
அன்புள்ள ஒலிநாடாவை கேட்பவர்களே,
கே: ஒலிநாடாக்களை இயக்கி கேட்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோமா?
ப: ஆம்.
கே: ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை விட மணவாட்டிக்கு அதிகம் தேவைப்படுகிறதா?
ப: இல்லை.
கே: ஒலிநாடாக்களை மாத்திரமே கேட்பதால் நாம் எதையாவது இழுந்து கொண்டிருக்கிறோமா?
ப: இல்லை.
கே: ஒலிநாடாக்களை மாத்திரமே கேட்பதினால் நாம் மணவாட்டியாய் இருக்க முடியுமா?
ப: மிகவும் உறுதியாக, ஆம்!
“கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யார்.” என்பதை இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள்.
இவ்வாறு, நமக்குத் தேவையான அனைத்தும் உரைக்கப்பட்டு, ஒலிநாடாக்களில் உள்ளன; அப்படியில்லையென்றால், அவருடைய ஏழாவது தூதன் பூமிக்குத் திரும்பும்போது, அவர் அப்பொழுது நமக்குச் சொல்வார்.
ஓ மணவாட்டியே, உலகெங்கிலும் கிறிஸ்துவின் மணவாட்டியோடு என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்வோமாக. பிதாவானவர் தம்முடைய மணவாட்டியை தம்முடைய சத்தத்தால் ஒன்றாகக் கூட்டி, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இடி முழக்கங்கள் என்னவாயிருந்தன என்று அவர் நம்மிடம் சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: "ஒரு பலத்தை இடி முழக்கம் தேவனுடைய சத்தமாக இருக்கிறது”. மணவாட்டிக்கு தேவனுடைய சத்தம் என்னவாக இருக்கிறது? தேவனுடைய ஏழாவது தூதனாகிய செய்தியாளர், வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் உண்டாகும் என்று அவர் கூறினார். அந்த ஏழு இடி முழக்கங்களினூடாக, அதுவே எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்க்கும்.
கர்த்தருடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது. அவருக்கு ஒரு சிறந்த முறைமை இருந்தால், அவர் அதைப் பயன்படுத்தியிருப்பார். அவர் ஆரம்பத்தில் சிறந்த முறைமையைத் தேர்ந்தெடுத்தார், அவரால் மாற்ற முடியாது, மாற்றவும் மாட்டார்.
இவ்வாறு, தேவனுடைய சத்தம், அவருடைய ஏழாம் தூதனின் மூலமாக பேசி, அவருடைய மனவாட்டியை ஒன்று சேர்த்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு அளித்துக்கொண்டிருக்கிறது.
1933-ம் வருடம், நதியண்டை அந்த நாள் முதற்கொண்டு, வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனுடைய சத்தமாயிருந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று முழங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், மணவாட்டியை அழைத்து, ஒன்று சேர்த்து, வழிநடத்த அனுப்பப்பட்டார் என்பதையும் சபையானது சந்தேகித்திருக்கவில்லை.
நம்முடைய கர்த்தராகிய இயேசு புத்தகத்தை திறந்து, முத்திரைகளை உடைத்து, அதை நமக்கு வெளிப்படுத்தும்படி, அவருடைய ஏழாம் தூதனிடத்திற்கு பூமிக்கு அனுப்புகின்றபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் கேட்க வருமாறு நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்!
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நாள்: மார்ச் 23, 2025 ஞாயிற்றுக்கிழமை
செய்தி: இரண்டாம் முத்திரை 63-0319
நேரம்: 12:00 பிற்பகல்., ஜெபர்சன்வில் நேரம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
பரி. மத்தேயு 4:8 / 11:25-26 / 24:6
பரி. மாற்கு 16:16
பரி. யோவான் 14:12
2 தெசலோனிக்கேயர் 2:3
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 2:6 / 6:3-4 / 17வது அதிகாரம் / 19:11-16
யோவேல் 2:25
ஆமோஸ் 3:6-7