ஞாயிறு
09 பிப்ரவரி 2025
61-0730E
தானியேலைச் சந்தித்த காபிரியேலின் ஆறுவித நோக்கங்கள்

அன்புள்ள களிகூருகிற மணவாட்டியே,

நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நாளையும் வேளையையும் கண்டறிய ஜெபத்திலும் வேண்டுதல்களிலும் நம்முடைய முகங்களை பரலோகத்தை நோக்கியவாறு வைத்துள்ளோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகெங்கிலும் இருந்து உன்னதங்களிலே ஒன்றாக வீற்றிருந்து, தேவன் பேசி, அவருடைய பலமுள்ள தூதுனாகிய செய்தியாளர் மூலமாக அவருடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவதைக் கேட்கிறோம். இந்த கடைசி நாளில் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்த பிதாவானவர் தம்முடைய மணவாட்டிக்கு பூமிக்குரிய தூதனாகிய செய்தியாளரை அனுப்பினார்.

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாகிய யூதர்களுக்கு காபிரியேல் தூதனாய் இருக்கிறார். ஆனால் தம்முடைய புறஜாதி மணவாட்டிக்கு, அவர் தம்முடைய அன்பான இனிய இருதயமான மணவாட்டிக்கு அவருடைய எல்லா வார்த்தையும் பேசி வெளிப்படுத்தும் படியாக வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்னும் பெயர் கொண்ட பூமிக்குரிய தூதனில் மாம்ச சரீரத்தினூடாக மெல்கிசேதேக்கு தாமே வந்து பேசினார்.

மணவாட்டி அவருடைய ஆவிக்குரிய ஆகாரத்தை, மறைவான மன்னாவை கடைசி மணி நேரம் வரை ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் தங்களுடைய விரல் நுனியில் வைத்திருக்கும்படியாக, அவர் அதை பதிவுசெய்து, சேமித்து, பாதுகாத்து வைத்திருந்தார்.

தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்துவதை நாம் கேட்கும்போது, நம்முடைய உள்ளான மனுஷன் அத்தகைய அபிஷேகத்தால் நிரப்பப்படுகிறது. நாம் அவருடைய வார்த்தையை தெளிவாக கண்டு அதனுடைய அர்த்தத்தை புரிந்து கொள்ளும்படியாக எப்படியாய் அவர் வெளிப்படுத்துகிறார். அது நாம் ஜீவித்து கொண்டிருக்கிற வேளையையும், நாம் யாராய் இருக்கிறோம் என்றும், வெகு சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதையும், சீக்கிரத்தில் வரப்போகிற நம்முடைய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலையும் நமக்கு சொல்லி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நாம் கலியாண விருந்தில் அவருடன் இருக்கும்போது இங்கே பூமியில் என்ன சம்பவிக்கும் என்பதை அவர் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்திக் கொண்டும் கூட இருக்கிறார். அவர் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களின் குருடாக்கப்பட்ட கண்களை எவ்வாறு திறப்பார்; அவருடைய புறஜாதி மணவாட்டி நிமித்தமாக அவர் குருடாக்கினவர்கள்.

என் நண்பர்களே, நாம் இந்த உலகத்தில் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், நம்மை அழைத்துச் செல்லும்படியான அவருடைய வருகைக்காக ஏங்குகிறோம் என்பதை நான் அறிவேன், ஆனால் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதில் நன்றியுள்ளவர்களாயிருந்து நாமும் கூட களிகூருவோமாக.

நாம் நம்முடைய கரங்களையும், நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சத்தங்களையும் உயர்த்தி களிகூருவோமாக. வெகு சீக்கிரத்தில் அவர் நமக்காக என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, அவர் என்ன வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை குறித்தும், இப்பொழுது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை குறித்தும் நாம் களிகூருவோமாக.

அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் ஒன்றாக இணைகிற அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாய் நாம் இருக்கிறோம் என்று அவர் நிமிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய சத்தத்தோடும், அவருடைய வார்த்தையோடும், அவருடைய தூதனோடும் தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அவர் மீண்டும் மீண்டும் நமக்கு உறுதியளித்துக்கொண்டிருக்கிறார், நாம் யார் என்பதை அறிவதிலும், அடையாளங் கண்டு கொள்வதிலும் அவர் நமக்கு விசுவாசத்தை அளித்துள்ளார்:

மாம்சத்தில் ஜீவிக்கிற அவருடைய வார்த்தை.

நாம் பயப்பட ஒன்றுமில்லை; கவலைப்படவும் ஒன்றுமில்லை; வருத்தப்படவும் ஒன்றுமில்லை. அது எனக்கு எப்படி தெரியும்? தேவன் அவ்வண்ணமாய் கூறினார்! எனவே நாம் களிகூர்ந்து, மகிழ்ச்சியாயிருந்து, நன்றியுள்ளவர்களாக இருப்போமாக; ஜீவனுள்ள வார்த்தை நமக்குள் ஜீவித்து வாசம் செய்கிறது. நாம் அவருடைய மேம்பட்ட ராஜரீக வித்தாயிருக்கிறோம்.

நேரம் வந்துவிட்டது என்பதையும், அவருடைய வார்த்தைக்கு உண்மையாகவும், உண்மையாக காத்துக் கொள்வதன் மூலமும் நாம் நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளோம் என்பதை அறிந்து கொள்வதில் கர்த்தரும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன்.

முதன்முறையாக கண்ணாடியில் பார்த்த சிறுவனைப் போல, நாம் அவருடைய வார்த்தைக்குள்ளாக நோக்கி பார்த்துக் கொண்டு, நாம் யாராயிருக்கிறோம் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே...அது நான் தான். நான் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டி. நீர் தெரிந்து கொண்ட ஒருவன் நான் தான். நான் உமக்குள் இருக்கிறேன். நீர் எனக்குள் இருக்கிறீர், நாம் ஒன்றாயிருக்கிறோம்.

பூமியின் மேல் எப்போதும் ஜீவித்தவர்களிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஜனங்களாய் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி நம்மால் கொண்டாடாமல் இருக்க முடியும்?

நமக்கு முன் இருந்த எல்லா பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் இந்த நாளில் ஜீவிக்க விரும்பி, இந்த இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதை காண விரும்பினர். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் எங்களை இங்கே வைத்தார்.

நாம் காத்திருக்க முடியவில்லை:

ப்ர்ர்ர்ர்! என்னே! வூயு! வேறு வார்த்தைகளில் கூறினால், சத்துருவானவன் அடைக்கப்பட்டபொழுது, பாவமானது முடிவுக்குக் கொண்டு வரப்படும் போது, நித்திய நீதியானது வருவிக்கப்படும் பொழுது, சாத்தானானவன் பாதாளக் குழியில் தள்ளியடைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டிருக்கும் போது, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஆமென்! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அது வரப்போகிறது. சகோதரனே, அது வரப் போகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தானியலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள் 61-0730E என்ற செய்தியை தேவனுடைய தூதன், தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வருவதை கேட்கும்படி உலகம் முழுவதிலுமிருந்து நாங்கள் ஒன்று கூடியிருக்கையில், என்னே ஒரு அபிஷேகம் இருக்கப்போகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்