காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
ஞாயிறு, 31 மார்ச், 2024

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, உண்மையான ஈஸ்டர் முத்திரை 61-0402 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில்) ஒலிக்கும்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 


சனி, 30 மார்ச், 2024

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 


தொடர்புடைய சேவைகள்
வெள்ளி, 29 மார்ச், 2024

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்வாரியில் அந்த நாள் 60-0925 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 


சனி, 23 மார்ச், 2024

அன்புள்ள விலையேறப்பெற்ற, அன்பானவர்களே,

நாம் அவருடைய விலையேறப்பெற்ற, பிரியமான மணவாட்டி என்பதை அறிவது எவ்வளவு அற்புதமானது. நாம் உலகம் முழுவதிலுமிருந்து கூட்டி சேர்க்கப்பட்டு, அவருடைய வார்த்தையின் பேரில் நம்மை ஒன்றிணைத்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்டு நம்முடைய ஆத்துமாக்களை போஷிக்கிறோம்.

அதன் முழுமையிலும், அதன் ரூபகாரப்படுத்துதலின் மற்றும் வெளிப்பாட்டின் வல்லமையிலும் நாம் அதை ஏற்றுக்கொண்டோம். நாம் அதன் ஒரு பாமாகிவிட்டோம். இது நமக்குள் இருக்கிற ஒன்றாகும். இது நமக்கு ஜீவனைவிட மேலானது.

அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரை: நாம் அடையாளங் கண்டு கொண்டோம்.

சாயங்கால வெளிச்ச செய்தியை: நாம் அடையாளங் கண்டுகொண்டோம்.

நாம் யார் என்பதை: நாம் அடையாளங் கண்டுகொண்டோம்.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசியினுடைய வார்த்தையை எடுத்து நம்மை வெட்டியெடுத்தார். அவர் செய்வதாக வாக்களித்தபடியே, மல்கியா 4-ன் மூலம் அவர் நம்மை வெட்டியிருக்கிறார். நாம் ஒவ்வொரு வார்த்தையையும் நம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம்.

ஜனங்களுக்கு மத்தியிலே ஒரு மகத்தான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்பதன் முக்கியத்துவத்தை அவர்களும் கூட உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்து தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க விரும்புகிறார்கள்.

இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட வழி இது என்று பரிசுத்த ஆவியானவரால் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கேட்க வேண்டிய சத்தம் இதுதான் என்பதை அவர்கள் அடையாளங் கண்டு கொள்கிறார்கள். இது அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துவதற்காக தேவனால் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆகாரமாய் இருக்கிறது.

வார்த்தை அதை வாக்களித்தது. ஒலிநாடாக்கள் அதை அறிவிக்கின்றன. அவர்கள் அதை விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது என்ன செய்தது? ஜனங்கள் சபைகளைவிட்டு வெளியேறிச் செல்வதைப் பார்ப்பது, ஆசாரியர்களை தொல்லைப்படுத்தினது. அவர், “உங்களில் யாராவது அவருடைய கூட்டத்தில் கலந்து கொண்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். நாங்கள் உங்களை ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றுவோம்” என்றார்.

இது நம்பமுடியாதது, ஆனால் இது இன்றைக்கும் அதே காரியமாகிவிட்டது. நீங்கள், "தயவுசெய்து, ஒலிநாடாக்களை இயக்குங்கள்" என்று கூறினால், அவர்கள் உங்களை அவர்களுடைய சபைகளிலிருந்து வெளியேற்றுவார்கள். இது மக்களைப் பிரிக்கும் என்று நாம் எப்போதாவது கற்பனை செய்திருக்க முடியுமா? நம்முடைய சபைகளில் தேவனுடைய சத்தத்தை இயக்கிக் கேட்கிறோமா?

சபை தங்களுடைய தீர்க்கதரிசிகளை மறந்துவிட்டது. அவர்களுக்கு "இனி அவர்கள் தேவையில்லை," என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தேவன் அவர்களை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்; அவர் தம்முடைய வார்த்தையினால் தம்முடைய ஜனங்களை வெட்டுகிறார். ஆனால் இது இந்த நாளில் அவர்களுக்கு மிகவும் பழமையானதாக உள்ளது.

நாம் நம்முடைய தீர்க்கதரிசியுடன் தரித்திருப்போம். இது அவருடைய மணவாட்டியை அழைக்கும் சத்தமாய் இருக்க வேண்டும் என்று நாம் விசுவாசிக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை, எளிமையாக இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதைவிட முக்கியமானது எதுவுமில்லை.

ஓ, தேவனுடைய ஆடுகளே, தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள்! "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது."

உன்னுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் அடையாளங் கண்டு கொள்ளுதல் 64-0726M, என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அந்த சத்தத்தை அடையாளங் கண்டுகொள்ள வந்து செவிகொடுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


வியாழன், 21 மார்ச், 2024

அன்புள்ள கிறிஸ்துவின் மணவாட்டியே,

கல்வாரி நாள்தோறும் நினைவுகூரப்பட வேண்டும். அதைக் குறித்து நாம் அதிகம் கேட்டிருக்கிறோம், அதைக் குறித்து அதிகம் படித்திருக்கிறோம். காலத் தொடக்க முதற்கொண்டே, பிரசங்கிமார்கள் அதன் பேரில் பிரசங்கித்துள்ளனர். காலங்களினூடாக, பாடகர்கள் அதைக் குறித்து பாடியுள்ளனர். அது நடப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர். இந்த நாளின் தீர்க்கதரிசிகள் அது எப்பொழுது நடந்ததென்று பின் நோக்கி சுட்டிக் காண்பிக்கின்றனர். அது எப்பேர்ப்பட்ட ஒரு முக்கியமான நாள்! இப்பூமியில் தேவன் தோன்றப் பண்ணின நாட்கள் அனைத்திலும் இது மிகவும் முக்கியமான ஒரு நாள்.

இந்த ஈஸ்டர் வார இறுதியில் மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து என்ன ஒரு சிறப்புக் கூடுகையை உடையவளாயிருப்பாள். நாம் நம்முடைய கதவுகளை மூடிக்கொண்டு வெளி உலகத்தை அப்புறப்படுத்துவோம். நாம் திசைதிருப்பப்படாதபடிக்கு நம்முடைய எல்லா சாதனங்களையும் அணைத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுவோம். அவரைத் துதிப்பதற்கும், அவரை ஆராதிப்பதற்கும், நாம் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கும், ஏகமனதுடனும், ஒரே சிந்தனையில், நாம் ஒத்திசைவாக அவரிடம் நம்முடைய சத்தங்களை உயர்த்துவோம்.

நாம் நம்முடைய ஜீவியங்களை அவருக்கு மறு அர்பணம் செய்கையில் அவருடைய சத்தம் நம்முடைய இதயத்தில் பேசுவதை நாம் கேட்போம். அவருடைய அதி சீக்கிரமான வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்கையில் நமக்கு வேறெதுவுமே அதிக முக்கியமானதாக இருக்காது. மணவாட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

பின்வரும் அட்டவணைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:

வியாழக்கிழமை

இஸ்ரவேல் புத்திரரின் யாத்திரைக்கு முன், பஸ்காவை நினைவுகூரும் வகையில், கர்த்தராகிய இயேசு தம்முடைய சீடர்களுடன் கடைசி இராப்போஜனத்தைக் கைக்கொண்டதே வியாழக்கிழமை இரவாயிருந்தது. நம்முடைய புனித வார இறுதிக்கு முன், நம்முடைய வீடுகளில் கர்த்தரோடு நாம் ஐக்கியங்கொள்ளவும், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிக்கும்படியும், நம்முடைய பயணத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்படியும் அவரிடம் கேட்பதற்கு நமக்கு என்ன ஒரு வாய்ப்பு.

கர்த்தாவே, இதை அருளும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். விடாய்த்துப்போனவர்களைத் தேற்றும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தைத் தாரும். விடாய்த்துப்போனவர்களுக்கு சமாதானத்தையும், பசியாயுள்ளவர்களுக்கு ஆகாரத்தையும், தாகமாய் உள்ளவர்களுக்கு தண்ணீரையும், வருத்தப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தையும், சபைக்கு வல்லமையையும் தாரும். கர்த்தாவே, அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராபோஜனத்தை நாங்கள் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், இயேசுவை எங்கள் மத்தியில் கொண்டு வாரும். கர்த்தாவே, அவர் எங்களை விசேஷித்த முறையில் சந்திக்க வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம்…

கர்த்தாவே, மற்றவர்களையும், கர்த்தருடைய வருகைக்காக சந்தோஷத்தோடு காத்துக் கொண்டும், தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மற்றும் புகைப்போக்கிகள் அனைத்தையும் துடைத்து மெருகேற்றி, இருண்ட இடங்களில் சுவிசேஷ வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிற உலகத்தை சுற்றிலுமுள்ள யாவரையும் ஆசீர்வதியும்.

உங்களுடைய உள்ளூர் மண்டல நேரப்படி இராப்போஜனம் 62-0204 என்ற செய்தியைக் கேட்க, நாம் யாவரும் மாலை 6:00 மணிக்கு ஆரம்பிப்போம், பின்னர் லைஃப்லைன் பயன்பாட்டில் (ஆங்கிலத்தில்) இயங்கும் நம்முடைய விசேஷித்த இராப்போஜனம் மற்றும் கால்களைக் கழுவுதல் ஆராதனைக்கு தீர்க்கதரிசி நம்மை அழைத்துச் செல்வார் அல்லது கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கலாம்.

செய்தியைத் தொடர்ந்து, நாம் நம்முடைய வீடுகளில் நம்முடைய குடும்பங்களுடன் கூடி, கர்த்தருடைய இராப்போஜனம் எடுப்போம்.

வெள்ளிக்கிழமை

நாம் காலை 9:00 மணிக்கு நம்முடைய குடும்பத்தினருடன் ஜெபத்திற்குச் செல்வோம், பின்னர் மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கு, கர்த்தர் நம்முடன் இருக்கும்படியும், நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கும்போது நம் வீடுகளை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படியும் அழைப்போம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வாரியில் அந்த நாளுக்கு நம்முடைய சிந்தனைகள் திரும்பிச் சென்று, நம்முடைய இரட்சகர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, அதன்பின்னர் பிதாவுக்குப் பிரியமானதை எப்பொழுதும் செய்ய நம்மை அர்ப்பணிப்போமாக.

இந்த நாள், மிகவும் முக்கியமான, மகத்தான நாட்களில் ஒன்றாக இருக்கிறபடியால், அந்த நாள் நமக்கு பொருட்படுத்தின மூன்று வெவ்வேறு காரியங்களைப் பார்ப்போமாக. நூற்றுக்கணக்கானவைகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த காலையில், கல்வாரி நமக்கு எப்படி முக்கியம் வாய்ந்தது என்பதை, நாம் அடுத்த சில நிமிடங்களில், நாம் நோக்கிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களான, மூன்று வெவ்வேறு காரியங்களை நான் தெரிந்துகொண்டுள்ளேன். அது இங்குள்ள ஒவ்வொரு பாவியையும் கண்டித்துணர்த்தி; ஒவ்வொரு பரிசுத்த வானையும் முழங்கால்படியிடச் செய்து; சுகவீனமாய் இருக்கிற ஒவ்வொரு நபரும் தன்னுடைய விசுவாசத்தை தேவனிடமாக உயர்த்தி, சுகமடைந்தவர்களாக நடந்து செல்லவும்: ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படவும், பின் வாங்கிப்போன ஒவ்வொருவரும் திரும்பி வந்து, தன்னைக் குறித்து வெட்கமடையவும்; ஒவ்வொரு பரிசுத்தவானும் களிகூர்ந்து, புது நம்பிக்கையை புதிதாகப் பற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.

பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு கல்வாரியில் அந்த நாள் 60-0925 என்ற செய்தியை நம்முடைய வீடுகளில் கேட்கும்படிக்கு நாம் ஒன்று கூடுவோமாக.

பிறகு மாலை 3:00 மணிக்கு நம்முடைய கர்த்தருடைய சிலுவையேற்றத்தின் நினைவாக மீண்டும் ஜெபத்தில் ஒன்று சேர்வோமாக.

சனிக்கிழமை

நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை காலை 9:00 மணிக்கும் மற்றும் பிற்பகல் 12:00 மணிக்கும், ஜெபத்தில் ஒன்றுபட்டு, அவர் நம் மத்தியில் நமக்காகச் செய்யும் பெரிய காரியங்களுக்காக நம்முடைய இருதயங்களைத் ஆயத்தப்படுத்துவோமாக.

அவர், “சாத்தானே, இங்கே வா!” என்று கூறுவதையும், அவர் இப்பொழுது எஜமானாயிருக்கிறார். சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய அந்தத் திறவுகோலை அவர் தம்முடைய கரம் நீட்டி பற்றிப் பிடித்து, தன்னுடைய சொந்த பக்கவாட்டில் தொங்கவிட்டார். “நான் உனக்கு முன்னறிவிப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீ இவ்வளவு காலம் முழுமையாக பொய்யுரைத்து ஏமாற்றி வந்தாய், நான் ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரனாயிருக்கிறேன். என்னுடைய இரத்தம் இன்னமும் சிலுவையில் ஈரக்கசிவோடு உள்ளது. முழு கடனும் செலுத்தப்பட்டாயிற்றே! உனக்கு இனிமேல் எவ்வித உரிமையுமே கிடையாது. நீ துகிலுரியப்பட்டிருக்கிறாய். அந்தத் திறவுகோல்களை என்னிடம் கொடு!” என்பதை என்னால் கேட்க முடிகிறது.

பின்னர் பிற்பகல் 12:30 மணிக்கு, நாம் அனைவரும் ஒன்றுகூடி கல்லறையிலிடுதல் 57-0420: என்ற செய்தியின் வார்த்தையைக்கேட்போமாக.

உலகம் முழுவதும் உள்ள அவரது மணவாட்டிக்கு இது என்ன ஒரு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது.

பிறகு, பிற்பகல் 3:00 மணிக்கு மீண்டும் ஜெபத்தில் சேர்வோமாக.

ஞாயிற்றுக்கிழமை

சகோதரன் பிரான்ஹாமை காலை 5:00 மணியளவில் அவரது சிறிய நண்பரான ராபின் எழுப்பியது போல, முதலில் அதிகாலையில் நாம் எழுந்திருப்போமாக. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோமாக:

இன்று காலை ஐந்து மணியளவில், சிவந்த மார்பகத்துடன் என் சிறிய நண்பர் ஜன்னல் வழியாக பறந்து வந்து என்னை எழுப்பினது. அதனுடைய சிறிய இருதயம் வெடிப்பது போல, "அவர் உயிர்த்தெழுந்தார்" என்று கூறுவதுபோல தோன்றியது.

காலை 9 மணிக்கு மற்றும் பிற்பகல் 12 மணிக்குநாம் நம்முடைய சங்கிலி ஜெபத்தில் மீண்டும் இணைந்து, ஒருவருக்கொருவர் ஜெபித்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவோமாக.

பிற்பகல் 12:30 மணிக்கு, உண்மையான ஈஸ்டர் முத்திரை 61-0402 என்ற நம்முடைய ஈஸ்டர் செய்தியைக் கேட்க நாம் ஒன்றாக கூடி வருவோம்.

பிற்பகல் 3:00 மணிக்கு, அவருடனும், உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாட்டியுடனும் அவர் நமக்குக் கொடுத்துள்ள அற்புதமான வார இறுதிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து, நாம் மீண்டும் ஒருமுறை ஜெபத்தில் ஒன்றுபடுவோமாக.

வெளிநாடுகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே, இந்த அட்டவணையில் உள்ள அனைத்து ஜெப நேரங்களிலும் ஜெபர்சன்வில் நேரத்தில் எங்களுடன் ஒன்றிணைய நான் உங்களை அழைக்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிற்பகல் ஜெபர்சன்வில் நேரத்தில் ஒலிநாடாக்களை இயக்குவது உங்களில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன், எனவே உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்த செய்திகளை இயக்கிக் கேட்க தயங்க வேண்டாம். எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:30 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தியை ஒன்றாகக் கேட்க, நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

உங்களையும் உங்கள் குழந்தைகளையும் படைப்புகள் (கிரியேஷன்ஸ்) திட்டப் பணிகள் (ப்ராஜெக்ட்கள்), எழுதும் தாள்கள் (ஜர்னலிங்) மற்றும் இளம் அஸ்திபார (YF) வினாடி வினாக்களில் ஒரு பகுதியாக இருக்கும்படி அழைக்க விரும்புகிறேன். இந்த வார இறுதியில் நாம் கேட்கப்போகும் வார்த்தையின் அடிப்படையில் இவை அனைத்தும் அமைந்திருப்பதால் நீங்கள் அவைகளை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.

வார இறுதி அட்டவணையில், இராபோஜன ஆராதனைக்கு ஆயத்தமாகும் தகவல், படைப்புகளின் (கிரியேஷன்ஸ்) திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் பொருள், ஈஸ்டர் வினாடி வினாக்கள் மற்றும் பிற தகவல்களுக்கு, கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

ஈஸ்டர் வார இறுதியில், புகைப்படங்கள் எடுப்பது, அனுதின மேற்கோள்களைக் கேட்பது மற்றும் செய்தித் தொகுப்பு பயன்பாடு, லைஃப்லைன் பயன்பாடு அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பு ஆகியவற்றிலிருந்து ஒலிநாடாக்களை இயக்குவதைத் தவிர, நம்முடைய தொலைபேசிகளை அணைத்து வைப்போமாக.

ஆராதனை, துதித்தல் மற்றும் சுகமளித்தல் நிறைந்த ஒரு வார இறுதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மணவாட்டியுடன் உலகெங்கிலும் ஒன்றாக வர அழைப்பது எனக்கு அப்பேர்ப்பட்ட ஒரு கனத்துக்குரியதாய் உள்ளது. இது உங்களுடைய ஜீவியத்தை என்றென்றும் மாற்றும் வார இறுதி என்று நான் நம்புகிறேன்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

 


ஆராதனைக்குரிய ஒலிநாடா

ஈஸ்டர் வார இறுதிக்கான செய்திகள் கீழே உள்ளன. வியாழக்கிழமை இராப்போஜனம்/கால்களைக் கழுவும் ஆராதனை பதிவிறக்கத்தின் பகுதியாகும்

வியாழக்கிழமை- மாலை 6:00 (உள்ளூர் நேரம்)

62-0204
இராப்போஜனம்(விசேஷித்த இராப்போஜனம் & கால்களைக் கழுவும் ஆராதனை)
1 மணி 55 நிமிடங்கள் ஆராதனையைக் காண்க


வெள்ளிக்கிழமை - பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)

60-0925
கல்வாரியில் அந்த நாள்
1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆராதனையைக் காண்க


சனிக்கிழமை- பிற்பகல் 12:30 (உள்ளூர் நேரம்)

57-0420
கல்லறையிலிடுதல்
1 மணி 4 நிமிடங்கள் ஆராதனையைக் காண்க


ஞாயிற்றுக்கிழமை- பிற்பகல் 12:30 (ஜெபர்சன்வில் நேரம்)

61-0402
உண்மையான ஈஸ்டர் முத்திரை
2 மணி 10 நிமிடங்கள் ஆராதனையைக் காண்க
தொடர்புடைய சேவைகள்