

அன்புள்ள உள்ளூர் மந்தையே,
புத்தாண்டிற்கு முந்தின மாலை, டிசம்பர் 31 அன்று நம்முடைய வீடுகளில் மீண்டும் ஒருமுறை இராப்போஜனம் நடத்த நான் விரும்புகிறேன். திராட்ச ரசத்தை எப்படிப் பெறுவது, மற்றும் இராபோஜன அப்பத்தை எப்படி சுடுவது என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். ஆராதனை ஒலிப்பதிவினை பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பு விரைவில் எங்கள் இணையதளத்தில் கிடைக்கும். அல்லது, நீங்கள் லைஃப்லைன் பயன்பாட்டிலிருந்து ஆராதனை ஒலிப்பதிவை இயக்கலாம்.
ஜெபர்சன்வில் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு, டிசம்பர் 30, வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 - 4:00 க்கு இடையில், விஜிஆர் (VGR) தற்காலிக பந்தலின் அடியில் நீங்கள் இராப்போஜன திராட்ச ரசத்தை எடுத்துக்கொள்ளலாம்.
டிசம்பர் 31 அன்று, கிழக்கத்திய நேரப்படி, சனிக்கிழமை மாலை, 5:00 மணிக்குத் தொடங்கி 62-1231 போட்டி & இராப்போஜனம் என்ற செய்தியை நாங்கள் கேட்போம். சகோதரன் பிரான்ஹாம் புத்தாண்டிற்கு முந்தின மாலை செய்தியைக் கொண்டு வந்த பிறகு, நாங்கள் ஒலிநாடாவை இடைநிறுத்தி, கர்த்தருடைய இராப்போஜனத்திற்காக நாங்கள் ஆயத்தமாகும்போது ஏறக்குறைய 10 நிமிடங்கள் ஆராதனைப் பாடல்களைக் கேட்போம். பிறகு சகோதரன் பிரான்ஹாம் இராப்போஜன ஆராதனையை தொடங்கும் இடத்தில் ஒலிநாடாவை மீண்டும் தொடர்வோம். இந்த ஒலிநாடாவில், ஆராதனையின் கால்களைக் கழுவும் பகுதியை அவர் தவிர்க்கிறார், அதை நாமும் கூட தவிர்ப்போம்.
அவருடைய ஆராதனையில் இன்னொரு வருடத்திற்கு நாம் திரும்பும்போது, முதலில் வார்த்தையைக் கேட்பதன் மூலமும், பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வதன் மூலமும் நம்முடைய வாழ்க்கையை அவருக்கு மீண்டும் அர்ப்பணிப்போமாக, ராஜாதி ராஜா நம்முடன் இணைந்துகொள்ள உள்ளே வருவதை வரவேற்க நம்முடைய வீடுகளை ஒரு பரிசுத்த ஸ்தலமாக மாற்ற நமக்கு மீண்டும் ஒரு விலையேறப்பெற்ற தருணம் கிடைத்துள்ளது.
தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப்