Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள ஒலிநாடாவைக் கேட்பவர்களே,
ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது: “நான் ஒலிநாடாக்களைக் கேட்கும்போது, நான் எந்த சத்தத்தைக் கேட்கிறேன்? அது வில்லியம் மாரியன் பிரான்ஹாமின் சத்தமா, அல்லது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறேனா? அது ஒரு மனிதனின் வார்த்தையா, அல்லது கர்த்தர் உரைக்கிறதாவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனா? நான் கேட்டுக் கொண்டிருக்கிறதை வியாக்கியானிப்பதற்கு யாருமே எனக்குத் தேவையா அல்லது தேவறனுடைய வார்த்தைக்கு வியாக்கியானம் தேவையில்லையா?
நம்முடைய பதில்: மாம்சமான உரைக்கப்பட்ட வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆல்பா மற்றும் ஒமேகாவை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாளில் அவர் இருப்பதாக கூறியது போல மானிட உதடுகளினூடாக பேசுகிற, அக்கினி ஸ்தம்பமான, அவருக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஒரு மனிதனுக்கு செவி கொடுக்கவில்லை, நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாத தேவனுக்கு நாம் செவி கொடுக்கிறோம். தேவனுடைய சத்தமானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், எலும்பையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
அவர் கலிலேயாவில் நடந்தபோது எப்படி இருந்தாரோ, அதே விதமாக இன்றிரவு ஜெபர்சன்வில்லில் இருக்கிறார் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதே விதமாக அவர் பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். அது வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அவர் அப்பொழுது எந்தவிதமாக இருந்தாரோ, அவர் இன்றிரவும் இருக்கிறார், என்றென்றும் இருப்பார். அவர் என்ன செய்வார் என்று கூறினாரோ, அதை அவர் செய்திருக்கிறார்.
அந்த மனிதன் தேவன் அல்ல, ஆனால் தேவன் என்னும் ஜீவித்துக் கொண்டு, தம்முடைய மணவாட்டியினிடத்தில் அந்த மனிதனின் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார். நாம் மனிதனை ஆராதிக்கத் துணியவில்லை, ஆனால் அந்த மனிதனில் உள்ள தேவனை ஆராதிக்கிறோம்; ஏனென்றால் அவருடைய சத்தமாயிருக்கும்படி, இந்த கடைசி நாட்களில் தம்முடைய மனவாட்டிய வழிநடத்த தேவன் தெரிந்து கொண்ட மனிதனாய் அவர் இருக்கிறார்.
காரணம் நாம் யாராய் இருக்கிறோம் என்பதையும், நம்முடைய நாளில் மாம்சமான வார்த்தையையும் நாம் அடையாளமங் கண்டு கொள்ளும்படியாக இந்த மகத்தான கடைசி கால வெளிப்பாட்டை அவர் நமக்கு அளித்திருக்கிறார், சாத்தான் இனி நம்மை ஏமாற்ற முடியாது, ஏனென்றால் நாம் அவருடைய முழுமையாக திருப்பலளிக்கப்பட்ட கன்னிகையான வார்த்தை மணவாட்டி என்பதை நாம் அறிவோம்.
அந்தக் சத்தம் நமக்குச் சொன்னது: நமக்குத் தேவையானது ஏற்கனவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது உரைக்கப்பட்டாயிற்று, அது நம்முடையது, அது நமக்குச் சொந்தமானது. சாத்தானுக்கு நம் மீது எந்த அதிகாரமும் இல்லை; அவன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்.
நிச்சயமாக, சாத்தான் நம் மீது சுகவீனத்தை, மனச்சோர்வை மற்றும் மனவேதனைகளைப் போட முடியும், ஆனால் பிதா ஏற்கனவே அவனைத் துரத்திவிட நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார்...நாம் வார்த்தையைப் பேச, அவன் வெளியேறத்தான் வேண்டும்...நாம் அப்படிச் சொல்வதால் அல்ல, ஆனால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினதாலே.
அணில்கள் இல்லாதபோது அணில்களைப் சிருஷ்டித்த அதே தேவன். அது சகோதரி ஹாட்டியின் இதயத்தின் விருப்பத்தை அளிக்கிறது: அவளுடைய இரண்டு மகன்கள். மருத்துவரின் கை அவளைத் தொடுவதற்கு முன்பே சகோதரி பிரான்ஹாமின் ஒரு கட்டியைக் குணப்படுத்தியவர். அவர் நம்மோடு இருக்கிற அதே தேவனாய் மாத்திரம் இல்லாமல், அவர் ஜீவிக்கிறார் மற்றும் நமக்குள்ளாக வாசம் செய்கிறார். நாம் மாம்சமான வார்த்தையாக இருக்கிறோம்.
நான் நோக்கிப் பார்த்து ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தை கேட்கும் பொழுது, மாம்ச சரீரத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துவதை நாம் கேட்கிறோம், காண்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த தேவன் அனுப்பியவரை நாம் காண்கிறோம், கேட்கிறோம். மணவாட்டிக்கு மட்டுமே அந்த வெளிப்பாடு இருக்கும் என்பதை நாம் அறிவோம், எனவே நாம் அச்சமற்றவர்களாகிவிட்டோம். பதட்டமாகவோ, துயரமாகவோ, விரக்தியாகவோ, ஆச்சரியமாகவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை...நாமே மணவாட்டி.
என் சகோதரனே, "செவி கொடுத்து, பிழைத்துக்கொள்” பிழைத்துக்கொள்!
இப்பொழுதே இயேசுவுக்கு செவி கொடுத்து, பிழைத்துக் கொள்;
ஏனென்றால் அது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா!
அது நீங்கள், "செவி கொடுத்து பிழையுங்கள்” என்பதாய் மாத்திரமே உள்ளது.
ஓ, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக, நாம் என்னே ஒரு மகத்தான நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நிமிடத்திற்கு நிமிடம் நாம் எதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த நாளிலும் நாம் நம்முடைய அன்புக்குரியவர்களைக் காணப் போகிறோம் என்பதையே, அப்பொழுது, ஒரு இமைப்பொழுதில், நாம் இங்கிருந்து வெளியேறி, அவர்களுடன் மறுபுறம் இருப்போம். அது மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று நம்மால் அதை உணர முடியும் என்று தோன்றுகிறது...மகிமை!
மணவாட்டியே வாருங்கள், நித்திய ஜீவனின் வார்த்தையை எங்களிடத்தில் அவர் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தேவனுடைய சத்தத்தின் பேரில் மீண்டும் நாம் ஒரு முறை ஒன்றிணைவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 63-1229E பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்
வேதவாக்கியங்கள்:
எண்ணாகமம் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12