ஞாயிறு
07 டிசம்பர் 2025
64-0213
அதன் பின்னர் இயேசு வந்து அழைத்தார்

அன்புள்ள வார்த்தை மணவாட்டியே,

நாம் மிகவும் இருண்ட வேளைகளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நமக்கு எந்த பயமும் இல்லை, போதகர் வந்திருக்கிறார். கடைசி நாளில் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற அவர் வந்திருக்கிறார். அப்பொழுது அவர் என்னவாக இருந்தாரோ, இன்றைக்கு அவர் அவ்வாறே இருக்கிறார். அப்போது அவருடைய வெளிப்படுத்துதலும், அடையாளமும் என்னவாக இருந்ததோ, அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அவர் இன்னும் தேவனுடைய வார்த்தையாக இருந்து, அவருடைய பலமுள்ள ஏழாம் தூதனில் மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், நாம் அவருடைய ஜீவனுள்ள வார்த்தை மணவாட்டியாக இருக்கிறோம்.

விவாதம் செய்யவோ அல்லது வம்பு செய்யவோ நமக்கு நேரமில்லை; நாம் அந்த நாளைக் கடந்துவிட்டோம்; நாம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம், நாம் அங்கு சென்றடைய வேண்டும். பரிசுத்த ஆவி நம்மிடையே வந்துள்ளார். கர்த்தராகிய இயேசு ஆவியின் ரூபத்தில் அவர் தம்முடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார் என்று அவருடைய தீர்க்கதரிசி மூலமாக தாமே வெளிப்பட்டு, வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் வருவார் என்று கூறினார். அவர் இதைச் செய்வார் என்று கூறினார். கடைசி நாட்களில் அவர் காட்சியில் எழும்பி, முதல் முறையாக மாம்சத்தில் வந்தபோது செய்ததைப் போலவே இந்தக் காரியங்களை செய்வார் என்றும், இங்கே அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்? ஒன்றுமில்லை!!!

மகிமைக்கான பாதையில் நாம் இருக்கிறோம்! எதுவும் நம்மைத் தடுக்கப் போவதில்லை. தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தப் போகிறார். என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. விசுவாசிப்பதா அல்லது விசுவாசிக்க வேண்டாமா என்ற நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வருகிற அந்த வேறுபிரிக்கும் கோடு வந்துவிட்டது.

நீங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பிறந்தீர்கள். ஒளி உங்கள்மேல் பட்டபோது, அது உங்களிடமிருந்து எல்லா இருளையும் நீக்கியது. அவருடைய சத்தம் ஒலிநாடாக்களில் உங்களிடம் பேசுவதை நீங்கள் கேட்டபோது, ஏதோ நடந்தது. அது உங்களுடைய ஆத்துமாவிடம் பேசியது. அது, “போதகர் வந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். சோர்வடையாதீர்கள், பயப்படாதீர்கள், நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் என்னுடைய மணவாட்டி” என்று கூறியது.

ஓ மக்களே, உறுதியாக இருங்கள்! அதில் எந்த அரைகுறையான வாய்ப்பையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்: ஒலிநாடாக்களில் அவர் பதிவு செய்த அவருடைய வார்த்தை. போதகர் வந்து உங்களுக்காக அழைக்கிறார். தேவனுடைய அருளப்பட்ட வழியில் வாருங்கள்.

போதகர் மீண்டும் ஒருமுறை தம்முடைய மணவாட்டியை உலகம் முழுவதும் தம்முடைய சத்தத்தால் ஒன்றிணைக்கப் போகிறார். அவர் நம்மை ஊக்குவிக்கப் போகிறார், நமக்கு உறுதியளிக்கப் போகிறார், நம்மை குணப்படுத்தப் போகிறார், அவருடைய வல்லமையான பிரசன்னத்திற்குள் நம்மைக் கொண்டு வந்து நமக்குச் சொல்கிறார்:

போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார். ஓ பாவியே, ஓ, சுகவீனமான நபரே, போதகர் மானிடர்களில், விசுவாசிக்களுக்கிடையே வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நீ காணவில்லையா? தம்மை விசுவாசிக்கிற பிள்ளைகளை சுகத்திற்கு அழைக்கவே அவர் வந்திருக்கிறார். பாவியை மனந்திரும்புதலுக்குள் அழைக்கவே அவர் வந்துள்ளார். பின் வாங்கிப் போனவனே, சபை அங்கத்தினனே, போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் தம்முடைய பிள்ளைகளை மீண்டும் ஒருமுறை ஒன்றுகூட்டி, நம்முடைய வீடுகளிலும், நம்முடைய சபைகளிலும், நம்முடைய கூட்டங்களிலும் நுழைந்து, நம்மை அழைத்து, “போதகர் வந்து அழைத்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய தேவை என்னவாயிருந்தாலும், அது உங்களுடையது” என்று கூறும்போது, மணவாட்டிக்கு அவருடைய பரிசுத்த ஆவியின் பொழிதல் எப்பேர்ப்பட்டதாய் இருக்கும்.

சகோதர சகோதரிகளே, அந்த வார்த்தைகள் உங்களுடைய இருதயங்களில் ஆழமாகப் பதியட்டும். உங்களுக்கு எது தேவையோ, போதகர் வந்து அதை உங்களுக்குக் கொடுக்கிறார்.

பரலோகப் பிதாவே, ஓ, கர்த்தாவே, அது மீண்டும் சம்பவிக்கட்டும். நான், “இயேசு வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” என்று இந்த எல்லாக் காரியங்களையும் கூறியுள்ளேன். அவர் வரும்போது, அவர் என்ன செய்கிறார்? அவர் அழைக்கிறார். ஆண்டவரே, அது மீண்டும் நடந்தேரட்டும். ஆவியின் ரூபத்தில் உள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பரிசுத்த ஆவியானது இன்றிரவு ஜனங்களின் மத்தியில் வரட்டும். அவர் இன்றிரவு வந்து, தன்னை வெளிப்படுத்தட்டும், அதன் பின்னர் தன்னையே வெளிப்படுத்தட்டும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 64-0213 அதன் பின்னர் இயேசு வந்து அழைத்தார்
நேரம்: பிற்பகல் 12:00 மணி ஜெபர்சன்வில் நேரம்
வேதவசனங்கள்: பரி. யோவான் 11:18-28