Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான தேவனின் ஜீவனுள்ள வார்த்தையே,
இத்தனை வருடங்களாக அதை என் இருதயத்தில் மறைத்து வைத்துள்ள, திரையிடப்பட்டுள்ள கிறிஸ்துவை, அதே அக்கினி ஸ்தம்பம் வாக்களித்த படி வார்த்தையை வியாக்கியானித்து வருகிறது.
இது அநேக ஜனங்களுக்கு கண்மூடித்தனமாகத் தோன்றப்போகிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் தேவனுடைய செய்தியாளரை ஒரு சில நிமிடங்கள் பொறுத்துக்கொண்டு, தேவனிடம் மேலும் வெளிப்பாட்டைக் கேட்டால், அவர் தேவனுடைய உதவியாலும், அவருடைய வார்த்தையாலும், அவருடைய வார்த்தையின்படியும், அவரை இங்கே உங்கள் முன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். தேவன், திரைநீக்கி தம்மை வெளிப்படுத்தி, வியாக்கியானித்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்குள் இந்த கடந்த மாதத்தில் என்ன ஒரு எழுப்புதல் நிகழ்ந்து வருகிறது. தேவன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தம்மை வெளிப்படுத்தி, தன்னுடைய இனிய இருதயத்துடன் பேசுகிறார், அவளோடு அன்பு கொள்கிறார், அவளோடு உறுதியளிக்கிறார், நாம் அவருடன் ஒன்றாக இருக்கிறோம்.
எந்த தயக்கமும் இல்லை, எந்த நிச்சயமின்மையும் இல்லை, எந்த தனி ஒதுக்கீடும் இல்லை, எந்த ஒரு சந்தேகத்தின் நிழலும் கூட இல்லை; தேவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்: ஒலிநாடாக்களில் பேசும் தேவனுடைய சத்தம் இன்றைக்கு அவருடைய மணவாட்டிக்காக தேவன் அருளியுள்ள, பரிபூரண வழியாயுள்ளது.
நாம் அதை ஒருபோதும் வடிகட்டவோ, தெளிவுபடுத்தவோ, விளக்கவோ, அல்லது எந்த வகையிலும் மனிதனால் கையாளப்படக்கூடாதபடிக்கும்; நாம் ஒவ்வொரும் உதட்டிலிருந்து செவிக்குப் பேசும் சுத்தமான தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு அவர் இந்த வழியை அருளினார்.
இந்த நாள் வருவதை அவர் அறிந்திருந்தார். அவருடைய மணவாட்டி அந்த மறைவான மன்னாவை மாத்திரமே புசிக்க முடியும் என்பதையும், அவருடைய ஆட்டின் ஆகாரம் என்பதையும் அவர் அறிந்திருந்தார், தேவனிடத்திலிருந்து தாமே வருகிற தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு எந்த காரியத்தையும் நாம் கேட்க விரும்ப மாட்டோம்.
நாம் அந்தத் திரையை நீங்கி ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசித்திருக்கிறோம். உலகம் அதைக் காண முடியாது. நம்முடைய தீர்க்கதரிசி தனது வார்த்தைகளை சரியாக உச்சரிக்காமல் இருக்கலாம். அவர் சரியாக உடை அணியாமல் இருக்கலாம். அவர் மதகுருமார்களின் உடைகளை அணியாமல் இருக்கலாம். ஆனால் அந்த மனித தோலுக்குப் பின்னால், ஷெக்கினா மகிமை இருக்கிறது. அங்கு வல்லமை இருக்கிறது. அங்கு வார்த்தை இருக்கிறது. அங்கு சமுகத்தப்பம் இருக்கிறது. அங்கு ஷெக்கினா மகிமை இருக்கிறது, அது மணவாட்டியை முதிர்வடையச் செய்ய வைக்கிற ஒளியாயுள்ளது.
நீங்கள் அந்த தகசுத் தோலுக்குப் பின்னால் வரும் வரை, உங்கள் பழைய தோலிலிருந்து, உங்கள் பழைய எண்ணங்களிலிருந்து, உங்கள் பழைய கோட்பாடுகளிலிருந்தும் வெளியேறி, தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரும் வரை; பின்னர் வார்த்தை உங்களுக்கு ஒரு ஜீவனுள்ள யதார்த்தமாக மாறுகிறது, பின்னர் நீங்கள் ஷெக்கினா மகிமைக்கு விழித்தெழுப்பப்படுகிறீர்கள், பின்னர் வேதாகமம் ஒரு புதிய புத்தகமாக மாறுகிறது, பின்னர் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் ஜீவித்துக் கொண்டு, விசுவாசிகளுக்கு, ஆசாரியர்களுக்கு மட்டுமே அருளப்பட்டுள்ள சமுகத்தப்பத்தை புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். "நாம் ஆசாரியர்களாயும், ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், சொந்தமான ஜனமாயும், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்களாயும் இருக்கிறோம்.” ஆனால் நீங்கள் திரைநீக்கப்பட்ட தேவனைக் காணும்படிக்கு, அந்தத் திரைக்குப் பின்னால் உள்ளே வர வேண்டும். தேவன் திரை நீக்கப்பட்டிருக்கிறார், அதாவது அவருடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நாம் உலகிற்கு வினோதமானவர்களாக இருக்கிறோம், ஆனால் நம்முடைய அச்சாணி யார் என்பதை அறிந்து நாம் திருப்தியடைகிறோம், அவருடைய வார்த்தை நம்மை அவரிடம் ஈர்க்கும்போது, அவருடைய ஒலிநாடா திருகு மறையாணியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.
நீங்கள் ஒலிநாடாக்களோடு இணைக்கப்படவில்லையென்றால், நீங்கள் ஒரு கூட்ட முட்டாள்களேயன்றி வேறொன்றுமில்லை!!!
இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், தேவனே! இயேச, “வார்த்தையானது யாரிடத்திற்கு வந்ததோ, அவர்கள் ‘தேவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்,” என்று கூறினார், அவர்கள் தீர்க்கதரிசிகளாய் இருந்தனர். இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் சரீரம் தேவனாயில்லாததுபோல, அந்த மனிதன் தாமே தேவனாய் இருக்கவில்லை. அவர் ஒரு மனிதனாய் இருந்தார், தேவன் அவருக்கு பின்னால் திரையிடப்பட்டிருந்தார்.
தேவன், ஒரு நாள் தேவன் தகசுத் தோல்களுக்குப் பின்னே திரையிடப்பட்டிருந்தார். தேவன், ஒரு நாள் மெல்கிசேதேக்கு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், இயேசு என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருந்தார். தேவன், அவருடைய மணவாட்டி என்று அழைக்கப்பட்ட மானிட சரீரத்தில் திரையிடப்பட்டிருக்கிறார்.
இதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்; ஆனால் பலர் தலறிப்போய், வேறு எதையோ எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆபிரகாம் கண்ட கடைசி காரியமான, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வருவதற்கு முன்பு, அக்கினி விழுந்து, புறஜாதி உலகம் நியாயந்தீர்க்கப்படுவதற்கு முன்பு சம்பவித்த கடைசி காரியமே, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனான, மெல்கிசேதேக்கான இயேசு கிறிஸ்து, பிரசன்னமாகும் வரையில் கிறிஸ்தவ சபை காணும் கடைசி காரியமாக தம்முடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுததுகிறார்.
வேறு எதுவும் வரப்போவதில்லை. அவருடைய வார்த்தையில் வேறு எதுவும் வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. மணவாட்டியை பரிபூரணப்படுத்த எந்த மனிதனும் இல்லை; எந்த மனிதர்களின் குழுவும் வரவில்லை.
இல்லை! அவர்கள் பரிபூரணப்படுத்துவதற்காக இங்கே சபைக்கு வர விரும்புகிறார்கள். புரிகிறதா? அதாவது நாம்-நாம் இங்கே சபையில் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தைப் பெறுகிறோம், ஆனால் பரிபூரணப்படுத்துதல் நமக்கும் தேவனுக்கும் இடையில் வருகிறது. கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்த ஆவியில் நம்மைப் பரிபூரணப்படுத்துகிறது.
இந்தச் செய்தி, இந்தச் சத்தம், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தை, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியைப் பரிபூரணப்படுத்துகிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 64-0617 “எல்லா காலங்களிலும் அடையாளங் கண்டுகொள்ளப்பட்ட கிறிஸ்து” என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துகிறதை எங்களுடன் கேட்க வரும்படிக்கு நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
உபாகமம் 18:15
சகரியா 14:6
மல்கியா 3: 1-6
பரி. லூக்கா 17: 28-30
பரி. யோவான் 1:1 / 4:1-30 / 8: 57-58 / 10:32-39
எபிரெயர் 1:1 / 4:12 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 22:19