என் அன்பான பரலோகத்தின் ராணியே,
இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்காக நிறைய சேமிப்பில் வைத்திருக்கிறேன். முதலில், நீங்கள் இடி முழக்கத்தைக் கேட்பீர்கள். இது என்னுடைய சத்தமாக இருக்கும், என் மணவாட்டியாகிய, உங்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தம். முன்னெப்போதும் இல்லாத வகையில் என்னுடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்துவேன். நீங்கள் என்னை, உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர், புத்தகத்தை எடுத்து திறந்து, முத்திரைகளை உடைத்து, அதை பூமிக்கு என்னுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளராகிய, வில்லியம் மரியன் பிரான்ஹாமினிடத்திற்கு, உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும்படி பூமிக்கு அனுப்புவதை காண்பீர்கள்!
நான் உங்களிடம் பேசும்போது உலகம் முழுவதிலும் இருந்து சத்தமிடுதலும், ஆரவாரமும், அல்லேலூயாக்களுமாய் இருக்கும். சிங்கம் கர்ஜிக்கும்; அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், வல்லமை, மகிமை, வெளிப்படுத்துதல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். என் ராணியே, நீ, நான் உன்னிடம் பேசி எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை உனக்கு அளிக்கும்போது, நீ உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்திருப்பாய்.
பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை நீங்கள் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களிடத்திற்கு அனுப்பின என்னுடைய தூதனுக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் சொன்னேன்.
அவன், “பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்பக் கொண்டுவர” வேண்டியவனாய் இருக்கிறான். மூல வேத விசுவாசமானது ஏழாம் தூதனால் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டியதாயுள்ளது.
ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், அவனுடைய சுவிசேஷ எக்காளத்தை முழங்குகையில்; அவன் எல்லா தேவனுடைய ரகசியங்களையும் முடிக்க வேண்டியவனாய் இருக்கிறான் என்று என்னுடைய வார்த்தை உங்களுக்கு சொல்கிறது. நான் ஒலிநாடாக்களில் கூறியுள்ளதிலிருந்து ஒரு காரியமும் சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ முடியாது; என்னுடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக நான் பேசியதை அப்படியே கூறுங்கள். நீங்கள் எளிமையாக இயங்கு பொத்தானை அழுத்தி நான் சரியாக என்ன கூறினேன் என்றும், நான் எப்படி கூறினேன் என்றும் கேட்கும்படியாக அதைத்தான் நான் ஒலிப்பதிவு செய்திருந்தேன். அது உங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளிக்கும்.
என் அன்பான ராணியே, என்னுடைய பார்வையில், நீ பரிபூரணமானவளாய், முற்றிலுமானவளாய், எனக்கு முன்பாக பாவமற்றவளாய் இருக்கிறாய். கவலைப்படாதீர்கள், நீங்கள் உபத்திரத்தினூடாக செல்வதில்லை; ஏனென்றால் நீங்கள் என்னுடைய இரத்தத்தை, என்னுடைய வார்த்தையை, என்னுடைய தூதனை, என்னுடைய சத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், எனவே நீங்கள் எனக்கு முன்பாக முற்றிலும் பாவமற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
உங்களுக்காக அப்பேர்ப்பட்ட மகத்தான காரியங்களை சேமிப்பில் நான் வைத்துள்ளேன். ஒவ்வொரு நாளும் உங்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய வார்த்தை வெளிப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று சொல்ல நான் வானத்தில் அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் வருகிறேன், ஆயத்தமாகுங்கள். என் வார்த்தையை, என் சத்தத்தை, உங்களுடைய ஜீவியத்தில் முதலில் வையுங்கள்.
எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள், என் வார்த்தையை விட முக்கியமானது எதுவுமில்லை. சத்துரு உங்களை வீழ்த்த முயற்சிக்கிறான் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்களை உயர்த்துவேன் என்று நான் உங்களுக்கு வாக்களித்தேன். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருக்கிறேன் நான் என்னுடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்தும்போது நீங்களும் நானும் ஒன்றாகிறோம். நீங்கள் உங்களுடைய இருதயத்தில், நீங்கள் என்னுடைய ராணி மணவாட்டியாய் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். நான் உங்களை முன்குறித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களோடு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்களிடத்தில் என்னுடைய தூதன் மூலமாக நான் பேசுவதை நீங்கள் கேட்கும் போது, நான் உங்களுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகமாக வெளிப்படுத்தும் போது, நாம் அப்பேற்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருப்போம். நீங்கள் காண்கிறதை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அல்லது காணாமல் இருக்கலாம், ஆனால் இதுவே என்னுடைய அருளப்பட்ட வழி என்பது உங்களுடைய இருதயத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கிறது.
நான் உங்களுக்காக என்னே ஒரு அடைக்கலத்தை அருளியுள்ளேன். நான் உங்களிடத்தில் பேசுவதை கேட்கும்படி, இரவிலோ அல்லது பகலிலோ, நீங்கள் எந்த நேரத்திலும் எளிமையாய் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க முடியும். நீங்கள் யாராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களிடத்தில் சொல்லி, என்னுடைய வார்த்தையை நான் வெளிப்படுத்தும் போது நான் உங்களுடைய ஆத்துமாவிற்கு ஆறுதலைக் கொண்டு வருவேன். ஒவ்வொரு செய்தியும் உங்களுக்கானதாயும், உங்களுக்காக மாத்திரமேயுள்ளதாயும் உள்ளது. நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாம் ஒன்று சேர்ந்து ஐக்கியங்கொண்டு, ஆராதிக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த மகத்தான ரகசியங்கள் வெளிப்படுவதை கேட்கும்படி உலகம் முழுவதிலும் இருந்து மணவாட்டியின் ஒரு பாகத்தினர் ஒன்று கூட்டப்படுவர். நாங்கள் “முதலாம் முத்திரை - 63-0318” என்ற செய்தியை கேட்கும் போது நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப்
செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 10:1 / 11:1-14 / 24:6 / 28:19
பரி .யோவான் 12:23-28
அப்போஸ்தலர் 2:38
2 தெசலோனிக்கேயர் 2:3-12
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2 / 10:1-7 / 12:7-9 / 13:16 / 19:11-16
மல்கியா 3-வது மற்றும் 4வது அதிகாரங்கள்
தானியேல் 8:23-25 / 11:21 / 9:25-27
தொடர்புடைய சேவைகள்
அன்பான திரும்பளிக்கப்பட்டவர்களே,
நாம் யாராய் இருக்கிறோம் என்றும், எங்கிருந்து வருகிறோம் என்றும், எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றும், நாம் என்ன சுதந்தரிக்கப் போகிறோம் என்றும், அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும் தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் சொல்வதை கேட்பதை குறித்து நான் ஒருபோதும் களைப்படைவதில்லை.
ஒரு பரிசுத்த ஆசாரியக் கூட்டமாயும், ஒரு ராஜரீக சந்ததியாயுமாயிருந்து தேவனுக்கு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகின்றனர் என்றும், அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவர்கள் செலுத்துகின்றனர்” என்று கூறினார். என்னே—என்னே ஜனங்கள்! அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்.
தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்பதன் மூலம் மட்டுமே நமக்கு ஆறுதலும் சமாதானமும் கிடைக்கிறது, பின்னர் நம் உதடுகளின் கனிகளால் ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தி, அவருடைய நாமத்தைத் துதிப்பதன் மூலம் பிதாவிடம் திரும்ப பேசுகிறோம்.
இந்த முழு உலகமும் தவித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையும் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமும் தவித்துக் கொண்டு, கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் நமக்காக எதையும் வைத்திருக்கவில்லை. நாம் நம்முடைய கல்யாண விருந்துக்கும், அவரோடும், காலத்தின் திரைக்கப்பால், நமக்காக காத்துக் கொண்டு ஏற்கனவே அங்கு சென்றுள்ளவர்களோடு பரலோக வீட்டில் இருக்கும்படிக்கு புறப்பட்டு செல்ல ஆயத்தமாய் இருக்கிறோம்.
நாமே எழுந்து நம்மையே குலுக்கிக் கொள்வோமாக! நம்முடைய மனசாட்சியே குத்தட்டும், இப்போது என்ன நடக்கிறது என்றும், ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்போழுதிலே என்ன சம்பவிக்கப் போகிறது என்பதற்கு நம்மை விழித்தெழச் செய்வோமாக.
உலக வரலாற்றில் கிறிஸ்துவின் மணவாட்டி உலகெங்கிலும் இருந்து ஒன்றுபடுவது ஒருபோதும் சாத்தியமில்லை, ஆனால் ஒரே நேரத்தில், தேவனுடைய சத்தம் பேசுவதையும் அவருடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவதையும் கேட்க முடியும்.
விசுவாசிகளே, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், எந்த சத்தம், எந்த ஊழியக்காரர், எந்த மனிதன், கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து ஒன்றாகக் கொண்டுவர முடியும்? நீங்கள் கிறிஸ்துவின் மணவாட்டி என்றால், ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு சத்தமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆம், பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரிலும் இருக்கிறார், சபையின் ஒவ்வொரு ஊழியத்திலும் இருக்கிறார், ஆனால் தேவன் தாமே தம் வார்த்தையின் மூலம் உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்று நமக்குச் சொன்னார். அவருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசியிடம் வருகிறது என்பதை மணவாட்டி அறிந்திருக்கிறாள். அவருடைய தீர்க்கதரிசி மாத்திரமே அவருடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் உரைத்ததிலிருந்து எதுவும் சேர்க்கப்படவோ அல்லது அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவோ முடியாது. ஒலிநாடாக்களில் உள்ள அந்த வார்த்தையின் மூலமாகவே நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, வேறு வார்த்தையினாலோ அல்லது அந்த வார்த்தையின் வியாக்கியானத்தினாலோ அல்ல.
மணவாட்டியை ஒன்றுபடுத்துவது வேறு எந்தக் சத்தத்திற்கும் சாத்தியமில்லை. ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் மாத்திரமே அவருடைய மணவாட்டியை ஒன்றிணைக்க முடியும். மணவாட்டி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வார்த்தை இது மாத்திரமேயாகும். இது மாத்திரமே அவருடைய மணவாட்டிக்கு அவருடைய சத்தமாயிருக்கும்படி தேவன் தாமே ரூபகாரப்படுத்தின ஒரே சத்தமாய் இருக்கிறது. அவருடைய மணவாட்டி அவரோடு ஒருமனப்படும்படி ஏகமனதாய் இருக்க வேண்டும்.
ஊழியக்காரர்கள் ஊழியம் செய்யலாம், போதகர்கள் போதிக்கலாம், மேய்ப்பர்கள் மேய்ப்பரின் பணியைச் செய்யலாம், ஆனால் ஜனங்களுக்கு முன்பாக அவர்கள் வைக்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாக இருக்க வேண்டும். இதுவே மணவாட்டினுடைய முற்றிலுமானதாய் இருக்கிறது.
உங்களுக்கு அது பற்றிய ஒரு வெளிப்பாடு இருந்தால், இதுதான் நடக்கப் போகிறது.
ஆதாம் பூமியின் மேலிருந்த தன் சுயாதீனத்தை இழந்து போனான். அது, அவன் யாருக்கு அதை விற்றுப்போட்டானோ, அவன் ஆதிக்கத்தில் சென்றது, சாத்தான். அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைப் பிசாசின் விவேகத்திற்காக விற்றுப்போட்டான். அவன் ஒவ்வொரு காரியத்தையும் சாத்தானுடைய கரங்களுக்கு பறி கொடுத்து விட்டான். அவன் அதை தன் கரத்திலிருந்து சாத்தானுக்கு மாற்றிவிட்டான்.
தேவன் அண்ட சராசரங்களின் தேவன், அவர் எங்குமுள்ளவர். அவர் புத்திரன் இப்பூமியை தன் சொந்த கட்டுக்குள் வைத்திருந்தான். அவன் பேசினான், அவன் பெயரிட்டான். அவன் இயற்கையை நிறுத்தினான். எது வேண்டுமானாலும் அவனால் செய்யமுடிந்தது. அவன் பூமியின் மேல் பரிபூரண அதிகாரம் கொண்டிருந்தான்.
ஆதாம் அனைத்தையும் இழுந்து விட்டான், ஆனால் தேவனுக்கு மகிமை, அவன் இழந்த மற்றும் பறிகொடுத்த அனைத்தையும் நம்முடைய இனத்தான் மீட்பர் மீட்டெடுத்துள்ளார், சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர அது வேறுயாருமல்ல, நம்மில் ஒருவராக இம்மானுவேல் ஆனார். இப்போது, அது நம்முடையது.
நாம் அவருடைய குமாரர்களும் குமாரத்திகளும், அவருடன் அரசாளும் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருக்கிறோம். அவரோடும், நாம் நேசிக்கிற அனைவரோடும் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. இனி சுகவீனமே இல்லை, இனி துக்கமும் இல்லை, மரணமும் இல்லை, யாவும் ஒன்று சேர்ந்து நித்தியமாயுள்ளது.
அதை நினைக்கும் போது, பிசாசு எப்படி நம்மை வீழ்த்த அனுமதிக்க முடியும்? இது நம்முடையது, அங்குதான் நாம் மிக விரைவில் செல்கிறோம். அவர் நமக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய காரியத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த பூமியின் மேலுள்ள இந்த சில நாட்களின் சோதனைகளும் பரிசோதனைகளும் நமக்கு சில நாட்கள் முன்னால் இருக்கும் நம்முடைய மாபெரும் வெற்றியால் விரைவாக மூழ்கடிக்கப்படுகின்றன.
நம்முடைய விசுவாசம் ஒருபோதும் மகத்தானதாக இருந்து வந்ததில்லை. நம்முடைய சந்தோஷம் ஒருபோதும் உயர்ந்ததாக இருந்து வந்ததில்லை. நாம் யாராக இருக்கிறோம் என்றும், நாம் அங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம். அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அறிவோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒலிநாடக்களோடு தரித்திருந்து, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்; எல்லாவற்றையும் புரிந்து கொள்வது அல்ல, ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்…நாம் அவ்வாறு செய்கிறோம்!
விசுவாசம் கேட்பதால், வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது. தீர்க்கதரிசியிடம் வார்த்தை வருகிறது. தேவன் அதை உரைத்தார். தேவன் அதை பதிவு செய்தார். தேவன் அதை வெளிப்படுத்தினார். நாம் அதைக் கேட்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை கேட்பதன் மூலமே மாத்திரமே நாம் இந்த வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கிறிஸ்து முடிவில் என்ன செய்வாரென்பது இவ்வாரம் ஏழு முத்திரைகள் உடைக்கப்படும்போது வெளிப்படும். தேவன் நம்மை அறிந்துகொள்ளும்படிச் செய்வார். பாருங்கள்? சரி. அது வெளிப்படுத்தப்படும். அது வெளிப்படுத்தப்படும்பொழுது, முத்திரைகள் உடைக்கப்பட்டு, அது நமக்கு வெளிப்படுத்தப்படும்போது, தேவனுடைய மகத்தான மீட்பின் திட்டம் என்னவென்றும், அது எங்ஙனம் நிகழுமென்றும், அது எப்பொழுது சம்பவிக்குமென்றும் நாம் அப்பொழுது அறிந்துக் கொள்ளலாம். அவையெல்லாம் இந்த இரகசிய புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ளது. அது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டுள்ளது, ஆகவே ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே அவைகளை உடைக்க முடியும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பகுதியினர் ஒரே நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பார்கள். நாம் நம்முடைய ஜெபங்களினாலும் அவரை ஆராதிப்பதினாலும் பரலோகத்தை முற்றுகையிட்டிருப்போம். ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு 63-0317 என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது, நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.
இந்த வார இறுதியில் ஜெபர்சன்வில்லில் நேர மாற்றம் பற்றி மறந்துவிடாதீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
அன்புள்ள குட்டையில் உள்ள லீலிபுஷ்பங்களே,
பிப்ரவரி 28, 1963 அன்று, இடி முழங்கியது. வ்வுயூ-வ்வுயூ, ஏழு தூதர்கள் நித்தியத்திலிருந்து வந்து தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கு தோன்றினர். அவர் கூர்நுனிகோபுர வடிவிலான தூதர்களின் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார். அதன்பின்னர், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட மேகம் அரிசோனா முழுவதும் ஆகாயத்தில் தோன்றியது. ஏழு முத்திரைகளை திறப்பதற்கு தேவன் தம்முடைய ஏழாம் தூதனை திரும்பவும் ஜெபர்சன்வில்லுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதற்கு அது ஒரு அடையாளமாயிருந்தது.
பிப்ரவரி 28, 2025 அன்று, ஏழு கிரகங்கள் ஆகாயத்தில் ஒரே வரிசையில் இருந்தன. மணவாட்டி ஏழு முத்திரைகளைக் கேட்கக் கூடி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துகிற ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டை கேட்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியுடன் கூடிவர நீங்கள் கர்த்தரால் தாமே அழைக்கப்படுகிறீர்கள்.
தீர்க்கதரிசிகளும், ஞானிகளும் காலத்தின் துவக்கத்திலிருந்து ஆவலோடு காத்துக்கொண்டிருந்தது இந்நாளில் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய கல்யாண விருந்துக்கு தம்முடைய உண்மையான மணவாட்டியாகிய நமக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு திரும்ப வரும்படியாக, இந்த கடைசி நாட்களில் தேவனுடைய மறைக்கப்பட்ட இரகசியங்களை திறக்கவும் வெளிப்படுத்தவும் தேவன் பலமுள்ள தூதனை பூமிக்கு அனுப்புவதாக கூறினார்.
நான் இப்புதிய சபையில் நுழைந்ததும் என் முதல் வேலையாக, அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபனுக்கும் வாலிபப் பெண்ணுக்கும் விவாகம் செய்து வைத்தேன். அந்நாளின் வைபவத்திற்கென ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரணாக நான் இருப்பேன் என்பதற்கு இது ஓர் அடையாளமாயிருப்பதாக.
இந்த நாளில், இந்த வார்த்தை நிறைவேற்றப்படுகிறது. தேவன் தம்முடைய தூதனின் மூலமாக பேசி, தம்முடைய மணவாட்டியை அந்த நாளின் வைபவத்திற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் அவருடைய அறிவுரைகளை கடிதம் மூலம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறாள்.
சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களின் மூலமாக நாம் என்ன கேள்விப்பட்டிருக்கிறோம்? ஆகாரம், இதோ அது உள்ளது, இதுதான் இடம். ஒரு சத்தம் அவரிடத்தில், “ஆகாரத்தை கொண்டு வந்து, அதை சேமித்து வை. அவைகளை இங்கே வைத்திருப்பதற்கான ஒரே வழி அவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்காகவேயாகும்” என்று கூறினது.
அவர் "வார்த்தையுடன் தரித்திருங்கள்" என்பது தான் அர்த்தம் என்று பலர் நம்புகிறார்கள், அது உண்மைதான், அவர் அதைக் கூறிக் கொண்டிருக்கிறார்; ஆனால் மணவாட்டியோ மணவாளன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற வாக்கியங்களுக்கு இடையேயான மறைபொருளைக் கூட கூர்ந்து கவனித்து வாசிப்பாள்.
இந்த ஸ்தலத்தில் இங்கே தேவன் எனக்கு அருளின தரிசனங்களும்கூட தவறாக அர்த்தங் கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாகத்தான், “ஒலி நாடாக்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் சொல்லுங்கள், தரிசனங்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் கூறுங்கள்” என்று ஒலிநாடாக்களில் நான் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் நன்றாக விழித்திருந்தால் ஒன்றை உங்களால் காணமுடியும். பாருங்கள்? நான் அதை என் கையில் பிடித்து உங்களுக்குக் காண்பிக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.
அவர் தரிசனங்களுக்கு வியாக்கியானங்களை கொடுத்த பிறகும் கூட, தரிசனங்களும் கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தன. அதைத்தான் அவர் நம்மிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், நீங்கள் குழப்பமடையவோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லையென்றால், இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தம் என்ன கூறுகிறது என்பதை சரியாக கேளுங்கள்.
வார்த்தை கூட்டு அர்த்தங்களை கொண்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இது என்னுடைய வியாக்கியானம்: சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் அனைத்தும் ஒரே காரியத்தைக் கூறின; ஒலிநாடாக்களுடன் தரித்திருங்கள். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், ஒலிநாடாக்களுக்கு செல்லுங்கள். ஒலிநாடாக்கள் தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமாய் இருக்கின்றன. ஒலிநாடாக்களில் உள்ளதை அப்படியே கூறுங்கள்; அதில் எதையும் சேர்க்காதீர்கள். ஒலிநாடாக்கள் மணவாட்டிக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளன. வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு தனியாக வருகிறது. தீர்க்கதரிசி மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியாயிருக்கிறார். தீர்க்கதரிசி மணவாட்டியை அழைத்து வழிநடத்த வேண்டியதாயிருந்தது. ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளதைக் கொண்டே நான் நியாயந்தீர்க்கப்படுவேன்.
ஒவ்வொரு காரியமும் எனக்கு ஒலிநாடக்களையே சுட்டிக் காட்டுகின்றன.
என்னுடைய அருமையான குட்டையில் உள்ள லீலி புஷ்பங்களே, எனக்கு, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இன்றைக்கான எளிமையில் தேவன் உள்ளதாகும்.
ஒவ்வொரு வாரமும் நான் அதிக உற்சாகமடைகிறேன்; அவருடைய மணவாட்டி செய்தியைக் கேட்க கூடிவருகையில் இன்று என்ன வெளிப்படுத்தப்பட போகிறது? பரிசுத்த ஆவியானவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தும்போது, அவர் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்வார் என்பதை நான் அறிவேன். நான் உணர்கிறேன், எந்த நேரத்திலும், அவர் நம்முடைய கலியாண விருந்துக்கு வந்து நம்மை அழைத்துச் செல்வார்.
நாம் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். நாம், தேவனிடத்திலிருந்து வந்த சந்ததிகளாய் இருக்கிறோம். நாம் பூமியின் சுதந்திர வாளியாயிருக்கிறோம். நாம் இயற்கையை கட்டுப்படுத்துவோம். நாம் சிருஷ்டிக்கும்படி உரைப்போம். நாம் மணவாட்டியாய் இருக்கிறோம்!
நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நாம் நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்கு நம்மை பிரதிஷ்டை செய்வோமாக!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
தேதி: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2025
செய்தி: தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல் 63-0317M
நேரம்: பிற்பகல் 12:00, ஜெபர்சன்வில் நேரம்.
அன்புள்ள ஐயன்மீர்,
இது, அடையாளம். இது, நேரம். இது, செய்தியாய் உள்ளது. இது, வார்த்தை. இது, தேவனுடைய சத்தம். இது, மனுஷகுமாரன். இது, தேவன் அருளியிருக்கிற வழி. இதுவே, கடைசி காலம்.
எந்த தீர்க்கதரிசியும், எந்த அப்போஸ்தலனும், ஒருபோதும், எந்தக் காலத்திலுமே, நாம் இப்போது வாழும் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் எப்போதும் வாழ்ந்ததில்லை. இது ஆகாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இது பூமியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு செய்தித்தாளிலும் எழுதப்பட்டிருக்கிறது. உங்களால் அந்த கையெழுத்தை வாசிக்க முடிந்தால், இதுவே முடிவாகும்.
காதுள்ளவன், தேவன் என்ன உரைத்தார் என்பதையும், பதிவு செய்ததையும் கேட்கட்டும், அதனால் அது என் வார்த்தையாகவோ, என் எண்ணங்களாகவோ, என் கருத்தாகவோ இருக்காது, ஆனால் தேவனுடைய சத்தம் அவருடைய மணவாட்டிக்கு இன்றைக்கான அவருடைய ஒரே சரியான வழி என்ன என்பதை அறிவுறுத்துகிறது.
செய்தியுடன் தரித்திருக்க, ஒலிநாடாக்களுடன் தரித்திருக்க, வேத வாக்கியங்கள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும், சொப்பனங்களின் வியாக்கியானம் மூலமாகவும், அவர் சொல்லி, நமக்கு வெளிப்படுத்துகிறபடியால் வந்து கேளுங்கள். ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அதை மாத்திரமே கூறுங்கள்.
தேவனிடத்திலிருந்து தாமே தேவனுடைய சத்தத்தைக் கேட்பதைக் காட்டிலும், சிறந்த வழி அல்லது உறுதியான வழி எதுவும் இல்லை. தேவன் தம்முடைய மணவாட்டிக்கு அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, இயங்கு பொத்தாளை அழுத்தி கேளுங்கள் என்று நமக்கு சொல்வதன் மூலம் கட்டளையிட்டார், அவ்வளவுதான்.
அதைப் பேசி, அதை பிரசங்கித்து, அது குறித்த சாட்சி பகிர்ந்து, உலகத்திற்கு அதை குறித்து சொல்லுங்கள், ஆனால் மணவாட்டியை பரிபூரணப்படுத்த ஒரே ஒரு பரிபூரண அருளப்பட்ட வழி உண்டு என்று அவர் நமக்கு சொல்லுகிறார்: ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள். உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தால், ஒலிநாடாவை இயக்குங்கள். இது முதன்மையான, மற்றும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாயிருக்க வேண்டும். இது ஒலிநாடாவில் அவர் வைத்துள்ள தம்முடைய பரிபூரண வார்த்தையாக உள்ளது.
இப்போது அதை மற்றவர்களுடைய, சொப்பனங்களுடன் ஒப்பிடுங்கள். இது ஒரு தரிசனமாக இருந்தது. ஆகாரம். இதோ உள்ளது. இதுதான் இடம்.
கேளுங்கள், சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் மணவாட்டிக்கான ஆகாரம் எங்கே? அந்த இடம் எங்கே? மணவாட்டிக்கான செய்தி ஒலிநாடாவில் உள்ளது.
இது எனக்கு வீடு போல் உணரச் செய்கிறது. இதுதான் இடம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், சொப்பனங்களும் அதே காரியத்தை உரைத்தன, ஆகாரம் எங்கே என்று பாருங்கள்.
நாம் அதைப் பெற்றுக்கொண்டோம் என்பதை உறுதிப்படுத்த, மணவாட்டிக்கான ஆகாரம் ஒலிநாடாக்களே என்று மீண்டும் ஒரு முறை அவர் நமக்கு சொல்லுகிறார்.
“இனி காலம் செல்லாது.” அப்படியானால், நண்பர்களே, நம்முடைய தேவனை சந்திக்க நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.
ஆம், கர்த்தாவே, உம்முடைய மணவாட்டியாய் இருந்து, உம்மை சந்திக்க ஆயத்தப்படுவது, அதுவே எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாய் உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் கர்த்தாவே? உம்முடைய அருளப்பட்ட வழி என்றால் என்ன? உம்முடைய திட்டம் என்ன? உம்முடைய பரிபூரண வழி எது? உம்மால் எங்களிடத்தில் பேசி சொல்ல முடிந்த ஒரு தீர்க்கதரிசியை நீர் எங்களுக்கு அனுப்பினீர். தயவு செய்து எங்களுக்கு அறிவுறுத்தும்.
இப்போது நிறைய ஆகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வோமாக. நாங்கள் அதை இப்பொழுதே பயன்படுத்திக் கொள்வோமாக.
ஒருவர் எவ்வளவு குருடராக இருக்க முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்குச் சொல்கிறார்: ஒலிநாடாக்களில் சேமித்து வைக்கப்பட்ட நிறைய ஆகாரங்கள் உண்டு; இப்பொழுதே அவைகளை உபயோகிப்போமாக. இதுவே அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய அறிவுரை.
இந்தச் செய்தியை நீங்கள் விசுவாசிப்பதாக உரிமை கூறினால், மணவாட்டியை அழைக்க தேவனுடைய தீர்க்கதரிசி செய்தியாளராக வில்லியம் மரியம் பிரான்ஹாம் அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும்; அவரைக் குறித்துக் கூறப்பட்ட எல்லா வேத வாக்கியங்களும் அவருடைய ஜீவியத்தை நிறைவேற்றுகிறது என்றும் விசுவாசித்தால்; இது இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்று விசுவாசித்தால், அப்படியானால் அவர்; தேவன், தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவான ஆங்கிலத்தில் மணவாட்டிக்கு சொல்லுகிறார்.
ஒலிநாடாக்களை மாத்திரமே நாம் கேட்கின்ற காரணத்தால் நாம் பரிகசிக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டு, இழிவாக பார்க்கப்பட்டாலும், அவர் நமக்கு செய்யும்படி சொன்னதையே நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம். வெளிப்பாட்டிற்காக கர்த்தாவே உமக்கு நன்றி.
“ஐயா, இதுதான் முடிவு அடையாளமா?”என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ள நான் உலகத்தை அழைக்க விரும்புகிறேன். நாங்கள் எல்லாவற்றையும் பற்றிக் கேட்போம்:
இடி முழக்கங்கள், ஏழு முத்திரைகள், கூர்நுனி கோபுர பாறை, ஆவிக்குரிய ஆகாரம், நித்தியம், தூதர்களின் கூட்டம், என்னுடைய தலைமையகம், தரிசனம், சொப்பனம், தீர்க்கதரிசனம், மறைக்கப்பட்ட இரகசியங்கள், வேத வாக்கியத்திற்கு அடுத்த வேதவாக்கியம்.
தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவதை விட இந்த ஜீவியத்தில் மகத்தானது வேறொன்றுமில்லை.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
வேத வாக்கியங்கள்:
மல்கியா 4வது அதிகாரம்
பரி. மத்தேயு 13:3-50
ரோமர் 9:33 / 11:25 / 16:25
1 கொரிந்தியர் 14:8 / 15வது அதிகாரம்
கலாத்தியர் 2:20
எபேசியர் 3:1-11 / 6:19/ 5:28-32
கொலோசெயர் 4:3
1 தெசலோனிக்கேயர் 4:14-17
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 13:8
2 பேதுரு 2:6
வெளிப்படுத்தின விசேஷம் 1:20 / 3:14 / 5:1 / 6:1 / 10:1-7 / 17வது அதிகாரம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள விழித்துக் கொண்டும் & காத்துக் கொண்டுமிருப்பவர்களே,
மணவாட்டி மத்தியில் முன் எப்போதும் இல்லாத ஒரு உற்சாகம் நிலவுகிறது. நாம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம்; நமது ஜூபிலி ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நாள் வருவதற்கு மணவாட்டி நீண்ட நேரம் காத்திருந்தாள். புறஜாதி யுகத்தின் முடிவு வந்துவிட்டது, நம்முடைய கர்த்தருடனான நித்தியத்தின் ஆரம்பம் விரைவில் தொடங்கும்.
நாம் வாழும் காலத்தை வார்த்தையைக் கேட்பதனால் புரிந்து கொள்கிறோம். நேரம் கடந்துவிட்டது. எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான நேரம் சமீபித்துவிட்டது. நாம் வந்துவிட்டோம். பரிசுத்த ஆவியானவர் வந்து அவருடைய மணவாட்டிக்கு எல்லா மகத்தான, ஆழமான, இரகசிய காரியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாம் பதறலில் இருந்து, தேவனைத் தேடுகிறோம்; நம்மை ஆயத்தப்படுத்துகிறோம். இந்த உலகத்தின் எல்லாக் காரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டோம். இந்த வாழ்க்கையின் கவலைகள் நமக்கு ஒன்றுமில்லை. நம்முடைய விசுவாசம் முன்னெப்போதையும் விட அதிக உயரத்தை எட்டியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட அம்மாளை அழைத்துச் செல்லும்படியாய் அவளுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அறுபத்தொன்பது வாரங்கள் சரியாக நிறைவேறிவிட்டன; யூதர்கள் திரும்பிப் போவது சரியாக நிறைவேறிவிட்டது. சபைக் காலம் சரியாக நிறைவேறிவிட்டது. நாம் முடிவுக் காலத்தில், முடிவு காலத்தில் இருக்கிறோம், லவோதிக்கேயா சபையின் காலத்தில், அதன் முடிவில் இருக்கிறோம். நட்சத்திர செய்தியாளர்கள் - தூதர்கள் யாவரும் தங்களுடைய செய்தியைப் பிரசங்கித்துவிட்டனர். அது புறப்பட்டுச் சென்றுவிட்டது. நாம் அருகே நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
என்னே ஒரு நம்ப முடியாத ஆனால் உண்மையான நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும் இல்லாத வகையில் சத்துரு ஒவ்வொருவரையும் தாக்குவது மிகவும் கடினமான காலகட்டம். அவன் தன்னிடம் உள்ள அனைத்தையும் நம் மீது வீசுகிறான். அவன் பதறலில் இருக்கிறான், ஏனென்றால் அவனுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறிவான்.
ஆனால் அதே நேரத்தில், நாம் நம்முடைய ஜீவியங்களில் இதைப் போன்று ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
● நாம் இதைப் போன்று ஒருபோதும் கர்த்தரிடம் நெருங்கியதில்லை.
● பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரையும் நிரப்புகிறார்.
● அவருடைய வார்த்தையின் மீது நமக்குள்ள அன்பு இதைப் போன்று ஒருபோதும் மகத்தானதாக இருந்ததில்லை.
● அவருடைய வார்த்தையின் நம்முடைய வெளிப்பாடு நம்முடைய ஆத்துமாவை நிரப்புகிறது.
● நாம் ஒவ்வொரு சத்துருவையும் வார்த்தையால்தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும், நாம் யார் என்பதில் இதைப் போன்று உறுதியாக இருந்ததில்லை:
• முன்குறிக்கப்பட்டது
● தெரிந்து கொள்ளப்பட்டது
● தேர்ந்தெடுக்கப்பட்டது
● ராஜரீக வித்து
● இனிய இருதயம்
● நித்திய, வெள்ளை அங்கி தரித்த, திருமதி. இயேசு, ஒளிநாடாவைக் கேட்பது, பிரகாசமாக்கப்பட்ட, கற்புள்ள கன்னி, ஆவியால் நிரப்பப்பட்ட, வெல்ல முடியாத, புத்திர சுவிகாரமாக்கப்பட்ட, கலப்படமற்ற, கன்னி வார்த்தை மணவாட்டி.
அடுத்து என்ன வரப்போகிறது? கல் வருகிறது. நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் விழித்துக் கொண்டும், காத்துக் கொண்டும், ஜெபித்துக் கொண்டுமிருக்கிறோம். அவருடைய வருகைக்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.
அது, "நாம் அப்படி நம்புகிறோம்" என்பதில்லை, நமக்குத் தெரியும். இனி சந்தேகங்களே இல்லை. ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் அது முடிந்துவிடும், நாம் நம்முடைய கல்யாண விருந்தில் அவரோடும் நம்முடைய எல்லா அன்புக்குரியவர்களோடும் மறுபுறம் இருப்போம்.
அது தான் ஆரம்பம்...மற்றும் முடிவே இல்லை!!
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பின அவருடைய பலமுள்ள தூதன் மூலமாக பேசி, தேவனுடைய எல்லா இரகசியங்களையும் சொல்லி வெளிப்படுத்தப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் அந்த கலியாண விருந்துக்கு ஆயத்தமாக வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 61-0806 - தானியேலின் எழுபதாம் வாரம்