அன்பான தெரிந்துகொள்ளப்பட்டவர்களே,
புதிய பிறப்பு என்பது கிறிஸ்து; ஒரு வெளிப்பாடாயுள்ளது. தேவன் இந்த மகத்தான இரகசியத்தை உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார், அதுவே ஒரு புதிய பிறப்பு. இப்போது, அந்த வெளிப்பாடு பரிபூரண இணக்கத்துடன் இருக்கும், அந்தக் குழுவை நீங்கள் ஒன்றாகச் சேர்க்கும்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
தேவன் தமது கழுகுக் கூட்டத்தை பரிபூரண இணக்கத்துடன் ஒன்றாகச் சேர்த்து, தமது வார்த்தையைத் தமது மணவாட்டிக்கு வெளிப்படுத்துகிறார்.
தாவீதைப் போல ஒரு ராஜாவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவனுடைய வழி சரியானது, மேலும் நீங்கள் ஒரே மனதாயிருக்கிறீர்கள். ஒரு தலைவரும் ஒரு கூட்ட வாத்துக்களும் இருப்பது போல, நீங்கள் இரண்டு அல்லது மூன்று பேரை ஒன்றாகச் சேர்க்க முடியாது. பிறகு, நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒன்றாகக் குழப்பி, ஏதேனும் ஒரு யோசனையுடன் வருகிறீர்கள்.
அப்படியானால், கர்த்தாவே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், என் சத்தத்தை அறியச் செய்வதுதான்; அவர்கள் அதை அறிவார்கள், ஏனெனில் என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன.
கர்த்தாவே, இன்றைய தினத்திற்கான உமது பரிபூரண சத்தம் எது?
அவ்வாறு கூறியதால் நான் உங்களைப் புண்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள், ஆனால், அது மனவருத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நான் உணர்ந்தேன், ஆனாலும், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன்.
நாங்கள் அதை எங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் இப்படித்தான் உணர்கிறோம்.
அவர்கள் எதையும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க வேண்டியதில்லை, அல்லது சதுசேயரிடமோ, பரிசேயரிடமோ, அல்லது வேறு யாரிடமோ அதைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. நான் அதைக் கூறினேன், அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள், ஏனெனில் என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கின்றன.
உமது மணவாட்டிக்கு அந்த ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் என்ன?
இது எழுத்து வடிவிலான தேவனுடைய சத்தம், ஏனெனில் இது இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடும், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டதுமாகும். ஆமென். அங்குதான் காரியமே உள்ளது.
அந்த ஒலிநாடாக்கள் இன்றும் முக்கியமானவையா?
நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும், அந்த ஒலிநாடாக்களும் அந்தப் புத்தகங்களும் ஜீவனுள்ளதாயிருக்கும் என்றும், வரவிருக்கும் நாட்களில் உங்களில் பல சிறு பிள்ளைகள், இதுவே சத்தியம் என்பதைக் கண்டுகொள்வீர்கள் என்றும் எனக்குத் தெரியும்...
கர்த்தாவே, அந்த ஒலிநாடாக்களும் புத்தகங்களும் உமது மணவாட்டிக்காக நீர் விட்டுச்சென்ற, ஜீவனுள்ள உமது ஊழியம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.
நாங்கள் கேட்பதற்கு அந்த ஒலிநாடாக்கள் ஏன் மிக முக்கியமான சத்தமாக இருக்கின்றன?
நாம் இதுவரை வாழ்ந்ததிலேயே மிகவும் வஞ்சகமான காலத்தில் இருக்கிறோம். "கூடுமானால், அது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே வஞ்சிக்கும்," ஏனென்றால் அவர்களுக்கு அபிஷேகம் இருப்பதால், மற்றவர்களைப் போலவே அவர்களாலும் எதையும் செய்ய முடியும்.
"இதனுடன் ஒரு வார்த்தையைச் சேர்ப்பவரோ, அல்லது இதிலிருந்து ஒரு வார்த்தையை நீக்குபவரோ." எங்காவது ஒரு இறுதி இலக்கு இருக்க வேண்டும்.
ஆகவே, நம்முடைய இறுதி இலக்கு தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையும் தேவனுடைய சத்தமும் ஒன்றே என்று நீர் எங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளீர். நீர் வேதாகமத்தை எழுதியபோது தீர்க்கதரிசிகளுக்குச் செய்தது போலவே, தேவனுடைய சிந்தைகள் பேசப்படுவதே அந்தச் சத்தம்; ஆனால் இந்தக் கடைசி நாட்களில், உமது வார்த்தையையும், உமது சத்தத்தையும் ஒலிப்பதிவுசெய்து, அதை ஒலிநாடாவில் வைப்பதன் மூலம் நீர் பாதுகாத்தீர். ஆகவே, ஒலிநாடாக்களில் பேசப்படும் உமது சத்தமே மணவாட்டியின் இறுதி இலக்காகும்.
இன்று மக்கள் தங்கள் சபையில் அந்தச் சத்தத்தை ஒலிபரப்புவது முக்கியம் என்று நினைப்பதில்லை. சகோதரன் பிரான்ஹாம் சபையில் ஒலிநாடாக்களை ஒலிபரப்பச் சொல்லவில்லை என்றும், ஊழியம் செய்வதையும் வார்த்தையை மேற்கோள் காட்டுவதையும் கேட்டால் மட்டும் போதும் என்றும் தங்கள் சபைகளில் அவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.
மேலும், சபைதான் உங்கள் இறுதி இலக்காக இருந்தால், யார் என்ன சொன்னாலும் நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். அதுதான் உங்கள் இறுதி இலக்கு. ஓ தேவனே, இது உங்களுக்குள் ஆழமாகப் பதிய உதவுவீராக! என்னைப் பொறுத்தவரை, இந்த முழு விஷயமும் தவறானது. தேவனுடைய வார்த்தையே இறுதி இலக்கு. அந்த வார்த்தை என்ன சொன்னாலும், அதுவே சரி.
அவர்கள் அவரை அழைப்பதற்காக அவர் காத்துக்கொண்டிருந்தார். இன்றிரவு அவர் அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார், நீங்கள் அவரை அழைப்பதற்காகவே. கவனியுங்கள், அந்தச் சீஷர்கள் அவரை மேசையைச் சுற்றியுள்ள தங்கள் ஐக்கியத்திற்குள் அழைத்தபோது,
இந்த கடைசிக்கால செய்தியை விசுவாசிப்பதாக பிரகடனம் செய்பவர்கள், தேவனுடைய உண்மையான சத்தத்தைக் கேட்க வாய்ப்பு இருக்கும்போது, தங்கள் சபைகளில் அந்த ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்யாமல் இருக்க, எப்படிச் சொல்லவோ, நியாயப்படுத்தவோ, அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ முடியும்? அது, தேவன் தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி மூலமாக மனித உதடுகளில் பேசிய வார்த்தைகள். அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட, இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்ட, அடையாளங்களாலும் அற்புதங்களாலும் நிரூபிக்கப்பட்ட ஒரே சத்தம், அதுவே இந்தத் தலைமுறைக்கான தேவனுடைய சத்தமாக உள்ளது.
யாராவது எப்படி எந்தவொரு சாக்குப்போக்கையோ, விளக்கத்தையோ சொல்ல முடியும், அல்லது கூடிவரும் ஒவ்வொரு முறையும் தேவனுடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆசையை இழக்க முடியும்?
கர்த்தாவே, ஒலிநாடாக்களில் உள்ள உமது சத்தத்தை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதபடி செய்யும். அவர்கள் கேட்க வேண்டிய ஒரே சத்தம் இதுதான் என்று நான் எப்போதும் உலகிற்குப் பிரகடனப்படுத்தட்டும். உம்முடைய மணவாட்டிக்கு நான் அறிவிக்கட்டும், அவர்களுக்குத் தேவையானது எல்லாம் ஒலிநாடாக்களில் உள்ள உம்முடைய சத்தம் மட்டுமே.
நாங்கள் ஐக்கியம் கொள்ள விரும்புகிறோம். உம்மைப் பற்றிப் பேசவும், உமது வார்த்தையை மேற்கோள் காட்டவும் விரும்புகிறோம், ஆனால் உமது மணவாட்டியின் முன் வார்த்தைக்கு மேல் வார்த்தையாக, அதாவது உமது சத்தத்தின் வெளிப்பாடாக, எங்களுக்குக் கொடுத்து, பின்னர் நாங்கள் யார் என்பதையும், உமது உண்மையுள்ள மணவாட்டி என்பதையும் அங்கீகரிப்பதை விட மேலான ஒன்றை உமது மணவாட்டியின் முன் நீர் செய்திருக்க முடியாது.
தேவன் நமக்குக் கொடுத்துள்ள இந்த மகத்தான வெளிப்பாட்டைப் பற்றி ஐக்கியம் கொள்வதை நான் எப்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க முடியும். இதற்கு முடிவே இல்லை; ஆனால் நான் செய்யக்கூடிய மகத்தான காரியம், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் 65-0815 - இதை அறியாமல் இருக்கிறாய் என்ற செய்தியை கேட்கப்போகிறபடியால் மணவாட்டியின் ஒரு பகுதியினருடன் தேவனுடைய சத்தத்தை நீங்களே வந்து கேட்க உங்களை அழைப்பதே ஆகும்.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
வாசிக்க வேண்டிய வேதப்பகுதிகள்:
வெளிப்படுத்தின விசேஷம் 3:14-19
கொலோசெயர் 1:9-20
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே, ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள் 65-0801E என்ற செய்தியைக் கேட்க நாம் ஒன்றுகூடுவோமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம ்
தொடர்புடைய சேவைகள்
அன்பான கிறிஸ்துவினுடைய சிறிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே, மணவாட்டியே:
நாம் தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்து என்றும், அவருடைய சத்தத்தைப் பின்பற்றுவதைத் தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது என்றும் அவருடைய பலமுள்ள தூதன் பிரகடனம் செய்ததைக் கேட்டபோது நம்முடைய இருதயங்கள் எவ்வளவு களிகூர்ந்தன! அது நம்முடைய ஜீவனைப் பார்க்கிலும் மேலானது. நீங்கள் எங்கள் ஜீவனை எடுக்கலாம், ஆனால் அவருடைய சத்தத்தை உங்களால் எடுக்க முடியாது. நாங்கள் அவருடைய வார்த்தையோடு ஒன்றாய் இருக்கிறோம். நாங்கள் அவருடைய சத்தத்தோடு ஒன்றாய் இருக்கிறோம். நாங்கள் அவரோடு ஒன்றாய் இருக்கிறோம்.
ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்வதை நாங்கள் நம்புகிறோம் என்றும், அது தேவனுடைய மணவாட்டியிடம் பேசும் அவருடைய சத்தம் என்றும் நாங்கள் கூறுவதால், நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, கேலி செய்யப்படுவது எங்களுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றுகிறது. நாங்கள் ஒரு ஒலிநாடா சபை என்று பிரகடனம் செய்வதால், அது வார்த்தைக்கு முரணானது, தவறானது, நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்று மக்கள் நினைக்கும்படி சாத்தான் அவர்களை வஞ்சித்திருக்கிறான். ஆனால் உண்மையில், அது தேவனுடைய மணவாட்டிக்காக அவர் வழங்கிய பரிபூரணமான வழியாகும்.
இது வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? உரைக்கப்பட்ட ஒரு வார்த்தையை நீங்கள் தவறாகப் வியாக்கியானித்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். அவர்கள் சரியான நோக்கத்தையும் குறிக்கோளையும் கொண்டிருக்கலாம், ஆனால் தவறாக இருக்கலாம். ஒருவர் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தவறாக இருக்க முடியும்.
தம்முடைய மணவாட்டியின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்களே நேரடியாகக் கேட்கும்படி தேவன் ஒரு வழியை ஏற்படுத்தியிருக்காவிட்டால், வேறு ஒரு வழி இருந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், வியாக்கியானம், தெளிவுரை அல்லது விளக்கம் தேவையின்றி, வார்த்தை நேரடியாகத் தங்களிடம் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பைப் பெற அவர் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். எல்லாமே கர்த்தர் உரைக்கிறதாவது...அவ்வளவுதான்!
அவருடைய மணவாட்டியாக இருக்க நாம் வார்த்தையுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.
நமக்கு தேவையுள்ள ஒவ்வொரு காரியமும் சரியாக இங்கே எழுதப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன், அது பரிசுத்த ஆவியினால் வியாக்கியானிக்கப்பட வேண்டும். பூமியிலுள்ள எந்த மனிதனுக்கும் வார்த்தைக்கு தன்னுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க உரிமையில்லை என்று நான் நம்புகிறேன். அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு எவருமே தேவையில்லை. அவரே அவருடைய சொந்த வியாக்கியானி. அவர் அதைச் செய்வதாகக் கூறினார், அவர் அதைச் செய்கிறார்.
அவருடைய வார்த்தையுடன் நிலைத்திருப்பதைத் தவிர, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாயிருப்பதற்கு வேறு வழியேயில்லை என்பதை தெளிவாக கர்த்தர் உரைத்து தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தேவன் தாமே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார், அதனோடு தங்களுடைய வியாக்கியானத்தை சேர்க்க எந்த ஒருவருக்கும் உரிமை கிடையாது.
அவருடைய தீர்க்கதரிசியே தம்முடைய வார்த்தையின் வியாக்கியானி என்றும் அந்த வார்த்தை கூறுகிறது. அவரே ஜனங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார். அவர் கூறுகிறதே நம்முடைய நாளுக்கான வார்த்தையாகும்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், நாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிற தீர்க்கதரிசனமாக இருக்கிறோம். உங்களிடத்தில் பேசுகிற ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பதைக் காட்டிலும் வல்லமையான, புனிதமான, நிறைவான, பரிபூரணமானது ஒன்றுமேயில்லை.
மற்றவர்கள் இதில் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடும்போது, தாங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறோம் என்ற உறுதியுடன், கழுகுகள் கூடிவந்து மிகுந்த சந்தோஷத்துடன் களிகூர்கின்றன. உங்களிடம் ஒலிப்பதிவு இயந்திரம் இருந்தால், ஒரு கூட்டத்தினரை ஒன்று கூட்டி, அதை இயக்கி, கவனமாகக் கேளுங்கள் என்று அவர் நமக்குச் சொன்னார். அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், அதைத்தான் நாம் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.
தேவன் அவருடைய நாமத்திற்காக, இந்தத் பொல்லாத காலத்திலிருந்து நம்மை அழைத்திருக்கிறார். நாம் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத பல சோதனைகளையும் உபத்திரவங்களையும் கடந்து கொண்டிருக்கிறோம். சாத்தான் தன் காலம் முடிந்துவிட்டது என்பதை அறிந்திருப்பதால், அவன் போர்க்குணம் கொண்டவனாக இருக்கிறான். நான் அவருடைய மணவாட்டியாக இருந்தும், இந்த காரியங்கள் எல்லாம் எனக்கு எப்படி நடக்க முடியும் என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் வெளிப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, நாம் அவருடைய மணவாட்டி என்பதை நீங்கள் சாத்தானுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் மாம்சத்தில் உள்ள வார்த்தை. நாம் வார்த்தையைப் பேசலாம், அது நிறைவேறும். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
தேவனுடைய சத்தம் சாத்தானிடம் நேரடியாகப் பேசி அவனிடம் சொல்கிறது:
சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய். நீ ஒரு பொய்யன். மேலும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், ஊழியக்காரர் என்ற முறையில், நீ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, ஜனங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கட்டளையிடுகிறோம், ஏனெனில், “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்று எழுதியிருக்கிறதே.
எதுவானாலும்…நமக்குத் தேவை எதுவானாலும்...நாம் அதைக் கேட்டு, விசுவாசித்து, அங்கேயே நிலைத்திருக்க வேண்டும். அது உடனடியாக வெளிப்படலாம்; அது ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் ஆகலாம். நாம் என்ன பார்க்கிறோம் அல்லது உணர்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல, அது சரியாக அந்த நேரத்தில் நிகழ்ந்தது.
தேவனுடைய கழுகுகளுக்காக நாம் கூடிவரும் ஒவ்வொரு ஆராதனையும் மேலும் மேலும் மகத்தானதாகிறது. நாம் ஒரே சிந்தையில், ஒருமனப்பட்டு கூடி, உன்னதங்களில் ஒன்றாக அமர்ந்து, அவருடைய வார்த்தையால் நம்மிடம் பேசி நம்மைப் பரிபூரணப்படுத்தும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் நம்மிடம் மீண்டும் பேசுவதையும், அவருடைய சொந்த வார்த்தையின் வியாக்கியானத்தை நமக்குக் கொண்டு வருவதையும் நாம் கேட்கும்போது, நீங்கள் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
பரி மத்தேயு 24ஆம் அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14ஆம் அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7ஆம் அதிகாரம்
1 யோவான் 1ஆம் அதிகாரம் / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14
தொடர்புடைய சேவைகள்
அன்பான ஒன்றுகூடும் கழுகுகளே,
உலகம் முழுவதும் நடைபெறும் இந்த மகத்தான கவர்ச்சி என்ன? ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடி, தங்களுடைய வீடுகளிலும், தங்களுடைய சபைகளிலும் மகத்தான எதிர்பார்ப்புடன் அமர்ந்து, அவர்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.
வெறும் ஒலிநாடாக்களைக் கேட்பது மட்டும் இந்த உலகத்திற்கு மிகவும் விசித்திரமாகவும் நியாயமற்றதாகவும் தோன்றுகிறது. நாம் எப்போது வேண்டுமானாலும் ஒலிநாடாக்களைக் கேட்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் வெறும் ஒலிநாடாக்களை அல்ல, ஒரு நேரடி ஊழியத்தையோ, ஒரு பிரசங்கியாருக்கோ செவிகொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய பாரம்பரியங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
உலக வரலாற்றில் இது போன்ற ஒன்று நடந்ததே இல்லை. தம்முடைய மணவாட்டியை அழைக்கும் அந்த சத்தத்தைக் கேட்க, இந்த மக்களை ஒரே நேரத்தில் ஒன்றிணைக்க கவர்ந்துள்ளது எது? அது லூக்கா 17:30-ஐ தேவன் நிறைவேற்றுவது. அது வெளிப்படுத்தல் 10:7-ஐ தேவன் நிறைவேற்றுவது. அது எபிரேயர் 13:8-ஐ தேவன் வெளிப்படுத்துவது, ஆபிரகாமுக்கு அவர் செய்ததுபோல, மெல்கிசேதேக்கு மனித மாம்சத்தில் வெளிப்படுவது.
அவர் என்ன சொல்வாரோ என்று அவர்கள் காத்துக் கொண்டும், வியந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர் பேசத் தொடங்கும் போது என்ன நடக்கும்? அவர் சொல்லும் எதையும் கேட்பதற்காக, அவர்கள் அந்தத் தொலைபேசி இணைப்பில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதை விரும்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மணவாட்டியோடு ஒரே நேரத்தில் அதைக் கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் தம்முடைய மணவாட்டியை அழைத்து வழிநடத்துவதற்காக தேவன் அவருடைய சத்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்ட சத்தம் அவரே என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.
நேரத்தில் அவர்கள் பல மணிநேரங்கள் தொலைவில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக, தங்கள் சொந்த சபையிலிருந்து தங்களுக்குப் பேசும் அந்தக் சத்தத்தைக் கேட்க, செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, மேசியாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய இருதயங்கள் வேகமாகத் துடிக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், தம்முடைய மணவாட்டியைச் சேர்க்கவும் தேவன் இந்த நாள் வரை காத்திருந்தார். அது நடந்துகொண்டிருக்கிறது, அவர்களும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதன் யதார்த்தம் அவர்களுடைய இருதயங்களில் இறங்குகிறது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் அதைப் பற்றி வேதத்தில் வாசித்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அது ஒரு யதார்த்தமாக இருக்கிறது. வார்த்தையின் வெளிப்பாடு அவர்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவருடைய வல்லமையுள்ள சத்தத்தின் அந்த மகத்தான அபிஷேகத்தின் கீழ் அவர்கள் அமர்ந்திருக்கும்போது, ஆயத்தமாகும்படி அவர் அவர்களிடம் அறிவிக்கிறார்; ஏனெனில் இன்றிரவு அவர் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கப் போகிறார். அவர் ஜெபிக்கத் தொடங்கும் போது, வியாதியாயிருக்கிறவர்கள்மேல் போய்க் கைகளை வையுங்கள் என்று அவர் நமக்குச் சொல்கிறார்; ஏனெனில் அவர்கள் எங்கிருந்தாலும், டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா, தென் அமெரிக்கா, ஏன் உலகின் மறுபக்கத்திலுள்ள காடுகளிலுள்ள குடிசைகள் வரைக்கும் கூட, தேவனுடைய சர்வவியாபகம் எங்கும் அவர்களுடன் இருக்கிறது. அவர்கள் எங்கிருந்து திரண்டு வந்தாலும், நாம் ஜெபிக்கத் தொடங்கும் போது ஒருவரையொருவர் கைகளை வையுங்கள்; அவர்கள் விசுவாசித்தால், தேவன் அவர்களில் ஒவ்வொருவரையும் குணமாக்குவார், ஏனெனில் அது கர்த்தர் உரைக்கிறதாவது.
ஒவ்வொரு காலத்திலும், இருந்த அல்லது இருக்கப்போகும் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வழியாகவும், அந்தச் செய்தியைக் கேட்க முன்குறிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இருக்கப் போகிறார்கள் என்பதையும், அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்பதையும் அவர்கள் இப்போது புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பார்கள். அது தவறு என்றோ அல்லது தேவன் அருளிய வழி அல்ல என்றோ கூறும் அவிசுவாசியின் விமர்சனத்தையும் அவர்கள் புறக்கணிப்பார்கள். அவர்களுடன் அவர்களுக்கு எந்த வாதமும் இல்லை. அவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு, அது விசுவாசிப்பதும், அதன் ஒவ்வொரு துளியையும் தங்களால் முடிந்தவரை பெற்றுக்கொண்டு, இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்த மரியாளைப் போல அதை உள்வாங்கிக்கொள்வதும்தான். அவர்கள் வெட்கப்படுவதில்லை; தாங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கிற ஒரு ஒலிநாடா பையன் அல்லது ஒரு ஒலிநாடா பெண் என்று சொல்வதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்.
கடைசிக் காலத்தில், பரிசுத்த ஆவியின் மகத்தான அபிஷேகத்தைப் பெற்ற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று அந்த சத்தம் அவர்களை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அவர்கள் தீர்க்கதரிசியையும் அந்த நேரத்தின் செய்தியையும் மேற்கோள் காட்டுவார்கள்; விசுவாசிகள் என்று கூறிக்கொள்வார்கள், ஆனால் அவர்கள் கள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்.
கூடுமானால் தெரிந்துகொள்ள பட்டவர்களையே வஞ்சிக்கும்ளவிற்கு அவர்கள் உண்மையான அபிஷேகத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள், ஆனால், தாங்கள் வஞ்சிக்கப்பட முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள், ஏனெனில் அவர்களே வார்த்தை. அவர்கள் தேவனுடைய சத்தத்துடன் தரித்திருந்த உண்மையான மணவாட்டியாவர்.
இந்த நாளில் அது ஒரு எலுமிச்சையாகவோ, அல்லது ஒரு திராட்சைப்பழமாகவோ இருக்காது என்று அந்தக் சத்தம் அவர்களுக்குப் பிரகடனம் செய்கிறது. வித்தியாசத்தைச் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால் அது ஒரு டேன்ஜெலோவாக, பாதி எலுமிச்சை, பாதி ஆரஞ்சு கலந்த ஒரு கலப்பினமாக இருக்கும். அது பார்ப்பதற்கு ஆரஞ்சுப் பழத்தைப் போலவே இருக்கும், ஆனால் அது அப்படி இருக்காது, ஏனெனில் அந்தப் புதிய கிளை 100% அசல் கிளையைப் போலவே இருக்கும். அவர்கள் அந்த அசல் சத்தத்தின் வார்த்தையுடனேயே தரித்திருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு வாய்ப்பையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டு, அவரே தமது சத்தம், தமது வார்த்தை என்று பிரகடனப்படுத்திய ஒரே தேவனுடனேயே அவர்கள் தரித்திருப்பார்கள்.
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து, அந்த சத்தத்தைப் பின்பற்றி அதற்குக் செவிகொடுப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களுக்கு ஜீவனை விட மேலானது. நீங்கள் அவர்களுடைய ஜீவனைப் பறிக்கலாம், ஆனால் அந்த சத்தத்தை உங்களால் பறிக்க முடியாது.
கவர்ச்சி என்ன?
வழக்கம் போல, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார்.
வாருங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, வேதவாக்கியங்கள் வெளிப்படுத்தப்படுவதை நாங்கள் கேட்கும்போது, தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் இந்த நிகழ்வில் நீங்களும் ஒரு பாகமாயிருக்கும்படி வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோதரன். ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 65-0725E "மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?"
வேதவசனங்கள்:
பரி.மத்தேயு 21:1-4
சகரியா 9:9 / 14:4-9
ஏசாயா 29:6
வெளிப்படுத்தின விசேஷம் 16:9
மல்கியா 3:1 / 4ஆம் அதிகாரம்
பரி.யோவான் 14:12 / 15:1-8
பரி.லூக்கா 17:22-30
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள கழுகுக் கூட்டமே,
இந்த வாரச் செய்தியின் தலைப்பே, மணவாட்டியின் மீதுள்ள பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய அத்தகைய ஒரு விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. நம்முடைய தீர்க்கதரிசியின் மீது இருந்த அதே பரிசுத்த ஆவியானவரின் உண்மையான அபிஷேகத்தைப் பெற்ற, உண்மையான அபிஷேகம் செய்யப்பட்ட மனிதர்கள் இந்தக் காலத்தில் எழுவார்கள், ஆனால் அவர்கள் பொய்யானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்றும், உண்மையான தீர்க்கதரிசியைப் போலவே அதே மாரியையும், அதே ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள் என்றும் வார்த்தை நமக்குச் சொல்கிறது. மக்கள், இந்தக் காலத்தின் உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையிலிருந்து விலகி, செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொள்ளுவார்கள். அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கிட்டத்தட்ட வஞ்சிக்குமளவிற்கு உண்மையான வார்த்தைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.
அந்த அபிஷேகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கும்? எது உண்மை, எது பொய் என்பதைப் பகுத்தறிவது எளிதாக இருக்குமா? தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதரும், அபிஷேகம் பெற்றவருமான தாவீது ராஜா, ஒரு உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றார்; ஆனால் அது தவறானது என்று தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்.
என்ன!! இதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ராஜாவுக்கு உண்மையான அபிஷேகமும் உண்மையான வெளிப்பாடும் இருந்தது, ஆனால் தவறாய் இருந்தது! தாங்கள் கேட்பது உண்மையான அபிஷேகமா அல்லது பொய்யான அபிஷேகமா என்பதை அறிந்துகொள்ள, தேவனின் ஆட்டுக்குட்டிகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏனெனில் அவர்களுடைய நித்திய முடிவு இந்தத் தீர்மானங்களையே சார்ந்துள்ளது.
தேவன் தம்முடைய மணவாட்டியை வார்த்தையில் வழிகாட்டவும் அவரைக் காக்கவும் பல உண்மையான அபிஷேகம் பெற்ற ஊழியர்களை நியமித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவருடைய வார்த்தை அவ்வாறே கூறுகிறது, மேலும் அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் நாம் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ப்பர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மந்தைகளை வார்த்தையில் காக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தங்கள் மந்தைகளுக்குக் தேவனின் ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை ஒலிக்கச் செய்வதில் தவறக்கூடாது.
உண்மையான அபிஷேகமும் உண்மையான வெளிப்பாடும் இருந்தபோதிலும், ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தவறு செய்ய முடியும் என்பதை நாம் சற்று முன்பு கேட்டோம். ஆனால் மணவாட்டி உறுதியாக இருக்க முடியும், ஏனென்றால் அவர்கள் எப்போதும் உண்மையான அபிஷேகத்தையும், உண்மையான வெளிப்பாட்டையும், கர்த்தர் உரைக்கிறதாவது என்ற உண்மையான வார்த்தையையும் கேட்க ஒரு சரியான வழியை தேவன் அருளியுள்ளார்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதுதான்.
பிணமானது எங்கே இருக்கிறதோ,” மன்னா என்பது, வார்த்தையாய் உள்ளது, “அங்கே கழுகுகள் கூடும்”
பிணமானது எங்கே இருக்கிறதோ, அங்கேதான் கழுகுகளாகிய நாமும் கூடுவோம். எங்கே புதிய மாம்சம் இருக்கிறதோ, அந்தந்தக் காலத்தின் வார்த்தை, அந்த நேரத்தின் செய்தி உள்ளது. அந்த மன்னாவை உண்பதற்கு, தேவனுடைய சத்தம் தாமே பேசுவதைக் கேட்பதை விடப் புத்துணர்ச்சியான இடம் வேறில்லை.
அது அவருடைய வார்த்தை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பார்த்தீர்களா? முன்குறிக்கப்பட்டவர்கள் இதை அறிவார்கள். “ஒரு அந்நிய வார்த்தையையோ அல்லது ஒரு அந்நிய சத்தத்தையோ பின்பற்றமாட்டார்கள்.
நாம் வஞ்சிக்கப்பட மாட்டோம், வஞ்சிக்கப்பட முடியாது என்பதற்குக் காரணம், இந்த வெளிப்பாட்டின் மூலம் நாமே அந்த வார்த்தையாக இருப்பதுதான். நாம் வேறு எதுவும் ஆக முடியாது. நாம் வேறு எதையும் கேட்க முடியாது. நாம் வேறு எதையும் அறியமாட்டோம்.
நான் இருக்கிறேன்!” “இருந்தேன் அல்லது இருப்பேன்” என்றல்ல. “நான் இருக்கிறேன்,” நிகழ்காலம், இப்பொழுது வார்த்தை. இருந்த வார்த்தையல்ல, வரப்போகும் வார்த்தையல்ல; இப்பொழுதுள்ள வார்த்தை. பார்த்தீர்களா? உங்களுக்கு அது புரிகிறதா? “நான் இருக்கிறேன்!” “நான் இருக்கிறேன்” என்ற வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது.” அது சரியா? “நான் இருக்கிறேன்.” “இது உண்மையென்று ரூபகாரப்படுத்த, தேவன் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக அனுப்பினார். நான் இங்கே வந்து இதைச் செய்யும்படி என்னிடம் கூறின, இந்த வார்த்தைக்கான பதிலாயிருக்கிறேன்.”
அவன் அதைச் செய்தபோது, பார்வோன், “சரி, அதைச் செய்யக்கூடிய ஏராளமான பையன்கள் எங்களுடைய குழுவில் உள்ளனர்” என்றான், போலியாக பாவனை செய்பவர்கள்.
இயேசு, “இப்பொழுது, கடைசி நாட்களில் அது மீண்டும் நிகழப்போகிறது” என்று கூறினார், பாருங்கள், அதே காரியத்தை உரிமை கோருகிறார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மணவாட்டியின் மீதான ஒரு உறுதிப்பாட்டைப் பற்றிப் பேசலாம். இந்த வெளிப்பாட்டை நீங்கள் பெறும்போது, நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட இனிய இருதயமான மணவாட்டி என்பதை அறிந்துகொள்வீர்கள்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், நாம் மனுஷ குமாரனாகிய கிறிஸ்துவுக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை போஷித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவரே. நாம் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதனின் வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நாம் தவறிப் போகாத மனுஷகுமாரனுடைய சரீர-வார்த்தையையே புசித்துக் கொண்டு வருகிறோம்.
கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றவர்கள் என்பதை குறித்து எல்லாவற்றையும் எங்களுக்கு தேவனுடைய சத்தம் வெளிப்படுத்துகிறதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்ப்படி, நீங்கள் 100 % கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு செவிகொடுக்க வேண்டுமென்று விரும்பினால் மணவாட்டி ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-0725M
வேதவசனங்கள்:
மத்தேயு 5:44-45 / 7:21 / 24:15-28
லூக்கா 17:30 / 18:1-8
யோவான் 14:12
எபேசியர் 1:5
2 தீமோத்தேயு 3:1-8
எபிரெயர் 6:1-8 / 11:4
வெளிப்படுத்துதல் 10:1-7 / 16:13-14
மல்கியா 4:5
1 இராஜாக்கள் 22:1-28
எரேமியா: அதிகாரங்கள் 27 & 28