைப்பின் பந்தய பொருளுக்கான இலக்கை நோக்கி இப்பொழுது தொடருவோமாக.

செய்தியானது புறப்பட்டு சென்று விட்டது. ஒவ்வொரு காரியமும் இப்பொழுது ஆயத்தமாக உள்ளது; நாம காத்துக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டும் இருக்கிறோம். சபையானது முத்தரிக்கப்பட்டுள்ளது. துன்மார்க்கர் இன்னும் அதிகமாக துன்மார்க்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். சபைகள் அதிக சடங்காரச்சாரமுள்ளவளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மண்டை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

தேவனுடைய காரியங்களுக்கு திரும்ப, மூல செய்திக்கு ஜனங்களைத் திரும்ப அழைக்க, வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிற ஒரு சத்தம் நமக்கு உண்டு. இந்த காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கிறதை நாம் வெளிப்பாட்டின் மூலம் புரிந்து கொள்கிறோம்.

நாம் தானியேல் புத்தகத்தின் நம்முடைய மிகச் சிறந்த ஆய்வினைத் துவங்குகையில், தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்குஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன்வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

61-0730M - காபிரியேல் தானியேலுக்கு அறிவித்த கட்டளைகள்