காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
திங்கள், 23 செப்டம்பர், 2024

சகோதர சகோதரிகளே,

கர்த்தருக்குச் சித்தமானால், இந்த ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 29 ஆம் தேதி, மற்றொரு இராப்போஜனத்தையும், பாதங்களைக் கழுவுதல் ஆராதனையையும் நாங்கள் நடத்த விரும்புகிறோம். நாம் கடந்த காலத்தில் செய்தது போல், மாலை 5:00 மணிக்கு, உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில். தொடங்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். அப்போஸ்தலர்கள் ஒன்று கூடும் ஒவ்வொரு முறையும் இராப்போஜனம் உண்டு என்று சகோதரன் பிரான்ஹாம் சொன்னாலும், அவர் அதை மாலையில் புசிக்க விரும்பினார், மேலும் அதை கர்த்தருடைய இராப் போஜனம் என்று குறிப்பிட்டார்.

செய்தி மற்றும் இராப்போஜன ஆராதனை வாய்ஸ் ரேடியோவில் இருக்கும், மேலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வாய்ஸ் ரேடியோவைஅணுக முடியாதவர்களுக்கு பதிவிறக்கம் செய்யக்கூடிய கோப்பிற்கான இணைப்பும் இருக்கும்.

ஜெஃபர்சன்வில் பகுதியில் உள்ள விசுவாசிகளுக்கு, மீண்டும் இராப்போஜன திராட்சை ரசம் கிடைக்கும். இடம், நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கர்த்தர் நமக்கு விட்டுச்சென்ற இந்த விலையேறப்பெற்ற நியமத்தை நாம் கடைப்பிடிக்க நான் நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராஜாதி ராஜா உள்ளே வருவதற்காக நம்முடைய வீடுகளை ஆயத்தம் செய்வதும், நம்முடைய இருதயங்களைத் திறப்பதும், அவருடைய பந்தியில் நம்மோடு போஜனம்பண்ணுவது நமக்கு என்ன ஒரு சிலாக்கியம்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப்



அப்பம் சுடுதல் / திராட்சை ரசம் தயாரிப்பதற்கான வழிமுறைகள்

இராப்போஜன திராட்சை ரசம் / பாதங்களைக் கழுவுவதற்கான தொட்டிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்



 

 

சனி, 21 செப்டம்பர், 2024

அன்புள்ள தேவனின் தன்மையே,

நாம் நம்முடைய பரலோகப் பிதாவின் அதே தன்மையாயிருக்கிறோம்; ஏனென்றால், நாம் ஆதியில் அவருக்குள் இருந்தோம். நமக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நாம் அங்கே அவருடன் இருந்தோம், அவர் நம்மை அறிந்திருந்தார். அவர் நம்மை மிகவும் நேசித்தார், அவர் நம்மை மாம்சமாக்கினார், அதனால் அவர் நம்மோடு தொடர்பு கொள்ளவும், நம்முடன் பேசவும், நம்மை நேசிக்கவும், நம்முடைய கரங்களை குலுக்கும் கூட முடிந்தது.

ஆனால் சாத்தான் வந்து, தேவனுடைய மூல வார்த்தையையும், அவருடைய ராஜ்யத்தையும், நமக்கான அவருடைய திட்டத்தையும் தாறுமாறாக்கினான். அவன் ஆண்களையும் பெண்களையும் திரித்து, நாம் வாழும் இந்த உலகத்தை தாறுமாறாக்கி, கைப்பற்றும் நோக்கத்தில் ஈடேறினான். அவன் பூமியைத் தன்னுடைய ராஜ்யமாகவும், அவனுடைய ஏதேன் தோட்டமாகவும் ஆக்கிக்கொண்டான்.

இது எப்போதும் இருந்து வந்ததிலேயே மிகவும் வஞ்சகமானதும், நம்பிக்கை துரோகமுமான வேளையாயுள்ளது. பிசாசு தன்னால் இயன்ற ஒவ்வொரு தந்திரமான பொறியையும் அமைத்துள்ளான்; ஏனென்றால் அவன் பெரிய வஞ்சகனாயிருக்கிறான். கிறிஸ்தவன் எந்தக் காலத்திலும் இருந்ததை விட இன்றைக்கு அவன் அதிக விழிப்புடன் ஆயத்தமான நிலையில் இருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில், இது எல்லா காலங்களிலும் மிகவும் மகிமை வாய்ந்தது, ஏனென்றால் நாம் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய ஏதேன் தோட்டம் விரைவில் வரப்போகிறது, அங்கு நாம் பரிபூரண அன்பையும், தேவனுடைய அன்பைப் பற்றிய பரிபூரண புரிந்து கொள்ளுதலையும் பெறுவோம். நித்தியம் முழுவதும் நம்முடைய ஏதேனில் நாம் அவருடன் ஜீவனோடும், பாதுகாப்பாகவும் இருப்போம்.

இந்த நாளில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்தேயு 24-ல் இயேசு நமக்குச் சொன்னார். இது எப்போதும் ஜீவித்ததிலேயே மிகவும் வஞ்சனையான நாள் என்றும், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அது மிக நெருக்கமாய் இருக்கும்”; என்றும் அவர் நம்மை எச்சரித்தார். ஏனென்றால், பிசாசின் தந்திரம் அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாதபோது, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று மக்களை நம்ப வைக்கும்.

ஆனால் இந்தக் காலம் வஞ்சிக்காத, வஞ்சிக்கப்பட முடியாத அவருடைய தூய வார்த்தை மணவாட்டியையும் கூட அளிக்கும்; ஏனென்றால் அவர்கள் அவருடைய மூல வார்த்தையுடன் தரித்திருப்பார்கள்.

யோசுவாவும் காலேபும் போலவே, நம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவர்களுடையது போலவே கண்முன்னே வருகிறது. யோசுவா என்றால், "யெகோவா-இரட்சகர்" என்று நம்முடைய தீர்க்கதரிசி கூறினார். பவுல் மூல முதலான தலைவராக வந்ததைப் போலவே, சபைக்கு வரும் கடைசி-கால தலைவரை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

யோசுவாவுடன் உண்மையாக இருந்தவர்களை காலேப் பிரதிநிதித்துவப்படுத்தினான். இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவன் தம்முடைய வார்த்தையான ஒரு கன்னியாக அவர்களிடத்தில் தொடங்கினார்; ஆனால் அவர்கள் வேறு ஒன்றை விரும்பினர். நம்முடைய தீர்க்கதரிசி, "இந்த கடைசி கால சபையும் அவ்வண்ணமே செய்கிறது" என்று கூறினார். எனவே, தேவன் இஸ்ரவேலை அவருடைய சொந்த நியமிக்கப்பட்ட நேரம் வரும்வரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஜனங்கள் தங்களுக்கு தேவன் அளித்த தலைவரான யோசுவா மீது அழுத்தம் கொடுத்து, “தேசம் நம்முடையது, நாம் போய் அதை கைப்பற்றிக் கொள்வோம். யோசுவா, நீ எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டாய், நீ உன்னுடைய கட்டளையை இழந்துவிட்டிருக்க வேண்டும். உன்னிடத்தில் முன்பிருந்த வல்லமை உன்னிடத்தில்லை. நீ முன்பு தேவனிடத்தில் கேட்டு, தேவனுடைய சித்தத்தை அறிந்து, துரிதமாக செயல்படுவாய். உன்னோடு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது” என்று கூறினர்.

யோசுவா தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் தேவனுடைய வாக்குத்தங்களை அறிந்திருந்தான். நம்முடைய தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்:

“யோசுவா வார்த்தையோடு நிலைத்திருந்ததால், தேவன் முழுத் தலைமையையும் அவனுடைய கரங்களில் ஒப்படைத்தார். தேவனால் யோசுவாவை நம்ப முடிந்ததேயன்றி மற்றவர்களை அல்ல. எனவே இந்த கடைசி நாளில் அது மீண்டும் நிகழும். அதே பிரச்சனை, அதே அழுத்தங்கள்.”

தேவன் யோசுவாவுடன் செய்ததைப் போலவே, அவர் தம்முடைய தூதனான தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரான்ஹாமின் கரங்களில் முழு தலைமைத்துவத்தையும் கொடுத்தார்; ஏனென்றால், அவரால் இவரை நம்ப முடியும் என்றும், ஆனால் மற்றவர்களை நம்ப முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஒரே சத்தம், ஒரே தலைவர், ஒரே முடிவான வார்த்தை, அப்பொழுதும் இப்போதும் இருக்க வேண்டியதாயிருந்தது.

கோடிக்கணக்கானோர் ஒலிநாடாக்களை கேட்பார்கள் என்று தீர்க்கதரிசி கூறினதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன். ஒலிநாடாக்களுக்கு ஒரு ஊழியம் உண்டு என்று அவர் கூறினார். தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்தைப் பிடிக்க ஒரு ஒலிநாடா (அவருடைய ஊழியம்) மூலம் வீடுகளுக்கும் சபைகளுக்கும் நம்மில் சிலர் நழுவிச் செல்வார்கள்.

நாம் திரும்பி வந்து, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தோம் என்றும், நாங்கள் ஒலிநாடாக்களை இயக்கியபோது அதை விசுவாசித்தவர்களை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும் கூறினோம். இப்போது நாங்கள் உலகம் முழுவதும் அதை பிரசங்கித்திருக்கிறோம், நீர் அதை கனப்படுத்துவீரா?

அவரோ: "அதை செய்யும்படிக்கே நான் உங்களை அனுப்பினேன்" என்று கூறுவார்.

தேவன் அதைக் கனப்படுத்துவார். உங்களுடைய வீடு ஒருபோதும் அசைக்கப்படாது. எல்லாவற்றையும் அழிக்க தேவன் சைகைக் கொடுக்கும்போது, உங்களுடைய குடும்பம் அனைத்தும், உங்களுடைய உடைமை அனைத்தும் உங்களுடைய வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் அங்கே நிற்கலாம். நீங்கள் ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டியதில்லை, யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள்.

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, சாத்தானின் ஏதேன் 65-0829 என்பதைப் பற்றிய எல்லாவற்றையும் நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவனுடைய மகத்தான, ஜீவனுள்ள, கடைசி-கால ஊழியத்தில் நாங்கள் புசிக்கும்போது, எங்களோடு சேர்ந்துகொள்ள வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

கூடுமானால், கர்த்தரின் வருகை வரை நாங்கள் ஜீவிப்போமாக. எங்களுடைய ஆதிக்கத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் நாங்கள் அன்புடனும், புரிந்து கொள்ளுதலுடனும், இன்றைக்கு, காணாமற்போன ஆடுகள் ஒவ்வொன்றையும் தேவன் இவ்வுலகில் தேடிக் கண்டுபிடித்து வருகிறார் என்னும் புரிந்து கொள்ளுதலோடு செயல்படுவோமாக. நாங்கள் அந்த கடைசி நபரைக் கண்டுபிடிக்கும்படியாகவும், அதனால் கர்த்தாவே, நாங்கள் இங்கே இந்த பழைய சாத்தானின் ஏதேனை விட்டு வெளியேறி, பரம வீட்டிற்கு நாங்கள் செல்லும்படியாக, அவர்களிடம் நாங்கள் அனுபவம் கொண்ட அன்பின் ஜெபத்தாலும், தேவ வசனத்தாலும் பேசுவோமாக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

2 தீமோத்தேயு 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம் 3:14
2 தெசலோனிக்கேயர் 2:1-4
ஏசாயா 14:12-14
மத்தேயு 24:24

 

 

சனி, 7 செப்டம்பர், 2024

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

நம்முடைய கண்கள் எவ்வளவு பாக்கியமானவைகள்; ஏனென்றால் அவைகள் காண்கின்றன. நம்முடைய காதுகள் எவ்வளவு பாக்கியமானவைகள்; ஏனென்றால் அவைகள் கேட்கின்றன. தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நாம் கண்டிருக்கிறதையும் கேட்டிருக்கிறதையும் காணவும் கேட்கவும் விரும்பினர், ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. நாம் கண்டும், தேவனுடைய சத்தத்தை கேட்டுமிருக்கிறோம்.

தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகவே தம்முடைய வேதாகமத்தை எழுதுவதற்கு தெரிந்து கொண்டார். தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசி மூலமாகவே இந்தக் கடைசி காலத்தில் தம்முடைய எல்லா இரகசியங்களையும் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்த தெரிந்து கொண்டார். இது அவருடைய குணாதிசயங்களாயும், அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயும் உள்ளது, இது யாவுமே அவருடைய ஒரு பாகமாக ஆக்குகிறது.

நம்முடைய காலம் வந்தபோது, அதே சமயத்தில் அவர் தம்முடைய தீர்க்கதரிசியை வரச் செய்திருந்தார். அவர் இவருக்கு உயிர்ப்பூட்டி, இவர் மூலம் பேசினார். இது அவருடைய முன்குறிக்கப்பட்ட மற்றும் அதைச் செய்வதற்கான வழியாயிருந்தது. வேதாகமத்தைப் போலவே, இது தேவனுடைய வார்த்தையாயுள்ளதேயன்றி, மனிதனின் வார்த்தை அல்ல.

நாம் ஒரு முற்றிலுமானதை, ஒரு முடிவானதை; இறுதியான வார்த்தையை உடையவர்களாய் இருக்க வேண்டும். சில மனிதர் வேதாகமம் தங்களுடைய முற்றிலுமானதாக இருக்கிறதேயன்றி, ஒலிநாடாவில் கூறப்பட்டது அல்ல என்று கூறுகிறார்கள்; அவர்கள் வேறு ஏதோ வித்தியாசமாக கூறுவது போல. தேவன் தம்முடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை பலரிடமிருந்து மறைத்துள்ளார், ஆனால் அதை தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தி, தெளிவுபடுத்தியிருப்பது மிகவும் அற்புதமானது. மற்றவர்கள் அதற்கு உதவ முடியாது, அவர்கள் குருடாக்கப்பட்டு, தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் முழுமையான வெளிப்பாட்டை பெறுகிறதில்லை.

தேவன் தம்முடைய வார்த்தையில் (வேதாகமம்) தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,” என்று நமக்குச் சொன்னார். இவ்வாறு, தேவனுடைய தீர்க்கதரிசிகள் வேதாகமத்தை எழுதினர். அது அவர்கள் அல்ல, ஆனால் தேவன் அவர்கள் மூலம் பேசுகிறார்.

எல்லா சத்தியங்களுக்கும் நம்மை வழிநடத்த அவர் சத்திய ஆவியை நமக்கு அனுப்புவார் என்று அவர் நம்முடைய நாளில் கூறினார். அவர் தன்னைப் பற்றி பேசமாட்டார்; ஆனால் அவர் எதைக் கேட்பாரோ, அதையே பேசுவார்: வரப்போகிற காரியங்களை அவர் நமக்கு அறிவிப்பார்.

ஒலிநாடாவில் உள்ள செய்தி தேவனுடைய சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டவைகளாகும். இதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. இது தேவன் தம்முடைய வார்த்தையை ஒலிநாடாக்களில் பேசும்போது அவர் தாமே வியாக்கியானிக்கிறார்.

மற்ற மனிதர்கள் பேசுவதில் தொடர்ச்சி இல்லை, தேவன் பேசுவதில் மட்டுமே உள்ளது. ஒலிநாடாக்களில் சொல்லப்பட்டவை மாத்திரமே ஒருபோதும் மாறாத ஒரே சத்தமாய் உள்ளது. மனிதர் மாறுகிறார்கள், கருத்துக்கள் மாறுகின்றன, வியாக்கியானங்கள் மாறுகின்றன; தேவனுடைய வார்த்தை ஒருபோதும் மாறாது. இது மணவாட்டியினுடைய முற்றிலுமானதாக உள்ளது.

ஒரு பந்து விளையாட்டில் ஒரு நடுவர் முற்றிலுமானவராக இருப்பதற்கான உதாரணத்தை தீர்க்கதரிசி நமக்குத் தருகிறார். அவருடைய வார்த்தையே இறுதியானது. நீங்கள் அதை கேள்வி கேட்க முடியாது. அவர் என்ன கூறுகிறாரோ, அது தான் முடிவானது. இப்போது நடுவரிடம் அவர் சொல்ல வேண்டிய ஒரு விதி புத்தகம் உள்ளது. ஒரு பந்தை தவறவிடுவது அல்லது அடிக்க தவறவிடுவதற்கான பகுதிகள் எங்கே என்பதையும், நீங்கள் ஆட்ட களத்தில் பாதுகாப்பாக இருப்பதையும் மற்றும் நீங்கள் வெளியேற வேண்டியிருப்பதையும்; ஒரு பந்து விளையாட்டிற்கான விதிகள் என்ன என்பதையும் அது அவருக்குச் சொல்கிறது.

அவர் அந்த புத்தகத்தைப் படித்து, ஆய்ந்து பார்க்கிறார், அவர் பேசும்போது, அவர் தனது தீர்ப்பை வழங்குகிறார், அதுதான் விதி, அதுவே இறுதி வார்த்தை. அவர் கூறுவதில் நீங்கள் தரித்திருக்க வேண்டும், எந்த கேள்வியும் இல்லை, வாதமும் இல்லை, அவர் என்ன சொன்னாலும், அது அப்படியே இருக்க வேண்டும், மாற்றப்பட முடியாது. மகிமை.

நீங்கள் பிரசங்கிக்கவோ, அல்லது கற்பிக்கவோ கூடாது என்று சகோதரன் பிரான்ஹாம் கூறவில்லை; மாறாக, அவர் போதிக்கவும், உங்கள் போதகர்களுக்கு செவிகொடுக்கவும் கூறினார், ஆனால் ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தம் உங்களுடைய முற்றிலுமானதாக இருக்க வேண்டும்.

ஒரு கட்டு கம்பம் இருக்க வேண்டும்; வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு முடிவானது. ஒவ்வொருவரும் அந்த முடிவானதை பெற்றிருக்க வேண்டும். இது கடைசி வார்த்தை. அதைப் பெற தேவன் ஒரே ஒரு இடத்தை மட்டுமே அருளியுள்ளார், அது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே. இது தேவனுடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானமாயுள்ளது. இது இறுதியான வார்த்தையாயுள்ளது, ஆமென் என்பதாகவும், கர்த்தர் உரைக்கிறதாவதாகவும் உள்ளது.

இயேசு தாமே அவருடைய வார்த்தையைப் பேசின அவர்களை நாம், "தேவர்கள்" என்று அழைக்கிறோம் என்று கூறினார்; மேலும் அவர்கள் தேவர்களாக இருந்தனர். தீர்க்கதரிசிகள் தேவனுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டபோது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை சரியாகக் கொண்டுவந்தார்கள் என்றார். அது அவர்கள் மூலம் தேவனுடைய வார்த்தை பேசினதாயிருந்தது.

அதனால்தான் நம்முடைய தீர்க்கதரிசி மிகவும் தைரியமானவராக இருந்தார். அவர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, பிழையில்லாத தேவனுடைய வார்த்தையைப் பேசும்படி செய்தார். தேவன் அவரை நம்முடைய காலத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். அவர் பேசும் செய்தியையும், நம்முடைய தீர்க்கதரிசியின் இயல்பு மற்றும் நம்முடைய காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் தேர்ந்தெடுத்தார்.

அவர் பேசிய வார்த்தைகள், அவர் செயல்பட்ட விதம், மற்றவர்களை குருடாக்குகிறது, ஆனால் நம்முடைய கண்களைத் திறக்கிறது. அவர் அணிந்திருந்த உடையின் மாதிரியிலேயே இவருக்கு கூட அவர் அணிவித்தார். அவருடைய இயல்பு, அவரது லட்சியம், ஒவ்வொரு காரியமும் அவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்க வேண்டியதாயிருந்தது. தேவனுடைய மணவாட்டியாகிய நமக்காக அவர் பரிபூரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனால்தான், நாம் ஒன்றாக கூடி வரும்போது, நாம் முதலில் கேட்க விரும்பும் சத்தம் இதுவாகும். தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதனிடமிருந்து பேசப்படும் தூய வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

மற்றவர்கள் அதைப் பார்க்கவோ, அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது என்பதை நாம் அறிவோம், ஆனால் அவர் தம்முடைய சபையோரிடம் மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார் என்று கூறினார். தேவன் மற்றவர்களுக்கு மேய்ப்பதற்காகக் கொடுத்ததற்கு அவர் பொறுப்பாயிருக்கவில்லை; அவர் நமக்கு எந்த வகையான உணவை போஷிக்கிறார் என்பதற்கு மட்டுமே அவர் பொறுப்பாக இருந்தார்.

அதனால்தான் நாம் பிரான்ஹாம் கூடாரம் என்று கூறுகிறோம், ஏனென்றால் ஒலிநாடாக்களைப் பெறவும் கேட்கவும் விரும்பும் சிறு மந்தையான கூடாரத்தில் உள்ள தன்னுடைய மக்களுக்கு மட்டுமே செய்தி என்று அவர் கூறினார். வழிநடத்துவதற்கு தேவன் அவருக்குக் கொடுத்திருந்ததை அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அவர், “மக்கள் உணவையும் பொருட்களையும் கலப்பினமாக்க விரும்பினால், தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் உங்களுக்கு செய்யும்படிச் சொல்வதைச் செய்யுங்கள். நானும் அதே காரியத்தையே செய்வேன். ஆனால் ஒலிநாடாக்களில் உள்ள இந்த செய்திகள் இந்த சபைக்கு மாத்திரமே” என்று கூறினார்.

தேவனுடைய சத்தத்தைப் புரிந்து கொள்ளவும், கேட்கவும் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றவும் அவர் அதை தம்முடைய மணவாட்டிக்காக உண்மையாகவே எவ்வளவு எளிமையாக்கியிருக்கிறார்.

அந்த சத்தத்தைக் கேட்க நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 65-0822M - "கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகிறார்" என்ற செய்தியை நாம் ஒரே நேரத்தில் கேட்போம்.

உங்களால் எங்களுடன் சேர்ந்து கொள்ள முடியாவிட்டால், உங்களால் முடிந்த போதெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

யாத்திராகமம் 4:10-12
ஏசாயா 53:1-5
எரேமியா 1:4-9
மல்கியா 4:5
பரி. லூக்கா 17:30
பரி .யோவான் 1:1 / 1:14 / 7:1-3 / 14:12 / 15:24 / 16:13
கலாத்தியர் 1:8
2 தீமோத்தேயு 3:16-17
எபிரெயர் 1:1-3 / 4:12 / 13:8
2 பேதுரு 1:20-21
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 / 10:1-7 / 22:18-19

 

 

சனி, 24 ஆகஸ்ட், 2024

அன்புள்ள கழுகுகளே,

பிணம் இருக்கும் இடத்தில், கழுகுகள் கூடுகின்றன. இது சாயங்கால நேரம், மற்றும் தீர்க்கதரிசனம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் அவரை நம்முடைய சபைகளில், நம்முடைய வீடுகளில், மற்றும் புதரில் உள்ள நம்முடைய மண் குடிசைகளுக்குள் அழைத்திருக்கும்போது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரிகின்றன. அவர் நம்மிடம் பேசி அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தப் போகிறார். நாம் தேவனுக்காக அதிக பசியாகவும் தாகமாகவும் இருக்கிறோம்.

அவர் முன்குறித்த, முன்னரே தீர்மானிக்கப்பட்ட, அவருடைய தீர்க்கதரிசி மூலமாக; அவருடைய வார்த்தை நமக்கு வரும் வழியை அவர் தெரிந்தெடுத்திருக்கிறார். அவருடைய மணவாட்டியாகிய, நம்மை, அந்த வேளையின் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை பற்றிப் பிடிக்கும்படி அந்த வேளைக்கான மனிதனாய் இருக்கும்படி அவர் வில்லியம் மரியன் பிரான்ஹாமைத் தெரிந்து கொண்டார்.

அவருடைய ஸ்தானத்தை வேறொரு மனிதனால் எடுத்துக் கொள்ள முடியாது. இலக்கணமற்ற வார்த்தைகளில் அவர் தம்மை வெளிப்படுத்தும் விதத்தை நாங்கள் விரும்புகிறோம். இது தேவன் நம்முடைய செவிகளில் பேசிக்கொண்டிருப்பதாகும். தேவன், மானிட உதடுகளின் மூலமாக பேசி, அவர் செய்வதாக கூறினதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். அதுவே இதற்கு தீர்வாகிறதே!

தேவன் தரிசனங்களில் அவருடைய கைகளையும் கண்களையும் பயன்படுத்தினார். அவர் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எதையும் அவரால் கூற முடியவில்லை. தேவன் அவருடைய நாவையும், விரலையும், அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் தேவனோடு முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் தேவனுக்கான வாயாக இருந்தார்.

இந்தக் காலத்தில் சபையானது குழப்பமுறும் என்பதை தேவன் முன்னறிந்திருந்தார். ஆகையால், அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்த, நம்முடைய காலத்திற்காக அவருடைய தீர்க்கதரிசியை அவர் ஆயத்தமாக வைத்திருந்தார்.

அவருடைய மகத்தான திட்டத்தில், அவருடைய வருகைக்கு முன்பாக அவருடைய தீர்க்கதரிசியை அவர் எடுத்துக் கொள்வார் என்பதையும் கூட அவர் அறிந்திருந்தார், எனவே அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி எப்பொழுதுமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை தங்களுடைய விரல் நுனியில் வைத்திருக்கும் படியாக, அவர் அவருடைய சத்தத்தை ஒலிப்பதிவு செய்து, சேமித்து வைத்திருந்தார், அப்போது அவர்களிடம் கேள்வியே எழாது. அவர்கள் எல்லா நேரத்திலுமே கேட்கக்கூடிய தூய கன்னிகையான வார்த்தைக்கு வியாக்கியானமே தேவைப்படாது.

கடைசி நாட்களில் பல சத்தங்களும், நிறைய குழப்பங்களும் இருக்கும் என்று அவர் அறிந்திருந்தார். கடந்த மூன்று வாரங்களாக அவர் நம்மிடம் பேசி, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தைக் குறிப்பிட்டார். கூடுமானால், கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்பதை குறித்து அவர் நம்மிடத்தில் சொன்னார்.

எவ்வாறு இப்பிரபஞ்சத்தின் தேவன் ஜனங்களின் இருதயங்களை குருடாக்கியிருக்கிறான். இந்த லவோதிக்கேயா காலத்தில் இந்த காரியங்கள் சம்பவிக்கும் என்று எவ்வாறு தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசனங்கள் மூலமாக கூறியிருக்கிறார். எதுவுமே செய்யப்படாமல் விடப்படவில்லை என்பதை அவர் நமக்கு சொன்னார்.

இந்த நாளில் செய்யும்படி அவரால் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட காரியங்களினால் நமக்கு முன்பாக அவர் தாமே தம்மை அடையாளம் காட்டியிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நமக்கு அவருடைய செயல்களே நிரூபித்திருக்கின்றன. இது அவருடைய மணவாட்டிக்குள், ஜீவித்துக் கொண்டிருக்கிற, பேசிக் கொண்டிருக்கிற, தேவனுடைய சத்தமாயிருக்கிறது.

இந்த செய்தி எபிரெயர் 13:8 என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது ஜீவனுள்ள வார்த்தையா? இது மாம்சத்தில் மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறதாய் இருக்கிறதா? நீங்கள் விசுவாசித்துக் கீழ்படிந்தால் இந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீர்க்கதரிசனம் நடக்கும்.

உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று உலகம் முழுவதும் நடக்கும். தேவன் மனித உதடுகளால் பேசுவார், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தம்முடைய மணவாட்டியுடன் பேசுவார். அவர் நம் அனைவருக்காகவும் ஜெபிக்கும்போது நாமும் ஒருவருக்காக ஒருவர் நம்முடைய கைகளை வைத்து அவர் ஜெபிக்கச் செய்வார்.

அங்கே வெளியே தொலைபேசி இணைப்புகளில் இணைக்கப்பட்டுள்ள நீங்கள், ஊழியக்காரர்கள் உங்கள் மேல் கைகளை வைத்திருக்கும் போதும், உங்களுடைய அன்பார்ந்தவர்கள் உங்கள் மீது கரங்களை வைத்திருக்கும் போதும், நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், அது முடிவு பெற்றுவிட்டது, அது முற்றுப் பெற்றுவிட்டது.

நம்முடைய தேவை என்னவாயிருந்தாலும், நாம் அதை விசுவாசித்தால்…தேவன் அதை நமக்குத் தருவார். நாம் விசுவாசிக்கிறோம். நாம் அவருடைய உண்மையான மணவாட்டியாய் இருக்கிறோம். அது சம்பவிக்கும். நாம் எங்கெல்லாம் கூடி இருக்கிறோமோ அங்கெல்லாம் அக்கினி ஸ்தம்பம் இருந்து, நமக்கு என்னவெல்லாம் தேவையாயிருக்கிறதோ, அதை நம் ஒவ்வொருவருக்கும் தரும். இது கர்த்தர் உரைக்கிறதாவது.

இப்பொழுது நாம் இங்கே சபையில் காணும் அதே பரிசுத்த ஒளியானது, ஒவ்வொருவர் மேலும் விழுந்து, இந்த நேரத்திலேயே அவர்கள் சுகமாக்கப்படுவார்களாக. கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாங்கள் சத்துருவை, பிசாசை கடிந்து கொள்ளுகிறோம். கர்த்தராகிய இயேசுவின் கடுமையான பாடுகளின் மூலமாகவும், மரணத்தின் மூலமாகவும், மூன்றாம் நாளிலே வெற்றிச் சிறந்த உயிர்த்தெழுதலின் மூலமாகவும், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றிரவு உயிரோடு, எங்கள் மத்தியில் இங்கே இருக்கிறார் என்ற அவருடைய நிரூபிக்கப்பட்ட அத்தாட்சியினால் சத்துரு தோற்கடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை நாங்கள் அவனுக்கு கூறுகிறோம். அவருடைய பிரசன்னத்தில், சபையில் சுழன்று கொண்டிருக்கிற இந்த மகத்தான ஒளியினால் அடையாளங் காட்டப்பட்டிருக்கிற, ஜீவனுள்ள தேவனின் ஆவி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் ஒவ்வொரு இருதயத்தையும் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும், சுகமளிக்கும் வல்லமையினாலும் நிரப்பட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக இதை அருளும்.

நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எதையும் எடுக்க முடியாது, எதையும் எடுக்க முடியாது. சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். உங்களிடம் ஒரு சிறு கரண்டியளவே அவர் இருப்பதாக நீங்கள் உணரலாம், அதுதான் உங்களுக்குத் தேவை, அது உண்மையானது. அது அவராயிருக்கிறது. நீங்கள் அவருடையவராய் இருக்கிறீர்கள் அவருடைய வார்த்தை தவறிப் போக முடியாது.

அதை விசுவாசியுங்கள், அதை ஏற்றுக் கொள்ளுங்கள், அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அது தவறி போக முடியாது. உங்களுக்கு வல்லமை இல்லை, ஆனால் நீங்கள் அவருடைய அதிகாரத்தை பெற்றுள்ளீர்கள். "நான் அதை எடுத்துக்கொள்கிறேன் கர்த்தாவே, இது என்னுடையது, நீர் அதை எனக்குத் தாரும், சாத்தான் அதை எடுத்துச் செல்ல நான் விடமாட்டேன்" என்று கூறுங்கள்.

நமக்கு என்னே ஒரு நேரம் இருக்கும். நான் மற்றெந்த இடத்திலும் இருக்க விரும்பவில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுற்றி இருப்பார். அதிகமான வெளிப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டது. நொறுங்குண்ட இருதயங்கள் சீர்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் சுகமடைந்தனர். "இப்போது நாம் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா, அது இப்பொழுதே எரியவில்லையா, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையும் கனமும் உண்டாவதாக" என்று எப்படி நம்மால் கூறாமல் இருக்க முடியும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

எங்களுடன் சேர்ந்து கொள்ள உலகை அழைக்கிறோம்:

நேரம்: பிற்பகல் 12:00, ஜெபர்சன்வில் நேரம்
செய்தி: 65-0801E தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம்: 22:17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41:9
சகரியா 11:12 / 13:7
ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12
மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 15:26
பரி. லூக்கா: 17:30 / 24:12-35
ரோமர்: 8:5-13
எபிரெயர்: 1:1 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம்: 1:1-3 / அதிகாரம் 10

 

 

சனி, 17 ஆகஸ்ட், 2024

அன்புள்ள பூரண சற்குணரே,

ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் சத்தம், ஏதேன் தோட்டத்திலும், சீனாய் மலையிலும், மறுரூப மலையிலும் அவருடைய வார்த்தையை ஒலித்த அதே சத்தமாயிருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் முழுமையான மற்றும் முடிவான வெளிப்பாட்டுடன் இன்று ஒலிக்கிறது. அது அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு அவளை ஆயத்தப்படுத்துகிறது. மணவாட்டி அதைக் கேட்டுக் கொண்டும், அதை ஏற்றுக் கொண்டும், அதில் ஜீவித்துக்கொண்டும் இருக்கிறாள், அதை விசுவாசிப்பதன் மூலம் அவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.

எந்த மனிதனும் நம்மிடமிருந்து அதை எடுத்துப் போட முடியாது. நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. அவருடைய ஆவி நமக்குள் கொழுந்து விட்டு எரிந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய ஜீவனை, அவருடைய ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார், அவர் தம்முடைய ஜீவனை நம்மில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் தேவனுக்குள் மறைக்கப்பட்டு, அவருடைய வார்த்தையினால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சாத்தானால் நம்மை தொட முடியாது. நாம் அசைக்கப்பட முடியாது. எதுவுமே நம்மை மாற்ற முடியாது. வெளிப்பாட்டினால், நாம் அவருடைய வார்த்தை மணவாட்டியாகியிருக்கிறோம்.

சாத்தான் நம்மை வீழ்த்த முயற்சிக்கும்போது, தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறோம். அவர் நம்மை நோக்கிப் பார்க்கும்போது, அவர் பார்ப்பதெல்லாம் பசும் பொன்னையே. நம்முடைய நீதியே அவருடைய நீதி. நம்முடைய தன்மைகள் அவருடைய சொந்த மகிமையான தன்மைகளாகும். நம்முடைய அடையாளம் அவரில் காணப்படுகிறது. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நாம் இப்பொழுது பிரதிபலிக்கிறோம். அவர் என்னவாக இருந்து வருகிறார் என்பதை நாம் இப்பொழுது வெளிப்படுத்துகிறோம்.

அவர் சாத்தானிடம், “நான் அவளில் எந்த குற்றத்தையும் காண்கிறதில்லை. அவள் பரிபூரணமாக இருக்கிறாள். எனக்கு அவள், என்னுடைய மணவாட்டியாய், உள்ளும் புறமும் மகிமையாயிருக்கிறாள். ஆதி முதல் அந்தம் வரை, அவள் என்னுடைய கிரியையாய் இருக்கிறாள், என்னுடைய கிரியைகள் யாவும் பரிபூரணமாக இருக்கின்றன. உண்மையில், அவளில் எனது நித்திய ஞானமும் நோக்கமும் அமைந்து வெளிப்படுத்தப்படுகிறது" என்று சொல்வதற்கு எவ்வளவாய் விரும்புகிறார்.

“என்னுடைய அன்பான மணவாட்டியை நான் பாத்திரமானவளாகக் கண்டேன். பொன்னானது அதிக அடிகளை சுமப்பது போல, அவள் எனக்காக வேதனையை சுமக்கிறாள். அவள் சமரசமாகிவிடாமல், தலை வணங்காமல், அல்லது உடைந்து போகாமல், ஒரு அழகான காரியமாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். இந்த ஜீவியத்தின் அவளுடைய சோதனைகளும் பரிசோதனைகளும் அவளை என்னுடைய இனிய இருதயமான மணவாட்டியாக ஆக்கியிருக்கிறது.”

அது கர்த்தரைப் போன்றது அல்லவா? நம்மை எப்படி ஊக்கப்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும். அவர் நம்மிடத்தில், "ஒருபோதும் திடனற்றுப் போகாதீர்கள், ஆனால் திடப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார். அவரிடத்தில் கொண்டுள்ள நம்முடைய அன்பின் பிரயாசங்களை அவர் காண்கிறார். நாம் எதனூடாக செல்ல வேண்டும் என்பதை அவர் காண்கிறார். நாம் செய்கிற அனுதின யுத்தங்களை அவர் காண்கிறார். அவர் நம் ஒவ்வொருவர் மூலமாக ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்.

அவருடைய பார்வையில் நாம் பரிபூரணமாய் இருக்கிறோம். அவர் காலத்தின் துவக்கத்திலிருந்து நமக்காக காத்திருக்கிறார். நம்முடைய நன்மைக்காக மாத்திரமேயல்லாமல் வேற எதுவும் நமக்கு சம்பவிக்க அவர் அனுமதிக்கமாட்டார். சாத்தான் நமக்கு முன் வைக்கும் ஒவ்வொரு தடையையும் நாம் மேற்கொள்வோம் என்பதை அவர் அறிவார். நாம் அவருடைய மணவாட்டி என்பதை அவருக்கு நிரூபிக்க அவர் விரும்புகிறார். நாம் அசைக்கப்பட முடியாது. ஆதியிலிருந்தே அவர் காத்துக் கொண்டிருப்பது நமக்கே. அவரிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது.

அவர் உதட்டிலிருந்து நம்முடைய செவிக்கு பேசும்படியாக தம்முடைய வல்லமையுள்ள தூதனாகிய செய்தியாளரை நமக்கு அனுப்பினார். அவர் என்ன கூறினார் என்பதை குறித்த கேள்விகளே இல்லாத இருக்கும்படிக்கு அவர் அதை ஒலிப்பதிவு செய்திருந்தார். அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருமளவும் அவள் அதை புசிக்கும்படியாக அவர் அதை சேமித்து வைத்திருந்தார்.

நாம், “ஒலி நாடாவை கேட்கிற ஜனங்கள்” என்று கூறி மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு, நம்மை துன்பப்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் களிகூருகிறோம், ஏனென்றால் இதைத்தான் நாம் செய்யும்படி அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றவர்கள் செய்யும்படி வழிநடத்தப்படுவதை அவர்கள் உணருகிற விதமாக செய்ய வேண்டும் ஆனால் நம்மைப் பொறுத்தவரை, நாம் ஒரே சத்தமான, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

வேறு எதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நாம் வேறு எதையும் புரிந்து கொள்ள முடியாது. நாம் வேறு எதுவும் செய்ய முடியாது. நாம் வேறு எதையும் ஏற்க முடியாது. மற்ற விசுவாசிகள் செய்யும்படி உணருகிற கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு நாம் எதிராக இல்லை, ஆனால் இதைத்தான் நாம் செய்யும்படி தேவன் நம்மை வழிநடத்தியிருக்கிறார், நாம் இங்கே தரித்திருக்க வேண்டும்.

நாம் திருப்தியடைந்துள்ளோம். நாம் தேவனுடைய சத்தத்தால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் நம்மால் “ஆமென்” என்று கூற முடியும். இதுவே நமக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது. நாம் வேறு எதுவும் செய்ய முடியாது.

எங்களோடு இணைந்து கொள்ள வருமாறு ஒவ்வொருவரையும் அழைக்க நான் விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம் பூமியில் இருந்தபோது எப்படிச் செய்தாரோ, அந்தச் ஆராதனைகளையே நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு மாம்சத்தில் இல்லையென்றாலும், ஒலிநாடாக்களில் தம்முடைய மணவாட்டிக்கு தேவன் என்ன கூறியிருக்கிறாரோ அதுவே முக்கியமான காரியமாய் இருக்கிறது.

தொலைபேசி இணைப்பின் மூலமாக அவர் உலகத்தையே அழைத்தார், ஆனால் அவர்கள் விரும்பினால் மாத்திரமே. தேவனுடைய சத்தம் அவர்களுடன் ஒரே நேரத்தில் பேசுவதைக் கேட்க அவர் அவர்களை எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் சேர்த்தார். தேவனுடைய தீர்க்கதரிசி அதைத்தான் செய்தார், எனவே அவர் என்ன செய்தார் என்பதை நான் என் முன்மாதிரியாக செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, தேவனுடைய செய்தியாளர் இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M என்ற செய்தியை எங்களுக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தொலைபேசி இணைப்பில் எங்களுடன் இணைந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 24வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரேயர் 7வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14