ஞாயிறு
10 நவம்பர் 2024
60-1208
தியத்தீரா சபையின் காலம்

அன்புள்ள பிரகாசிக்கப்பட்ட மணவாட்டியே,

எல்லா காலங்களிலும் அவருடைய வார்த்தையுடன் தரித்திருக்கும் ஒரு மிகச் சிறிய குழு எப்போதும் இருந்திருக்கிறது என்பதை கர்த்தர் நமக்கு எப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர்கள் சந்துருவின் வஞ்சக வலையில் விழவில்லை, ஆனால் தங்களுடைய நாளுக்கான வார்த்தைக்கு உண்மையாகவும் உத்தமமாகவும் இருந்தார்கள்.

ஆனால் கர்த்தர் நம்மைவிட பெருமை கொண்டிருந்த அல்லது அதிக நம்பிக்கை கொண்ட ஒரு காலமோ அல்லது ஒரு குழுவோ இருந்ததில்லை. நாம் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட சீமாட்டியான மணவாட்டியாய் வஞ்சிக்கப்படாத, முக்கியமாக, வஞ்சிக்கப்பட முடியாததாயும் கூட இருக்கிறோம்; ஏனென்றால் நாம் மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றுகிறோம்.

எல்லாக் காலங்களிலும் இரண்டு குழுக்கள் இருந்ததை அவர் நமக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார், இருவருமே தேவனிடமிருந்து தங்களுடைய வெளிப்பாட்டையும் தேவனுடனான தங்களுடைய உறவையும் பறைசாற்றுகிறார்கள். ஆனால் கர்த்தர் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார் என்றும். அவர் நம்முடைய எண்ணங்களைக் கண்காணிக்கிறார் என்றும். அவர் நம்மிடம் சொன்னார். நம்முடைய இருதயத்தில் உள்ளதை அவர் அறிவார். தீர்க்கதரிசியோடும் அவருடைய வார்த்தையோடும் தரித்திருப்பதன் மூலம் நம்முடைய கிரியைகளை அவர் காண்கிறார், அவை நமக்குள் என்ன இருக்கிறது என்பதன் ஒரு திட்டவட்டமான வெளிப்படுத்துதலாகும். நம்முடைய ஒவ்வொரு செயலையும் அவர் கவனிக்கும்போது நம்முடைய நோக்கங்களும், குறிக்கோள்களும் அவருக்கு தெரிந்திருக்கிறது.

ஒவ்வொரு காலத்திற்கும் அவர் அளித்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நம்முடையது என்று அவர் நமக்குச் சொல்கிறார். முடிவு பரியந்தம் அவருடைய கிரியைகளை உண்மையாகச் செய்துகொண்டே இருக்கும் நம்மை அவர் காண்கிறார். அவர் தேசங்களின் மீது நமக்கு அதிகாரம் அளித்துள்ளார். நாம் வலிமையானவர்கள் என்றும், திறமையானவர்கள் என்றும், வளைந்துகொடுக்காத ஆட்சியாளர்களாய் எந்தச் சூழலையும் மிகவும் வலிமையாகச் சமாளிக்கக்கூடியவர்கள் என்றும் அவர் நமக்கு சொல்கிறார். மிகவும் அவநம்பிக்கையான சத்துருவும் கூட தேவைப்பட்டால் நொறுக்கப்படுவான். அவருடைய வல்லமையினால் நாம் ஆட்சி செய்வதை நிரூபிப்பது, குமாரனுடையது போலவே இருக்கும். மகிமை! !

நாம் தேவனுடைய ஆழத்தை நம்முடைய ஜீவியத்தில் அனுபவித்திருக்கிறோம். இது தேவனுடைய ஆவி நமக்குள் வாசம் செய்கிற ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. அவருடைய வார்த்தையின் மூலம் தேவனைப் பற்றிய ஞானம் மற்றும் அறிவால் நம்முடைய சிந்தனைகள் பிரகாசிக்கப்படுகின்றன.

மணவாளன் எங்கிருந்தாலும் நாம் செல்கிறோம். நாம் அவரால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டோம். நாம் அவருடைய பட்சத்திலிருந்து ஒருபோதும் விலக மாட்டோம். நாம் அவருடன் சிங்காசனத்தைப் பகிர்ந்து கொள்வோம். நாம் அவருடைய மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்படுவோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்துரு எப்படி வஞ்சித்து வந்திருக்கிறான் என்பதையும், அவருடைய மூல வார்த்தையுடன் தரித்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வார்த்தையை கூட மாற்றப்பட முடியாது. ஒவ்வொரு காலத்தினரும் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை மூல வார்த்தையுடன் சேர்த்தும், அகற்றியுமுள்ளனர்; அவ்வாறு செய்வதன் மூலம் நிரந்தரமாக இழக்கப்படுகின்றனர்.

தியத்தீரா சபையின் காலத்தில், அந்த வஞ்சிப்பின் ஆவி ரோமாபுரியின் போப் மூலம் பேசி அவருடைய வார்த்தையை மாற்றியது. அவன் அதை "தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தர் (மனிதர்கள் அல்ல)" என்றே கூறியிருந்தான். எனவே இப்போது அவன் மத்தியஸ்தருக்கும் மனிதர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்கிறான். இவ்வாறு, தேவனுடைய முழு திட்டமும் மாற்றப்பட்டது; ஒரு வார்த்தையை மாற்றுவதன் மூலம் அல்ல, ஆனால் ஒரு எழுத்தை மாற்றுவதன் மூலமே. சாத்தான் “மனிதர்கள்” என்பதை “மனிதன்” என்பதாக மாற்றியுள்ளானான்.

ஒவ்வொரு வார்த்தையும் ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்ட அவருடைய மூல வார்த்தையின் மூலமே நியாயந்தீர்க்கப்படும். எனவே அவருடைய மணவாட்டி ஒலிநாடாக்களோடு தரித்திருக்க வேண்டும். சத்துரு ஜனங்களுக்கு ஒரு வித்தியாசமான திட்டத்தை, ஒரு வித்தியாசமான யோசனையை, ஒரு வித்தியாசமான எழுத்தை அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் மனத்தளர்வடையச் செய்ய முயற்சிக்கும்போது, மணவாட்டி மூல வார்த்தையுடன் தரித்திருப்பாள்.

ஒவ்வொரு காலத்திலும் இயேசு அந்த காலத்தின் செய்தியாளரோடு தம்மை அடையாளம் கண்டு கொள்கிறார். அவர்கள் தங்களுடைய காலத்தில் அவரிடமிருந்து வார்த்தையின் வெளிப்பாட்டைப் பெறுகிறார்கள். இந்த வார்த்தையின் வெளிப்பாடு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உலகத்திலிருந்து வெளியே கொண்டு வந்து இயேசு கிறிஸ்துவுடன் முழுமையாக இணைக்கிறது.

சபைக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் பல மனிதர்களை அழைத்து நியமித்துள்ளார், ஆனால் அவருடைய பரிசுத்த ஆவியானவரால் அவருடைய சபையை வழிநடத்த அவர் அழைத்த ஒரே ஒரு செய்தியாளர் மட்டுமே இருக்கிறார். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் ஒரு சத்தம் உண்டு. ஒரு சத்தம் உண்டு என்றும், அதன் மூலம் அவர் நம்மை நியாயந்தீர்ப்பார் என்றும் கூறினார். அவருடைய மணவாட்டி தங்களுடைய நித்திய இலக்கை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சத்தம் உள்ளது. அந்த சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமாயுள்ளது.

மணவாட்டி, நமக்கான தேவனுடைய சித்தம் பரிபூரணமானது, அவருடைய பார்வையில் நாம் பரிபூரணமாக இருக்கிறோம். அந்த பரிபூரணம் என்பது பொறுமை, தேவன் பேரில் காத்திருப்பதாயுள்ளது...தேவனுக்காக காத்திருப்பது. இது நம்முடைய குணாதிசய வளர்ச்சியின் செயல்முறை என்று அவர் நமக்கு சொல்கிறார். நமக்கு பல சோதனைகள், பரிசோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் இருக்கலாம், ஆனால் அவருடைய வார்த்தையின் மீதான உங்களின் உண்மைத்தன்மை, நாம் எதிலும் குறையில்லாமல் பரிபூரணமாகவும், முழுமையுடனும் இருக்கக்கூடிய பொறுமையை நமக்குள் ஏற்படுத்துகிறது.

விசுவாசம் கேட்பதன் மூலமும், வார்த்தையைக் கேட்பதன் மூலமும், வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருவதையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

60-1208 தியத்தீரா சபையின் காலம் என்ற வார்த்தையின் பேரிலான செய்தியை தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உன்னதங்களிலே எங்களோடு நீங்கள் ஒன்று சேர்ந்து உட்கார்ந்திருக்கையில் உங்களுடைய ஜீவியத்தின் மகத்தான சந்தோஷத்தின் அனுபவத்தை பெற வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்