ஞாயிறு
09 மார்ச் 2025
63-0317E
ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு

அன்பான திரும்பளிக்கப்பட்டவர்களே,

நாம் யாராய் இருக்கிறோம் என்றும், எங்கிருந்து வருகிறோம் என்றும், எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றும், நாம் என்ன சுதந்தரிக்கப் போகிறோம் என்றும், அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும் தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் சொல்வதை கேட்பதை குறித்து நான் ஒருபோதும் களைப்படைவதில்லை.

ஒரு பரிசுத்த ஆசாரியக் கூட்டமாயும், ஒரு ராஜரீக சந்ததியாயுமாயிருந்து தேவனுக்கு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகின்றனர் என்றும், அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவர்கள் செலுத்துகின்றனர்” என்று கூறினார். என்னே—என்னே ஜனங்கள்! அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்.

தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்பதன் மூலம் மட்டுமே நமக்கு ஆறுதலும் சமாதானமும் கிடைக்கிறது, பின்னர் நம் உதடுகளின் கனிகளால் ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தி, அவருடைய நாமத்தைத் துதிப்பதன் மூலம் பிதாவிடம் திரும்ப பேசுகிறோம்.

இந்த முழு உலகமும் தவித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையும் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமும் தவித்துக் கொண்டு, கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் நமக்காக எதையும் வைத்திருக்கவில்லை. நாம் நம்முடைய கல்யாண விருந்துக்கும், அவரோடும், காலத்தின் திரைக்கப்பால், நமக்காக காத்துக் கொண்டு ஏற்கனவே அங்கு சென்றுள்ளவர்களோடு பரலோக வீட்டில் இருக்கும்படிக்கு புறப்பட்டு செல்ல ஆயத்தமாய் இருக்கிறோம்.

நாமே எழுந்து நம்மையே குலுக்கிக் கொள்வோமாக! நம்முடைய மனசாட்சியே குத்தட்டும், இப்போது என்ன நடக்கிறது என்றும், ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்போழுதிலே என்ன சம்பவிக்கப் போகிறது என்பதற்கு நம்மை விழித்தெழச் செய்வோமாக.

உலக வரலாற்றில் கிறிஸ்துவின் மணவாட்டி உலகெங்கிலும் இருந்து ஒன்றுபடுவது ஒருபோதும் சாத்தியமில்லை, ஆனால் ஒரே நேரத்தில், தேவனுடைய சத்தம் பேசுவதையும் அவருடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்க முடியும்.

விசுவாசிகளே, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், எந்த சத்தம், எந்த ஊழியக்காரர், எந்த மனிதன், கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து ஒன்றாகக் கொண்டுவர முடியும்? நீங்கள் கிறிஸ்துவின் மணவாட்டி என்றால், ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு சத்தமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆம், பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரிலும் இருக்கிறார், சபையின் ஒவ்வொரு ஊழியத்திலும் இருக்கிறார், ஆனால் தேவன் தாமே தம் வார்த்தையின் மூலம் உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று நமக்குச் சொன்னார். அவருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசியிடம் வருகிறது என்பதை மணவாட்டி அறிந்திருக்கிறாள். அவருடைய தீர்க்கதரிசி மாத்திரமே அவருடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் உரைத்ததிலிருந்து எதுவும் சேர்க்கப்படவோ அல்லது அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவோ முடியாது. ஒலிநாடாக்களில் உள்ள அந்த வார்த்தையின் மூலமாகவே நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, வேறு வார்த்தையினாலோ அல்லது அந்த வார்த்தையின் வியாக்கியானத்தினாலோ அல்ல.

மணவாட்டியை ஒன்றுபடுத்துவது வேறு எந்தக் சத்தத்திற்கும் சாத்தியமில்லை. ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் மாத்திரமே அவருடைய மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும். மணவாட்டி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வார்த்தை இது மாத்திரமேயாகும். இது மாத்திரமே அவருடைய மணவாட்டிக்கு அவருடைய சத்தமாயிருக்கும்படி தேவன் தாமே ரூபகாரப்படுத்தின ஒரே சத்தமாய் இருக்கிறது. அவருடைய மணவாட்டி அவரோடு ஒருமனப்படும்படி ஏகமனதாய் இருக்க வேண்டும்.

ஊழியக்காரர்கள் ஊழியம் செய்யலாம், போதகர்கள் போதிக்கலாம், மேய்ப்பர்கள் மேய்ப்பரின் பணியைச் செய்யலாம், ஆனால் ஜனங்களுக்கு முன்பாக அவர்கள் வைக்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாக இருக்க வேண்டும். இதுவே மணவாட்டினுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது.

உங்களுக்கு அது பற்றிய ஒரு வெளிப்பாடு இருந்தால், இதுதான் நடக்கப் போகிறது.

ஆதாம் பூமியின் மேலிருந்த தன் சுயாதீனத்தை இழந்து போனான். அது, அவன் யாருக்கு அதை விற்றுப்போட்டானோ, அவன் ஆதிக்கத்தில் சென்றது, சாத்தான். அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைப் பிசாசின் விவேகத்திற்காக விற்றுப்போட்டான். அவன் ஒவ்வொரு காரியத்தையும் சாத்தானுடைய கரங்களுக்கு பறி கொடுத்து விட்டான். அவன் அதை தன் கரத்திலிருந்து சாத்தானுக்கு மாற்றிவிட்டான்.

தேவன் அண்ட சராசரங்களின் தேவன், அவர் எங்குமுள்ளவர். அவர் புத்திரன் இப்பூமியை தன் சொந்த கட்டுக்குள் வைத்திருந்தான். அவன் பேசினான், அவன் பெயரிட்டான். அவன் இயற்கையை நிறுத்தினான். எது வேண்டுமானாலும் அவனால் செய்யமுடிந்தது. அவன் பூமியின் மேல் பரிபூரண அதிகாரம் கொண்டிருந்தான்.

ஆதாம் அனைத்தையும் இழுந்து விட்டான், ஆனால் தேவனுக்கு மகிமை, அவன் இழந்த மற்றும் பறிகொடுத்த அனைத்தையும் நம்முடைய இனத்தான் மீட்பர் மீட்டெடுத்துள்ளார், சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர அது வேறுயாருமல்ல, நம்மில் ஒருவராக இம்மானுவேல் ஆனார். இப்போது, அது நம்முடையது.

நாம் அவருடைய குமாரர்களும் குமாரத்திகளும், அவருடன் அரசாளும் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருக்கிறோம். அவரோடும், நாம் நேசிக்கிற அனைவரோடும் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. இனி சுகவீனமே இல்லை, இனி துக்கமும் இல்லை, மரணமும் இல்லை, யாவும் ஒன்று சேர்ந்து நித்தியமாயுள்ளது.

அதை நினைக்கும் போது, பிசாசு எப்படி நம்மை வீழ்த்த அனுமதிக்க முடியும்? இது நம்முடையது, அங்குதான் நாம் மிக விரைவில் செல்கிறோம். அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய காரியத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த பூமியின் மேலுள்ள இந்த சில நாட்களின் சோதனைகளும் பரிசோதனைகளும் நமக்கு சில நாட்கள் முன்னால் இருக்கும் நம்முடைய மாபெரும் வெற்றியால் விரைவாக மூழ்கடிக்கப்படுகின்றன.

நம்முடைய விசுவாசம் ஒருபோதும் மகத்தானதாக இருந்து வந்ததில்லை. நம்முடைய சந்தோஷம் ஒருபோதும் உயர்ந்ததாக இருந்து வந்ததில்லை. நாம் யாராக இருக்கிறோம் என்றும், நாம் அங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம். அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அறிவோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒலிநாடக்களோடு தரித்திருந்து, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்; எல்லாவற்றையும் புரிந்து கொள்வது அல்ல, ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்…நாம் அவ்வாறு செய்கிறோம்!

விசுவாசம் கேட்பதால், வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. தீர்க்கதரிசியிடம் வார்த்தை வருகிறது. தேவன் அதை உரைத்தார். தேவன் அதை பதிவு செய்தார். தேவன் அதை வெளிப்படுத்தினார். நாம் அதைக் கேட்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம்.

ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை கேட்பதன் மூலமே மாத்திரமே நாம் இந்த வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கிறிஸ்து முடிவில் என்ன செய்வாரென்பது இவ்வாரம் ஏழு முத்திரைகள் உடைக்கப்படும்போது வெளிப்படும். தேவன் நம்மை அறிந்துகொள்ளும்படிச் செய்வார். பாருங்கள்? சரி. அது வெளிப்படுத்தப்படும். அது வெளிப்படுத்தப்படும்பொழுது, முத்திரைகள் உடைக்கப்பட்டு, அது நமக்கு வெளிப்படுத்தப்படும்போது, தேவனுடைய மகத்தான மீட்பின் திட்டம் என்னவென்றும், அது எங்ஙனம் நிகழுமென்றும், அது எப்பொழுது சம்பவிக்குமென்றும் நாம் அப்பொழுது அறிந்துக் கொள்ளலாம். அவையெல்லாம் இந்த இரகசிய புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ளது. அது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ளது, ஆகவே ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே அவைகளை உடைக்க முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பகுதியினர் ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பார்கள். நாம் நம்முடைய ஜெபங்களினாலும் அவரை ஆராதிப்பதினாலும் பரலோகத்தை முற்றுகையிட்டிருப்போம். ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு 63-0317 என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது, நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.

இந்த வார இறுதியில் ஜெபர்சன்வில்லில் நேர மாற்றம் பற்றி மறந்துவிடாதீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்